“என்னடா பொம்மிம்மா.. என்ன டா..” என்று கேட்டதும்..உடனே அவளிடம் இருந்து வந்த பதில். “பயமா இருக்கு அண்ணா..” என்றது தான்..
அவனுக்கு புரிந்து விட்டது. அவளின் பயத்தின் காரணம். இதே போல் தான் எட்டு வருடங்கள் முன் அவனுமே பயந்தான்.. எதிர்காலத்தையும், தன் அன்னை தங்கையையும் நினைத்து.
ஆனால் ஒரே நாளில் அவனின் பயத்தை அவனின் சித்தாப்பா போக்கி விட்டார்.. ஆனால் நான் மூன்று மாதம் கழித்தும் அவர்களின் மகளின் பயத்தை போக்காது எல்லாம் சரியாகி விட்டது என்று நினைத்து இருக்கிறேன்… நான் என்ன மாதிரி..?” என்று தன்னையே நிந்தித்து கொண்டவன்.
அவளின் கை பிடித்து கொண்டு.. “உன் பெரியப்பா இறந்த போது நானுமே உன்னை போல தான் பயந்தேன்.. அப்போ உங்க அப்பா என் கிட்ட எதுக்கும் கவலை படாதே நான் பார்த்துக்குறேன் என்று சொன்னார்.. அவர் சொன்னதை நாம் நம்பினேன்.. அதை அவருமே கடைசி வரை காப்பாத்திட்டாரு..
நான் அது போல சொல்லலே தான்.. ஆனா நீ இந்த அண்ணன் பார்த்துப்பான் என்று நினைக்க வில்லையா பொம்மா..?” என்று கேட்டதுமே பூவிதழ்..
“அய்யோ இல்லேண்ணா நீங்க பார்த்துப்பிங்க எனக்கு தெரியும் ண்ணா.” என்று சொன்னவளின் பேச்சில் ஒரு தெளிவு இல்லாது இருக்க..
சித்தார்த்..”என்னடா..?” என்று கேட்டதுமே பூவிதழ் அது பொது இடம் என்று கூட மறந்து..
“அம்மாக்கு ஒன்னும் தெரியாது.. அக்கா இன்னும் படிப்பு முடிக்கல.. நீங்க நீங்க இப்போ பரவாயில்ல.. ஆனா உங்களுக்கு மேரஜ்.. ஆகிட்டா இது போலவே பார்த்துபிங்கலா..” என்று சொல்லி கொண்டு வந்த தங்கையிடம்..
“இது யார் சொன்னது பொம்மா..?” என்று கேட்டதுமே.. கூட படிக்கிற பிள்ளைங்க. அப்புறம் பக்கத்து வீட்டு ஆன்ட்டி..” என்று தயங்கி சொன்னவளின் பற்றிய கையில் அழுத்தம் கொடுத்து.
‘சொல்றவங்க பேச்சை எல்லாம் நாம நம்பனும் என்று கிடையாது பொம்மா… உன் மனசு நம்புதா. அது சொல்..” என்று சித்தார்த் கேட்க..
வேகமாக பூவிதழ்.” இல்லை..” என்று தலையாட்டினாள்..
“குட்.. இது போல் திரும்ப திரும்ப என்னை நம்பு நம்பு என்று என்னால சொல்ல முடியாது பொம்மா. அது எனக்கு அசிங்கம்.. அந்த நிலைக்கு என்னை விட்டு விட மாட்டே என்று நினைக்கிறேன்..” என்று சொல்லி வழிந்தோடிய ஐஸ் க்ரீமை தூக்கி போட்டு விட்டு வேறு புதியாக வாங்கி தந்தவன் அவள் சாப்பிட காத்திருக்கும் சமயம் அவனுக்கு போன் வந்தது.. அவனின் காதலியிடம் இருந்து.
