பூவிதழ் தன் கல்லூரி படிப்பின் மூன்றாம் ஆண்டில் இருந்தாள்.. அவளுக்கு பிடித்தமான படிப்பை விட எது எடுத்தால், வேலை எளிதில் கிடைக்கும்.. எந்த கம்பெனியில் சேர்ந்தால், வெளிநாட்டு போக வாய்ப்பு அதிகம் என்று பார்த்து பார்த்து தான் பூவிதழின் படிப்பு தேர்வில் இருந்து, கல்லூரி தேர்வு வரை இருக்கும் மாறு பார்த்து கொண்டாள்..
இடை இடையே தன் சித்தார்த் அண்ணன் பக்கமும் அவள் பார்வை திரும்பும். அண்ணன் மகிழ்ச்சியோடு இருக்கிறானா.? என்பதை விட உண்மையான மகிழ்ச்சியோடு இருக்கிறானா என்பதை கவனித்து கொள்வாள்..
இப்போது எல்லாம் சித்தார்த் தங்கையின் பார்வையில் சிரித்து கொண்டு கடந்து விடுவான்..
அந்த சமயத்தில் தான் சித்தார்த்துக்கு ஒரு இடம் வலிய வந்து பெண் தருகிறேன் என்றனர்.. அது வேறு யாரும் இல்லை. பூவிதழின் தாய் மாமன் பெண் தான்.
ஒரு நாள் மாலை பூவிதழ் கல்லூரி முடிந்ததும், தன் கல்லூரி பக்கத்தில் ஒரு பலசரக்கு கடை இருக்கும்.. இந்த சின்ன சின்ன மளிகை கடை வைத்து இருப்பவர்கள் எல்லாம் இந்த ஒல்சேல் கடையில் வாங்கி கொண்டு தான் விற்பனை செய்வது..
இதை அறிந்து கொண்ட பூவிதழ் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களில் மாதம் முதல் வாரத்தில் ஒரு முறை பருப்பு வகைகளை வாங்கி கொண்டு வீடு செல்வாள்..
மறு முறை இந்த சின்ன சின்ன பொருட்களான மிளகு சீரகம்.. கடுகு என்ற பொருள் என்றால் அடுத்த முறை சமையல் எண்ணை சோப்பு போன்ற இத்தியாதி பொருட்களை வாங்கி வருவாள்..
அவளோடு படிக்கும் தோழிகள் கூட.. “காலேஜ் ஸ்டூடண்ட் இது என்ன டீ கட்டப்பையை தூக்கிட்டு என்று சொன்னால், கூட. ஏன் காலேஜ் படிக்கிறவங்க அரிசி பருப்பு எல்லாம் சாப்பிடுறது இல்லையா.? நான் நாம சாப்பிடும் பொருளை தானே டி வாங்கிட்டு போறேன்..” என்று நியாயம் கேட்பாள்..
“இல்லை அசிங்கமா ஒரு மாதிரி..” என்று இழுத்தாள்..
தன் கையில் இருந்த கட்டை பையை தூக்கி காட்டி.. “இதை நான் தூக்கிட்டு வரும் போது என் கூட நடந்து வர உனக்கு அசிங்கமா இருந்தால் என் கூட வராதே..” என்று விடுவாள்..
என் வீட்டுக்கு தேவையான பொருட்களை நான் வாங்கி போகிறேன் .. இதில் எங்கு இருந்து வந்தது வெட்கம்..?
தன் குடும்பத்திற்க்கு என்றால்.. அவள் எதுவும் பார்க்க மாட்டாள்.. அது போல் அன்று எளிதான பொருளான மிளகு சீரகம் வாங்கி கொண்டு வீடு வந்தவளை அவளின் தாய் மாமன் மாமி தங்கள் வீட்டு ஹாலில் அமர்ந்து பேசி கொண்டு இருப்பதை பார்த்து.
