“என்னடா ஆதி… மாப்பிள்ளை மாதிரி வேஷ்டி சட்டைல ஜம்முன்னு வந்துருக்க” சிகப்பு முழுக்கை சட்டையை முழங்கை வரை மடித்து விட்டு அவனை போலவே அடங்காத அவனதுக் கேசத்தை ஒரு கையில் அடக்கியபடி மற்றொரு கையால் அந்த வெள்ளை வேஷ்டியின் நுனியை பிடித்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைத்தவனை பார்த்த ஷீலாவிற்கு இப்பொழுதே அவனுக்கு ஒரு திருமணம் செய்து வைக்கும் ஆசை மேலோங்கியது…
“ஒரு கல்யாண வீட்டுக்கு போனேன் ஷீலா எங்க அந்த வெளங்காதவன் வர்றேன்னு நேத்து தான் சொன்னான் ஆள காணோம்”
“அவனே மாப்பிள்ளை மாதிரி இருக்கானா அப்ப நானு?” ஆதிக்கு பின்னாலே வந்த கெளதம் ஆதியை விட சற்று கூடிய சிகப்பு நிறத்தில் சட்டை அணிந்திருந்தான்… கௌதமின் குரலைக் கேட்டு எதார்த்தமாக வெளியில் வந்ததுப் போல ஓடி வந்து நின்ற பவித்ரா கௌதமை ரசனையாய் பார்த்து யாரும் பார்க்காத நேரத்தில் அவனுக்கு கண்ணடித்தாள்… அதில் ஜெர்க் ஆனவன் அவளதுக் காதல் பார்வையைத் தாளாது ஓரக்கண்ணால் அவளை பார்த்து நின்றான்…
“என்னைக்கும் என் ஆதி தான் அழகு” என்று அவனிடம் வந்து த்ரிஷ்டி கையாலே கழித்தார் ஷீலா…
“என்ன சைட் அடிச்சது இருக்கட்டும் நீங்க பெத்த டைனோஸர் குட்டி ஒன்னு தனியா படம் ஓட்டிட்டு இருக்கு பாத்திங்களா”
பவித்ராவை பார்த்தவர் மீண்டும் ஆதியிடம் திரும்பி, “அதை எல்லாம் இப்ப கண்டுக்குறது இல்ல நான் பெத்த ரெண்டும் தெண்டம் தான்… எனக்கு இப்ப நீ இல்லனா சஹானா கல்யாணம் பண்ணிக்கணும் ரெண்டுல ஒன்னு சொல்லு” விடாப்பிடியாக நின்றார் ஷீலா
தமிழின் தந்தையை பார்த்தவன், “எப்டி இந்த ஷீலா கூட இத்தனை வருஷம் குப்ப கொட்டுனிங்க தொல்லை தாங்க முடியல பா… எப்ப பாரு கல்யாணம் கல்யாணம்னு ஏலம் விட்டுட்டே இருக்குது”
“கஷ்டம் தான் டா ஆதி ஆனா என்ன பண்றது வேற வழி இல்லையே… சரி போய் சாப்பிடுங்க ரெண்டு பேரும். தமிழ் நீங்க வருவீங்கன்னு சொன்னான் அதான் கறிக் குழம்பு வச்சிருக்கா சாப்பிடுங்க மொத” என்றவர் மீண்டும் தன்னுடைய நாளிதழில் மும்முரமானார் நந்தன்.
“உங்க வீட்டுல நடக்குற உறுப்புடியான விசியம் ரெண்டே ரெண்டு… ஒன்னு இந்த கறிக் குழம்பு இன்னொன்னு வாயிலேயே வடை சுடுறது”அவனது காதை திருகியவர், “வாய் அதிகமாகிடுச்சு டா உனக்கு”
“ஐயோ ஷீலா காதுல இருந்து மொத கைய எடுங்க… ஏற்கனவே அடிச்ச சரக்குல காது சரியா கேக்க மாட்டிக்கிது இதுல நீங்க வேற”
“காது பிரச்சனை ஆனதுக்கு பதிலா வாயில ஏதாச்சும் அடி பட்ருக்கனும்… சாமி இனி பேச்சிலர் பார்ட்டி-னு உன் கூட வந்தா என்ன செருப்பை எடுத்து நானே மடார் மடார்-னு அடிச்சுக்குவேன் டா” உச்சகட்ட எரிச்சலில் கெளதம் ஆதியை பார்த்து பொரிந்தான்.
