அத்தியாயம் 21
சிற்பிகா கோவிலுக்குள் உள் நுழையும் போது இருந்த மனசஞ்சலம்மெல்லாம் காற்றாய் மறைந்து போக.. லேசான மனதுடன் வெளியே வந்தாள்..
அவள் கூட்டத்தின் பொருட்டு சீக்கிரம் வெளியே வந்துவிட.. ரூபாலியும் அஜயும் இன்னும் வரவில்லை.. அவர்களிருவருக்காக அவள் கூட்டத்தை விட்டு ஒதுங்கி வானகனங்கள் செல்லும் சாலையின் ஓரத்தில் நின்றாள்..
அப்பொழுது கணத்த சரீரம் கொண்ட ஓர் பெண்மணி நடந்துகொண்டிருக்கும் போது.. அவர் கால் பிசகி சட்டென்று சிற்பிகாவின் மேல் விழுந்தார்..
அதனால் சற்றுத்தாள்ளாடிய சிற்பிகா சாலையில் விழும் நேரம்.. கட்டுப்பாடிழந்த கார் ஒன்று சீரிக்கொண்டு வந்தது.. சிற்பிகா சாலையில் விழுந்தால் நிச்சயம் கார் அவளை மோதக்கூடும்..
ஆனால் கடைசி நொடி… அந்த பெண்மணி அவள் மேல் விழுந்த அதே நேரம்… சிற்பிகாவின் கழுத்திலிருந்த தாலிச்செயினை யாரோ பக்கவாட்டில் இழுக்க.. கார் ஒரு இஞ்சு இடைவெளியில் அவளை ஒரசிக்கொண்டவாறு.. வேகமாய் அங்கிருந்த மரத்தின் மீது மோதியது…
திருவிழா கூட்டம் போன்ற இடத்தில் தான் திருட்டு கும்பல்கள் அதிகம் உலவுவர்.. அதே போன்று நந்தி கோவிலில் இன்று கண்டிப்பாக கூட்டமாக இருக்குமென்பதால்.. சில மர்மநபர்கள் கூட்டமாக இருக்கும் இடத்தில் சிறு சிறு திருட்டுக்களை செய்துகொண்டிருந்தனர்…
சிற்பிகாவின் நல்ல நேரமோ இல்லை கெட்ட நேரமோ.. அவர்களின் கண்ணில் சிற்பிகாவின் மார்பில் தவழ்ந்த தாலிச்செயின் பட்டது.. அதனை களவாடும் பொருட்டு ஒருவன் சிற்பிகாவின் அருகே.. தகுந்த நேரத்திற்காக காத்திருந்தான்..
பெண்மணி அவள் மேல் விழுந்த அதே நொடி செயினும் இழுக்கப்பட்டது… அப்பெண்மணி சிற்பிகா திருடன் இருவருக்குமான இடைவெளியில் இருந்ததால்.. அவ்வளவு பலமாக இழுக்க முடியவில்லை… இருந்தும் அவள் கழுத்திலிருந்து குருதி வழிய ஆரம்பித்தது…
அப்பொழுது அந்த திருடன் மேலும் அவளின் தாலியை பறிக்க முற்பட.. அந்த அதிர்ச்சியிலும் தாலியை இருக்கமாய் பிடித்துக்கொண்டவள்.. அவனிடமிருந்து விடுபட முயற்ச்சித்தாள்.. ஆனால் அவனோ மேலும் வலு கொண்டு இழுக்க முற்படும் போது.. திருடனின் தோளில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது.. அவன் ஆஆ.. என வலியில் அலறிக்கொண்டே தாலியை விட்டான்…
சிற்பிகாவிற்கு கழுத்தில் பட்ட காயம் மிகுந்த வலியையும் எரிச்சலையும் கொடுத்தாலும்.. தன் குருதியில் குளித்த மாங்கள்யத்தை இருக பற்றியவாறு போராடிக் கொண்டிருக்க.. அப்பொழுது கேட்ட துப்பாக்கியின் ஓசை அவளுக்கு மயக்கத்தை கொடுத்தது… விழி சொருகியாவாறு அவள் கீழே விழும் முன்.. அபய் தன்னவளை ஏந்திக்கொண்டான்..
