அத்தியாயம் 15
மயக்கமா உறக்கமா என தெரியாத நிலையில் சிற்பிகா விழி மூடியிருக்க.. அவள் மேல் சட்டென்று குளிர் நீர் பாய்ந்தது.. மழை பேய்கிறதா.. நாம் மழையில் நனைந்துக் கொண்டிருக்கோமோ என அவள் நினைக்கும் போதே.. இப்பொழுது அவள் முகத்தில் மட்டும் நீர் ஊற்றப்பட.. நாசியின் வழியே நீர் சென்று.. மூச்சுத்தினறி.. திடுக்கிட்டு விழித்தாள்.. சிற்பிகா.
ஒரு நிமிடம் என்னவென்று அறியாமல் அவள் முழித்து.. தலையை பிடித்தவாறு.. திரும்ப அங்கு கைகளை கட்டியவாறு ஆறரையடி கிரேக்க சிலையென நின்றுக் கொண்டிருந்தான்.. அபயசிம்ஹா.
அவனைப்பார்த்ததும் நேற்று நடந்தது அனைத்தும் கண் முன்வர.. பூமேனியவள் உடல் நடுங்கத்தொடங்கியது.. விழிகளோ அவள் கட்டுப்பாட்டையும் மீறி அவனின் முகத்தை பயந்து பார்க்க..
அதனை அலட்சியம் செய்தவன்.. ” உனக்கு ஹாஃப்பனவர் டைம் தரேன்.. அதுக்குள்ள கிளம்பி கீழே வர… ” என்ற கட்டளையை பிறப்பித்துவிட்டு அவன் செல்ல… தள்ளாடிய கால்களை முயன்று சரிப்படுத்தியவள்.. அவன் சொன்ன நேரத்திற்கு.. சற்று முன்பே கீழே இருந்தாள்…
அபய் சிற்பிகா வந்ததும் வெளியேற… அவளும் அவனை பித்தொடர்ந்தாள்.. காரின் வேகம் எப்பொழுதை விட இன்று சற்று அதிகமே… அதுவே அவனின் நேற்றைய கோபம் இன்னும் மிச்சமிருப்பதை கூறியது…
சிற்பிக்கு அபயின் அமைதியைக் கண்டு உள்ளுக்குள் பயப்பந்து எழுந்தது.. எப்போதும் போல் வார்த்தையால் சுட்டிருந்தாலோ.. இல்லை நேற்று விட்டதுபோல் ரெண்டு அறை கொடுத்திருந்தாலோ… அவள் மனம் சமாதானம் ஆகியிருக்குமோ என்னவோ.. ஆனால் இப்பொழுது இவனின் அமைதி.. புயலுக்கு முன் வரும் அமைதியா.. இல்லை புயலுக்கு பின் வரும் அமைதியா என தெரியாது ஒவ்வொரு நிமிடமும் பயத்தில் வியர்த்தாள்..
ஒருவேளை நம்மள கோயம்பத்தூர்க்கு அனுப்ப போறாரோ என்ற எண்ணம் தோன்றிய நொடி அவளின் இதயக்கூடு காலியானது…
இவள் எண்ணங்களின் போக்கில் இருக்க.. அபய் அவளை தனது கெஸ்ட் ஹௌசிற்க்கு அழைத்து வந்திருந்தான்.. கார் நின்றதும் அவள் தான் வந்திருக்கும் இடத்தை கண்டு கேள்வியாய் அபயைக்காண… அவனோ எவ்வித எதிர்வினையுமின்றி அவளை வாவென்றும் சொல்லாமல் உள்ளே செல்ல.. அவளும் வேறுவழியின்றி அவன் பின்னே சென்றாள்..
அங்கு ஓர் இருக்கையில் அபய் அமர்ந்திருக்க… சிற்பிகா அடுத்து என்ன வரப்போகிறதோ என்ற பயத்துடன் அவன் முன்னே நின்றாள்… கால்கள் நடுங்கியது.. இருந்தும்.. அவன் முகம் பார்த்து அவள் நின்றாள்…
அபயும் பேசவில்லை.. அவளும் பேசவில்லை.. அபய் அவளை தன் பார்வையால் கூறுபோட்டுக்கொண்டிருக்க… சிற்பி அவன் பார்வை வீச்சை தாங்க முடியாது.. தலை குனிந்தாள்..