அவனை அப்பாவியாக பார்த்த ஆதி, “நான் என்ன டா பண்ணேன்? ஒரு ஷாட் அடிச்சிட்டு ஒரு ஓரமா போய் தூங்கிட்டேன்”
“கிழிச்ச குடிகாரன்னா என்ன பண்ணுவான்? சரக்கு அடிச்சிட்டு தூங்கிருவான் இல்ல ரெண்டு லவ் புட்டுக்குச்சுன்னு அந்த பொண்ணப் பத்திப் பொலம்புவான் ஆனா நீ என்ன தெரியுமாப் பண்ணுன? கல்யாணப் பொண்ணப் பாத்து ப்ரப்போஸ் பண்ணுன டா பேமானி”
ஷாக் ஆனது போல் நடித்த ஆதி வாயை பொத்தி, “நானா டா அப்டி பண்ணுனேன்”
“நீ இல்லாம உங்க ஆயாவா வந்து பண்ணுச்சு? சனியன் அதோட நிறுத்தாம இடத்தையே கலாட்டா பண்ணிட்டு தான் டா வந்த. நல்லவேளை, அந்த இடத்துல பெருசுக எதுவும் இல்ல…. இருந்துச்சு, கல்யாணம் நின்னுருக்கும்…”
ஆதியின் தலையில் குட்டிய ஷீலா, “அறிவு இருக்கா கொஞ்சம் ஆச்சும்? ஒரு பொண்ணுகிட்ட போய் தப்பா நடந்துக்குற அளவுக்கு அந்த போதை உன்ன மாத்திருக்கு”
“இது என்னடா புது கதையால இருக்கு… பொண்ணு பாக்க அழகா, கழுத்துல நெறையா நகை போட்ருந்துச்சு… சரி கரெக்ட் பண்ணா லைப் செட்டில், இந்த தீஞ்ச வாயனுக முன்னாடி கும்னு ஒரு பொண்ணோட வந்து நிக்கலாம்னு ப்ரப்போஸ் பண்ணா என்னமோ ரேப் பண்ண மாதிரி தப்ப நடந்துக்குதேன்னு சொல்றிங்க?” – ஆதி
“ஆமா இல்லனாலும் இவன் உத்தமன் நடிப்பை போடுறத பாரு… இதையும் இந்த குடும்பமே நம்புது” கெளதம் புலம்பிக்கொண்டே இன்னும் இரண்டு இட்லியை உள்ளே தள்ளினான்
“சாரி ஷீலா இனிமே வெளிய போனா சரக்கு பக்கமே போக மாட்டேன்… பிராமிஸ்” என்று கௌதமின் தலையில் கையை வைத்து சத்தியம் செய்தான் அமைதியாக உணவை எடுத்துக்கொண்டிருந்த கௌதமிற்கு புரை ஏறியது.
“ஷீலா மா எனக்கு வேகமா கல்யாணம் பண்ணி வச்சிருங்க கண்ட கண்ட நாய் எல்லாம் என் உயிரை பணயம் வச்சு விளையாடுது… ஐயையோ பவிக்குட்டி என்ன எவ்ளோ பாக்க முடியுமோ அவளோ பாத்துகோ என்னைக்கு காலைல செத்து கிடக்க போறேனு தெரியலையே”
புலம்பினாலும் முன்னே இருந்த பாத்திரத்தில் இருந்த நல்லி எலும்பு மட்டும் குறைந்துக் கொண்டே இருந்தது…
“டேய் டேய் அளக்காத டா ஒரு சத்தியத்துல நீ செத்துட மாட்ட. அப்டி பாத்தா நீ என்னைக்கோ செத்துருக்கணும்… சரி அந்த புளியங்கொட்டை எங்க மா? (usa2goquickstore.com) இவ்வளவு காலைல போயிருக்கான் காலேஜ் 7.30 எல்லாம் எங்க போய் என்ன பண்ணுறான் அதுவும் ஞாயிற்றுக்கிழமை” – ஆதி
“இன்னும் இந்த புளியங்கொட்டைய நீ விடலையாடா… காலேஜ்ல இருந்து போன் வந்துச்சு ஆதி. ஏதோ ப்ரின்சிபள் கூப்பிட்டாருனு சாப்புடாம போய்ட்டான்”
“ம்ம்ம்ம்… ஞாயிற்று கிழமை இவனுக்கு மட்டும் காலேஜ் எல்லாம் இருக்காது அவன் வெளிய ஊரச் சுத்த பொய் சொல்லிருப்பான் அதையும் நம்புறியே ஷீலா விவரம் பத்தல உனக்கு” – ஆதி
ஆதி ஒரு வாய் எடுத்து வாயில் வைக்க போக சரியாக அவனுடைய கைபேசி அலறியது “சீசீ இவனுக்கு எல்லாம் நூறு ஆயிசு வேணாம்டா பூமிக்கு தான் பாரம்” என்று புலம்பியவன் காலை அட்டன் செய்து காதில் வைத்து, “சொல்லுடா கருவாயா…” அழைத்தது அதே புளியங்கொட்டை தமிழ் தான்…
மறுமுனையில் தமிழின் குரலில் பெரிய மாற்றம் தெரிந்தது, “ஆதி”
அநியாயத்திற்க்கு மூச்சு வாங்கியது அவனுக்கு… ஏதோ ஒன்று சரி இல்லை என்று உணர்ந்த ஆதி, சாப்பிட்டுக் கொண்டிருந்த இடத்தில் இருந்து எழுந்து கை கழுவ சென்றவன், தன்னை சுற்றி எவரும் இல்லை என்று உறுதிசெய்து, “தமிழ் என்ன ஆச்சு?”
