புதியதாக கட்டிய அறையில். புது மாப்பிள்ளையாக சித்தார்த் அறையில் காத்து கொண்டு இருக்க.. புது மணப்பெண் ப்ரீத்தி மெல்ல அடி எடுத்து எல்லாம் வைத்து வரவில்லை.. அவளின் வேக நடையை பார்த்து.ஜெய சுதா..
“அண்ணி எங்க அண்ணன் பாவம்.. உங்க வேகத்திற்க்கு எல்லாம் அவர் தாங்க மாட்டார்.. பார்த்துங்க..” என்று தன் அறைக்கு முன் தங்கை பேசியது சித்தார்த் காதில் தெளிவாகவே விழுந்தது.
சித்தார்த்துக்கு அய்யோ. இவளாள்.. என்று வெட்கப்பட.. வெட்கப்பட வேண்டிய ப்ரீத்தியோ.. பால் டம்பலரோடு அறைக்கு வந்தவள் சித்தார்த் சொல்லாமலேயே.. கதவை இழுத்து தாழ் இட்டாள்..
வெளியில் நின்று கொண்டு இருந்த தங்கைகளில் சாதனா இப்போது. “அண்ணி இப்போ தான் கட்டிய அறை தாழை உடைத்து விடாதிங்க..” என்று சிரித்து கொண்டே சொல்ல
..
அதற்க்கு ப்ரீத்தி அறையில் இருந்தே..சத்தமாக.. “அது எல்லாம் உடைக்க மாட்டேன் நாத்தி.. இன்னைக்கு உடைத்து விட்டால் அப்புறம் நாளைக்கு எப்படி தாழ் போடுவது.” என்று கத்தினாள்..
அமர்ந்திருந்த சித்தார்த் தான்.. “அடியே..” என்று சொல்லி அவள் வாயை அடைத்து விட்டு அவள் கையில் இருந்த பாலை வாங்கி அங்கு இருந்த டேபுல் மீது வைத்தவன்..
“அவளுங்க என் தங்கச்சிங்க டி.. நாளைக்கு எப்படி அவங்க முகத்தில் விழிப்பேன்.” என்று பாவம் இப்போதே சித்தார்த் கவலை பட தொடங்கி விட்டான்..இன்னும் என்ன எல்லாமோ செய்ய போகும் மனைவி குணம் அறியாது.
அதற்க்கு ப்ரீத்தியோ.. “அவங்களுக்கும் இந்த சடங்கு எல்லாம் இந்த வீட்டில் தானே நடந்தது..? அவங்க உங்க முகத்தில் எப்படி முழித்தாங்கலோ அப்படி நீங்க முழிங்க.” என்று இது எல்லாம் ஒரு பிரச்சனையா..? என்பது போல் கேட்டவள்..
அப்போது தான் அவள் அந்த அறையே முதல் முதலாக பார்ப்பது.. “ஆ நல்லா இருக்கு அத்தான்.. இந்த ஷெல்ப் இந்த பக்கத்தோட இந்த பக்கம் வைத்தால், இன்னும் நல்லா இருந்து இருக்கும்..
இந்த ட்ரஸ்சிங் டேபுல் ஜன்னலுக்கு நேராக வைக்க இருக்க கூடாது அத்தான். ஜன்னல் திறந்து இருந்தா சூரிய வெளிச்சம் கண்ணாடியில் விழுந்தால்.” என்று ஏதோ வீடு
இன்டியர்டேக்ரேஷன் போல் பேசிக் கொண்டு போனவளை சித்தார்த் தான்.. இவள் என்ன மேக் என்பது போல் பார்த்தான்..
ஆண்மகனான அவனுக்கு அந்த அறையில் அலங்கரித்து இருந்த அந்த பூந்தோரணமும்.. பூ அலங்காரமும் பார்த்து ஒரு வித பதட்டத்தை கொடுத்தது.
பத்தட்டம் மட்டும் அல்லாது ஆர்வமும் தான் கலந்து அவன் மனதில் சூழ… அவன் மனது இந்த பக்கமும்,. அந்த பக்கமும் அல்லாடி கொண்டு இருக்க..
பெண்ணோ ஏதோ சுற்றுலாவுக்கு வந்தது போல் சுற்றி பார்த்ததோடு அவள் அபிப்பிராயமும் கூற.
