அத்தியாயம் 27
எபிலாக்….
சிற்பிகா நெற்றியில் வழிந்த வியர்வையை துடைத்துக் கொண்டவாறு.. அந்த மாடிப்படியின் கீழே மறைந்திருந்தாள்.. விழிகளோ அச்சத்தில் நாலாபுரமும் சுழன்றுக்கொண்டிருக்க… செவிகளோ சிறிய சத்தத்தையும் கூர்மையாக உள்வாங்கியது..
அப்பொழுது அவள் பதுங்கியிருப்பதை அறிந்த உருவம் அவளை அப்படியே பின்னிருந்தவாறு தூக்கிசெல்ல.. சிற்பிகா.. அச்சோ மாமு மாமு.. ப்ளீஸ் மாமு எனக்கு அதப்பார்த்தாலே பயமாயிருக்கு கை காலெல்லாம் நடுங்குது.. ப்ளீஸ் என்னைய விடுங்க.. என அலறினாள்..
ஹான் அப்படியா… நான்தான் இருக்கேன்ல அப்புறம் உனக்கென்ன பயம்.. என குறும்பாய் புருவம் உயர்த்தியவன்.. அவளை தங்களின் அறைக்குள் புதிதாக கட்டப்பட்டிருக்கும் இடத்திற்கு அழைத்து சென்றான்.. அங்கு நீண்ட நீச்சல்குளமிருக்க.. அதில் அகோரப்பசியில் வாயைத்திறந்து.. தன் கூர்ப்பற்களை காண்பித்தவாறு இறைக்காக ஓர் பெரிய சுறா காத்திருக்க.. அதில் தொப்பென்று சிற்பிகாவை போட்டு தானும் குதித்தான்..
ஆஆஆ… ஆஆஆஆ என வீரிட்டவாறு அதன் வாயில் விழுந்து எழுந்த சிற்பிகா.. குரங்கு குட்டி போல் அபய் மேல் எகிறி குதித்துக் கட்டிக்கொண்டாள்…
பிலிப்பைன்ஸில் சிற்பிகா ஷார்க்குக்கெல்லாம் பயப்பட மாட்டேன் என கூறி அவனை படுத்தியதை மனதில் பதிய வைத்த அபய்.. மகனுக்கு ஆறுமாதம் ஆகும் போது அவர்களின் அறையினிலேயே பெரிதாக மற்றும் ஆழமான ஓர் நீச்சல்குளத்தை கட்டினான்.. ஆனால் அதன் தரையில் ஓர் மிகப்பெரிய சுறா வாயை திறந்துக்கொண்டு இருப்பது போல் 3D தரைமட்டம் அமைதிருக்க… இன்றுதான் அதன் கடைசி கட்ட வேலை முழுமையாக முடிந்தது..
அதுவரை அங்கு அவளை அனுமதிக்காதவன்.. இன்று அவள் விழிகளை பொத்தி அழைத்து வந்தான்.. பெண்ணவளும் என்னவென்று அறிந்துகொள்ள மிக ஆவலோடு வந்தாள்.. ஆனால் அந்த சுறாவைப் பார்த்த நொடி.. அடுத்து பிடித்து வெளியே ஓடி ஒழிந்துக்கொள்ள.. அபய் தூக்கிவிட்டான்..
பயத்தில் இருந்த சிற்பிகா தான் இருக்கும் நிலையை உணரவில்லை.. ஆனால் சுயநினைவில் இருந்த அபயோ… தன்னுடைய கட்டுக்கடங்காத ஆண்மையின் வீரியத்தை அந்நிலையிலிருந்து அவளுக்கு காண்பிக்க.. சிற்பிக்கு அனைத்தும் மறந்து போனது… ஆனால் தப்பிதவறி சுறாவை பார்த்துவிட்டால் மீண்டும் பழைய கதைதான்…
இரவில் மட்டுமே அந்த நீச்சல் குளம் திறந்திருக்கும் பகலில் ஆட்டோமேட்டிக் லாக் போட்டிருப்பான்.. இருபக்கமும் கதவு போல் வந்து அதனை மூடிக்கொள்ளும்..
