சரசு அலரை அடிக்கவும் “மாஆஆ என்ன பண்ற..” என்று சீறிய அகனெழிலன் அலரை தன்னருகே இழுத்து நிறுத்த அது எரிகிற தீயில் எண்ணை வார்த்தது போல் ஆனது.
அலரை நெருங்கிய சரசு, “மிஞ்சி போனா இருபது வயசிருக்குமா..? அதுக்குள்ள என் மகனை இப்படி மயக்கி வைச்சிருக்கியேடி உனக்கெல்லாம் வேற வேலையே இல்லையா..” என்று வெறுப்பை உமிழ தாடை இறுக நின்றிருந்த எழில் ‘இப்போ அவ..’ என்று ஆரம்பிக்கவும் அவனை முந்திகொண்ட நீலாவின் மகன் ராஜேஷ்,
“சித்தி புரியாம பேசாத ! அலர் கால் தடுக்கித்தான் விழுந்துடுச்சி அதுக்கு என்ன வார்த்தை சொல்ற..? ”
“எது கால் தடுக்கியா..? அந்த கதையை எவளாவது கேனச்சி இருப்பாஅவ கிட்ட போய் சொல்லுடா.., நான் தான் வந்ததுல இருந்து பார்க்கிறேனே இவ கண்ணு மொத்தமும் என் பிள்ளை மேலதான் இருந்தது, விட்டா பார்வையிலேயே முழுங்கி ஏப்பம் விட்டுடுவா போல ச்சீய் என்ன வளர்ப்புடா சாமி..” என்றதில் ‘ம்மாஆ’ என்று எழில் கர்ஜிக்க அலரோ எதிர்பாரா அதிர்வில் அவனை ஒட்டி நிற்க அவன் பார்வை எரிச்சலோடு அலர் மீது படிந்தது.
“இவ மயக்கத்துல இன்னமும் கல்யாணம் பண்ணாம இத்தனை வருஷம் எனக்கே ஆட்டம் காட்டிட்டு இருக்கான்டா அதுமட்டுமா இவ சொல்லி தான் ஊர்ல கூட தங்காமஎனக்கே தெரியாம ட்ரான்ஸபர் வாங்கிட்டு போய்ட்டான். ஊரெல்லாம் ஒத்தபிள்ளையை கூடவைக்க துப்பில்லாம தொரத்திவிட்டுட்டேன்னு பேச்சுஅது தெரியுமாடா உனக்கு? இதுக்கெல்லாம் யார் காரணம்..? இதோ நிக்குறாளே இந்த சிறுக்கி தான்” என்றாள் ஆங்காரமாய்.
“மாஆஆ என்ன பேசிட்டு இருக்கஇவ்ளோ தான் உனக்கு மரியாதை..! எதுக்கும் எதுக்கும் முடிச்சி போட்டுட்டு இருக்க ? என் ட்ரான்ஸ்பர்க்கு காரணம் நீ இதுக்கு மேலயும் அனாவசியமா அவளை இன்னொரு வார்த்தை பேசின அப்புறம் நான் மனுஷனா இருக்கமாட்டேன்.. எல்லாத்துக்கும் ஒரு எல்லை உண்டு” என்று சிவந்த விழிகளுடன் சுட்டு விரல் நீட்டி எச்சரித்தவன்,
‘என்ன பார்த்துட்டு நிற்கிற வாடி’ என்று இப்போதும் அவனையே பார்த்து நின்ற அலரை அழைத்து கொண்டு முன்னே செல்லவும் அவர்களை வழி மறித்தாள் சரசு.
“சித்தி வயசு பெண்ணை இப்படி நாலு பேர் முன்ன அசிங்கப்படுத்துறது கொஞ்சம் கூட சரியில்லை… அவங்களுக்கு வழியை விடு எதுவா இருந்தாலும் வீட்டுக்கு போய் பேசிக்கலாம்” என்ற ராஜேஷின் குரலில் தான் சுற்றுப்புறத்தை உணர்ந்தாள் அலர்விழி.
கோவிலுக்கு செல்வோரில் சிலர் அங்கே நின்று இவர்களை பார்த்து கொண்டிருந்தனர். இதை கண்டவளுக்கோ பயத்தில் உடல் நடுங்கியது அதில் தன்னை அறியாமல் அருகே நின்ற எழிலை மேலும் ஒட்டிக்கொண்டு அவன்கரத்தை அழுத்தமாக பிடித்து கொண்டாள்.