**********************
அபய் அதி இருவரும்.. பாரில் இருக்கும் பொழுதுதான் நீரஜா அதிக்கு போன் செய்தாள்.. முதலில் புது நம்பரை கண்டு புருவம் சுருக்கி ஆன் செய்து யாரென கேட்டவள்.. சிற்பிகா பேச்சு அடிப்படவும்.. போனை ஸ்பீக்கரில் போட்டாள்..
அபய் அதி இருவருமே நீரஜாவின் வன்மம் நிறைந்த சொற்களை கேட்டனர்…
அபய் கேள்வியாய் அதியைப் பார்த்தான்.. அவளும் அவன் கேள்வி புரிந்து ” நீரஜா.. சிற்பிகா தங்கச்சி.. வாய்ஸ் மாத்தி பேச முயன்றுக்கான்னு தோனுது ” என நக்கலாக கூறினாள்….
இந்த அஜய பார்த்தா கெட்டவன் மாதிரி இல்லை.. நீரஜா தான் ஏதோ சொல்லி இவனக்குழப்பி விட்ருக்கனும்.. என சரியாய் நடந்ததை ஊகித்தாள்… அதோடு திருமணத்திற்கு முன் சிற்பிகாவின் வீட்டில்.. அவள் அவனைப் பற்றி தரக்குறைவாய் பேசியது.. அதற்கு தான் அடித்தது என அனைத்தையும் கூற.. அபயின் முகத்தில் எவ்வித உணர்ச்சியும் இல்லை..
ஹ்ம்ம்ம் இப்போ என்ன பண்ணலாம் சொல்லு.. அஜய் நீரஜாவ தூக்கிரலாமா..
வேண்டாம்.. நாளைக்கு என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்.. என அலட்சியமாக தோளை குலுக்கி கூற.. அதியும் யோசனையுடன் சரியென்றாள்…
மறுநாள்.. சிற்பிகா அவனைத் தேடியது.. ரூபாலி வந்தது.. அவளுடன் கோவிலுக்கு சென்றது என அனைத்தையும் அபய் அறிவான்.. சிற்பி இதுவரை அபய் இல்லாமல் வெளியே சென்றதில்லை.. இப்பொழுது தான் முதல் முறையாக அவனின்றி வெளியே செல்கிறாள்…
மனம் முழுதும் வேறு சிந்தனையில் இருந்ததால் சிற்பியும்.. அஜய் மேல் உள்ள கோபத்தில் அவனை மனதில் தாலித்துக் கொண்டிருந்த ரூபாலியும்.. அவர்களின் காரை பின்தொடர்ந்து வந்த பாதுகாவலர்களை அறியவில்லை..
தூரத்தில் இருந்தே அவளை பாதுகாத்துக் கொண்டிருந்தார்கள்.. அஜய் சிற்பிகாவை நெருங்கியதும் அவர்கள் அபய்க்கு போன் போட்டு சொல்லிவிட்டனர்… அபய் அவர்களை நெருங்க வேண்டாம் என்றும் ஏதேனும் பிரச்சனை என்றால் மட்டும் அருகில் செல்லுமாறு கூறினான்… அவர்கள் என்ன பேசினார்கள் என்பதைக் கூட அவன் அறியமுற்படவில்லை.. அவ்வளவு நம்பிக்கை தன்னவள் மேல்..
ஆனால் சிறிது நேரத்திலேயே ஏனோ அவன் மனம் அவளை நாடியது… சொல்லமுடியா உணர்வு உள்ளுக்குள் உந்த அவளைக் காண கிளம்பிவிட்டான்.. ஒருமணிநேர பயணத்தை அரைமணிநேரமாக சுருக்கிக் கொண்டு வந்தவன் கண்டதெல்லாம்.. கழுதிலிருந்து குருதி வழிய.. தாலிச்செயினிர்க்காக போராடும் தன்னவளைத்தான்..
