செவி மடல்களை கிழிக்கும் அளவிற்கு மேல்நாட்டு பாடல் பின்னணியில் ஒலித்துக்கொண்டிருக்க தன் முன்னே இருந்த மதுபானத்தை தொடவும் கை கூசியது ஆனாலும் மனம் அதை ஏற்க கூறி அழுத்தம் கொடுத்தது… கண்கள் கூசும் டிஸ்கோ விளக்குகள் அவ்வவ்வபொழுது மின்னி மறையும் நேரம் தன்னை சுற்றி இருந்த மனிதர்களை பார்த்து அலுத்துக்கொள்ளும் மனது… வலிகளுக்கும் வேதனைகளும் இடையில் கேலிக்காகவும் பொழுது போக்கிற்காகவும் மட்டுமே மதுவினை தொடும் கைகள் ஏராளம்…
“வாட் வுட் யு லைக் டு ஹவ் சார்?” பார்டெண்டர் ஒருவன் டிப் டாப்பாக கருமையான ஷர்ட் பாண்ட், பௌ டை ஒன்று அணிந்து பார்க்க பக்கா பட்டதாரியாக காட்சி அளித்தான்…
“ஏண்டா பீட்டரு என்ன பாக்க வெள்ள காரன் மாதிரியா இருக்கு இல்ல வட நாட்டு காரன் மாதிரி வெள்ளையா இருக்கேனா… எதுக்கு இப்ப இங்கிலிஷ்ல புளிப்பு காட்டிட்டு இருக்க?”
அசௌகரியமாக புன்னகை சிந்தியவன் மன்னிப்பாயாக ஒரு சிரிப்பை சிந்தி, “என்ன ட்ரிங்க்ஸ் குடுக்க சார்?” என்றான் அவன்…
“அப்டி வா வழிக்கு…” பார்வையை அங்கு கச்சிதமாக அடுக்கியிருந்த மது பாட்டில்கள் மீது படர விட்டவன் கண்களுக்கு ஒரு குவளை கவர்ச்சியாக தெரிந்தது, “ஆஹ்… அந்த ஊதா பாட்டில் எவ்ளோ?”
ஆதியை ஒரு மாதிரி பார்வை பார்த்து அவன் கூறிய இடத்தை பார்த்தவன், “சார் 75 % ஆல்கஹால் கன்டென்ட் இருக்க வோட்கா, இது பிரேசில் இம்போர்ட்டட் பிராண்ட்…”
“டேய் நிறுத்து… இத அடிச்சா போதை ஏறுமா? ஏறாதா?” – சற்று குளறலாகவே வந்தது ஆதியின் வார்த்தைகள்.
“நல்லாவே ஏறும் சார். அந்த பாட்டில் ஐம்பதாயிரம் வரும் சார் பட் அதோட பிராண்ட்ல ஸ்டார்டிங் ரேட் டென் தொளசண்ட்ல இருந்து இருக்குது” – பார்டெண்டர்
“ஏண்டா இங்க ரெண்டு பெக் அடிச்ச ஒடனே போதை ஏரும்ன்னு சொன்னாங்க… ஆனா நீங்க இவ்ளோ காசு கேக்குறீங்க? இந்த காச வச்சு நான் வைன் ஷாப்பயே வாங்கிருவேனே” ஐம்பதாயிரத்தில் எத்தனை மதுபான கடைகளை வாங்கலாம் என்ற சிறு கணக்கே நாயகனின் மனதினுள் ஓடியது,.
