‘டேய் மாமா எந்திரி‘ என்று இழுத்து போர்த்தி தூங்கி கொண்டிருந்தவனை அலர் பிடித்து உலுக்க எழிலிடம் அசைவில்லை ..
பின்னே உறங்குபவர்களை எழுப்பி விடலாம் ஆனால் உறங்குவது போல் நடிப்பவர்களை எங்கனம் எழுப்ப..!!
‘டேய் ஃபிராடு நீ தூங்கலைன்னு எனக்கு தெரியும் மரியாதையா இப்போவே எந்திரிச்சேன்னா …‘ என்று எச்சரிக்க தொடங்கவும்குப்புற படுத்து இருந்தவனிடம் இருந்து சிறு அசைவு கூடவே, “தூக்கம் வருதுடி பட்டு நாளைக்கு சேர்த்து சாப்ட்டுக்கிறேன், பசியில்லை” என்று சோம்பலான குரலில் கூற,
“டேய் என் கோபத்தை கிளராத”அவன் முதுகில் பட்டென்று ஒன்று வைத்தவள், “பசியில்லையா” என்று கடுப்புடன் கண்களை இறுக மூடி திறந்து ஆழ்ந்த மூச்சை வெளியேற்றி, “வேண்டாம், உன்மேல கொலை வெறியில இருக்கேன் மரியாதையா எந்திரிடா எருமை” என்றது அவனை திருப்ப முயல.,
இப்போதுபோர்வையை விலக்கியாவாறே, “ப்ச் என்னடி உன் பிரச்சனை ..?? மனுஷனை நிம்மதியா தூங்ககூட விடமாட்டியா..?? என்றவாறேதிரும்பி படுத்தவன் அதே வேகத்தில் அலரை இழுத்து தன்மீதுபோட்டு கொண்டு என்ன சொல்லணுமோ இப்போ சொல்லு” என்று கண்களை திறவாமல் கூற,
“டேய் கண்ணை திற” என்றாள்கோபத்துடன்..
அவனோ அதை அலட்சியபடுத்தி “எதுக்குடி நீ பேசுறதை கேட்க காது திறந்து இருக்கே அது போதாதா..??” என்றிட,
“ஏன் லேட்..??”
“ப்ச் இன்னைக்கு சர்ச் இருக்குன்னு சொல்லிட்டு தானே கிளம்பினேன் அப்புறம் என்ன கேள்விடிஇது..??” என்று சலித்து கொண்டவன் இப்போதும் கண்களை திறவாமலேயே அவள் கரங்களை பிடித்து தன் நெற்றியில் வைத்து “ஒரே தலைவலிடி செல்லம் கொஞ்சம் மசாஜ் பண்ணு” என்று கூற,
“எப்படி சார்க்கு இன்னைக்கு சர்ச் திண்டுக்கல் தலப்பாக்கட்டில பிரியாணிக்கு மசாலா சரியா இருக்கா ரைத்தால உப்பு அளவா இருக்காமீனாட்சி தியேட்டர்ல பிரஸ்ட் டே பிரஸ்ட் ஷோக்கு கூட்டம் எல்லாம் கரெக்டா வந்தாங்களான்னு பார்க்க சொல்லி இருந்தாங்களா..?? என்றுஅவனிடம் இருந்து தன் கரங்களை உதறியவள்,
“எப்போ இருந்துடா உன்னை தியேட்டர்க்கும் ஹோட்டல்க்கும் சர்ச் அனுப்பினாங்க” என்று கேட்க, அதுநேரம் வரை மூடி இருந்த எழிலின் விழிகள் அன்னிச்சையாக விரிந்து கொண்டது.
