சித்தார்த் வீட்டில் அனைத்துமே நல்ல மாதிரியாக தான் சென்று கொண்டு இருந்தது..ஆனால் சாத்வீகா வீட்டில்..? அந்த விசயம் நமக்கு தான் பெரியதாக தோன்றுகிறதோ.. என்னவோ.. விக்ரம் சொன்னது போல இந்த மிடில் க்ளாஸ் மெண்டாலிட்டி மனது.. ஆனால் சாத்வீகா வீட்டில்..?
சித்தார்த்தோடு சாத்வீகாவை பிரித்த கைய்யோடு எல்லாம் விக்ரம் தன் சகோதரிக்கு திருமண பேச்சை ஆரம்பித்து விடவில்லை.. ஆனால் இவன் தான் மாப்பிள்ளை என்பதை ஆறு மாதம் முன்னவே தங்களின் புது மாடல் காருக்கு விளம்பரம் செய்ய மும்பையில் இருந்த ஒரு புகழ் வாய்ந்த விளம்பர கம்பெனியை விக்ரம் அனுகிய போது தான் .. அந்த கம்பெனியின் முதலாளி முகேஷை சந்தித்தது..
புது கார் வடிவமைத்த உடனே விக்ரம் தந்தை பரந்தாமன்.. இதை விளம்பரம் படுத்தும் பொறுப்பை மகனிடம் தான் ஒப்படைத்தார். அப்போது விக்ரம் ஜெர்மனியில் தன் மேற் படிப்பை தொடங்கிய புதிது..
அங்கு இருந்தே.. எப்படி மக்களிடம் தங்கள் புது மாடல் காரை கொண்டு செல்வது..? அனைவரும் செய்வது போல் விளம்பரம்.. அந்த விளம்பரம் எடுப்பதில் யார் பெஸ்ட் ? என்று ஆராய்ந்து தேர்வு செய்தது தான்.. M.S விளம்பம் கம்பெனி.. விசாரித்த வரையிலும், முன் அவர்கள் எடுத்த விளம்பரத்தை பார்த்து திருப்தி பட்டவனாக கடைசி இவர்கள் தான் என்று முடிவு செய்த பின் தான் இந்தியாவுக்கு இரண்டு நாள் மட்டுமே வந்து விக்ரம் முகேஷை பார்த்தது..
பார்த்ததும் முகேஷ் தோரணையிலும், அவன் திறமையையும் பார்த்து .இது போல் ஒருவன் சாதுவுக்கு பார்ட்னர் ஆக்கினால் என்று நினைத்தவன்.. பின் இவனே ஆக்கினால் என்ன என்று முடிவு செய்து விட்டான்..
அதன் பின் தான் சாத்வீகாவின் சித்தார்த்தோடான காதல் விவகாரம் அவனுக்கு தெரிந்தது. அதை ஒரு முடிவு கட்டிய பின் தன் தந்தையிடம் மட்டும் தன் விருப்பதை கூறினான்.
அவரும் அவர் வகையில் விசாரித்த வகையில் அனைத்தும் , அதாவது அவர்களுமே மும்பையில் மூன்று தலை முறையாக பெயர் போன குடும்பம் என்பது தெரிய வந்தது.
மகனிடம்..“சாதுக்கு முகேஷையே முடித்து விடலாம்.. அது தான் சித்தார்த் தான் முடிந்து போன விசயம் ஆகிடுச்சே.. நம்ம சாதுவே தான் அவன் வேண்டாம் என்று சொல்லி விட்டாளே.. இப்போ இந்த பையனை பத்தி சாதுவிடம் பேசலாம் தானே ?” என்று பரந்தாமன் மகனிடம் கேட்டார்..
“டாட் உடனே இந்த இடத்தை சாது கிட்ட சொல்ல வேண்டாம்.இப்போ அவள் வேண்டாம் என்று சொன்னாலுமே, அவள்
மனசு .. நாம வேணாம் என்று சொன்னா விட்டு விடுவானா.? என்ற தாட் தான் அவளுக்குள் ஒடி கொண்டு இருக்கும் .இதை எல்லாம் பொறுமையா கைய்யாலனும் டாட்..நான் இந்தியா வந்த பின் நான் பார்த்து கொள்கிறேன்.” என்று சொன்ன விக்ரம்.
