காரில் இருந்து இறங்கிய மறுநொடி வில்லில் இருந்து பாய்ந்த அம்பாய் கணப்பொழுதில் எழில் பாய்ந்து சென்று வீட்டை திறந்து உள்ளே ஓடி மறைய..,
‘டேய் ஃபிராடு மாமா நில்லுடா‘ என்று அலர் பின்னே விரட்டி சென்றாள்.
“முடியாது நீ அடிக்கமாட்டேன்னு சொல்லு நான் நிற்கிறேன்” என்று அவளிடம் பேரம் பேசிக்கொண்டே கூடம், சமையலறை, பின்கட்டு, மாடிப்படி வளைவு என்று அவளை தன்னை பின்தொடர வைத்து அவளுக்கு போக்கு காட்டிகொண்டு இருந்தான்.
“வேண்டா மாமா ஓடாதே ஒழுங்கா நில்லு..”என்றவள் மீண்டும் சிக்கிய புடவையை ஏற்றி பிடித்தவாறு, “ப்ச் புடவை கட்டிட்டு என்னால உன் வேகத்துக்கு ஓட முடியலை நில்லுடா” என்று மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க ஓடியவள் ஒரு கட்டத்திற்கு மேல் அவனை பிடிக்க முடியாமல்,
“டேய் உனக்கு லாஸ்ட் சான்ஸ் தரேன் ஒழுங்கா இப்ப வந்தேன்னா நாலு அடியோட போயிடும் ஆனா என்னை இன்னும் ஓடவிட்ட அப்புறம்..” என்று ஆட்காட்டி விரலை கொண்டு எச்சரித்தவள் முன் வந்து நின்ற அகனெழிலன் அலரை இறுக அணைத்து இதழோடு இதழ் சேர்த்து சில நொடிகளில் அவள்மூச்சு காற்று சீராகியதை கண்டு அவளை விடுவிக்க…,
அவன் முத்தமிட்டதில் திகைத்து நின்றவள் ‘டேய்‘ என்று அவனை பிடிக்கும் முன் மீண்டும் ஓடத்தொடங்கியவன் ஒரு கட்டத்தில் படுக்கையறையினுள் நுழைந்திருந்தான்.
அவனை பின்தொடர்ந்தவள் சட்டென கதவை சாற்றி தாளிட்டு அதன் மீதே சாய்ந்து நின்று இதுநேரம் வரை தன்னை அலையவிட்டவனை கொலை வெறியோடு பார்த்து கொண்டு நின்றாள்.
அவள் வருவதற்குள் கட்டிலின் மறுபுறம் சென்று பாதுகாப்பாக நின்றிருந்த எழில், “குள்ளச்சி கொஞ்சம் பொறுமையா நான் சொல்றதை கேட்டுட்டு அப்புறம் அடி நான் வேண்டாம்னு சொல்லலை”
“அதுதான் ஆபிஸ்ல இல்லாத பொறுமையை தேடி பிடிச்சிஇழுத்து நிறுத்திநீ சொன்னதை எல்லாம் கேட்டேனே அதுபோதாதா..?? இன்னும் என்ன பொறுமை எருமை..!!”
“ஏய் அது இல்லைடி எட்டு மாசத்துக்கு முன்னாடி நடந்ததை யோசிச்சவ அதுக்கு அப்புறம் நடந்ததை யோசிச்சியா..? இப்போ சொல்றேன் கேட்டுக்கோ என் மேல எந்த தப்பும் இல்லை எல்லா தப்புமேஉன் அப்பா, சித்தப்பா மேல தான்” என்றான் தன்னை பிடிக்க வந்தவளிடம் சிக்காமல் கட்டிலை சுற்றி ஓடிக்கொண்டே..
“எதூஊஎங்கப்பா மேல தப்பாடேய் 420…” என்று கைமுஷ்டிகளை இறுக்கி பல்லை கடித்தவளின்கோபம் இருமடங்காக பெருகி வழிய “நீ தப்பிக்க எங்கப்பா மேலே பழி சொல்றியா..??” என்றவள் அவனை அடிக்க பொருள் தேடி விழிகளை சுழல விட்டவாறு கட்டிலின் மீது ஏறி மறுபுறம் குதிக்க அதற்குள் கட்டிலை சுற்றி இந்த புறம் வந்திருந்த எழிலன் கதவை திறக்க முற்பட்டான்.
அதை கண்டவள் முகம் செந்தணலாகி போக, ‘மாமாஆஆஆ..‘ என்று உரக்க அழைத்துக்கொண்டே நொடியில் கட்டிலை கடந்து அவன் சட்டையை பின்புறமாக பற்றிக்கொள்ள, அவள் கையில் சிக்கியவன் வெளியில் தப்பிக்க முடியாத நிலை..,
“ஏய் மொதல்ல சட்டையை விடுடி” என்று அவன் திமிற,
அலர்விழியோ “ஏன்டா பிராடு பண்றது எல்லாம் பண்ணிட்டு அடுத்தவங்க மேலயா பழி போடுற.., சொல்லுடா நான் இதுவரை உன்கிட்ட ஏதாவது மறைச்சிருப்பேனா..? நீ ஏன்டா மறைச்ச..??”
