“பொம்மா.. கோயிலுக்கு போயிட்டு போகனும்.. எல்லாம் எடுத்து வைத்து கொண்டாயா..?”
முதல் நாள் வேலைக்கு செல்லும் தங்கையை முதல் நாள் பள்ளிக்கு செல்லும் சின்ன குழந்தையை போல் நடத்தி கொண்டு இருந்தான் சித்தார்த்..
“எல்லாம் எடுத்து வைத்து விட்டேன் அண்ணா..” என்று அண்ணன் எத்தனை முறை கேட்டாலும் சலித்து கொள்ளாது தங்கை பதில் அளித்து கொண்டு இருந்தாள்..
இந்த கூத்தை தான் காலையில் இருந்து மொத்த குடும்பமும் பார்த்து கொண்டு இருந்தது..
பத்மினி தன் ஒரவத்தியிடம்.. “அக்கா வேலைக்கே சித்து இந்த ரகளை செய்யிறேனே. நாளைக்கு கல்யாணம் செய்த பின் மாமியார் வீட்டிற்க்கு அனுப்பும் போது .. என்ன செய்வான் என்று தெரியலையே. போகிற போக்க பார்த்தால் வீட்டோடு மாப்பிள்ளை பார்ப்பான் போல..” என்ற இந்த பேச்சை இருவரும் ரசிக்கவில்லை..
சித்தார்த்.. “ஒரு குடும்பத்தில் இருந்து பிரித்து இங்கு வந்து வைக்கனும் என்ற நினைப்பு எனக்கு எப்போவும் வராது சித்தி. சொல்லலாம் பெண்கள் வரவில்லையா என்று…” என்று விட்டான்..
பூவிதழ் அண்ணனின் இந்த பேச்சுக்கு அவள் கை பைய்யில் அனைத்தும் இருக்கிறதா. என்று அண்ணன் மீண்டும் ஒரு முறை பார்க்க சொல்ல அண்ணன் பேச்சுக்கு பார்த்து கொண்டு இருந்தவள் தலை நிமிர்ந்து தன் அண்ணனை பார்த்தாள்..
அவளுக்குமே தன் அன்னை வீட்டோடு மாப்பிள்ளை என்ற பேச்சு.. அந்த நாளை தானே நியாபகம் படுத்தியது.. அண்ணனுக்கும் அந்த நினைவு வந்து இருக்குமா என்று யோசனையை தடை செய்வது போல் சித்தார் ப்ரீத்தி அண்ணியிடம்..
“நான் பொம்மாவை கோயிலுக்கு அழச்சிட்டு அப்படியே பேங்குக்கு போயிடுவேன். ஈவினிங் சீக்கிரம் வரேன்.. செக்கப்புக்கு போகலாம். மெடிகல் பைல் எல்லாம் ரெடியா எடுத்து வைத்து கொள்.” என்ற அண்ணனையே பார்த்து கொண்டு இருந்த பூவிதழை சொன்னது போல் கோயில் பின் தங்கையை அவள் வேலை பார்க்கும் இடத்திற்க்கு கொண்டு சென்று அனைத்து பத்திரத்தையும் சொல்லி விட்டு தான் பேங்க் நோக்கி அவன் பைக் சென்றது..
அண்ணனை நினைத்து கொண்டே தன் புது அலுவலகத்தை நோக்கி சென்றவளுக்கு, ஏனோ இன்று அண்ணனை போல் தனக்கு கணவன் கிடைப்பானா..? வீட்டையும் பார்த்து கொண்டு அன்னை தங்கை என்று.. மனைவிக்கு செய்வதிலும் எந்த குறையும் வைக்காது.. என்று இன்று ஏனோ புதியதாக அந்த எண்ணம் அவள் மனதில் தோன்றியது..
பின் அவளே என்ன இது.. வயது இருபத்தி ஒன்று தான்.. அதற்க்குள் வருங்கால கணவனின் நினைவு.. பொம்மா இது ரொம்ப தப்பும்மா.. ஒரு வீட்டிற்க்கு ஆண் தான் அனைத்தும் பார்க்க வேண்டும் என்பது இல்ல..
