அத்தியாயம் 2:
“உமா!” வீட்டிற்கு வருவதற்கு முன்பே குட்டி வீட்டுற்கு வந்துவிட்டான். வந்தவன், தன் பள்ளி பைகளை வைத்துவிட்டு வீட்டை சுத்தம் செய்து முடிக்கவும், உமா வீட்டிற்கு வரவும் சரியாக இருந்தது.
வந்தவள், புல்லுக்கட்டை கீழே போட்டுவிட்டுக் கை கால்களைக் கழுவி விட்டு உள்ளே சென்றவள் சின்னவனிடம், “குட்டி எதாவது சாப்பிட்டையாடா?” என்றாள் அவளிடம்… இன்னும் இல்ல அக்கா என்றதற்கு, “இன்னுமா சாப்பிடாம இருக்க?” எத்தனதடவ சொல்லுவது உனக்கு? ”வீட்டுக்கு வந்தவுடன் எதாவது சாப்பிடனும்னு”, அதுக்கு அப்புறமா வேலைய செய்யுனு? இதுதான் உனக்கு கடைசி முறை புரியுதா? என்றாள். “சரிக்கா!, இனி எதாவது சாப்பிட்டு விட்டு தான் வீடு கூட்டுவேன் போதுமா அக்கா?” என்றாள் போதும்டா தம்பியிடம்.. “சரிடா! சமையல் ரூம்ல இருக்க அந்த இரண்டாவது டப்பாவில் முறுக்கு இருக்கு நீ சாப்பிடு” நான் குளித்துவிட்டு வந்துவிடுகிறேன் என்றள்… “சரிக்கா!” என்று கூறி சாப்பிட சென்று விட்டான்.
குளித்துமுடித்தவள் “பக்கத்து வீட்டில் கட்டிவைத்து இருந்த வெள்ளையனை(ஆசையா அவள் வளர்க்கும் ஆட்டுக்குட்டி) அவிழ்த்து வந்து தண்ணீர்காட்டி விட்டு, வெட்டிக்கொண்டு வந்த புல்லை போட்டு கட்டிவைத்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்க சென்றுவிட்டாள் உமா”.
வாசலுக்கு வந்து கூட்டி தண்ணீர் தெளித்து விட்டு உள்ளே சென்று எல்லாருக்கும் “சத்துமாவு கஞ்சி தயாரித்துக்கொண்டு இருக்கும் பொழுது கண்ணன் மற்றும் அம்முவும் வந்து விட்டனர்”.
வந்தவர்கள் வீட்டிற்குள் சென்று பைகளை வைத்துவிட்டுக் குளிக்கச் சென்றனர். “முதலில் அம்மு சென்று குளித்துவிட்டு வந்ததும் அடுத்ததாகக் கண்ணன் சென்று குளித்துவிட்டு வந்தான் வெளியே கட்டில் போட்டு அமர்ந்துவிட்டான்”.
பின், “ உமா!”… “அனைவருக்கும் கஞ்சியை எடுத்துக்கொண்டு வெளியே வந்ததும் அவள் பின்னே வால் பிடித்தார் போல் அம்மு மற்றும் குட்டியும் வந்துவிட்டனர்”.
கஞ்சியை ஆளுக்கு ஒரு டம்ளரில் கொடுத்தாள் முதலில் கண்ணனிடம் கேட்டாள், “கண்ணா இன்னைக்கு எப்படிப் போச்சிடா கல்லூரி வகுப்புகள்” என்றாளிடம்… “பரவால்லை அக்கா” சுவாரசியமான நிகழ்வு எதுவும் இல்லை வழக்கம் போல் டெஸ்ட் இருந்தது அவ்வளவு தான்.