அவன் மனமோ வேகமாக, “இவளுக்கு எப்படி தெரிஞ்சது…?? ஃபோன்ஆப் பண்ணிட்டோம் கடைக்கும் போகல, மாமா நேரா பஸ் ஸ்டான்ட் வந்துட்டார் அப்புறம் எப்படி தெரிஞ்சிருக்கும்” என்று கணக்கிட அவன் எண்ணப்போக்கை உணர்ந்து ,
“ஃபோன் ஆஃப் பண்ணிட்டா உன்னை ட்ராக் பண்ண முடியாதா..??” என்று எள்ளலுடன் ஒற்றை புருவம் உயர்த்தி அவள் கேட்க
பதறிப்போய்எழுந்து அமர்ந்தவன், “ஏய் என்னடி ட்ராக் அது இதுன்னு ஏதோ கொலை குற்றவாளியை விசாரிக்கிற மாதிரி பேசுற” என்றவனுக்கு வியர்க்க தொடங்கிட,
அதை மனதினுள் குறித்து கொண்டவள் குரலில் ஏகத்திற்கும் நக்கலுடன் “அதெல்லாம் இருக்கட்டும் நான் கேட்ட கேள்விக்கு முதல்ல பதிலை சொல்லுங்க சார்” என்று அவன் மடியில் அமரவும், ‘விதி வலியது!!‘ என்று எழிலுக்கு புரிந்து போனதுஇருப்பினும் முயற்சியை கைவிடாதவனாக,
“ஏய் டயர்ட்டா இருக்கு தலைவலின்னு சொல்றேன்… எப்ப பாரு தூங்குறவன்கிட்ட குறுக்கு விசாரணை பண்றதே பொழப்பா போச்சுடிஉனக்கு” என்று அவளிடையை பற்றி தூக்கியவன்,
“எந்திரிடிஎதுவா இருந்தாலும் எதிர்ல உட்காந்து பேசு” என்று உயிரை கையில் பிடித்து கொண்டுஅவளை விலக்க முயல,
“அதுதான் ராசா நடக்காது” என்றவள் அவன் புறமாக திரும்பி அமர்ந்து ஒற்றை கையால் அவன் கழுத்தை வளைத்தவள், “பொய் வாயை திறந்தா பொய்” என்று சீறியவள் தன் கைபேசியை திறந்து அதில் இருந்து சில போட்டோக்களை காண்பிக்க எழிலுக்கு விழிகளே தெறித்துவிடும் போல இருந்தது.
ஆம் அதில் நாதனும் எழிலும் பஸ் ஸ்டாண்டில் இருந்து அவன் புல்லட்டில்கிளம்பி சினிமா தியேட்டருக்கு சென்றது இடைவெளியின் போது அவசர அழைப்பை ஏற்று பேசிக்கொண்டிருந்த எழிலுக்கு நாதன் வாஞ்சையுடன் சமோசா ஊட்டி விட்டது படம் முடிந்து இருவரும் தலப்பாகட்டிக்கு சென்று பிரியாணியை ஒரு பிடிபிடித்து இறுதியாக உண்ட ஐஸ்க்ரீம் வரை ஒவ்வொன்றும் துல்லியமாக புகைபடமாக்க பட்டிருப்பதை கண்டு திகைத்து போனான்.
‘எப்படி இது சாத்தியம்‘ என்றவனின் விழிகளில் என்ன முயன்றும் அச்சம் படரத்தான் செய்தது.
‘சொல்லுடா..’ என்று அவன் கழுத்தில் பதிந்திருந்த கரத்தில் அழுத்தம் கொடுக்க, அவள் கைகளில் சிறைபட்டிருந்தவனுக்கு அதிலிருந்து மீளும் ஆசையே இல்லை இருப்பினும் வீம்புடன், “ஏய் முதல் விடுடி என்னை!! புருஷனையே உளவு பார்க்கிறியா..?? அந்த அளவுக்கு என்மேல நம்பிக்கை இல்லையா..??” என்று இறங்கிய குரலில் கேட்க,
“அப்போ இதெல்லாம் மார்பிங்ன்னு சொல்ல போறீயா சொல்லுடா…??”
