வெற்றின் வீட்டில் இருந்து வந்த பின்னர் அவரவர் வேலைகள் அவர்களை ஆக்கிரமித்து கொள்ள அன்று வழக்கத்திற்கு மாறாக தாமதமாக எழுந்தவள் குளித்து முடித்து வர எழிலும் அவிரனும் இன்னும் உறங்கி கொண்டிருந்தனர். இன்று வெளியில் செல்வதாக தீர்மானித்து இருக்கையில் இன்னுமே ஆழ்ந்த நித்திரையில் இருந்த எழிலை மனமே இல்லாமல் எழுப்பி விட்டு சமையல் வேலையை தொடங்கி இருந்தாள் அலர்விழி.
சோம்பல் முறித்தவாறே வெளியில் வந்தவனிடம் டீயை கொடுத்தவள், “அப்பு எங்க மாமா” என்று அவனுக்கான பாலை ஆற்றிக்கொண்டே கேட்க
“இன்னும் எந்திரிக்கலைடி.. நீ குடிச்சிட்டியா, உனக்கு எங்க..??” என்று கேட்க,
‘இதோ‘ என்று மேஜை மீது வைத்திருந்த பானத்தை சுட்டி காட்டவும் ஆறிடப்போகுது முதல்ல நீ குடி… என்று அதை எடுத்து கொடுக்க அவன் கைவளைவில் அமர்ந்தஅலரும் நேற்றைய கதைகளை பேசியவாறு குடித்து முடிக்க,
“சரி நான் குளிச்சிட்டு வந்து அவனை எழுப்பி கொடுத்துக்குறேன்” என்று எழில் துண்டோடு குளியலறையினுள் புக அலரும் சமையலை கவனிக்க சென்றாள்.
சற்று நேரம் கழித்து “மாமாஆஆஆஆஅ” என்ற அலரின் சத்தம் கொட்டி கொண்டிருந்த நீரை மீறி அவனை சென்றடைய குளித்துகொண்டிருந்தவன் அவளது உரத்த குரலில் என்னமோ ஏதோ என்று பதறி அடித்து அவசர அவசரமாக துண்டை இடையில் கட்டியவாறே அவளிடம் விரைந்தான்.
அங்கு சமயலறையில் சப்பாத்திக்கு மாவை பிசைந்து கொண்டிருந்தவள் தலையை இடவலமாக அசைத்தவாறே மீண்டும் ‘மாமாஆஆ‘ என்று ஆரம்பிக்கும் போதே பாய்ந்து அவள் வாயை பொத்தியவன்,
“ஏய் ஏன்டி ஊரை கூட்டுற, குளிக்கிறேன்னு உன்கிட்ட சொல்லிட்டு தானே போனேன், இப்போ எதுக்கு கத்திட்டு இருக்க” என்று கரத்தை விலக்க,
“இவ்ளோ நேரமாவாடா குளிப்ப” என்று சிடுசிடுத்தவள் அப்போது தான் அவன் தலையில் இருந்து சொட்டிய நீரையும் முகத்தையும் வைத்து குளியறையில் நேரே இங்கு இங்கு வந்திருப்பதை கண்டுகொண்டவள், “சரி சரிமுதல்ல முகத்தை துடைச்சிட்டு கொஞ்சம் கீழ குனி”
“எதுக்குடி”
“ப்ச் சொன்னா சொன்னதை செய்”
எதற்கு என்று புரியாமலே அவள் இடுப்பில் சொருகி இருந்த முந்தானையை எடுத்துமுகத்தை அழுந்த துடைத்தவன், “துடைச்சிட்டேன்டி எதுக்கு கூப்ட்ட சொல்லு”
“டேய் உனக்கு ஒவ்வொன்னும் சொல்லனுமா கொஞ்சம் குனிடா”
“ஏன்டி உப்புமூட்டை ஏறபோறியா..??” என்றவாறே அவள் இடை வரை குனிய அலரோ இப்போதும் தலையை இருமருங்கிலும் அசைத்து கொண்டே, “டேய் படுத்தாத கொஞ்சம் நிமிரு” என்றாள் சலித்த குரலில்..
“ஏய் குள்ளச்சி என்னதான்டி வேணும் உனக்கு ….?? குனின்னு சொல்ற நிமிருன்னு சொல்ற ஏதாவது ஒன்னு சொல்லு” என்று அவனும் பொறுமை இழந்துஎகிற,
முகத்தை இடப்புற தோளில் தேய்த்தவாறே, “டேய் என் மூஞ்சிகிட்ட வாடா, முதல்ல இந்த முடியை கொஞ்சம் எடுத்து விடு” என்று அத்தனை நேரமாக முகத்தில் தவழ்ந்திருந்த கூந்தலை விலக்க சொல்ல,
“இதை முதல்லே சொல்றதுக்கென்ன இவ்ளோ நேரம் வீணா போச்சே” என்றவாறே அவளை இடையோடு வளைத்து நெருக்கியவன் கூந்தலை பின்னே எடுத்து விட்டவாறே ஆவலுடன் அவள் முகம் நோக்கி குனிய அவன் அருகே வந்ததுமே இருகரங்களிலும் பிசைந்து கொண்டிருந்த மாவு ஒட்டி இருக்க தன் புறங்கையால் அவன் முகத்தை திருப்பியவள் அவசரமாக அவனை நெருங்க,
அவளை கண்டு கொண்ட எழிலோ, ஏய்கொடுக்குறதுன்னு முடிவு பண்ணின அப்புறம் அங்க எதுக்குடி இங்கயே கொடு என்று அவள் இதழை இணைய முனைய முழங்கையால் அவன் வாயில் இடித்தவள் “டேய் என்னை சோதிக்காத ஒழுங்கா திரும்பு” என்று முழங்கையாலே அவனை திருப்பி அதுநேரம் வரை அரித்து கொண்டிருந்த மூக்கை அவன் தாடியில் மேலும் கீழுமாக இடவலமாகதேய்க்க தொடங்கினாள்.