சட்டென்று அவளிடம் அவன் நெருங்கும் போதே.. பாதுகாவலர்களின் துப்பாக்கி குண்டு திருடன் மேல் பட.. அதில் பயந்து விழுந்தவளை தன் கரத்தில் ஏந்திக்கொண்டான்… சிற்பிகா விழி சொருகிய கடைசி வினாடி அவன் முகத்தைக் கண்டு.. ஆறுதலான புன்னகையை தந்துவிட்டே மயங்கினாள்…
*****************
சிற்பிகா மெத்தையில் கழுத்தில் கட்டுடன் படுத்திருக்க.. அவளைச்சுற்றி.. அஜய் ரூபாலி அதி என அனைவரும் நின்றுக்கொண்டிருந்தனர்.. அபய் அவள் அருகில் அமர்ந்திருந்தான்..
ரூபாலி தன்னெதிரில் மயக்கமுற்று படுத்திருக்கும் சிற்பிகாவையே வேதனை பொங்க பார்த்தாள்.. ஆனால் மறுநிமிடம் பக்கத்திலிருக்கும் அஜயின் முதுகை பதம் பார்க்க.. அவன் அலறினான்..
டேய் உன்னால தாண்டா அவளுக்கு இந்த நிலைமை.. நேத்து மட்டும் நீ இங்க வந்து குழப்பம் பண்ணலைன்னா சிற்பி அபய் அண்ணா இல்லாம கோவிலுக்கு வந்துருக்க மாட்டா.. அவர் கூட இருந்திருந்தா இப்படியொரு நிலமையை வந்துருக்காது.. என கோபத்துடன் கூறியவள்.. அபய்யையும் விட்டுவைக்க வில்லை..
உங்களுக்கென்ன அப்படியொரு கெத்து.. கோபம்.. அவ பாதுகாப்புக்கு ஆள அனுப்புனதுக்கு பதிலா நீங்களே வந்துருக்கலாம்ல.. என அபயிடமும் பொறிந்தாள்.. அங்குள்ள அனைவருக்கும் ஏன் அபய்க்கு கூட இவ்விரு பெண்களின் நட்பும்.. அவர்களிருவருக்கும் இருக்கும் பிணைப்பையும் பற்றி அறிந்ததால்.. அவளின் வேதனை புரிந்து.. அமைதியாக இருந்தனர்..
ஆனால்.. மயக்கத்தில் இருந்தாலும்.. தன்னவனை தோழி திட்டுவது பெண்ணவளுக்கு புரிந்ததோ என்னவோ.. அவளின் விழிகள் இரண்டும் மெல்லமாய் திறந்தது…
அவள் விழி திறந்த நொடி இத்தனை நேரம் அபய் தான் உணர்ந்த மனஅழுத்தத்தை.. அவள் கரத்தில் உணர்த்த.. பெண்ணவள் அவன் கரத்தை மென்மையாக வருடினாள்..
ரூபி ” இப்போ எப்படி இருக்கு சிற்பி ரொம்ப வலிக்குதா.. ”
ரூபி அதெல்லாம் இல்லை.. நீ தேவையில்லாம டென்ஷன் ஆகாத..
அஜய் ” என்னால தான் உனக்கு இந்த மாதிரி ஆச்சு.. சாரி சிற்பிகா.. ”
ச்ச ச்ச.. அதெல்லாம் ஒண்ணுமில்ல.. எது நடக்கணும்னு இருக்கோ அதான் நடக்கும் என அவனை சமாதானம் படுத்தினாள்..
” அடேங்கப்பா.. தத்துவம் எல்லாம் பலமா வருது.. என கோபமும் நக்கலுமாக கூறிய அதி..
