அத்தியாயம் 19
அஜய்.. சிற்பிகாவின் உயிர்த்தோழி ரூபாலியின் சொந்த தாய்மாமா மகன்.. இவர்களின் குடும்பம் சென்னையில் இருக்கின்றது.. வருடத்திற்கு இருமுறை கோயம்பத்தூர்க்கு வருகை தருவார்கள்..
சென்ற முறை அஜய் வந்திருந்த பொழுது.. ரூபாலியுடன் இருந்த சிற்பிகாவைக் கண்டு ஜொள்ளுவிடத் தொடங்கியவன்… இருநாளிலே அவளிடம்.. தான் அவளைக் காதலிப்பதாய் கூற.. சிற்பிகா அதிர்ந்து போனாள்..
ரூபாலியின் சொந்தம் என்பதற்காக இருவார்த்தை சிரித்து பேசினால்.. இவன் காதல் சொல்வானா என்ற கோபம் எழுந்தாலும்.. தோழியின் முகத்திற்காக.. அதனை அடக்கிக் கொண்டவள்.. ” இங்க பாருங்க அஜய்.. எனக்கு உங்க மேல அந்தமாதிரி எண்ணமெல்லாம் இல்லை.. இனிமே இப்படி என்கிட்ட பேசாதீங்க.. ” என பொறுமையாக எடுத்துக்கூற.. அவனோ அதை அவளின் பயம் வெட்கம் என நினைத்துக் கொண்டு.. அவள் பின்னேயே சுற்றிகொண்டிருந்தான்..
சிற்பிக்கு இந்த விஷயத்தை ரூபியிடம் எடுத்துச் செல்ல விருப்பமில்லை.. அதனால் முடிந்தளவு அவனை விட்டு விலகினாள்.. அப்பொழுது அஜய்க்கு தொழில் நிமித்தம் லண்டன் செல்லும் சூழ்நிலை ஏற்பட.. சிற்பிகாவிடம் ” நான் இப்போ லண்டன் போறேன்.. வரதுக்கு குறைஞ்சது சிக்ஸ் மந்த்தாகும்.. அது வரைக்கும் யோசிச்சு நீ நல்ல முடிவா சொல்லு என கிட்டத்தட்ட காலில் விழாக்குறையாய் கெஞ்சி சென்றான்…
ரூபாலி தன்னெதிரில் அமர்ந்திருக்கும் அஜயை தன் விழிகளால் கூர்ந்துப் பார்க்க.. அஜய் அவளின் பார்வை புரியாமல்.. ” என்ன ரூபா.. நான் உன் பிரென்ட் என்னை காதலிச்சுட்டு இன்னொருத்தன கல்யாணம் பண்ணிக்கிட்டான்னு சொல்றேன்.. நீ எதுவும் பேசமாட்டேங்குற.. என ஆற்றமையாக கூறினான்..
எது.. சிற்பி உன்னைய லவ் பண்ணா.. இத நான் நம்பனும் என ஒருமாதிரியாக கேட்க.. அஜய் திருதிருவென முழித்தான்…
என்னடா ஆடு திருடுன கள்ளன் மாதிரி முழிக்குற.. என ரூபாலி நக்கலாக கேட்கவும்.. அவன் ரோஷம் கொண்டு.. அதெல்லாம் இல்லை.. அவன் என்னை லவ் பன்றா.. எனக்கு நல்லாத்தெரியும்.. நான் பார்க்கும் போதெல்லாம் வெட்கபட்டு கீழ குனிஞ்சுக்குவா… என பெருமையாக கூற.. ரூபாலி அவனைக் கேவலமாக ஓர் பார்வை பார்த்தாள்…
டேய் பேக்கு.. அவ உன் முகத்தை பார்க்க சகிக்காம கீழே குனிஞ்சிருக்கா.. இது புரியாம என்கிட்டயே பீலா விடுறியா.. என்கிட்ட இப்படி உளறிவச்ச மாதிரி வெளில சொல்லாத.. சொன்னா உனக்குத்தான் ஆபத்து.. என அவன் தலையில் அடித்தாள்..