‘என்னடி பண்ற‘
“இருடா சொல்றேன்” என்றவள் நன்றாக அரிப்பு போக தேய்த்துவிட்டு, “மூக்கு ரொம்ப நேரமா அரிச்சிட்டே இருக்கு மாமா ரெண்டு கையிலும் மாவு அதான் உன்னை கூப்ட்டேன் நீ என்னன்னா இவ்ளோ கேள்வி கேட்கிற” என்றவரே மீண்டும் கருமமே கண்ணாய் அவன் தாடியில் மூக்கை தேய்க்க,
‘ஏய் நிறுத்துடி‘ என்று தலையை பின்னே சாய்த்தான்.
அவன் விலகுவதை கண்டு “டேய் டேய் ஒருநிமிஷம், ஒருநிமிஷம்” என்று கெஞ்சிக்கொண்டே தன் கரங்களை அவன் கழுத்தில் கோர்த்தவள் எக்கி நின்று ‘இங்கயும் அரிக்குது மாமா‘ என்று மீண்டும் தன் கன்னத்தை அவன் கன்னத்தில் வைத்து தேயிக்க,
“ஏய் என்னடி இது விடுறி” என்றுதன்னை கட்டி கொண்டிருந்த அவள் கரங்களை பிரித்து எடுத்து,
“இதுக்கு தான் அந்த கத்து கத்தினியா..?? நானே என்னமோ ஏதோன்னு பயந்து ஓடி வந்தேன் ஆனா நீ என்று அவள் தலையில் கொட்டு வைத்தவன், ஏன் கையை கழுவிட்டு சொறிஞ்சிக்க வேண்டியது தானே..?? இப்போதான் புரியுது எதுக்கு என்னை தாடியை எடுக்க விட மாட்டேங்கிறன்னு..?? இருடி முதல்ல போய் ஷேவ் பண்ணிட்டு வரேன்” என்று திரும்ப,
“இல்லையாபின்னே..?? எனக்கு ஒருஆத்திர அவசரத்துக்கு கூட உதவாட்டி அந்த தாடி வச்சதுக்கு அர்த்தமே இல்லை மாமா..??” என்று குறும்புடன் கண்ணடித்தவள் மீண்டும் அவன் கன்னத்தில் மூக்கை வைத்து தேய்க்க,
அவள் முகத்தை பற்றியவன் “ரொம்ப கொழுப்பு கூடி போச்சுடி குள்ளச்சி அர்த்தமா சொல்ற அர்த்தம், இரு இனி எங்கயும் அரிக்காது” என்றவாறே அழுத்தமாக அவள் முகத்தோடு முகம் வைத்து இழைய,
“ஆஆஅ குத்துது மாமா” என்றவளின் இதழ்களின் மீதும் அவன் தாடை ஊர்வலம் போக அதில் ஏற்கனவே காயம் பட்டிருந்தில் இன்னும் எரிச்சல்கூட, ‘வலிக்குதுடா விடு‘ என்று அவனிடம் இருந்து தப்பித்து ஓட முயன்றாள்.
உடனே அவளை பிடித்திழுத்து, ‘இனி இப்படி பேசுவ‘ என்றவாறே அவள் இதழ்களை நோக்கி குனிந்தவன் அங்கு ஏற்கனவே அவனால் காயம்பட்டு கன்றி போயிருப்பதை கண்டு பெரிய மனது வைத்து அவள் முகத்தை திருப்பி கன்னத்தில் நறுக்கென்று கடித்து வைத்தான்.
‘விடுறாஆஆ‘ என்று வலி தாள முடியாமல் அலர் கத்தவும் அப்போதுதான் சித்தார்த், சுபிக்ஷாவுடன் வீட்டினுள் நுழைந்தான் வெற்றி.
குழந்தைகள் அவிரனை தேடி ஓடவும் தங்கையின் அலறலை கேட்டு பதைபதைத்தா வெற்றி தங்கைக்கு என்னவானதோ என்று பதட்டத்துடன் சமையலறையினுள் நுழைந்தான்.