அக்கா, “எங்க டிபார்ட்மெண்டில் இன்னைக்கு என்னைத் திடீர்னு செமினார் எடுக்கச் சொல்லீட்டாங்க”. எனக்கு ஒன்னும் புரியல. “அப்புறம்!” ஒரு டாப்பிக் கொடுத்துப் படிக்கச் சொல்லி ‘இருபது நிமிடம் அவகாசமும் கொடுத்தாங்க’, “சரி போய்த் தெரிந்தது எடுக்கலாம்னு மேடைக்கு போனேன் துறைத்தலைவர் வந்தவரு நான் நிக்கறத பார்த்து அவரும் வந்து உட்கார்ந்துட்டார்”. எனக்குனா செம பயம் கடைசியா அங்க இருந்த பேராசிரியர்யாரையும் அதிகமா பாக்காம, மாணவர்கள் மட்டும் பார்த்து நடத்திட்டு கீழே வந்துவிட்டேன்…. கீழே வந்ததும் அந்த துணைத்தலைவர் கூப்பிட்டு, “இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணினா நல்லா இருக்கும் தேர்வுக்கும்” என்று கூறி சென்று விட்டார்.
“சார் வந்து எல்லாரையும் பார்த்து எடுத்தாதான் தைரியம் வரும்”, பயம் குறையும் என்று கூறினார் க்கா என்றாள் அம்மு.
அதைக் கேட்ட குட்டி, பொய் சொல்லாதக்கா? “உங்க துணைத்தலைவர் இனிமே நீ செமினார் எடுக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார் தான” என்றதற்கு…. “அடேய்!”, நீயும் பார்க்கத்தான போற, “ஒரு நாள் இல்ல ஒருநாள் நான் பெரிய ஆளாவருவேன் அப்ப உன்ன பார்த்துக்கிறேன்டா எலிக்குட்டி” என்றாள்.
அம்முவிடம் “குட்டி, ஏன் அக்கா பெரிய ஆளாவந்தா எனக்குத் தான பெருமை, நான் எல்லாருக்கிட்டையும் சொல்லி சந்தோசப் படுவேன்” என்று கூறி அவளுக்கு ஐஸ் வைத்துக்கொண்டு இருந்தான்.
இதைக் கேட்ட கண்ணன் தன் சிரிப்பை அடக்கமுடியாமல் அடக்கிக்கொண்டு இருந்தான், காரணம் குட்டி அவளைக் கேலி செய்வதை புரியாமல் தன் தம்பியின் புகழ் மழையில் நனைந்து கொண்டு இருந்தால் அம்மு.
கண்ணன், “அக்கா அவன் உன்ன கலாய்க்கிரான்” நீ என்னடானா அவன் உன்ன புகழ்ற மாதிரி பெருமையா அவன பார்க்கர என்றவனிடம் அப்படியாடா சொல்லற?, “அட ஆமாக்கா!” அவன் மூஞ்சப்பாத்தா உன்ன புகழ்ற மாதிரியா இருக்கு? என்று கூறி சிரித்தான். அதில் காண்டானவள் “குட்டியை பார்க்க அவன் குட்டு வெளிபட்டதில் திருட்டு முழிமுழிக்க ஆரம்பித்தான்”… அதில் விசயம்புரிந்தவள் அவனை முறைக்க, அதை பார்த்த குட்டி தன் மனதில், “டேய் குட்டி!”, எப்படியாவது ஓடிவிடுடா இல்ல நீ செத்த என்று நினைத்து வெளியில் “தன் அக்காவை பார்த்து சிரித்துவிட்டு நழுவபார்க்க அவனைப் பிடித்து மொத்திவிட்டாள் அம்மு”.
அவர்களின் சண்டையைக் கண்ட கண்ணன் விழுந்துவிழுந்து சிரிக்க, “அதைப் பார்த்த அம்மு மற்றும் குட்டி ஒருவரை ஒருவர் பார்த்துச் சைகை செய்து இருவரும் அவனை மொத்தினார்கள், இவர்களால் அந்த இடமே சரிப்புச் சத்தமாக இருந்தது”.
இவர்களின் சண்டையைக் கண்ட உமா, “அம்மு, கண்ணா உங்களுக்குப் படிக்க, எழுத எதாவது இருந்தா எழுதுங்க, இல்ல படிங்க”. அப்புறமா உங்க விளையாட்டை வைத்துக்கொள்ளலாம் போங்க என்றாள் அவர்களிடம்… “சரிக்கா!” என்று கூறி சென்று விட்டார்கள்.