ஆம் சித்தார்த் காதலிக்கிறான். கடந்த ஒரு வருடமாக.. வங்கியில் வேலைக்கு சென்ற புதிது. அவன் வங்கியில் கணக்கு வைத்திருந்த சாத்வீகாவின் வேலையின் சம்பளம் இவன் வேலை பார்த்த வங்கிக்கு தான் வரும்.. அதை வைத்து கார் லோன் வேண்டும் என்று பேச வந்தவளை.. சித்தார்த்துக்கு பிடித்து விட. முதலில் நட்போடு பேச ஆரம்பித்து பின் சித்தார்த் ஒரு நாள் அவளிடம் காதல் சொன்ன போது..
சாத்வீகா சிறிது கூட யோசிக்கவில்லை. உடனே. “எனக்கும் உங்களை பிடித்து இருக்கு சித்தார்த்.. நீங்க சொல்லவில்லை என்றால் நானே சொல்லி இருப்பேன்..” என்று அவர்களின் காதல் நாட்கள் மூன்று மாதம் சென்ற போது தான்.. அவளின் அந்தஸ்த்து ஒரு நாள் அவனுக்கு தெரிய வந்தது.
செய்தி தாள் மூலமாக.. ஒரு வெளி நாட்டு கார் தயாரிப்பு இந்தியா கார் தயாரிப்போடு டைய்யப் வைத்து கொண்டது.. என்று அந்த வெளி நாட்டவனின் புகைப்படத்தோடு இந்தியா கார் கம்பெனி நிர்வாக குடும்பத்தினர் புகைப்படமும் இடம் பெற்று இருக்க… அந்த புகைப்படத்தில் சாத்வீகா இடம் பெற்று இருந்தாள்.. அதாவது அந்த கார் கம்பெனி நிறுவனத்தின் வீட்டு மகளாக .
“என்ன வீகா என்ன இது.” என்று அதிர்ந்து தான் சித்தார்த் தன் காதலியிடம் அந்த செய்தி தாளை காட்டி கேட்டது.
சாத்வீகா மிக சாதாரணமாக. “மை டாட்.. மை பிரதர்..” என்று தன் குடும்ப உறுப்பினர்கள் என்று சொல்ல.
“இல்ல இல்ல நான் அதை கேட்கல. நீ இவங்க வீட்டு பெண்ணா..? அப்போ எப்படி என்னை லவ் பண்ண..?”
“இதுல என்ன இருக்கு டால்.? எனக்கு உன்னை பிடித்து இருக்கு..” அவளுக்கு எல்லாமே சாதரணம் போல தான் பேச்சு இருக்கும்.. அது ஏன் என்று சித்தார்த்துக்கு அப்போது தான் புரிந்தது..
பெண் கஷ்டமே படாது வளர்ந்தவள் என்று.. சித்தார்த்துக்கு அப்போதும் சாத்வீகாவை பிடித்து தான் இருக்கிறது. ஆனால் அவளின் அந்தஸ்த்து.. நம் குடும்பத்திற்க்கு செட்டாவாலா.?
அதுவும் சித்தார்த். “கார் கம்பெனியே உங்களுடையது.. நீ எதுக்கு லோனில் கார் வாங்கின. வெளியில் வேலைக்கு போன. அதுவும் அந்த சம்பளத்தில்..?” என்று கேட்டான்..
பாவம் சித்தார்த் இதை எல்லாம் பார்த்து தானே நம் போல் மத்திய வர்க்க குடும்பம் என்று நினைத்து எதுவும் கேட்காது விட்டு விட்டான்..
அவன் கேள்விக்கு சாத்வீகா..”ஒரு நாள் அப்பாவுடைய காரை லேசா இடித்து விட்டேன்.. அதுக்கு உனக்கு இனி கார் கொடுக்க மாட்டேன் என்று சொல்லிட்டார்.. அதுக்கு தான் வேலை.. அதுக்கு தான் லோன்..” என்று அதையும் அவள் மிக சாதரணமாக தான் கூறினாள்..