உன் மனசுல ஜான்சி ராணின்னு நினைப்பா.. கழுத்து கீறி ரத்தம் வந்தும் தாலிச்செயின இறுக்கமா பிடிச்சுருக்க.. நல்ல வேலை பின் பக்கம் கீறியிருக்கு… அதுவே முன்பக்கம் கிழிச்சிருந்தா என்னாகியிருக்கும்.. ஏன் இந்த தாலி போனா.. வேற இவன் கட்ட மாட்டான்னா.. ” என கத்தினாள்.. அபய் மீண்டும் அவள் கரத்தில் அழுத்தம் கொடுத்து.. தனக்கும் அந்த கோபம் இருப்பதாய் காண்பித்தான்…
இல்லக்கா.. இது எனக்கு கிடைக்குமா கிடைக்காதான்னு ஏங்கித்தவிச்ச பொக்கிஷம்.. என்னைக்கும் விடமாட்டேன்.. என மெல்லிய குரலிலும் உறுதியாக கூறினாள்…
அவளின் பேச்சைக் கேட்ட அதி.. ஆயாசமாக நண்பனை பார்க்க.. அவனோ ஒருவித இறுகிய நிலையில் அமர்ந்திருந்தான்.. அப்பொழுது தான் அபயின் நிலை புரிந்தவள்.. அவர்களுக்கு தனிமை வேண்டி ரூபாலியையும் அஜயையும் ஓர் பார்வை பார்த்து வெளியேற.. அவர்களும் புரிந்து கொண்டு சிற்பியிடம் வெளியில் இருப்பதாய் கூறிவிட்டு அதியை பின்தொடர்ந்தனர்..
சிற்பிகா அஜயை பார்த்தாள்.. அவன் இன்னும் அதே நிலையில் இருக்க.. சிறிது தயக்கம் கொண்டாலும்.. மெல்ல அபயின் மடியில் தன் சிரத்தை பதித்து அவன் முகத்தைக் காண.. அவனோ தன்னையுமறியாது.. அவள் காயம் பட்ட இடம் அழுத்தாதவாறு அவளை சரியாய் படுக்க வைத்தான்.. கரமோ அவனின் ஆணையின்றி அவளின் காயத்தை வருடத்தொடங்கியது.. தனக்கு இந்த மாதிரியான உணர்வுகள் எல்லாம் உண்டா.. என அவன் மனமே அதிசியப்பட்டது..
நீங்க என்மேல கோபமா இருக்கீங்கன்னு தெரியும் சிம்மு மாமு.. ஆனா நீங்க கட்டின தாலி எனக்கு ஒன்பது வருஷ தவம் தெரியுமா… அப்படி தவமிருந்து கிடைச்சத எப்படி நான் ஈஸியா விடமுடியும் என மெல்லிய குரலில் தன் பக்கத்தைக் கூற… அவனின் வருடல் ஓர் நொடி நின்றாலும் மீண்டும் தொடங்கியது…
அதெல்லாம் கண்ணில் பதிந்தாலும் சிற்பியின் கருத்தில் பதியவில்லை… இப்பொழுது அவள் மனம் மிகவும் தெளிவாய் உற்சாகமாய் இருந்தது.. மனம் முழுக்க சந்தோஷ பூரிப்பு.. அதற்கு காரணம்.. தன்னவன் தன் மேல் கொண்டுள்ள உயிர்காதலை அறிந்ததுதான்…
அவள் மயங்கிவிழப் போகும் கடைசி நொடி.. பரிதவிப்பு காதல் உயிர்வலி ஏக்கம் என அனைத்தையும் ஒற்றை பார்வையில் ஓர் நொடியில் தன்னவனின் விழியில் அவள் கண்டாள்.. அந்நிமிடம் அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.. அபய் அவன் காதலை உணர்ந்தானோ இல்லையோ அவள் உணர்ந்தாள்..
