சித்தார்த் வீட்டில் ப்ரீத்திக்கு எட்டு மாதம் முடிந்து அடுத்த வாரம் ஒன்பதாம் மாதம் தொடங்க இருப்பதால் ப்ரீத்தியின் தந்தையும் அன்னையும் சித்தார்த் வீட்டிற்க்கு வந்து இருந்தனர்..
அந்த நேரம் சித்தார்த்தும் வேலை முடிந்து வந்து இருந்ததால் அப்போது அவனும் வீட்டில் தான் இருந்தான்.. மாப்பிள்ளை இருக்க வேண்டும் என்பதினால் தான் ப்ரீத்தியின் தந்தை சீனிவாசன் மாலை நேரத்தில் வந்தது..
பத்மினியின் பாக்யவதியும் முறையாக சம்மந்தியை உபசரித்து முடித்த பின்னே. சீனிவாசன் தான் வந்த காரணமான பேச்சை தொடங்கினார்..
“சீமந்தம்..” என்று சீனிவாசன் ஆரம்பித்ததுமே. பத்மினி காபி குடித்து கொண்டு இருந்த பூவிதழிடம்..
“பொம்மா சாமி படம் முன்னே ஒரு காகிதம் வைத்து இருக்கேன்.. அதை கொஞ்சம் எடுத்து கொண்டு வா..” என்று சொன்னதுமே காபி கப்பை கீழே வைத்து விட்டு அன்னை சொன்ன காகிதத்தை எடுத்து வந்து தன் பெரியம்மாவிடம் கொடுத்தாள்..
அதை ப்ரீத்தியின் அன்னையிடம் கொடுத்த விக்ரம் அன்னை பாக்யவதி.. “நேத்து நானும் பத்துவும் ஜோசியர் கிட்ட போனோம்.. சித்து ப்ரீத்தி ஜாதகத்துக்கு இந்த தேதியில் செய்யலாம் என்று குறிச்சி கொடுத்து இருக்காங்க…
எங்களுக்கு அதில் இருக்க எந்த நாள் இருந்தாலும் பிரச்சனை கிடையாது.. உங்களுக்கு எந்த நாள் தோது படும் என்று பாருங்க.” என்று சொன்னார்.
ஒரு வித தயக்கத்துடன் அதை பெற்று கொண்ட ப்ரீத்தியின் அன்னை ப்ரியா. “நீங்க இரண்டு பேரு மட்டுமா ஜோசியர் கிட்ட போனது.” என்று கேட்டு கொண்டே பாக்யவதியிடம் இருந்து அந்த காகிதத்தை வாங்கும் போதுமே ஒரு விதமாக முகத்தை வைத்து வாங்கி கொள்ள..
ப்ரீத்தி அன்னையின் இந்த பேச்சில் பத்மினியும், பாக்யவதியுமே அதிர்ந்து போய் விட்டனர்.. இது வரை இது போலான பேச்சுக்கள் அந்த வீட்டில் எழுந்தது கிடையாது.
சாதனாவை திருமணம் செய்து கொடுத்த போது இருவருமே கணவனை இழந்தவர்கள் தான்.. இருந்தும் அனைத்துமே அவர்கள் தான் செய்தது..
பின் யார் செய்ய முடியும்.?. ஏன் சித்தார்த்துக்கு கூட இவர்கள் இருவரும் தானே செய்தது.. இப்போது மட்டும் ஏன் இந்த பேச்சு.. பாக்யவதிக்கு அதிர்ச்சி என்றால் பத்மினிக்கு தன் அண்ணி என்பதில் அதிர்ச்சியையும் தான்டி ஒரு சங்கடமும்..
ஆனால் பாவம் ப்ரியாவின் இந்த பேச்சை இன்றைய தலை முறையிலான பூவிதழ் சித்து ப்ரீத்தி சரியாக புரிந்து கொள்ளவில்லை..
அதனால் சித்தார்த்.. “சொன்னா கேட்க மாட்டாங்க அத்தை. அவங்க போய் நாள் குறித்தா தான் அவங்களுக்கு திருப்தி.’ என்று இதை சித்தார்த் தன் அன்னையையும் சித்தியையும் நினைத்து பெருமையுடன் தான் சொன்னான்.
ஆனால் பாருங்கள் ப்ரியா பேச்சு எப்படி இளையவர்களுக்கு புரியவில்லையோ.. அதே போல் சித்தார்த் தன் அன்னை சித்தியை பற்றி பெருமையில் தான் சொல்கிறான் என்று புரியாது.
“இனி எப்படியோ இனி நீங்களே பாருங்க மாப்பிள்ளை.. ப்ரீத்தி நல்ல முறையில் குழந்தை பெத்து வரனும் இல்ல..” என்று சொல்லும் போது தான் அங்கு இருந்த இளையவர்களுக்கு புரிந்தது..
