இவள் சொன்னதை என் சகோதரி செய்ய வேண்டுமா.? என்ற கோபம்.. இந்த பேச்சுக்கு முகேஷ் அமைதியானன்.. இப்போது இரவு பத்து மணி இந்த நேரம் தன் குழந்தைகளை படுக்க வைத்து தூங்க வைத்து இருப்பாள்..
அது என்னவோ குழந்தைகள் ஆழ்ந்த உறக்கத்திற்க்கு செல்லும் வரை அவர்களுக்கு அம்மா வேண்டும்.. அதனால் மட்டும் இல்லாது இது போலான இடத்திற்க்கு அவன் மனைவி வருவதில் அவனுக்கு விருப்பம் இல்லை.. அதனால் அமைதி காத்தான். அதன் தொட்டு மட்டுமா தெரியவில்லை..
ஆனால் விக்ரம். “மனைவி போன் நம்பர் இல்லை போல்.. நான் வேணா தரட்டுமா..” என்ற விக்ரமனின் இந்த பேச்சில் டேனியல்..
“உனக்கு தெரிந்த பெண்ணாடா. அது தான் இந்த கோபமா ..” என்று இன்னும் விவரம் தெரியாது தான் டேனியல் கேட்டது..
அதில் அதுவும் டேனியல் முன் சொன்ன வசதிக்கு அந்த பெண்ணும் அமைதியாக போய் விடுகிறது என்ற வார்த்தை நியாபகத்தில் வர…
முகேஷை காட்டி.. “இவன் வித் இன் சில்வர் ஸ்பூன் என்றால். சாத்வீகா வித் கோல்டன் ஸ்பூன் டேனி.. என் சிஸ்டர்.. எங்க தொழில் எல்லா வற்றிலும் சம பங்கு இருக்க என் சிஸ்டர்.. இவனுடைய இந்த புத்திக்கு அட்ஜெஸ்ட் செய்து இருந்து தான் சுக போகமா வாழனும் என்று அவளுக்கு எந்த தலை எழுத்தும் கிடையாது..” என்ற விக்ரமனின் பேச்சில்..
டேனிடல்.. “சாரி தோஸ்த். சாரி நான் தெரியாம.” என்று உண்மையாக வருந்தி மன்னிப்பு கேட்டான்..
விக்ரம் இப்போது டேனியல் பேசியதோடு.. ஏன் சாது தங்களிடம் எதுவும் இதை பற்றி சொல்லவில்லை.. அது தான்..
முகேஷை பார்த்து.. “நான் என் சிஸ்டரையும் குழந்தையையும் சென்னைக்கு கூட்டிட்டு போறோன்.. ஒழுங்கு மரியாதையா டைவஸ் கொடு.. இல்லேன்னா கொடுக்க வைப்பேன்..” என்று அப்பட்டமாக மிரட்டினான்..
முகேஷ்க்கும் இப்போது அந்த வலி குறைந்ததில்.. “என் மனைவியே எதுவும் கேட்காது இருக்கும் போது நீ யார் கேட்க..?” என்று கேட்ட கேள்வியில் விக்ரம் தான் யார் என்று பேச்சால் இல்லாது செயலால் நிருப்பித்து விட்டு தன் சகோதரியை குழந்தைகளுடன் சென்னைக்கு அழைத்து வந்து விட்டான்..
இதற்க்கு விக்ரமுக்கு எல்லா வகையிலுமே உதவி செய்தது டேனியல் தான்.. சென்னை வந்த பின்னும் விக்ரம் முகேஷை விட்டு விடவில்லை.. அவனின் அதிகாரத்தை உபயோகம் செய்து.. முகேஷின் விளம்பரம் கம்பெனியின் பெயர் மட்டும் அல்லாது அங்கு மாடலுக்கும் சாதாரண வேலை செய்யும் பெண்களுக்கும் கூட பாதுகாப்பு இல்லை என்று அவனை எழ விடாத வாறு செய்து விட்டான்..
ஆனால் அவனுக்கு இன்று வரை ஒன்று மட்டும் புரியவில்லை.. சாத்வீகா ஏன் இதை எல்லாம் சகித்து கொண்டாள் என்று..
