டேனியல் பேசியதை கேட்ட விக்ரம் வெடுக்கென்று தலை நிமிர்ந்து நண்பனை பார்த்தான்..அவன் சொன்னது அது தானா..? இல்லை நேற்று அருந்திய மதுவின் மிச்சம் நம் மூளையில் தங்கி விட்டதா என்று..
அதிர்ந்து பார்த்த விக்ரமின் முகத்தை டேனியலும் பார்த்து கொண்டு இருந்தான்.. அவன் முகம் சாதாரணமாக இருக்க அதில் இருந்து ஒன்றும் புரிந்து கொள்ள முடியாது போக விக்ரம்..
“வாட் கம் அகையின்..” என்று மீண்டும் ஒரு முறை சொல்..என்று கேட்டவனுக்கு..
டேனியல்.. “உன் சிஸ்டரை நான் மேரஜ் செய்து உன்னை தோஸ்தில் இருந்து மச்சானா பிரமோட் பண்ண ஆசைப்படுறேன் விக்ரா..” என்று சொன்ன டேனியல் வார்த்தைகளில் அவ்வளவு நிதானம் இருந்தது… குரலில் அவ்வளவு பிடிவாதம் தெரிந்தது..
டேனியல் பேச்சுக்கு விக்ரம் ஒன்றும் பேச வில்லை.. சிறிது நேரம் நண்பனின் முகத்தையே பார்த்து கொண்டு இருந்தவன்.. ஒரு சிகரெட்டை எடுத்து வாயில் வைத்து கொண்டு லைட்டரை தேட நண்பன் லைட்டரை கொண்டு வந்ததோடு அவன் சிகரெட்டில் பற்ற வைத்து விட்டு அவனுமே ஒன்று எடுத்து புகைக்க ஆரம்பித்தான்..
இருவரும் சிகரெட்டின் நுனி சாம்பலாகும் வரை புகைத்து முடிக்கும் வரை எதுவுமே பேசவில்லை.. இருவரின் பார்வையும் அவர்கள் தங்கி இருந்த கெஸ்ட் அவுஸின் பின் பக்கம் இருந்த அலைக்கடல் மீதே நிலைத்து இருந்தது.
இருவரும் மற்றவர் பேசட்டும் என்று காத்து கொண்டு இருந்தனர் போல்.. அந்த அமைதியை கெடுக்க மீண்டும் விக்ரமனின் பேசி ஒசை எழுப்ப.. விக்ரம் எடுத்து பார்த்தவன்.. அதை எடுக்காது வைத்து விட்டான்..
டேனியலும் விக்ரமுக்கு வந்த அழைப்பையும் கேட்டான் .. அந்த அழைப்பு யாரிடம் இருந்து வந்தது என்பதையும் பார்த்தான்.
அதனால் மீண்டும் பேசியை எடுத்து விக்ரமிடம் கொடுத்த டேனியல். “ பேசு.” என்று அதட்டுவது போல் சொல்ல.
விக்ரமனும் அதே அரட்டல் குரலிலேயே தான்.. “என்ன பச்சாதாபமா…?” என்று கேட்டவனுக்கு..
“பச்சாதாபம் படுற அளவிலா நீ உன் சிஸ்ட்டரை வைத்து இருக்க..?” என்று கேட்ட டேனியல் குரலில் கோபம் தெரிந்தது..
அவன் கேட்டதற்க்கு பதில் சொல்லாது.. “வேண்டாம் தோஸ்த் இது சரிபடாது..” என்று அழுத்தமாக சொல்லி விட்டான் விக்ரம்..
அவனின் அழுத்ததிற்க்கு மேல் டேனியல்.. “ ஏன் சரியா வராது..?” என்று கேட்டவனுக்கு..
“யூ எலிசிபல் பேச்சிலர் ..ஆனா என் சிஸ்டர் டைவஸி.. டூ பேபி இருக்காங்க.. அதோட ஏஜ்..” என்று இருவருக்கும் இருக்கும் வேறு பாட்டை பட்டியலிட்டான் விக்ரம்..
இது எல்லாம் டேனியலுக்கே தெரியுமே.. விக்ரம் என்ன புதியதாக சொல்வது.
“வேறு ஏதாவது காரணம் இருக்கா விக்ரா..?” என்று கேட்டவனை கோபத்துடன் பார்க்க முயன்று முடியாது போக மீண்டும் முன் அமர்ந்து இருந்த இருக்கையில் வந்து விக்ரம் அமர்ந்து கொள்ள.. அவனை தொடர்ந்து டேனியலும் வந்து அமர்ந்தவன்..
“நீ பேச்சிலர் என்பதை எதை வைத்து.. மேரஜா இல்ல பிசிக்கல் ரிலேஷன் ஷிப் வைத்தா என்று எனக்கு தெரியல விக்ரா. பிசிக்கல் என்றால், நானும் அதுல பிட் இல்ல. அது உனக்கே தெரியும்..” ஜெர்மனியில் டேனியல் ஒரு பெண்ணிடம் டேட்டுங்க் என்று சென்று பின் ஒரு மாதம் காலம் ஒன்றாக இருந்தது விக்ரமுக்கு தெரியும்.. பின் சரிப்பட்டு வராது பிரிந்ததுமே..