“ண்ணா இங்க எல்லாமே இம்மா விலை தான் வரும். இஷ்டம்னா குடி இல்லனா அந்த குட்டிக கூட ஆடிட்டு இடத்தை காலி பண்ணு” தர லோக்கலில் இறங்கி பேசினான் அந்த டிப் டாப் சட்டை காரன்…
அவன் பேச்சில் சாக்கான அதி, “என்ன டா இப்புடி இறங்கிட்ட… சரி ரெண்டாயிரம் ரூபாய்க்கு ஒரு 3 பெக் வரர் மாதிரி அண்ணனுக்கு பாத்து எதாவது பண்ணி குடுடா நல்லா ஜிவ்வ்வ்வ்வு-னு போதை ஏறனும்”
“அதுக்கு நீ கல்லு காச்சி தான் குடிக்கணும்… ஆமா இப்பயே போதைல இருக்க மாதிரி தானே நீ பேசுற” சந்தேகமாய் ஆதியை மேலும் கீழும் பார்த்தான்.
வெட்க சிரிப்போடு, “துப்பறிவாளன் டா தம்பி நீ… ரெண்டு தெரு தள்ளி இருக்குதுல ஒரு வைன் ஷாப் அதுல ஒரு கட்டிங் போட்டுட்டு தான் வந்தேன்… எவ்ளோ அடிச்சாலும் போதை ஏற மாட்டிக்கிது. அதான் இங்க வந்தேன்…”
ஆதி கூறியது போல் ஒரு பாட்டிலை எடுத்து வந்தவன், “என்ன ண்ணா லவ் பெலியரா?” ஒரு சிறிய அழகிய கண்ணாடி குவளையில் அதை விட சிறிய அளவு மதுபானத்தை தந்தான்…
ஒரே மிடறில் குடித்தவன், “நோ நோ… இன்னும் செட் பண்ணவே இல்ல. ஆனா நான் என் உயிர் கூட சண்டை போட்டுட்டேன்… தட்ஸ் வொய் (That’s why)”
“யோவ் என்னையா லூசு மாதிரி ஒளறுற? உன்கூட சண்டை நீயே போட்டுட்டு எதுக்குயா குடிக்கிற?” கடுப்பில் அந்த பார்டெண்டர் சத்தமாக எகிறினான்.
தனது இருக்கையிலிருந்து எழுந்தவன், “ஏய் என்ன மரியாதை குறையுது ஒழுங்கா சார் சொல்லு டா பாடி சோடா… இல்ல இந்த இடமே ரெண்டாகிடும்”
தனக்கு மேல் எகிறியவனை பதட்டத்துடன் அடக்கிய அந்த பார்டெண்டர், “சாரி சார் சத்தம் போடாதீங்க அப்றம் என் வேலைக்கு வேட்டு தான்”
“சரி மன்னிச்சு வுடுறேன். உயிர்ன்னா நாம மட்டுமே இல்லடா நாம உயிருக்கு உயிரா யாரை ரொம்ப நேசிக்கிறோமோ அவங்க தான் நம்ம உயிர்” தனது இதயத்தை சட்டையில் மேல் காட்டி, “பாரு அடி வாங்கி வாங்கி வீங்கிருச்சு”
அவனுக்கு ஒத்து ஊதிய அந்த கைப்புள்ளை, “ஐயோ ஆமா சார் இப்டி வீங்கிருக்கு … நா போய் ஐஸ் கட்டி எடுத்துட்டு வரவா?” அழகாக ஆதிக்கு அந்த இளையவன் குடை பிடித்தான்.
“வேணாம் டா சரி ஆகிடும்…” – ஆதி
“யார் சார் உங்க உயிர்?” – பார்டெண்டர்
“அட என்ன டா இதுகூட தெரியாதா உனக்கு? நம்ம உதய் தான்” – ஆதி
யார் என்று தெரியாமலே தலை ஆட்டிய அந்த பார்டெண்டர், “என்ன சார் பிரச்னை உங்களுக்குள்ள?”