குட்டி அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தான். அதைப் பார்த்த உமா, “டேய்!” உனக்கு மட்டும் தனியா சொல்லனுமா போடா, இல்ல நாளை ஆத்துக்குக் கூட்டிகிட்டுப் போகமாட்டேன் போடா என்றதும் ஓடி விட்டான்.
அங்கு மல்லியின் வீட்டில் அவளின் அப்பா, “மல்லி!” இன்னைக்கு ரவைக்கு வீட்டுக்கு வர மாட்டேன்… நீ எனக்காகக் காத்திருக்காமக சாப்பிட்டு படு… கதவை நல்லா சாத்தி பூட்டிக்குமா.
இல்லப்பா நான் உமா வீட்டிற்குப் போய்ப் படுத்துக்கிறேன். சாப்பாடும் அங்கேயே சாப்பிட்டுக்கிறேன்பா. “நீங்க கவலைபடாம நிம்மதியா வண்டி ஓட்டுங்க”… அப்புறம் தூக்கம் வந்தா டீகுடித்துவிட்டுக் கார் ஓட்டுங்க… காலையில தாமா பெரியதம்பி வருவாரு அவர கூட்டிக்கிட்டு வர மதியம் ஆகிடும் பார்த்து இருந்துக்கோமா என்றார்…. சரிப்பா நான் பாா்த்துக்கிறேன்.
சரிப்பா நான் டியூசன் கிளம்பறேன். “நீங்க போகும்போது வந்து சாவிய குடுத்துவிட்டு போங்க”… எனக்கு வேறுவேலை அதிகமா இருக்கு என்றாள்… “மல்லிகா”, அப்பா உன்ன ரொம்பக் கஷ்டப்படுத்துறேனாடா? என்றவளிடம், “அது எல்லாம் இல்லப்பா நான் இங்க தான் நிம்மதியா இருக்கேன் நீங்க கவலைபட ஒன்னும் இல்லை அப்பா” என்று கூறி சென்றுவிட்டாள்
*************************************
அங்குப் பண்ணையார் வீட்டில் உள்ள அனைவரும் பரபரப்பாக இருந்தனர். அதிலும் வெற்றியின் பாட்டி, ஏம்மா!, சாந்தி வெற்றி ரூம் எல்லாம் சுத்தம்பண்ணீட்டையா?…. நீங்க சொன்ன மாதிரியே பண்ணீட்டேம்மா… அப்புறம் அவன் பெட்கவர் மாத்திவிடு. அதுவும் மாத்திவிட்டேன்மா. வீடு எல்லாம் சுத்தமா இருக்கனும், காலையில் நேரமா வந்துவிடு அப்பதான் கவுச்சி சமைக்க நேரம் பத்தும் புரியுதா?…. சரிங்கம்மா நீங்க சொன்ன மாதிரியே பண்ணீடறேன் ம்மா. ஒத்தசைக்கு ஆள் வேணா கூட்டிக்கிட்டு வந்துடு காசும் கொடுத்தறலாம். சரிங்கம்மா… யாராவது இருந்தால் கூட்டிக்கிட்டுவறேன். இல்லனா இருக்கிற ஆள வைத்துப் பார்த்துக்கலாம் அம்மா. சரி சரி நேரம் ஆச்சி பார்த்து போ?. “சரிங்கம்மா”…. நாளைக்கு எந்தத் தவறும் நடக்காம பார்த்துக்கிறேன்மா என்றாள், சரி நீ கிளம்பு என்றார் அந்த வீட்டின் மூத்த மனுஷி ஆன நாச்சியார்.