எது.. எதுக்குங்க… இப்போ இங்க அழைச்சுட்டு வந்துருக்கிங்க.. என திக்கி திணறி ஒருவாறு கேட்டு முடிக்க…
அபய் ” ஹ்ம்ம்.. உனக்கு தான் என்கூட இருக்குறது அருவருப்பா இருக்கே.. அதான் அதுக்கு ஒரு முடிவு கட்டலாம்னு உன்னைய அழைச்சுட்டு வந்தேன்… ” என கூறியவனின் முகம் அமைதியாக இருந்தாலும்.. விழிகள் அவளை பார்த்து சீரிக்கொண்டிருந்தது…
” ஹ்ம்ம் இப்போ சொல்லு.. உனக்கு எப்போதிருந்து என் மேல உனக்கு அருவருப்பா இருக்கு… முதல் தடவைல இருந்தா.. இல்லையே.. எனக்கு அப்போ நீ நல்லா இருந்த மாதிரி தான் இருந்துச்சு.. ஒரு வேளை நடிச்சியா.. ” என மேலும் பல கேள்விகளை கேட்க.. சிற்பிகா விழிகளில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டு.. தவிப்புடன் மறுப்பாய் தலையசைத்தாள்…
” ஹ்ம்ம் உனக்கு நான் ரொம்ப ஈஸியா கிடைச்சுட்டேன்ல அதான்.. என் லெவலுக்கு உன்னையெல்லாம்… இருக்க வேண்டிய இடத்துல வச்சிருந்தா.. நீ என்னைய பார்த்து அருவருப்பா இருக்குன்னு சொல்லியிருக்க மாட்ட.. உன்ன மட்டும் அன்னைக்கு நான் காப்பாத்தாம இருந்திருந்தா.. நீ இப்போ நிறைய பேருக்கு விருந்தாகியிருப்ப.. அண்ட் உன்னோட பேரும் வேறாயிருக்கும்.. உன்னைத்தான் மத்தவங்க அருவருப்பா பார்த்திருப்பாங்க.. ” என வார்த்தையெனும் ஆயுதத்தைக் கொண்டு அவளை வதைத்தான்..
” ஆனா நான் உனக்கு தி கிரேட் அபயசிம்ஹா சக்சேனாவோட மனைவிங்கிற அந்தஸ்த கொடுத்திருக்கேன்.. பட் யூ.. ” என நிறுத்தி அவளை கொல்லும் வெறியில் அபய் பார்த்தான்..
அவள் விழிகள் நீரை பொழிந்துக் கொண்டு இருந்தாலும்… மனமோ அவனின் கேள்விக்கு பதிலைக் கூறிகொண்டிருந்தது..
” இல்ல சிம்மு மாமு.. உங்கள தவிர.. வேற யாருக்கும் என் மேல உரிமையில்லை.. அப்படி வேற யாரோட கையும் என் மேல பட்டிருந்தா.. அதான் என்னோட கடைசி நாளா இருந்துருக்கும்.. ” என மனதோடு பேசியவளின் கால்கள் பலமிலக்க… சிற்பி அவன் முன் மண்டியிட்டவாறு அமர்ந்தாள்..