“சார் வேணாம் டா அண்ணானே சொல்லு”
பொதுவாக இது போல் தங்களது வாடிக்கையாளர்களிடம் அவர்கள் விருப்பத்திற்கிணங்க பேசுவதும் அவர்களுடைய பணியாகும், ஆனால் முக்கால்வாசி மனிதர்கள் பார்டெண்டர்களை ஒரு துச்சமாகவே கருதுவார்கள். அவர்கள் மத்தியில் ஆதியை போல் ஒரு சிலரே இருப்பர்…
“சரி நீங்க சொல்லுங்க என்ன பிரச்னை?” நண்பனுக்காக குடிப்பவர்கள் எல்லாம் பார்ப்பதே அரிது அதிலும் இவன் உதய் என்னும் பெயரை கூறும் பொழுது அதிலிருந்த அழுத்தமும் வலியும் தனியே…
“நான் ஒரு பெரியயயயயய தப்பு பண்ணிட்டேன் டா மன்னிக்கவே முடியாத தப்பு பண்ணிட்டேன். அது தான் என்ன தூக்கி போட்டுட்டான்… ஆனா நா அவன் இடத்துல இருந்தா இன்னேரம் கண்டிப்பா அவனை மன்னிச்சிருப்பேன் ஏனா என்னால அவனை விட்டு இருக்க முடியாது…” உணர்ச்சிகளின் பிடியில் ஆதியின் குரல் அழுத்தமாக மெதுவாக ஒலித்தது
ஒரு நக்கல் சிரிப்புடன், “ண்ணா அவனா நீ” என்று எழுதவனை அவன் கழுதோடு கை போட்டு இழுத்த ஆதி அவன் தலையில் இரண்டு கொட்டு கொட்டி, “அடிங்க… பேச்ச பாரு பேச்ச”
“ஐயோ அண்ணா ஓனர் பாத்தா காச்சிருவாரு வுற்று ண்ணா” – பார்டெண்டர்
தன் இருக்கையில் மீண்டும் அமர்ந்தவன், “பொழச்சு போ… மேல சொல்றேன் கேளு… நாங்க ஸ்கூல்ல எப்டி தெரியுமா இருந்தோம்? ஸ்கூல்ல ஆதி உதய் னு சொன்னாலே அவிங்க முகத்துல ஒரு பொறாமை தெரியும்… எனக்காக என்ன வேணாலும் ஒருத்தன் செய்வான்னு சொன்னா கண்ண மூடிட்டு அவன் பேர மட்டும் தான் சொல்லுவேன்… எனக்காக அடி வாங்கிருக்கான், எனக்காக டீ.சி வாங்கிருக்கான், எனக்காக தம்பி தங்கச்சிக கிட்ட இருந்து விலகிருக்கான், எனக்காக சாவ கூட சந்தோசமா கண்ண மூடிட்டு ஏத்துருக்கான். ஆனா நான் அவனுக்காக எதுவுமே பண்ணது இல்ல… அவன் சந்தோசத்தை நாசமாக்குனேன், அவன் குடும்பத்தை அவன்கிட்ட இருந்து பிரிச்சேன், அவன் நம்பிக்கையை குழி தோண்டி பொதச்சிட்டேன்” பேச்சை பாதியிலேயே நிறுத்தியவன், “டேய் சைடு கேப்ல சரக்க ஆட்டைய போட பாக்கறியா ஊத்துடா தேங்கா மண்டையா”
அவன் குவளையில் மீண்டும் மதுபானத்தை நிறைக்க, “தோ இது இருக்குது பாரு, இது அவனுக்கு சுத்தமா புடிக்காது….”
ஆதி பேசிக்கொண்டிருக்கும் பொழுதே அவன் அருகில் ஒருவன் பொத்தென்று அந்த பார் டேபிளில் விழ, கடினப்பட்டு அந்த நாற்காலியில் அவன் அமர்ந்தான்… ஆதியை நோக்கி அவன் பின் புறம் இருக்க, அவனது முகம் தெளிவாக தெரியவில்லை. ஆனால் தோற்றம் பரிட்சயமாய் இருந்தது…
“நீ குடுக்குற சரக்குல எனக்கு போதையே ஏறளடா என் வென்று… அவன்ட்ட போய் கேக்குறேன் என்ன சரக்கு அடிச்சான்னு” என்று அந்த குடிமகனிடம் செல்ல அவன் கையை பிடித்து நிறுத்தினான் அந்த பார்டெண்டர்…
“சார் இந்தாங்க இத குடிங்க” என்றான் அவன்
அவனை பொருட்படுத்தாமல் அந்த முகம் தெரியாதவனின் அமர்ந்திருந்த பார் நாற்காலியை எத்தியவன், “யார்ரா நீயி கரண்ட் கம்பில அடிபட்ட காக்கா மாதிரி விழுந்து கிடக்குற?”
