“அப்போ இருந்த மாதிரி எந்த நெருடலும் இல்லாம உன்னால நேசிக்க முடியலனு நினைச்சா நீ முட்டாள் குரு! என்னை நீ பெஸ்ட் அப்பான்னு சொல்லுவ தானே? நான் அப்படி இல்லை! உன் அம்மாவை கேளு அவளுக்கு என் மேல எவ்வளவு வருத்தம்னு சொல்லுவா. நான் ரொம்ப சுய நலவாதி குரு, என்னோட மனசு, என் நேர்மைனு யோசிச்சு உங்களை எல்லாம் கஷ்டப்பட வைச்சேன்.” என்றதும் சட்டென்று அப்பாவின் கை பிடித்தான் குரு.
“அப்படியெல்லாம் இல்லப்பா!” என்றான் அவசரமாக. அப்பாவை அவரே குறைத்து பேசினால் கூட குருவால் தாங்க முடியவில்லை.
“இல்லடா! நிஜம்னு ஒன்னு இருக்கு, ஒரு கணவனா என்னோட முடிவு குடும்பத்தை பாதிக்கும்ன்ற பட்சத்துல, உன் அம்மாவை கேட்டிருக்கணும், அவ சொன்னதை கேட்காம அவளை கஷ்டப்படுத்திட்டேன், சிவா அவனை நான் சின்ன பையனா பார்த்தது. இப்போ அவன் முடிவை அவனே எடுக்கிற அளவு வளர்ந்துட்டான். அவனை பொருத்தவரை நான் ஜீரோ! அன்னிக்கு இருந்த அதே ஆளோ, சூழ் நிலையோ இன்னிக்கு இல்ல! உன் அம்மாவுக்கு என் மேல கோவமோ நெருடலோ இல்லனு நினைக்கிறியா?” என்று கேட்கவும் குரு புரியாமல் பார்த்தான்.
“அன்னிக்கு இருந்த மாதிரியே உன் அம்மாவோட அன்பை நான் எதிர்ப்பார்க்க முடியாது, அப்போ எங்க வயசு, வாழ்க்கை எல்லாமே வேற! அதுக்காக அன்னிக்கு மாதிரி இல்லைனு இன்னிக்கு என்னால இழக்க முடியாது! அத்தனை வருஷத்தை தனிமையில இழந்திருக்கேன் நான், பழசை நினைச்சு நினைச்சு இருக்க நேரத்தை வீணாக்கனுமா சொல்லு?” என்று கேட்டார்.
“இல்லை” என்பதாக குரு தலையசைத்தான்.
“சிவா நினைச்சா என்னை வெறுக்கலாம், உனக்கு செஞ்சதுல கால்வாசி கூட ஒரு அப்பாவா நான் அவனுக்கு செஞ்சதில்லை. ஆனாலும் அவன் என்னை வெறுக்கல, எல்லாத்தையும் அப்படியே அக்செப்ட் பண்ணிக்கிறான். இப்போ எப்படி இருந்தா சந்தோஷமா இருக்கலாமோ அப்படி இருக்கான். அவனால நானும் கொஞ்சம் மனசு அமைதியோட இருக்கேன்.”
“வாழ்க்கையில நம்ம நினைப்போம் இதெல்லாம் நடந்திருக்க வேண்டாம்னு. நமக்கு பிடிச்ச விஷயங்கள் விட விரும்பாத, பிடிக்காத விஷயங்கள் தான் வாழ்க்கையை எதிர்கொள்கிற தைரியத்தையும் பக்குவத்தையும் நமக்கு தந்திருக்கும். அதுதான் நம்மை உருவாக்கி இருக்கும், மத்தவங்களை விட வேறுபடுத்தி காட்டும். நடந்ததை விடு, அதோட பாதிப்பினை விட்டுட்டு படிப்பினையை எடுத்துக்கணும்.”
“எல்லாமே எப்பவும் க்ரிஸ்டல் க்ளீயரா இருக்காது குரு , எல்லா உறவுலயும் கோவம், வருத்தம், கண்ணீர் எல்லாம் இருக்கும்! அதை விட அதிகமா அன்பு இருக்கணும்! உனக்கு எது சந்தோஷமோ அதுவா இரு! சந்தோஷம் தரவங்களோட இரு! புரிஞ்சதா? யார் கண்டா? இன்னிக்கு விட இன்னும் பத்து வருஷம் அப்புறம் நீ தென்றல் மேல வைச்சிருக்க அன்பு இன்னும் பலமடங்காகும். எனக்கு உங்கம்மா மேல இருக்க மாதிரி” என்று மகேந்திரன் புன்னகையுடன் சொல்ல, குரு முகத்திலும் பிரதிபலித்தது அந்த புன்னகை.