அவளவன் தனக்கு ஏதேனும் நேர்ந்திடுமோ என்று பரிதவித்ததை கண்டாள்.. அவள் கழுத்தில் குருதி வழிந்த பொழுது.. அவன் இதயத்தில் வழிந்த குருதியின் உயிர்வலியை கண்டாள்.. தன் பார்வையாலே பல தொழில் சாம்ராஜ்ஜியத்தையும்.. பகைவர்களையும் ஆட்டுவிப்பவன்.. அச்சம்மென்பதே அறியாத அரிமாவை ஒத்த தன்னவன்.. சிறு மான்விழியாளுக்கு ஏதேனும் ஆகிடுமோ என வாழ்க்கையில் முதன் முதலாக கொண்ட பயத்தைக்கண்டு கர்வம் கொண்டாள்…
அதனால் இத்தனை நாள் அவளுக்கும் அவனுக்கும் இடையிலிருந்த அவளின் தயக்கம் பயமெனும் பனித்திரை உடைய.. தன் வாழ்வின் அவன் முக்கியத்துவத்தையும்.. ஒன்பது வருடமாய் அவனே அவளின் வாழ்வாதாரம் என்று அவள் வாழ்ந்துவந்ததையும் முக்கியமாய் அவளின் காதலையும் கூற ஆரம்பித்தாள்….
**********************
சிறுவயதில் அவள் தாய் இறந்த பிறகு அவள் கொண்ட வேதனையையும்.. அதை மறக்கவும்.. தாயின் ஆசையை நிறைவேற்றுவதற்க்காகவும் தன்னை முழுதாக பரதத்தில் ஈடுபடுத்திக் கொண்டது.. ராஜாங்கம் அதனை பணமாக்கியது என அனைத்தையும் கூறியவள்.. முதன் முதலாக அவனைச் சந்தித்த பொழுதைக் கூறலானாள்..
55 வயது கிழவனுக்கு பதினேழு வயது இளம்பாவையை நாற்பது லட்சத்திற்கு கூறு வைக்க ராஜாங்கமும் அபிராமியும் சதித்திட்டம் தீட்டி.. அவள் குடித்த பாலில் மயக்கமருந்து கலந்தனர்..
சிற்பிகா அந்த பாலை பாதியளவே அருந்தினாள்.. மீதியை குடிக்க முடியாததால் கொட்டிவிட்டாள்.. ஆனால் பதினேழு வயது பெண்ணிற்கு அதுவே சற்று வீரியம் தான் என்பதால்.. ராஜாங்கம் அவளை தூக்கி சென்றது.. காரில் கிடத்தியது எல்லாம் சொருகிய விழியில் மங்களாக தெரிந்தாலும்.. அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை…
மினிஸ்டர் அவருடைய சொந்த கெஸ்ட் ஹௌசில் தான் இருந்தார்.. அவரின் விழிகள் ராஜாங்கத்தின் கரத்திலிருந்த அச்சிறுபூவை காமமாய் நோக்கியது…
வாய்யா ராஜாங்கம்.. ஏன் இவ்வளவு தாமதம்.. என சற்று எரிச்சலாக கேட்டார்..
ராஜாங்கம் ” மன்னிச்சுக்குங்க தலைவரே என வெட்கமேயில்லாமல் பல்லை இளித்தவன்.. அங்கிருந்த மெத்தையில் அவளைக் கிடத்தி விட்டு.. ராஜாங்கம் கொடுத்த பணப்பெட்டியை ஆவலோடு வாங்கினான்..
ஹ்ம்ம் இந்தா.. பேசுன பணம் இதுல இருக்கு… நீ பக்கத்து அறையில இரு.. நான் வேலை முடிஞ்சு கூப்பிடுறேன்.. எனவும் அவனும் பணத்தை என்னுவதற்காக வேகமாய் அங்கிருந்து நகர்ந்தான்…
அந்தக்கிழ.. அமைச்சரோ அய்யோ என்னமா இருக்க கண்ணு நீ.. உன்னைய பார்த்தவுடனே அப்படியே ஜிவ்வுனு ஆகிப்போச்சு.. என சிற்பியின் உடலைத்தடவ.. என்னநடந்தது இனி என்ன நடக்க போகிறது என்பதை பாதி மயக்கத்திலே புரிந்துக்கொண்ட பெண்ணவள் இதயம் வேக வேகமாய் துடித்தது..