அடேய்யப்பா ஓவர் பில்டப்பா இருக்கே.. என எரிச்சலுடன் கூறியவாறு முடியை சரி செய்தான்..
டேய் லூசு.. அவர் யார் அபயசிம்ஹா சக்சேனா… பிஸ்னஸ் டைஹுன்.. அவர் கிட்டபேசவே எல்லாரும் பயப்படுவாங்க.. அப்படியிருக்கப்ப நீ அவரோட மனைவியப்பத்தி இப்படி பேசுனா உன்னைய சும்மா விடுவாங்களா..
உனக்கு கொஞ்சமாவது மேல்மாடில ஏதாவது இருந்தா.. ஒழுங்கா ஊர் போயி பொழைக்கிற வழியப்பாரு.. இல்லைன்னா கத்தியும் துப்பாக்கியும் தான் வரும்.. என பங்கம் பண்ணிவிட்டு செல்ல.. அஜய் நொந்துவிட்டான்…
அவன் ஒன்றும் சிற்பிகாவை காவியக்காதல் செய்யவில்லை.. வெளிநாட்டிற்க்கு சென்ற பிறகு அங்குள்ள பெண்களை சைட் அடிப்பதற்கே நேரம் சரியாயிருக்க.. அவனெங்கு சிற்பிகாவை நினைக்க..
ஆனால் ஆறுமாதம் கழித்து.. அவன் தாய் திருமணம் பற்றி பேசியதும்.. சிற்பிகாவின் நினைவு வர.. எதற்கும் அவள் முடிவை கேட்கலாம் என வந்தவனுக்கு அவளின் திருமணம் விஷயம் தெரிந்தது.. உள்ளுக்குள் சிறிது ஏமாற்றமாய் இருந்தாலும்.. அதனை அலட்சியமாக கடந்துவிட்டான்…
இன்று ரூபாலியும் அவனும் ரெஸ்டாரன்டிற்கு வந்திருந்தனர்.. வழக்கமான பேச்சுக்கள் தொடர.. இடையில் ரூபாலி சிற்பிகாவைப் பற்றி கூறினாள்…
அந்த பொண்ண பத்தி பேசாத ரூபா.. எனக்கு ரொம்ப கோபம் வருது..
ஏண்டா.. அவ உன்ன என்ன பண்ணா.. என சிறு சிரிப்புடன் கேட்டாள்…
ஹ்ம்ம் நான் போன தடவை இங்க வந்துருந்தேன்ல.. அப்போ அய்யாரோட பர்சனாலிட்டில பொண்ணு மயங்கிடுச்சு.. உனக்கு தெரியாம.. டூ டைம்ஸ் ப்ரொபோஸ் கூட பண்ணா.. சரின்னு நானும் போனா போகுதுன்னு அக்ஸ்ப்ட் பண்ணேன்.. ஆனா நான் லண்டன் போயிட்டு வரதுக்குள்ள பெரிய பணக்காரனா புடிச்சுட்டா.. என அப்படியே பிளேட்டை திருப்பி எக்ஸ்ட்ரா பிட்டிங்கெல்லாம் சேர்த்து கூற.. ரூபாலி காரித்துப்பாத குறையாய் அவனை கலாய்த்து விட்டு சென்றுவிட்டாள்…
அஜயோ அதனையெல்லாம் தூசு போல் தட்டிவிட்டு செல்லப்பார்க்க.. அவன் முன்னே ஓர் பெண் வந்து அமர்ந்தாள்…
அஜய் அவளை யாரென அறியாது பார்க்க.. அவளோ முகத்தில் டன்கணக்கில் வழியும் சோகத்துடனும்.. விழிகளில் பெறுகிய கண்ணீருடன் அவனைப் பார்த்து ” சார் ப்ளீஸ் எனக்கொரு ஹெல்ப் பண்ணுங்களேன்.. உங்களால மட்டும்தான் இப்போ எங்களுக்கு உதவி செய்ய முடியும் என பாவம் போல் கேட்க.. ”
சப்டைட்டில் இல்லாத சைனீஸ் சீரியலைப் பார்த்த மாதிரி ஒன்றும் புரியாமல் முழித்த அஜய் ” ஹலோ யாருங்க.. நீங்க உங்களுக்கு என்ன ஹெல்ப் வேணும்.. அதை ஏன் என்கிட்ட கேட்குறீங்க ” என கேள்வியாய் அடுக்கினான்..