இப்போது ஆண் மகன் தெளிந்து விட்டான்.. அவள் கை பிடித்து கட்டிலில் அமர வைத்தவன்..
“அடியே இன்னைக்கு நமக்கு பஸ்ட் நையிட்..?” என்று அவளுக்கு நியாபகம் படுத்தினான்..
அதற்க்கும் ப்ரீத்தி.. “என்ன அத்தான் இது கூட தெரியாத பச்சை புள்ளையா நான்.. இருபத்து நான்கு வயது அத்தான் எனக்கு.. என் முன்னாடி இரண்டு அக்காங்களுக்கும் இந்த சடங்கை எங்க வீட்டில் தான் நடத்தினாங்க.” என்று மனைவி சொல்லும் போதே அந்த வீட்டிலா..?
அந்த வீடு ஒரே படுக்கை அறை கொண்டது மட்டும் அல்லாது கூடமும் படுக்கை அறையும் பக்கம் பக்கம் தான். கண்டிப்பாக படுக்கை அறையில் பேசினால் ஹாலுக்கு இருப்பவர்களுக்கு நன்றாக கேட்கும்.
அதனால் தான் சித்தார்த் அங்கு வேண்டாம் என்றது. திருமணம் ஆகாத பெண்கள் இருக்கும் போது சங்கோஜமாக இருக்காதா..? என்று பாவம் சித்தார்த் யோசிக்கும் போது..
அது எல்லாம் எனக்கு இல்லவே இல்லை என்பது போல் ப்ரீத்தி.. அதையே சொன்னாள் “ சில பல சத்தம் கூட.” என்று கூறியவளின் வாயை அடைத்த சித்தார்த்.
“அடியே.. நான் கொஞ்சம் தெளிஞ்சிக்கிறேன் டி.. அத்தான் பாவம் இல்லையா..” என்று சொன்னதும் தான் ப்ரீத்தி கொஞ்சம் அடங்கி அமர்ந்தாள்..
பின் தன் தலையை தட்டி கொண்டு..” இரண்டு அத்தைங்களும் பாலை கொடுத்து உங்க காலில் விழ சொன்னாங்க..” என்று நல்ல பெண் அவதாரம் எடுக்க தான் பெண் பார்த்தாள்..
ஆனால் சித்தார்த். “உனக்கு ஒன்னும் தெரியாது என்று பாவம் அவங்க சொல்லி அனுப்பி இருப்பாங்க..” என்று சித்தார்த் சொன்னது தான்..
ப்ரீத்தி மீண்டும் தன் பேச்சை ஆரம்பித்து விட்டாள்.. ஆனால் மனைவியின் இந்த பேச்சில் ஆண்மகன் மொத்தமாக அவளிடம் விழுந்து விட்டான் என்று தான் சொல்ல வேண்டும்..
“அத்தான் இது எல்லாம் எனக்கு மட்டும் இல்ல.. எல்லா பெண்களுக்குமே ஒரளவுக்கு தெரியும் தான்.. என்ன ஒன்னு தெரியும் விகிதம் வேணா கொஞ்சம் அப்படி இப்படி என்று இருக்கலாம்..
அந்த காலம் போலவா இந்த காலத்தில் சின்ன பெண்ணா இருக்கும் போதே பெண்ணுக்கு கல்யாணம் செய்து கொடுத்து விடுறாங்க…
வயதின் ஹார்மோன் பாதி கத்து கொடுத்து விடும் என்றால், மீதியை டெக்னாலேஜ் சொல்லி கொடுத்து விடும் அத்தான்..
இந்த பெண்கள் தான் இந்த விசயத்தில் தெரிந்தும் தெரியாதது போல ஒரு பாவ்லா காட்டி கொள்வாங்க..” என்று சொல்லி விட்டு கணவனுக்கு பால் எடுத்து கொடுத்தாள் பெண்..
சித்தார்த்துக்கு மனைவியின் இந்த பேச்சு ஆர்வத்தை கூட்டியது..பாலை குடித்து கொண்டு இருந்த சித்தார்த் கையில் இருந்து மீதியை பரித்து குடித்து கொண்டு இருந்தவளிடம்..
