அத்தியாயம் 25
ஆசையை துறந்து துறவியான
என்னை, உன் நினைவுகள்
சுற்றி வந்து
போலித் துறவியாக்குகிறது!!!
தங்களுடைய அறையில் முகத்தை திருப்பிக் கொண்டு கட்டிலின் ஒரு ஓரம் அமர்ந்திருந்தான் கதிர். அவனுடைய கோபத்துக்கு காரணமான தேன்மொழியோ அவனையே குருகுருவென்று பார்த்த படி கட்டிலின் மறுபுறம் சாய்ந்து அமர்ந்திருந்தாள்.
கதிரின் இந்த கோபத்திற்கு காரணம் பெரிதாக ஒன்றும் இல்லை. தேன்மொழி தினமும் சிறிது தூரம் கூட நடக்காமல் உட்காந்தே இருப்பது தான்.
இரு பிள்ளைகள் என்பதால் ஏழாம் மாதத்திலே தேன்மொழி வயிறு சற்று பெரியதாக இருந்தது. அந்த பெரிய வயிற்றை வைத்துக் கொண்டு சிறிது நேரம் நடக்கவே அவள் சிரமப் பட்டாள்.
“தினமும் கொஞ்ச நேரம் நடங்க. சின்ன சின்ன வேலைகளை செஞ்சிட்டே இருங்க. அப்ப தான் சுகபிரசவம் ஆகும்”, என்று டாக்டர் சொல்லி இருந்ததால் அவளை காலையில் சிறிது தூரம் நடக்க சொல்லி வற்புறுத்தினான் கதிர்.
ஆனால் அவளோ “என்னால முடியலை அத்தான், மூச்சு முட்டுது”, என்று சொல்லி படுத்து தூங்கி விட்டாள். அப்போது கோபமாக வெளியே சென்றவன் மாலை தான் வீட்டுக்கு வந்தான்.
அவன் வயலுக்கு சென்றது கூட தெரியாமல் தூங்கியவள் பின் மதியம் வேணி கொடுத்த உணவையும் உண்டு விட்டு உறங்கி போனாள். மாலை ஐந்து மணிக்கு தான் தூக்கம் கலைந்து எழுந்தாள்.
“என்ன இன்னும் அத்தான் வரலை”, என்று எண்ணிக் கொண்டே மெதுவாக நடந்து முகம் கழுவ சென்றவள் தலையையும் பின்னி முடித்து கட்டிலில் அமர்ந்திருந்தாள்.
அப்போது உள்ளே வந்த கதிரைப் பார்த்ததும் சிரித்தவள் “அத்தான், இன்னைக்கு எதுக்கு இவ்வளவு நேரம் கழிச்சு வறீங்க? உங்களை தேடுனேன் தெரியுமா?”, என்று கேட்டாள்.
அவனோ அவளை முறைத்துக் கொண்டு முகம் கழுவ சென்றவன் திரும்பி வந்து அவளுக்கு முதுகு காட்டி அமர்ந்து விட்டான். அவன் பாரா முகத்தைக் கண்டு அதிர்ந்து போனாள் தேன்மொழி. அவர்கள் மனமொத்து சேர்ந்து வாழ்ந்த பிறகு இப்போது தான் அவன் முதல் முறையாக கோப படுகிறான்.
வீட்டுக்கு வந்த உடனே முகம் கழுவியதும் அவளை கட்டி அணைத்து முத்தத்தை பொழிந்து அவள் வயிற்றில் தன் கைகளை வைத்து அவனுடைய குழந்தைகளையும் கொஞ்சுபவன் இன்று முகம் திருப்பிக் கொண்டு அமர்ந்திருப்பது அவளுக்கு வருத்தத்தைக் கொடுத்தது.
எதற்கு இப்படி இருக்கிறான் என்று தெரியாமல் குழம்பியவள் “அத்தான், என்ன ஆச்சு?”, என்று கேட்டாள்.