“உங்ககிட்ட பேசின அப்புறம் ஐ பீல் பெட்டர், தேங்க்ஸ்ப்பா” என்று குரு அப்பாவை இறுக்கமாக அணைத்துக் கொண்டான். அவரிடம் பேசிய பின் தெளிவு என்பதை விட, மிகவும் அமைதியான ஒரு மன நிலையில் இருந்தான். இவ்வளவு நேரம் இருந்த குழப்பம் குறைந்திருந்தது, புதிதாய் நேசி என்று மனதிடம் சொல்லிக்கொண்டான்.
“டேய்! கொஞ்சறதெல்லாம் இருக்கட்டும், காதலிக்கிறவனையும் கட்டீங் போடுறவனையும் நம்ப முடியாது. நினைச்சு நினைச்சு மாத்தி பேசுவீங்க, இப்போ கரெக்டா சொல்லு, தென்றல் வீட்ல பேசலாமா வேண்டாமா?” என்று மகேந்திரன் மகனை அணைப்பில் இருந்து விலக்கி கேட்க
“பேசுங்கப்பா” என்றான் புன்னகையுடன், தெளிவாக.
“உடனே எல்லாம் மாறிடாது, எப்பவும் நமக்காக கொஞ்சம் டைம் கொடுக்கணும் ! உனக்கு நீயே டைம் கொடு, உனக்காக! எல்லாம் சரியாகிடும்! நீயே பாரு இதெல்லாம் மறந்து நீ கண்டிப்பா சந்தோஷமா இருப்ப குரு” என்று மகேந்திரன் மகனின் தோள் தட்டினார். குரு தலையசைக்க
“சரி வா போகலாம், லேட்டாச்சு” என்று மகனையும் கீழே அழைத்துப் போனார். மகேந்திரன் தென்றலுக்கு அடுத்த நாள் அழைத்து அவள் சித்தப்பா எண்ணை வாங்கிப் பேச, மகாதவேன் அன்றே மனைவியுடன் குருவின் வீடு வந்துவிட்டார். இவ்வளவு நாளும் அதற்குத்தானே காத்திருந்தார். குரு தென்றலின் திருமணத்தை இன்னும் மூன்று மாதத்தில் நடத்திவிடலாம் என்று பேசி முடிவு செய்தனர்.
குரு தென்றல் குறித்து பேச்சு ஓடினாலும், குரு தென்றலிடம் அதன் பின் பேசவில்லை. அப்பா சொன்னது போல், அவசரம் கொள்ளாமல் அவனுக்காக, அவன் தென்றலுக்காக அவகாசம் கொடுத்துக் கொண்டான். எதையும் யோசித்து மனதினை குழப்பாது, பொறுமையாக காலத்தின் கை பிடித்து காதலின் துணை கொண்டு காத்திருந்தான்.
இரண்டு வாரங்களுக்கு பிறகு தென்றலாகவே குருவுக்கு அழைத்தாள்.
“தென்றல், சொல்லு” என்ற குருவின் குரலில் ஆவல்.
“கருணா அண்ணா போன் பண்ணினார் குரு” என்று தென்றல் சொல்ல, குருவோ இதற்குத்தான் அழைத்தாளா என்ற எண்ணத்தில் இருந்தான். கருணாகரனின் நிச்சயம் அடுத்த இரண்டு நாளில் நடக்க இருக்க, அதற்கு தென்றலையும் அழைத்திருந்தான்.
“நான் வரவா?” என்ற தென்றல் கேட்க
“என்னை என் தென்றல் கேட்கிற? உன்னை கூப்பிட்டு இருக்கான் தானே? உன் அண்ணன் நீ வரலைன்னா என்னை பேசுவான்” என்ற குரு கிண்டலாக சொல்ல
“இல்லை, நீங்க ஓகேவா? நான் வந்தா என்னை திட்ட மாட்டிங்களே?” தென்றல் அவனை போல் கிண்டலாகவே கேட்டாள். சென்ற முறை பார்த்து திட்டியவன் தானே? இப்போதும் திருமணம் பேசினாலும் இவனாக ஒரு வார்த்தை பேசவே இல்லை.
