அத்தியாயம் 9
சுஜாதா தன்னெதிரில் அமர்ந்திருந்த அபய்யை ஆராய்ச்சியாக பார்த்துக்கொண்டிருந்தாள்.. ” ரதன் இவன் என்ன திடிர்னு ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொல்றான்.. அதுவும் ஒருமாசத்துக்குள்ள.. இது உண்மையா இருக்குமா.. இல்லை ஒருவேளை உங்க மகன் அவனுக்கு தகுந்த மாதிரி ஒரு அலட்டிய பார்த்துட்டானா.. என சுஜாதா தன்னருகில் அமர்ந்திருந்த கணவனின் காதைக் கடிக்க.. இருக்கும்.. இருக்கும் என பலமாக தலையசைத்தார்.. சஞ்சீவ்ரதன்.
சுஜாதா ” அபய் என்ன திடிர்னு வந்து ஒரு மாசத்துக்குள்ள கல்யாணம் பண்ணனும்னு சொல்ற.. யாரு அந்த பொண்ணு.. என்ன பன்றா.. அவ பேமிலி பேக்ரௌண்ட் என்ன.. நான் பொண்ண பார்த்து ஓகே சொன்னப்பிறகுதான் எல்லாம்.. என கூறிக்கொண்டே செல்ல.. அபய் தன் தாயை ஓர் பார்வை பார்த்தான்.. அதில் அவர் வாய் தானாக மூடிக்கொண்டது..
” மாம் காம் டவுன்.. நீங்க எதை நினச்சு இவ்வளவு கண்டிஷன்ஸ் போடுறீங்கன்னு தெரியும்.. சோ டைரக்ட்டாவே சொல்றேன்.. அவ என்கூட இருந்த பொண்ணுங்க மாதிரி இல்லை… மத்ததெல்லாம் அவ நைட்டு வந்ததுக்கு அப்புறம் அவக்கிட்டயே கேட்டுக்கோங்க.. அண்ட் நீங்க சம்மதிச்சாலும் இல்லைன்னாலும் ஒருமாசத்துக்குள்ள மேரேஜ் நடக்குறது கன்பார்ம்…” என்று அழுத்தமாக கூறிவிட்டுச் செல்ல.. சுஜாதா தன் கோபத்தையெல்லாம் அப்பாவி கணவனிடம் காண்பிக்க ஆரம்பித்தார்..
” பார்த்திங்களா எப்படி பேசிட்டு போறான்னு.. எனக்கு அவள பிடிக்க வேண்டாம்மா.. எல்லாம் இவன் இஷ்டத்துக்கு தான் நடக்கனுமா.. அப்போ அம்மா அப்பான்னு நம்ப எதுக்கு இருக்கிறோம்.. என்ன ரதன் நான் இவ்வளவு பேசுறேன்.. நீங்க எந்த ரியாக்க்ஷனும் இல்லாம இருக்கீங்க ” என கடுப்பாய் கேட்டாள்..
” சுஜா.. அபய் தான் நம்ப நினைக்கிற மாதிரியான பொண்ணு இல்லன்னு சொல்லுறான்ல.. வரட்டும் பார்க்கலாம்.. ” என அவரை அமைதிப்படுத்தினார்..
************************************************
அபயின் கெஸ்ட் ஹௌசில்… சிற்பிகா சோகாப்பதுமையாய் அமர்ந்திருந்தாள்.. நேற்றிலிருந்து இந்தக்கணம் வரை அபய் வீசிச்சென்ற சொற்களே.. அவளை முழுவதுமாய் ஆக்கிரமித்திருந்தது.. ஒன்பது வருடமாய் அவனை தான் மானசீகமாக காதல் கொண்டிருக்க… அவனோ மலர் விட்டு மலர் தாவும் வண்டாய் சுற்றிக்கொண்டிருக்கிறான்.. என நினைத்து விரக்தியாய் புன்னகைத்தாள் சிற்பிகா. இருந்தும் அவள் இத்திருமணத்திற்கு ஒப்புக்கொண்டாள்.. எதற்காக?