அவனிடம் இருந்து எந்த அசைவும் இல்லை. “உங்களை தான கேக்குறேன்? என்ன ஆச்சு? எதுக்கு கோபமா இருக்கீங்க?”
“நீ உன் இஷ்டத்துக்கு தானே இருப்ப? என் பேச்சை நீ கேக்காதப்ப, உன் பேச்சை நான் கேக்கணுமா?”, என்று கேட்டான் கதிர்.
காலையில் நடந்த பிரச்சனையே அவளுக்கு மறந்து போயிருந்ததால் “உங்க பேச்சை நான் என்ன கேக்கலை? நீங்க சொல்றதை கேட்டுட்டு தானே நீங்க பிடிக்காத சாப்பாடை கொடுத்தாலும் சாப்பிடுறேன்”, என்று கேட்டாள்.
“அதை மட்டும் செஞ்சா போதுமா? தினமும் கொஞ்ச நேரம் நட. வீடு பெருக்குன்னு சொல்றேன். ஆனா நீ கேட்டியா?”
[the_ad id=”6605″]
“அப்பாடி இதுக்கு தானா? நான் என்னமோன்னு நினைச்சு பயந்துட்டேன். அத்தான் இத்தனை மாசமும் நான் செய்யலையா? இப்ப என்னால முடியலை. தரையையே என்னால குனிஞ்சு பாக்க முடியலை. அப்புறம் எப்படி வேலை செய்ய? நடக்கணும்னு நினைச்சாலும் என்னமோ ஓட்டப் பந்தையத்துல ஓடின மாதிரி மூச்சு வாங்குது. ரொம்ப தூக்கம் வேற வருது. நான் என்ன செய்ய?”, என்று பாவமாக கேட்டாள்.
“நான் என்ன செய்யன்னா? நீ செய்யாம, நானா செய்ய முடியும்? நீ சின்ன சின்ன வேலைகள் செஞ்சா தான் சுகப் பிரசவம் ஆகுமாம். இல்லைன்னா ஆபரேஷன் தான் பண்ணணும்னு டாக்டர் சொன்னதைக் கேட்ட தானே?”
“அத்தான், அவங்க சொன்னது எனக்கு தெரியும். உங்க கவலையும் புரியுது. ஆனா என்னால முடியலை. இதுக்கு மேல நீங்க என்னை புரிஞ்சிக்கலைன்னா என்கிட்ட பேசாம முகத்தை திருப்பிட்டே இருங்க”, என்று சொல்லி விட்டு வெளியே சென்று விட்டாள்.
“அடப்பாவி கோப படுற மாதிரி நடிச்சா, அதுக்காவாது நடப்பான்னு பாத்தா கோப பட்டா படுன்னு சொல்லிட்டு போய்ட்டாளே”, என்று எண்ணிக் கொண்டு அமர்ந்திருந்தான்.
தேன்மொழியால் மாடி படி ஏற முடியவில்லை என்பதால் கீழே இருந்த ஸ்டோரூமை சுத்தம் செய்து தங்கள் அறையாக மாற்றி விட்டான் கதிர்.
தங்கள் அறையில் இருந்து ஹாலுக்கு வந்த தேன்மொழி கோபமாக சோபாவில் அமர்ந்தாள். அவள் வந்ததைக் கண்ட அன்னம் அவள் அருகில் வந்து அமர்ந்தாள்.
அப்போதும் தேன்மொழி அமைதியாக இருக்கவே “தேனு, என்ன ஆச்சு? எதுக்கு இப்ப முகத்தை தூக்கி வச்சிட்டு இருக்க?”, என்று கேட்டாள் அன்னம்.
….
“ஏட்டி, உன்னை தானே கேக்குறேன்? வாயில என்ன முத்தா வச்சிருக்க?”
“நானே கடுப்புல இருக்கேன் கிழவி. வாயை மூடிட்டு போயிரு”
“ரெண்டு உசுர வயித்துல சுமந்துட்டு இப்படி கோப படக் கூடாதுன்னு சொல்லிருக்கேன்ல தேனு?”