“சாக்கடைல விழுந்த பன்னி மாதிரி கத்திட்டு இருக்க நீ, என்னை காக்கான்னு சொல்றியாடா கோங்காங்கோ” என்றவன் ஆதியை நோக்கி வேகமாக திரும்ப அங்கு இருந்தது விஷ்ணு… உதய்யின் உடன்பிறந்த சகோதரன்… கண்கள் சிவக்க போதையின் வீரியம் அப்பட்டமாக தெரிந்தது அவனிடம்.
“டேய் ஆர்வ கோளாறு நீயா… இங்க என்னடா பண்ணுற? எங்க உன்னோட இருக்குற சுப்புணி (ஜாக்கி சான் கார்ட்டூன் கேரக்டர் ஒன்னு)” ஆதி ஆர்வமாய் தனது இருக்கையை அவனுக்கு அருகில் போட்டு அமர்ந்தான்…
“கதகளி…” கண்களில் மிரட்சி கூட்டி அமர்ந்த இடத்திலேயே ஆடி காட்டியவன், “கதகளி ஆடடடட வந்தேன்” – விஷ்ணு
“அப்டியே வெளிய போய் ஆடுடா ரெண்டு காசாவது பாக்கலாம்” – ஆதி
“உன் படத்தை இங்க ஒட்டாத நானே பயங்கர மூட் அவுட்-ல இருக்கேன் இதுல நீ வேற இன்னும் எரிய வைக்காத” என்ற தனக்கு முன்னே இருந்த ஒரு மதுபான குவளையை எடுத்து அழகாக குடித்தான் சிறு தடுமாற்றமும் இன்றி
“என்னடா உன்னையும் உன் அண்ணன் அசிங்கமா பேசி அனுப்பிட்டானா?”
சிறுக சிறுக மதுவின் மடியில் முழுதும் சாய ஆரமித்தான் விஷ்ணு. ஆனால் ஆதி ஓரளவிற்கு நிதானத்தில் இருந்தான், “அவன் பேசிருந்தா தான் பிரச்சனையே இல்லையே”
“அவன் அவ்ளோ சீக்கிரம் கோவ படுறவன் இல்ல நீ என்ன பண்ணுன?”
“கொஞ்சம்… கொஞ்சம்” என்று வாய் கூற, கை தன்னால் இயன்ற அளவு விரிந்தது, “அதிகமா பேசிட்டேன், என்ன விட்டுட்டு தள்ளி இருக்க சொல்லிட்டேன் எப்பவுமே… நீயே சொல்லு அண்ணே அண்ணேன்னு அவனை சின்ன வயசுல இருந்து கால சுத்தி சுத்தி வந்தவன என்ன பன்னிருக்கணும்?”
“ஓங்கி ஒரு எத்து விட்ருக்கனும்” ஆதியின் பதிலில் அந்த பார்டெண்டர் வாய் விட்டு சிரித்தான்.