சொத்துக்கு பெண்களுக்கு சம உரிமை கொடுத்து இருக்காங்க. அப்போ குடும்பத்தை காப்பாற்றுவதிலும் பெண்கள் பங்கு இருக்க வேண்டும் அல்லவா. அண்ணன் எத்தனை தான் பார்த்து கொள்வான்.. நாம் வேலையில் நல்ல நிலைக்கு வர வேண்டும் முன் நினைத்தது போல் வெளி நாட்டிற்க்கு சென்று குடும்பத்தை செட்டில் செய்ய வேண்டும் என்று அசந்தர்ப்பம் வசமாக நினைத்த தன் வருங்காக கணவனை பற்றிய நினைப்பை ஒரம் கட்டி வைத்து விட்டு முன் நினைத்தது செயல் படுத்த தன் புதிய அலுவலகத்தை நோக்கி சென்றாள்.
எந்த ஒன்றும் தான் நினைப்பது மட்டுமே நடப்பது இல்லையே.
பூவிதழ் அலுவலகம் அதே நேரம். விக்ரம் பூவிதழ் வேலைக்கு சென்ற முதலாளியான விக்னேஷிடம் பேசிக் கொண்டு இருந்தான்..
“இந்த அளவுக்கு லவ் பண்றேன்னா சொல்லி மேரஜ் செய்து கொள் மேன்..” என்று விக்னேஷ் சொன்னதற்க்கு..
“கொஞ்சம் பர்சனல் இஷ்யூ ..” என்று மட்டும் சொல்லி விட்டான்..
பூவிதழ் பாவம் இது தெரியாது தனக்கு கொடுக்கப்பட்ட பிரஜெக்ட் இல்லாது வேறு ஒன்றுக்கு தன்னை மாற்றியதில் பெண் குழம்பி போய் விட்டாள்..
என்ன என்று கேட்ட போது மேலிடம் உத்தரவு.. அவ்வளவு தான் அவளுக்கு பதில் கிட்டியது…
இந்த கம்பெனி தான் செய்து கொடுத்த அந்த பிரெஜெக்ட்டை பார்த்து தான் தன்னை வேலைக்கு தேர்வு செய்தது..
வேலை கொடுக்கும் போது.. “நீங்க செய்த இந்த பிரஜெக்ட் சம்மந்தமான வேலை தான்.. உங்களை வேலைக்கு எடுத்த காரணமும் நீங்க செய்த பிரஜெக்ட் நல்ல முறையில், அதுவும் தனித்து செய்து கொடுத்து இருக்கிறிங்க என்பதினால் தான்..” என்று சொன்னதோடு இவள் அந்த பிரஜெக்ட்டை தனித்து தான் செய்தாளா.. என்று சில கேள்விகளும் கேட்டு தெளிவு படுத்திய பின் தான் அவளுக்கு இந்த வேலை கிடைத்தது..
ஆனால் இப்போது தான் பார்க்க வந்த வேலைக்கும் சம்மந்தம் இல்லாத வேலையை பார்க்க சொன்னது..
அதுவும் வேலையும் எதுவும் இல்லாதது போல். ஏதோ கொடுக்க வேண்டுமே என்று ஒரு சில வேலைகளை பார்.. என்று “ரொம்ப அலட்டி கொள்ள எல்லாம் வேண்டாம்..” என்னடா இது தான் இருந்தது பூவிதழுக்கு ..
ஏதோ மனதில் படுகிறது அது என்ன என்று சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை.. பூவிதழுக்கு..
ஆனால் ஒன்று மட்டும் புரிந்து கொண்டாள்.. இந்த வேலையில் இருந்தால், நாம் நினைத்த உயரத்தை எட்ட முடியாது என்பது..
பூவிதழுக்கு வேலை அதிகம் கிடையாது.. அதனால் உடல் சோர்வு இல்லை.. ஆனால் மனது சோர்ந்து விட்டது பெண்ணுக்கு..
எத்தனை எத்தனை கற்பனையோடு இந்த பணிக்கு சேர்ந்த பெண்ணுக்கு, இந்த வேலை மாற்றத்தில் மனது சோர்ந்து போயின..