**************************
நான்கு வருடங்களுக்கு பிறகு…
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பழமை வாய்ந்த வன பத்ரகாளியம்மன் கோவிலில் தன் குடும்ப சகிதம் நின்றுகொண்டிருந்தாள் சிற்பிகா..
கோவில் குளமெல்லாம் சென்றிராத அபய்.. இப்பொழுது வாரம் தவறாது தன்னவளை கோவிலுக்கு அழைத்து செல்கிறான்..
சிற்பிகாவின் தாய்க்கு இந்த கோவிலின் மேல் தனி பக்தி.. அதனால் இன்னும் ஒருவாரத்தில் வரவிருக்கும் தன் மகளின் முதல் பிறந்தநாளிற்க்கு முன்பாக பொங்கல் வைப்பதற்காக வந்திருக்கிறாள்..
கூடவே அபயின் பெற்றோரும்.. சிற்பிகாவின் தந்தை லிங்கேஷ்வரரோடு நீரஜாவும் வந்திருந்தாள்.. அபிராமிக்கு அவள் செய்த பாவத்திற்க்கான தண்டனையை இறைவனே வழங்கிவிட்டார்.. இருவருடத்திற்கு முன்பு பக்கவாதம் வர.. அவர் கட்டிலிலும் சக்கரநாற்காலியில் தஞ்சமாகிவிட்டார்.. சிற்பிகா அவர்களிடம் ஒட்டிப்பழகவில்லை என்றாலும்.. என்ன ஏது என்றுகேட்டு.. தன் வீட்டில் நடக்கும் விஷேஷத்திற்கு அழைக்கிறாள்..
அதி வரவே மாட்டேன் என்று அடம்பிடிக்க அவளையும் மல்லுக்கட்டி கோவிலுக்கு அழைத்து வந்திருக்கிறாள் சிற்பிகா… அதியிடம் முன்பை விட நிறைய மாற்றம்.. ஆனாலும் அவளின் கம்பீரமும் கெத்தும் மட்டும் இன்றும் மாறவில்லை…
அபய் தன் ஒருவயது மகள் விண்காவை வைத்துக்கொண்டிருந்தான்.. விண்கா அப்படியே சிற்பியின் மறுபதிப்பு.. குணத்தில் கூட.. அதுனாலயே அபய்க்கு தன் மகள் மேல் கொள்ளை பிரியம்..
அவர்களின் மூத்த மகன் அஸிகரன்சிம்ஹா சக்சேனாவோ அபய் போல் தாயிடத்தில் உரிமை உணர்வும் அன்பும் அதிகம் கொண்டவன்.. யாரையும் அவளிடத்தில் விடமாட்டான் முக்கியமாக அபயசிம்ஹாவை.. விண்கா சிற்பிகா போல் இருப்பதால் அவளை மட்டும் விட்டுவிடுவான்..
ப்பா.. ப்பா என தன் பிஞ்சு விரலால் அபயின் கன்னத்தை தட்டிய விண்கா அவன் முகத்தை ஓரிடத்தில் திருப்ப.. அங்கு அஸி.. பொங்கல் வைத்துக்கொண்டிருக்கும் சிற்பிகாவின் முகத்தில் படிந்திருக்கும் வியர்வை துளிகளை தன் குட்டிகர்ச்சீப்பால் துடைத்து விட.. அதில் பெருமையும் மகிழ்வும் கொண்ட சிற்பி அவனை அள்ளியணைத்து முத்தத்தை வழங்கிக்கொண்டிருந்தாள்…
இதனை பார்த்து அபய் பல்லைக்கடிக்க.. அதி சிரித்தாள்… அதோடு.. ” என்ன அபி அஸி உனக்கே டஃப் கொடுப்பான் போல.. என நக்கல் வேறு செய்ய மகளை அவள் கையில் கொடுத்தவன்… மகன் மனைவியிடம் சென்றான்..