அதுவும் இடித்த அவள் அப்பாவின் கார் கோடியில் இருக்கும்..அதில் பொருள் மாற்ற வேண்டும் என்றால் லட்சங்கள் ஆகும்.. இதை சாதரணமாக எடுத்து கொள்ளும் தன் காதலிக்கும்.. வீட்டில் செய்த காய் பற்றவில்லை என்றால் அதில் புருப்பை வேக வைத்து கலந்து கூட்டாக மாற்றி விட்டு குடும்பத்தை ஒட்டும் தன் சித்தி அம்மாவுக்கும் எப்படி பொருந்தும்..
சித்தப்பா இருக்கும் போதே அவனுக்கு இது மனதில் பிராண்டி கொண்டு இருந்த விசயம் தான் சித்தார்த்துக்கு. சித்தப்பா இறப்புக்கு சாத்வீகா வந்து இருக்கிறாள்..
சித்தப்பா இறந்து ஒரு வாரம் சென்ற நிலையில் அவளே போன் செய்து இவனுக்கு சொன்ன தகவல்.இவன்..”அப்படியா.? கேட்டு கொண்டான்.. அவ்வளவு தான்..
ஆனால் அப்படியா கேட்டு கொண்ட அந்த விசயம் தான்.. சாத்வீகா வீடு வரை செல்ல போவது தெரியாது விட்டான்..தெரிந்து இருந்தாலும் அவன் பிரச்சனையில் அதை எல்லாம் அவன் பெரியதாக எடுத்து கொள்ள மாட்டான் தான்.
அதுவும் சமீப காலமாக இவன் வேலை டென்ஷனுக்கு நடுவில் அழைக்கும் அவனின் காதலி.. ஏன் போன் பேச மாட்டேங்குறிங்க.. நானே தான் அழைக்கனுமா..? நாம் வெளியில் மீட் பண்ணி பேசி ரொம்ப நாள் ஆச்சி..?” என்ற கேள்விக்கு சித்தார்த் இரண்டே வார்த்தையில்..
“வீகா என் சித்தப்பா இப்போது தான் இறந்து இருக்கிறார்.. “ என்று பதில் அளித்தான்.
.
சாத்வீகா இவனுக்கும் குறைவான வார்த்தையில்.” அதுக்கு..?” என்று கேட்டு வைத்தால், அதற்க்கு இவன் என்ன என்று சொல்வான்..
சமீப காலமாக சித்தார்த்துக்கு காதலியிடம் இப்படி பட்ட பேச்சு வார்த்தைகள் தான் ஒடி கொண்டு இருக்கிறது.. அதுவும் போன் மூலம் மட்டுமே..
இப்போதும் அதே போல் பேச தான் அழைக்கிறாள் என்று நினைத்த சித்தார்த் தன் குட்டி தங்கையிடம்.. போனை காட்டி பேசி விட்டு வருகிறேன் என்று சைகை செய்ய. மனம் பாரம் குறைந்ததில் பூவிதழும் பலமாக தலையாட்டி சம்மதம் கொடுத்தவளின் கவனம் தன் ஐஸ் க்ரீமில் மட்டுமே இருந்தது..
தங்கையை பார்க்கும் இடத்திலும் தன் பேச்சு விழாத தூரத்திலும் நின்று கொண்ட சித்தார்த்.. அதன் பின் தான் சாத்வீகாவின் அழைப்பை ஏற்றது.. அது வரை இரண்டு முறை பேசி அடித்து ஒய்ந்து மூன்றாவது முறை சத்தம் இட்டதை தான் சித்தார்த் அடக்கி ஏற்றது.
சாத்வீகா எடுத்த உடனே. “என்ன சித்து என் போனை எடுக்க இவ்வளவு நேரமா..? அப்பா தம்பி என் தேர்வு பத்தி என்ன நினைப்பாங்க..?” என்று எடுத்த உடன் விசயம் சொல்லாது ஐ பிச்சில் கத்திக் கொண்டு இருந்தவளை..