“விக்ரா நீ அதை வைத்து தான் சரிப்படாது என்று சொல்றியா தோஸ்த்.. ஏற்கனவே முகேஷ் அது போல..” என்றவனின் பேச்சை விக்ரம்..
“ஷட்டாப் டேனி..” என்று விக்ரம் டேனியலின் அந்த பேச்சை நிறுத்தினான்..
“அப்போ எதை வைத்து சொல்ற.. விக்ரா..?” என்று மீண்டும் மீண்டும் டேனியல் அதை வைத்தே பேச..
விக்ரம் “ஒன் மினிட்..” என்று கேட்டு விட்டு குளியல் அறைக்குள் சென்று வந்தவனின் முகம் கழுவப்பட்டு இருந்தது.. அதை அங்கு இருந்த பூந்தூதவாளையை கொண்டு துடைத்துவன் மீண்டும் டேனியல் எதிரில் அமர்ந்தவன்..
“டேனி இது விளையாட்டு சமாச்சாரம் கிடையாது..எதை வைத்து நீ இது சரி வரும் என்று சொல்ற…?” என்று கேட்ட விக்ரமனின் குரலில் அவ்வளவு கவனம் காணப்பட்டது..
“எனக்கு பிடித்து இருக்கு விக்ரா.”
“உன் பிடித்தம் மட்டும் போதுமா டேனி.. இதையும் தான்டி நிறைய இருக்கு.. ரிலிஜியன். உங்க பேமிலி.. முக்கியமா சாத்வீகா.” என்று இது சரிப்பட்டு வராது என்று விக்ரம் நிறைய காரணத்தை அடுக்கினான்..
டேனியல் கேட்டது ஒன்று தான்.. “நீ உன் சிஸ்டருக்கு இன்னொரு மேரஜ் செய்யும் ஐடியாவில் இருக்க தானே..”
அதற்க்கு உடனே. “கண்டிப்பா.. இன்னும் ஒன் இயரோ.. டூ இயர் கழித்தோ கண்டிப்பா சாதுவுக்கு மேரஜ் செய்வேன்..” என்று அழுத்தம் திருத்தமாக கூறினான்..
“அப்போ அந்த மேரஜ என் கூட செய்து கொடு விக்ரா. அவ்வளவு தான் வெரி சிம்பிள்..” என்று விட.
விக்ரமுக்கு ஆயாசமாக போனது.. தன் காதல் எப்படி போகுமா என்ற குழப்பத்தில் இங்கு வந்தால், இங்கு இன்னொரு குழப்பம் வந்து அவன் தலை மீது அமர்ந்து கொண்டது..
விக்ரம் முகத்தை பார்த்து டேனியல் என்ன நினைத்தானோ.. விக்ரம் அருகில் அமர்ந்து கொண்டு..
“சொல்றேன் என்று தப்பா நினைக்காதே. உன் சிஸ்டர் விரும்பின பையனை கழட்டி விட நீ என்ன என்ன திட்டம் எல்லாம் போட்டே.. அது மாதிரி என்னை உன் சிஸ்டரோட சேர்த்து வைக்க ஏதாவது செய்.. நானுமே செய்வேன்.. என் காதலுக்கு நான் செய்வேன்.. உன் சைட் உன் சிஸ்டர் உன் டாட். நீ பார்த்து கொள்.. நான் என் வீட்டு சைட் பார்த்து கொள்கிறேன்..” என்று டேனியல் பேச பேச விக்ரமுக்கும் நன்றாக தான் இருந்தது.. ஆனால் இதை செயல் படுத்தும் போது எதிர் வினை என்னவாக இருக்கப் போகிறது என்று நினைத்தால் தான்.. மண்டை குழம்பி போகிறது..
அப்போது சாத்வீகாவிடம் இருந்து மீண்டும் அழைப்பு வர டேனியல் உடனே எழுந்து கொண்டு..
“க்யூக் விக்ரா.. பாவம் சாதும்மா எவ்வளவு டைம் உனக்கு கூப்பிடுவாங்க வா வா.” என்று அவசரப்படுத்தியவனை பார்த்து கொண்டே.. இருவரும் விக்ரம் வீட்டிற்க்கு சென்றனர்..
வழியில் விக்ரம் டேனியலிடம்.. “உன் வீட்டு பக்கமே போ டேனி.. நான் என் ட்ரைவரை கார் எடுத்து கொண்டு அங்கு வர சொல்லிடுறேன்..” என்று சொல்லி கொண்டே ட்ரவரை அழைக்க தன் பேசியை எடுக்க..
