“ம்ம்ம்! அம்லு, போன தடவை போய் எவ்ளோ காயப்பட்டு வந்தீயோ, அதுக்கு மாறாக இந்த தடவை ஃபுல் ஹேப்பினெஸ்ஸா வரலாம், ஓகேவா பொண்டாட்டி”என அவளை தன்னோடு மேலும் அணைத்தான்.
“ம்ம்ம்”என ஆறுதல் அடைந்தாள்.
டிரான்சிட் சிங்கபூர் போய் மாறினர் இந்த தடவை.
அடுத்த ஃபிளைட் தான் ரொம்ப தூரப் பயணம்.
“அய்யோ! இது போறதுக்குள்ள நான் ஒரு வழியாகிடுவேன் போல”என புலம்பினாள் அம்லு.
“நான் தான் கம்பேனிக்கு இருக்கேன்ல, அப்புறம் என்ன..?”
“ம்ம்ம்! யுவி இருந்தாலும் ஏதாவது பேசிட்டு விளையாடிட்டு வருவான், நீங்க என்ன பேசுவீங்க வாத்தியாரே, விட்டா கிளாஸ் எடுப்பீங்க..?”
“என்ன பேசனும் சொல்லு, நான் இப்ப வாத்தியார் இல்ல, உன்னோட புருசன் யா! அப்கோர்ஸ் கிளாஸ் தான், பட் இந்த கிளாஸ் உனக்கு மட்டும் தான் எடுக்க முடியும்”என புருவத்தை உயர்த்தி ஒற்றை கண்ணை அடித்தான்.
“ம்ம்ம்! எனக்கு எந்த கிளாஸ்ம் வேணாம், ஏதாவது படம் பாக்கலாமா யுவிப்பா..?”
“ஓ!”என எதிரில் இருந்த ஸ்லைடு போர்டை ஆன் செய்தான்.
அதில் பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தான் இருந்தது.
“என்ன யுவிப்பா தமிழ் படமே இல்லையா.?”
“இல்ல! ஆனா இந்த ஹாலிவுட் மூவிஸ் பாரு நல்லா இருக்கும்”என ட்ரோல் செய்தான் பெயர்களை.
அதில் ஒரு படம் மிஸஸ் லவ் என இருந்தது.
“அம்லு! இங்க பாரு என் மிஸஸ் மயிலாஞ்சி மாதிரி மிஸஸ் லவ் னு ஒரு படம், பாக்கலாமா.?”
“ம்ம்ம்! ஏதோ வைங்க பொழுதுப் போகனுமே..”என முகத்தை சுளித்தாள்.
“ரொம்ப தான்டி பண்ற!”என அந்த படத்தை ஆன் செய்தான்.
இருவருக்குமே புரிந்தது, படம் சப் டைட்டிலோடு ஓடியது.
“என்ன யுவிப்பா இவ்ளோ கேஷ்வலாக நடிக்குறாங்க..?”
“இது எல்லாம் நார்மல் அங்க”
“ம்ம்ம்!”என அவன் கையை பிடிச்சுட்டு சாய்ந்தவாறு பார்த்தாள்.
முத்தத்தின் வெரைட்டிஸ் பல இடங்களில் பளிச்சென்று இருந்தது.
அவர்கள் அடித்த லிப் லாக்கில் அம்லு கண்களை மூடினாள்.
“அந்த மிஸஸ் லவ் கொடுக்குறா அவன் கொடுத்து வச்சவன் அம்லு”
“ம்ம்ம்! அந்த மிஸஸ் லவ்வை தேடிப் போங்க, நிறைய கொடுப்பா வாங்கிட்டு வரலாம்”என்றாள் நக்கலாக.
“என் மிஸஸ் மயிலாஞ்சி இங்க இருக்கும் போது நான் ஏன் அங்க போறேன்”என அம்லு முகத்தை நோக்கி குனிந்தான்.
அம்லு அவன் முகத்தை தள்ளிவிட்டு, “யுவிப்பா! இது ஃபிளைட் சுத்தி ஆளுங்க இருக்காங்க, அடி வாங்கப் போறீங்க..” என முறைத்தாள்.