“ஏன்டி உனக்கு இப்போ பதில் வேணுமா இல்லை சட்டை வேணுமா..??விடுடி சொல்றேன்”
அவளோ இன்னும் அழுத்தமாக அவன் சட்டையை பற்றி இழுக்க அது அவன் கழுத்தில் இறுக்கத்தை கூட்டி வலி உண்டாக்கியது.
“ஏய் கழுத்தை நெறிக்குதுடி.., விடு சொல்றேன்” என்று திரும்ப..,
“விட்டா நீ ஓடிடுவடா.., எனக்கு தெரியாதா”
ஒரு நொடி மௌனித்த எழில், “நீ விடாட்டியும் ஓடுவேன்டி” என்றவன் நொடிப்பொழுதில் சட்டை பொத்தான்களை அவிழ்த்து ‘இந்தா நீயே வச்சிக்கோ..‘ என்றவனின் சட்டை மட்டுமே அலர் கையில்.
நில்லு மாமா என்று விடாமல் விரட்டி பிடித்து இழுத்து வந்து அவனை அமர்த்தியவள் அவன் மடியில் சம்மணம் இட்டு அமர்ந்து தப்பித்து ஓட முடியாததை உறுதி செய்திருந்தாள்.
“ஏய் கீழ இறங்குடி, எதுவா இருந்தாலும் பக்கத்துல உட்காந்து கேளு எப்போ பாரு குரங்கு குட்டி மாதிரி தாவி மடியில் ஏறிக்கிற..” என்று கடுப்புடன் அவளை கீழிறக்க முயன்றான்.
‘எது குரங்கா..??’ என்றவள் அவன் வாயிலே ஒன்று வைத்து மீண்டும் அழுத்தமாக அவன் மடியில் அமர்ந்து ஒரு கரத்தால் அவன் கழுத்தை வளைத்து மறுகரம் கொண்டு அவன் தாடையை பற்றியவள், “டேய் சீட்டர் எவ்ளோ ஆட்டம் காட்டுற நீ..!!! இங்க உட்காந்தா தான்டா நீயும் தப்பிச்சு ஓட முடியாது எனக்கும் அடிக்க வசதியா இருக்கும், இறக்கி விட்டு தப்பிக்க பார்க்கிறியா..??” என்று கூற..,
“என்னடி சொல்ற..?” என்று ஒரு நொடி விழித்தவன்..,
“அடிப்பாவி அப்போ இவ்ளோ நாளா நீ என் மடியில ஆசையா உட்காரலையா அடிக்க வசதியா இருக்கும்னு தான் வந்து உட்காரியா..?? நான் கூட யோசிப்பேன் கோவமா இருக்கும்போது எல்லாரும் தள்ளி போவாங்கஇவ என்ன வித்யாசமா நடந்துக்குறான்னு, இப்போதானே புரியுது” என்றான் இறங்கிய குரலில்.
“ஆமா பின்னே எனக்கே இவ்ளோ ஆட்டம் காட்டுற உன்னை மடியில உட்காந்து கொஞ்சனும்னு வேற உனக்கு நெனப்பிருக்கா…?? என்றவள் இப்போது கழுத்தில் இருந்து அவள் கரங்களை அகற்றி அவன் முகம், மார்பு, தோள் வளைவு என்று அடிக்க தொடங்க ஒருகட்டத்தில் எழில் தப்பித்து ஓட முயல,
பாய்ந்து சென்று பின்புறமாக அவன் பனியனைபிடித்து அலர் இழுக்க அவளுக்கு வாகாக பனியனை கொடுத்திருந்தவன் அவள் அவனை இழுக்கையில் பன்மடங்கு வேகத்துடன் பின்னால் சாய இதை எதிர்பாராதவள் நிலை தடுமாறி படுக்கையில் விழ அவள் மீது எழில் விழுந்திருந்தான்,
தரையில் இருந்து லேசாக கால்களை உயர்த்த இப்போது எழிலின் மொத்த பாரமும் அலர் மீது “ஆஆஅ அப்பா… டேய் எந்திரிடா.. உப்ப்” என்று அவன் பாரம் அவள் சுவாசக்காற்றை தடை செய்ததில் இதழ் குவித்து மூச்சை விட்டவள் அவனிடம் “டேய் மாமா மூச்செடுக்க முடியலை வெயிட்டா இருக்க ப்ளீஸ் எந்திரி” என்று திணறிய போதும் எழில் அசையவில்லை.