என்ன தலை எழுத்து.. படித்த இந்த தலை முறை பெண்.. பணத்திற்க்கும் குறை இல்லாது மற்றவர்களை சார்ந்து வாழ தேவையில்லை. ஏன் அமைதி காத்தாள்.. அவன் கணக்குப்படி திருமணம் முடிந்து ஆறுமாதத்திலேயே முகேஷை பற்றி தெரிந்து இருக்கும்..
ஏன் தங்களிடம் இதை பற்றி கூறவில்லை. இந்த கேள்வியை அவனுக்கு அவனே நிறைய முறை கேட்டு இருக்கிறான்.. ஆனால் சாதவீகாவிடம் ஒரு முறை கூட கேட்கவில்லை.. ஏன் என்று தெரியவில்லை..
சாத்வீகாவின் இந்த நிலைக்கு தான் மட்டுமே காரணம் என்ற எண்ணம் அவனுக்கு.. எந்த காரணத்தினால் தங்களிடம் அவள் கூறவில்லை என்று தெரியவில்லை..
தான் கேட்டு அவள் மனது கஷ்டப்பட போகிறாள் என்று கேட்காது விட்டு விட்டான்..
இனி அடுத்து சகோதரி வாழ்க்கை.. அவன் மனதில் இன்னும் முப்பது கூட ஆகவில்லை.. இரண்டாம் திருமணம் செய்து வைத்து விடலாமா என்ற யோசனை அவனுக்கு..
இன்னும் சாத்வீகாவுக்கு முகேஷிடம் இருந்து விவாகரத்து முழுமையாக கிடைக்கவில்லை..
கிடைத்த பின் சாத்வீகாவுக்கு மறு திருமணத்தை பற்றி பார்க்கலாம். இப்போது விவாகரத்து வழக்கில் தொழில் ரீதியாக முகேஷை மிரட்டியதில் கொடுத்து விடுவான் தான்..
ஆனால் குழந்தைகள் விசயத்தில் அவன் என்ன செய்வான் என்று தான் விக்ரமினால் தீர்மானமாக தெரியவில்லை..
முகேஷை பற்றி ஆயிரம் இருந்தாலும் குழந்தைகளிடம் பாசமாக தான் இருக்கிறான். அதில் பொய் இல்லை.. அது விக்ரமுக்கு தெரிந்து தான் இருந்தது.
அதனால் கோர்ட்டில் குழந்தை தனக்கு வேண்டும் என்றால்.. இல்லை வாரத்தில் இரண்டு நாள் என்றால் சென்னைக்கும் மும்பைக்கும் குழந்தை அல்லாடி கொண்டு இருக்குமா.?
அதோடு விக்ரமுக்கு நீதி மன்றம் விடுமுறைக்கு குழந்தைகள் தந்தையிடம் இருக்கட்டும் என்று தீர்ப்பு சொன்னால் கூட..
குழந்தைகளை அங்கும் இங்கும் அலைக்கழிப்பத்தில் அவனுக்கு விருப்பம் கிடையாது.. அது குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்க கூடும் என்பதால், இதை எப்படி ஹான்டில் செய்வது என்ற யோசனை.. இப்படி விக்ரம் வீட்டில் அனைத்துமே குழப்பத்தில் இருக்க..
சித்தார்த் வீட்டிலோ அவர்களின் மகிழ்ச்சியை கூட்டும் வகையாக இல்லை இல்லை இரட்டிப்பு மகிழ்ச்சி என்று சொன்னால் சரியாக இருக்கும்.. சாதனாவும் ப்ரீத்தியும் குழந்தை உண்டாகி இருந்தார்கள்..
பூவிதழுக்கு தலை கால் புரியவில்லை.. கால் ஒரு இடத்தில் இல்லாது சாதனா அக்கா தங்கி இருந்த அறைக்கும் ப்ரீத்தி அண்ணி அறைக்கும் அலைந்து போனாள்.. சொல்வார்கள் ஒரே வீட்டில் இரண்டு பேர் குழந்தை உண்டாகி இருந்தால் ஒன்றாக இருக்க கூடாது என்று..
ஆனால் அது என்னவோ சாதனா இங்கு வந்த பின் ப்ரீத்தியை சித்தார்த் வீட்டவர்கள் அவளின் அம்மா வீட்டிற்க்கு தான் அனுப்பினார்கள்..
