பூவிதழ் சொன்ன அந்த பெயரில் சித்தார்த்தின் முகத்தில் புருவம் சுருங்கியது.. யார்..? அந்த விக்ரம் என்று..
சித்தார்த் இப்போது வாழும் இந்த வாழ்க்கையின் திருப்தியில் சாத்வீகாவின் பெயர் சொன்னால் கூட சித்தார்த்துக்கு நியாபகம் இருப்பது சந்தேகம் தான். அவன் முன் காதலை போன ஜென்மம் போல் மறந்து இருந்தான்..
ஆண்டுகள் சென்றால், மறப்பது தான்.. அதுவும் சித்தார்த் போல குடும்பத்தின் மீது பற்றும் பாசமும் இருக்கும் ஆணுக்கு அது எல்லாம் எளிது.. இதில் ப்ரீத்தி போன்ற பெண் மனைவியாக வந்த பின் சாத்வீகாவை எல்லாம் அவன் நினைவில் இருக்குமா என்ன.?
சாத்வீகாவே நினைவில் இல்லாத போது விக்ரம் எப்படி சித்தார்த்தின் நியாபகத்தில் இருக்க போகிறான்..
மாடி செல்ல பார்த்தவன் மீண்டும் முன் அமர்ந்து இருந்த இருக்கையில் வந்து அமர்ந்தவன்..
“விக்ரமா..? யார்.. அது..?” என்று கேட்டவனுக்கு பதில் சொல்ல மீண்டும் பூவிதழ் தயங்கினாள்..அந்த பெயர் சொன்னால் அண்ணன் ஒன்றும் உடைந்து விட மாட்டான் தான்.. ஆனால் அதன் தோல்வி அண்ணனின் நியாபகத்தில் வருமே என்று தயக்கத்தோடு, பூவிதழுக்கு தன் அண்ணனின் அந்த தோல்வியை பற்றி மீண்டும் பேச பிடிக்கவில்லை..
சித்தார்த் முன் போல் எல்லாம் எழுந்து செல்லாது .. விக்ரம் யார்.. என்று நீ சொல்லி தான் ஆக வேண்டும் போல் அமர்ந்திருந்தவன் தங்கையையே பார்த்திருந்தான்..
தங்கையிடம் ஏதாவது பிரச்சனை செய்பவனா..? இப்போது தான் காதல் என்று சொல்லி பின் வருவது பிடிக்கவில்லை என்று சொன்னாலும் தொல்லை கொடுப்பது என்று இருக்கிறதே.. இன்று கல்லூரி கடைசி நாள்.. பின் பார்க்க முடியாது என்று ஏதாவது பிரச்சனை செய்கிறானா.?
தனக்கு தொல்லை கொடுக்க கூடாது என்று தன்னிடம் சொல்ல தயங்குகிறாளா..? என்று மனது தான் ஒன்று என்றால் போதுமே இந்த உலகத்தையே சுற்றி வலம் வந்து விட..
அண்ணன் சொல்லாது விட மாட்டான் என்று. “அது தான் அண்ணா ரொம்ப வருடம் முன் ஒரு பங்களாவுக்கு என்னை அழைத்து கொண்டு போனிங்கலே…” என்று தங்கை சொன்னதுமே சித்தார்த்தின் நியாபகத்தில் வந்து விட்டது.
ஏனோ விக்ரம் யார் என்று தெரிந்ததில் சித்தார்த்தின் பார்வை தன்னால் மாடியை தொட்டு மீண்டு வந்தது..
சித்தார்த்துக்கு தன் மனைவியிடம் தன் முன் காதல் மறைக்க காரணம்.. கண்டிப்பாக அவள் மனது வேதனைப்படும் என்று தெரிந்ததால் மட்டுமே.., அதனை தொடர்ந்து வீட்டவர்களுக்கும் தெரிந்தால், மனது வருந்துவார்கள் குறிப்பாக சித்தி.. அதனால் மாடியை பார்த்த பின்..
“உன் கிட்ட ஏதாவது பேசினானா.” என்று சித்தார்த் கேட்டதற்க்கு. “அவங்க தான் அன்னைக்கு என்னை பார்க்கவே இல்லையே அண்ணா. “ என்று பூவிதழ் சொன்னதும் தான் சித்தார்த்துக்கு அன்றைய நினைவுகள் நியாபகத்தில் வந்தது..