இதை கண்ட சரசு “எடுடி கையை” என்று உச்சஸ்தாயில் கத்தியவாறு அவளை நெருங்கவும், அலரை மறைத்து நின்ற எழில்,
“இனி ஒரு வார்த்தை பேசினஅப்புறம் அம்மான்னு கூட பார்க்கமாட்டேன்மரியாதையா வழி விடு..!”
“என்னடா பண்ணிடுவ.. இல்லை என்ன பண்ணிடுவ..!” என்று அவனை நெருங்கவும் இருவருக்கும் இடையே நுழைந்த ராஜேஷ், “சித்தி எழில் அலரைத்தான் கட்டுவேன்னு சொன்னாஅதுல என்ன தப்பிருக்குஅவனுக்கு இல்லாத முறையா..? இல்ல உரிமையா..? அவன் ஆசைப்பட்ட பெண்ணை கட்டி வைக்க வேண்டியதுதானே..! என்றிட,
“டேய் நிறுத்துடா பெண் எடுக்கவும் ஒரு தராதரம் வேண்டாமா..? பெருசா பேசவந்துட்டான் பையன் ஆசைப்பட்டு கேட்டா கட்டிவைன்னு நாட்டாமை பண்ணிக்கிட்டு.. இவ அம்மாவோட லட்சணம் தெரிஞ்ச எவனும் இவளை கட்டமாட்டான்அதான் என் பையனை வளைச்சு போட இதோ இப்படி சிங்காரிச்சி அனுப்பி வைச்சிருக்காங்க” என்று அஹங்கராத்தின் உச்சியில் சரசு பேசிக்கொண்டே போக,
மகளை இன்னும் காணாத வளர்மதியும் நாதனும் அவளை தேடி வர அவர்கள் செவியில் அமிலம் ஊற்றியது போல் இருந்தது சரசுவின் வார்த்தைகள்.
சரசுவின் வார்த்தைகளை கேட்ட எழில், ‘ஏய்ய்ய்ய்..’ என்று ஆக்ரோஷமாய் தன்னை மீறி கரம் ஓங்கிவிட்டான்அதற்குள் வளர்மதி அவளை தன்புறம் திருப்பி இடியென தன் கரத்தை இறக்கினார்.
“ஏய்..” என்று சரசு வாய் திறக்கவும் மற்றொரு கன்னத்திலும் அறைந்தவர்..,
“இன்னும்.. இன்னும்ஒரு வார்த்தை வெளியில வந்தது உடம்புல உசுரு இருக்காது” என்ற அவள் கழுத்தை பிடித்துவிட்டார்.
வளர்மதி அடித்ததில் இதழோரம் குருதி கசிய நின்றிருந்த சரசு அவரின் அழுத்தத்தில் மூச்சு விடமுடியாமல் தவிப்பதை கண்ட ரேவதி ‘சித்தி விடுங்க ஏதாவது ஆகிடப்போகுது’ என்று வளர்மதியை பிடித்து இழுக்க.. அவரோ உடும்பு பிடியாய் அவளை பிடித்திருந்தார்.
அதற்குள் பெரியவர்களுக்கு தகவல் சென்றிருக்க தாயம்மாள், நீலா முதற்கொண்டு அனைவரும் அங்கே குழுமி விட்டனர்.
சரசுவின் வார்த்தைகளில் அதிர்ந்த அலர்விழி தன்னிச்சை செயலாய் எழிலிடம் இருந்து விலகி நின்றாள். நாதன் வந்து அவளை அணைக்கவும் “அப்பா..” என்று தேம்பிக்கொண்டே அவர் நெஞ்சில் முகம் புதைத்திட மகளின் கண்ணீர் நெஞ்சை சுட்டதில் நாதனுக்கு சரசுவை கொல்லும் வெறியே எழுந்தது.