“என்ன ஆச்சு அத்தை?”, என்று கேட்டுக் கொண்டே அங்கு வந்தாள் வேணி.
“உன் மருமவளைப் பாரு. உர்ருன்னு உக்காந்து இருக்கா. என்னன்னு கேட்டுட்டு இருக்கேன்”
தேன்மொழிக்கு கண்ட நேரத்தில் பசி எடுக்கும் என்பதால் “என்ன ஆச்சு தேனு? பசிக்குதா? நான் ஏதாவது சாப்பிட கொண்டு வரவா?”, என்று கேட்டாள் வேணி.
[the_ad id=”6605″]
“போங்க அத்தை, எல்லாம் உங்களால தான். கண்ட நேரத்துல சாப்பாடு கொடுத்து என்னை குண்டா ஆக வச்சு இப்ப என்னால நடக்க கூட முடியலை. உங்க பிள்ளை என்னன்னா நான் சோம்பேறியா இருக்கேன்னு திட்டுராறு”
“இவ பசிக்குன்னு கேட்டு வாங்கி சாப்பிட்டுட்டு நம்ம மேல பழியை சொல்றாளே”, என்று எண்ணி அவள் மேல் கோப படாமல் “என் மருமகளை திட்டுனானா? எங்க அவன்? டேய் கதிரு.. கதிரு.. இங்க வா”,. என்று அழைத்தாள்.
“என்ன மா?”, என்று கேட்டுக் கொண்டே அங்கு வந்தான் கதிர்.
“எதுக்கு அவளை திட்டின?”
“ஏய், என்ன டி? இங்க வந்து வத்தி வச்சிட்டு இருக்கியா? அம்மா டாக்டர் சொன்னதை சொன்னேன்ல? இவ என்னடான்னா தூங்கிட்டே இருக்கா மா. நாளைக்கு இவளுக்கு தானே கஷ்டம். கொஞ்சம் உடமை அசைச்சு அசைச்சு வேலை செய்யலாம்ல?””
“நீ சொல்றது சரி தான் டா. அதை அன்பா சொல்லலாம்ல?”
“ஆமா,உன் மருமக அன்பால சொன்னாலும் கேட்டுட்டு தான் மறுவேலை பாப்பா. பொறுமையா தான் மா சொன்னேன்”
“கதிரு, அவ நிலைமையும் யோசிச்சு பாரு. நம்ம உடம்புல கொஞ்சம் சதை போட்டுட்டாலே நம்மளால சாதாரணமா இருக்க முடியாது. அவளுக்கு அப்படி தான் இருக்கும். நீ கொஞ்ச நேரம் நம்ம வீட்டு தோட்டத்துல அவ கையை பிடிச்சு நடக்க வச்சா அவ நடக்க போறா”, என்றாள் வேணி.
“ஆமா பேராண்டி, இந்த நேரத்துல அவளை கோப படுத்தாதையா?”, என்று அன்னம் சொன்னதும் அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு அங்கிருந்து சென்றான்.
அவன் சென்றதும் “உன் நல்லதுக்கு தான சொல்றான்”, என்று ஆரம்பித்து அவளையும் வறுத்தெடுத்தார்கள் மாமியாரும் மருமகளும்.
அறைக்குள் சென்ற பின்னரும் இருவருக்கும் இடையே எந்த பேச்சும் இல்லை. இரவு முழுவதும் ஒரே கட்டிலில் படுத்தாலும் இருவருக்கிடையே எந்த பேச்சும் இல்லை.
காலையில் தேன்மொழி எழுவதற்கு முன்பே கதிர் கிளம்பி போயிருந்தான். அவனை தேடிய கண்கள் அவன் இல்லை என்றதும் சிறிதாக கலங்கியது.
அவனா வந்து பேசட்டும் என்று எண்ணியவளுக்கு அவன் பேச வில்லை என்றதும் வருத்தமாக இருந்தது.