பூஜை அறையில் இருந்த சகுந்தலாவோ, “அத்தை நாளைக்குத் தேவையான பூஜை பொருள்களை அனைத்தும் எடுத்து வைத்து விட்டேன்”. எதுக்கும் நீங்கள் வந்து பாத்துக்குங்க அத்தை…. சரிமா நான் பாா்த்துக்கறேன், நீ போய் சந்திரன் புறப்பட்டுட்டானானு பாரு? இந்த அருண் பையன் வறானானு கேளுமா, இல்ல இல்ல நீ வேண்டாம் உன்ன நல்ல கெஞ்சி, கெஞ்சி சமாதானம் பண்ணீடுவான். அப்ப நீங்க பண்ணுங்க அத்த… அவன் பெரியம்மா கூப்பிடார்னு சொல்லு அப்பதான் அவன் மறுக்காம வருவான் என்றாள்… நீங்க சொல்லுறதும் சரிதான்அத்த அப்போ அக்கா பண்ண சொல்லறேன் என இருவரும் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது உள்ளே இருந்து ஒரு குரல் கேட்டது. அந்தக் குரலுக்குச் சொந்தகார் இந்த வீட்டின் மூத்த மருமகள் ஜெயம்மாள்.. ஒரு விபத்தால் அவரால் நடக்கமுடியவில்லை. அதற்காகச் சிகிச்சைகள் மற்றும் பயிற்சியும் எடுத்துக்கொண்டு இருக்கிறார்.
சகுமா இங்க வாடா… இதோ வருரேன், “என்னக்கா கூப்பிட்டீங்க? என்ன வேணும் சொல்லுங்க்கா? எதாவது வேணுமா?”. இரு சகு “ஏன் இந்த அவசரம்?” உன் அருமை பையன் நாளைக்குத் தான் வரான் கொஞ்சம் பொருமையா வேலை செய்டீ எனக்கூறி சிரித்தாள்.
“அக்கா சும்மா கிண்டல் பண்ணாதீங்க”, அவன் மூனு வருசம் முழுசா முடிந்து வருகிறான், அவனுக்குப் பிடிச்சமாதிரி எல்லாம் செய்யனும், அதும் இல்லாமல் வாய்க்கு ருசியாகச் சாப்பிட்டு ரொம்ப நாள் ஆட்சி அதுதான்கா. சரி சகு உன் பையனுக்குப் புடிச்ச மாதிரி பண்ணு. “யாரு வேண்டானா? ”ம்ம்ம்” அக்கா என்றாள்….
சரி அத விடு இந்தச் சின்னவனுக்குப் போன் பண்ணுடீ? அவன பார்த்து ரொம்ப நாள் ஆட்சி பார்க்கனும்போல இருக்கு. சரிக்கா இருங்க பண்றேன், நீங்க கூப்பிட்டா தான் வருவான், நாங்க கூப்பிட்டா அந்த வேலை இருக்கு, இந்த வேலை இருக்குனு சமாளிப்பான். இந்தாங்க ரிங் போகுது, நீங்கள் பேசுங்க நான் அவரு என்னா பன்ண்ணுறாங்கனு பார்க்கிறேன் எனக்கூறினால். “ஆமா!”, நீ போய் பாரு, அவரு மேக்கப் போட்டுகிட்டு இருப்பார். அவர முதல்ல கிளப்பு அப்பதான் டைமுக்கு அங்க இருக்க முடியும் என்றாள் ஜெயாவிடம். நீங்க சரியாதான் சொல்லறீங்க எனக்கூறி சிரித்துக்கொண்டே மாடியில் உள்ள அவர் அறைக்குச் சென்றுவிட்டார் சகுந்தலா. அவரைப் பார்த்த ஜெயம்மாள் சிரித்துக்கொண்டாள்.
“அங்கே சந்திரன்!” தன் முதல் மகனை அழைத்து வர புறப்பட்டுக் கொண்டு இருந்தார்(ஜெயா சொன்னது போல் மேக்கப் போட்டுக்கொண்டு இருந்தார்).
“ஏங்க சீக்கிரம் வாங்க”.. டைம் ஆகுது பாருங்க… இப்போது கிளம்பினாதான் கரைக்ட்டா இருக்கும் என்றாள்… நான் ரெடிமா வா போகலாம் என்று கீழே சென்று விட்டார்.
ஜெயம்மாள் அறைக்குச் சென்று “யார்மா போன்ல?” அது “அருண்ங்க மாமா”.. அவன் நாளைக்கு வறேன்னு சொல்லீட்டான். அதனால் கண்டிப்பாக வருவான், “அவனுக்குப் புடிச்ச எல்லாம் சாப்பாடு நாளைக்கு இருக்கனும் சொல்லீட்டேன்..
