“ஆம்பளையா பொறக்க வேண்டியது பொண்ணா பொறந்து என் உசுரை வாங்குது” என்று ஆரம்பித்து கிட்டதிட்ட அரை மணி நேரத்திற்கு தனது இரண்டாவது மகளை திட்டிய பூமணி மனைவி சித்ராவைப் பார்த்து, “இவ்ளோ திட்டுறேன்.. எப்படி நிக்கிறா பார்! வாயை திறந்து இனி இப்படி செய்ய மாட்டேன்னு சொல்றாளா?” என்று கொதிப்புடன் கூறினார்.
சித்ரா மகளை பார்வையால் மன்னிப்பு கேட்க சொல்ல,
அவரது செல்ல மகள் ஆத்மிகாவோ, “சாரி ப்பா.. இனி இப்படி மாட்டிக்கிற மாதிரி தப்பு செய்ய மாட்டேன்” என்று கூறி பூமணியின் இரத்த அழுத்தத்தை ஏற்றினாள்.
——————————————————————————————–
ஆத்மிகா சிரித்தபடி, “நீ இன்னும் வளரனும் சிட்டுக் குருவி” என்றாள்.
சித்ரா முறைக்க,
அவளோ, “நிஜமா தான் சொல்றேன்.. நான் காலேஜ் கட் அடிச்சுட்டு படத்துக்கு போனது அப்பாக்கு எப்படி தெரிஞ்சதுனு யோசிச்சியா? ஒரு வேளை! அப்பா யாரும் செகண்ட் சேனல் கூட அங்கே வந்து இருப்பாரோ!” என்று கூற, அவர் அதிர்வுடன் நெஞ்சில் கை வைத்தபடி அமர்ந்துவிட்டார்.
———————————————————————————————
‘ஃபுட்டீஸ் ஹெவன்’(Foodies Heaven) உணவகத்தில் தனது அறையில் ஜெயதேவ் கோபமாக அமர்ந்து இருக்க, அவனுக்கு முன் ஒருவன் பயத்துடனும் இன்னொருவன் மனதினுள் அலட்சியமும் கண்ணில் போலியான பயத்துடனும் நின்றிருந்தனர்.
ஜெயதேவின் அழுத்தமான பார்வையிலேயே பயத்துடன் நின்றிருந்தவன் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க ஆரம்பித்தான்.
.
.
.
.
.
.
.
உண்மையான பயத்துடன் இருப்பவன், “சார்.. ஆரம்ப காலத்தில் இருந்து உங்க கூடவே இருக்கிறேன்.. கொஞ்சம் யோசிங்க” என்று கண்ணீருடன் கெஞ்சினான்.
ஜெயதேவோ, “பாலில் ஒரு துளி விஷம் கலந்தாலும் அது பால் இல்லையே விஷம் தானே!” என்று நிதானமாக கூறினான்.