******************************
அப்போதுதான் அவளின் மற்றொரு கன்னத்தில் கடிக்க இருந்த எழில் வெற்றியை கண்டதும், “வா மச்சான் எப்படி இருக்க..?? என்ன காலையிலேயே வந்திருக்க..??” என்று சகஜமாக கேட்க,
தன் மனைவியை பிரித்து தன் வாழ்வில் கும்மி அடித்துவிட்டு குறைந்தபட்ச மன்னிப்பைகூட கேட்காமல் இப்போது எதுவும் நடவாதது போல தன்னை வரவேற்ற அவனது சகஜமான குரலில் கொல்லும் வெறியே எழுந்தாலும் தன்னை கட்டுபடுத்தி கொண்டு அலரை நெருங்கியவன் “என்ன ஆச்சு அமுலு எதுக்கு கத்தின..??”
“அதை ஏன்டா அவகிட்ட கேட்கிற என்கிட்டே கேளு மச்சி நான் சொல்றேன்” என்றவன் சமையல் மேடையின் மீது சாய்ந்து நின்று “உன் தங்கச்சிக்கு வாய் கொழுப்பு கூடி போச்சு அதான் கடிச்சு கடிச்சு கரைக்கிறேன்”, என்றவன் மேடையின் மீதுஇருந்த அலரின் கைபேசியை எடுத்து வெற்றியிடம் தூக்கி போட்டவன்,
அலரின் முகத்தை பிடித்து “இதோ இந்த கன்னம் தான்டா போட்டோ எடுத்து சீக்கிரம் உன் சித்தப்பாக்கு அனுப்பு, இது சரியில்லன்னா சொல்லு இதோ இந்த பக்கம் கடிக்கிறேன் அதையும் சேர்த்து அனுப்பு” என்று நக்கலாக கூற, அலரின் கன்னத்தில் பதிந்திருந்த அவன் பற்களின் தடத்தை கண்ட வெற்றிக்கு கோபம் கொப்பளித்தாலும்எதையும் கேட்க முடியா நிலையில் தன்னை நிறுத்தி இருப்பவனை முறைத்து கொண்டு மட்டுமே நிற்க முடிந்தது அவனால்.
“என்னடி முறைப்பு” என்று தாடையை நீவியவாறே எழில் வெற்றியிடம்புருவம் உயர்த்த,
“மாமா!! என்று அதட்டிய அலர், போங்க போய் தலையை துவட்டிட்டு ட்ரெஸ் சேன்ஜ் பண்ணிட்டு வாங்க” என்றவள் அண்ணனிடம்,
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாண்ணா, நீங்கஎப்படி இருக்கீங்க குழந்தைங்க எப்படி இருக்காங்க..” என்று கைகளை கழுவிக்கொண்டு அவனுக்கு தண்ணீர் கொடுக்க கைபேசியை மேடை மீது வைத்தவன்,
“இருக்கட்டும் அமுலு உன்கிட்ட பேசிட்டு போகலாம்னு வந்தேன்” என்றவனை அழைத்து கொண்டு ஹால்க்கு செல்ல எழிலும் அவர்கள் பின்னே சென்றவன் அலரின் முந்தானையில் தலையை துவட்டிவிட்டு அங்கிருந்த டீஷர்ட்டை மாட்டியவாறே அவர்களின் பேச்சை கவனிக்க தொடங்கினான்.
“என்னண்ணா உங்க முகமே இப்படி வாடி போயிருக்கு…? தாமரை எப்படி இருக்கா அவளோட கோபம் குறைஞ்சதா..?? என்றவளுக்கு பதிலளிக்காத வெற்றியோ கையோடு கொண்டு வந்திருந்த பார்சலை அவளிடம் கொடுத்தான்.
“என்னண்ணா இது..??” என்றவாறே பிரிக்க அதில் தாமரையும் வெற்றியும் மகிழ்வுடன் இணைந்து எடுத்து கொண்ட புகைப்படம் பெரிதாக ப்ரேம் போடப்பட்டு இருப்பதை கண்டு புரியாமல் அவனை பார்க்க,
“இதுதான் அமுலு நானும் அவளும் அன்னைக்கு சந்தோஷமா எடுத்துகிட்ட ஃபோட்டோ, இப்போ தாமரை அவளோட அம்மா வீட்டுக்கு போய்ட்டா ஆனா இதை ஒவ்வொருமுறை பார்கிறப்பவும் எனக்கு…” என்றவனின் விழிகள் அன்னிச்சையாக செவ்வானமாக சிவந்து எழில்புறம் திரும்ப அவனை இடையிட்ட அலர்,
“என்னண்ணா சொல்றீங்க..??”
“ஆமாடா அன்னைக்கு நீங்க கிளம்பின கொஞ்ச நேரத்துலையே குழந்தையை கூட்டிட்டு அவ அப்பாவை வர சொல்லிகூட கிளம்பிட்டா, ஆறுமாசம் கழிச்சு தான் வருவாளாம் அதுக்குள்ளே இன்னும் எத்தனை பேருக்கு அட்ரெஸ் கொடுத்து இருக்கேனோ அவங்க எல்லாருக்கும் கல்யாணம் ஆகிடுச்சா, யாரும் தமயந்தி மாதிரி தேடி வரமாட்டங்கன்னு உத்திரவாதம் கொடுக்கணுமாம் அப்போதான் திரும்ப வருவாளாம் அதுவரை சித்து, சுபியை நல்லபடியா வளர்க்கனுமாம் இல்ல, இல்லை டிவோர்ஸ் பண்ணிடுவாளாம்” என்று கூற,
அதை கேட்டு கொண்டிருந்த எழிலுக்கோ நண்பனை இன்னும் விடாமல் வைத்து செய்யும் தாமரையை எண்ணி புன்னகை எழாமல் இல்லை.