“ஆமாங்கடி!” அக்கா, தங்கச்சி ரெண்டு பேருக்கும் உங்க பையனுங்களைப் பார்த்தா தான் நாங்க யாரும் கண்ணுக்குத் தெரியமாட்டோம். அவனுங்க மட்டுந்தான் தெரிவானுங்க என்றவரார்…. “சகுந்தலா, அக்கா மாமா கண்ணுல பொறாமை அப்பட்டமாகத் தெரியுது பாருங்க” அக்கா உங்களுக்குத் தெரியுதா… நீ சொல்லறது சரிதான் பாருடீ சகு இந்த வயசான காலத்துல பொறாமையை? அதுவும் பைசங்ககிட்ட போய்?… அடியே யாருக்குடீ வயசு ஆச்சி? அக்கா, தங்கச்சி ரெண்டு பேருக்கும் தான் தலை நரச்சிபோச்சி… என் முடிய தலைய பாரு ஒரு நறைமுடிக்கூட இருக்காது. இதில் இருந்து உங்க ரெண்டு பேருக்கும் என்ன தெரியுது. அதுவா “உங்களுக்கு நட்டு கழண்டு போச்சினு தெரியுது மாமா என்றார் ஜெயம்மாள். அதைக் கேட்டு குழுங்கி குழுங்கி சிரித்தார் சகுந்தலா” அவரைப் பார்த்த மற்ற இருவருக்கும் சிரிப்பை தந்தது.
இவர்களின் சிரிப்பை கேட்ட நாச்சியார் மனதில், “கடவுளே இந்தக் குடும்பம் இதே மாதிரி எப்பவும் சந்தேஷாமா இருக்கனும் கடவுளே, அதற்கு நீங்கள் தான் அருள்புரியனும் என்று அவசரமா ஒரு வேண்டுதலை வைத்தார்” அந்தப் பெரியமனுசி.
பண்ணையார் என்று அழைக்கப்படுபவர் தான் நாச்சியாரின் கணவன் சூரியதேவன். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். அதில் மூத்தவர் தான் சந்திரதேவன், “அவரின் மனைவிகள் தான் ஜெயம்மாள்(ஜெயா) மற்றும் சகுந்தலா(சகு)”. ஜெயா இவர்களைப் போல் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். அதுவும் ஒற்றைப் பிள்ளையாக வளர்ந்தவர். அன்பானவர். மனிதர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். இவருக்கு இரண்டு பிள்ளைகள் மூத்தவன் வெற்றிவேந்தன், அடுத்தவள் மீனா இந்த வீட்டின் கடைக்குட்டி.
சகுந்தலாவுக்கு இரண்டு பிள்ளைகள் மூத்தவள் ஜெயந்தி. அடுத்தவன் தான் அருண்.
“சந்திரன் மற்றும் ஜெயாவுக்குத் திருமணம் முடிந்து ஐந்து வருடம் குழந்தை இல்லாததால் பரிசோதனை செய்து குழந்தை பிறக்கவாய்ப்பு ரொம்ப ரொம்பக் குறைவு என மருத்துவர் கூறியதால், ஜெயாவே தன் கணவனுக்குப் பெண்ணையும் பார்த்து சகுந்தலாவை திருமணம் செய்து வைத்தார்”. இவர்கள் இருவரும் சகோதரிகள் போல் அன்பாக வாழ்ந்துவருகிறார்கள் இன்று வரை.
வீட்டின் “மூத்தவாரிசு சகுந்தலாவுக்கு மகள் ஜெயந்தி” தான். அவளுக்குத் திருமணம் முடிந்து கணவனுடம்(மதன்) மூணாறில் வசிக்கிறார். “அவளுக்கு ஒரு பெண் குழந்தை பெயர் வர்ஷா. வயது ஐந்து”.. எஸ்டேட், ரெசாட், பழப்பண்ணையும் வைத்து உள்ளனர். ஜெயந்தி சகுந்தலாவை போல் அன்பானவள்.