[the_ad id=”6605″]
அன்று மாலை அவன் அறைக்கு வந்ததும் “அத்தான்”, என்று அழைத்தாள்.
என்ன என்ற பார்வையை அவளை நோக்கி வீசினான். முதலில் இருந்த தேன்மொழி என்றால் “பெரிய மஹாராஜா இவரு. கண்ணால தான் பேசுவாரோ? பேசுனா பேசட்டும் இல்லைன்னா இப்படியே இருக்கட்டும்”, என்று எண்ணியிருப்பாள்.
இப்போதிருக்கும் தேன்மொழியோ கதிரின் காதலில் உருகி கரைந்தவள், அவன் நெஞ்சத்தில் மஞ்சம் கொள்பவள். அதனால் அவனுடைய விலகலைத் தாங்க முடியாமல் அவளே பேச்சை துடங்கினாள்.
“நாம வாக்கிங் போகலாம். கூட்டிட்டு போங்க”, என்று அவள் சொன்னதும் நம்ப முடியாமல் அவளைப் பார்த்தான்.
“நிஜமா தான் அத்தான் சொல்றேன். நீங்க பேசாம இருக்குறது கஷ்டமா இருக்கு. நான் நடக்கிறேன்”, என்று சொன்னதும் அவளை நெருங்கியவன் அவளை அணைத்துக் கொண்டான்,
அவளை விலகி இருந்தது அவனுக்கும் வருத்தமே என்று வார்த்தையால் சொன்னவன் அவளை கை பிடித்து தோட்டத்துக்கு அழைத்து சென்றான்.
அவள் கையைப் பற்றிக் கொண்டு மெதுவாக நடை பயிலும் போது வாய் வலித்தாலும் எதையாவது பேசிக் கொண்டே இருப்பான். அப்படி அவன் கதை சொல்லியும் சில நேரம் கொட்டாவி விட்டுக் கொண்டு அவனைப் பரிதாபமாக பார்ப்பாள்.
அவளை நோக்கி ஒரு முறை முறைத்தாலும் அவளுக்கு தூக்கம் வந்து விட்டதை உணர்ந்து சிறிது நேரத்திலே அவளுக்கு ஓய்வு கொடுப்பான்.
இப்படியே நாட்கள் நகர்ந்தது. இதற்கிடையில் ஆசைப் பட்டது போல ராதா கற்பமானாள். அதில் வீட்டில் உள்ள அனைவருக்கும் சந்தோசமே.
மரகதத்துக்கு மகளை வீட்டுக்கு அழைத்து சென்று சீராட்ட வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் அவளுடைய புகுந்த வீட்டிலே அவளை நன்றாக பார்த்துக் கொள்வதால் தினமும் வந்து மகளைப் பார்த்து விட்டு சென்றாள்.
ஒன்பதாம் மாதம் தேன்மொழிக்கு சீமந்தம் வைக்கலாம் என்று இரண்டு குடும்பங்களும் முடிவு செய்தது. ஒரு நல்ல நாளாக பார்த்தவர்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்தார்கள்.
சீமந்தம் அன்று வித விதமான சாப்பாடு சமைத்து மொத்தக் குடும்பமும் தேன்மொழி வீட்டுக்கு வந்தது. வளையல் போடலாம் என்று முடிவெடுத்து தேன்மொழியை அழைத்தார்கள்.
அறைக்குள் சென்ற கதிர் தேன்மொழியின் ஒப்பனையில் இமைக்க மறந்து அவளைப் பார்த்தான். அவர்களுடைய திருமண சேலையையே அவன் அணிந்திருந்தாள். திருமணத்தன்று அவளை ரசிக்க முடியாததால் இன்று ஆவலாக ரசித்தான்.
அதற்கான பதில் வினை அவள் முகத்தில் இல்லாமல், சிறு கலக்கமாக இருந்தது அவள் முகம். அவள் அருகில் சென்று “தேனு”, என்று அழைத்தான் கதிர்.