“சரி விடு, படத்தை பாரு அதையாவது பாத்து மனசை தேத்திக்குறேன்”என படத்தை பார்க்க ஆரம்பித்தான்.
அம்லுக்கு சிரிப்பு வர, படத்தை பார்த்துக் கொண்டிருந்த சர்வா கன்னத்தில் சட்டென்று ஒரு முத்தத்தை வைத்துவிட்டு அவன் உணர்வதற்குள் ஒன்னுமே செய்யாதவாறு படத்தை பார்த்தாள்.
“இது நல்லா இருக்கே!”என அவனும் அவள் கன்னத்தில் முத்தம் வைத்துவிட்டு திரும்பிக் கொண்டான்..
அம்லு திரும்ப, சர்வா அவளை பார்க்காமல்”எனக்கு கடன் வாங்குறது புடிக்காது அதும் முத்தக்கடன் புடிக்கவே புடிக்காது”என்றான்.
அம்லு அவனின் கையை கிள்ளிவிட்டு படத்தைப் பார்க்க தொடங்கினாள்.
நேரம் கடந்தது..
அம்லுக்கு ஒரு மாதிரியாக இருந்தது உடல்.
சட்டென்று உடல் சூடாகியது அந்த குளிரில்.
‘இல்லையே! இப்ப எப்பிடி பீரியட்ஸ் வரும்’என தேதியை கணக்கு செய்தாள்.
‘ஓ! இன்னும் அஞ்சு நாள் தான் இருக்கா.’என நொந்தாள்.
“யுவிப்பா! நான் ரெஸ்ட் ரூம் போயிட்டு வரேன்”என எழுந்தாள்.
“ம்ம்ம்! நான் வரவா.?”
“இல்ல! இல்ல! அந்த அம்லு எல்லாம் இப்ப டெவெல்ப் ஆகிட்டா”என சிரித்து விட்டு, கைப்பையில் இருந்த நாப்கினை எடுத்துக் கொண்டு நகர்ந்தாள்.
சர்வா அதை கவனித்தான் ஆனால் எதுவும் கேட்கவில்லை.
அம்லு போயிட்டு வந்து மூச்சை இழுத்து விட்டு அமர்ந்தாள்.
“உனக்கு இந்த மாதிரி டிராவெலில் தான் வரும் போல அம்லு பீரியட்ஸ், நான் தான் தப்பு பண்ணிட்டேன், உன் கிட்ட கேட்டு டிக்கெட் போட்டு இருக்கனும்”என்றான் வருத்தமாக.
“இது நானுமே யோசிக்கல, நீங்க கேட்டுட்டு போட்டு இருந்தாலும் நான் டிக்கெட் போட ஒத்து இருந்திருக்க மாட்டேன், எப்பிடியோ கேக்காமல் போட்டீங்க, ஆனா ஃபீல் பண்றீங்களா…?” என்றாள் நக்கலாக.
“எனக்கு என்ன ஃபீல் அம்லு..?”
“இல்ல! நீங்க என்ன நினைச்சு ஹனிமூன் பிளான் பண்ணிங்களோ, அதுக்கு ஆப்போஸிட்டா எனக்கு பீரியட்ஸ் வந்துட்டுனு”என புருவத்தை உயர்த்தி நக்கலடித்தாள் அவனை வேண்டுமென்றே, அது சர்வாவை காயப்படுத்துகிறது என அறியாமல்.