“அது அது வந்து அப்ப… அப்படி எல்லாம் இல்லைடி செல்லம், ஆனா நம்பு சத்தியமா எனக்கு ஒண்ணுமே தெரியாதுடி” என்று விழி உயர்த்தி அவளை பார்க்க,
“உனக்கு ஒன்னும் தெரியாது..? இதை நான் நம்பனும்” என்றவள் அவன் மடியில் இருந்து இறங்கி எதிரே அமர்ந்து ‘கண்டின்யூ பண்ணு‘ என்பதாக தலையை மெல்ல அசைக்க,
அவளது பார்வையை புரிந்து கொண்டவன் ‘என்னடி இப்படி நம்பாத மாதிரியே பார்க்கிற‘ என்று பாவமான குரலில் கேட்டு அவளருகே அமர்ந்து, “பட்டு உனக்கு என்னை தெரியாதா..??” என்று அவள் தோளில் கைபோட்டு தன்னோடு அணைக்க முற்ப்பட,
தன்னை சுற்றி இருந்த கரத்தை ஓரவிழியால் பார்த்தவள் மறுநொடியே அதை சுற்றி எடுத்து அவன் பின்னால் வளைக்கவும், “ஏய் என்னடி பண்ற கையை விடு” என்று அவன் அலற,
அலரோ கட்டுக்கடங்கா சீற்றத்துடன், “டேய் எனக்கு தான்டா உன்னை பத்தி முழுசா தெரியும்” என்று அவன் கையை திருப்பியவள், “இப்படிபட்டு சிட்டுன்னு டைவர்ட் பண்ணாம உண்மையை சொல்றது உனக்கு நல்லது” என்று எச்சரிக்க,
“ரெண்டு இன்ச் டிஸ்டன்ஸ்ல உட்காந்து பேசு இல்லை நடக்குறதே வேற” என்றவள் சம்மணமிட்டு அவன் பேச்சை கேட்க ஆயத்தமாகவும்,
“ரொம்ப ஓவரா போறடி குள்ளச்சி” என்று முனுமுனுத்தவாறே அவளிடம் இருந்து தள்ளி அமர்ந்தான்.
“ஹ்ம்ம் இப்போ சொல்லு”
“அதுதான்டி செல்லம் சொல்றேன்‘ என்று காலையில் அவன் ரெயிட்க்கு கிளம்பியதில் இருந்து கதையை ஆரம்பித்து ஒவ்வொன்றாக விளக்கி அவள் பொறுமையை சோதிக்க தொடங்கினான்,
ஒரு கட்டத்தில் ‘டேய்ஈஈ‘ என்று தலையை பிடித்து கொண்டவள், “இதோபார் இந்த தலையை சுத்தி மூக்கை தொடர வேலையே வேண்டாம் நடந்தது என்ன அதை மட்டும் சொல்லு” என்றால் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக…
“சரி சொல்றேன், வழக்கம் போல நான் வீட்டுக்கு வந்துட்டு இருந்த வழியில மாமா தான் கால் பண்ணி பஸ் ஸ்டான்ட் கிட்ட வர சொன்னாரு. அங்க போனப்புறம் டிக்கெட் எடுத்துட்டேன் கிளம்புன்னு சொன்னாருடி ஆனா முடியவே முடியாதுன்னு சொன்ன என்னை வலுக்கட்டாயமா தியேட்டர்க்கு கூட்டிட்டு போயிட்டாரு. உனக்கே தெரியும் அவர் பொன்னியின் செல்வனோட வெறித்தனமான விசிறி, பத்து முறைக்கு மேல படிச்சிருப்பாரு இப்போ அதை படமா பார்க்கிற எக்சைட்மென்ட்குழந்தை போல பிரஸ்ட் டே பிரஸ்ட் ஷோக்கு புக் பண்ணிட்டு கூப்பிடுறாரு எப்படிடி மறுக்க முடியும் சொல்லு” என்று கேட்க,
“ஸோ அப்பா கட்டாயபடுத்தினதால தான் நீ போன அப்படிதானே” என்று ஆழ்ந்த குரலில் அவள் கேட்க,
‘ஹ்ம்ம்‘
‘அப்போ ஏண்டா ஃபோன் ஆஃப் பண்ணி வச்ச..??’ என்று கேட்க சிறு தடுமாற்றம் எழிலிடம்,
“தடுமாற்றமா..?? எழிலிடமா..??” என்று கேட்டால் இருக்காதா பின்னே..!! அன்று நாதன் வீடு தேடி வந்து மன்னிப்பு கேட்டு இருவரிடையே இருந்த கசடை நீக்கியபின்மாமனாரை புல்லட்டில் ஏற்றி கொண்டு சென்றவன் அதன் பின் மாமனாருக்கும்மனைவிக்கும் இடையே மத்தளமாக அவன் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல…!!
