டேனியல் ஆறு மாதம் முன் மும்பையில் விக்ரமனிடம் தங்கள் பிரான்ச் சென்னையிலும் நிறுவ உள்ளோம் என்று சொன்னதோடு மட்டும் அல்லாது சென்னையில் நிறுவினால் ஏற்படும் சாதகம் பாதகம் அனைத்தையுமே அன்றே விக்ரமனிடம் கேட்டு தெளிவு படுத்தி கொண்டான்..
அதன் தொடக்கம் தான் சென்ற வாரம் டேனியல் சென்னையில் தங்கள் ஒட்டலின் பிரான்சை தொடங்க இடம்..மற்றும் அதன் தொடர் வேலைகளை பார்த்து கொண்டு இருக்கிறான்..
விக்ரம் தன்னால் நண்பனுக்கு என்ன என்ன உதவி தேவையோ.. அதை அனைத்தையும் செய்து கொடுத்து கொண்டும் இருக்கிறான்..
விக்ரம் கூட… “படித்தது ஆட்டோமொபைல் படிப்பு.. இது என்னடா ஒட்டல்..?” என்று கிண்டல் செய்தான்..
டேனியல்..”நீ உன் டாட் பிசினஸ் சம்மந்தப்பட்டதே எடுத்து படித்து விட்டே.. அப்போ கூட அதுல ஏதோ செய்யனும் என்று தானே காரின் ஸ்பார்ட்ஸ் நீயே தயாரிக்கிற..
ஆனா எனக்கு டாட் மூன்று தலை முறையா இந்த ஒட்டல் பிசினஸ் தான் பார்த்துட்டு இருக்கிறார்..என்னை படிக்க ஜெர்மனிக்கு அனுப்பும் போதே சொல்லிட்டார்.. உன் விருப்பம் படி எது என்றாலும் செய்..
ஆனால் நம்ம குடும்ப பிசினஸையும் நீ தான் பார்த்து கொள்ளனும் என்று சொல்லிடார்.. அவர் சொல்வதும் நியாயம் தானே.. வீட்டுக்கு ஒரே பையன் நான் தானே பார்த்து கொள்ளனும் என்று..
அம்மாவுக்கு அவங்க சொந்த ஊரான இந்த சென்னையில் எங்க ஒட்டல் பிரான்சை ஆரம்பக்கனும் என்று ஆசை.. நீ எல்ப் செய்யிற என்று சொன்ன.. இதோ அதற்க்கு உண்டான வேலைகளில் இறங்கி விட்டேன்..” என்று மிக எளிதாக சொல்லி விட்டான்..
பணம் இருந்தால் அனைத்தும் எளிது தான் போல. ஆனால் அப்படி எல்லாமே அவ்வளவு எளிதில் கிடைத்து விடாது என்பதை விக்ரம் மட்டும் அல்லாது இதோ தோள் குலுக்கி விட்டு சாதாரணமாக சொல்லும் இந்த டேனியலுக்கு கூட தெரியவில்லை.. ஆனால் காலம் தெரியப்படுத்தி விடும்..
அந்த ஒட்டல் சம்மந்தமாக பேச தான்.. விக்ரம் தன் நண்பன் ஒட்டலான இங்கு அழைத்து வந்தான்.. கீழே ரெஸ்ட்டாரெண்ட்.. முதல் தளத்தில் இருந்து தங்கும் அறை என்று இருக்கும்.. இதன் மாடல் பார் என்று தான் விக்ரம் டேனியலை இங்கு அழைத்து வந்தது..
இரண்டாம் தளம் மட்டும்.. இந்த ஒட்டல் முதலாளியுடையது.. அது தான் இப்படி வெறிச்சோடி போய் இருக்கிறது..
அதை பற்றி தான் விக்ரம் தன் நண்பனிடம் பேசி கொண்டு வந்தான்.. “இவன் போல் நாம ஒரு தளத்தையே வேஸ்ட் செய்யாதே. “ என்று.
அதற்க்கு டேனியலும்.. “நீ சொல்வதும் சரி தான்..” என்று பதில் சொல்லி கொண்டு வந்த போது தான் ஒரு மின் தூக்கி கீழ் சென்றது மேல் வராது இருக்க..