மதியம் சித்தார்த் அவன் வங்கி உணவு நேரத்தில் தங்கையை அழைத்து விட்டான். “வேலை எப்படி இருக்கிறது.. அலுவலகம் எப்படி.. உடன் பணிபுரிபவர்கள் எப்படி என்று.” கேட்ட கேள்விகள் அனைத்திற்க்கும் அண்ணனுக்கு பதில் கிடைத்து விட்டது.. ஆனால் தங்கையின் குரலில் இருந்தே சித்தார்த்துக்கு அவளின் மன நிலை புரிந்து விட்டது.
“என்ன பிரச்சனை..?” என்று கேட்டவனுக்கு பூவிதழும் சொல்லி விட்டாள்.. “நான் சேர நினைத்த வேலையை எனக்கு இப்போது கொடுக்கவில்லை என்று..”
சித்தார்த்துக்கு இந்த தனியார் வேலைகளை பற்றி அதிகம் தெரியவில்லை. படித்து முடித்ததுமே அரசு வங்கியில் வேலையில் அமர்ந்து விட்டான்..
அதனால்.. “அந்த வேலையில் ஆள் இருப்பாங்க.. ஏதாவது செய்வாங்க. இதுக்கு என்று நீ இப்படி சோர்ந்து போய் விடுவாயா..?” தங்கையை தேற்றினான்..
அப்போதும் தங்கையின் குரலில் மாற்றம் இல்லாது போய் விட.. “ நான் வரட்டுமா.. பொம்மா..” என்று அண்ணன் கேட்டதும் தான் பெண் சுதாகரித்து கொண்டு விட்டாள்..
“ஒன்னும் இல்ல அண்ணா ஒகே தான்..” என்று அப்போதும் சித்தார்த் விடாது..
“உன்னை ஈவினிங்க நான் வந்து பிக்கப் செய்து கொள்கிறேன்..” என்றும் விடாது கேட்க.
பூவிதழ்..”அண்ணா அண்ணிக்கு ஈவினிங் டாக்டர் கிட்ட அப்பாயிட்மெண்ட் இருக்கு.. அதை மறந்து பேசுறிங்க. அது தான் இம்பார்ட்டென்ட் எய்ட் மந்த் ஸ்கேன் எடுக்கனும் வேறு சொன்னாங்கலே.” என்று நியாபகம் செய்தாள்..
சித்தார்த்துக்கு தங்கை சொல்லாமலேயே தெரியும் தான்.. ஆனால் தங்கையின் இந்த சோர்ந்த குரலில் என்ன செய்ய என்று நினைத்தவன் பின் என்ன நினைத்தானோ..
“பொம்மா ஒன்னு சொல்றேன் கேட்டுக்கே.. இது வரை பள்ளி கல்லூரி ஏன் மதிப்பெண்ணில் இருந்து எல்லாமே நீ திட்டம் இட்டப்படி தான் நடந்தது. முதல் முறை இந்த விசயம்.. நீ நினைத்தது நடக்கவில்லை என்று சோர்ந்து போயிடாதே.. புரியுதா..? நம்ம மனது நிம்மதியும் சந்தோஷமும் நம்ம கிட்ட தான் இருக்கு வெளியில் தேட கூடாது..
பிடித்தது கிடைக்கவில்லை என்றால். இதை விட அதிகமான ஒரு பிடித்தம் உனக்கு கிடைக்க இருக்கு என்று நினைத்து கொள்..” என்று விட்டான்..
இப்போது பூவிதழ் கொஞ்சம் தெளிந்து கொண்டாள்.. “சரிண்ணா சரிண்ணா..” என்று சொன்ன இந்த குரலை கேட்ட பின் தான் அண்ணன் அங்கு நிம்மதியாக வேலை பார்க்க தொடங்கினான்,,
விக்ரம் பூவிதழ் வேலை பார்க்கும் முதலாளிக்கு அழைத்து விட்டு. “பூவம்மா எப்படி இருக்கா..?” என்று கேட்டதும் விக்னேஷ்.. யார் பூவம்மா என்று யோசிக்க..
விக்ரமனின் எதிரில் அமர்ந்து இருந்த டேனியலோ. “அந்த கம்பெனி சாமீ படத்திற்க்கு என்று தினம் பூ கொண்டு வந்து கொடுக்கும் பூவம்மாவையா கேட்கிற..?” என்று கேட்டான்.. இது விக்னேஷ் காதிலும் விழ.
