அந்த ஒட்டலில் இருந்து பூவிதழ் காயத்திரியை இழுத்து கொண்டு வர.
காயத்திரியோ.. “ஏய் எருமை கையை விடு டீ நானே வரேன். என்னால் ஸ்பீடா நடக்க முடியலடி..” என்ற காயத்திரியின் கத்தலில் தான் அவளின் கை பற்றி வேகமாக இழுத்து சென்ற பூவிதழின் வேகம் குறைந்தது. ஆனால் பிடித்த கையையும் விடவில்லை.. அவளின் நடையையும் நிறுத்தவில்லை..
அந்த ஒட்டலின் வெளியில் நின்று கொண்டு இருந்த ஆட்டோவில் ஏறி அமர்ந்து தாங்கள் செல்ல வேண்டிய இடத்தை சொன்ன பின் தான் பூவிதழ் காயத்திரியின் கையை விட்டது.
பூவிதழ் பிடித்த கை சிவந்து இருப்பதை பார்த்து மீண்டும் காயத்திரி..” எருமை எருமை.. இப்படியா பிடிப்ப எதுக்கு என்னை இப்படி இழுத்துட்டு வந்த..?” என்று கோபத்துடன் தோழியிடம் கேட்டாள்.
பூவிதழோ காயத்திரிக்கு மேல் கோபத்தில். “ அவ்வளவு நேரமா அந்த எருமையை தாங்கிட்டு இருந்தியே அப்போ எதுவும் உனக்கு சிவக்கலையா..?” என்று கேட்ட போது தான் காயத்திரி சந்தேகத்துடன் தன் தோழியை பார்த்தது.. அவள் முகத்தில் ஏதாவது பொறாமை தென்படுகிறதா என்று..
அங்கு கோபம் மட்டுமே தெரிய.. அதோடு அவன் பக்கத்தில் இவள் தான் நின்று கொண்டு இருந்தால் அப்படி இருந்தால் இவள் தானே பதறி போய் காப்பாத்தி இருக்கனும்.. அப்படி எல்லாம் இருக்காது..இவளுக்கு குடும்பம்.. குடும்பத்திற்க்காக படிப்பு வேலை.. இது தானே இவளுக்கு தெரியும் என்று உண்மையை தான் காயத்திரி நினைத்து கொண்டது.
அது உண்மையும் தானே. இப்போது இவளின் இந்த கோபத்திற்க்கும் அவள் குடும்பம் மீது குறிப்பாக அவள் அண்ணன் மீது இவள் வைத்த பாசம் தானே காரணம்..
காயத்திரி பூவிதழின் கோபத்தை மாற்றும் பொருட்டு. “உடம்பு வலிக்குதுடி மெடிக்கல் ஷாப் வந்தா நிறுத்த சொல்..” என்று சொல்ல.. பூவிதழ் அதற்க்கும் திட்டினாள்..
இனி நான் வாயை திறக்க மாட்டேன் என்பது போல் காயத்திரி வாயை மூடிக் கொள்ளவும் தான் எந்த சண்டையும் இல்லாது பூவிதழ் காயத்திரியை அவள் கேட்டது போல மெடிக்கல் ஷாப்பில் நிற்க வைத்து.. ஆயில்மெண்ட் வாங்கி கொடுத்த பின் அவள் வீட்டில் விட்டு விட்டு அதே ஆட்டோவிலேயே தன் வீட்டிற்க்கு போய் இறங்கினாள்.
பூவிதழ் ஆட்டோவில் இருந்து இறங்கும் போதே பார்த்து விட்டாள்.. மொட்டை மாடியில் நின்று கொண்டு சித்தார்த் பார்த்து கொண்டு இருப்பதை.. ஆட்டோ வந்து தன் வீட்டு முன் நிற்கவும் சித்தார்த் கீழே நோக்கி வர. அண்ணன் வருவான் என்று அனுமானித்து கொண்ட பூவிதழும் தன் முகத்தை சாதாரணமாக்க முயன்றாள்..
அவளாள் முயல மட்டும் தான் முடிந்தது.. பூவிதழ் வீட்டிற்க்குள் வரவும் சித்தார்த் மாடியில் இருந்து இறங்கி வரவும் சரியாக இருந்தது..
சித்தார்த் தன்னை கேள்வி கேட்கும் முன் பூவிதழ்.. “என்ன அண்ணா இன்னுமா நீங்க தூங்காம இருக்கிங்க..?” என்று கேட்க. அதற்க்கு சித்தார்த் பின் தொடர்ந்து வந்த ப்ரீத்தி..
“உன் அண்ணன் கொஞ்ச நேரம் முன் என்னை டெலிவரி வார்ட் அனுப்பி விட்டு அவர் செய்வதை ரிகார்சல் பார்த்துட்டு இருந்தார்..” என்ற அண்ணியின் பேச்சு புரியாது பின் புரிந்த பின் சிரித்தவள்.
“அண்ணி நீங்க வர அவர அண்ணனை ரொம்ப கிண்டல் பண்றிங்க.. இது சரியில்ல.. அதுவும் நாத்தனார் கிட்டேயே..” என்று கோபம் போல கேட்க.
அதற்க்கு ப்ரீத்தியோ.. “அய்யோ நாத்தனாரே நான் ரொம்ப பயந்துட்டேன் போ..” என்று பதிலுக்கு கிண்டல் பேச..
எதுவும் பேசாது அமைதியாக நின்று கொண்டு இருந்த சித்தார்த்தை அப்போது தான் ப்ரீத்தி கவனித்தது..