“அத பன்னிருந்தா கூட சந்தோச பற்றுப்பேனே” அழுக ஆரமித்தான் விஷ்ணு, சிறு விசும்பல் வெடிக்க ஆதியால் சிரிப்பை கட்டு படுத்த இயலவில்லை, “ஆனா அவன் என்ன மனுஷனாவே மதிக்கல… ஹரிக்கு அப்றம் அவனை தான் அதிகம் தேடுவேன்… ஒதுங்கி ஒதுங்கி போனான். அது தான் எனக்கு கோவமே…”
“டேய் நிறுத்து…” ஆதி குறுக்கிட்டு, “நானே சோகம் பாடிட்டு இருக்கேன் நீ வேற போடா வென்று” அந்த இடத்தை விட்டு எழுந்து விஷ்ணுவை விட்டு தூர சென்று அமர்ந்து மீண்டும் அந்த பார்டெண்டருடன் வழக்கமான சோக கதையை பாட ஆரமித்தவன் விஷ்ணுவை திரும்பியே பார்க்க வில்லை…
மறுபுறம் சோகமே உருவாய் உலகையே வெறுத்து அமர்ந்து இருந்தான் விஷ்ணு. ஒரு புறம் ஹரியின் ஒதுக்கம், சித்தியின் மாறுதல் பேச்சு, தனித்து அவனுக்கு மட்டும் கவனம் செலுத்தியது என்று ஒரு புறம் மனதை இம்சிக்க மறு புறம் உதய்யின் உதாசீனம் இதயத்தை சக்கையாய் பிசைந்தது, திட்டுவதற்காக ஆவது விஷ்ணுவிடம் வருபவன் அன்று தனது கோவ பேச்சில் முற்றும் பேச்சை துறந்தான். ஆனால் அந்த நிலையிலும் தன் மேல் உள்ள தவறை அறியவில்லை…
வீட்டிற்கு எந்த வித பயமும் இல்லாமல் செல்வதை அறவே வெறுத்தான்… வாரம் இரண்டு மூன்று முறை போதையில் சென்றாலும் தண்டிக்கவோ முறைக்கவோ சகோதரன் அங்கு இல்லையே, உணவு மேஜையில் கை பேசியை எடுக்கும் பொழுது எச்சரிக்கை பார்வை வீச உதய் இல்லை. அலுவலகத்தில் வேண்டும் என்றே செய்யும் தவறுகளுக்கு கூட உதய்யிடம் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. ஆனால், அவனுடைய தண்டனையை வேண்டும் என்றே ஹரிக்கு தர பட்டது விஷ்ணுவின் கண் முன்னே…. ஹரி உதய்யை மிஞ்சி விஷ்ணுவை தனித்து விட்டான்…
அடுத்தத் தெருவில் இருக்கும் கடைக்குச் செல்வதற்கு கூட விஷ்ணு இல்லாமல் செல்லாதவன் கடந்த மூன்று வாரங்களாக விஷ்ணுவிடம் முழுதாக ஒரு நிமிடம் பேசியது இல்லை. எங்கும் தனித்தே சென்றான்… விஷ்ணுவாக சென்று பேச முயன்றால் கூட அவனை சிறு சிரிப்புடன் தள்ளி வைத்தான் ஹரி.
“என்ன ப்ரோ ரொம்ப ஸ்ட்ரைன்(strain) பண்ணிக்கிட்டு இருக்கீங்க போல தலைல இருக்க ப்ராப்லம்ஸ் எதுவும் லேஸ் (less) ஆகலையா?” அவனுக்கு முன்னே இருந்து ஒரு அமெரிக்க ஒலியழுத்தம் (accent) கேட்க்க மங்கலான பார்வையில் தலையை நிமிர்த்து பார்க்க அங்கே ஒரு அமெரிக்கன் சாயலில் ஒருவன் விஷ்ணுவை பார்த்துப் புன்சிரிப்புடன் நின்றான்…
“Yeah, nothing helps” அவன் தன்னுடைய மது குவளையை கோவத்தில் எரிய அது சுக்கு நூறாக சிதறியது… அந்த சத்தத்தில் விஷ்ணுவை திரும்பி பார்த்த ஆதி அவனை ஒரு முறை உன்னிப்பாய் கவனித்து அவன் முன் பார்டெண்டராக இருந்த அந்த அமெரிக்கனையும் பார்த்து மீண்டும் தனது பார்வையை மாற்றினான்…
“ஐ கேன் ஹெல்ப் யூ பர்கெட் திங்ஸ் (I can help you forget things)”
அவன் கூறிய பொழுது அதில் இருந்த வன்மத்தை, தந்திரத்தை காணும் நிலையில் இல்லாது, “வாட்’ஸ் தட்?” கேள்வி கேட்டான் விஷ்ணு.