“ஆ…ஆதி காலேஜ்ல இருக்… இருக்கேண் டா வா… வா டா…” அந்த ஒரு வரியில் அத்தனை தடுமாற்றம்… விறுவிறுவென வீட்டை விட்டு வெளியேறியவன், “காலேஜ்ல எங்க இருக்க”
“லைப்ரரி பக்கம் போயிடு இருக்கேண் டா…”
“பத்து நிமிசத்துல அங்க இருப்பேன் பயப்படாத… புரிஞ்சதா” ஆதியின் செயலை கண்ட கௌதமும் வெளியில் வரவும் ஆதி வண்டியில் ஏறவும் சரியாக இருந்தது…
“ஆதி பயமா இருக்கு டா அருவா, கத்தி எல்லாம் வச்சிருக்காங்க டா”
“டேய்” ஆதி கத்திய கத்தில் அந்த பக்கம் பேரமைதி, “பயப்புடாத-னு சொன்னேன் கேட்டுச்சா”
“இல்ல மச்சான் தொரத்துறாங்க”
“நேர்ல வந்தேன் மொத வெட்டு உனக்கு தான் டா… தைரியமா இருன்னு சொல்றேன்ல… ஒருவேளை உன்னப் புடிச்சிட்டா அவங்கட்ட ஏதாவதுப் பேச்சு குடுத்துட்டே இரு… பயப்படாத… பத்து நிமிசத்துல நான்அங்க இருப்பேன்” என்றவன் அணைப்பை துண்டித்து வண்டியை உயிர்ப்பித்த நொடி கெளதம் நிலைமையை புரிந்து பின்னால் ஏறி அமர, ஆதி தீயாய் கல்லூரியை நோக்கி பறந்தான்…
அந்த கல்லூரி சென்னை மாநகரித்திலே ப்ரசித்தி பெற்றது. அதன் தரத்திற்கும் அதன் கட்டணத்திற்கும்… ஒன்று திறமை இருந்தால் கல்லூரியில் சேரலாம் இல்லை பணம் இருந்தால் சேரலாம் ஆதலால் அங்கு முக்கால் வாசி பணக்காரர்கள் மட்டுமே இருப்பர்… கல்லூரியின் பரப்பளவு மட்டுமே கிட்ட தட்ட ஐம்பது ஏக்கர் இருக்கும்.
ஆதி சொன்ன நேரத்தை விட வேகமாக கல்லூரி வந்திருக்க, விடுமுறை நாள் ஆதலால் கேட்பார் இன்றி கல்லூரியே வெறிச்சோடி இருந்தது. வண்டியை நேராக நூலகம் நோக்கி செலுத்த அங்கு இருந்தான் தமிழ், அந்த புல் தரையில் வயிற்றை பிடித்து வழியால் துடித்துக்கொண்டே…
நெற்றியில் பெரிய கீறல், கைகளில் ஆங்காங்கு குருதி தென்பட்டது… ஆதியின் ஊர்தி ஒலி கேட்டு தமிழை சுற்றி இருந்த அந்த பத்து தடியன்களும் திரும்பினர் முகத்தில் ஒரு குழப்ப ரேகையுடன்…
“யார்ரா நீங்க… அடிச்சேன்னு வையி கூவத்துல போய் விழுந்துருவீங்க அப்பால போயிக்கினே இரு” தர லோக்கலில் ஒருவன் ஆதி, கௌதமை விரட்ட முயன்றான்.