அதன் பின் சித்தார்த் வெளியில் காட்டி கொள்ளவில்லை என்றாலுமே, மனைவி சென்ற பின் சித்தார்த் முகம் ஒரு மாதிரி வாட்டமாக இருப்பதை பார்த்த நம்ம பூவிதழ் சும்மா விடுவாளா…?
அடம் பிடித்து விட்டாள்..”இது என்ன சாங்கியம்.. நம்ம சந்தோஷத்திற்க்கு தான் இந்த சாங்கியம் சம்பிராயம் எல்லாம்.. ஒரே வீட்டில் இரண்டு பேருக்கு குழந்தை பிறந்தால் அது மகிழ்ச்சி தானே. அந்த மகிழ்ச்சியை அனுபவிக்க கூடாது பிடித்து வைப்பது என்ன நியாயம்.? என்று தன் அம்மா பெரியம்மாவிடம் பூவிதழ் சண்டைக்கு சென்றாள்.
சித்தார்த்தை அந்த இரு அன்னை மார்களுமே கவனித்து கொண்டு தானே இருக்கிறார்கள்.. ப்ரீத்தி தன் தாய் வீட்டிற்க்கு சென்றது முதல் மகன் ஒரு மாதிரியாக இருப்பதை..
சித்தார்த் மகிழ்ச்சி முக்கியம் என்று நினைத்த பாக்யவதியும் பத்மினியும் ஒரு ஜோதிடரிடம் சென்று இது பற்றி கேட்டனர்.
அந்த பெரியவர். “பிள்ளை பெற்ற வீட்டில் வேலைகள் இருப்பதோடு ஒரே வீட்டில் இரண்டு பேர் பிள்ளை உண்டாகி இருப்பதை பார்த்தால் கண் பட்டு விடும் என்றும் தான் இது போல பெரியவர்கள் ஏற்பாடு செய்து வைத்தது.. உங்களால் முடியும் என்றால் பிரச்சனை இல்லை என்று விட்டார்..
பின் என்ன ப்ரீத்தியை சித்தார்த் வீட்டிற்க்கு அழைத்து வந்து விட்டனர்..
பெண் அவளுமே எப்போ எப்போ என்று தான் காத்து கொண்டு இருந்தாள்.. அவளுக்குமே இந்த சாங்கியத்தில் எல்லாம் நம்பிக்கை கிடையாது.
ஆனால் வீட்டில் பெரியவர்கள் ஒன்று சொல்லி அதை மறுக்க முடியவில்லை.. அதோடு தான் ஆவது திருமணம் முடிந்த உடன் உண்டாகி விட்டேன்.. ஆனால் சாதனா. அப்படி இல்லையே நீண்ட நாள் காத்திருப்புக்கு பின் கிடைத்த இந்த குழந்தை.. அவர்கள் எல்லாம் பார்ப்பார்கள் தானே..
தான் இங்கு இருந்து சாதனாவுக்கு ஏதாவது ஆகி விட்டால், சம்மந்தி சண்டை.. என்று ஏதாவது ஏற்பட்டு விட்டால், சித்தார்த் அவனின் மனநிம்மதி அவளுக்கு ரொம்ப முக்கியம்.. அதனால் தான் பெரியவர்கள் சொல்லுக்கு கட்டுப்பட்டு தாய் வீடு சென்றது..
சித்தார்த்துக்கும் இதில் நம்பிக்கை கிடையாது தான்.. இருந்தும் வீட்டில் பெரியவர்கள் சொன்ன பின் எப்போதும் அவன் தட்டியது கிடையாது..
ப்ரீத்தி சென்னையில் தானே இருக்கிறாள்.. தினம் மாலை சென்று பார்த்து கொள்ளலாம்.. விடுமுறையில் அங்கு போகலாம்.. என்று திட்டம் போட்ட போது நன்றாக தான் இருந்தது..
ஆனால் இந்த ஆறுமாத பழக்கத்தில் மனைவி பக்கத்தில் இல்லாது தூக்கம் வருவேணா என்று ஆட்டம் காட்டியது.. மற்ற மனைவிகள் எப்படி என்று தெரியவில்லை. ஆனால் ப்ரீத்தி எதற்க்கு தன்னை தேடவிட்டது இல்லை..அனைத்திலுமே.. அந்த அறை முழுவதுமே அவள் வாசம்.. அதனால் அந்த அறையில் தூங்க முடியாது என்று தான் மொட்டை மாடிக்கு சென்று விடுவது..