நடந்ததை அறிந்த நீலாவோ பதறி அடித்து கொண்டு வெளியில் வந்தவர், ‘பிசாசாடி நீ..! இன்னும் எத்தனை பேரோட ரத்தத்தை குடிக்க காத்திருக்க’ என்றவர்அலரை அவள் முன் இழுத்து நிறுத்தி “இந்த முகத்தை பார்த்தா உனக்கு அப்படி தெரியுதா..? யாரை என்ன வார்த்தை பேசுற இதுவே உன் வீட்டு பெண்ணா இருந்தா இப்படி அசிங்க படுத்துவியா..?” என்றவர் அப்போது தான் வளர் அவள் கழுத்தை பிடித்திருப்பதை கண்டு,
“விடு வளரு உன் நிழல் கூட இந்த அசிங்கத்து மேல படக்கூடாது” என்று அவர் கரத்தை பிரிக்க,
“இல்லைம்மா என்னை விடுங்க.. அன்னைக்கு என் மேல பழி போட்டப்பவே இவளை கண்டதுண்டமா வெட்டி போட்டிருந்தேன்னா இன்னிக்கு என் பொண்ணு கிட்ட வந்திருக்க மாட்டா..! என் பெண்ணை பேச என்ன தைரியம் இருக்கணும் இவளுக்கு விடுங்கஇவ எல்லாம் வாழ தகுதியே இல்லாதவ.. அன்னைக்கு செய்யாததை இன்னைக்கு செய்றேன்” என்று ஆவேசமாக சரசுவை நோக்கி சென்றவரை பிடித்து நிறுத்தினார் நீலா.
வளரிடம் சென்ற நாதன், “சாக்கடைல கல் எறிஞ்சா நம்ம மேல தான் தெறிக்கும் வளர் இவ சொல்லிட்டா அதெல்லாம் நிஜம் ஆகிடுமா..? உன்னைப்பற்றி எங்களுக்கு தெரியாதா..? இல்ல என் பெண்ணை பற்றி தெரியாதா இதெல்லாம் ஒரு பிறவின்னு முக்கியத்துவம் கொடுத்துட்டு இருக்க.. நீ வா இனியும் இங்க நிற்க வேண்டாம்” என்று கூடத்தை பார்த்துக்கொண்டே வளர்மதியை ஆசுவாசப்படுத்த முயல அதற்குள் தாயம்மாளும் அனைத்து மருமகள்களும் வளர்மதியை தேற்ற முயன்றனர்.
“இல்லைங்கஎன் லட்சணம் தெரிஞ்சவன் என் பெண்ணை கட்ட மாட்டான்னு சொல்றா அதுக்கு என்ன அர்த்தம்..! அப்போ பொய்க்கு தான் காலமா..? இவ சொல்றமாதிரி என் பெண்ணை யாரும் கட்டமாட்டாங்களா..?” என்று நாதன் முகம் பார்க்க..,
“அப்படி எல்லாம் இல்லம்மா..” என்றவரின் ஒரு புறம் மகளும் மறுபுறம் மனைவியும் தோள் சாய்ந்திருக்க அவர்களை தேற்றியவாறே சரசுவின் மீது அனல் பார்வையை வீசினார்.
“அப்படின்னா அதை நிரூபிச்சு காட்டுங்க” என்றாள் வளர்மதி.
“இல்லைம்மா.. நாலு வருஷத்துக்கு முந்தி பித்து பிடிச்சி போய் இருந்த வளர் இல்லை இப்போ ரொம்ப தெளிவா தான் பேசுறேன்”
‘என்ன பேசுற மூட்டபூச்சிக்கு பயந்துட்டு வீட்டையே கொளுத்துற மாதிரி இப்போ என்ன அவசரம் இவ எல்லாம் ஒரு …’ என்றவரை இடையிட்ட வளர்,
“இல்லம்மா யார் நம்மளை விழ வைக்கணும்னு நினைக்குறாங்களோஅவங்க முன்னாடி எழுந்து திடமா நின்னு காட்டனும்இப்போ அதுக்கான நேரம் வந்திருக்கு தராதரம் பேசினாள் தானே..! இப்போ தெரியும்” என்றுஅங்கே வேண்டுதலை நிறைவேற்ற சுமங்கலிகளுக்கு தாம்பூலம் வழங்கி கொண்டிருந்தவரிடம் இருந்த மஞ்சள் கயிறை கொண்டு வந்து எழிலிடம் கொடுத்து,
“கட்டுங்க தம்பி” என்றார்.
இன்று அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தாக்க உறைந்து போய் இருந்த அலர்விழி தாயின் இச்செயலில் விக்கித்து போய் நின்றிருந்தாள்.