“அவங்களையா விக்ரா.. ஆனா நீ பூவிதழ்..” எனும் போது தான்..விக்னேஷுக்கு மண்டையில் பல்பு எரிந்தது..
“ஒ பூவிதழை தான் பூவம்மா என்றியா.?” என்று கிண்டலோடு கேட்டவன்.
பின் விக்ரம் கேட்டதற்க்கு.. “அந்த பெண் ரொம்ப பிரிலியண்ட் விக்ரா. பாவம் அவங்க எதிர் பார்த்த பிரஜெக்ட் கிடைக்காதது ஒரு மாதிரி தான் இருந்தாங்க. இப்போ பரவாயில்லை தான் இருக்காங்க.” என்று இந்த பேச்சு பேசும் போது நேரம் நான்கு கடந்து இருந்தது.
விக்னேஷின் பேச்சை கேட்டு கொண்ட விக்ரம் அதற்க்கும் ஒன்றும் சொல்லவில்லை.. மீண்டும் விக்னேஷ்.. ‘”உனக்கு இந்த அளவுக்கு பிடித்து இருந்தா பெண் கேட்டு விடு விக்ரா..” என்று கூற அதற்க்கும் விக்ரம் எதுவும் பேசாது மறுப்பும் சொல்லாது அமைதியாக தான் இருந்தான்..
பின் விக்னேஷ் அவன் விருப்பம் என்பது போல் பேசியை வைத்து விட்டான்..
ஆனால் எதிரில் அமர்ந்து அவனையும் அவன் பேசுவதையுமே கவனித்து கொண்டு இருந்த டேனியலுக்கு விக்ரமனிடம் வேறு எதுவோ இருப்பது போல் தோன்றியது.. குறிப்பாக அந்த பெண் பூவிதழ் விசயத்தில்..
டேனியலுக்கு விக்ரமை மேற்படிப்பு படிக்கும் காலம் தொட்டே தெரியும் என்றாலும் பர்சனல் விசயங்களை சொல்லும் அளவுக்கு இல்லை.. நெருங்கி பழக்கம் என்றால் இதோ சமீபத்திய டேனியல் சென்னை வருகைக்கு பின் தான்.. அதனால் ஏதோ இருக்கிறது என்று அறிந்து கொண்டாலும் நாகரிகம் தெரிந்து டேனியல் விக்ரமனிடம் கேட்கவில்லை.
ஆனால் விக்ரம் டேனியல் கேட்காத போதும் தன் மனதில் இருப்பதை கொட்டி விட்டான்.. இன்னும் கேட்டால் விக்ரம் இது போல் சொல்லும் ஆளே கிடையாது..
ஆனால் சமீபத்திய அவனின் முரண்ப்பட்ட செயல்பாடுகளை அவனை அனைத்தும் சொல்ல வைத்தது.
சென்ற வாரம் தான் அவன் சகோதரி சாத்வீகாவுக்கும் முகேஷுக்கும் ஒன்றும் இனி இல்லை என்று நீதி மன்றத்தில் தீர்ப்பு வந்தது.. அதாவது முறையாக விவாகரத்து என்று..
குழந்தையை வந்து தந்தை பார்த்து செல்லலாம்.. அன்னை தந்தை இருவரின் இடம் சென்னை மும்பை படிப்பு பாதிக்கப்படும் என்று நீதி மன்றம் குழந்தைகளை அலைய விடாது.. குழந்தைக்கு முக்கியத்தும் தந்து இது போல் தீர்ப்பு கொடுத்து விட்டது..
தந்தை சிறிது நாள் உன் தனிப்பட்ட வீட்டிற்க்கு போக வேண்டாம் நம் வீட்டிலேயே இருந்து விடு என்றதில் சாத்வீகா ஒரு வாரமாக தந்தை வீட்டில் தான் இருக்கிறாள்.
அவளையும் அவள் குழந்தையையும் பார்க்கும் போது தப்பு செய்து விட்டோமோ என்ற அவன் மனது இடித்து உரைத்து கொண்டு இருந்தது..