“ஷிட்..” என்று சொல்லி கொண்டு அடுத்த மின் தூக்கியை பார்த்தான்.. “இது போல் ஒபன் செய்து வைத்து இருந்தால் எப்படி கீழே இருக்கிறவங்க இதை யூஸ் செய்வாங்க.” என்று முனு முனுத்து கொண்டே அந்த மின் தூக்கியை நோக்கி இருவரும் சென்ற போது ஏதோ ஒரு உந்துதலில் விக்ரம் திரும்பி பார்த்தான்..
அங்கு இளம் நீல நிற சுடிதார் அணிந்த பெண்ணின் பின் பக்கம் தெரிந்தது.. யாரிடமோ மிக மும்முரமாக பேசியில் பேசிக் கொண்டு இருந்தாள் பெண்.. முடி அவ்வளவு நீலமாக இருக்க.. அதற்க்காகவே மீண்டும் அந்த பெண்ணை பார்த்தான் விக்ரம்..
அதை டேனியலும் கவனித்தான் தான் .எதுவும் கேட்கவில்லை.. ஆனால் மனதில் சிரித்து கொண்டான்..
அப்போது தான் டேனியலுக்கு அவன் வீட்டில் இருந்து அழைப்பு வந்தது.. அதை ஏற்று பேசிக் கொண்டு இருக்கும் போது தான் விக்ரம் அந்த பழுது அடைந்த மின் தூக்கியின் அருகில் சென்று அவனை திரும்பி பார்த்து கொண்டே தன் ஒரு கால் அதில் எடுத்து வைக்க முனைந்தான்..
ரெஸ்ட் ரூம் அருகில் நின்று.. பேசிக் கொண்டு இருந்த பூவிதழ் காயத்திரி இன்னும் வராததில்.. “உள்ளே என்ன செய்யிறா போய் பார்க்கலாம் என்றால் இந்த லிப்ட் வேற” என்று நினைக்கும் போது தான் சித்தார்த்தும் அழைப்பை வைத்தது.
டேனியலுக்கு அவன் வீட்டில் இருந்து பேசிக்கு அழைப்பு வந்தது.. அந்த பேசி அழைக்கும் சத்தம் கேட்டு தான்.. பூவிதழ் “இவங்க இன்னுமா கீழே போகல என்று நினைத்து கொண்டு பூவிதழ் திரும்பி பார்த்தது… ரெஸ்ட் ரூமில் இருந்து காயத்திரியும் வெளியில் வந்தது. என்று அனைத்தும் ஒரு சேர நிகழ்ந்தது.
காயத்திரி பூவிதழ் இருவரும் ஒரு சேர தான் விக்ரம் அந்த மின் தூக்கி பக்கம் நின்று கொண்டு டேனியலை பார்த்து கொண்டே ஒரு கால் மேல் எடுத்தவனின் செயல் என்னவாக இருக்கும் என்று கணித்து கொண்டு இருவரும் ஒரு சேர.
“சார்..” என்று கத்தி கொண்டு அவனை நோக்கி ஒடினர்..
ஒரு சேர ஒடினாலும்.. பூவிதழ் சிறிது பின் தான் காய்த்திரி நின்று கொண்டு இருந்ததால் ஒட்டத்தில் காயத்திரியோடு பூவிதழ் முன் நோக்கி ஒடினாள்.. முன் நோக்கி என்றால் அதிக இடைவெளி இல்லை..
இவர்கள் சார் என்ற கத்தலில் டேனியல் பேசியில் பேசுவதை விடுத்து இவர்களை பார்த்தான்.. ஏன் இந்த பெண்கள் இப்படி ஒடி வருகிறார்கள் என்று..
விக்ரமனும் திரும்பி பார்த்து எடுத்து கால் மின் தூக்கி உள்ளே வைக்க முயல. பூவிதழும் காயத்திரியும் விக்ரம் அருகில் வந்து விட்டனர்..