சில வருடங்களுக்கு முன் மனைவி அனுபவித்த கொடுமைகளை எண்ணி பார்த்த நாதனுக்கு ஓரளவு அவர் நிலை பிடிபட மீண்டும் வளர்மதி அத்தகைய நிலைக்கு செல்லாமல் இருக்க வேண்டுமானால் இத்திருமணம் அவசியம் என்று புரிந்து அலர்விழியிடம், “போய் பக்கத்துல நில்லுடா அமுலு..” என்றார்.
நடந்து முடிந்த மொத்த நிகழ்வையும் முழுதாய் உள்வாங்கிசரியாக உணரமுடியாது நின்றிருந்தவளுக்கு தந்தையின் வார்த்தைகள் மற்றுமொரு அதிர்வை தர, சிந்திக்கும் திறன் அற்று கண்ணீரோடு நாதனையே பார்த்தவாறு பேச்சற்று நின்றிருந்தாள்.
மகளை புரிந்தவரும், ‘நாங்க எது செஞ்சாலும் அது உன் நல்லதுக்கு தான்ங்கிற நம்பிக்கை இருக்கு தானடா..!’ என்று கேட்கவும் தன்னிச்சையாய் அவள் தலை “ஆம்” என்று அசைந்தது.
“அ..ப்..பா..” என்று வார்த்தைகள் தந்தி அடித்ததே தவிர எதையும் பேச முடியவில்லை எதிரே இருந்தவனின் முகத்தை கண்டவள் அதில் எந்த உணர்வும் இல்லாமல் இருப்பதை காணவும் அன்று விடுதி சாலையில் எழில் அவளிடம் விட்ட சவாலே அக்கணம் அவள் கண் முன் வந்து நிழலாட எதையும் அலசி ஆராயாமல் நொடியில் தீர்மானித்து விட்டாள்.,
வெறுப்போடு எழிலை பார்த்தவள் மனமோ ‘ச்சை.. நினைத்ததை நடத்தி முடிக்க இந்தளவு தரம் தாழ்ந்து போவானா..?” என்று வெதும்பி போனது.
சரசுவின் செயலில் மற்றவர்களை எப்படி எதிர்கொள்வது என்று இறுகிப்போய் நின்றவன் வளர்மதியின் வார்த்தையில் மேலும் திகைத்து தன் முன்னே இருந்த மஞ்சள் கயிறில் பார்வையை நிலைக்க விட்டிருந்தவன் “முடியாது” என்றான் அழுத்தமான குரலில்.
அவன் பதிலில் அலர்விழியும் சரசுவும் ஒரு சேர தலை உயர்த்தி எழிலை பார்க்க வளர்மதியோ எதிர்பாரா அதிர்ச்சியில் உறைந்து போனார்.
நீலா முதற்கொண்டு அனைவருக்குமே அத்தனை அதிர்ச்சி.. பின்னே சிலருக்கு அவன் காதலின் ஆழமும் பலருக்கு இருவருக்கும் பெரியவர்கள் போட்ட முடிச்சும் தெரியும் என்பதாலும் இன்றைய நிகழ்வில் பெண்ணின் கெளரவம் காக்க அவளுக்கு தாலி கட்டுவான் என்று எதிர்பார்த்தவர்களுக்கு இது பேரதிர்ச்சியே..
“டேய்ய் மச்சான் என்னடா பேசுற ?என்ன ஆச்சு உனக்கு கிறுக்கா பிடிச்சிருக்கு ?நீதான எப்படி சித்தப்பா முகத்தை பார்த்து கேட்பேன்னு சொன்னஇப்போ அவரே கட்டிக்குடுக்குறேன்னு சொல்றாரு ஏன் முடியாதுங்கிற..?? அதுவும் இங்க இந்த சூழல்ல வேண்டாம் மச்சி தப்பு பண்ணாத கொஞ்சம் சித்தி முகத்தை பாரு ” என்றான் வெற்றி நண்பனின் முடிவை எதிர்பாராத அதிர்வோடு.