சொன்னது போலவே விக்ரம் இந்தியா வந்ததும் அவன் படிப்புக்கு ஏற்ப அவன் தந்தை தொழிலை கையில் எடுத்து கொண்டது மட்டும் அல்லாது அவனுமே.. அதாவது காருக்கு தேவையான பாகங்களை.. வெளியில் வாங்குவதை விட தாங்களே தயாரித்தால் லாபம் இரட்டிப்பு ஆகும் என்று தான் படித்த படிப்பை கொண்டு…அந்த வேலைகளையும் பார்த்தாலுமே,
இடையில் தன் சகோதரியின் மனதை முழுவதும்.. அதாவது இனி சித்தார்த்தே வந்து சாத்வீகாவிடம் நீ சொன்னதுக்கு எல்லாம் ஒகே என்று சொன்னாலுமே,, இவள் அவனை மறுக்க வேண்டும்.. அதற்க்கு என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு அதன் முதல் படியாக.
“முதல் மாதிரி நீ இல்ல சாது. நான் வேணா திரும்ப சித்தார்த் கிட்ட பேசி பார்க்கட்டுமா..? இந்த வீட்டில் இருக்க பிடிக்கலேன்னா வேறு வீடு வாங்கி அங்கு அவங்க அம்மாவோடு இருங்க என்று கேட்டு பார்க்கட்டுமா..?” என்று கேட்ட தம்பியை கண்கள் கலங்க பார்த்த சாத்வீகா .
“வேண்டாம் விக்ரம்.. வேண்டாம்..” என்று சொல்லி மறுத்தவளின் கை பற்றி கொண்ட விக்ரம்..
“அப்போ ஏன் சாது நீ இப்படி இருக்க.? நீ இப்படி இருந்தா எப்படி நான் என் தொழிலில் கவனம் செலுத்த முடியும் சொல்.? நீ இருப்பது போல நான் இருந்தால், நீ சந்தோஷமா இருப்பியா..?” என்று கேட்ட தம்பியின் கேள்வியில் இருந்த நியாயத்தில்.
முதலில் மற்றவர்களுக்காக மாறி வந்தவள்.. பின் சித்தார்த் தன்னை முற்றிலுமாக ஒதுக்கி விட்டதில், அவளுமே விக்ரம் எதிர் பார்த்தது போல.” இனி நீ என் கால் பிடித்தாலுமே நான் உன்னை சட்டை செய்ய மாட்டேன்..” என்று வைராக்கியத்தோடு.. விக்ரமோடு தொழில் செய்ய நினைத்தாள் தான்.. ஆனால் சாத்வீகாவுக்கு அதன் சூட்சுமம் புரியவில்லை..
அதனால் திருமணம் குழந்தை என்று விக்ரம் தன் சகோதரியிடம் பேசும் போது எல்லாம் பேசிக் கொண்டு இருந்தான்.. ஒரு நிலைக்கு மேல் சாத்வீகாவும் விக்ரம் பேச்சை ஏற்று கொள்வது போல் தோன்றியதும்…
விக்ரம் தன் தந்தையிடம்.. “இப்போது சாதுவிடம் பேசுங்க டாட்..” என்று சொல்ல. பரந்தாமனும் மகளிடம் அவள் திருமணத்தை பற்றியான பேச்சை ஆரம்பித்த போது..
“உங்களுக்கு பிடித்த மாதிரியே பாருங்க டாட்..” என்று தன் வருங்கால வாழ்க்கையை முழுமையாக தன் தந்தை சகோதரனிடம் ஒப்படைத்து விட்டாள்..
அதற்க்குள் விக்ரம் முகேஷிடம் தொழில் சார்ந்து இரண்டு விளம்பரங்கள் கொடுக்க. இருவருக்குள்ளும் நட்பு வளர. ஒரு நாள் விக்ரம் தன் மனதில் ஆசையை வெளிப்படுத்திய உடனேயே..