அருகில் வந்து விட்டனர் என்றால் பூவிதழின் கை நீட்டினால் அவனை பிடித்து விடும் அருகில்.. காயத்திரியும் கை நீட்டினால் விக்ரமை பிடித்து விடும் அருகில் தான் இருந்தாள்.. என்ன ஒன்று பூவிதழ் சாதாரணமாக விக்ரமை பிடித்து இழுப்பதற்க்கு பதிலாக காய்த்திரி முடிந்த மட்டும் எக்கினால் மட்டும் தான் விக்ரமை பிடிக்க முடியும்..
இதில் என்ன இன்னொரு பிரச்சனை என்றால், பூவிதழ் தான் அருகில் இருக்கிறாளே என்று காய்த்திரி யோசிக்கும் நேரம் பூவிதழ் மிக அருகில் விக்ரம் யார் என்று கண்டு கொண்ண்டவள்.. அப்படியே நின்று விட.
விக்ரமனும் இவர்களை இவர்கள் என்பதை விட பூவிதழை பார்த்து கொண்டே தன் காலின் நீளத்தை இன்னும் முன் நோக்கி அந்த மின் தூக்கியில் வைக்கும் முன் காயத்திரி பாய்ந்து விக்ரம் சட்டையை பிடித்ததோடு பின் பக்கம் இழுத்து கொண்டாள்..
அந்த இழுவையில் பேலன்ஸ் பத்தாது இருவரும் பின் பக்கம் விழுந்து விட்டனர்.. டேனிடல் இதை எல்லாம் பார்த்து கொண்டு இருந்தானே ஒழிய உணரவில்லை..
இப்போது கூட காயத்திரி ஏன் இழுத்தாள் என்று கூட விக்ரமுக்கும் தெரியவில்லை.. டேனியலுக்கும் தெரியவில்லை..
அதற்க்குள் அடுத்த மின் தூக்கியில் இருந்து அந்த பழுது பார்ப்பவர் வந்து விட.. பழுது அடைந்த மின் தூக்கியின் அருகில் காயத்திரியும் விக்ரமனுன் விழுந்து கிடப்பதை பார்த்து நிலமையை உணர்ந்து கொண்டான்..
இதில் என்ன ஒரு பிரச்சனை என்றால். விக்ரமனும் காயத்திரியும் கீழே விழுந்த விதம்.. காயத்திரி விக்ரமை பின் பக்கம் இருந்து இழுத்ததால் கீழ் காயத்திரியும் அவள் மேல் விக்ரமனும் விழுந்து கிடந்தனர்.. விக்ரம் பின் பக்கம் மல்லாந்து பார்த்த வாறு..
மல்லாக்காக விழுந்து கிடந்ததில் விக்ரம் தன் முன் நின்று கொண்டு இருந்து எழாது பூவிதழையே பார்த்து கொண்டு இருந்தான்.. பூவிழின் பார்வையும் விக்ரமன் மீது தான் இருந்தது.
என்ன ஒன்று விக்ரம் பூவிதழ் மீது செலுத்திய பார்வை காதல் பார்வை..ஆம் முதல் பார்வையிலேயே பூவிதழ் மீது விக்ரம் காதல் வயப்பட்டு விட்டான். பூவிதழ் யார்..? என்று தெரியாமலேயே.
ஆனால் பூவிதழுக்கு தான் விக்ரம் யார் என்று தெரியுமே. அது மட்டுமா தெரியும்.. அவனின் வில்லத்தனைத்தையும் பார்த்தவள் ஆயிற்றே.. அதனால் பூவிதழின் பார்வை முதலில் விக்ரமை பார்த்து அதிர்ந்து.. பின் காயத்திரி விக்ரமை பிடித்து இழுத்ததில் நிலை உணர்ந்து அய்யோ என்று பதறி பின்.. விக்ரமுக்கு ஒன்றும் இல்லை தெளிவில் அந்த பார்வை இறுதியில் கோபப்பார்வையாக மாறியது..
அந்த பழுது பார்ப்பவரும் டேனியலும் தான் விக்ரம் அருகில் சென்று ..” விக்ரா எழு..” என்று பாவம் நசுங்கி வலியில் முகச்சுலிப்போடு இருந்த காயத்திரியை பார்த்து விக்ரமனிடம் சொன்னது.