“ராசாஎன் பேத்திக்கு என்ன கொறைச்சல்னு இப்படி சொல்ற ? நான் பொண்ணுங்குற பேருல ஒரு பாவத்தை பெத்து உலவ விட்டிருக்கேனே அவளால என் மருமக அனுபவிச்சதெல்லாம் போதும்பா..! இப்போ அவ மகளை வேண்டாம்னு சொல்லி இன்னும் அவளை காயபடுத்தாத அதை தாங்கும் சக்தி எனக்கில்லை” என்று அவனை தாயம்மாள் உலுக்கவும்,
“ஆயா நான் இன்னும்..” என்று ஆரம்பித்த எழிலிடம் வளர்மதியை அணைத்து பிடித்தபடி வந்த நீலா, “நான் பேசினத்துக்காகத்தான் அவளை வேண்டாம்னு சொல்றியா எழிலு.. பொதுவா பானையை பார்க்க கூடாது பாலை பார்க்கணும்னு சொல்வாங்க இவ்ளோ நாளா நான் பானையை பார்த்தேன் அதான் உன் அம்மாவை பார்த்துதான் இந்த கல்யாணம் வேண்டாம்னு சொன்னேன்.. ஆனா பாலை தான் பார்க்கணும்னு இப்போ புரிஞ்சிக்கிட்டேன்..“
“என்னென்ன காரணங்களை சொல்லி இந்த திருமணம் நடக்க கூடாதுன்னு சொன்னேனோ அதையெல்லாம் இந்த ரெண்டு வருஷத்துல நீ தவிடு பொடியாக்கி எனக்கு புரியவச்சுட்ட, அப்போ சொன்னது தான் இப்பவும் என் செல்லத்துக்கு உன்னை விட பொருத்தமானவன் வேற எவனும் கிடையாது.. நானே சொல்றேன் அவளை ஏத்துக்கப்பா” என்றார்.
அனைத்தையும் கண்ட நாதனுக்கோ தன் மகளுக்கு என்ன குறையென்று மறுக்கிறான் என்று எழிலின் மீது கொலை வெறியே எழுந்தது.
“ஒரு நிமிஷம் நீலாம்மா..”என்றுஅவன் நீலாவிடம் ஏதோ சொல்ல வரவும்பாய்ந்து சென்று அவன் சட்டையை பிடித்து,
“ஏன்டா அம்மாவும் மகனும் சேர்ந்து வந்து எங்களை அசிங்கப்படுத்துறீங்களா..? நாங்களே வலிய பெண்ணை கட்டிக்கோன்னு சொன்னா உனக்கு இளக்காரமா இருக்கா..? என் பெண்ணையே வேண்டாம்னு சொல்ற அளவுக்கு வந்துட்டியா..? என் பொண்ணுக்கு என்ன குறை அமுலுவை வேண்டாம்னு சொல்ல எங்கிருந்துடா உனக்கு தைரியம் வந்தது” என்றார் ஆக்ரோஷமாய்.
நாதனின் கையை விலக்கிய ராஜேஷ், “அவசரத்துலயும் ஆத்திரத்துலயும் எந்த முடிவுக்கும் வர கூடாது கொஞ்சம் பொறுமையா இருங்க மாமாஅவன் ஏதோ சொல்ல வரான் என்னன்னு கேட்போம்நாமாக ஒரு முடிவுக்கு வர வேண்டாம்” என்றான்.
“ஏன்டா இத்தனை நடந்த பிறகும் இவ்ளோ பேர் முன்னாடி என் பெண்ணை வேண்டாம்னு சொல்றான் இன்னும் என்னடா பொறுமைஎருமைன்னு வியாக்கியானம் பேசுற..!” என்று ராஜேஷை உதறியவர் மீண்டும் எழிலின் சட்டையை பிடித்தார்.
தன் சட்டையில் இருந்து நாதனின் கரங்களை விலக்கிய எழில்நேராக வளர்மதியிடம் சென்று அவர் கரத்தை கீழே இறக்கி, “இந்த கல்யாணம் நிச்சயமாய் நடக்கும் மாமி ஆனா இங்க, இப்படி, இந்த நிலையில இல்லை.. ஏதோ ஒரு சூழல்ல கைல கிடைச்ச ஒருத்தனுக்கு உங்க பெண்ணை கட்டி கொடுக்க நீங்க ஒன்னும் அந்த அளவு தரம் தாழ்ந்து போயிடல” என்று சரசுவை பார்த்தவாறு கூறியவன்,
“உங்க வீட்டு படி ஏறி வந்து முறைப்படி பொண்ணு கேட்டு நாள், நட்சத்திரம் பார்த்து,ஊர் கூட்டி விருந்து வச்சு கோலாகலமா ஊர் பார்க்க அவளை கை பிடிக்கிறேன் அதுதான் அவளுக்கும் மரியாதை உங்களுக்கும் கௌரவம், இந்த மாதிரி சூழ்நிலைல நான் தாலி கட்டினேன்னா காலம் முழுக்க இந்த கசப்பான நினைவு தான் எல்லாரையும் துரத்தும் அதோடமுறைப்படி திருமணம் செய்து வைக்குற எல்லா தகுதியும் உங்களுக்கு இருக்கு.. இங்க இப்போ நீங்க சொல்றீங்கன்னு நான் தாலி கட்டினா சிலர் இவ்ளோ நேரமா பேசின வார்த்தைகள் எல்லாமே உண்மைன்னு ஆகிடும் நீங்க”
‘அது மட்டுமில்லை என் கல்யாணத்தை இதோ இவங்க பார்க்குறதை நான் விரும்பலை’ என்று சரசுவை சுட்டி காட்டி கூறவும் தான் அனைவருக்கும் நின்ற மூச்சு திரும்ப வந்தது.