” சோ நான் உனக்கு.. உன்னோட தகுதிய டீச் பண்ண போறேன்.. இனி நீ இருக்க வேண்டிய இடம் என்னோட மாளிகை இல்லை.. இந்த கெஸ்ட் ஹௌஸ் தான்.. இங்க நீதான் வேலைக்காரி.. அதாவது என்னோட பெர்சனல் மெய்ட்டு… அண்ட் நேத்து நீ சொன்ன விஷயம் ஒன்னு உண்மை தான்.. எனக்கு சோனியா தானியான்னு நிறைய பேரு இருக்கறப்போ.. உன்னோட ப்ரெசென்ஸ் எனக்கு தேவையில்லை தானே என அவன் குரூரமாய் புன்னகைக்க…
சிற்பி எதிரிலிருந்தவனையே வெறித்துப் பார்த்தாள்… ஒரே நாளில் அவளின் அணைத்து சந்தோஷமும் பறிக்கப்பட்டுவிட்டது.. அவன் வேண்டுமென்றால் அவளோடு வெறும் உணர்ச்சிக்காக மட்டும் கூடியிருப்பான்.. ஆனால் அவளோ காதலோடு தன் இளமைகளை அவனுக்கு பகிர்ந்தாள்…
அவனுக்கு செய்யும் சிறு சிறு வேலைகள்.. அவனோடு சங்கமிக்கும் பொழுது ஏற்படும் அவனின் ஸ்பரிசம்.. வீட்டில் இருக்கும் எந்நேரமும் அவனுடனே இருப்பது இவையெல்லாம் தான் அவள் காதல் கொண்ட மனதின் ஒரே ஆறுதல்… ஆனால் இப்பொழுது இவையெல்லாம் இல்லை என்றால்.. அவள் நிலை.. அதை அவளால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.. அதனால் அவள் அபய்க்கு தன்னுடைய நேற்றைய மனநிலையை சொல்ல முயற்சித்தாள்…
இல்.. இல்ல.. சிம்மு மாமு.. நான் உங்கள அருவருப்பாவும் நினைக்கல.. தலைவிதின்னு சகிச்சுக்கவும் இல்லை.. நேற்று நடந்த பார்ட்டில என்று ஆரம்பித்தவள்… அங்கு நடந்ததையும்.. அதனால் தனக்கு ஏற்பட்ட மனஉளைச்சலையும் கூறினாள்..
நான் அவங்க பேசுனத நினைச்சுத்தான்.. அருவருப்பா இருக்குன்னு சொன்னேன்.. சத்தியமா உங்க கூட இருக்குறத நினைச்சு சொல்லல சிம்மு மாமா என அவள் தன்னை புரிந்துகொள்ள வேண்டுமே என தவிப்புடன் கூறினாள்..
அவள் கூறியதையெல்லாம் எவ்விதசலனமும்மின்றி கேட்ட அபய்.. ” சோ அந்த **** ங்க சொன்னதுதான் உன்னை டிஸ்டர்ப் பண்ணிடுச்சு இல்லன்னா.. நீ அப்படி பேசியிருக்க மாட்ட இல்லையா.. என கேள்வி கேட்க.. அவளும் வேகமாய் தலையாட்டினாள்…
பட் எனக்கு அப்படி தெரில.. உனக்கு உள்ளுக்குள்ள என்னைய பத்திய தப்பான எண்ணம் பதிஞ்சுடுச்சு.. அதான் நேரம் வரும்போது கரெக்ட்டா வெளிவந்துடுச்சு.. அவ என்னைய பத்தி சொன்னது பொய்யெல்லாம் இல்லை… என அவன் அலட்சியமாக கூற.. அவளோ உயிர்வலியை விழியில் தேக்கி அவனைப் பார்த்தாள்..
நேற்றைய இரவிலிருந்து சாப்பிடாதது.. அடுத்தடுத்து அபய் கொடுத்த அதிர்ச்சி என அனைத்தும் சேர்ந்து அவளை மயக்கத்தில் தள்ள.. விழி சொருகி கீழே விழுந்தாள்.. அவள் கீழே விழப்போகும் போதே அபய் தன் காலை நீட்டியிருக்க.. சிற்பி அபயின் மடியில் வீழ்ந்தாள்…
*************************************************
சோனியா.. மேலே எந்த துணியுமின்றி.. மார்பிலிருந்து தொடைக்கு மேலேயான.. இருக்கமான உடையில்.. தன் அங்கத்தை லாவகமாய் காட்டி.. அதீத மேக்கப்புடன் தயாராக.. அப்பொழுது அங்கு வந்த அவளின் தோழி என்னடி.. அந்த யூரோப் பார்ட்டி கூட வெளில போறியா..
ஹ்ம்ம்ம் நோ.. நான் என் அபய் டார்லிங்கோட கெஸ்ட் ஹௌசுக்கு போறேன்.. அபய் மெசேஜ் பண்ணியிருக்காரு.. என்று உதட்டில் உதட்டுச் சாயத்தை போட்டவாறு கூற…
அவள் தோழி ” வாட்.. உண்மையாவா.. அபய் மேரேஜ்க்கு அப்புறம் அவர் வெளில யார்கூடவும் வச்சுக்கல.. பட் உன்னை பார்த்த மறுநாளே கூப்பிட்டிருக்காரு.. ” என பொறாமையுடன் கூறினாள்..