அஸி என்கிட்ட வா.. அம்மா வேலையா இருக்காங்கள்ல… டிஸ்டர்ப் பண்ணாத.. எனவும் புருவம் சுருக்கிய அஸி நோ டாடி.. நா ம்மாக்கு ஹெல்ப் பன்னுதேன்.. ம்மா சிம்முகுத்தி உனிக்கு ஹெல்ப் தானே செய்யுதேன்.. என மழலையில் கேட்க.. சிற்பிகா உருகிப்போனாள்…
ஆமாண்டா பட்டுக்குட்டி… என செல்லம் கொஞ்சிய சிற்பிகா தன்னவனை பெருமையாக பார்க்க அவனோ பொறாமையில் பொசுங்கிக்கொண்டிருந்தான்.. சிற்பிகா அபயை சிம்மு என்று கூப்பிடுவதைப் பார்த்து.. அது தன்னுடைய பெயர் என்றும் தன்னையும் அவ்வாறு அழைக்க வேண்டும் என்றும் அப்படியொரு அடம்.. அதுவே அபய்க்கு அவனை மிகப்பெரிய வில்லனாக எண்ண வைத்தது..
சிற்பி.. அப்பொழுது தான் தன்னவனின் மனநிலை புரிந்த சிற்பி நமுட்டு சிரிப்பு சிரிக்க.. இப்பொழுது அபயின் முறைப்பு சிற்பிகாவிடம் சென்றது..
ஒருவழியாக பொங்கல் வைத்து சாமிகும்பிடும் வேளை.. மேட்டுபாளையத்தின் பெரிய தனக்காரர் மற்றும் ஜமீன் குடும்பம் என போற்றப்படும் பெரிய குடும்பத்திலிருந்து அனைவரும் வந்திருந்தனர்…
மூன்று தலை முறை கொண்ட குடும்பம் அவர்களுடையது… இப்பொழுது அந்த குடும்பத்தின் கடைசி வாரிசும் அவர்களின் செல்ல இளவரசியுமான மூன்று வயது.. அதித்ரியின் பிறந்தநாள் அதற்காக அனைவரும் வந்திருந்தனர்…
அபய் குடும்பம் வந்த மறுநொடி அவர்கள் குடும்பம் வந்திருக்க.. பூசாரிக்கு ஏற்கனவே ஜமீன் குடும்பம் பரீட்சயமானதால்.. அவர்களை முதலில் கவனிக்க சென்றார்..
அப்போது அவரை சொடுக்கிட்டு அழைத்த அதி ” நாங்க இங்க நிக்கிறோம்ல அப்புறம் எங்க போறீங்க… முதல்ல எங்களுக்கான பூஜையை பண்ணுங்க… என அழுத்தமாக கூறினாள்…
அப்பொழுதுதான் அந்த பெரியகுடும்பம் அதியையும் அவளின் உடனிருப்பவர்களையும் பார்த்தது… அவர்கள் அனைவரும் அதியை பார்த்து ஓர் நொடி அதிர்ந்து பிறகு தங்கள் முகத்தை திருப்பிக்கொண்டனர்..
ஆனால் அங்கு நின்றிருந்த ஓர் இளம் தம்பதியினர் அதியையும் அவள் கரத்தில் ஓர் பிள்ளையை பாதுகாப்பாய் தூக்கி வைத்துக்கொண்டிருப்பதையும் வெறுப்பாய் ஓர் கணம் பார்த்தவர்கள் தங்கள் கரத்தில் உள்ள அதித்ரியை இறுக்கமாக அணைத்துக்கொண்டனர்..
இல்லம்மா.. இவா இந்த ஊருலயே பெரிய குடும்பம்.. என இழுக்க..
இப்பொழுது அபயசிம்ஹா தன் முழு உயரத்திற்கும் நிமிர்ந்து… அதுக்கு என ஒற்றை வார்த்தையை அழுத்தமாய் கேட்டு அவரை முறைக்க..
அவர் வாய் பாதிலேயே மூடிக்கொண்டது.. அப்பொழுது அங்கு நாற்பது வயதிலும் கம்பீரம் குறையாது நின்றுக்கொண்டிருந்த ஒருவர்.. முதல்ல அவங்களுக்கு முடிச்சுடுங்க என கூற.. பூசாரி நிம்மதியுடன் அபய் வீட்டினர் அருகே சென்றார்…
சாமிக்கு அர்ச்சனை நடக்க அனைவர் கவனமும் அம்மனிடத்தில் இருந்தது.. ஆனால் அஸியின் கவனமெல்லாம்.. மெழுகு பொம்மை போல் கொழுக்கொழுவென்று இருந்த அதித்ரியிடம் இருந்தது.. அவன் தன் முன்னால் இருந்த ரோஜா பூவை எடுத்து அதித்ரியிடம் எரிந்தான்…
அதற்கு அதித்ரி அவனை முறைக்க அஸியோ அதனை சட்டை செய்யாது பிளையிங் கிஸ் கொடுக்க.. கோபத்தில் முகம் சிவந்த அதித்ரி.. ப்பா.. இவன் எனிக்கு ப்ச் ததான் என கத்தவும் அனைவர் கவனமும் அவர்களிடம் சென்றது..