“வாங்க மாமா வாங்க மாமி.. “ என்று வர வேற்றவள்..” ப்ரீத்தி அக்காவை கூட்டிட்டு வந்து இருக்கலாமே. வந்து ரொம்ப நாள் ஆச்சு..” என்று கேட்டவளுக்கு.. பதில் சொல்லாது சிரித்த அவள் தாய் மாமன் சீனிவாசன்..
“ம் அவளுக்கும் இங்கு வர தான் ஆசை. அதை பத்தி தான் உங்க பெரியம்மா கிட்ட பேசிட்டு இருக்கேன்.. அவங்க உன் அண்ணன் கிட்ட கேட்டு சொல்றேன் என்று சொல்லி இருக்காங்க..” என்ற பேச்சு பூவிதழுக்கு புரியவில்லை..
பின் அவர்கள் சென்ற பின். தன் அம்மாவும் பெரியம்மாவும் பேசும் பேச்சில் இருந்து பூவிதழ் புரிந்து கொண்டாள்..
அதாவது தன் மாமன் பெண்ணை தன் சித்தார்த் அண்ணாவுக்கு கட்டி கொடுக்க விருப்பம்.. எப்போதும் மாப்பிள்ளை வீடு தான் பெண் கேட்பார்கள்..
நாம என்ன வெளியாளா.. நல்ல பையன் கண் முன் இருக்க விட மனசு இல்ல.. அது தான் எதுவும் பார்க்காது நானே கேட்க வந்து விட்டேன் என்று தன் மாமனும் மாமியும் கூறியதாக பேசி கொள்ள..
அதை கேட்க கேட்க பூவிதழின் கண்கள் விரிந்து கொண்டன… ப்ரீத்தி தன் மாமனின் மூன்றாவது பெண்.. நல்ல பெண்.. நல்லவிதமாக பழுகுவாள்.. முன் எல்லா பள்ளி விடுமுறைக்கும் இங்கு வருவாள்.
தன் கூட்டு இல்லை.. தன் அக்காவின் வயது.. அதனால் தன்னோடு விளையாடுவதை விட அவள் அக்கா கூட தான் அதிக நேரம் சேர்ந்து இருப்பாள்..
பின் பெரிய பெண் ஆன பின் வருவது குறைந்து விட்டது.. அப்போது ஏன் என்று தெரியவில்லை.. பின் புரிந்து கொண்டாள். வீட்டில் வயது பையன் இருக்க அனுப்பவில்லை என்று.
அவளுடைய தாய் மாமன் சீனிவாசன் தந்தை இறந்த போது.. வந்து வந்து பார்த்து செல்வார்.. அவரே வீட்டிற்க்கு மொத்தமாக அழைத்து கொண்டு செல்ல பாவம் அவர்களின் பொருளாதாரத்தில் இடம் இல்லை..
மூன்று பெண்கள்.. வாடகை வீடு. அப்படி இருக்க. தங்களை பார்க்கவில்லை என்று குறை சொல்வது கூட முட்டாள் தனம்..
இது வரை ப்ரீத்தியை உறவு முறையில் மட்டுமே வைத்து பார்த்த பூவிதழ் இப்போது தன் வீட்டு பெண்ணாக தன் அண்ணன் பக்கத்தில் நிற்க வைத்து பார்த்தவளுக்கு அப்படி ஒரு திருப்தி..
இதை எப்படி நாம யோசிக்காது போனோம்.. என்று நினைத்து கொண்டவள்.. இது தான் பெரியவங்க காலம் நேரம் வரனும் என்று சொல்வாங்கலோ.. என்று அண்ணனின் வருகைக்காக அம்மா பெரியம்மாவோடு அவளும் ஆவளோடு காத்து கொண்டு இருந்தாள்..
எப்போதும் போல் அண்ணன் ஆறு மணிக்கு மேல் வரவும் காபியோடு ப்ரேட் ரோஸ்ட் பூவிதழ் எடுத்து வந்து கொடுக்க.
“நீ சாப்பிட்டியா பொம்மா.” என்று கேட்டு கொண்டே சாப்பிட்டு முடித்தவன். தங்கையின் முகத்தில் தெரிந்த புன்னகையில்.