ஒரே ஒரு நாள் நாதன் தன்னை பார்த்ததையே தாங்கி கொள்ள முடியாமல் உறக்கம் தொலைத்தமனைவி ஒருபுறம் என்றால் மனம் திருந்தி எழிலோடு இணைந்து வாழ்க்கையை ரசிக்க தொடங்கி இருக்கும் மாமனார் மறுபுறம்.
ஆம் நாதனே தான்..!! இத்தனை வருடங்களில் நாதனிடம் அத்தனை மாற்றம் , அனைத்திற்கும் ஒரே காரணம் அகனெழிலன். வளர்மதியும் அலர்விழியும் செய்ய முடியாததை தன் நிபந்தனையற்ற அன்பாலும் பொறுமையாலும் எழிலன் நிகழ்த்தி காட்டி இருந்தான் என்றால் மிகையல்ல..!!
அவரது மாற்றத்தில் அதிசயித்து வளர்மதி நம்ப முடியாமல் போனார் என்றால்அலர்விழியோ அசந்து போய் வாயில் கரம் பதித்து நின்று விட்டாள். அத்தகைய பெரும் மாற்றம் அவரிடம்..!! ஏதோ மறுஜென்மம் எடுத்து புதிதாக பிறந்தது போல அத்தனை பொறுமை, அனுசரணை, விட்டுகொடுத்தல், இனிமையுடன் பழக தொடங்கி இருந்த மனிதர் அனைத்திற்கும் மகுடமாய்தன் சரிபாதியான வளர்மதிக்கு அவர் அளிக்கும் முக்கியத்துவமும் மரியாதையும் அனைவரையும் வியக்க வைத்திருந்தது.
“நாதா உனக்கு காத்து கருப்பு அடிச்சிடுச்சா..??” என்று தாயம்மாள் ஒருமுறை வாய்விட்டே கேட்டுவிட்டார்…
அதற்கு புன்னகையை பதிலாக கொடுத்த நாதன், “இல்லைம்மா இவ்ளோ நாள் ஆண் என்கிற கர்வமும் ஈகோவும் என் கண்ணை மறைச்சிட்டு இருந்தது இப்போ நிதானமா என்னோட வாழ்க்கையை திரும்பி பார்க்கும் போது தான் தெரியுது வளர் இல்லைன்னா என்னோட முன்கோபத்தினாலும் மூர்க்கதனத்தாலும் என் வாழ்க்கை எப்பவோ அஸ்த்தமிச்சு போயிருக்கும், இப்போ சமுதாயத்துல தலை நிமிர்ந்து நடந்துட்டு இருக்க நான் வளர் இல்லைன்னா ஒன்னுமில்லாதவனாகி இருப்பேன்.அதை புரிஞ்சிக்காம வீம்போட அவளையும் கஷ்டபடுத்தி நானும் நிம்மதி இல்லாம அருமையான தருணங்கள் எத்தனையோ இழந்துட்டேன்” என்றவரின் குரலில் உண்மையான வலி நிறைந்திருந்தது.
“எப்படி என்னோட மரியாதை அவ கையில இருக்கோ அதே போல அவளோட மரியாதை என் கையில…!! என் பொண்டாட்டியை நானே மதிக்கலைன்னா வேற யார் மதிப்பா..?? அவளை அசிங்கப்படுத்துறது என்னை நானே அசிங்கப்படுத்துறது ஆகிடாதா..?? என் மனைவியை நான் எப்படி நடத்துறேன் என்பதை பொறுத்தே என்னோட மதிப்பு இருக்கும் என்னை பற்றிய மற்றவர்களின் மதிப்பீடு அமையும்”.