“வீகா பொறுமை பொறுமை..” என்று சாத்வீகாவின் பக்கத்தில் ஏதோ ஒரு ஆண் குரல் சித்தார்த்துக்கு கேட்டது.. குரலை வைத்து பார்த்தால், அவள் தம்பியாக இருக்க வேண்டும்.. ஜெர்மனியில் படித்து கொண்டு இருந்தவன் படிப்பு முடித்து வந்து விட்டானா..?என்ற சித்தார்த்தின் யோசனையில்..
சாத்வீகா. திரும்ப பல முறை..”சித்து சித்து.” என்று அழைக்கவும். .. சித்தார்த்..” ம்..” என்று நான் அழைப்பில் தான் இருக்கிறேன் என்று தெரியப்படுத்தினான் ..
சாத்வீகா..” நான் உங்க சித்தப்பா டெத்துக்கு வந்ததை பார்த்து யார் மூலமாவோ டாடிக்கு தெரிந்து உங்களை பத்தி விசாரிச்சிட்டு.. இப்போ உங்களை பார்க்கனும் என்று சொல்றாங்க சித்து.. அதுக்கு தான் விக்ரமும் ஜெர்மனியில் இருந்து வந்து இருக்கான். சீக்கிரம் வீட்டுக்கு வாங்க சித்து நான் லோக்கேஷனை ஷேர் செய்யிறேன்..” என்ற பட பட என்று பேசினாள்.
“உனக்கு வசதி படுமா.?” என்று கேட்காது.
சித்தார்த் தயக்கத்துடன் சாப்பிட்டு முடித்து விட்டு தன்னை நோக்கி வந்த பூவிதழை பார்த்து கொண்டே.. “நான் என் சிஸ்டரோட வெளியில் இருக்கேன் வீகா..” என்று முதலில் சொன்னதை சத்தமாகவும்.. கடைசியில் காதலி பெயரை மட்டும் மெல்லவும் முனு முனுத்தான்..
சாத்வீகா..? எங்கு இருக்கிங்க..” என்று கேட்க. சித்தார்த் இருக்கும் இடத்தை சொல்லவும்..
“ஒ மை காட்.. எங்க வீடு அங்கு இருந்து ஜஸ்ட் பைப் மினிட் தான் மேன்.. நீ என்ன செய்யிற உங்க சிஸ்ட்டரோடு இங்கு வந்து விடு..” என்று சொல்லி விட்டு போனை அணைத்ததோடு.. அவனின் வாட்சாப்புக்கும் அவள் வீட்டின் வழி தடம் செல்லும் பாதையும் வந்து சேர்ந்தது..
சிறிது நேரம் யோசித்த சித்தார்த் என்ன நினைத்தானோ..தங்கையிடம்.. “இப்போ ஒரு வீட்டுக்கு போறோம் பொம்மா. கண்டிப்பாக அங்கு கார்டன் அது போல இருக்கும்.. நீ அங்கு இரு.. நான் பேசிட்டு வந்து விடுகிறேன்..” என்று சொன்னான்.. பணக்கார வீடு என்றால், கார்டன் ஸ்வீம்மிங் புல் இல்லாது வீடு கட்ட மாட்டார்கள் என்ற அனுமானத்தில் சொல்லி தங்கையோடு சித்தார்த் தன் பைக்கை சாத்வீகா வீட்டை நோக்கி செலுத்தினான்..
சித்தார்த்தின் தங்கையோடு தான் செய்யும் இந்த பயணம் ஆனது.. அவன் வாழ்க்கையை மட்டும் அல்லாது தன் தங்கையின் எதிர் காலமும் இதனால் பிரச்சனைக்கு உள்ளாக்க கூடும் என்று தெரியாது தான் சென்றான்..