“வரலைன்னா தான் திட்டுவேன்” என்றான் இப்போது உரிமையாக.
“உன்னை ரொம்ப எதிர்பார்த்துட்டு இருப்பேன் தென்றல்” என்ற எதிர்பார்ப்பினை இப்போதே குரலில் காட்டினான்.
“அவ்வளோ எதிர்பாக்கிறவர் இப்பவே பார்க்கலாம்”
“வெயிட் பண்ணி பார்க்கிறதோட வேல்யூ தனி தென்றல்” என்றான் காதலுடன்.
“ஓகே ஓகே, பார்ப்போம்” என்ற தென்றல் வைத்து விட்டாள். கருணாகரனின் இல்லத்தின் அருகே இருக்கும் கோவில், குரு தென்றல் இருவருக்கும் நிச்சயம் நடந்த கோவிலில் தான் கருணாவுக்கும் இப்போது நிச்சயம். அந்த நினைவில் தென்றல் மனதில் குழப்பங்கள், குருவை நினைத்து தயக்கங்கள்.
குருவுக்கு அப்படி எந்த எண்ணமும் இல்லை. அவன் தென்றல் தன் வாழ்வில் வந்ததை குறையாக நினைக்கவில்லை. அவளையும் குறைவாக நினைக்கவில்லை. அப்பா சொன்னதை அப்படியே கேட்டுக்கொண்டான்.
கருணாகரனின் நிச்சயத்துக்கு குடும்பமாக சென்றனர், சிவா தவிர. லாவண்யா அண்ணியிடம் சென்று ஒட்டிக்கொள்ள, குருவின் பார்வை தென்றலை தீண்டியது. புடவையில் இருந்தாள் தென்றல். குருவின் பார்வை உணர்ந்தாலும் தென்றல் பேசவில்லை. கீதாஞ்சலி, மகேந்திரன் இருவரிடமும் பேசினாள். லாவண்யா அண்ணியிடம் பேசிக்கொண்டு நிற்க, குரு அருகே வந்தவன்
“போ அம்மா கூட நில்லு” என்று தங்கையை அதட்டினான். லாவண்யா அவன் சொல் தட்டாது கீதாவிடம் போய் நின்றாள். குருப்ரசாத் தென்றல் பக்கம் அவள் கைப்பற்றி நின்றான்.
“என்ன குரு? அத்தை மாமா இருக்காங்க கை விடுங்க” என்று இழுக்க
“ஜஸ்ட் கை தானே பிடிச்சேன். எங்கப்பாவைப் பாரு, அம்மா கையை எப்படி கேசுவலா பிடிச்சிட்டு நிக்கிறார். நான் எங்க அப்பா மாதிரி” என்றான் புன்னகையுடன். பல மாதங்களுக்கு பிறகு தென்றலை அவளுக்காக மட்டுமே நேசித்த குருவை அப்போது அவளால் உணர முடிந்தது.
குரு முற்றிலும் மறந்த துறந்த நிலையில் இல்லையென்றாலும், கடக்க நினைத்தான். காதல் , அது அன்பின் பரிமாற்றங்கள் அல்லவா?? அன்பினை பெற்று கொடுத்து என்று இருக்கும் உணர்வு. குரு அதனை முழுதாக உணர்ந்து இருந்தான். தன்னை சந்தோஷமாக வைத்து, தென்றலுக்கும் அதனை பகிர்ந்தான்.
நிச்சயம் முடியவும் குரு தென்றலி்டம், “நம்ம வீட்டுக்குப் போய்ட்டு வரலாமா?” என்று கேட்டான். தென்றல் மறுக்காமல் வந்தாள். மனதிற்குள் கொஞ்சம் அச்சம் இருந்தது. எல்லாம் அங்கே போகும்வரையே! இன்னும் அங்கே ஆட்கள் வரவில்லை.
அந்த தளம் காலியாக இருக்க, குரு தென்றல் கைப்பற்றி அந்த தாழ்வாரத்தில் நின்றான். கண்களை மூடி நின்றவனுக்கு எல்லாம் ஞாபகங்கள்!!