ஹ்ம்ம் நான்தான் சொன்னேன்ல என்னைதவிர யாராலையும் அபய திருப்தி படுத்த முடியாது.. நான்னா அபய்க்கு ரொம்ப ஸ்பெஷல்.. என உதட்டை கவர்ச்சியாக சுழித்தவள்.. திமிராக அவளைப் பார்த்துவிட்டு சென்றாள்…
இங்கு மயக்கம் தெளிந்து எழுந்தவள் கண் முன் இருந்த சாப்பாட்டை காண்பித்த அபய்.. சீக்கிரம் சாப்பிடு.. இனிமே இப்படி மயங்கி மயங்கி விழாத என எரிந்து விழுந்தவன்.. ” இன்னும் கொஞ்சம் நேரத்துல சோனியா இங்க வரப்போறா.. நானும் அவளும் ரெண்டு மாசத்துக்கு அப்புறம் ஒன்னா இருக்க போறோம்.. சோ இந்த வீட்டு வேலைக்காரியா கீழ வந்து ஓரமா நின்னு.. நாங்க கேட்கறத செஞ்சுக்கொடு.. எனக்கட்டளையிட்டு சென்றான்…
சிற்பிகா.. விழிகளை மூடி தன் வேதனையையும் கண்ணீரையும் முழுங்கினாள்… திருமணமான தினத்திலிருந்து அவளவன் மற்றொருத்தியை நாடியதில்லை.. ஆனால் நேற்று கோபத்தில் அவள் சிதற விட்ட வார்த்தைகள் அபயை அவளை விட்டு பிரித்துவிட்டது.. என மொத்த பழியையும் தன் மேலே போட்டுக்கொண்டு.. உள்ளுக்குள் மருகினாள்..
இனி பழையபடி தன் உணர்வுகளை அவனிடம் காட்டக்கூடாது.. என முடிவெடுத்தவள்.. கஷ்டப்பட்டு அபய் கொடுத்த உணவை விழுங்கினாள்…
சிறிது நேரத்தில் கீழே கார் வந்த சத்தமும்.. சோனியாவின் கீச்சுக் குரலும் கேட்க.. இனி வருபவைக்கு தன் மனதைக் கட்டுப்படுத்தி.. கீழே சென்றாள்..
அபய் ஒற்றை சோபாவில் அமர்ந்திருக்க.. எதிரில் மது பாட்டில்கள் இருந்தது… சோனியா அபய்க்கூடான பழகத்தில்.. அவன் விருப்பமான மதுவை கிளாஸில் ஊற்றிக்கொடுத்தாள்.. அப்பொழுது சரியாய் சிற்பிகா வர.. அவளைப் பார்த்தவாரு மதுவை வாங்கியவன்.. சோனியாவை தன் மடியில் அமர்த்தினான்…
சோனியா சிற்பிகாவை இங்கு எதிர்பார்க்கவில்லை… சோனியா வந்தவுடனே அபயை நெருங்கி அவன் இதழை கவ்வ முயற்சிக்க அபய் அவளைத் தன்னிடம் நெருங்க விடவில்லை… அவன் பார்வை முழுதும் மாடியிலேயிருந்தது.. சரி குடிக்க கொடுத்து அவனுக்கு போதையேற்றினால் தன்னிடம் நெருங்குவான் என நினைத்தாள்.. மது ஊற்றிக் கொடுக்கும் பொழுது சரியாய் சிற்பி வர.. சோனியாவை இழுத்து மடியில் அமர்த்தினான் அபய்.. அதிலிருந்தே இருவருக்கும் ஏதோ சரியில்லை என நினைத்த சோனியா.. இவர்களின் இடைவெளியை பெரிதாக்கி அபயை மீண்டும் தன்னிடம் தக்க வைக்க திட்டமிட்டாள்…
*********************************************
விழிகளில் மதுவின் போதையோடு அமர்ந்திருந்த அபயின் கரங்கள்.. தன் மடி மீது உட்கார்ந்திருந்த மாதுவின் இடையில் விளையாடிக் கொண்டிருந்தது…
அவளோ அவன் மீது மேலும் ஈஷிக்கொண்டு.. தன் உடலின் முக்கால்வாசி பாகத்தை அவன் மீது அழுத்துமாறு அமர்ந்திருந்தாள்…