அவர்கள் கூறியது போல் தன் வீடே அவளுக்கு பாதுகாப்பு இல்லைதான்.. இருந்தும் ஒன்பது வருடங்கள் அங்குதான் வாழ்ந்து வந்தாள்.. அவளுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அவளது தோழி ரூபாலி அவர்கள் யாரையும் சும்மாவிட்டிருக்க மாட்டாள்..
ஒருவேளை அபயின் மிரட்டலுக்கு பயந்து இத்திருமணத்திற்கு சம்மதித்தாள் என நினைத்தால் அதுவும் தவறுதான்..
சிற்பிகா அபயின் வார்த்தைகளால் திகைப்பும் ரணமும் கொண்டாளே தவிர பயம் கொள்ளவில்லை..
சிற்பிகா இத்திருமணத்திற்க்கு சம்மதித்தற்கான முழுமுதற்க் காரணம் தன்னவன் மேல் அவள் வைத்த நேசத்திற்காக மட்டும்தான்.. அவனைப் பற்றிய உண்மைகள் அனைத்தையும் அவன் வாயாலேயே கடுமையாக கூறியபின்பும்.. அந்த அசுரன் மேல் இவள் வைத்த நேசம் சிறிதும் குறையவில்லை… மாறாக கூடியிருக்கிறது என்பதுதான் மிகப்பெரிய வேடிக்கை…
அபய் தன்னைப்பற்றிய உண்மையை மறைத்து பொய்யாக நடித்து அவளைக் கல்யாணம் செய்திருக்க முயற்ச்சித்திருக்கலாம்.. தன் மானத்தை காப்பாற்றியவனை எந்த பெண்ணும் மறுக்க மாட்டாள்.. ஆனாலும் அவன் தங்கள் உறவை பொய்மையின் அடித்தளத்துடன் ஆரம்பிக்காமல்.. உண்மையை அடிப்படையாக கொண்டு ஆரம்பிக்க நினைத்திருக்கிறான் என அவனைப் பற்றி பெருமையாக நினைத்து.. நினைத்து மாய்ந்து போனாள் பெண்ணவள்..
அதனால் சிறிது நேரமட்டும் தன் நிலையை எண்ணி வருத்தம் கொண்டவள்.. கிடைக்க மாட்டானா என ஏங்கியவன்.. கனாவில் மட்டுமே கரம் பிடிக்க இயலும் என நினைத்தவன்.. தன் கண் முன்னால் இருக்கவும்.. அவளவனை நிகழ்வில் கரம் பிடிக்கும் நாளுக்காய் காத்திருக்க தொடங்கினாள்..
அப்பொழுது அவளது அறையினுள் நுழைந்த அதி.. ” இந்தா இதுல உனக்கான ட்ரெஸ் இருக்கு.. டின்னருக்கு இதத்தான் போடனும்.. போயி உனக்கு கரெக்ட்டா இருக்கான்னு போட்டுப்பாரு.. என அவளிடம் பையை தூக்கிப்போட.. அதனைப் பிடித்தவள் அமைதியாய் அங்கிருந்து நகர்ந்தாள்..
அதி அங்குள்ள சோபாவில் கால்மேல் கால் போட்டு அமர்ந்தவாறு போனில் மூழ்கியிருக்க.. அக்கா என்றழைத்தவாறு அங்கு வந்தாள் சிற்பிகா..
அதி ” என்னைய எப்படி கூப்பிட்ட.. என புருவம் சுருக்கி முறைத்தவாறு கேட்க.. சிற்பிகா விழித்தாள்..
அக்கான்னு.. என இழுத்தாள் சிற்பிகா.. திட்டிவிடுவாளோ என்ற பயத்துடன்..