“பண்ணையார்வீட்டின் அடுத்த வாரிசு ஜெயம்மாளின் மகன் வெற்றி வேந்தன்”. வீரம், விவேகம் ஒருங்கே பெற்றவன். விவசாயத்துறையில் P.HD முடித்துவிட்டு குடும்பத்தொழிலோடு(விவசாயம்150 ஏக்கர் நிலத்தில் நடைபெறுகிறது), அருசி ஆலை, பள்ளி, கல்லூரியை பார்த்துக்கொண்டு.” தன் சொந்ந முயற்சியில் உருவாக்கிய பழச்சாறு தயாரிக்கும் கம்பெனியோடு, கைவினை பொருள்களைத் தயாரிக்கும் கம்பெனியும் தன் தம்பியோடு மற்றும் நண்பன் உடன் சேர்ந்து செய்கிறான்”.
“மூன்றாம் வாரிசு அருண். சகுந்தலாவுக்கு இரண்டாம் மகன்”. அவன் MBA முடித்து விட்டு விவசாயம் தவிர மற்ற குடும்பத் தொழில்களைப் பார்த்துக்கொள்கிறான். அது மட்டுமல்ல தன் தமையனிடம் உருவாக்கிய தொழிலையும் பார்த்துக்கொள்கிறான். தாய், தந்தையை விடப் பெரியம்மா என்றால் அத்தனை இஷ்டம். நாச்சியின் குறும்புக்கார பேரன்.
அந்த வீட்டின் “கடைசி வாரிசு தான் மீனா. ஜெயம்மாளின் இரண்டாவது பிள்ளை தான் மீனா”. MSC(csc) முடித்தவிட்டு அண்ணன்களுக்குத் துணையாக வேலை பார்த்துக்கொண்டு இருக்கறாள். அதிகக் குறும்பானவள். அன்புக்கு அடிமையானவள்.
சூரியாதேவனின் அடுத்தவாரிசு விசாலாட்சி. “விசாலாட்சியின் கணவன் சங்கர்…. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். மூத்தவன் கார்த்திக்…MBA முடித்துவிட்டு குடும்பத்தொழிலை பார்த்துக்கொள்கிறான்”. மாமன் மகள் மீனாவின் மீது அழாதி காதல் கொண்டவன். அந்தவீட்டின் அடுத்தச் சுபநிகழ்ச்சி இவர்களின் திருமணம்.
விசாலாட்சியின் அடுத்தவாரிசு சைந்தவி… திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆகிறது. கணவன் சத்தியமூர்த்தி. காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்கள்.
******************************************
பஞ்சாயத்து தலைவர் ஆன தர்மர் வீட்டிலும் விறுவிறுப்பாக வேலைகள் நடந்து கொண்டிருந்தது.
“முத்தையா மற்றும் சாரதாவின் ஒற்றை வாரிசு தான் தர்மர். அவரின் மனைவி காயத்திரி”. அவர் சகுந்தலாவின் உடன் பிறந்த சகோதரி. அதுமட்டுமல்ல சூரியதேவனின் தம்பி தான் முத்தையா.
“தர்மரின் ஒற்றை வாரிசு தான் விஷ்ணு. அவனும் விவசாயத்துறையில் P.HD முடித்துவுள்ளான். குடும்பத்தொழிலை மட்டுமல்லாமல் சுயத்தொழிலையும் பார்த்துக்கொள்கிறான். சாரதாவின் ஆசை பேரன்”. நாச்சியாரிடம் வம்பு வளர்க்கவில்லை என்றால் தூக்கம் வராது இவனுக்கு… சந்திரா மற்றும் ஜெயாவுக்குப் பாசமான மகன். காரியம் ஆகவேண்டும் என்றால் சந்திரதேவனிடம் தான் போவான்.
இவர்கள் இருவர்வீடும் பக்கத்தில் தான் உள்ளது.
இந்தபரபரப்புக்கு காரணமான மூவரும் அவர்அவர் வேலையில் மூழ்கி இருந்தனர். காரணம் நாளையநாளில் அனைவரும் ஒரே இடத்தில் சந்திக்கத்தான்.
மூவரும் சகோதரர்கள் மட்டுமல்ல? நல்ல நண்பர்களும் கூட.