அந்த அளவுக்கு அந்த நாளை சுத்தமாக மறந்து விட்டு இருந்தான் சித்தார்த்.. மறக்க அடித்து இருந்தாள் ப்ரீத்தி.
“அவனை பார்த்ததுக்கு நீ ஏன் இப்படி கோபப்படுற பொம்மா. விடு.. என்னை பொறுத்த வரைக்கும் எனக்கு அவன் நல்லது தான் செய்து இருக்கிறான். நீ இதை எல்லாம் யோசிக்க வேண்டாம். அவனை எங்காவது பார்க்க நேர்ந்தாலும் அதை நீ ஈசியா கடந்து போய் விடனும்..” என்று சித்தார்த் சொல்ல பூவிதழுக்கு தான் அண்ணன் சொன்ன வாக்கே வேதம் ஆயிற்றே.. அதை அப்படியே கடைப்பிடிக்க எண்ணினாள்..
ஆனால் அதற்க்கு விக்ரம் விட வேண்டுமே.
விக்ரம் தன் நண்பனிடம் கொடுத்த புட்டேஜ் கவரேஜ் போதாது கார்களை நிறுத்தும் இடம்.. பின் ஒட்டலின் முன் பக்கம் முகப்பு பகுதியின் புட்டேஜூம் கேட்டு வாங்கி கொண்டவன் தான் எப்போதும் நாடும் அந்த டிடெக்டீவ் ஏஜன்ஸ்ஸியிடம் தன்னிடம் இருந்த புட்டேஜ்ஜை கொடுத்து விட்டு இருவரின் முழு விவரமும் வேண்டும்.. இது பர்சனல் என்று சொன்னதுமே..
அந்த டிடெக்டீவ்.. “இவ்வளவு விவரம் கொடுத்து இருக்கிங்க. சென்னையா இருந்தால் ஒரே நாளில் முழு விவரமும் உங்க மெயில் ஐடிக்கு அனுப்பி விடுகிறேன்..” என்று சொன்னதும்.
விக்ரம்.. “சென்னையா தான் இருப்பாங்க..” ‘ என்று அவன் அனுமானத்தை கூறினான்.
“அப்போ சீக்கிரம் விவரத்தை சேகரித்து சொல்லி விடுகிறேன் சார்.” என்று விட்டார்..
சொன்னது போல் ஒரே நாளில் காயத்திரி பூவிதழின் அனைத்து விவரங்களும் விக்ரம் மெயில் ஐடிக்கு வந்து விட்டது.
விக்ரம் முதலில் காயத்திரியின் விவரங்களை தான் படித்தான்.. பெயர்.. படிப்பு பெற்றோர் உடன் பிறந்தோர் என்று பார்க்கும் போது காயத்திரியின் சகோதரன் அவனின் கார் நிறுவனத்தில் தான் வேலை செய்கிறான்..
உடனே தன் நிறுவனத்தை தொடர்பு கொண்டு.” ஆகாஷ் பெயர் சொல்லி தற்போதைய வேலையில் இருப்பவன்.. அவனுக்கு கொடுக்க வேண்டிய பதவி சம்பளம் உயர்வு. சொல்லி விட்டு வைத்தவன்.
காயத்திரி மேல் படிப்பை படிக்க போகிறாள் என்று போட்டு இருந்ததில் படித்து முடித்து விட்டு பார்க்கலாம்.. பணத்தில் ஏதாவது உதவி தேவைப்பட்டால் காயத்திரி அண்ணன் ஆகாஷ் தன் கம்பெனியில் தானே வேலை பார்க்கிறான்.. அப்போது பார்த்து கொள்ளலாம்.. என்று முடிவு செய்தவன்..
அடுத்து பூவிதழ் விவரம்.. அவளின் விவரம் திறக்கும் போது முதலில் அவளின் புகைப்படத்தில் இருந்து அடுத்த தகவலுக்கு போகவே அரை மணி நேரம் கடந்து இருந்தது..
விக்ரம் இதற்க்கு தான் காயத்திரியின் விவரங்களை முதலில் பார்த்தது..
அரை மணி நேரம் சென்ற பின் கூட பூவிதழின் புகைப்படத்தை அடுத்து பார்க்க முடியவில்லை தான்..
விக்ரமனின் கண் மீண்டும் மீண்டும் அந்த புகைப்படத்தில் தான் சென்றது.. அடுத்து விவரம் பார்த்தால் தானே.. அவளை அனுக முடியும் என்று தான்.. அடுத்து தகவல்களை படிக்க ஆரம்பித்தான்..