என்னைய பார்த்தா உனக்கு அக்கா மாதிரி இருக்கா.. என்று முறைத்தவள்.. அக்கா சொக்கா எல்லாம் வேணாம்.. கால் மீ அதி.. அதுவும் நீ அபயோட மனைவியாகப் போறதால மட்டும்தான்.. என்று அதிகாரமாய் கூற பாவம் போல் தலையசைத்தாள் சிற்பிகா.
அப்பொழுது அபய் அதிக்கு போன் செய்தான்.. ” சொல்லு அபி.. ”
……
ட்ரெஸ்.. பக்காவா பொருந்திருக்கு.. அபி.. பரவாயில்லை நல்லா கவனிச்சுருக்க.. என நல்லாவில் அழுத்தம் கொடுத்து அதி கூறியவுடன்.. சிற்பிகா முகம் செங்கொழுந்தாக.. அதனை ஆச்சரியமாக பார்த்தாள் அதி..
…..
ஓகே நான் கூட்டிட்டு வந்துடுறேன்.. என அதி போனை வைதக்க.. சிற்பிகா கேள்வியாக அதியைப் பார்த்தாள்..
அபிக்கு மீட்டிங் இருக்காம்… அதுனால நம்பள பர்ஸ்ட் போக சொன்னான்.. என்றதும் சிற்பிகாவின் முகம் சோர்ந்தது..
***********************************************
அதி காரை ஓட்டியவாறு சிற்பிகாவை பார்த்தாள்.. ஏசி காரிலும் வியர்வை அரும்ப அமர்ந்திருந்தாள்.. அதுவே அவளுடைய பயத்தைச் சொல்ல.. தன்னறியாது அவளுக்கு ஆறுதல் கூறத்தொடங்கினாள் அதி..
” ஏன் இப்போ பயப்படுற.. எல்லாம் அபி பார்த்துப்பான்… சுஜா ஆன்ட்டி அண்ட் அங்கிள் ரெண்டு பேரும் எங்கள மாதிரி கிடையாது.. ரொம்ப நல்லவங்க.. ” என அதி நக்கலாக கூறவும்.. சிற்பிகா தன் பயம் குறைந்து மெல்ல புன்னகைத்தாள்..
மாளிகைக்குள் அதியின் ப்ளூ கலர் ரேஸ் கார் நுழைந்த மறுநொடி.. அபயின் காரும் நுழைந்தது.. இருவரும் போட்டி போட்டுக்கொண்டு முன்னே செல்ல.. சிற்பிகா பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்தாள்…
நான்கு சக்கரமும் தேயுமளவிற்கு இருவரும் பிரேக்கை அழுத்தி நிறுத்த.. சிறு நெருப்பு பொறிகளுடன் கார் நின்றது..
காரிலிருந்து முதலில் இறங்கிய அதி.. ” பெர்வ்பெக்ட் டையமிங் என்றவாறு அணைத்துக்கொள்ள.. அபயும் எதிர்க்கொண்டு அணைத்தான்.. ஆனால் சிற்பிகா என்றொரு ஜீவனோ கார் வந்த வேகத்திலும்.. நின்ற வேகத்திலும் தலைசுற்றி தள்ளாடியவாறு கீழே இறங்க.. அவளின் இடையை அழுத்திப்பிடித்து தன்னுடன் நெருக்கிய அபி.. நாட் பேட் என அவளின் அலங்காரத்தை புகழ்ந்தான்..
அதியின் தோளில் ஒரு கரத்தையும்.. சிற்பியின் இடையில் ஒரு கரத்தையும் போட்டவாறு அபய் உள்ளே வர.. சுற்றியிருந்த வேலையாட்களின் பார்வை யாவும் இவர்களின் புறம் தான் இருந்தது..
இளநீலம் வண்ணத்தில் நெட் துணியாலான சோளியில்.. கழுத்தில் அணிகலன் யாவும் அணியாது.. காதில் மட்டும் வெள்ளை ஜிமிக்கி அணிந்து தேவதை போல் திகழ்ந்த சிற்பிகாவை பார்த்தவுடன் சுஜாதா பிளாட்.. இருந்தும் அதனை வெளியில் காண்பிக்காமல் கெத்தாகவே அமர்ந்திருந்தார்..