“அங்கு உமா!”, இரவு உணவை செய்து கொண்டே டியூசன் பிள்ளைகளுக்குப் படிக்கச் சொல்லி கொடுத்து கொண்டு இருந்தால்.
குட்டி, அம்மு மற்றும் கண்ணன் அவர்களின் புத்தகத்தில் ஆழ்ந்தனர்.
அப்பொழுது வந்த மல்லி குட்டியை பார்த்த உடன், “டார்லிங்!,உன்னை பார்த்து எத்தனை நாட்கள் ஆட்சி?” என்றாள்… அதற்கு “ஆமாம் டார்லிங் ஒரு வாரம் ஆட்சி” என்றான் குட்டி.
ஒரு வாரத்தில் இப்படித் துரும்பா இளச்சி போயிட்டையே. இந்த “அம்மு உன் சாப்பாட்டைப் பிடுங்கி சாப்பிட்டு விட்டாரா சொல்லு டார்லிங்? சொல்லு? நான் அவ கையை உடைத்து விடறேன்”.
ஆமா! இவன் அப்படியே பைல்வான் மாதிரி இருந்தான். “நான் இவன் சாப்பாட்டைச் சாப்பிட்டு அப்படியே பத்து கிலோ குறைந்துவிட்டான் பாரு. மல்லிகா” இது உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியல? என்றாள்
“ஆமாடி!” உனக்குப் பொறாமை எங்கள் ஜோடி பொருத்தத்தைப் பார்த்து. ஆமா “உங்கள் பொருத்தத்தைப் பார்த்தா அப்படியே சர்க்கரை பொங்கலும் வடைகறியும் மாதிரி இருக்கு” என்றால் அம்மு.
அதைக் கேட்ட குட்டி, “ஏய் அம்மு என்ன பத்தி என்ன வேணா சொல்லு, ஆனா என் டார்லிங்க பத்தி எதாவது சொன்ன பிச்சிடுவேன் பிச்சி என்று வம்பு வளர்த்தான்”. … அப்படிச் சொல்லுங்க டார்லிங் அப்ப தான் இவ அடங்குவா என்றாள் மல்லி.
இவர்களின் விமர்சனத்தைக் கேட்ட கண்ணன், “அது என்ன மல்லிகா அவன மட்டும் டார்லிங்னு சொல்லுரீங்க?” அதுவா கண்ணா, “குட்டி எவ்வளவு வீரமானவர்?” அதுனாலதான்… “ஏன்?” அவன் மட்டும் தான் வீரமானவனா? எங்களுக்கு வீரம் இல்லையா? என்றான் அவளிடம், “ஆமாம்!“ என் டார்லிங் மாதிரி உனக்கு வீரம் இல்ல? “அவன்தான் பக்கத்து வீட்டு பரிமளா அக்கா பானைய உடச்சான். நீ உடைப்பையா?”, இல்லையில்ல..
அதே மாதிரி “எதிர் வீட்டு சாமி அண்ணா வேட்டிய உருவீட்டான். அதுவும் யாருக்கும் தெரியாம… நீ பண்ணுவையா?” இல்லையில்ல…..
அடுத்தத் தெரு “மாது அண்ணா சைக்கிளை பஞ்சர் பண்ணினான். நீ பண்ணுவையா?” இல்லையில்லை…. எனக்கூறி குட்டியை பார்க்க, அவன் மல்லியை பெருமையாகப் பார்த்தான்.
இவள் கூறியதை கேட்டு அதிர்ந்து நின்றனர் கண்ணன், மல்லி. “குட்டி மல்லியை பார்த்து விட்ட Romantic lookல் விழுந்துவிழுந்து சிரித்தனர்”.
“உமாவோ!” மத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்து, அடேய் நீ தான் இந்த வேலைய பண்ணுனதா? “ஏன்டீ!” நீயும் அவன் கூடசேர்ந்து இந்த வேலைய பார்த்தியா? எனக்கூறி இருவரையும் அடிக்கத்துரத்தினாள்.
அவளின் கையில் சிக்காமல் இருவரும் ஓடிவிட்டனர்.