“ப்ளீஸ் மாமா கொஞ்சம் மெதுவா அடிடா, முதல் நாள் நீ அடிச்சது ரெண்டு நாள் வலி இருந்தது” என்று வருடங்கள் பல கடந்தும் அவனது ஒற்றை அறையை நினைவு கூர்ந்தவளின் கரம் தன் இடக்கன்னத்தை ஒருமுறை வருடி பின் சினுங்கிகொண்டே கண்களை இறுக மூடிட, வலியை பொறுக்க இதழ்களை அழுந்த கடித்தவண்ணம் அவன் முன் தன் கன்னத்தை காட்டினாள்.
“ப்ளீஸ் கொஞ்சம் மெதுவா அடிடா..” என்று தன்முன் கண்களை அழுந்த மூடி, இதழ் கடித்து அமர்ந்திருக்கும் தன்னவளின் அழகிய அவஸ்தைகள் எழிலை இரும்பை ஈர்க்கும் காந்தமாய் மெல்ல மெல்ல அவளுள் ஈர்க்க விழிகளில் மின்னல் கீற்றாய் விளைந்த புன்னகை விரிந்து இதழ்களையும் நிரப்பியது.
அதுநேரம் வரை கொண்ட கோபம் அனைத்தும் மறந்து அலரவளின் எழில்முகமும் கொஞ்சும் இதழ்களுமே எழிலவனுக்கு பிரதானமாகி போனது.
எதிரில் இருந்தவளை நொடியில் தன் மடியில் அமர்த்தியவன் அவள் கன்னத்தை அழுந்த பற்ற, அகனவனின் எதிர்பாரா செய்கையில் அலரின் விழிகள் அவன் விழிகளோட கலந்தது.
அகனோ தன் விழிகளில் விரிந்தவளிடம் “மெதுவா எல்லாம் முடியாது போடி” என்று அவள் என்னவென்று உணரும்முன் கன்னத்தில் அழுந்த பற்பட கடித்து விட்டான்.
****************************************
நீயும் என்னை அதே மாதிரி அடி மாமா நான் வேண்டாம்னு சொல்லலையே” என்றவள் சட்டென்று எழுந்து அறையினுள் சென்றுஅவன் பெல்ட்டை கொண்டு வந்து அவன் முன் ஆட்டிக்கொண்டிருந்தாள்.
“ஏய் என்ன விளையாடுறியா..!! என்னை பார்த்தா எப்படிடி தெரியுது” என்று பதறிக்கொண்டு அவள் கரத்தில் இருந்து பெல்ட்டை பிடுங்கி வீசியவன் இடக்கரம் கொண்டு நெற்றியை பிடித்துகொண்டு,
“ஏன்டி ஏன் இப்படி என்னை படுத்துறீங்க..??ஒருபக்கம் உங்கப்பா என் பொண்ணையே அடிக்கிறியான்னு என்னை வில்லன் ரேஞ்சுக்கு பீல் பண்ணி எங்க என்கிட்ட விட்டா உன்னை அடிச்சே கொன்னுடுவேன்னு நம்பாம கையோட கூட்டிட்டு போறாரு நீ என்னடான்னா அடின்னு பெல்ட்டை கொண்டு வந்து கொடுக்குற.., ரெண்டு பேரும் என்னை பைத்தியகாரன் ஆக்காம விடமாட்டிங்களா..!!” என்று ஆதங்கத்தோடு கேட்க..,
“அப்படி எல்லாம் இல்லை மாமா.., நான் தப்பு பண்ணியிருக்கேன் அதுக்கு தண்டனை கொடுக்க சொல்றேன்”
“அதுக்கு அடிக்கிறது தான் ஒரே வழியா..???” என்றவன் ஒன்னு அப்படி இல்லன்னா இப்படி என்று அலுத்து கொண்டவன் ‘அடியேய் மொதல்ல கண்மூடித்தனமா கோபப்படுறதை நிறுத்து அதுவே போதும்..‘ என்று கடிய,
“அது கொஞ்சம் கஷ்டம் தான்” என்று தனக்குள் சொல்லிக்கொண்டவள் அவனிடம், “நானும் கண்ட்ரோல் பண்ணனும்னு தான் நெனைக்கிறேன் மாமா ஆனா என்னால உங்களை மாதிரி பொறுமையா எல்லா நேரமும் இருக்க முடியாம போயிடுது..” என்றவளை இடையிட்ட எழில்,
“உன்னை சொல்லி குத்தமில்லை உன் ஜீன் அப்படி..!! ஆனா ஒன்னு உங்கப்பா மாதிரி அன்னைக்கு உன் தாத்தா இல்லாம போயிட்டாருடிஅவரு மட்டும் உங்கப்பா பண்ணின கொடுமைக்குமாமியை அப்பவே கூட்டிட்டு போயிருந்தாருன்னா இன்னிக்கு நீயும் இல்லை உன் தம்பியும் இல்லை, என்று அவன் முடிக்கும் முன்..,
“அப்போ நான் பொறக்காம இருந்திருந்தா நல்லா இருக்கும்னு சொல்றிங்களா மாமா..??” என்று அதற்கும் கண்களை கசக்கி அவனை சோதிக்க தொடங்கி இருந்தாள் அலர்விழி.