செகரட்டரி சொன்னாலுமே தன்னை அழைக்க மாட்டான்.. ஆனால் வீடு வந்ததும் தன் பேச்சால் இல்லாது வேறு ஒரு வகையில் தன்னை சமாதானம் படுத்திவதில் கணவன் கில்லாடி என்று முகேஷோடு குடும்பம் நடத்திய இந்த ஆறுமாத கால வாழ்க்கையில் சாத்வீகா தெரிந்து கொண்டது..
சாத்வீகா நினைத்தது போல் தான் நடியிரவு வீடு வந்தது முகேஷ்.. தான் வந்து தான் அணைத்த பின் தான் முழித்து கொள்ளும் மனைவி இன்று தூங்காது காத்து கொண்டு இருந்ததில், எப்போதும் குளித்து விட்டு மனைவியின் அருகில் வருபவன் அன்று குளிக்காது அவள் அருகில் சென்றான்.
“என்ன டால். தூங்கல.. தூக்கம் வரலையா.? ஒ இன்னைக்கு மார்னிங் நம்ம அது மிஸ் ஆனதுல தூக்கம் வரலையா.? சாரி டால்.. இன்னைக்கு மார்னிங் ஒரு மீட்டிங்.. அதோட நீ என்ன இன்னைக்கு அவ்வளவு அசந்து தூங்கிட்டு இருந்த. நேத்து உன்னை ரொம்ப படுத்தி எடுத்து விட்டேனோ..” என்று கணவன் பேச பேச அவன் பேச்சில் வெட்கம் பட்டுக் கொண்டு இருந்த சாத்வீகா.. காலையில் அப்படி தூங்கிட்டு இருந்த என்ற பேச்சில் அது எதனால் என்றதில் முகம் புன்னகையை பூச பின் சொன்ன நேத்து என்ற வார்த்தையில்.
“நாட்டி.” என்று சொல்லி கணவன் மார்பில் சாய்ந்த சாத்வீகாவுக்கு ஏதோ அவள் நாசி உணர்ந்த அந்த மணம் அவளுக்கு ஒத்து கொள்ளாது அவன் மார்பில் மீதே வாந்தி எடுத்து விட்டாள்..
முகேஷ்..”ஏய் ஏய்..” என்று பதறினாலும். அவன் மீது வாந்தி எடுத்ததை அருவெருப்பு கொள்ளாது.மனைவி சொன்ன..”சாரி சாரி முகி..” என்ற மனைவியின் மன்னிப்பில்.
“டால் நமக்குள்ள இது என்ன.. இதுக்கு மேல உன்னது நான் என்னது நீ.” என்று சொன்னவன் ஒரு மார்க்கமாக சொல்லி கொண்டு தன்னை சுத்தப்படுத்தி கொள்ள குளியல் அறைக்குள் நுழைந்து கொண்டான்.
அவளுமே வாய் கொப்பளித்தால் தான் பரவாயில்லையா இருக்கும் என்று அடுத்த அறையில் இருந்த குளியல் அறையை பயன் படுத்தி முகத்தை துடைத்து கொண்டே மீண்டும் தங்கள் படுக்கை அறையில் படுக்கையில் அமர்ந்து கொண்ட சாத்வீகாவுக்கு, மீண்டும் அந்த விரும்ப தகாத மணம் அவள் நாசி உணர்ந்தது..
இப்போது முன் போல் எல்லாம் அதிகமாக கிடையாது.. லேசாக மிக லேசாக என்று சுற்றி முற்றி பார்த்தவள் பின் தன் மீதா என்று தன் இரவு உடையை மேல் இழுத்து தன் மூக்கின் மீது உணர்ந்த போது கண்டு கொண்டால், அது சென்ட்.. அதுவும் பெண்கள் உபயோகிக்கும் சென்ட் பிராண்ட் அது..