அவன் பதிலில் சிலிர்த்து போன நீலா கண்களில் நீர் திரையிட எழிலை அணைத்து உச்சி முகர்ந்தார். வளர்மதிக்கோ அதுவரை ஊசலாடிக்கொண்டு இருந்த உயிர் மீண்டிருந்தது என்று தான் சொல்ல வேண்டும் கண்களில் வழிந்த கண்ணீரோடு எழிலை பார்த்திருந்தார்.
வெற்றி ஓடி வந்து நண்பனை கட்டிக்கொள்ள தோழியின் கரம் பற்றி நின்றிருந்த தாமரைக்கும் அகனெழிலன் மீதான பார்வை மாறியது.
அடுத்த நாளே சொந்த பந்தங்கள் சூழ தன் தந்தை மற்றும் அக்காள் குடும்பத்துடன் நாதனின் வீடேறி பெண் கேட்டு சென்றான்.
அனைவரையும் வரவேற்றவர்கள் முறைக்காக அலர்விழியை சபையில் நிறுத்தி மாப்பிள்ளையிடம் ‘பெண் பிடிச்சிருக்கா..?’ என்று கேட்டனர்.
பாலனிடம் எழில் ஏதோ கூறவும் அவரும் நாதனிடம் ‘பேச்சு தொடங்குறதுக்கு முன்னாடி பெண்ணோட சம்மதமும் தெரிஞ்சிகிட்டா நல்லா இருக்கும்’ என்றார்.
‘என் சம்மதம் தான் என் பெண்ணுக்கும்.. என்னைக்கும் என் வார்த்தையை அமுலு மீறமாட்டா.. நான் என் பெண்ணை அப்படித்தானே வளர்த்திருக்கேன்’ என்றார் பெருமிதமாக.
‘இருந்தாலும் பெண்ணோட வாய் வார்த்தையா தெரிஞ்சிக்கிறது நல்லது தானே நாதா..??’ என்றார் குடும்பத்தின் மூத்த உறுப்பினர்.
‘நான் தான் சொல்றேனே என் பொண்ணுக்கு எல்லாமே நான் தான் அவளுக்கு தனியா விருப்பு வெறுப்பு கிடையாது.. நான் யாரை சொன்னாலும் அவங்களுக்கு என் பொண்ணு கழுத்தை நீட்டுவா எனக்கு இந்த கல்யாணத்துல முழு சம்மதம் நீங்க ஆரம்பீங்க’ என்றார் இறுமாப்புடன்.
உடனே எழில் பாலனை பார்க்க ‘உங்க பெண்ணோட பதில் தெரிஞ்சா தான் பேச்சு ஆரம்பிக்க முடியும்’ என்று அழுத்தி கூறவும்,
‘சரி உங்க திருப்திக்காக கேட்கிறேன்’ என்றவர் அலர்விழியை அழைத்து அவளிடம் சம்மதம் கேட்க தன் தந்தையின் முகத்தில் போட்டியிட்ட பெருமிதத்தையும் மலர்ச்சியையும் கண்டவள் மெல்ல “ஆம்” என்று தலை அசைத்தாள்.
அலர்விழியின் முகத்தையே ஆராய்ச்சியோடு அழுத்தமாய் பார்த்துக்கொண்டிருந்த எழிலிடம் பாலன் ‘இப்ப திருப்தியா மாப்பிள்ளை.. உன் சம்மதத்தை சொல்லு’ எனவும் அலரை பார்த்தவாறு அவன் தன் சம்மதத்தை தெரிவிக்க நீலா அலர்விழிக்கு பூ வைத்து உறுதி செய்தார்.