மாதுவின் கழுத்தில் முகத்தை புதைத்திருந்தவனின் விழிகள்.. அவர்கள் முன் நின்றிருந்த அவன் மனைவி சிற்பிகாவின் மேல் படிந்தது…
எப்பொழுதும் போல் இப்பொழுதும் அவள் உணர்ச்சி துடைத்த முகத்தில் இருந்து… அவள் என்ன நினைக்கிறாள் என்று அபையினால் கண்டு கொள்ள முடியவில்லை.. அதுவே அவனின் கோபத்தை அதிகரித்தது… பல தொழில் சாம்ராஞ்சியங்களை கட்டி ஆளுபவன்.. ஒருவர் கண் பார்த்தே அவரின் மனதிலுள்ளதை கூறும் வல்லமை கொண்டவன்.. புரியாமல் நிற்பது அவன் மனைவியிடம் மட்டுமே…
அதுவே அவன் கோபத்தை பன்மடங்காக அதிகரிக்க.. தன் விஷம் தேய்ந்த வார்த்தைகளாலும் செயல்களாலும் அவளை வதைக்க எண்ணி…
‘’ தன் மடியில் உள்ளவளிடம் சோனியா பேபி.. எனக்கு இந்த அமைதி பிடிக்கவே இல்லை… ரொம்ப போரா இருக்கு.. சோ லைவ் டான்ஸ் ஷோ பார்ப்போமா.” என அவன் மனைவியை பார்த்தவாறு கண் சிமிட்டிக் கேட்க…
அபையின் எண்ணம் புரிந்தவளும்.. ” சூப்பர்ப் டார்லிங்.. என அவனிடம் மேலும் இழைந்தவாறு.. தன் எதிரில் உள்ளவளை.. நோக்கி குரூரமாக சிரித்தாள்.. ‘’
சிற்பிகா எதையும் கண்டுகொள்ளவில்லை… அவள் விழிகள் நிலைத்தது.. அபயின் மேல் மட்டுமே.. அவள் பார்க்க வில்லை என்றால்.. இதை விட அதிகமான தண்டனை கிடைக்கும் என்பதால்.. தன் உணர்ச்சிகளை மறைத்துக் கொள்ள பழகிவிட்டாள்..
ஏய் ஒரு டான்ஸ் ஆடு.. என அபய் திமிராக கூற.. அவள் மறுபேச்சில்லாமல் தன் புடவையின் முந்தானையை எடுத்து இடுப்பில் சொருக..
அந்த சிறு செயலில் அபயின் விழிகளும் மயக்கத்தில் சொருகியது…
அவன் கேர்ள் ப்ரெண்டால் ஒரு மணிநேரம் செய்ய முடியாத காரியத்தை.. சிறு செய்கையில் செய்து முடித்ததை அறியாத சிற்பிகா.. நடனம் ஆட ஆரம்பித்தாள்..
அவள் விழிகள் பிடிக்கும் ஒவ்வொரு அபிநயத்திற்கும் அபயின் விழிகளில் மாற்றம் கூடிக்கொண்டே சென்றது…
அதையறிந்த சோனியா அவன் தோளை அழுத்த.. நிகழ்காலம் திரும்பியவன்.. தன்னை மயக்கத்திற்கு ஆழ்த்திய அவள் மீது கோபம் கொண்டு.. சட்டென்று எழுந்து நின்றான்…
கீழே விழப்போன சோனியா கடைசி நொடியில் சுதாரித்து.. சமாளித்து நின்றாள்…
சிற்பிகாவை நெருங்கிய அபய்… தன் பாக்கட்டில் இருந்து கத்தையாக பணத்தை எடுத்தவன்.. சீட்டுக்கட்டு போல் பணத்தை அவளை சுற்றியவாறு.. அவள் மீது வாரியிறைத்தவன்… நீ ஆடுன நடனத்துக்கு என்னோட பரிசு.. என்றவன்.. வேகமாக அங்கிருந்து நகர்ந்தான்…
சோனியாவும் சிற்பிகாவை பார்த்து நக்கலாக சிரித்தவாறு அபயை பின்தொடர்ந்தாள்…
இப்பொழுதும் சிற்பிகாவின் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை.. ஆனால் அவள் மனம் கொள்ளும் வேதனையையும் வலியையும் அவளையன்றி.. யாரும் அறியார்…
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.