உடனே அதித்ரியை தூக்கி வைத்திருந்தவன்.. அஸியை கோபமாய் பார்க்க.. அவனோ தோளைக் குலுக்கி அனைவரும் பார்க்கும் போதே அவள்மேலே பூவை தூக்கிப் போட.. சிற்பி.. ஷ்ஷ் அஸி என்ன பண்ற.. என மகனை அடக்கி மற்றவர்களை சங்கடமாய் பார்த்தாள்..
ப்ச் இப்போ அஸிய ஏன் திட்டுற சிற்பி.. ஹி இஸ் ஜஸ்ட் கிட்.. என அழுத்தமாக கூறி அஸியை பார்க்க.. அவனோ அதியை பார்த்து கண்ணடித்து ஹைபை கொடுத்தான்..
சிற்பி அபயை பார்க்க.. அவனும் மகனை போல் தோளைக் குலுக்கி.. இட்ஸ் நாட் அ பிக்டீல் என்றவாறு எதிரில் உள்ளவர்களை திமிராய் பார்த்து சென்றான்… அவனோடு அதியும் ஓர் பார்வை பார்த்து செல்ல அஸி பை என அனைவரையும் பார்த்து கையசைத்து சென்றான்…
சிற்பிகா ” சாரிங்க.. அவன் கொஞ்சம் அவங்க அப்பா மாதிரி என சங்கடமாய் கூற… அந்த நாற்பது வயது மனிதர்.. ஹ்ம்ம் பரவாயில்லமா சின்ன பிள்ளை தானே எனவும் அவள் புன்னகையோடு மற்றவர்களை பின்தொடர்ந்தாள்…
அபயசிம்ஹா சிற்பிக்கும் அவன் குடும்பத்தார்க்கு மட்டுமே அன்பானவன்.. மற்றபடி வெளியில் பழைய அபயசிம்ஹா சக்சேனாதான்… அது புரிந்த சிற்பியும் அவனிடத்தில் எதுவும் கேட்கவில்லை..
வெளியே வந்த அதி.. சற்று நேரத்தில் உள் மனது உந்த திரும்பினாள்.. அங்கு அவள் ஈன்றெடுத்த.. அவளின் மறுபதிப்பாய் விளங்கும் அதித்ரி கொள்ளை கொள்ளும் சிரிப்புடன் தன் தந்தையின் தோளில் சாய்ந்து மழலையில் பேசியவாறு இருக்க.. அவள் தந்தை அதனை அன்பொழுக பார்த்துக்கொண்டிருந்தான்…
அப்பொழுது அதித்ரியின் கவனம் தங்களையே பார்த்துக்கொண்டிருக்கும் அதியின் மேல் பட.. அவள் தந்தையின் பார்வையும் அங்கே சென்றது.. ஆனால் இதுவரை முகத்தில் குடிக்கொண்டிருந்த மகிழ்ச்சி மறைய அவளை வெறுமையாய் பார்த்தான்..
அதியும் அவர்கள் இருவரையுமே பார்த்துக்கொண்டிருக்க.. அப்பொழுது அங்கு வந்த அபய்.. அவள் தோளில் கைப்போட்டாவாறு அழைத்து செல்ல.. அவளும் இவர்களை ஒருமுறை திரும்பி பார்த்து.. அபயின் பின்னே சென்றாள்…
பாதுகாவலர்கள் படை சூழ.. செல்லும் அதியையே அந்த மொத்த குடும்பமும் பார்த்துக்கொண்டிருந்தது… முக்கியமாக அதித்ரியும் அவள் தந்தையும்….
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.