“என்னோட தவறான புரிதலால என் பெண்ணுக்கு இப்படி எந்த அவமானமும் நடக்காத போதே நான் அகனெழிலன் கிட்ட எத்தனை முறை கோபப்பட்டு இருப்பேன், ஆனா வளரும் இன்னொருத்தரோட பொண்ணு தானே நான் அவளை பேசினது நடத்தினது எல்லாம் அவருக்கு எவ்ளோ வலியும் வேதனையும் கொடுத்திருக்கும்… மாற்றம் ஒன்னே மாறாதது !! மனுஷன் வளர்ச்சி உடம்புல இல்லைம்மா மனசுல இருக்கு” என்று பேசிய தந்தை கதிர், அலர் இருவருக்குமே புதிதாக தெரிய அவர் வார்த்தைகளை கூர்ந்து கவனிக்க தொடங்கினர்.
“ஆமாம்மா மனசளவுல எந்தளவு பக்குவப்பட்டிருக்கான் என்பதை பொறுத்தே மனஷனோட வளர்ச்சி அமையுது. இத்தனை வயசுக்கு அப்புறமாவது நான் வளர முயற்சி பன்றேன்னு சந்தோஷப்படும்மா, என்னோட வெத்து ஈகோவால, வீம்பால, கர்வத்தால, இத்தனை வருஷம் தவற விட்டதை இப்பவாவது மீட்டு எடுக்கிறேனே என்று தாயிடம் கூறியவர் அனைவரையும் பார்த்தவாறு, “எத்தனை பேருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும் எனக்கு அகனனால கிடைச்சிருக்கு”என்று எழிலை பார்த்தவர்கொண்டு வந்த தேநீர் கோப்பையை வளரிடம் அளித்து,
“என் பொண்டாட்டிக்கு நான் செய்யாம வேற யார் செய்வா..??” என்று கூறவும் அனைவரின் பார்வையும் நாதன் அருகே நின்றிருந்தஎழிலிடம்..!!
இருக்காதா பின்னே அவரிடம் இடம்பெற்ற மாற்றம் அத்தனையும் அகனெழிலன் என்ற ஒற்றை மனிதன் நிகழ்த்திய அதிசயம் அல்லவா…!! சில வருடங்களுக்கு முன்நாதன் எழிலிடம் தஞ்சமடைந்தாரோ அன்றிலிருந்தே நாதனின் பார்வையை சிறுக சிறுக மாற்றி காலப்போக்கில் அவர் கோபத்தை முற்றிலுமாக அகற்றி புது மனிதராக பிறப்பெடுக்க வைத்திருந்தான் அகனெழிலன்.
சேரும் இடத்தை பொறுத்து நம் பார்வையும் சிந்தனையும் மாற்றம் பெரும்என்பது எத்தனை நிதர்சனமான உண்மை என்பதை அனுபவபூர்வமாக நாதன் உணர்ந்திருந்தார். அவ்வகையில் இப்போது தான் நாதன் சேர வேண்டிய இடம் சேர்ந்து மனிதனாக வாழ தொடங்கி இருப்பவர் கிடைத்திருக்கும் வாழ்க்கையை ரசித்து வாழ கற்று மற்றவர்களின் உணர்வுகளை மதிக்க, அவர்களின் விருப்பத்திற்கு முன்னுரிமை கொடுத்து தன் எண்ணத்தை திணிக்காமல் அன்பாய் அனுசரணையாய் நடக்க தொடங்கிய பிறகு வாழ்க்கையே வண்ணமயமாகி போனது.
இதில் வேடிக்கை என்னவென்றால் அவரது மாற்றத்தில் அவரது குடும்பமே ஒருபுறம் குதுகலித்தது என்றால் ஒரே ஒரு ஜீவன் மட்டும் வெகுவாக கலங்கி போனது.
வேறு யார் நம் நாயகிஅலர்விழி தான்..!!
தந்தை மகள்இருவருக்கிடையில் எழில் மீதான உரிமை பனிப்போர் சத்தமின்றி தொடங்கிட அதில் எழில் தான் மிகவும் அல்லல்பட்டு போனான் இத்தனை வருடங்கள் எழிலன் பட்ட பாட்டை வார்த்தையால் சொல்லி மாளாது, இருவருமே அவனை மற்றவருக்கு விட்டு கொடுக்க தயாராக இல்லை.