ஹ்ம்ம் எல்லாம் உங்களுக்கு வேண்டியவங்கதான்.. என் பேரு நீரஜா.. இவ்வளவு நேரம் நீங்க பேசிக்கிட்டு இருந்திங்களே சிற்பிகா அவ எங்க அக்கா.. என பேமிலி போட்டோவை காண்பித்து.. உருக்கமாய் கூறிக்கொண்டிருந்த நீரஜா.. ச்ச இவள போயி அக்கான்னு சொல்ல வேண்டியதா இருக்கே.. என மனதுக்குள் புலம்பினாள்…
நீரஜா.. சிற்பிகாவின் தங்கை சரி அவள் எதுக்கு நம்மிடம் பேசவேண்டுமென்கிறாள்.. ஒருவேளை நான் ரூபாலிக்கிட்ட பேசுனத கேட்டு தப்பா புரிஞ்சுக்கிட்டாளோ.. சரி இதெல்லாம் சும்மா விளையாட்டுக்குன்னு சொல்லிடலாம் என அஜய் வாய் திறக்க முயன்ற பொழுது.. நீரஜா தடுத்தாள்..
ப்ளீஸ்.. முதல்ல நான் நடந்தத சொல்லுறேன்.. அப்புறம் எனக்கு ஹெல்ப் பண்றதா வேண்டாம்மான்னு நீங்க முடிவெடுங்க.. என்றவள் தான் புனைந்த கதையை கூற ஆரம்பித்தாள்…
நீங்க எல்லாரும் நினைக்கிற மாதிரி எங்கக்காவுக்கு இது லவ் மேரேஜ் இல்லை.. கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க.. எங்கக்கா ஒரு அவார்ட் பங்க்ஷனுக்கு பெங்களூர் போயிருந்தா… அப்போ தான் மிஸ்டர் அபய் எங்கக்காவ பார்த்து பிடிச்சு போயி கல்யாணம் பண்ணிக்க கேட்டார்.. பட் அவரோட கேரக்டர் சரியில்லாததால அக்கா ஒத்துக்கல.. ஆனா அவரு எங்களையெல்லாம் கொன்னுருவேன் ப்ளாக்மெயில் செஞ்சு.. அக்காவ ஒத்துக்க வச்சாங்க..
இப்போ அவ அங்க ரொம்ப டார்ச்சர அனுப்பவச்சிட்டு இருக்கா.. தினமும் பொண்ணுங்கள கூட்டிட்டு வந்து வீட்டுலயே தப்பு பன்றாராம்.. கேட்ட எங்கக்காவ போட்டு அடிக்கிறாராம்.. ப்ளீஸ் நீங்கதான் எப்படியாவது எங்கக்கவா காப்பாத்தனும்.. என கண்ணீர் விட..
அஜய் அவளை பாவமாக பார்த்தான்.. எப்பொழுதும் அமைதிப் புன்னகையுடன் வலம் வரும் சிற்பிகாவை நினைத்து அவன் மனம் பாரமாகியது…
நீ சொல்றதெல்லாம் புரியுதும்மா.. பட் இதுல நான் என்ன பண்றது.. வேணும்னா ரூபாலிக்கிட்ட கேட்போமா.. அவ அவங்க அப்பா மூலமா ஏதாவது பண்ணுவா.. என அஜய் கூற..