ஆனால் அலருக்கோ நொந்து போயிருக்கும் தமயனைஎவ்வாறு தேற்றுவது என்று புரியாமல் போக, “அண்ணா அவ ஏதோ தப்பா புரிஞ்சிக்கிட்டா போல நான் சாயங்காலம் அவளை போய் பார்த்து பேசுறேண்ணா நீங்க கஷ்டபடாதிங்க” என்றவள் நெற்றியை நீவியவாறே,
“எனக்கு இன்னும் சந்தேகமாவே இருக்குண்ணா அன்னைக்கு தமயந்தி வந்ததுக்கு பின்னாடி ஏதோ சூழ்ச்சி இருக்கணும் உங்களுக்கு வேண்டாத எதிரி யாரோ உங்களைப்ளான் பண்ணி சிக்க வச்சிருக்காங்கன்னு தோணுது” எனவும்,
அதுநேரம் வரை ஒளியிழந்திருந்தவனின் முகம் சட்டென பிரகாசிக்க, ‘எனக்கு தெரியும் என் தங்கச்சி புத்திசாலி‘ என்று பெருமிதத்துடன் அலரை பார்த்தவன், “எதிரியா..?? என்று எழிலை பார்த்தவன் எதிரியை கூட நம்பிடலாம் ஆனா.., என்றவனின் ரத்த கொதிப்பு இருமடங்காக பெருகிட, வேண்டாதவன் இல்லைடா அமுலுஎல்லாம் ரொம்ப வேண்டப்பட்ட நாதாரி தான் இதை பண்ணான் ஆனா அதை என்னால சொல்ல முடியாத நிலை” என்று மனதார முனுமுனுத்தவன்,
அலரிடம் இருந்து புகைப்படத்தை பெற்று அதை தினமும் அவர்கள் கண்ணில்படும் வண்ணம் சுவற்றில் மாட்டியவாறே “அதேதான்டா அதுக்கு தான் இந்த போட்டோவை எடுத்துட்டு வந்தேன், இதை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் சந்தோஷமா இருந்த உங்க அண்ணனுக்கு நடந்த அநீதி உனக்கு நியாபகம் வந்துட்டே இருக்கணும் என்னையும் என் பொண்டாட்டியையும் பிரிச்சவனை நீ சும்மா விடக்கூடாது” என்று உணர்ச்சி பொங்க கூற,
அதுநேரம் வரை கண்கொட்டாமல் நவீன சிவாஜி சாவித்திரியின் பாச போராட்டத்தை பார்த்து கொண்டிருந்த எழிலின் உடலில் சிறு அதிர்வு உண்டாக, இதற்கு மேல் இருவரையும் பேச விடுவது ஆபத்து என்பதால்..,
“ஏய் என்னடி வீட்டுக்கு வந்தவனுக்கு டீ, காபி கூட கொடுக்காம வளவளன்னு பேசிட்டிருக்க, போ போய் முதல்லடீ போடு அப்புறம் டிஃபன், லஞ்ச் எல்லாம் செய்வ பாவம் உங்க அண்ணன் எந்த புருஷன் சாபத்தை வாங்கினானோ இன்னைக்கு சோறு போட பொண்டாட்டி இல்லாம குழந்தைங்களோட திண்டாடுறான்” என்று பரிதாபப்பட ‘டேய்‘ என்று பல்லை கடித்து கொண்டு நிற்க மட்டுமே முடிந்தது வெற்றியால்.
“ஏன் நாங்க பேசிட்டு இருக்கிறது தெரியலை போங்க நீங்க போய் டீ போடுங்க” என்று அலர் சிடுசிடுக்க,
“அவன் கையாள பச்ச தண்ணிகூட குடிக்க மாட்டேன் அமுலு” என்று வெற்றி…
‘ஏன்ண்ணா..? என்னாச்சு..??’
“அது.. அது.. அதுவந்து” என்று என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் எழிலை பார்க்க,
“ஏன்டி எல்லாத்துக்கும் கேள்வியா கேட்டு கொல்லற, அவன் சாப்பிட்டு எத்தனை நாள் ஆச்சோ முதல்ல டீ எடுத்துட்டு வா எனக்கும் சேர்த்து” எனவுமே அவனை முறைத்து கொண்டு சமையலறைக்குள் நுழைந்தாள்.