அதை தடுத்து நிறுத்திய டேனியல்.. “இல்ல நான் உன்னை ட்ராப் செய்து விட்டே என் வீட்டிற்க்கு போறேன்..” என்று கூறியவனை பார்த்து சிரித்து கொண்டே..
“எத்தனை முறை நான் என் வீட்டிற்க்கு கூப்பிட்டு இருப்பேன்.. ஆனா இப்போ பாரு.” என்று கிண்டல் செய்தவனின் பேச்சில் டேனியல் சிறிது வெட்கம் பட்டாலும் பின் தான் முன் ஏன் வரவில்லை என்ற காரணத்தை கூறிய டேனியல்..
“இதற்க்கு தான் யாரை பற்றியும் சரியாக தெரியாது அவர்களை பற்றி தப்பா பேச கூடாது என்று சொல்வாங்க போல. அதுவும் படித்து இந்த ஜெனரேஷன்ல இருக்கும் நானே எனும் போது ரொம்ப ஷேமா இருக்கு விக்ரா.” என்று உண்மையில் மனம் வருந்தி கூறினான்.
முன்னும் சாத்வீகாவை பற்றி தெரிந்ததில், அவன் மனம் வருந்தினான் தான்.. ஆனால் அது விக்ரம் சகோதரி என்றதினால் மட்டுமே..
ஆனால் இப்போது தனக்கு பிடித்த பெண் எனும் போது தன் செயலை அவன் இன்னும் கீழாக உணர்ந்தான்..
விக்ரம் சரி விடு டேனி என்று பின் வேறு விசங்கள் இருவரும் பேசி கொண்டு வந்தாலுமே விக்ரம் மனதில் பூவிதழை எப்படி அனுகுவது என்ற திட்டமும் அது பாட்டுக்கு ஒடி கொண்டு இருந்தது.
டேனியல் தான் காரை ஒட்டி கொண்டு வந்தான்.. விக்ரம் வீடு தெரியும்.. அதனால் டேனியல் விக்ரம் வீட்டு கேட் முன் காரை நிறுத்தியதும் வாட்ச் மேன் டேனியல் பக்கத்தில் அமர்ந்திருந்த தன் முதலாளியை பார்த்து விஷ் செய்த வாறே கேட்டை திறந்து விட..
டேனியலும் சரியாக தோட்டத்தை தான்டி வீட்டின் முன் காரை நிறுத்தினான்.ஹாலில் தான் சாத்வீகாவின் மூத்த மகன் அருண் அமர்ந்து ஏதோ ஒரு விளையாட்டு பொருளை கையில் வைத்து கொண்டு விளையாடி கொண்டு இருந்தான்..பக்கத்தில் விக்ரம் தந்தை பரந்தாமன் அமர்ந்திருந்தார்.. அவர் பக்கத்தில் சாத்வீகா ஏதோ பதட்டத்தில் அமர்ந்திருக்கிறாள் என்பது பார்த்த உடனே தெரிந்தது..
கார் நின்றதுமே அருண் வாசலை பார்க்க.. அவன் கண்ணுக்கு தெரிந்த அந்த காரின் நிறமும்.. அந்த காரின் பெயரையும் பார்த்து விட்டு..
“டாட் வந்து விட்டார்.” என்று கையில் இருந்த அந்த விளையாட்டு பொருளை கீழே போட்டு விட்டு ஒடி வந்து தந்தையின் காலை கட்டி கொள்ள அவ்வளவு வேகமாக ஒடி வந்தவன் அருகில் சென்ற போது தான் அது தந்தையின் காரும் கிடையாது. வந்தவர் அவன் தந்தையும் இல்லை என்பதை அறிந்து கொண்டான்..
இருந்தும் குழந்தை “டாட்..” என்று அழைத்து கொண்டு வந்த வேகத்தில் தன்னை நிலைப்படுத்தி கொள்ள முடியாது குழந்தையின் இலக்கான தன் தந்தை என்று நினைத்து டேனியலை நோக்கி ஒடிய அருண் அவன் காலை பிடித்த பின் தான் தன்னை நிலைப்படுத்தி நிறுத்த முடிந்தது..
டேனியல் அந்த குழந்தை தன் காலை பிடித்து கொண்டது.. அதிலும் அவன் அந்த அழைப்பில் என்ன என்று உணர்ந்து கொள்ள முடியாத நிலையில் அவன் அப்படியே நின்று விட்டான்..
டேனியல் பின் வந்த விக்ரம் அவன் தோள் தொடவும் தான்.. தன் நிலைக்கு வந்த டேனியல் தன் காலை பிடித்து கொண்டு யார் இந்த புது மனிதர் என்று அண்ணாந்து பார்த்து கொண்டு இருந்த குழந்தையை தூக்கி கொண்டு பால் போல் மேல தூக்கி போட்டு விளையாடிய வாறே வந்த டேனியலின் அந்த விளையாட்டில் குழந்தை அவனை மிகவும் பிடித்து விட்டது போல.