சாதாரணமாகவே அதன் வாசம் அவளுக்கு பிடிக்காது.. அதனால் எப்போதும் அந்த பிராண்ட்டை அவள் வாங்க மாட்டாள்.. பிரண்ஸ் அதை உபயோகித்தால் கூட.” என்னை விட்டு கொஞ்சம் தள்ளி நிள்ளுங்க..” என்று சொல்லி விடுவாள்..
இப்போது இது போல் நேரத்தில் இந்த மணம் அவளுக்கு வாந்தியையும் வர வழைத்து விட்டது என்று புரிந்து கொண்ட பெண்ணவளுக்கு கடைசியாக தான். ஆமாம் எப்படி என் மீது இந்த வாசம் என்று யோசனை செய்து கொண்டே உடை மாற்ற வாட்ரேப் அருகில் சென்று கொண்டே யோசித்து கொண்டு இருந்தவளுக்கு கணவன் மார்பில் சாய்ந்த போது தான் அதிகம் அந்த மணம் தன் நாசி உணர்ந்தது என்று அவள் மூளை எடுத்து கொடுக்க.இரவு உடையை எடுக்க நீண்ட கை அப்படியே நின்று விட்டது.
நாம் சரியான வழியில் தான் யோசிக்கிறோமா என்று அவளுக்கு அவளே சந்தேகம் படும் வேலை கணவன் குளியல் அறையில் இருந்து இடுப்பில் டவல் மட்டுமே கட்டி கொண்டு வெளி வந்தவன்..
“அப்படியே குளித்து விடலாம் என்று பார்த்தா ஹிட்டர் ஒர்க் பண்ணல..” என்று மனைவியிடம் சொல்லிக் கொண்டே பக்கத்து அறையில் இருக்கும் குளிக்கும் அறையை உபயோகிப்படுத்த செல்லும் போது சாத்வீகாவுக்கு கணவனின் முதுகு புரம் தெரிந்தது..
சாத்வீகா கண்ணுக்கு முதுகு மட்டும் அல்லாது அந்த முதுகில் இடம் பெற்று இருந்த லிப்ஸ்ட்டிக் மார்க்கும்.. சில பல் தடங்களுமே தெரிய. அவள் மூளை சரியா தான் யோசித்தது என்று எடுத்து உரைத்தாலும்.. உணர்ந்த விசயம் அவளுக்கு உவப்பானதாக இல்லை..
முகேஷ் அறையை விட்டு வெளியேறும் முன் விரைந்து அவனை பிடித்து தடுத்து நிறுத்தி அவன் முதுகை இன்னும் ஊன்றி பார்க்க..
“டால் என்னடா கொஞ்சம் டைம் கொடுடா.” என்று சொன்னவன்..கட்டிலை காட்டி. “உனக்கு சேவகம் பண்ண தானே நான் இருக்கேன்..” என்று சொன்ன நொடி சாத்வீகா..
“எனக்கு மட்டுமா சேவகம் செய்யிறிங்க..?..” என்று கணவனை போலவே கட்டிலை காட்டி கேட்டாள்..
சாத்வீகாவின் கேள்வியும்.. இப்போது அவளின் பார்வை தன் முதுகு பக்கமே இருப்பதை கவனித்து அங்கு இருந்த நிலை கண்ணாடியில் நின்று கொண்டு தன் முதுகை பார்த்தவன்.
“ஒ..” என்று சொன்னவன் பின்..”இந்த ஷீல் கிட்ட இப்போ மேர்ஜ் ஆகிடுச்சி .. மார்க் பண்ணாம பண்ணு என்று சொன்னா கேட்பது இல்ல..” என்ற அந்த வார்த்தையை முகேஷ் முனு முனுக்க எல்லாம் இல்லை.. சாத்வீகா
காதில் விழுவது போல் தான் அவனுக்கு அவனே பேசிக் கொண்டது.