” உன் பேரு என்னம்மா.. என சஞ்சீவ்ரதன் கனிவாக கேட்க.. சிற்பிகாவின் மனம் அந்த கனிவில் உருகியது.. ஏனெனில் அவளின் தந்தையிடம் கூட இக்கனிவை அவள் கண்டதில்லை..
” சிற்பிகா…. ”
” சிற்பிகா ரொம்ப நல்ல பேரு.. உனக்கு பொருத்தமான பேராத்தான் வச்சுருக்காங்க.. ”
சுஜாதா ” நீ என்ன பண்ற.. உங்க அப்பா அம்மா எல்லாம் என்ன பன்றாங்க.. ”
அதி ” ஆன்ட்டி அவ கிளாசிக்கல் டான்ஸர்.. நீங்க கூட கேள்வி பற்றுப்பிங்க.. சிற்பிகா லிங்கேஸ்வரன்னு.. அவதான் இவ.. ” எனவும் சுஜாதாவின் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தது.. அவருடைய லேடீஸ் கிளப்பில் நிறைய பேர் சிற்பிக்காவைப் பற்றி புகழ்வதைக் கேட்டிருக்கிறார்..
” ஒஹ்… உனக்கும் அபய்க்கும் எப்படி பழக்கம் லவ் பண்றிங்களா ” என நூல் விட்டுப்பார்த்தார்…
” மாம் லவ்வு கிவ்வு எல்லாம் இல்லை.. டூ டேஸ் முன்னாடி நம்ப ஹோட்டல்ல தான் இவள மீட் பண்ணேன்.. பார்த்ததும் பிடிச்சிருந்தது.. இவ என்கூட சுத்துற பொண்ணுங்க டைப் இல்லன்னு தெரிஞ்சது.. சோ மேரேஜ் ப்ரோபோசல் கொடுத்தேன்.. அக்ஸ்ப்ட் பண்ணிக்கிட்டா… என சிற்பிகாவைப் பற்றிய தன் எண்ணத்தை அவன் வெளிப்படையாக கூறினான்..
அதைக்கேட்ட சுஜாதா பாவமாக தன் கணவனைப் பார்க்க.. அவரோ உனக்கு இது தேவையா என முறைத்தார்.. சிற்பிகாவோ யாரின் முகத்தையும் பார்க்க இயலாது.. சிவப்பேறிய கன்னங்களுடன் கீழே குனிந்திருந்தாள்..
அபயும் அதியின் இவர்களின் செயலை கண்டு கேலியாக தங்களுக்குள் நகைத்துக் கொண்டனர்…
ஒருவாறு அனைத்தும் நல்லபடியாக முடிந்தது.. சுஜாதாவிற்கு சிற்பிகாவை விட நல்லப்பெண் தன் மகனுக்கு கிடைக்கமாட்டாள் என எண்ணியவர்.. அதே நேரம் தன் மகன்.. ஒழுக்கத்தில் சற்றும் அவளுக்கு பொருத்தமில்லை என்பதையும் நினைத்து வருத்தமடைந்தார்…
************************************************
லிங்கேஸ்வரன் வாயெல்லாம் பல்லாக அமர்ந்திருந்தார்.. பார்வை கூட நொடிக்கொருமுறை சிற்பிகாவை பாசத்தோடு வருடியது.. பின்னே எவ்வளவு பெரிய சம்பந்தம்.. அதுவும் சக்சேனா குழுமத்தின் வாரிசு அபயசிம்ஹா சக்சேனா என்றால் சும்மாவா.. அனைவருக்கும் சிம்மசொப்பனமாய் திகழ்பவன் தன் மூத்த மாப்பிளை என்ற எண்ணமே அவரை வானத்தில் பறக்க வைத்தது..