“அத்தான்”, என்று அழைத்து அவன் தோளில் சாய்ந்தவள் கண்களில் கண்ணீர் உற்பத்தியானது.
“என்ன தேனு மா, இப்படி சின்ன பிள்ளை மாதிரி பண்ணுற?”
“இன்னும் அஞ்சாறு மாசத்துக்கு நாம ஒண்ணா ரொம்ப நேரம் இருக்க முடியாதுள்ள? என்னை விட நீங்க ரொம்ப துடிச்சி போவீங்கன்னு எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. நைட் நீங்க என் வீட்ல தங்க முடியாது. பகல்ல வேலை இருக்குன்னு தோட்டத்துக்கு போகாம என்னைப் பாக்க வருவீங்களா?”
“உன்னைப் பாக்குறதை விட எனக்கு வேற வேலை முக்கியம் இல்லை தேனு”, என்றவன் குரலும் கலங்கி இருந்தது.
“இப்படி சொல்லிட்டு வராம இருந்தா நம்ம பிள்ளைங்க கிட்ட அப்பா கெட்ட அப்பான்னு சொல்லிக் கொடுத்துருவேன் பாத்துக்கோங்க”
“ஐயோ அப்படி எல்லாம் சொல்லிராத தேனு, கண்டிப்பா உன்னை பாக்க வருவேன் மா. உன்னையும் பிள்ளைகளையும் பிரிஞ்சு என்னால இருக்க முடியாது. சரி வா வெளிய கூப்பிடுறாங்க”, என்று சொல்லி அவளை அழைத்து சென்றான்.
அதன் பின் அனைவரும் அவளுக்கு நலங்கு வைத்து வளையல் போட்டு விட்டு அவளுக்கு உணவு ஊட்டி என்று பொழுது போனது.
என்ன தான் தேன்மொழி வீடு கதிர் வீட்டில் இருந்து இரண்டு தெரு தள்ளி இருந்தாலும் அவனை பிரிய முடியாமல் அவனைக் கட்டிக் கொண்டு அழுதாள் தேன்மொழி.
“உன் மருமகளுக்கு இன்னும் உன் மவனை பத்தி தெரியலை. அதான் அழுறா”, என்று வேணியிடம் சொன்னாள் அன்னம். வேணியும் புன்னகைத்தாள்.
பின் அனைவரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினார்கள். கண்ணன் கார் ஓட்ட அவன் அருகில் செந்திலும் பின் சீட்டில் தேன்மொழி நடுவில் அமர்ந்திருக்க அவளுக்கு இரு புறமும் ராதாவும் வைஷ்ணவியும் அமர்ந்திருந்தார்கள்.
தேன்மொழி சென்றதும் வீடே சிறிது அமைதியாக இருந்தது. யாரிடமாவது வம்பிழுத்து கொண்டே வீட்டை கலகலவென்று வைத்திருப்பாள். அவளுடன் சேர்ந்து தான் கீதாவும் வாயடிப்பாள். இன்று அவள் இல்லாதது அனைவருக்கும் சிறு தேடலைக் கொடுத்தது.
ஆனால் இது இயல்பு தான் என்பதால் அனைவரும் சற்று மனதை தேற்றிக் கொண்டார்கள். ஆனால் சிறு வயதில் இருந்தே அவள் பிரிவை சகிக்க முடியாத கதிருக்கு இருடல் ஓருயிர் என்று வாழ்ந்த பிறகு அவள் பிரிவை சகிக்க முடியுமா என்ன?
சும்மாவே அவளைத் தேடி ஓடுவான். இப்போது மட்டும் கேட்கவா வேண்டும்? அடுத்த நொடி ஒரு பையை எடுத்தவன் தன்னுடைய உடைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தான்.
அப்போது “கதிர் அண்ணா அம்மா சாப்பிட கூப்பிடுறாங்க”, என்ற தினேஷின் குரல் கேட்டது.