அதுவும் ப்ரீத்தி.. அமர்ந்து இருந்தவள் எழுந்து.. “அம்மா என்ன பேசுறிங்க என்று தெரிந்து தான் பேசுறிங்கலா..?” என்று கோபத்துடன் கத்தி விட்டாள்..
அன்னையின் பேச்சு அவளுக்கே ஒரு வித பதட்டத்தை கொடுக்கும் போது மற்றவர்கள்.. ப்ரீத்தியின் கோபத்தில் பாக்யவதி..
“ப்ரீத்தி அமைதியா இரும்மா.. உட்கார்..” என்று மருமகளை அமைதி படுத்தி கொண்டே தன் மகன் முகத்தை பார்த்தார்..
மகன் முகத்தில் கண்ட விசயம் அவருக்கு அவ்வளவு உவப்பனதாக இல்லை.. ப்ரியா அப்படி பேசும் போதே மனது வருத்தப்பட்டதோடு இந்த பேச்சு என்ன என்ன விளைவுகள் ஏற்படுத்தும் என்ற பயம் தான் அவருக்கு அதிகம் ஏற்பட்டது..
அவர் மகனை பற்றி அவருக்கு தெரியாதா..? அதே பயம் தான் பதிமினிக்கும்.
அவர்கள் பயந்தது போல் தான் சித்தார்த்தின் அடுத்த அடுத்த பேச்சு இருந்தது.
“என் மனைவிக்கு இது வரை என்ன இனி செய்ய போறது எல்லாமே என் அம்மாவும் சித்தியும் தான் செய்வாங்க.
இன்னும் கேட்டால், என் மனைவிக்கு நலங்கு முதல்ல என் அம்மா சித்தி வைத்த பின் தான் எல்லோருமே வைப்பாங்க. அதே போல் டெலிவரியும் நாங்களே பார்த்து கொள்கிறோம்.. “
சித்தார்த் பட பட என்று தான் செய்ய போவதை கூறிவிட்டான்.. சீனிவாசன் தான்..
“அவள் பேச்சை பெருசா எடுத்துக்காதிங்க மாப்பிள்ளை.. அவள் கிடக்கிறா விடுங்க. “
மனைவியின் கையில் இருந்த காகிதத்தை காட்டி.. “வீட்டில் கலந்து பேசி இதுல ஒரு நாள் பார்த்து சொல்றோம்” என்று சித்தார்த்திடம் பேச்சை ஆரம்பித்து சம்மந்தியிடன் சீனிவாசன் முடிக்க.
இதை வரை நான் அமைதியாக இருந்ததே அதிகம் என்பது போல் பூவிதழ்.. “அதுவும் என் அம்மா பெரியம்மாவே பார்த்துப்பாங்க மாமா..” என்று கூறியதோடு தன் மாமி கையில் இருந்த அந்த காகிதத்தை சட்டென்று பரித்தும் கொண்டாள்.
இதில் என்ன பிரச்சனை என்றால்,ப்ரீத்தி பாவம் அவள்.. எந்த பிரச்சனையும் இல்லாது மகிழ்ச்சியாக அவள் வாழ்க்கை சென்று கொண்டு இருக்கிறது..பிடித்தவனை மணந்து இருக்கிறாள்.. அதுவும் அவள் எந்த வித மெனகெடலும் இல்லாது பிடித்தவனை கரம் பிடித்து தன் காதலுக்கு இணையாக கரம் பிடித்தவனும் அவள் மீது அன்பு செலுத்திக் கொண்டு இருக்கிறான்.. இவர்களின் இந்த காதலுக்கு சாட்சியாக இதோ வயிற்றில் அவன் வித்து.. நாளை எங்கள் வாரிசு என்று பெயர் சொல்லும் குழந்தையாக வர போகிறான்..
அனைத்தும் சரியாக சென்று கொண்டு போனால் நான் எதற்க்கு இருக்கிறேன் விதி நினைத்து விட்டது போல.. இதோ ப்ரீத்தியின் அன்னை வடிவில் வந்து விட்டது..
ப்ரீத்தியின் அன்னை இது போல் பேசுபவர் கிடையாது தான்.. மூன்று பெண்ணுக்கு அன்னையாக இவர்களை கரை சேர்க்க வேண்டுமே. என்ற கவலை தான் அவர் மனதில் எப்போதும் இருக்கும்.
அதுவும் வீடு வாசல் இல்லாது வேலைக்கு சென்றால் தான் ஜீவணம் எனும் போது இது போல் கவலை வருவது இயற்க்கை தானே.. இதுவரை அந்த கவலையில் இருந்தவர் வேறு எதுவும் நினைத்து கூட பார்க்க முடியாது இருந்தார்..