“ஏன்..? என்று கேட்டான்.
“ம் அது அப்படி தான்.. அது என்னவோ பெண்களுக்கு இதில் எனக்கு ஒன்னும் தெரியாது என்பதில் நான் ரொம்ப நல்ல பெண் என்று காட்டி கொள்வதா.? இல்ல தெரியும் என்றால் எப்படி என்று ஹஸ்பெண்ட் தன்னை தப்பா நினைத்து கொள்வாங்க என்ற பயமா தெரியல.
ஆனா தெரிந்தாலும் இந்த பெண்கள் இந்த விசயத்தில் மட்டும் காட்டி கொள்ள மாட்டாங்க” என்று விளக்க. சித்தார்த்துக்கு இதில் இவ்வளவு இருக்கா என்ற யோசனை..
பின் ஏதோ நினைத்து கொண்டவன்.. “ஆனா நீ மட்டும் ஏன் அப்படி இல்ல.. நீ மத்த பெண்கள் நினைப்பது போல நினைக்கல.?” என்று கேட்டான்..
இத்தனை நேரம் வல வல என்று பேசிக் கொண்டு இருந்த பெண்ணவள்.. சித்தார்த்தின் இந்த கேள்விக்கு உடனே பதில் அளிக்கவில்லை..
மனைவியின் அந்த சிறிது நேரம் மெளனம் கூட சித்தார்த்தின் ஆர்வத்தை கூட்டி விட. மனைவியின் முகத்தையே ஆர்வத்துடன் பார்த்து கொண்டு இருந்தான்.
மனைவி சொன்ன அந்த பதில் மட்டுமே சித்தார்த்தை மொத்தமாக அவளிடம் விழ போதுமானதாக இருந்தது..
“ஏன்னா.. எனக்கு நீங்க எல்லா விதத்திலும் சந்தோஷமா இருக்கனும்.. வீட்டுல இருக்கிறவங்களுக்கு ஒவ்வொன்னா பார்த்து பார்த்து செய்யிற நீங்க எல்லா விதத்திலும் சந்தோஷமா இருக்கனும்.. மத்தது சாப்பாடு பேச்சு என்று எல்லாம் அம்மா தங்கைங்க என்று செய்ய முடியும்.. ஆனா இந்த சந்தோஷத்தை மனைவியான நான் தானே உங்களுக்கு கொடுக்க முடியும்..” என்ற மனைவியின் இந்த பேச்சில் கணவன் ப்ரீத்தியை வாரி அணைத்து கொண்டான்.
போதும் பெண்ணே போதும். உன் அதிகப்படியான இந்த காதல் என்னை பயம் கொள்ள வைக்கிறது.. உன் அளவுக்கு நான் உன் மீது காதல் கொள்ள முடியுமா.? என்று தெரியவில்லையடி பெண்ணே. உன் பேச்சால் பார்வையால் மொத்தமாக என்னை வீழ்த்தி விட்டாயடி பெண்ணே.. என்று மனதினில் பிதற்றியவன்..
பெண்ணவளுக்கு தான் என்ன என்ன சுகத்தை கொடுக்க முடியும் அனைத்தையும் கொடுக்க வேண்டும் என்று தன்னுள் மனைவியை மூழ்கடித்து கொண்டு இருந்தான்.
சித்தார்த் ப்ரீத்தி வாழ்க்கை சந்தோஷம் மட்டுமே என்று சென்று கொண்டு இருந்தது. அவன் வாழ்க்கையின் மகிழ்ச்சி அவன் முகம் அப்பட்டமாக காட்டி கொடுத்தது.
பூவிதழுக்கு வேறு என்ன வேண்டும்.. அண்ணாச்சி ஹாப்பி நானும் ஹாப்பி என்பது போல் அவளின் கல்வி வீடு என்று மிக சந்தோஷமாகவே சென்று கொண்டு இருந்தது.
விக்ரம் வீட்டில் தான் பரந்தாமன்.. மகனிடம்.. “நம்ம காளிதாஸ் அவர் பெண்ணை உனக்கு கொடுக்க ஆசைப்படுறார் நீ என்ன சொல்ற..? நீயும் தான் அந்த பெண்ணை பார்த்து இருக்கியே விக்ரம்..” என்று தந்தை பேசிக் கொண்டே மகனின் முகத்தை தான் பார்த்தார்..