உடனே வெளியே வந்தவன் அமைதியாக சாப்பிட அமர்ந்தான். அனைவரும் சாப்பிடும் போது ஒரு அமைதியே அங்கு நிலவியது.
“என்ன அண்ணா? இந்த ஊர்ல தான தேனு இருக்கா? பிறகு எதுக்கு இப்படி பீல் பண்ணுற?”, என்று கேட்டான் செல்வா.
“அவனாவது பீல் பண்ணாம இருக்குறதாவது? என்ன பேராண்டி, உன் பொண்டாட்டியை பாக்கணும் போல இருக்கோ?”, என்று கேட்டாள் அன்னம்.
“ஆமா பாட்டி”
“அடேய், இன்னைக்கே போய் அவங்க வீட்ல நின்னுராத டா. வேணும்னா நாளைக்கு போ. இன்னைக்கு போக கூடாது”, என்று வேணி சொன்னதும் திரு திருவென்று விழித்தான்.
“இவன் முழிக்கிறதே சரியில்லையே. இப்பவே போகணும்னு நினைச்சியோ?”, என்று அன்னம் கேட்டதும் “சே, சே, நான் என்னமோ இப்பவே போகணும்னு பையில துணியை எல்லாம் எடுத்து வச்ச மாதிரி பேசுற? போ பாட்டி. சீமந்தம் முடிஞ்ச அன்னைக்கே போக கூடாதுன்னு எனக்கு தெரியாதா என்ன?”, என்று கேட்டான் கதிர்.
“அண்ணா, நீ சொல்லும் பதில் நம்பும் படியாக இல்லை. இருந்தாலும் நம்புறேன்”, என்று அவன் காதில் சொல்லி ஒரு முறைப்பை பெற்றுக் கொண்டான் செல்வா.
அங்கே தேன்மொழியும் கதிர் நிலையில் தான் இருந்தாள். “எல்லாரும் ஒண்ணா உக்காந்து சாப்பிடுவாங்க. அத்தான் சாப்பிடுவாங்களான்னு தெரியலையே?”, என்று எண்ணிக் கொண்டிருந்தாள்.
அவள் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் அவளிடம் வித விதமாக பேச்சுக் கொடுத்தும் அவள் அதற்கான பதிலை மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தாள். அவள் நிலை அறிந்து அனைவரும் அவளுக்கு தனிமை கொடுத்து விட்டு விலகினர்.
அன்று மாலை அவளை போனில் அழைத்தான் கதிர். “அத்தான்”, என்று உருகியவளின் காதலை உணர்ந்தவன் தன்னுடைய காதல் முற்றிலும் வெற்றி பெற்றதாக உணர்ந்தான்.
“தேனு, உன்னை ரொம்ப மிஸ் பன்றேன் டி”
“நானும் தான் தெரியுமா? சாப்டீங்களா, என்ன செய்றீங்கன்னே யோசிச்சிட்டு இருக்கேன்”
“சாப்பிட்டோம் தேனு”, என்று அவன் பதில் சொல்லியதும் பேச்சு வேறு பக்கம் தாவி தொடர்ந்தது.
செல்போனைக் கண்டு பிடித்தவரின் அருமை காதலர்களுக்கு மட்டுமே அதிகம் தெரியும். அது போல இரவு உணவு வரை இருவரும் பேசிக் கொண்டே இருக்க உணவை முடித்த பின்னரும் பேச்சு தொடர்ந்தது.
“சரி தேனு. ரொம்ப நேரம் முழிச்சிட்டு இருக்காத. நல்லா தூங்கு. நான் நாளைக்கு மதியம் பாக்க வரேன்”, என்றான்.
“மதியம் தானா?”, என்று மனதில் எண்ணியவள் சரி என்று சொல்லி போனை வைத்தாள். சிறிது நேரத்தில் வயிற்றில் இருக்கும் அவளுடைய பிள்ளைகளின் உதவியால் தூங்கியும் போனாள்.