தாய்மாமன் ஸ்தானத்திலிருந்து தாயைப் போல் பேணிக்காக்க வேண்டிய மருமகளை.. நாற்பது லட்சத்திற்க்காக ஒரு இரவு அவளை விலைப்பேசி இருக்கிறான்.. என்ற நினைவு தோன்றிய நொடி அவள் விழியிலிருந்து நீர் பெருகியது…
அந்த கிழம் அவளின் அங்கங்களை தடவ… இவள் அருவருத்து போனாள்.. தன்னை யாரேனும் காப்பாற்ற மாட்டார்களா… என அவள் ஏங்கும் தருணம் அறையின் கதவு சட்டென்று திறக்க.. அமைச்சர் எரிச்சலுடன் திரும்பினார்..
யாருடா அவன் நேரம் காலம் தெரியாம என அவர் திட்டிக்கொண்டே திரும்ப அங்கு.. வேட்டையாடத் துடிக்கும் சிங்கமாய் நின்றுக்கொண்டிருந்தான்.. அபயசிம்ஹா சக்சேனா.
அபயின் சக்சேனா குழுமத்தின் கிளை கோயம்புத்தூரிலும் உண்டு.. அபய் தான் அதனை பார்த்துக்கொண்டிருந்தான்.. தொழில்துறை அமைச்சரான இவருக்கும் அபய்க்கும் சில விஷயங்களில் முட்டிக்கொண்டது..
இருபத்திநான்கு வயதான அபயை சாதாரணமாக அவர் எடைப்போட்டு அவனுக்கு வேண்டுமென்றே நிறைய தொல்லைகளை கொடுத்து… அதிகபணத்தை கரக்க எண்ணினார்.. அதனால் அபய் அவருக்கு தான் யாரென காட்ட வந்திருந்தான்..
டேய்.. நீ இங்க என்னடா பண்ணுற.. உன் தொழில் விஷயமெல்லாம் அப்புறம் பேசிக்கலாம் இப்போ கிளம்பு.. என திமிராக மிரட்டினார்..
ஓஹ்.. அப்படியென்ன அமைச்சருக்கு முக்கிய வேலை.. என்ற குரலில் கேலி இருந்தாலும் விழியில் வேட்டையாடும் பளபளப்பு இருந்தது…
ஆனாலும் நக்கலை விடாமல்.. கோவிச்சுக்காதீங்க அமைச்சரே.. இப்போ உங்களுக்கு ஒரு போன் வரும் என அவன் பேசும் போதே.. அவர் போன் சப்தமிக்க.. அறையே அதிரும் வண்ணம் சிரித்தான்.. அபய்..
எடுத்து பேசுங்க முக்கியமான விஷயமா இருக்கப்போகுது… என அவன் விஷமமாக கூறியதும்.. மனதில் எழுந்த பயத்துடன் போனை ஆன் செய்தார்..
மறுமுனையில் அவரின் பதவி பறிக்கப்பட்டது என்றும்… அவரின் வீட்டிலும் மற்ற இடத்திலும் வருமானத்துறை அதிகாரிகள் சோதனை செய்கின்றனர் என்றும்.. அவர் மேல் சுமத்தப்பட்ட வழக்குகள் அனைத்தும் மறுவிசாரணைக்கு வரப்போகிறது என பல செய்திகள் வர…. அவர் போன் கைலிருந்து நழுவியது…
அவர் பயமும் பதட்டமுமாய் அபயை பார்க்க.. அவனோ என்ன அமைச்சரே.. ஏசி போட்டு தானே இருக்கு அப்புறம் ஏன் உனக்கு இப்படி வேர்க்குது என நக்கலாக கூறி.. அவரை தன் பார்வையால் உறுத்து விழிக்க… அவர் உடல் வெளிப்படையாகவே நடுங்க ஆரம்பித்தது…
இப்போ பேசு… நேத்து என்னமோ சொன்ன இது என் கோட்டை.. இங்க என் தயவில்லாம உன்னால ஒன்னும் ***ங்க முடியாது அப்படி இப்படின்னு பேசுன.. இப்போ பேசேன்.. என அவன் உறுமலாய் கேட்க.. அவர் முகத்திலிருந்து அதிகமாக வியர்வை சொட்டியது..