இப்போது மூன்று பெண்களையும் கரை சேர்த்த பின் அக்காடா என்று இருக்கும் சமயம் அவருக்கு வேறு பிரச்சனை தேவைப்பட்டது போல. அது தான் வலிய சென்று வினையை விலைக்கு வாங்கி விட்டார்..
ஆம் வாங்கி விட்டார் என்று சொன்னால் தான் சரியாக இருக்கும்..
அதனால் தான் முன் பேசியதற்க்கே தன் பெற்ற பெண்ணுக்கு பிரசவம் பார்க்கும் தகுதியை கூட இழந்து விட்டவர். அதன் பின்னாவது வாயை மூடிக் கொண்டு அமைதியாக இருந்து இருக்கலாம்..
சித்தார்த் பேசிய அந்த பேச்சுக்கு பதில் கொடுக்க முடியாத ப்ரியா. பூவிதழ் தன் கையில் இருந்து ஐய்யர் கொடுத்த அந்த காகிதத்தை பிடுங்கி கொண்டதில்..
“பெரியவங்க பேசும் போது அதிக பிரசங்கி தனமா இது என்ன..?” என்று அதட்டியதோடு சும்மா இருந்து இருக்கலாம்.. ஆனால் விதி யாரை விட்டது..
“இது போல இருந்தால் போகும் இடத்தில் வாழ்ந்தது போல் தான்..” என்ற வார்த்தையில் அனைவருக்கும் முன் ப்ரீத்தி அம்மா என்று அதட்ட பத்மினி “ அண்ணி..” என்ற குரலுக்கு பின் அழுகையோடு நிறுத்த பாக்யவதி.
“பார்த்து பேசுங்க சம்மந்தி.. எங்க வீட்டிற்க்கு வந்து எங்க வீட்டு பெண்ணையே பேசுவிங்கலா..?” என்று பாக்யவதி கோபத்துடன் கேட்டு விட்டார்.
பூவிதழ் தன் மாமீயின் அந்த பேச்சில் அதிர்ந்தாலும், அவள் பார்வை உடனே சித்தார்த் அண்ணன் பக்கம் தான் சென்றது..
சித்தார்த்தோ எதுவும் பேசாது கை கட்டி கொண்டு அமைதியாக தன் மாமியாரை பார்த்து நின்று கொண்டு இருந்தான்..
பூவிதழுக்கோ மற்றவர்களை போல தன் சித்து அண்ணன் பேசி இருந்தாலுமே, பரவாயில்லை.. ஆனால் இந்த அமைதி அவளுக்கு சரியாக படவில்லை..
பூவிதழுக்கு மாமி தன்னை பேசியதோ.. இல்லை மாமியை அண்ணன் பேசுவதோ சண்டை இடுவதோ பிரச்சனை கிடையாது..அவளுடைய கவலை எல்லாம் இதனால் தன் அண்ணன் அண்ணிக்கு இடையில் ஏதாவது பிரச்சனை வருமா.? என்பது தான்.. அதனால் அண்ணனை ஒரு வித பயத்துடன் தான் அவள் அண்ணனை பார்த்து கொண்டு இருந்தாள்..
பூவிதழே இப்படி நினைக்கும் போது ப்ரீத்தி.. அதுவும் கணவன் தன் குடும்பம் என்று வரும் போது அவனையே மறப்பவன்.. அதுவும் குறிப்பாக பூவிதழ் மீது அவன் கொண்ட பாசம் அவளுக்குமே தெரியுமே.. அதனால் ஒரு வித பயத்தோடு தான் அவனை பார்த்திருந்தாள்..
தன் மாமியாரையே பார்த்து நின்று இருந்த சித்தார்த் என்ன நினைத்தானோ.. தன்னையே ஒரு வித பயத்துடன் பார்த்து கொண்டு இருந்த மனைவியின் பக்கம் பார்வையை திருப்பிய சித்தார்த்..
இப்போது மனைவியிடமே. “நான் என்ன செய்யட்டும் ப்ரீ..?” என்று கேட்டவனின் குரலில் கோபத்தை அடக்கிய குரலையும் மீறி ஒரு வித கைய்யாலாகத தனம் மேலோங்கி காணப்பட்டது.
கணவன் சொன்னது பாதி புரிந்து மீதி புரியாது போல குழம்பிய முகபவனையோடு கணவனை பார்த்திருக்க. மீண்டும் சித்தார்த் மிக தெளிவாக..
“எனக்கு என் பேமிலி எவ்வளவு முக்கியம் என்று உனக்கு தெரியும் தானே.. இப்போ என் பேமிலியில் நீயும் எனக்கு மிக முக்கியம்.. இப்போ நான் என்ன செய்யட்டும்.?” என்று கேட்டவனுக்கு ப்ரீத்தி பதில் கொடுக்க சிறிது நேரம் தேவைப்பட்டது.