ஆனால் தூங்காமல் விழித்திருந்த கதிரோ அடுத்த நாள் விடியலுக்காக காத்திருந்தான்.
விடிந்ததும் வீட்டில் இருந்தவர்களின் கிண்டலைக் கூட கண்டு கொள்ளாமல் ஏழு மணிக்கே தேன்மொழி வீட்டில் இருந்தான். அவன் வரவைக் கண்டு அனைவரும் திகைத்தாலும் அனைவருக்குமே மகளின் வாழ்க்கையை எண்ணி பூரிப்பே.
“வாப்பா, கதிர். அவ இன்னும் எந்திக்கலை. அத்தை எழுப்ப வேண்டாம்னு சொல்லிட்டாங்க. நீ உள்ள போய் பாரு. உனக்கு டீ போடவா?”, என்று கேட்டாள் செல்வி.
“வேண்டாம் பெரியத்தை. நான் அப்புறமா குடிச்சிக்கிறேன், நீங்க உங்க வேலையைப் பாருங்க”, என்று சொல்லி விட்டு அறைக்குள் சென்றவன் கண்களில் பட்டாள் தேன்மொழி.
ஒரு சைடாக படுத்திருந்தவள் நன்கு உறங்குகிறாள் என்பதற்கு அடையாளமாக அவள் மூச்சு ஏறி இறங்கியது.
கதவை சத்தம் இல்லாமல் பூட்டியவன் மெதுவாக அவளை நெருங்கினான். அவள் அருகில் படுத்தவள் அவள் நெற்றியில் முத்தமிட்டு தன்னோடு அவளை அணைத்துக் கொண்டு படுத்து விட்டான். அவள் இல்லாமல் ஒரு இரவையே கடக்க முடியவில்லை என்னும் போது இவ்வளவு அதிகாலையில் அவன் வந்தது ஒன்றும் ஆச்சர்யமில்லையே.
இரவு உறங்காததால் தன்னவளின் அருகில் கண்ணயர்ந்தவன் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றான். சிறிது நேரத்தில் தூக்கம் கலைந்த தேன்மொழி முதலில் அடைந்தது அதிர்ச்சியே. பின் ஆச்சர்யமும் சந்தோஷமும் போட்டி போட சந்தோசத்துடன் அவனை எழுப்ப எண்ணினாள்.
பின் அவனின் ஆழ்ந்த உறக்கத்தைக் கண்டு “அத்தான் நைட் எல்லாம் தூங்கிருக்க மாட்டாங்க. தூங்கட்டும்”,என்று எண்ணிக் கொண்டு அவன் எழும்பாதவாறு எழுந்து சென்றாள்.
முகம் கழுவி விட்டு வெளியே வந்தவளை கண்ட சகுந்தலா “கதிர் வந்திருக்கானாமே டி. அப்படியா? அக்கா சொன்னாங்க”, என்று கேட்டாள்.
“ஆமா மா, காலைலே வந்துட்டாங்க”
“இப்ப தெரியுதா, என் மருமகனோட அன்பைப் பத்தி”
“ஆமா மா”, என்று சொன்ன தேன்மொழி முகமும் பூரிப்பில் மலர்ந்தது. “ரெண்டு பேருக்கும் பால் தரவா?”
“எனக்கு காபி கொடேன் மா”
“நேத்தே அண்ணி சொல்லி தான் விட்டாங்க. சத்து மாவு கொடுத்தும் விட்டாங்க. உன் அண்ணி ராதாவுக்கும் கொடுத்து விட்டுருக்காங்க. ஒழுங்கா அதை தான் குடிக்கணும்”
“சரி சரி ரொம்ப பண்ணாத. அத்தானுக்கு காபி கொடு. அவங்களுக்கு பால் வேண்டாம்”
இருவருக்கும் சகுந்தலா கொடுத்ததும் அதை வாங்கியவள் “எனக்கு கொஞ்சமா காபி தாயேன்”, என்றாள்.