மகன் முகத்தில் எந்த வித ஆர்வமும் தெரியாததை பார்த்து.. “அந்த பெண் ஒகே இல்லேன்னா என்ன விக்ரம்..? வேறு பெண் பார்க்கலாம்..?” என்ற இந்த பேச்சுக்கும் மகன் அலட்டி கொள்ளாததை கவனித்து.
“உன் மனதில் ஏதாவது இருந்தா சொல் விக்ரா.முடித்து விடலாம்..” இந்த பேச்சுக்கள் நடந்து கொண்டு இருந்த போது சாத்வீகா அங்கு தான் குழந்தைக்கு ரைம்ஸ் சொல்லி கொடுத்து கொண்டு இருந்தாள்..
அது என்னவோ தந்தை தம்பிடம் இந்த வார்த்தை சொன்ன போது அவளின் பார்வை தந்தை தம்பிடம் சென்றது.. பார்வை அவர்களிடம்.. நினைவு அவள் இழந்த காதலை நினைத்து கொண்டது..
விக்ரமும் தந்தையின் அந்த பேச்சில் அவன் பார்வை தன்னால் சகோதரி பக்கம் சென்றது..ஏனோ சகோதரி இப்படி நிற்க அவன் தான் காரணமோ.. அவள் கணவனை பற்றி தெரிந்து..தெரிந்து என்பதை விட கண்ணால் பார்த்த பின் கூடவே அழைத்து வந்த போது கூட விக்ரம் தன்னால் தான் என்று நினைக்கவில்லை..
ஆனால் இன்று ஏனோ அப்படி அவன் மனது நினைத்து கொண்டது.. மகன் தன் கேள்விக்கு பதில் அளிக்காததில் அது தானோ என்று நினைத்து கொண்டவர்.
“யார் பெண் விக்ரா. பெண் கேட்டு விடலாம்..” என்று கேட்டார்.. , இல்லை என்று தலையாட்டி விட்டான்..
“பெண் யாரா இருந்தாலும் பரவாயில்லை விக்ரம்.. உனக்கு பிடித்து இருந்தால் எனக்கு அது போதும்..” பெண்ணின் வாழ்க்கை அவரை அப்படி கூறவைத்தது..
பரந்தாமன் யாரா இருந்தாலும் பரவாயில்லை என்று சொன்னது அந்தஸ்த்தை மட்டும் வைத்து தான்..
ஆறு மாதகாலமாக பெண்ணை பார்த்து கொண்டு இருந்தவருக்கு, அவருமே சித்தார்த்தை பற்றி யோசித்தார்..
அதனால் பெண்ணின் வாழ்க்கை தான் இப்படி ஆகி விட்டது.. மகனாவது மகிழ்ச்சியோடு வாழ்ட்டும் என்று தான் அப்படி சொன்னது..
ஆனால் பாவம் அவருக்கு தெரியவில்லை.. எதையும் பார்க்காது வருவது தான் காதல் என்பது. அதுவும் எந்த இடம் தங்கள் அந்தஸ்த்துக்கு இணை இல்லை என்று சகுனி வேலை பார்த்து தன் சகோதரியின் காதலை பிரித்தானோ.. அந்த வீட்டு பெண் மீது தான் இவனும் காதலில் விழ போகிறான் என்று.
சகோதரியின் காதலை பிரிக்க அவன் நியாயம் என்று எதுவும் பார்க்காது இருந்தானோ.. அதே தன் காதல் கை கூட எதுவும் பார்க்காது தான் காதலித்த பெண்ணை கை பிடிக்க போகிறான் என்று.. அதுவும் தான் காதலிக்கும் பெண்ணே தன் காதலை ஏற்காத போதும்..
தன் மகனின் அமைதியில் மீண்டும் பரந்தாமன்.. என்ன விக்ரமா .? என்று கேட்க.
“அது எல்லாம் ஒன்றும் இல்ல டாட்..” என்று மறுத்து விட.. இதை சொல்ல இவனுக்கு இவ்வளவு நேரமா என்று தான் தந்தையும் சகோதரியும் விக்ரமை பார்த்தது..