பலநேரம் இருவரையும் சமாளித்து கொண்டு செல்ல எழில் முயன்றாலும் சிலநேரம் ஒருவரால் ஒருவர் காயப்பட தான் செய்கின்றனர்.
இதோ இன்று மாமனாரின் விருப்பத்தை நிறைவேற்ற மனைவியிடம் சொல்லாமல் அவன் சென்றது போல.
அலரை போலவே தன் பேரன்பினால் எழில் நாதனின் சிந்தையை சிறை செய்ய அதன்பின் நாதனால் எழிலின்றி ஓர் அணுவையும் அசைக்க முடியவில்லை. தொழிலில் நிர்வாகத்தில் இத்தனை வருட அனுபவம் இருந்தாலும் அனைத்திலும் இப்போது அவன் ஆலோசனையைவிருப்பத்தை கேட்டு நிற்கிறார், எழிலால் அவரை மறுக்க முடிவதில்லை.
அதே சமயம் நாதனுடன் எழில் நேரம் செலவிடுவதை அலரால் சுத்தமாக ஏற்றுகொள்ள முடியவில்லை.
நாதனிடம் ஏற்பட்ட மாற்றத்தின் விளைவாக அவரை எதிர்த்து எதுவும் பேச முடியாமல் எழிலை பிடித்து கத்தி தீர்த்துவிடுவாள்.பலமுறைஎழில் கடைக்கு செல்வதற்கு தடை விதித்தவள் அதையும் மீறி அவன் அங்கு சென்றதை அறிந்து இப்போது அவர்களை கண்காணிக்கவே நாதனின் கடை வாயிலிலேயே அவருக்கே தெரியாமல் கேமரா பொருத்தி எழிலை கண்காணிக்கும் நிலைக்கு சென்றுவிட்டாள்.
இதோ இரவு மணி பன்னிரண்டை நெருங்கினால்தன்னவனின் பிறந்த நாள்..!! என்றுமே முதல் வாழ்த்து அவளுடையதாக இருக்கையில் இப்போது சில வருடமாக அவளுக்கு போட்டியாக நாதனும் நள்ளிரவு நேரம் எழிலை வாழ்த்த முந்தி நிற்கும் நிலையில் அவளும் என்ன தான் செய்ய..??
அவளின் சிந்தனையை தடை செய்யாமல் தலைக்கு பின் இருகரங்களையும் கோர்த்து கொண்டு சாய்ந்து படுத்திருந்த எழிலிடம், “சரி உனக்கு எதுவும் தெரியாது அப்படிதானே ” என்று கேட்கவும் அடக்கப்பட்ட புன்னகையுடன் மீசை துடிக்க எழிலின் தலையும் ‘ஆம்‘ என்பதாக அசைந்தது.
‘சரி நம்பிட்டேன்‘ என்றவள் எட்டி அருகே மேஜை மீதிருந்து ஒரு பத்திரத்தை எடுத்து ‘ இதுல கையெழுத்து போடு‘ என்று பேனாவை அவனிடம் நீட்டினாள்.
அவனோ அதை வாங்காமல், ‘என்னடி இது..??’ என்று கேட்க பார்த்தா தெரியலை ‘டிவோர்ஸ் பேப்பர்ஸ்‘ என்று அவன் தலையில் இடியை இறக்கி இருந்தாள் அலர்..
‘என்னது‘ என்று விதிர்விதிர்த்து போனான் எழிலன்,
இருக்காதா பின்னே மாமனாருடன் திரைப்படத்திற்கு சென்று வந்ததற்காக விவாகரத்து என்றால் மூச்சடைக்க தான் செய்தது எழிலுக்கு.
“எஸ் டிவோர்ஸ் பேப்பர்ஸ் கையெழுத்து போடு” இன்னையோடு எல்லாத்துக்கும் ஒரு முடிவு கிடைக்கட்டும் என்று கடுமையான குரலோடு அலர்விழி.
பதறிப்போய் ‘நோ முடியாது‘ என்று கட்டிலில் இருந்து துள்ளி எழுந்தவன், அவளையும் சட்டென இழுத்துநிறுத்தி காற்று புகாதவாறு அணைத்து கொண்டான்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.