“என்ன பொம்மா .. என்ன இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்க என்ன விசயம்..” என்று தங்கையிடம் கேட்டான்..
“ஏன் நான் சந்தோஷமா இருக்க கூடாதா..?” என்று கிண்டலுடன் கேட்க. சித்தார்த்தோ.. மிக தீவிரமாக..
“நீ எப்போதும் சந்தோஷமா இருக்கனும் பொம்மா..? என்று உள்ளார்ந்து கூறினான்..
அது என்னவோ சித்தார்த்துக்கு அவனின் உடன் பிறந்த தங்கை ஜெய சுதாவோடு தன் சித்தப்பா பெண் பூவிதழ் மீது பாசம் கொஞ்சம் கூடுதல் தான்.. இதை அடிக்கடி ஜெய சுதாவோ கூறுவது உண்டு..
அதே போல் தான் பூவிதழுக்கும் தன் உடன் பிறந்த சாதனாவை விட சித்தார்த் அண்ணா அவளுக்கு உயர்வு தான்.. சித்தார்த் ஆவது காரணம் கேட்டால் சொல்ல மாட்டான்..
ஆனால் பூவிதழ்… “எனக்கு அண்ணா என் அப்பா அம்மாவுக்கும் மேல.” என்று சொல்லி விடுவாள்.
அந்த அளவுக்கு தனக்கு பிடித்த தன் அண்ணனுக்கு முப்பது வயது எட்ட உள்ளது . இன்னும் வீட்டில் திருமண பேச்சையே எடுக்கவில்லையே. என்று தன் அக்கா சாதனா திருமணம் முடிந்த நாள் முதலாக இதே தான் யோசனை அவளுக்கு..
வீட்டில் பெரியவர்களிடம் தானே.. அண்ணன் திருமணம் பற்றி பேசுவது மரியாதை இல்லை என்பதை விட ஒரு வித பயம். எங்கு அண்ணன் காதல் தோல்வியை பற்றி வீட்டில் சொல்லி விடுவோமோ என்று,,
அதுவும் அண்ணனும்.. தன் திருமணத்தை பற்றி யோசிக்காது இருப்பதில், இப்போது எல்லாம் பூவிதழ் தன் அண்ணனை கவனிப்பதை அதிகம் படுத்தி இருந்தாள்..
இப்போது ப்ரீத்திக்கு அண்ணனை கொடுக்க பேச்சு நடந்ததில் சந்தோஷம்.. ப்ளஸ் அண்ணனின் மனநிலை தெரிந்து விடும் என்று இரண்டு விசயத்தில் ஆவளாக காத்து கொண்டு இருந்தாள்..
எப்போதும் போல் இரவு உணவு நான்கு பேரும் சேர்ந்து உண்டு முடித்தனர்.. முன் வீட்டு மேல் வேலைக்கு அவள் அப்பா இருக்கும் போது வைத்து இருந்தார்கள்..
இப்போது ஐந்து வருடமாக. வீட்டு பெண்கள் தான் செய்வது.. பூவிதழ் எப்போதும் போல் அம்மா பெரியம்மாவோடு சாப்பிட்டு முடித்த உடன் பாத்திரத்தை ஏறகட்டுவது. பாத்திரம் தேய்பதில் உதவி செய்து கொண்டு இருந்தாள்..
சித்தார்த் சாப்பிட்ட முடித்த உடன் தூங்க செல்ல மாட்டான் சிறிது நேரம் டிவி பார்த்து விட்டு தான் செல்வான்.
இவர்களும் அந்த சமயத்தில் வேலை முடித்து விட்டு அமர.. மகனிடம் ஏதாவது பேசுவார்கள் பெரிய மகளிடம் போனில் பேசிய விசயம்.. பேத்தி இது செய்தானாம்.. என்று வீட்டு நிலவரத்தை மகனிடம் பகிர்ந்து கொள்வார்கள்..