அபயிடமிருந்து இத்தகைய விரைவான பழிவாங்குதலை அவர் எதிர்பார்க்க வில்லை.. ஒரே நாளில் அவரின் மொத்த அரசியல் வாழ்க்கைக்கும் அபய் மூடுவிழா நடத்திவிட்டான்..
ஹ்ம்ம் உன்கிட்ட எல்லாம் பேசி.. என் நேரத்தை வேஸ்ட் பண்ண நான் விரும்பல.. நாளைக்கு நீ உயிரோட இருந்தா உன் பிரச்சனை எல்லாம் சால்வ் பண்ணிக்க.. என திமிராக கூறி திரும்பியவன்.. துணியால் முகம் மறைத்து படுத்திருந்த சிற்பிகாவை ஓர் பார்வை பார்த்துவிட்டு சென்றான்…
அந்தகிழ அமைச்சருக்கு ஏற்கனவே தீவிர இதயநோய்… அதைக்குறித்தே அபய் அவ்வாறு கூறியிருந்தான்..
அவன் நினைத்தது போல்.. இத்தனை அதிர்ச்சியையும் மொத்தமாக அவர் இதயம் சுமக்க முடியாத காரணத்தால்.. மொத்தமாய் நிறுத்த.. அறுபட்ட மரமாய் தரையில் சாய்ந்தார்..
இத்தனை நேரம் அங்கு நடந்ததையெல்லாம் அதிர்ச்சியும் பிரமிப்புமாய் பார்த்துக்கொண்டிருந்த சிற்பிகாவின் விழிகள் அபயின் பின்னேயே சென்றது.. அவனின் குரலில் இருந்த ஆளுமை.. நான் நினைத்தால் எதையும் செய்வேன்.. என்ற திமிர் எல்லாம் அந்த பதினேழு வயது சிற்பிகாவின் மனதில் பசுமரத்தானி போல் பதிந்தது…
அப்பொழுது அறக்க பறக்க உள்ளே வந்த ராஜாங்கம்.. இறந்து கிடந்த அமைச்சரை முகம் வெளிறி பார்த்து.. சிற்பிகாவை தூக்கிக்கொண்டு வெளியேறினான்..
அங்கு வாட்ட சாட்டமாய் நின்றிருந்த இருவர்.. ” டேய் நாங்க சொன்னதெல்லாம் நியாபகம் இருக்குல்ல.. இனிமே இந்த பொண்ண எங்கயாவது இப்படி விட்ட அப்பொறம் அபய் சார் உன்னை உயிரோட விடமாட்டார் என மிரட்டவும் ராஜாங்கமும் தப்பித்தோம் பிழைத்தோம் என சிற்பிகாவுடன் வீட்டிற்கு வந்தான்…
அரை மயக்கத்திலிருந்த சிற்பிகாவின் செவியில் அவர் சொன்ன ” இந்த பொண்ண எங்கயாவது இப்படி விட்ட அப்பொறம் அபய் சார் உன்னை உயிரோட விடமாட்டார் ” என்ற சொற்கள் அவள் காதினுள் ரீங்காரமிட.. சிற்பியின் விழிகள் சற்றுமுன் சிங்கம் போல் சிலிர்த்துக் கொண்டிருந்த அபயை எண்ணியது..
அவனை நினைத்த மாத்திரம் அவள் மனதினில் தோன்றிய மெல்லிய குறுகுறுப்புக்கு பெயர் தெரியாது முழித்தவள்.. விரும்பியே அதனுள் மூழ்கத்தொடங்கினாள்..