பெயர் பூவிதழ். நல்ல பெயர்.. அந்த பெயரையே மீண்டும் மீண்டும் படித்து கொண்டு இருந்த விக்ரமுக்கு அவனுக்கு அவனே புதியதாக தெரிந்தான்.
விக்ரா நீ ஒரு பிசினஸ்மேன் டா.. என்னவோ காலேஜ் படிக்கும் டீன் ஏஜ் போல பிகேவ் பண்ற என்று அவனுக்கு அவனே கேட்க. டீன் ஏஜ்ல கூட நான் இப்படி இருந்தது இல்லையே.. என்று அதுவும் அவனே நினைத்து கொண்டான்..
பூவிதழின் அடுத்த அடுத்த விவரங்களான படிப்பு முதல் அவள் எடுத்த மதிப்பெண்.. கல்லூரி காம்பேஸ் மூலம் வேலை கிடைத்தது .. எங்கு என்று பூவிதழின் தனிப்பட்ட விவரங்கள் படிக்க படிக்க விக்ரம் முகத்தில் பூத்திருந்த அந்த புன்னகை வாடாது தான் இருந்தது.
பரவாயில்லை நல்ல படிப்பாளி தான் என்று.. பின் பூவிதழின் குடும்ப விவரங்களை முதலில் அவன் சாதாரணமாக தான் படித்து கொண்டு இருந்தான்.. பெரியப்பா தந்தை இருவரும் இல்லை.. கூட்டு குடும்பம் என்ற இந்த விவரங்கள் படித்து கொண்டு இருக்கும் போதே விக்ரம் மனதில் இதே போன்ற விவரங்களை முன் படித்த நியாபகம் அவனுக்கு.
எங்கு என்று யோசித்து கொண்டே சித்தார்த் பற்றிய தகவல்கள் வர… மனதில் மணி அடித்து விட்டது
இவ்வளவு நேரமும் இருந்த இதம்.. அவன் மனதில் மறைந்து விட்டது.. ஷிட் என்று தலையில் அடித்து கொண்டான்..
விக்ரம் பூவிதழ் பற்றி விவரம் கேட்க காரணம்.. காதல் தான்.. ஆனால் காதல் சொல்லி திருமணம் செய்ய அவனுக்கு நேரம் இல்லை என்பதை விட. பெண்ணுக்கு காதல் ஏதாவது இருக்கிறதா என்று தெரிந்து கொள்ளவும் தான்..
இருந்தால், பின் அதை எப்படி ஹான்டில் செய்து கொள்வது என்று பார்த்து கொள்ள நினைத்தானே தவிர.. பூவிதழை தவிர்க்க நினைக்கவில்லை..
அதோடு டாட் திருமண பேச்சை ஆரம்பித்து விட்டார்.. தனக்கு பிடித்த பெண்ணை கேட்க சொல்லலாம் என்றும் தான். அப்பா மறுத்தாலுமே, இவள் தான் தன் மனைவி என்று மனதில் முடிவு எடுத்து விட்டான் தான்.. தந்தை மறுக்க மாட்டார் என்பதும் தெரியும்.. காரணம் அக்காவின் வாழ்க்கை இப்படி ஆனது..
இப்படி விக்ரம் பிரச்சனை இந்த வகையாக வந்தால் என்ன செய்வது என்று யோசித்தானே தவிர.. இந்த பிரச்சனை வரும் என்று விக்ரம் நினைத்து கூட பார்க்கவில்லை.
இதை பற்றி யோசிக்க வேண்டும்.. இனி பூவிதழை எந்த வகையாக அனுகுவது என்று..
ஆம் எங்கனம் அவளை அனுகலாம் என்று யோசித்தானே தவிர. அவள் வேண்டாம் என்று அவன் மனது யோசிக்கவில்லை..
கம்புயூட்டரை ஷெட்டவுன் செய்து விட்டு, தன் அறைக்கு பின் இருந்த ஸ்வும்மிங்க புல் பக்கம் அவனின் கால்கள் சென்றன.
தன் பாக்கெட்டில் இருந்த சிகரெட்டை வாயில் வைத்து பற்ற வைத்தவனின் திட்டம் மனதில் கட கட என்று திட்டம் வகுக்க ஆரம்பித்தது.
திருமணம் செய்து பின் தன் காதலை பெண்ணவளுக்கு தெரியப்படுத்தலாம் என்று நினைத்தான்.. இப்போது அதில் சிறு மாற்றம்..