முதல் குழந்தைக்கு இப்போது தான் ஐந்து வயது .. இரண்டாம் குழந்தைக்கு அடுத்த மாதம் தான் இரண்டு வயது தொட உள்ளது.
இந்த வயதிலேயே தந்தை அருகாமை கிட்டாது இருக்க தானும் ஒரு காரணம் ஆகி விட்டோமோ.. அதுவும் எந்த அந்தஸ்த்தை மனதில் வைத்து சாத்வீகாவை சித்தார்த்துக்கு கொடுக்க விருப்பம் இல்லாது திட்டம் போட்டு அவள் வாயில் இருந்தே சித்தார்த்தை வேண்டாம் என்று சொல்ல வைத்து அனைத்து திட்டமும் போட்டு தங்கள் அந்தஸ்த்து உள்ள இடத்தில் திருமணம் செய்து வைத்து அந்த வாழ்வு அவளுக்கு நிலைக்காது போனதில் ஒரு குற்றவுணர்ச்சி என்றால், அதே வீட்டு பெண்ணை தனக்கு பிடித்து.. தான் அவளை திருமணம் செய்ய என்ன எல்லாம் செய்து கொண்டு இருக்கிறோம்..
பூவம்மாவை திருமணம் செய்த பின்.. சாத்வீகாவுக்கு இன்னும் மன உளச்சலை கொடுக்காதா..? அதுவும் பூதவிதழை பற்றி தெரிந்து கொள்ள டிடெக்டிவ் கொடுத்த தகவல்களில் சித்தார்த் பற்றியும் இருந்ததே.. அதில் திருமணம் முடிந்து அந்த பெண்ணும் கன்சீவாக உள்ளாள் என்று ..
இரு குடும்பம் ஒன்றாக இருக்கும் போது சாத்வீகாவுக்கு சங்கடம் கொடுக்காதா..? இரண்டு மூன்று நாட்களாக விக்ரமுக்கு இதே தான் யோசனை..
ஆனாலுமே விக்ரம் பூவிதழை நெருங்கும் வேலைகளை மட்டும் கை விடவில்லை.. எந்த காரணத்தை தொட்டும் பூவிதழை இழக்க மட்டும் அவன் மனது இடம் கொடுக்கவில்லை.
இதை அனைத்தும் சேர்ந்து தான் விக்ரம் விக்னேஷ் கருத்துக்கு எதும் சொல்லாது அமைதி காத்தது..
விக்னேஷ் பேசியை வைத்த பின்னும் ஏதோ யோசனையில் தான் இருந்தான் விக்ரம்..
அவனையே பார்த்து இருந்த டேனியல் என்ன நினைத்தானோ.. “சரி விக்ரா நான் கிளம்புறேன்.. நீ உன் வேலையை பார்..” என்று எழுந்து கொண்டான்.. அப்போது அவர்கள் இருந்தது விக்ரமனின் அலுவலகத்தில்.
எழுந்து கொண்ட டேனியலை பார்த்த விக்ரம்.. “ட்ரீங்ஸ் எடுத்துக்கலாமா.? எனக்கு கம்பெனி தர்றியா.?” என்று கேட்டதும் எழுந்த டேனியல்.. “இங்கேயா..?” என்று விக்ரமை பார்த்து கேட்டதும் விக்ரம் சட்டென்று எழுந்து கொண்டு.
“என் கெஸ்ட் அவுசுக்கு போய் விடலாம்..” என்று விட்டான்..
டேனியலுக்கு நல்ல வேளை.. அவன் வீட்டிற்க்கு அழைத்து செல்லாத வரை நல்லது என்று உடனே சரி என்று விட்டான்..டேனியலுக்கு இன்னும் விக்ரமனின் சகோதரியை நேர் கொண்டு பார்க்க இன்னுமே சங்கடப்பட்டு கொண்டு தான் இருந்தான்..
இதோ இப்போது டேனியல் நல்ல வேளை அவன் வீட்டிற்க்கு அழைக்கவில்லை என்று நினைப்பவன் தான் இப்போது விக்ரம் தன்னிடம் பகிரப்போகும் விசயத்தை கேட்டதும்..