கெடுத்தானே கதைய.. என உள்ளுக்குள் அலறிய.. நீரஜா ” அதெல்லாம் ரொம்ப ரிஸ்க்.. அவங்க எங்கக்காவ கொலை பண்ணக்கூட வாய்ப்பிருக்கு.. ஆனால் நீங்க நினைச்சா.. எந்த வித சேதாரமும் இல்லாம சிற்பிகாவ இங்க கூட்டி வரலாம்… என்றதும் அஜய் குழப்பதுடன் நான் என்னம்மா பண்றது.. என்றான்..
நீங்கதான் எங்கக்காவ லவ் பண்ணிங்கள்ல.. அதை வச்சே அவள கூட்டிவாங்க.. மிஸ்டர் அபய்க்கிட்ட நீங்களும் சிற்பிகாவும் உயிருக்குயிரா லவ் பண்ணதா சொல்லுங்க.. அப்புறம் நடக்க வேண்டியத அபய் பார்த்துப்பார் என வில்லத்தனமாக கூற.. மக்கு அஜயும் குழப்பத்துடன் ஒப்புக்கொண்டான்..
நீரஜா தன் முகத்தில் தோன்றும் வஞ்சத்தை முயன்று மறைத்து… இது என்னோட நம்பர்.. அங்க எதாவதுன்னா எனக்கு கால் பண்ணுங்க.. என்றவள் அவன் என்னையும் வாங்கிக்கொண்டாள்..
எங்க அக்காகிட்ட நீங்க பேசுறத விட மிஸ்டர் அபய்கிட்ட பேசுனாதான்.. அவளை அந்த வீட்டுல இருந்து சீக்கிரமா வெளில கொண்டு வரமுடியும்.. என மெல்லிய குரலில் கூறியவள் சிறு சிரிப்புடன் அவனிடமிருந்து விடைபெற்றாள்…
அஜய் சிற்பிகாவிற்கு நல்லது செய்வதாய் எண்ணி.. அவள் வாழ்க்கையில் குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தான்.. இது சிற்பிகாவிற்கு நன்மை பயக்குமா… இல்லை அடுத்ததொரு துன்பத்தை பயக்குமா..?
********************************************
நீரஜா தன் தோழிகளுடன் ரெஸ்டாரன்டிற்கு வந்திருந்தாள்.. சிற்பிகாவின் துர்த்தஷ்டமோ இல்லை அவளின் அதிர்ஷ்டமோ.. இவள் அவர்களின் பின்னால் அமர்ந்திருக்க.. இவர்கள் பேசியது அனைத்தையும் கேட்க நேரிட்டது..
ஏற்கனவே அவளுக்கு சிற்பிகாவின் மேல் வானளவு பொறாமை.. முன்பெல்லாம் அவளை கஷ்டப்படுத்தி தன் கோபத்தை தனித்துக் கொள்வாள்.. இப்பொழுது இந்தியாவின் விரல் விட்டு என்னக்கூடிய பணக்காரரின் மனைவியாக.. பெரிய மாளிகையில் நிம்மதியாக வாழ்கிறாள்.. அதனை சும்மா விடுவதா என உள்ளுக்குள் பொருமியவளுக்கு.. இவர்கள் பேசிய விஷயம்.. அட்சரசுத்தமாக காதில் விழுந்த நொடியில் ஓர் திட்டத்தை உருவாக்கி.. அஜய் யோசிக்க முடியாத அளவிற்கு அவனை முடிக்கியும் விட்டாள்.. ராஜாங்கத்தின் மருமகளும் அபிராமியின் மகளும்மாகியவளுக்கு நடிக்கவா சொல்லித்தரவேண்டும்…
ஹ்ம்ம்ம் இந்த லூசு அபய்கிட்ட பேசுனா அவ்வளவு தான்… அவன் அவள கழுத்தப்புடிச்சு வெளியே தள்ளிடுவான்.. இல்லை கொன்னு போடுறதுக்கு கூட நிறைய வாய்ப்பிருக்க எப்படியோ அவ தொலைஞ்சா சரி… என குரூரமாக சிரித்தாள்..