“இட் மே காஸ்ட் மோர் தான் யூ குட் அப்போர்ட் (It may cost more than you could afford)”
மூளையை சூழ்ந்துள்ள குழப்பங்களை அகற்ற கிடைத்த ஒரே தீர்வை விடுவதாக இல்லை, யோசிக்காமல் கையில் இருந்த பியாஜெட்(Piaget) கை கடிகாரத்தை கழட்டி அந்த மேஜையில் வைத்து கையை நீட்டினான், “ஐ திங்க் இட் வுட் பி மோர் தான் ஏனப், நொவ் ஹாண்ட் மீ மை ட்ரின்க் (I think it would be more than enough, now hand me my drink)”
“சில் மேன். இட்’ஸ் நாட் அ ட்ரின்க், இட்’ஸ் ஜஸ்ட் அ பவுடர் டு ரெப்ரஷ் யுவர் ப்ரைன் (Chill man. It’s not a drink, it’s just a powder to refresh your brain)” தனது உள் சட்டையிலிருந்து ஒரு சிறிய பாக்கெட்டை எடுத்தவன் அதிலிருந்த போதை பொடியை ஒரு மதுபானத்தில் கொட்டி, “அண்ட் தேர் ஐஸ் யுவர் ஹெவன் ட்ரின்க் (and there is your heaven drink)” நொடி பொழுது யோசிக்காமல் அதை ஒரு மிடறில் அருந்தினான் விஷ்ணு…
குடலில் அது பணித்த ஒரு ஒரு நொடியும் அவனது இதயம் மயிலிறகில் வருடியது போன்ற மென்மை பரவ முகத்தில் அரும்பியது ஒரு புன்னகை… கண்களை மூடி படுத்தவன் கண்களின் முன்னே வந்தான் ஹரி மற்றும் உதய்… ஹரி விஷ்ணுவின் தோளில் கை போட்டு மதுபானத்தில் பங்கிற்கு வர உதய்யோ வழக்கம் போல் இருவரையும் முறைத்து கொண்டிருந்தான் கையில் இருந்த மதுபானத்தை பார்த்து, ‘பேசாம இவனுக்கும் ஒரு பெக் குடுத்துட வேண்டியது தான் எப்ப பாத்தாலும் வெறப்பாவே இருக்கான்’ விஷ்ணு ஹரியின் காதில் கிசுகிசுத்தான்… அந்த நேரம் ஹரியின் கைபேசி அடிக்க அதை அன்டன் செய்து விஷ்ணுவின் காதில் வைத்தான் அந்த பக்கம் அவன் சித்தி காய்ச்சிய காச்சில் அவன் காதிலிருந்து ரத்தம் வழியாத குறை தான்…
விஷ்ணு தன் உலகில் சஞ்சலித்திருக்க அந்த பார்டெண்டரின் பார்வை விஷ்ணுவையும் அந்த அமெரிக்கா பார்டெண்டரையும் அடிக்கடி சந்திக்க, “ஏண்டா அவனை அடிக்கடி பாக்குற?”
“நா ஒன்னு சொல்லுவேன் அத யார் கிட்டையும் சொல்லாதீங்க…” – பார்டெண்டர்
ஆர்வமாக, “சொல்லு” என்றான் ஆதி.