சுபி, சித்துவுடன் வெளியில் வந்த அவிரன் எழிலிடம், “நேத்து நீங்க பேட் வேலை செஞ்சிங்களே அதுக்கு அம்மாகிட்ட சாரி கேட்டிங்களாப்பா..?” என்று இடுப்பில் கைவைத்து தோரணையாக கேட்க..,
“கண்ணா நான் எப்போடா அவளை அழ வச்சேன்” என்று புருவம் நீவி யோசித்தவனுக்கு அப்போது தான் நேற்று அலர் குழந்தை குறித்து பேசுகையில் உணர்ச்சி மிகுதியில் அழுதது நினைவு வர,
“இவ ஒருத்திக்கு பதில் சொல்லவே நாக்கு தள்ளுது இதுல இவன் வேற.. இருங்கடா என் பொண்ணு வந்து உங்களுக்கு பதில் சொல்லுவா..??” என்று அவனை பார்க்க,
அவிரனோ மிக கறாரான குரலில், “தப்பு பண்ணினா சாரி கேட்கனும்னு தெரியாதாப்பா உங்களுக்கு..??” என்றிட அவன் கேட்ட தொனியில் எழுந்த புன்னகையுடன், ‘கேட்டுட்டேன் கண்ணா‘ என்றான்.
‘ஹ்ம்ஹும் ப்ராமிஸ் பண்ணுங்க‘ அப்போதான் நம்புவேன் என்று அவிரன் அவன் முன் கரம் நீட்ட அப்போது அலர்விழி அனைவருக்குமான தேநீருடன் வந்தாள்.
“ப்ராமிஸ் கண்ணா விடிய விடிய அம்மாகிட்ட நிறைய டைம்ஸ் சாரி கேட்டுட்டேன்” என்று மனைவியை பார்த்து கண் சிமிட்ட அவன் பதிலில் திகைத்து போனவள் எழிலை முறைத்துக்கொண்டே மகனை அழைத்து “ஷ்ஷ்ஷ் அப்பு அப்பாகிட்ட இப்படி எல்லாம் பேசக்கூடாது..,”
“ஏன்மா..? நீங்கதானே சொல்லி இருக்கீங்க கேர்ள்ஸை அழ வைக்கறது தப்பு.., தப்பு பண்ணினது யாரா இருந்தாலும் சாரி சொல்லனும்னு, அதான் அப்பாவை கேட்க சொன்னேன் அது தப்பாம்மா” என்று கேட்க அவஸ்த்தையாய் எழிலை பார்த்தவள் பின் மகன் புறம் திரும்ப பதில் இல்லாமல் அவன் நகரமாட்டான் என்பதை அறிந்து,
“அப்பா சாரி கேட்டுடாங்க.., இப்போ குட் பாய் ஆகிட்டாங்க போதுமா..!!! போ நீ போய் பிரஷ் பண்ணிட்டு வா” என்றவள் அடுத்த சில நிமிடங்களில் குழந்தைகளுக்காக பாலை எடுத்து கொண்டு வர அங்கு அவிரனோடு சித்துவும் சுபியும் காலையே தங்கள் ஆட்டத்தை தொடங்கிட பிடித்து வைத்து அவர்களை குடிக்க செய்தவள் பத்திரமாக விளையாடுமாறு அறிவுருத்தி வெளியே அனுப்பிவிட்டு எழிலின் அருகே அமர்ந்தாள்.
***************************
அதுநேரம் வரை யோசனையோடு அமர்ந்திருந்த வெற்றி, “ஏண்டா அமுலு நிஜமாவே இவன் உன்கிட்ட சாரி கேட்டானா..? இவன் ஒன்னும் அவ்ளோ நல்லவன் கிடையாதே..!! யார்கிட்டயும் இதுவரைசாரி கேட்டது இல்லை உன்கிட்ட எப்படி..??? என்றவன் எழிலை அழுத்தமாக பார்த்தவாறே, எங்கயோ இடிக்குதே” என்று மேவாயை நீவிட அலரோ அவனுக்கு பதிலளிக்க முடியாமல் எழிலை முறைத்திருந்தாள்.
உடனே எழிலிடம் திரும்பியவன், ‘ஆமா என் தங்கச்சியை அழ வச்சதுக்கே அவகிட்ட சாரி கேட்க தெரியுது ஆனா என்… கொடுமை, என்னை கதற” என்று தொடங்கியவன் தன்னை கட்டுபடுத்தி கொண்டு
“நான் சரியா தூங்கி எத்தனை நாள் ஆச்சு தெரியுமாடா..??எனக்கு பண்ணின அநியாயத்துக்கு ஏன் என்கிட்டே சாரி கேட்கலை” என்றவன் அலரிடம்
“அமுலு இனி அவன்கிட்ட பேசணும்னா முதல்ல எனக்கு சாரி சொல்ல சொல்லு” என்று முறையிட்டான்.
குடித்துகொண்டிருந்த டீ புரைக்கேற தலையை தட்டிக்கொண்டே இருமிய எழிலின் பார்வைஅலர் மீது படிய அவளோ வெற்றி கூறியதை எதிர்பாராதவளாக விக்கித்து போய் அமர்ந்திருந்தாள்.
அவள் உணர்வை படித்த எழிலின்இதழ்கள் அட்டகாசமாய் பிரிய சிரிப்பினூடே, “என்ன மச்சான் கேட்ட.., சரியாய் கேட்கலை திரும்ப சொல்லு” என்று மீண்டும் அவன் வார்த்தைகளை உறுதி செய்திருந்தான்.