*******************************************
வெளியில் அமைதியாக இருக்கும் சிற்பிகாவின் மனதில் பெரும் சூராவளி அடித்துக் கொண்டுருந்தது.. அஜய் வந்து சென்று முழுதாய் ஒருமணிநேரம் முடிந்தும்… அவளால் அவ்விடத்தை விட்டு அசையமுடியவில்லை… ஏன் எனக்கு மட்டும் இப்படியாக வேண்டும்.. அவ்வளவு சபிக்கப்பட்டவளா நான்.. ஓர் நாள் தன்னவனுடன் சந்தோஷமாக இருந்தால்.. அதற்கு இருமடங்கு துன்பம் தொடருவது ஏன் என அறியாமல்.. பெண்ணவள் ஓய்ந்து போனாள்…
அஜய்க்கு ஓர் முக்கிய அழைப்பு வர.. அவன் மூவரிடத்திலும் மற்றொரு நாள் வருவதாய் கூறியவன்.. சிற்பிகாவை மட்டும் ஓர் பார்வை பார்த்து சென்றான்…
அஜய் சென்றதும் சிற்பிகா பயந்தவாறு அபயை பார்க்க.. அவனோ அவளைக் கண்டுகொள்ளாமல்.. வேக வேகமாய் தன்னுடைய பார் வசதிக் கொண்ட அறைக்கு சென்றான்… அதி அவளை பார்த்து இருபக்கமும் தலையாட்டி அலுப்பாய் ஓர் பார்வை பார்த்தவள்… அபயை பின் தொடர்ந்தாள்…
சிற்பிகா விழிகளில் பெருகிய நீருடன்.. போனில் யாருக்கோ அழைப்பு விடுத்தாள்… மறுமுனையில் போன் எடுக்கப்பட்டதறிந்து ” ஹலோ ரூபி.. ” என்றவள் தன் மனகுமுறல் அனைத்தையும் தன் தோழியுடன் பகிரஆரம்பித்தாள்..
*****************************************
அஜய் ” ஹலோ நீரஜா.. நீ சொன்ன மாதிரி இங்க எதுவும் நடக்கல… சிற்பிகா பார்க்க சந்தோஷமா இருக்கிற மாதிரி தான் இருக்கு.. என்றான் சந்தேகமாய்..
” வெளித்ததோற்றத்தை வச்சு நம்பிடாதீங்க அஜய்.. அவன் என் அக்காவ நல்லா மிரட்டி வச்சிருக்கான்.. சோ நீங்க வலுக்கட்டாயமா அவளை அங்கிருந்து கூட்டிட்டு வந்துடுங்க ” என சில பல மூளைசலவை செய்தாள்..
நாளைக்கு எங்க பெரியம்மா நினைவு நாள்.. அன்னைக்கு அவ கண்டிப்பா கோவிலுக்கு வருவா.. அப்போ அவகிட்ட பேசிப் பாருங்க.. என போனை வைத்தவள்.. தன் நண்பனின் போனில் புது சிம்மை போட்டு.. ஓர் எண்ணுக்கு அழைத்தாள்..
” மிஸ் Ak.. உங்க க்ளோஸ் பிரெண்டோட ஒயிப் சிற்பிகா நாளைக்கு அவங்க முன்னால் காதலன பார்த்து.. ஓடிப்போறதுக்கு ரகசியமா திட்டம் போடப்போறாங்க.. சொல்ல முடியாது நாளைக்கே கூட ஓடிப்போகலாம்.. முடிஞ்சா உங்க நண்பனோட மானத்தை காப்பாத்திக்கோங்க.. ” என சிறிது குரலை மாற்றி நக்கலாக கூறியவள்.. மறுமுனை பதில் கூறும் முன் போனை அணைத்து சிம்மை வீசிவிட்டாள்..
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.