மனைவி தன்னை பார்த்ததும்.. “நீ ரூமுக்கு போ ப்ரீ. நான் பேசிட்டு வரேன்..” என்று சொன்னதுமே ப்ரீத்தி ஏன்..? எதற்க்கு..? என்று கேட்காது திரும்ப மாடி நோக்கி சென்றாள்.. ப்ரீத்திக்கு தெரியும்,. கணவன் தன் மீது எந்த அளவுக்கு காதல் பொழிகிறானோ.. அதே அளவுக்கு அவனிடம் கண்டிப்பும் பெண் பார்த்து இருக்கிறாள்..
சில சமயம் கிண்டல் பேச்சு பேசும் போது தனிமையில். “இது கூட்டு குடும்பம் ப்ரீ. சில சமயம் கிண்டல் பேச்சு கூட நாளை பிரச்சனையா உருவாக சான்ஸ் இருக்கு..
எனக்கு இந்த குடும்பம் ரொம்ப முக்கியது.. இதை நான் உனக்கு சொல்ல தேவை கிடையாது.. பார்த்து நடந்துக்க.. பேசு..” என்று சொல்லி இருக்கிறான்..
மனைவி திரும்பி செல்வதை பார்த்து..” பார்த்து போ ப்ரீ..” அவளின் கற்ப நிலையை நினைத்து சொன்னான். இதோ இந்த அக்கறை தானே ப்ரீத்திக்கு சித்தார்த் மீது பைத்தியமாக இருக்க காரணம்..
மனைவி சென்ற பின் சித்தார்த் தங்கையை பார்த்தவன்..அங்கு இருக்கும் இருக்கையில் அமர சொல்லி தானும் அமர்ந்தான்..
பின். முதலில் “சாப்பிட்டாயா பொம்மா. ஏதாவது குடிக்க எடுத்து கொண்டு வரட்டுமா.?”
மணி பத்து கடந்து விட்டது. சிறிது நாள் முன் சித்தார்த் தன் அன்னையிடமும் சித்தியிடமும் தீர்த்து சொல்லி விட்டான்.. இரவு விழித்து இருக்க கூடாது என்று..
நேரம் கழித்து வருபவர்கள் போட்டு சாப்பிட்டு கொள்வார்கள்.. பெரும் பாலும் அவன் தான் நேரம் கழித்து வருவது.. அவனிடம் ஒரு சாவீ உள்ளது.. மனைவியின் இப்போதைய நிலையில் மனைவியையுமே கஷ்டப்படுத்த மாட்டான் ..
முதல் முறை பூவிதழ் இது போல் இரவு பத்து கடந்து வீட்டிற்க்கு வருவது.. அண்ணனிடம் சொல்லி விட்டு தான் பெண் சென்றாள்.. சித்தார்த்துக்கு அது பிரச்சனை கிடையாது..பிரச்சனை…
தான் கேப் ஏறிய பின் லோகேஷன் ஷேர் செய் என்று சொல்லி செய்யாது போனதோடு.. எப்போதும் பத்து ரூபாய் எதில் மிச்சம் செய்யலாம் என்று பார்க்கும் தங்கை இன்று வந்தது.. உபரோ. ஒலவோ கிடையாது.. தனியார் ஆட்டோ.. பணம் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் அவளே பல முறை வீட்டில் பேசி இருக்கிறாள்..
அப்படி இருக்க அந்த ஆட்டோ.. அதுவும் தான் ஒன்று சொல்லி அதை தங்கை மறந்ததாக சரித்திரமே கிடையாது.. லோக்கேஷன் ஷேர் செய்வது என்ன.. அப்படி முடியாது போனால் தனக்கு கால் பண்ணி சொல்லி விடுவாள்.
இப்படி அனைத்திலுமே, தங்கையின் முரண்பாடான இந்த நடவடிக்கையோடு.. தங்கை தன் முகத்தை வீட்டிற்க்குள் நுழையும் போது சாதாரணமாக காட்டி கொண்டாலுமே, தங்கை அண்ணனை அவ்வளவு புரிந்து வைத்து இருக்கும் போது.. இந்த அண்ணன் அதில் பாதியாவது புரிந்து கொள்ளாது போனால் அவன் என்ன அண்ணன்.?
அதையே தான் சித்தார்த் தங்கையிடம் கேட்டான்.. அவள் குடிக்க எதுவும் வேண்டாம் என்று சொன்னதும். “என்ன பிரச்சனை பொம்மா.. ?உன் அளவுக்கு நான் உன்னை கவனிக்க வில்லை என்றாலுமே. என் பொம்மாவை எனக்கு தெரியும்..” என்று கேட்டான்..
சித்தார்த் கேட்ட பின்பும் சிறிது நேரம் அமைதியாக இருந்தாள்.. அவள் அண்ணனின் பொம்மா.. அவளின் அந்த அமைதிக்கும் காரணமும்.. அண்ணனிடம் சொல்ல கூடாது என்பது இல்லை..
அவனை சொன்னால் அண்ணனுக்கு பழையது நியாபகத்தில் வந்து இப்போது இருக்கும் அவனின் இந்த மகிழ்ச்சியில் சிறிது குறைந்தால் கூட அவள் தாங்க மாட்டாள்.. அதனால் தான் இந்த அமைதி.
பூவிதழின் அமைதியில் சித்தார்த்.. “சரி பொம்மா போய் படு.” என்று சொல்லி எழுந்து மாடி ஏற போக பார்த்தவனிடம்..
“அந்த விக்ரமனை பார்த்தேன் அண்ணா..” என்று கூறினாள்..