“அம்லு! என்ன பேசுற..? நான் டிக்கெட் கேட்டுபோட்டு இருக்கலாமுனு சொன்னது உன்னோட ஹெல்த்க்காக, நீ இப்பிடி ஃபிளைட்டில் கஷ்டப்படாம வந்திருக்கலாமேனு தான், மத்தப்படி..? என்னைய என்ன நினைச்ச அம்லு செக்ஸ் வீக்னேஸ் ஆளு, இல்ல அடுத்த குழந்தை பெத்துக்க தான் உன்னைய ஹனிமூன் கூட்டிட்டுப் போறேனா..? எஸ்! உன்னைய முடிஞ்சளவு சந்தோஷமா வச்சுக்க தான் இந்த பிளானே போட்டேன். ரெண்டுப் பேருக்குமான பிரைவேசியில் நீ என்னைய புரிஞ்சுக்க மாட்டீயானு எக்ஸ்பெட் செய்தேன். ஆனா நீ…? உனக்கு பீரியட்ஸ் வந்ததால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை, பாவம் உனக்கு தானே டிஸ்டர்ப்ன்ஸ் டிராவெலில் என்பதை மட்டுமே யோசித்தேன் அம்லு, லீவ் இட் அம்லு. உனக்கு இந்த ட்ரிப் புடிக்கலைனா நோ ப்ராப்ளம், இப்ப டிரான்சிட் மாறியாச்சு, அங்க போய் இன்னும் மூன்னு நாளில் ரிட்டன் டிக்கெட் ரெடிப் பண்ணிடுறேன், யு டேக் ரெஸ்ட்”என சீட்டில் சாய்ந்து கண்களை மூடினான்.
சர்வா கண்களை திறக்காமல்”நீ ரெஸ்ட் எடு அம்லு, ஐ ஆம் ஆல்ரைட், உனக்கு புடிக்காத இந்த ட்ரிப் வேணாம் ரிட்டன் போயிடலாம்”என்று முகத்தை மறுப்பக்கம் திருப்பிக் கொண்டான்.
அம்லுக்கு தான் பேசியது சர்வாவை இந்தளவு காயப்படுத்துமுனு யோசிக்கலை, ஆனால் தன்னையே நொந்தாள்.
ஃபிளைட் லேண்ட் ஆனது, சர்வா தேவைக்கு அதிகமாக அவளிடம் பேசவில்லை.
அஸ்வின்- யோகா வீட்டிற்கு தான் சென்றனர்.
அங்கு அனைத்து வசதிகளுமே இருந்ததால் அவர்களுக்கு எதுவும் தேவைப்படவில்லை.
வீட்டிற்குள் போனதும் சர்வா பாத் ரூமிற்குள் சென்று ஹீட்டரை ஆன் செய்து வந்தான்.
நீண்ட நேரம் அமர்ந்தே வந்ததால் அம்லு ஹாலில் கால்களை நீட்டி அமர்ந்தாள்.
“நீ போன தடவை தங்கி இருந்த ரூமில் ஹீட்டர் ஆனில் இருக்கு, போய் குளிச்சுட்டு வா”என தன் உடைகளை எடுத்துக் கொண்டு வேற பாத் ரூமிற்குள் நுழைந்தான்.
அம்லு அவனையே ஏக்கமாக பார்த்தாள்.
தலையை குலுக்கிவிட்டு எழுந்து குளிக்க சென்றாள்.
அதற்குள் சர்வா குளித்து முடித்து வந்து சாப்பாடு ஆர்டர் செய்தான்.
அம்லு குளித்து விட்டு தான் யோசித்தாள் டிரஸ் எடுத்து வராமல் வந்ததை.
ஏதோ ஒரு நினைவில் பாத் ரூமிற்குள் வந்தவள், குளித்து முடித்து தான் யோசித்தாள்.
“யுவிப்பா!”என அழைத்தாள் பாத் ரூமில் இருந்து.
முதலில் காதுல விழாதவனுக்கு பிறகு கேட்க, எழுந்து அறைக்குள் சென்றான்.
“என்ன…?”என கேட்டவாறு.
“மாத்து டிரஸ் எடுத்து வர மறந்துட்டேன்”
“ம்ம்ம்! பெட்டியில் இருக்கே இன்னும் ஓபன் பண்ணலை, யோகா அக்கா டிரஸ் எடுத்து தரவா”
“ம்ம்ம்!”
சர்வா சென்று யோகாவின் டிராக் அன்ட் டிசர்டை எடுத்து வந்து நீட்டினான்.
“இதுவா!”என்றாள் தயங்கியவாறு.
“ஏன் போன தடவை போட்டு இருந்தது தானே..?”
“ம்ம்ம்!”