சாத்வீகா தன் அவன் பேச்சில் சிலையாக நின்று விட்டாள்…. “இப்போ மேரஜ் ஆகி விட்டது என்றால்.. அப்போ திருமணம் முன்னவே..அப்போ இனியும் தொடருமா..?’ என்று கணவனையே அதிர்ச்சியோடு பார்த்திருந்தவளின் தோள் பற்றி அங்கு இருந்த கட்டிலில் அமர வைத்த முகேஷ்..
“டால் இது எல்லாம் நம்ம ஸ்டேட்டஸ்சில் சகஜம் தானே. என்னவோ மிடில் க்ளாஸ் பெண் மாதிரி இதுக்கு இப்படி ரியாக்ட் கொடுக்குற.. என் பெட்டில் எத்தனை பெண்ணுக்கு இடம் கொடுத்தாலும், எனக்கு மனைவி.. என் குழந்தைக்கு அம்மா என்றால் அது நீ மட்டும் தான்..
இந்த ஸ்தானத்தை நான் யாருக்கும் கொடுக்க மாட்டேன்..’ என்றவனின் பேச்சை மொழி தெரியாது தான் பார்த்திருந்தாள்.. அதுவும் என் குழந்தைக்கு தாய் என்ற வார்த்தையில் தான் இப்போது இருக்கும் நிலையில் தன்னால் அவள் கை தன் அடி வயிறு மீது படிந்தது..
இப்போது நான் என்ன செய்ய.? இது தான் கேள்வி..பின்.. கணவனிடம்.. “இது வரை சரி இனியாவது இது போல பழக்கத்தை விட்டு விடலாம் தானே.” என்று முகேஷிடம் பேசும் போதே தன் நிலை இப்படி தரம் தாழ்ந்து போக வேண்டுமா என்று மனதில் அவ்வளவு சுய பச்சாதாபம் இருந்தது.. ஆனாலும் கேட்டாள்..
அதற்க்கும் முகேஷ்.. “சில்லியா பேசிட்டு இருக்காதே டால்.. நம்ம ஸ்டேட்டஸ்க்கு ஏத்த மாதிரி பேசு..எனக்கு உன் ப்ரேக்கப் தெரியும்.. தெரிந்தும் இது வரை அதை பத்தி உன் கிட்ட கேட்டு இருக்கேன்னா. “ கணவனின் இந்த வாதத்தில் பெண் அதிர்ந்து பார்த்தாள்..
காதலுக்கும் இவன் செய்யும் இதற்க்கும் வித்தியாசம் கிடையாதா.? என்று அவள் யோசிக்கும் போதே இருக்கு வித்தியாசம் இருக்கிறது என்று கணவன் எடுத்து சொன்னான்..
அதாவது காதல் மனதளவில் கலங்கம் பட்டது.. நான் செய்வது உடலளவில் மட்டும் தான்.. என் மனம் உனக்கு மட்டும் தான். ஆ இன்னொன்னும் சொன்னானே. நீ உன் காதலனிடம் முன் பிசிக்கல் ரிலேஷன் ஷீப் வைத்து இருந்தாலுமே, அதை நான் பெரியதாக எடுத்து கொள்ள மாட்டேன்.. என்று அவன் உயர்ந்த கொள்கை எல்லாம் கேட்க கேட்க பெண்ணவள் உண்மையில் மயக்க நிலைக்கு சென்று விட்டாள்..
எவ்வளவு நேரம் தெரியாது.. அவள் கண் விழித்து எழும் போது அவர்கள் அறையில் , அவள் அருகில் கணவன் அமர்ந்திருக்க. எதிர் இருக்கையில் மாமனார் மாமியார் முகம் முழுவதும் புன்னகை பூசிய முகமாக காட்சி கொடுத்தனர்.