சஞ்சீவ்ரதன் ” இந்த மாசம் கடைசில மேரேஜ் வச்சுக்கலாம்.. அப்புறம் மறுநாள் கிராண்டா ஒரு ரிஷப்ஷன்.. மேரேஜ் இங்க நடக்கட்டும்.. ரிஷப்ஷன் பெங்களுர்ல வச்சுக்கலாம்.. ” என அவர் கூறுவதெற்க்கெல்லாம் பூம் பூம் மாடு போல் தலையாட்டினார்.. சிற்பிகாவின் அன்புத் தந்தை.. பின்னே கோடீஸ்வர சம்பந்தியல்லவா..
ஆனால் இவர் செய்யும் கூத்தையும்.. அங்கு நடக்கின்ற அபய் சிற்பிகா திருமண ஏற்பாட்டையும்.. ஒரு சில விழிகள் வெறுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தது..
அதில் முதலில் இருப்பது சிற்பிகாவின் தங்கை நீரஜாவும் ராஜாங்கத்தின் மனைவியும் தான்.. சிற்பிக்கு கிடைக்கப்போகும் ராஜ வாழ்க்கையை எண்ணி அவர்கள் வயிறெரிந்துக் கொண்டிருந்தார்கள்.. அடுத்து தன் திட்டமெல்லாம் மண்ணோடு மண்ணாகி.. அபயின் சில கவனிப்பால் உடம்பெல்லாம் புண்ணாகி உட்கார்ந்திருந்த ராஜாங்கம்…
இப்பொழுதும் அபயசிம்ஹா சக்சேனாவை சந்தித்த நிகழ்வை எண்ணினாலே ராஜாங்கத்தின் உடல் வெளிப்படையாக.. நடுங்கத் தொடங்கியது.. கோடி ருபாய் வந்த மிதப்பில்… பாரில் தண்ணியடித்துக் கொண்டு மப்பில் இருந்தவரை அபயின் ஆட்கள் தூக்கிக்கொண்டு வந்தனர்.. முதலில் வெளிக்காயம் படாதவாறு ஒரு நாள் முழுவதும் ராஜாங்கத்தை அபயின் ஆட்கள் வச்சுசெய்ய கத்தக்கூட தெம்பில்லாமல் தொய்ந்து போனார்.. அதுக்கூட பரவாயில்லை.. யார் அடிக்கிறார்கள்… எதற்க்காக அடிக்கிறார்கள் என்பதுக் கூட தெரியாமல் மனிதர் நொந்துவிட்டார்..
இனிமே சிற்பிகா பக்கம் உன் பார்வை போச்சு இத விட பயங்கரமா கிடைக்கும் என்ற குரலில் மெலிதாக கண்களை திறக்க.. அங்கு முழு ராட்சஷன் போல் முகத்தில் கோபக்கனலை தேக்கி நின்றிருந்தான்.. அபயசிம்ஹா சக்சேனா.
அய்யா நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டிங்க அவ என் தங்கச்சி மக என மேற்கொண்டு என்ன சொல்ல வந்திருப்பாரோ அதற்குள் அவர் வாயினுள் துப்பாக்கி நுழைந்திருக்க.. ராஜாங்கம் பயத்தில் உறைந்து போனார்..
இங்க பார்.. எல்லாம் எனக்கும் தெரியும் தேவையில்லாம என் டைம வேஸ்ட் பண்ணாத.. இப்போ சிற்பிகா என் கஸ்டடில இருக்கா.. இன்னும் ஒன்மன்த்ல அவளுக்கும் எனக்கும் கல்யாணம்.. அத சொல்லத்தான் உன்னைய வர சொன்னேன்.. என்று மட்டும் கூறிச்சென்றான்..
அவன் சென்ற மறுநொடி பாஸ் பேசுறப்ப குறுக்க பேசுவியா என அடுத்த டோஸ் விட மனிதர் மயக்கத்திற்கு சென்றுவிட்டார்.. அடுத்து அவர் கண்விழிக்கும் போது கோயம்புத்தூரில் தன் வீட்டில் இருந்தார்..