“ஹ்ம்ம் எனக்கு இதுவரை நீ பண்ணின கொடுமைக்கு இந்த ஜென்மம் முழுக்க சாரி கேட்டாலும் போதாது, ஒழுங்கா சாரி சொல்லுடா” என்றான்.
“என்ன மச்சான் இது இப்படி பேசுற..? சாரி கேட்கிற உறவாடா நம்மளது” என்றான் துடிக்கும் இதழ்களுக்குள் புன்னகையை கட்டுபடுத்திக்கொண்டு..,
ஆனால் வெற்றியோ பிடிவாதமாக, “ஏன்டா என் இடுப்பை உடைச்சு விட்டதுக்கு கூட சாரி சொல்லாத கல்நெஞ்சுக்காரன் தானடாநீ…, அதைகூட மன்னிச்சிடுவேன் ஆனா இப்போ நீபண்ணினது என்னால மன்னிக்கவே முடியாது என்று சீறியவன், அதுக்கு ஒழுங்கா இப்ப சாரி சொல்ற..? இல்லாட்டி இந்த உறவையே நான் முறிக்க வேண்டி இருக்கும்” என்றதில் எழிலுக்கு சிரிப்பை கட்டுபடுத்த முடியவில்லை…
அதிலும் அவஸ்த்தையுடன்செய்வதறியாது இருவரையும் பார்த்து கொண்டு இருந்தவளின் முகத்தில் இருந்த பதட்டம் அவன் சிரிப்பை இரட்டிப்பாக்க வெடித்து சிரிக்க தொடங்கவும் அலரோ வெட்கத்தில் சிவந்த முகத்தை மறைக்க அரும்பாடு பட்டவளுக்கு எவ்வாறு தன்னவனை அடக்குவது என்று தெரியவில்லை.
“டேய் எதுக்கு சிரிக்கிற..??” என்று கடுப்பான வெற்றி, ‘மரியாதையா சாரி சொல்லு..!!‘ என்றிட,
“சரி மச்சான் சொல்றேன் ஆனா எப்படி சாரி சொல்லணும் அதையும்நீயே சொல்லு” என்று சிரிப்பை கைவிட்டு கேட்க,
“எப்படி கேட்கணுமா..??” என்று எழிலை மேலிருந்து கீழ் விசித்திரமாக பார்த்தவன் “வழக்கமா நீ அமுலுகிட்ட எப்படி கேட்பியோ அப்படிதான் ..? ஏன் என் தங்கச்சி காலுல விழுவ என் காலுல விழமாட்டியா..?? விழுடா” என்றதில் ‘அண்ணா‘ என்ற அலர்விழி தான் பெரிதும் பதறி போனாள்.
எழிலோ கட்டுபடுத்தமுடியாமல் வயிற்றை பிடித்து கொண்டு சிரிக்க தொடங்க, கண்களில் நீர் வந்த பின்பே தன்னை மட்டுபடுத்தியவன், “சா.. சாரி தானே மச்சி..!! நீ இவ்ளோ ஆசை படும்போது அதை மறுக்குறது நம்ம நட்புக்கு நான் செய்யற துரோகம் அதனால…” என்று இழுத்தவன் ஓரவிழியால் அலரின் உணர்வுகளை அவதானித்தபடி “ஓகேடா சாரி கேட்க நான் ரெடி ஆனா அதுக்கு உன் தங்கச்சி ஒத்துப்பாளான்னு தெரியலையே”
“ஏன் ஒத்துக்கமாட்டா, அவ எப்பவும் நீதி, நேர்மை பக்கம்டா எனக்கு நீ பண்ணின அநியாயம் மட்டும் தெரிஞ்சது அவளே சொல்லுவா” என்று சிவந்த விழிகளுடன் அவனிடம் சூளுரைத்தவன்,
“அமுலு ஒழுங்க இவனை என் காலுல விழுந்து மன்னிப்பு கேட்க சொல்லு” என்றதில் பதறிப்போய் இருக்கையில் இருந்து எழுந்தவள்,
“இல்லை இல்லைண்ணா, அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்”என்றவளின் பார்வை அவளையுமறியாமல் எழில் மீது படிய முகத்தின் செம்மை அதிகரித்தது .
‘ஏன் அமுலு இந்த அண்ணனைவிட உனக்கு அவன் முக்கியமா போயிட்டானா..??’
“ண்ணா அப்படி எல்லாம் இல்லை” என்று அலர் கைகளை பிசைந்து கொண்டு நிற்க,
“அப்படி கேளு மச்சி!! ஓகே சொல்லுடி குள்ளச்சி உங்க அண்ணன் தானே ஒரே ஒருமுறை சாரி கேட்கிறேனே” என்றான் அட்டகாசமான சிரிப்பினூடே…
‘டேய் மானத்தை வாங்காத‘ என்று ஓங்கி அவன் வாயில் பட்டென்று ஒன்று வைத்து,
“அண்ணா இல்லைண்ணா.. அதெல்லாம் வேண்டாம்” என்றவள் இதழ்கள் துடிக்க அலைபாய்ந்த விழிகளுடன் முகத்தை திருப்பி கொள்ள அதை கண்ட எழிலின் புன்னகை மேலும் விரிந்தது.