“என்னம்மா காலையில் இருந்து நாங்க வீட்டில் தானே இருக்கோம்.. எங்க கிட்ட ஒரு வார்த்தை சொல்ல கூடாதா.?” என்று மாமியார் அங்கலாய்த்து கேட்க.. மாமனாரோ..” முதல்ல ஹஸ்பெண்ட் கிட்ட சொல்லனும் என்று நினைத்து இருப்பா.” என்று வாழ்த்தி தயாராக கையில் வைத்து இருந்த ஸ்வீட்டை மருமகளின் வாயில் ஊட்டி விட்டு.. அவர்களுக்கு தனிமை கொடுத்து இங்கிதமாக அவர்கள் அந்த அறையை விட்டு வெளியேறிய பின்..
முகேஷ்.”டால் ஐயம் வெரி ஹாப்பிடா.. வெரி வெரி ஹாப்பி ..” என்று சொல்லி கொண்டு அவள் முகம் முழுவதுமே முத்தத்தில் ஈரம் படுத்தியன்..
“நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா.?” என்று மகிழ்ந்து சொன்னவனின் முகம் உண்மையில் மகிழ்சியோடு தான் இருந்தது..
ஆனால் சாத்வீகாவால் தான் அவன் மகிழ்ச்சியில் பங்கு கொள்ள முடியவில்லை.. அவள் மாமனார் சொன்னது போல இந்த விசயத்தை முதலில் கணவனுக்கு தெரியப்படுத்த வேண்டி தான் யாரிடமும் சொல்லவில்லை..
மதியம் அவள் தந்தை பேசியில் அழைத்து பேசிய போது.தன் சோர்ந்த குரலில்.. “என்னடா வாய்ஸ் டல்லா இருக்கு.?” என்று கேட்ட போது கூட உண்மை சொல்லாது.” தலை வலிப்பா.” என்று சொல்லி தான் சமாளித்தாள்..
அதனால் தான் அவ்வளவு சோர்விலும் கணவன் வரவுக்காக தூங்காது விழித்து இருந்தாள்.. ஆனால் தான் அவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க காத்திருந்தாள்.. தனக்கு அவன் இப்படி ஒரு அதிர்ச்சி கொடுப்பான் என்று நினைத்தே பார்க்கவில்லை..
இப்போது அவன் அணைத்த போது கூட அந்த மணம் அவள் நாசியை தொட்டது தான்.. அவன் முத்தம் முதல் முறையாக கசந்தது.. தன் கன்னத்தில் இருந்த அவனின் எச்சிலை துடைத்து கொண்டவள்.. இதே எச்சிலை வேறு ஒருவளுக்கும் கொடுக்கிறான் கணவன்..
அந்த உண்மையை ஏற்க முடியாது.. கணவனின் கொள்கையை பின் பற்ற முடியாது.. தன் தந்தையிடமும் தமையனிடமும் சொல்லாது.. ஏற்கனவே தன் காதலில் அவர்களுக்கு ரணத்தை கொடுத்து விட்டேன்.. இப்போது தன் வாழ்வு இப்படி என்று அவர்கள் முன் நின்று அவர்கள் நிம்மதியை கெடுக்க மனது இல்லை அவளுக்கு.. அதோடு முக்கியமாக சென்னைக்கு தன் வாழ்க்கை தொலைத்து விட்டு செல்ல பிடிக்கவில்லை.
பாவம் உண்மையை சொல்வது என்றால் சாத்வீகா மிக மிக நல்லவள் என்று தான் சொல்ல வேண்டும்.. தன் காதலனை தன்னை கொண்டே பிரிக்க வைத்து அவர்களுக்கு அந்தஸ்த்துக்கு ஏற்ற துணை என்று முகேஷை திருமணம் செய்து வைத்து. இதோ இப்போது மெல்லவும் முடியாது விழுங்கவும் முடியாது அனுபவிக்கும் இந்த ரணமான வாழ்க்கைக்கு காரணம் தன் தந்தையும், தமையனும் தான் என்று தெரியாது அவர்கள் மனது புண் பட கூடாது என்று மறைத்து..
இதோ.. ஆறுமாதம் தொடர்ந்து சாத்வீகாவின் இந்த வாழ்க்கை நான்கு வருடம் கழித்தும் தொடர்கிறது..