“ஓகே விக்ரம்.” என்று விட்டான்..
விக்ரமே.. “என்ன முகேஷ் கேட்டதும் ஒத்து கொண்டு விட்டாய்.. என் சிஸ்டரை பார்க்கனும்.. பேசனும்.. என்று கேட்காது. “ என்று கேட்ட விக்ரமனிடம் முகேஷ்..
“உங்க சிஸ்டரை நான் பார்த்து இருக்கேன் விக்ரம்.. அப்பிரன்ஸ் ஒகே.. பேசுறது என்றது மேரஜ் பின் பேச தானே போறேன்..” என்று மிக இலகுவாக கூறி விட்டான்..
பின் என்ன அடுத்து இரு குடும்பமும் சந்தித்து அனைத்திலுமே அதாவது அந்தஸ்த்திலுமே ஒத்து போனதில் விரைவாகவே சாத்வீகாவின் திருமணம் முகேஷோடு நடந்து முடிந்து விட்டது.. அதாவது சாத்வீகா சித்தார்த் பிரிந்து ஒரு வருடத்திலேயே ..
விக்ரம் ஆரம்பித்த அவனின் தனிப்பட்ட தொழில் மட்டும் அல்லாது, தன் தந்தையுடையதுமே மிக நன்றாகவே கொண்டு சென்றான்..அதுவும் விக்ரம் ஆரம்பித்த அந்த தொழில் தங்கள் கார் தயாரிப்புக்கு மட்டும் அல்லாது மற்ற தயாரிப்பு கார்களுக்கும் ஆர்டர் வர..
நல்ல மாதிரி என்பதை விட மிக சிறப்பாகவே சென்றது .. அவனின் இருப்பாதாறு வயதிற்க்குள்ளாகவே அனைவரும் அறிபவனாக ஆனான்..
சாத்வீகாவுக்கும் திருமணம் முடிந்து நான்கு வருடத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாய் ஆனாள்.. அவளின் வசிப்பிடம் மும்பை என்றாகி விட்டது..
அவ்வப்போது சென்னைக்கு வந்து செல்வாள்.. அதே போல் பரந்தாமனும் மகளை காணாவோ இல்லை தொழில் பேச்சுக்கு என்று மும்பை போக நேர்ந்தால் மகளையும், பேரன்களையும் பார்க்காது சென்னை திரும்ப மாட்டார்.
விக்ரமும் அப்படியே மும்பை போனால் தன் சகோதரியை பார்த்து விட்டு தான் வருவான்..
ஆனால் சாத்வீகாவின் முகத்தில் முன் இருந்த அந்த பொலிவு இப்போது காண முடியவில்லை.. என்ன என்று தந்தை சகோதரன் விசாரித்ததிற்க்கு..” ஒன்றும் இல்ல. டைட் ஒர்க்..” என்று விட்டாள்..
அனைத்திற்க்கும் வேலையாட்கள்.. குழந்தைகளை பார்த்து கொள்ள. ஒரு குழந்தையை தான் ப்ரீகேஜ் சேர்த்து உள்ளனர்.. அந்த குழந்தைக்கு என்று கார். அதற்க்கு தனிட்ட ஒட்டுனர்.. என்று சாத்வீகா இப்படி சோர்ந்து போகும் அளவுக்கு அவளுக்கு வீட்டில் வேலைகள் இருப்பது போல் தந்தைக்கும் மகனுக்கும் தோன்றவில்லை..
கணவனோடு தொழில் பார்த்து கொள்கிறாள்.. அதனால் அதில் பிரச்சனை இப்படி இருக்கிறாள் என்றாலாவது பரவாயில்லை..
.”ஏன் படித்த படிப்பை வீண் ஆக்குற. ஒன்று முகேஷ் பிசினஸை கவனி.. இல்ல.. நம்முடையதை பார்.. நீயும் அதில் ஷேர் ஒல்டர் தானே..?” என்று விக்ரம் கேட்டதற்க்கும்.
சாத்வீகா ஒரே வார்த்தையில்.. “எனக்கு இன்ரெஸ்ட் இல்லை..” என்று விட்டாள்..