“ஏன்டி ஏன் வேணாம்னு சொல்ற.., உனக்கு தெரிஞ்சு சிலதுன்னா தெரியாம நான் அவனுக்கு நிறைய கொடுமை பண்ணியிருக்கேன், அப்படிதானே மச்சான்” என்று வெற்றியிடம் கண் சிமிட்டியவன் அவன் முறைப்பை பொருட்படுத்தாமல், “ஐ அக்ரி அண்ட் ரிக்ரெட் கண்டிப்பா நான் சாரி சொல்லியே ஆகணும்” என்றவாறு வெற்றியின் புறம் திரும்ப…,
அவன் சட்டையை பிடித்து இழுத்தவள், “ஐயையோ அண்ணா அவருக்கு பதிலா நான் மன்னிப்பு கேட்கிறேன்.., சாரி மன்னிச்சிடுங்க.. ப்ளீஸ் நீங்க கிளம்புங்க”என்று கூற..,
“ஏன் அமுலு அண்ணனைவிட நேத்து வந்தவன் உனக்கு முக்கியமா போயிட்டான் இல்லை.. சார் என் காலுல விழுந்தா அவன் கவுரவம் பாதிக்கும்னு நினைக்கிற நீ இந்த அண்ணனோட கவுரவம் போனது பத்தி யோசிக்கலை இல்லை” என்று விரக்தியுடன் கேட்க,
“அச்சோ அண்ணா அது.. அது வந்து அப்படி.., ண்ணா நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் இல்லண்ணா, நான் கேட்டா என்ன அவர் கேட்டா என்ன நாங்க ரெண்டு பெரும் வேற வேற இல்லையே அதான் நான் கேட்குறேன் மன்னிச்சிடுங்க..!!நீங்க ஏன் இப்படி யோசிக்கறீங்க..??” என்றாள் பரிதவிப்புடன்.
அதற்கு நேர்மாறாக எழில், “நீ பிறக்குறதுக்கு முன்னாடி இருந்தே அவன்தான் எனக்கு எல்லாம் ஆனா இன்னைக்கு நீ அவனையே ஃபீல் பண்ண வச்சிட்ட இல்லை.., எங்க ரெண்டு பேருக்கு நடுவுல நீ யாருடி..?? இனி உன்னோட பர்மிஷன் எனக்கு தேவையே இல்லடி குள்ளச்சி என் நண்பன் தான் முக்கியம் அவன் ஆசையை நிறைவேத்துறது தான் என் வாழ்க்கை லட்சியம்” என்று அலரிடம் வெற்றிக்காக பேச வெற்றியின் நெஞ்சம் நிறைந்து போனது நண்பனின் வார்த்தைகளால்..!!
கண்களில் ஈரம் கசிய பெருமிதத்துடன் எழிலை பார்க்க, அலர்விழியோ “டேய் வேண்டாம் என் பொறுமையை சோதிக்காத” என்று நெற்றியை பிடித்து கொண்டவளுக்கு எவ்வாறு அவனை அடக்குவது என்று தெரியாமல் விழித்தாள்.
“மச்சான் நீ என்ன பண்ற என் மாமனார்கிட்ட போய் உங்க மாப்பிள்ளை..” என்று ஆரம்பிக்கவுமே “இல்லல்ல ண்ணா அப்படி எல்லாம்” என்றவாறே அவன் வாயை தன் கரம் கொண்டு அடைத்திருந்தாள் அலர்விழி.
அலரின் முகச்சிவப்பும் பதட்டமும் நொடிக்கொருதரம் எழிலை தொட்டு மீளும் அவள் பார்வையும் அதன் பரிதவிப்பும் புதிதாய் இருக்க.., வெற்றியின் பார்வை எழில் புறம் திரும்பியது.., அங்கே அடக்கமாட்டாத அவன் சிரிப்பும் அவனது விழிகளில் வழிந்த குறும்பும் மெல்ல பிடிபட்டது.
“சரி சரி வேண்டாம் நீ ஏன் இவ்ளோ பதட்டமாகுறநான் எதுவும் கேட்கலை” என்றவெற்றியின் பதிலில் அதற்கு மேல் அலர்விழியால் அங்கு நிற்க முடியாமல் போனது.
“நான் சப்பாத்தி போடுறேன்ண்ணா” என்று சமையலறைக்குள் நுழைந்து கொண்டாள்.
“அப்புறம் மச்சி உன் தங்கச்சியும் உள்ள போயிட்டா.. சாரி கேட்க ஆரம்பிக்கட்டுமா..??” என்று இருகரங்களையும் தலைக்கு மேல் உயர்த்தி நெட்டி முறித்தவன்சுற்றத்தை ஒருமுறை உறுதி படுத்திக்கொண்டு வில்லங்கமான குரலில் கேட்க
எழிலின் குரலில் இப்போது முழுதாக அவனை கண்டுகொண்ட வெற்றி, “இல்லை அதெல்லாம் ஒன்னும் வேணாம்”
“எது வேண்டாமா..?? இவ்ளோ நேரம் சாரி சொன்னாதான் ஆச்சுன்னு நின்ன..!! இப்போ என்ன வேண்டாம்னு சொல்ற..?? அப்படியெல்லாம் நீயே ஒரு முடிவுக்கு வரக்கூடாதுமச்சி…”
‘ஏன் .. ஏன்..’