“அதே தான் இது, தனியா இருந்தது”என வெளியில் சென்றான்.
அந்த டிரஸ் யோகாக்கு பத்தாது அதனால் தனியாக வைத்திருந்தாள் யோகா.
இப்போது அம்லுக்கும் கொஞ்சம் டைட்டாக இருந்தது டிசர்ட்.
டிசர்ட் இடுப்பின் உயரம் ஏறியிருந்தது, முன்னழகை இறுக்கமாக காட்டியது,
‘சரி டிசர்ட் வெளியில் மாத்திக்கலாம்’ என அடுத்து யோசித்தவள்’ச்சே! பீரியட்ஸ் டைம்ல எதுமே இல்லாம குளிக்க வருவீயா அம்லு’என தன்னை நொந்த நேரத்தில், கதவு தட்டும் சத்தம் கேட்டது.
சர்வா நாப்கின், இன்னர்ஸை எடுத்து நீட்டினான்.
“இது உன் ஹேன்ட் லக்கேஜில் இருந்தது”என கொடுத்து விட்டு நகர்ந்தான்.
வாங்கிய அம்லுக்கு கண்கள் கலங்கியது, அனைத்தையும் அணிந்தவள் வெளியில் வந்தாள்.
ஹாலில் சர்வா டிவி பாத்துட்டு இருந்தான்.
“வா சாப்புடலாம்!”
“இல்ல! எனக்கு வேணாம்”என அம்லு ஹாலில் இருந்த ஷோபாவில் அமர்ந்தாள், தலையை உதறிவிட்டு.
கண்கள் கலங்கி முகமே சிவந்திருந்தது. “ஏன் வேணாம், உனக்கும் சேர்த்து ஆர்டர் பண்ணிட்டேன்”
“பரவாயில்ல! நான் காலையில் சூடுப் பண்ணி சாப்புட்டுகிறேன், ஃபிரிட்ஜில் வைங்க”என்றாள் அழுகை முட்ட.
வெளியில் வந்து டிரஸ் மாற்ற நினைத்தவள் அப்பிடியே அமர்ந்தாள் கால்களை மேலே தூக்கி வைத்து அதை கட்டிக்கொண்டு.
தன் மேல் கோபம் வந்தது, சர்வா மேல் கோபம் இல்லை அவனின் அக்கரையில் அழுகைதான் வந்தது அம்லுக்கு.
போன தடவை அம்லு இதே நிலையில் வந்து தனிமையில் நொந்தாள், பீரியட்ஸ் என தெரிந்தும் ஜெகன் புது இடம் என்றில்லாமல் கண்டுக் கொள்ளவில்லை. அதை நினைக்கும் போது சர்வா எல்லாம் அம்லுக்கு கனவிலும் கிடைக்காத பொக்கிஷம் என உணர்ந்தாள்.
தலையை கவிழ்த்து அமர்ந்திருந்தாள்.
அவளின் அருகில் ஏதோ உணர்வு தெரிய, தலையை நிமிர்ந்தாள்.
சர்வா தான் பிளேட்டில் ஃபிரைடு ரைஸ் போட்டு அருகில் அமர்ந்தான்.
“சாப்புடு!”என அவளின் வாய் அருகே சாப்பாட்டை கொண்டு சென்றான்.
அம்லுவும் வாங்கினாள் மறுக்காமல்.
“நீங்க சாப்புடலையா..?”
“ம்ம்ம்! சாப்புடனும், நீ சாப்புடு”
அம்லு மறுக்காமல் அவன் ஊட்ட வாங்கினாள்.
முடித்ததும், சர்வா எழுந்து சென்று தானும் சாப்புட்டு பிளேட்களை கழுவி வைத்து விட்டு வரவும், அம்லு அப்பிடியே அமர்ந்து இருந்தாள்.
“தூங்க போகலையா..?”
“ம்ம்ம்! நீங்க போய் படுங்க யுவிப்பா, நான் வரேன்”
“என்ன ஆச்சு…?”