“இந்த இடம் குரு பிரசாத்தை உருவாக்கின இடம்! என்னோட பயம், அழுகை எல்லாம் பார்த்த இடம். என்னோட காதலை தந்த இடம்” என்றான் உணர்வு பூர்வமாக.
“நம்ம ரெண்டு பேருக்குமே பழையபடி இருக்க முடியுமான்னு ஒரு பயம் இருக்கு இல்லையா தென்றல்? முடிஞ்சா இருக்கலாம் அப்படி இல்லன்னா புதுசா இருக்கலாம், புதுசா லவ் பண்ணலாம்.” என்று வழி சொல்ல
“எனக்கு எந்த டென்ஷன் பயம் எதுவும் இல்லை, ஏன் சொல்லுங்க?” தென்றல் ஆர்வமாக கேட்டாள்.
“ஏன்னா நான் மேரேஜ் பண்ண போறது மேக்ஸ் ப்ரோபஸரை. என்னோட எல்லா பிராப்ளம்சும் அவர் பார்த்துப்பார்” தென்றல் குறும்பாக சொல்ல, குரு உடனே
“அடிப்பாவி!” என்று பார்த்தான்.
தென்றலும் குருவை போலவே அவளும் காதல் உணர்ந்த இடம், அது தந்த சுகமே தனி கவிதையாக இருந்தது. பேச்சும் இயல்பாக வந்தது. காதலின் தயக்கங்கள், மயக்கங்கள், முத்தங்கள், கோபங்கள் என்று அத்தனையும் பார்த்த இடமது! இருவருக்கும் பழைய நினைவுகள், இனிதானவை, அவர்கள் காதலின் இன்றியமையாதவை!
புறமும் வானிலை சீராக இருக்க, தென்றல் காற்று இருவரையும் தொட்டு செல்ல, இருள் சூழ்ந்திருந்தது. குருவின் கரங்கள் தென்றல் தோளில் தவழ, தென்றல் சந்தோஷமாக சாய்ந்து கொண்டாள்.
“பழசு புதுசு எல்லாம் வேண்டாம் குரு. எனக்கு குரு கூட இருக்க ஒவ்வொரு நிமிஷமும் ஸ்பெஷல்! சந்தோசம்!” என்று தென்றல் உணர்ந்து சொன்னாள்.
அந்த வார்த்தைகள் குருவுக்கும் நம்பிக்கை அளித்தன, காதலுக்கு இந்த நம்பிக்கை தானே வேண்டும். பிரிவின் கொடுமையை அனுபவித்து விட்டதால் சேர்ந்தே செல்ல ஆவல் கொண்டனர், சேர்ந்திருக்கும் நேரமெல்லாம் காதல் கண்டனர்.
“எனக்கும் தென்றலோட இருக்க ஒவ்வொரு நிமிஷமும் ஸ்பெஷல்! இந்த வீட்டோட நினைவுகள் ரொம்ப அழகானது! அதனால் அது ரொம்ப ஸ்பெஷல், எனக்கு காதல் வந்த இடம்! ” என்றான் மிகுந்த ரசனையுடன். அவன் கரங்கள் தென்றலின் இடையை இறுக்கமாக அணைத்துக் கொண்டன.
“காதல் வந்தது இந்த இடமா?” என்று இடையில் இருந்த அவன் கரத்தை காட்டி தென்றல் கேட்க, குரு குறுஞ்சிரிப்புடன்
“இந்த இடம் மட்டுமில்லை, மொத்தமாவே காதல் வந்த இடம் தான்” என்றான் இன்னும் ரசனையாக. பார்வை பாவையைக் கொள்ளையிட்டது! குருவின் விரல்கள் தென்றலின் முகத்தை வருடின. தென்றலின் விழிகள் அவன் வருடலில் மூடிக்கொள்ள, குருவும் அந்த மௌனத்தை மெல்ல அள்ளி ரசித்தான்.
பல நாட்கள் கழித்து இருவருக்கும் மையலாய் சில நொடிகள் காயங்கள் எல்லாம் மாயமாகி போக, இந்த நேரம் இந்திரஜாலம்!
‘காலக வழியிலே கனவுகள் இறைக்கிறாய் கண்ணாடி கோப்பை ஆழியில் நான் கைமீறி சேர்ந்த தேயிலை