“ஏன்னா இப்போநான் சாரி கேட்கிற மூடுக்கு வந்துட்டேன்.. கேட்டே தீருவேன்.. ” என்ற எழில் அவனருகே நகர்ந்தமர்ந்து அவன் தோளில் அழுத்தமாய் கரம் கோர்க்க..,
“அதுக்கு..?” என்று நடுங்கும் குரலில் கேட்ட வெற்றி கண்களில் பீதியுடன் எழிலை பார்த்தான்.
“என்ன மச்சான் எனக்கு இருக்கிற ஒரே பிரெண்ட் நீ..இத்தன வருஷத்துல இப்போதான் முதல்முறை நான் சாரி கேட்கணும்னு எதிர்பார்க்கிற..,” என்று மீண்டும் அவனிடம் நெருங்கி அமரவும்..,
“அதனால” என்று பதறிக்கொண்டு இருக்கையில் இருந்து எழுந்து விட்டான் வெற்றி, அவன் முகத்தில் அப்பட்டமாய் அச்சம் வழிய சுற்றும் பார்க்க யாரும் அவன் உதவிக்கு இல்லது போனதை உணர்ந்தவன் மெல்ல நகர்ந்து வாயில் அருகே சென்றான்.
“என்ன மச்சி இப்படி சொல்ற..?? நான் பண்ணின மொத்த தப்புக்கும் ஒருமுறையாவது உன்கிட்ட சாரி கேட்டாதான் என் மனசு ஆறும், இங்க பசங்க இருக்காங்க நீ வா நாம ரூமுக்கு போ …” என்றவாறு வெற்றியின் கரத்தை பிடிக்கவும்..,
“அடச்சை , கருமம் புடிச்சவனே விடுறா கையை” என்று பொங்கிவிட்டான் வெற்றி.
அவசரமாக எழிலிடமிருந்து கரத்தை விடுவித்தவன் படபடத்த நெஞ்சை நீவி விட்டவாறே, “சாரி கேட்கிறானாம் சாரி…, யாருக்கு வேணும் உன் சாரி, அதையெல்லாம் என் தங்கச்சிகிட்ட கேட்கிறதோட நிறுத்திக்க கிட்ட வந்த அவ்ளோதான் சாவடிச்சிடுவேன்..” என்று திரும்பியவன் வாயிற்படியில் கால் இடறி விழ..,
‘பார்த்து மச்சான்‘ என்று எழில் கை நீட்ட, “டேய் டேட்டேடேய் அங்கேயே நில்லு..,”
“மச்சான் கால்ல ரத்தம் வருது பாருடா… ” என்று வெற்றியை தூக்க முற்பட,
வேகமாக பின்னோக்கி நகர்ந்த வெற்றி “டேய் மேல கைவச்ச ஒரே வெட்டுதான்..!! ஐயோ தாமரை எங்கடி இருக்க தயவுசெய்து எப்படியாவது உன் புருஷனை காப்பாத்து” என்று மனதினுள் மனைவியிடம் மன்றாடியவன், தட்டு தடுமாறி சமாளித்து எழுந்து நிற்கும் முன்னமே வெற்றியை தூக்கிய எழில் உள்ளே செல்ல முற்ப்பட,
“டேய் அநியாயம் பண்ணாதடா தெரியாம சொல்லிட்டேன் இனிமேல் சத்தியமா சாரி கேட்டு வர மாட்டேன்.. ” என்றவாறே அவனிடம் இருந்து துள்ளி இறங்கியவன், ‘ஆளை விடுடா சாமி‘ என்று அடுத்தநொடி எழிலை திரும்பியும் பாராமல் குழந்தைகளையும் விட்டுவிட்டு ஓட்டம் எடுத்திருந்தான்.
“மச்சான் பசங்களை விட்டுட்டு போற..??” என்றவனின் கேள்விக்கு கூட பதிலளிக்காமல் பின்னங்கால் பிடரியில் இடரும் அளவு இருந்தது வெற்றியின் ஓட்டம்.
புன்னகை மாறாமல் செல்லும் அவனையே பார்த்துக்கொண்டிருந்த எழில் திரும்பவும் அங்கே அலர்விழியோ இடுப்பில் கரம் பதித்து அவனை கடுமையாக முறைத்துகொண்டிருந்தவள், எங்கண்ணா… என்றதுமே,
‘சரி டைம் இருக்கு வா ஒருமுறை கேட்டுடுறேன்..‘ என்று அவளை அழைக்க ‘அச்சோ நானில்ல..’ பதறிகொண்டு சமையலறையினுள் ஓடி மறைந்தாள்.
“சாரியா வேணும் சாரி இனி கேட்டு வாங்க இருக்கு உங்களுக்கு..!!” என்றவன் ஆடை மாற்ற அறையினுள் சென்றிருந்தான்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.