வண்டியில் இருந்து இறங்கிய ஆதி அதே வண்டியில் சாய்ந்து அமர்ந்து ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தவன், “இன்னா அண்ணாத்த எப்டி வுட்டுட்டு போக சொல்ற? தோ கீழ வலிக்கினு இருக்கான் பாரு அவன் என் தோஸ்து தான்… என் கூட அனுப்பிடு நா கூட்டினு இப்பிடிக்கா போய்கின்னே இருப்பேன் … இன்னா டா நா சொல்றது சரி தான” என்று கௌதமிடம் கேட்க அவனும் சலனமே இன்றி தலை அசைதான்…
“அய்ய உன் தோஸ்துனா ஒடனே விட்டுன்னு போணுமா நீ இன்ன என் மாமனா? மச்சானா?” இன்னொருவன் எகிறினான்…
“ண்ணா இன்னா இவன்டலாம் பேசிட்டு இர்க்க வந்த வேலீய முடிச்சுன்னு கெளம்பலாம் குறுக்க வந்தா ஒரே வெட்டா நா அசால்ட் பண்ணிட்றேன்” என்றவன் ஆதியிடம், “யின்னா நின்னுட்டே இருக்க சொல்றது காதுல விலலையா ஓபி அடிக்காம கெளம்பு முடிச்சின்ன வுடனே சொல்லி அனுப்புறோம் வந்து பாடிய இட்டுனு போங்க…”
அவர்கள் பேசிய வார்த்தை எதுவுமே காதில் விழாதவாறு தான் உண்டு தன் வேலை உண்டு என்று தம் அடித்து நின்றான் ஆதி கேசவன்.
“சனியன் பேசுதா பாரு” என்று ஆதியை பார்த்து புலம்பிய கெளதம், தமிழை நோக்கி செல்ல,
ஒருவன், “டேய் இவனாண்ட யார் வந்தாலும் அவன் கால ஒட” முன்னர் பேசியவனிடம் கட்டளையிட்டான்.
“உன் உருட்டல் மெரட்டலுக்கு எல்லாம் நான் ஆள் இல்ல, இந்தா பின்னாடி நிக்கிறான் பாரு அவன்ட பேசு” என்று அவர்களை சற்றும் பொருட்படுத்தாது தமிழிடம் செல்வதிலேயே குறியாய் நின்றான் கெளதம்…
“கோத்தா செத்த டா இன்னிக்கி நீ” ஒரு தடியன் கௌதமிடம் நெருங்கி அரிவாளோடு வர, அவன் கை கௌதமிடம் படுவதற்கு முன்பாகவே ‘சுர்ர்ர்ர்’- என்ற வலி ஒன்று அடிக்க வந்தவன் கழுத்தில் பட்டது, வலியில் துடித்தவன் திரும்ப, அங்கே ஆதி… புன்னகை பூத்த முகமாய் அவனை நோக்கி…
“நான் சிகரெட் குடிக்கிறப எவன் என்ன டிஸ்டர்ப் பன்னாலும் எனக்கு கோவம் வரும்… அதான் கொஞ்சமா சூடு வச்சேன் இனிமேல் அப்டி பண்ணாத…” பாசமாய் அறிவுரை வழங்கி அவனது கையை முறுக்கி தரையில் சரித்தான்…
“டேய் நாங்கல்லாம் மினிஸ்டர் ஓட ஆளுங்க. விசியம் தெரிஞ்சது உன் குடும்பமே பேஜாராகிடும் பாத்துக்க… கடைசியா ஒருக்கா டைம் கொடுக்குறேன் எஸ் ஆய்கின்னேயிரு”
“நானும் அதே தான் தல சொல்றேன். ஒரு தடவ யோசிச்சுக்கோ அவனை மட்டும் விற்று. இல்லனா சீன் வேற மாதிரி ஆகிடும் மினிஸ்டர் ஆவது மயிராவது எல்லாரு எனக்கு ஒன்னு தான்”
வேஷ்டியின் ஒரு நுனியை இடது காலால் எடுத்து மடித்து கட்டியவன் வலது கரத்தில் இருந்த அந்த வெள்ளிக் காப்பினை நன்றாக ஏற்றி இறுக்கி மீசையை கம்பீரமாய் முறுக்க, பார்த்தவர்களுக்கு எவருக்கும் அடங்காத சண்டியனாக மட்டுமே காட்சியளித்தான்….