விக்ரம் சாத்வீகாவின் திருமணம் முடிந்து ஒரு ஆறுமாதம் தான் அவளை மகிழ்ச்சியோடு பார்த்தது.. அதன் பின் ஏதோ ஒரு யோசனையிலேயே தான் காணப்பட்டாள்..
அப்போது குழந்தை உண்டாகி இருந்ததால், அதனால் வந்த சோர்வு என்று நினைத்து கொண்டவன்.. பின் குழந்தை பிறந்த பின் இரவில் சரியான உறக்கம் இல்லாதது என்று நினைத்து அடுத்து அடுத்த முழந்தை என்று வந்த பின் அதனால் என்று நினைத்து.. இப்படியே நினைத்து கொண்டவன். இப்போது சரியாக நினைத்தான்.. முகேஷ் வழியில் ஏதாவது பிரச்சனையாக இருக்குமா..? என்று..
அவன் நினைத்தது சரி தான் என்பது போல் மும்பையில் நடுயிரவு வீடு வந்த முகேஷை தங்கள் அறையில் படுத்து கொண்டு இருந்த சாத்வீகா வெறுமையாக கணவனை ஒரு பார்வை பார்த்து விட்டு மீண்டும் திருப்பி படுத்து கொண்டவளின் பக்கம் படுத்த முகேஷ்.. பின் இருந்து மனைவியை அணைத்து கொண்டு கழுத்தில் அவன் வாசம் பிடிக்க..
அதற்க்குள் சாத்வீகாவுக்கு கணவன் மீது இருந்து வந்த லேடிஸ் பர்ப்யூம் வாசனை அவள் மூக்கை தாக்க. விருட்டென்று தன் கணவன் கையை பிடித்து தள்ளி விட்டு விட்டாள்..
மீண்டும் தொட வந்த கணவனிடம்.. “ப்ளீஸ் குளிச்சிட்டாவது வாங்க..” என்று சொன்ன மனைவியின் கன்னத்தை தொட்டு விட்டு.
“ம் இந்த டையலாக் மட்டும் நீ மாத்தவே மாட்டியே..” என்று கிண்டலுடன் கேட்டு விட்டு குளித்து விட்டு வந்தவன் மனைவியை பார்க்க..அவள் தூங்கி போய் இருந்தாள்.
“இதுக்கு நான் சாரா கூடவே இருந்து இருக்கலாம்.’” என்று மெல்ல முனு முனுத்து கொண்டு திரும்பி படுத்து கொள்ள.. தூங்குவது போல் பாவனை செய்த சாத்வீகாவின் காதில் கணவன் சொன்ன வார்த்தை அட்சகம் பிறழாது விழுந்தன.
பழகியது என்றாலும், சாத்வீகாவின் மனது அந்த வார்த்தையில் வேதனைப்பட்டது என்னவோ நிஜம்.. ஆனால் கண்ணீர் வரவில்லை. துக்கம் தொண்டையை அடைக்கவில்லை.. தூங்காது சாப்பிட்டாது அது போல் எல்லாம் இப்போது அவளுக்கு கிடையாது தான்..
ஆனால் கணவனை பற்றி தெரிந்த ஆரம்ப காலத்தில் இது என்ன இதுக்கு மேல் கூட அவளின் நிலை இருந்தது..
அதுவும் தான் உண்டாகி இருக்கிறோம் என்ற சந்தோச செய்தியை கணவனிடம் சொல்ல .. அவனின் பேசிக்கு அழைத்த போது அது எப்போதும் போல் எடுக்கப்படாது இருக்க…பின் கணவனின் செகரெட்டரிக்கு அவள் அழைத்தாள்..
அவள் எப்போதும் போல்.. “சர் மீட்டிங்கிள் இருக்கார்.. நீங்க கால் பண்ணத சர் கிட்ட சொல்லி விடுகிறேன் மேடம்..” என்று.. தன்மையாக பதில் அளித்து வைத்ததுமே தெரிந்து விட்டது சாத்வீகாவுக்கு கணவன் எப்போதும் போல் நடியிரவு தான் வீடு வர போகிறான் என்று..