“கால் மரத்துடுச்சு, கொஞ்சம் நார்மல் ஆகட்டும், நடந்து வரேன்”
“ம்ம்ம்!”என அறைக்குள் சென்று பெட்டை சரிசெய்தவன், ஃபோனில் மெசேஜ் அனுப்பினான் அஸ்வினுக்கு வை பை ஆன் செய்து, ரீச்சுடு சேஃலினு.
பிறகு ஹாலிற்கு வந்தவன், “வா!”என அவளை தூக்கியவன், இருகைகளிலும் தாங்கிட்டு அறை நோக்கி சென்றான்.
அம்லு அவன் கழுத்தில் கைப்போட்டு அவனையே பார்த்துக் கொண்டு சென்றாள்.
அவன் கன்னத்தில் சட்டென்று முத்தம் வைத்தாள்.
சர்வா கண்டுக்கொள்ளவில்லை, அம்லு மீண்டும் முத்தம் வைத்தாள்.
சர்வா அவளையே திரும்பி பார்க்கவில்லை.
“சாரி யுவிப்பா!”என்றாள் மீண்டும் முத்தம் வைத்தவாறு.
பெட் வர, அவளை மெதுவாக கட்டிலில் படுக்க வைத்தவன்”தூங்கு”என நிமிர்ந்தான்.
அவனையே பார்த்தவள்”யுவிப்பா!” என்றாள்.
“ப்ளீஸ்! தூங்கு அம்லு”என விலகி சென்றான்.
அம்லு திரும்பி படுத்தாள்.
சர்வா ஷோபாவில் படுத்து தூங்கினான்.
சர்வா தன் அருகில் வரவில்லைனு உணர்ந்தவள், அதே நினைவோடு தூங்கினாள்.
நடு இரவில் அம்லு திரும்பி படுக்க, சர்வா மார்பில் இருந்தாள், அதே நிலையில் நன்கு தூங்கினாள்.
காலையில் எழுந்த அம்லு அருகில் வெற்றிடத்தை தான் பார்த்தாள், எழுந்து ஷோபாவை காண அங்கு சர்வா தூங்கிட்டு இருந்தான்.
‘அப்ப நைட் பார்த்தது கனவா.?’என தலையை குலுக்கிட்டு குளிக்க சென்றாள், உடைகளை எடுத்துக் கொண்டு.
இரு தினங்கள் சர்வா வெளியில் சென்று வந்தான், வீட்டில் இருக்கும் நேரம் டிவி தான்.
அன்று யோகா, அஸ்வின் ஃபோன் பேசினர்.
யுவியுடன் டெய்லியும் பேசினாள் அம்லு, சர்வா பேசாததால் யுவி தான் ஆறுதலாக இருந்தான்.
சர்வா முதலில் பேசிட்டு பிறகு அம்லு கிட்ட கொடுத்தான்.
யோகா கிண்டல் செய்தாள், “என்ஜாய் பண்றீயா அம்லு.?
“எங்க, உங்க தம்பி தான் பகலில் வெளியில் போயிடுறார். நான் தனியா தான் இருக்கேன்”என்றாள் கடுப்பாக அம்லு.
“அவன் கிட்ட குடு”
அம்லு சர்வா கிட்ட நீட்டினாள் ஃபோனை.
“சொல்லுக்கா!”
“என்னடா நீ மட்டும் தனியா சுத்தவா போன..?”
“ம்ம்ம்! அவளுக்கு தான் இங்க புடிக்கல, அதான் ரிட்டன் டிக்கெட் செக் பண்ணிட்டு என் பழைய ஃப்ரண்ட்ஸை பாத்துட்டு வந்தேன்.”
“என்ன விளையாடுறீயா..? அங்க இருக்கும் போது வரலைனு சொன்ன, என் திமிரு அழைச்சுட்டு வந்தேன் இப்ப இங்க இருந்து வரலைனா எப்பிடி…?” என்றான் கோபமாக.
“ஆமா! வர முடியாது”என எழுந்தவளின் கையைப் பிடித்து இழுத்த வேகத்தில் அவன் மடியில் சென்று விழுந்தாள் அம்லு.