அன்றும் அதே போல் அம்மா சித்தி அமர்ந்ததும்.. தன் பக்கம் தங்கை அமர கண்டு.
“என்ன வேலை முடிந்த உடன் புக்கை கையில் எடுக்க ஒடி விடுவ.. இன்னைக்கு என்ன..?” என்று தங்கையிடம் விளையாட்டாக கேட்டு விட்டு.
தன்னிடம் ஏதோ சொல்ல வந்த அம்மாவிடம்.. “என்னம்மா ஏதாவது முக்கியமான விசயமா..?” என்று கேட்டதும்.
பாக்யவதி.. “அதுப்பா இன்னைக்கு பத்மினி அண்ணன் வீட்டிற்க்கு வந்தார்..அவர் தன் பெண்ணை உனக்கு கொடுக்க விருப்ப படுறார்.. நான் உன் கிட்ட கேட்டு முடிவு சொல்றதா சொல்லி இருக்கேன்பா..” என்ற அம்மாவின் இந்த பேச்சை சித்தார்த் எதிர் பார்க்கவில்லை..
சித்தியோட அண்ணன் வீடும் சென்னை தான்.. அவ்வப்போது வந்து பார்த்து செல்வார் தான்.. ஏன் சின்ன வயதில் விடுமுறைக்கு அவர்களின் மூன்று பெண்களும் இங்கு வந்து தங்கியும் இருக்கிறார்கள்..
பெரிய பெண் இவன் வயது.. பின் வயது கூட கூட ஒவ்வொரு பெண் வருகையும் குறைய கடைசியாக மூன்றாம் பெண் கூட இங்கு வந்து தங்கி ரொம்ப நாள் ஆகிறது..
இரண்டு பெண்களுக்கு திருமணம் முடிந்து விட்டது.. அப்போது தன்னை கேட்டது மூன்றாம் பெண்ணுக்கு . பெயர் பெயர்.. நெஞ்சிக்குள் நிற்கிறது வாயில் வரவில்லை.
சொல்லி விட்டு தன்னையே பார்த்து கொண்டு இருந்த அம்மா சித்தியை அப்போது தான் கவனித்தான்.. பக்கத்தில் இருக்கும் சின்னது சாதாரணமாவே என்னை தான் பார்த்துட்டு இருக்கும். இப்போ சொல்லவே தேவையில்லை என்று நினைத்த உடனே சித்தார்த்துக்கு சிரிப்பு வந்து விட்டது.
அதே சிரிப்போடு திரும்பி தன் தங்கையை பார்க்க. அவன் நினைத்தது போல் தான்.. தன்னையே பார்த்து கொண்டு இருந்த தங்கையின் தலையில் கொட்டிய..சித்தார்த்..
“போய் தூங்கு..” என்று சொல்லி அவளை அங்கு இருந்து அனுப்ப பார்த்தான்..
“ம்..” மாட்டேன் என்று சொல்லி இன்னும் சட்டமாக அமர்ந்து கொண்டாள்.
சிரித்து கொண்டே.. நாளைக்கு சொல்லட்டுமா மா..?” என்று அம்மா சித்தியிடம் அவகாசம் கேட்டான்..
சித்தியோ..”நல்லா யோசித்தே சொல் சித்தார்த்.. உனக்கு பிடித்தால் மட்டுமே சம்மதம் சொல். என் அண்ணன் பெண்.. நான் ஏதாவது நினைத்து கொள்வேன்.. இதை பத்தி எல்லாம் யோசிக்க கூடாது.. எனக்கு எல்லோரையும் விட உன் சந்தோஷம் தான் முக்கியம் சித்தார்த்..” என்று கூறிய பத்மினி முதலில் பேசிக் கொண்டு வந்த போது சாதாரணமாக இருந்தவர் முடிவில் உணர்ச்சி மிகுதியில் குரலும் சரி முகமும் சரி மாறி விட்டது..
அமர்ந்து இருந்த சித்தார்த் எழுந்து சித்தியின் அருகில் சென்றவன். அவர் கை பிடித்து கொண்டு.