அவன் கண்களில் இருந்தத் தீவிரம் நிச்சயம் அங்கு உள்ளவர்களுக்குப் புதிதாகவே இருந்தது… தமிழ் இருப்பதையே அவர்கள் மறந்து ஆதியை நோக்கி ஒருவன் வேகமாக அடிக்க வர, வந்தவனின் முகத்திலே ஓங்கி ஒரு குத்து குத்திய ஆதி அவனை அப்டியே முழங்காலில் ஓங்கி ஒரு மிதி மித்தான். அடுத்தவன் அதே வேகத்தோடு வர அருகில் கிடந்த ஒரு பெரிய கல்லை வேகமாக எடுத்து அவன் காதிலே ஓங்கி ஒன்று விட்டான்… அடுத்த நிமிடம் அங்கு ஒருச் சிறிய ஆக்சன் கட்சி நடந்தேறியது… கல்லூரியில் ஒரு டிபார்ட்மெண்ட்டை தனியாக சமாளித்தவனுக்கு இந்த பத்து பேர் தூசியாக தெரிந்தனர்…
அனைவரையும் வீழ்த்தி இறுதியாக மூச்சு வாங்க, வலியில் துடித்துக்கொண்டிருந்த ஒருவனது கையை பின்னால் முறுக்கி, “ஐயோ வலிக்கிது வுட்றா வுட்றா” அவன் கத்தியதும், கதறியதும் ஆதியின் காதிற்கு எட்டவில்லை…
“இப்ப சொல்லு நான் உன் மாமனா? இல்ல மச்சானா?”
“எனக்கு ரெண்டுமே நீ தான் டா… வுட்றா”
“அட முட்டா பயலே அது எப்புடிடா ரெண்டுமே ஒரே நேரத்துல இருக்க முடியும்? படிக்கலானாலும் இந்த அறிவு கூட இல்லாம இருக்க” என்று கையை இன்னும் சற்று முறுக்கினான் ஆதி…
“ஆஆஆஆ…. சரி சரி நீ என் மச்சான் அவனை கூட்டிட்டு போ… கை வலிக்கிது டா விடு” கண்களில் ஒரு ஓரம் கண்ணீர் ஓடியது அந்த தடியனுக்கு…
“அய்யா இவன் தான்யா அன்னைக்கு அந்த உதய் மாதவனை கட்டிபுடிச்சிட்டு நின்னான்… இவன் மேல கை வச்சா அவனுக்கு அங்க கண்டிப்பா வலிக்கும்” சண்டை மும்முரத்தில் அவனையே வெறித்து பேசிக்கொண்டிருந்த சிலரை கவனிக்க தவறினான்.
“ம்ம்ம்ம்ம் அந்த பயம் இருக்கட்டும். இனிமே இவன் பின்னாடி எவனாச்சும் வந்திங்க நீ சொல்ற மினிஸ்டர் தான் மொத டெட் பாடி… சொல்லி வை…” ஆதி பேசிக் கொண்டிருந்த நேரம் ஒருவன் கூரிய அரிவாளால் ஆதியின் முதுகை பதம் பார்த்தான்…
“ஆதி” கெளதம் தமிழ் இருவரும் பயத்தில் அலறினர்…
இவை நொடி பொழுதில் நிகழ்த்திட ஆதி சுதாரித்து அவன் மறுமுறை ஓங்கிய அரிவாளை அவன் கையால் அவன் கழுத்திற்கே எடுத்து சென்றிருந்தான், “பொட்ட மாதிரி பின்னாடி வந்து குத்துற?” ஆதி கண்களில் துளியும் வலியோ பயமோ இல்லை கோவம் மட்டுமே, “ஆம்பளையா இருந்த நேருக்கு நேர் வந்து நில்லு” என்று அருகில் இருந்த மரத்தில் தன்னுடைய முழு பலத்தையும் பயன்படுத்தி அவனை தாக்கினான்…
அவன் கீழே விழுந்த நொடி, ஆதியின் கண்களில் விழுந்தான் அந்த ஐம்பது வயதி ஒத்த மனிதன், தமிழக அரசியல்வாதிகளுக்கே உரிய வெள்ளை வேஷ்டியும் வெள்ளை சட்டையும் அணிந்த ஒருவன்… அவனது முகம் கூட ஆதியின் கண்களுக்கு மங்களாகவே தெரிந்தது… ஒரு நிமிடம் உணர்ச்சியின்றி இருந்த அவனது முதுகில் யாரோ தண்ணீர் ஊற்றிய எரிச்சல் இதயம் வரை செல்ல சிறுக சிறுக உலகமே இருண்டது…
“நா இங்க வந்தது வேற ஒரு சோளிய முடிக்க ஆனா உன்னால நல்லது நடந்துச்சு… இங்க கை வச்சா அங்க வலிக்குமாமே…” அந்த குரலில் அவ்வளவு வன்மம், க்ரோதம்… அடுத்த வார்த்தை அவன் செவிகளை எட்டும் முன் ஆதியின் கண்கள் தானாக மூடியது…
Comment please….