“ஏன்..? உனக்கு புடிக்கலைல இங்க, அப்ப என்னதுக்கு டைம் வேஸ்ட் பண்ணிட்டு கிளம்பலாம்”
“எனக்கு இப்ப புடிச்சு இருக்கு”
“என்ன புடிச்சு இருக்கு..?”என்றான் அவளை முறைத்தவாறு.
அவன் மடியில் இருந்தவள், அவன் கன்னத்தில் முத்தம் வைத்து”சாரி யுவிப்பா!”என்றாள்.
அவன் பதில் பேசவில்லை.
“நீங்க பேசியே ஆகனும்”என்றாள் அவன் கன்னத்தில் மீண்டும் முத்தம் வைத்து.
“பேசிட்டு தான் இருக்கேன் அம்லு” என்றான் பொறுமையாக.
“இல்ல, பழைய மாதிரி, நான் தான் சாரி சொல்றேன்ல, அது ஏதோ தெரியாம சொல்லிட்டேன் சாரி சாரி சாரி..” என்றாள் முத்தம் வைத்துக் கொண்டே.
“நானும் உன் கிட்ட மூன்னு வருசமா சாரி சொல்றேன் அம்லு, உனக்கு மூனு நாளே தாங்க முடியல இல்ல..?”என்றான் அவள் கண்களை பார்த்தவாறு.
அம்லு அமைதியானாள்.
“உன் வயித்துல ஒரு கரு உண்டானப்ப, நான் குழம்பி தான் போனேன் வேண்டாமுனு நினைச்சது எப்பிடினு..? நீ காலேஜ் போகனும் அந்த நேரத்தில், நான் குடிச்சுட்டு அப்பிடி பண்ணிட்டேன், மனசளவில் குழந்தையை எதிர்ப்பார்க்காத நேரம் எல்லாமே குழப்பதில் இருந்தேன் ஆனா சத்தியமா குழந்தையை அழிக்கவே நினைக்கல அம்லு. திரவி சொன்னான் யுவிக்காக நீ இன்னொரு குழந்தைப் பெத்துக்க ஆசைப் பட்டனு, அப்ப தான் உனக்காக உன் ஆசைக்காக நான் மாறினேன் ஆனா அது எனக்கு கெட்ட நேரமா போச்சு நம்ம குழந்தையும் இல்லாம போச்சு அம்லு, உன் ஆசைக்காக தான் நான் மாறினேன், என் அம்லு ஆசைப்பட்டடானு ஆனா நீ என்னைய மன்னிக்கவே மாட்டேனு அடம்புடிக்குற..? இப்ப நான் பேசலைனு, சாரினு கேக்குற.. இது நியாயமா அம்லு..?”என்றான் தெளிவாக.
அம்லுக்கு தன் தவறு உறுத்தியது..
சர்வாவை விட்டு எழப் போனாள். அவளை எழ விடாமல் பிடித்தவன், “எங்க போற..?”
“நான் ஒரு லூசு, பைத்தியம், உங்களை கஷ்டப்படுத்திட்டேன் யுவிப்பா, நான்… நான்… வேஸ்ட், உங்களை புரிஞ்சுகாம குழந்தை போனதையே நினைச்சு உங்களை காரணமாக்கி, என்னைய விடுங்க யுவிப்பா, எல்லாரும் என்னைய பைத்தியமுனு சொல்வாங்க அது உண்மை தான்”என்று எழப் போனவளை..
விடாமல் தன்னோடு இறுக்கி அணைத்தான்.
“நீ என் மயிலாஞ்சிடி.”என அவளின் முகம் முழுவதும் முத்தம் வைத்த சர்வா, “உன் கூட பேசாம என்னால இருக்க முடியாம..? நீ புரிஞ்சுக்க தான் பேசாம இருந்தேன், ரிட்டன் டிக்கெட் எல்லாம் போடலை”என்று சிரித்தான்.
“யுவிப்பா!”
“ம்ம்ம்!”
“போங்க யுவிப்பா!”என அவனின் தலை முடிகளை பிடித்து இழுத்து களைத்து அடித்தாள்.
அவனை இறுக்கி அணைத்து அவனுள் சுருண்டாள் சிறுப்பிள்ளையாக.