எப்போதும் போல் பூவிதழ் கவனித்து விட்டு சொல்லி விட்டாள்.. ஆனால் பொம்மா.. நீ இந்த அண்ணனை நல்லா புரிஞ்சி வைச்சி இருக்கே குட்டிம்மா..
நான் உனக்கு மாப்பிள்ளையா ஒரு இளவரசனை பார்த்து கட்டி வைப்பேன்டா. தன் மகிழ்ச்சி மட்டுமே நினைத்து கொண்டு இருக்கும் தங்கைக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை கொடுக்க நினைத்தான்.. அவன் மட்டும் நினைத்தால் போதுமா.. மேல் இருப்பவன் என்ன நினைக்கிறான் என்று தெரியவில்லையே.
கடவுள் என்ன நினைக்கிறான் என்று தெரிவதற்க்கு முன் இதோ விக்ரம்.. பூவிதழோடான முதல் சந்திப்பில் விக்ரம் என்ன நினைக்கிறான் என்று பார்ப்போம்.. ஒரு வேலை சித்தார்த் பூவிதழுக்கு ஒரு இளவரசனை பார்க்க வேண்டும் என்று நினைத்தானே.. அந்த இளவரசன் இவனாக கூட இருக்கலாம்..
பூவிதழின் கல்லூரி வாழ்க்கை அன்றோடு முடிவு பெறுகிறது.. பூவிதழ் மகிழ்ச்சி எப்போதும் வீட்டில் தான் தேடுபவள்.. அதனால் பிரண்ஸ்ஸோடு எல்லாம் வெளியில் இது வரை சென்றது கிடையாது..
கல்லூரி கடைசி தினமான அன்று ஏனோ அவள் தோழிகள் அவளை விடுவதாக இல்லை.
“இன்று எங்களோடு சினிமாவுக்கு வந்து தான் ஆக வேண்டும். உனக்கு சேர்த்து தான் டிக்கெட் புக் செய்து இருக்கோம்.. வீடு வீடு என்று சொல்றியே எங்களுக்கு மட்டும் வீடு இல்லையா..? அம்மா இல்லையா..? அப்பா இல்லையா..? இல்ல அவங்க மீது எங்களுக்கு எல்லாம் பாசம் தான் இல்லையா..?
இருக்கு எங்களுக்கும் இருக்கு தான்.. ஆனா காலேஜ் அதுல வரும் ஹாப்பி.. இந்த லைப் எதிலுமே கிடைக்காது பூ..” என்று அவளின் உற்ற தோழி. காயத்திரி கூற..
அது என்னவோ அவளுக்குமே போக வேண்டும் போல் அன்று தோன்றியது.. அது ஒன்றும் இல்லை.. இன்று சித்தார்த் ப்ரீத்தி அண்ணியோடு அம்மா வீட்டிற்க்கு சென்ற இரவு தான் வருவதாக இருக்கிறது..
அதனால் ஒத்து கொண்டு விட்டாள்.. வீட்டிற்க்கு அழைத்து சொல்லி விட்டாள்.. வர தாமதம் ஆகும் என்று..
எப்போதும் போகாதவள் இன்று செல்வதாக சொல்லவும் காசு இருக்கா. என்று அப்படியான கேள்விகள் தான் பெரியவர்களிடம் இருந்து வந்தது..
சித்தார்தோ பணம் வைத்து இருக்கிறாளோ என்று அவள் பேசிக்கு நெட் மூலம் பணத்தை அனுப்பி விட்டு தான்.. பூவிதழை அழைத்தது.
“நல்லா என்சாய் செய் பொம்மா. பணம் அனுப்பி இருக்கேன்.. அப்படியே ஷாப்பிங்க போயிட்டு வரது என்றாலும் வா. அதோட வெளியில் சாப்பிட்டு விட்டு தான் வர வேண்டும்.. உன் பிரண்ஸ்க்கும் நீயே வாங்கி கொடு..நேரம் அதிகம் ஆகி விட்டால். எனக்கு கால் பண்ணு நான் பிக்கெப் செய்து
கொள்கிறேன்..” என்று அவன் ஒரு பக்கம் பாசத்தை அள்ளி தெளிக்க. இதை எல்லாம் பூவிதழ் பக்கத்தில் நின்று பார்த்தும் கேட்டும் இருந்த தோழிகள்.