“சத்தியம் பண்ணுங்க யார் கிட்டையும் சொல்ல கூடாது” – பார்டெண்டர்
அவன் தலையில் கை வைத்து, “நான் சத்தியத்தை மீற மாட்டேன் இப்ப சொல்லு”
“அந்த அமெரிக்கா காரன் இருக்கான்ல அவன் என்னமோ தப்பு பன்றான் ண்ணா. பெரிய கார்ல வருவான் நல்ல கொழுத்த பணக்காரன் தான். ஆனா, எதுக்கு இங்க வந்து வேலை பாக்குறான்னு தெரியல கைல நெறையா குட்டி குட்டி பாக்கெட் வச்சிருப்பான் எங்கையோ தப்பு நடக்குது” – பார்டெண்டர்
“குட்டி குட்டி பாக்கெட்னா?” குழப்பமாய் கேட்டான் ஆதி.
“ஒரே ஒரு தடவ தன் பாத்தேன் என்னமோ வெள்ளை கலர்-ல இருந்துச்சு எனக்கு என்னமோ டோப்-னு தோணுது” – பார்டெண்டர்
அவனது பதிலில் துணுக்குற்றவனின் போதை காற்றில் பறந்தது வேகமாய் விஷ்ணுவின் புறம் திரும்ப அந்த அமெரிக்கா பார்டெண்டர் கீழிருந்து ஒரு மதுபான குவளையை விஷ்ணுவின் முன் வைத்தான்… வேகமாக எழுந்து சென்று அதை விஷ்ணு அருந்துவதற்கு முன்னாள் அவன் கையை பிடித்து தடுத்தான்…
விஷ்ணு ஒரே ஒரு முறை சிறிய அளவில் குடித்த பொழுதும் உதய் அவனுக்கு அருகில் வந்துகொண்டே இருந்தான், மாயையில்… அவனது ஆழ்ந்த ஆசைகள் எல்லாம் அதில் நடந்துகொண்டே இருந்தது அதில் இன்னும் திளைக்க விரும்பி குடிக்க நினைத்தவனை ஆதியின் கைகள் தடுக்க மனதின் வலி கோவமாய் மாறி ஆதியை ஓங்கி குத்தினான் விஷ்ணு…
நிதானத்தில் இல்லாமல் இருந்ததால் முகத்திற்கு குறிவைக்க அது ஆதி நெஞ்சில் பட்டது, “உனக்கு வேணும்னா வாங்கிக்கோ ஏண்டா என்ன குடிக்க விடாம தடுக்குற?” அவ்வளவு வெறி அவன் பேச்சில்….
மீண்டும் அந்த குவளையை குடிக்க போக இந்த முறை ஆதி அதை கீழே தட்டி விட்டான். அதில் இன்னும் வெறி ஏறிய விஷ்ணு ஆதியின் சட்டையை கொத்தாக பற்றி சிவந்த கண்களுடன், “எதுக்குடா அத தள்ளி விட்ட? இது தான் அவன்கிட்ட இருக்க கடைசி சரக்குன்னு சொன்னான்… இப்ப நா எங்க போவேன்” என்றவன் ஆதியிடமிருந்து தன் பிடியை தளர்த்தி கீழே சிதறி கிடந்த கண்ணாடி குவளையில் ஒட்டி இருந்த சிறிது பானத்தை எடுத்து ஆக்ரோஷமாக அருந்த அதையும் கோவத்தில் ஆதி தட்டி விட்டு அவனை பிடித்து நிறுத்தினான்…
“டேய் விஷ்ணு அது ட்ரிங்க்ஸ் இல்லடா, டோப் (dope i.e drugs)”
தன் சட்டையில் இருந்த ஆதியின் கையை பற்றி தழுவியவன், “எதுவா இருந்தா எனக்கு என்ன… எங்க அவன்?” அந்த அமெரிக்கா பார்டெண்டரை சுற்றிலும் தேட தனது மங்கலான கண்களுக்கு அவன் வெளியேறுவது தெரிந்தது வேகமாக அவனை நோக்கி சில அடிகள் எடுத்து வைக்க மீண்டும் அவனை தடுத்தான் ஆதி…
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.