அம்மையப்பன் 10
அமுதனின் கூற்றை ஆழ்ந்து யோசித்தான் அகத்தியன்.. அவன் கூறுவதும் ஒருவகையில் உண்மையே.. ஷாலினி குழலி இருவருக்கும் எங்கு போனாலும் பெரியோர்களின் துணை வேண்டும்.. பக்கத்தில் உள்ள கோவிலுக்கு கூட பவளம் அமிர்தம் துணையின்றி செல்ல மாட்டார்கள்.. எது ஒன்றுனாலும் இருவரும் அவனிடம் தான் வருவார்கள்.. எனவே அவர்களை சற்று வெளியே விட அகத்தியன் சம்மதித்தான்..
கண்ணுங்களா.. அமுதன் சொல்றதும் சரியான விசயம் தான்.. நீங்க ரெண்டு பேரும் அந்த காலேஜ்லயே, விடுதியில தங்கி படிங்க.. என அகத்தியன் முடிவாக சொல்ல.. குழலியும் ஷாலினியும் மனதேயில்லாது சம்மதித்தனர்..
ராசா.. கோயம்புத்தூர்ல இருக்க உன்ற மாமனார் வூட்டுக்கு தகவல் சொல்லிடுய்யா.. இல்ல அவுக கோவிச்சுக்க போறாக.. நேத்தைக்கு ராமநாதன் வேற போன் செஞ்சுருந்தான்.. என அம்மையப்பன் கூறினார்..
அகத்தியனும் தன் மச்சான் அரவிந்தனுக்கு அழைக்க.. இரு நிமிடத்திலேயே அவன் போனை எடுத்தான்..
சொல்லுங்க மாப்பிளை எப்படி இருக்கீங்க.. வூட்டுல எல்லாரும் நலமா.. என்ற மருமவ எங்க.. என கேட்டார்..
எல்லாரும் நல்லா இருக்கோம் மச்சான்.. உங்க மருமவ இங்கதான் இருக்கா.. என்று பதில் கூறியவன்.. அவனையும் நலம் விசாரித்தான்..
காலேஜ் போறத பத்தி பேசிகிட்டு இருந்தோம்.. புள்ளைய கோவைலயே சேர்த்துரலாம்ன்னு இருக்கேன் மச்சான்.. என்றான்..
ஓஹ் அப்படியா மாப்பிளை.. நல்லதுதான்.. எங்க நம்ம அன்பு அமுதன் படிக்கிற காலேஜு தான என கேட்டார்.. அவர் மகள் அன்பரசியும் அந்த கல்லூரியில் தான் படிக்கிறாள்.. குழலியை விட இரு வயது பெரியவள்..
ஹ்ம்ம் ஆமா மச்சான்.. அந்த காலேஜு தான்.. விடுதியில சேர்க்கலாம்ன்னு இருக்கோம் என அவன் சொல்லவும் மறுமுனையில் ஒரு அமைதி நிலவியது..
ஏங்க மாப்பிளை நம்ம வூட்டுல இருந்து காலேசு போகலாம்ல.. என மெல்லிய வருத்ததோடு கேட்டார்..
இல்லீங்க மச்சான்.. வேண்டாம் என அழுத்தமாக அகத்தியன் சொல்ல அரவிந்தன் விட்டுவிட்டார்..
சரிங்க மாப்பிளை.. உங்க விருப்பம்.. ரெண்டு நா முன்னாடியாவது வாங்க.. என அழைப்பு விடுவித்து போனை வைத்தார்…
அரவிந்தனுக்கு இரண்டு பிள்ளைகள்.. மூத்தவன் ஆகாஷ் இருபத்தி நான்கு வயது வாலிபன்.. படிப்பு முடித்துவிட்டு தந்தைக்கு உதவியாக இருக்கிறான்.. அடுத்து அன்பரசி.. கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படிக்கிறாள்..
அரவிந்தனின் மனைவி ஜெயந்திக்கு குழலியை தங்கள் வீட்டு மருமகளாக்க ஆசை.. அவள் மட்டும் அல்லாது குடும்பத்தினருக்கும் தான்.. பெரியவர்களுக்கு தங்கள் பேத்தி இங்கு வரவேண்டும் என்ற எண்ணம்.. ஆனால் ஜெயந்திக்கோ அவர்கள் வீட்டின் ஆஸ்தி அந்தஸ்த்தில் தான் எண்ணம்.. அம்மையப்பன் வீட்டின் ஒற்றை ஆண் வாரிசின் ஒற்றை பெண் வாரிசு.. ஆகாஷ் மட்டும் அவளை திருமணம் செய்துவிட்டால் அவர் மகனுக்கு தானே அம்மையப்பன் குடும்பத்தின் அடுத்த வாரிசுக்கான மரியாதை கிட்டும்.. அதனால் பேச்சு வாக்கில் அகத்தியனிடமும் அவன் வீட்டினரிடமும் இதனை அடிக்கடி சொல்லுவார்.. அவர்கள் யாரும் இதனை ஆமோதிக்காது எதிர்க்கத்தான் செய்வார்கள்.. ஆனாலும் ஜெயந்தி தன் முயற்சியை விடாது தொடர்ந்து கொண்டிருக்கிறார்.. அவர் மட்டுமல்லாது மகனின் மனதிலும் இவ்விஷயத்தை போட்டிருக்க.. அவனும் குழலியை காதலாக பார்வையிட்டு கொண்டிருக்கிறான்..
அதனாலேயே அகத்தியன் குழலியை அங்கு அதிகம் விடுவதில்லை.. தன்னோடே அழைத்து சென்று.. பெரியவர்களிடம் காண்பித்து விட்டு கையோடு கூப்பிட்டு வந்துவிடுவான்..
நாளை கல்லூரிக்கு செல்ல வேண்டும்.. எல்லாம் தயாராகிவிட்டன.. இன்று அவர்களை விடுதியில் சேர்ப்பதற்கு குடும்பமே கிளம்பி விட்டது.. சாமி கும்பிட்டு.. இருவரும் பெரியோர்களிடம் ஆசீர்வாதம் வாங்கி கொண்டிருந்தனர்.. ஷாலினியும் குழலியும் முகவாட்டத்துடனே இருக்க.. மற்ற பெண்கள் கலங்கிய கண்களை அடிக்கடி துடைத்து கொண்டிருந்தனர்..
காலேஜிலிருந்து விடுதிக்கு பத்து நிமிட நடை பயணம் தான்.. அந்த விடுதியே பைவ் ஸ்டார் ஹோட்டல் போல் இருந்தது.. உள்ளே தனிதனியாக நிறைய கட்டிடங்கள் இருந்தன.. ஆர்ட்ஸ் அண்ட் சைன்ஸ் மற்றும் இன்ஜினியரிங் மாணவர்களுக்கு தனி தனியாக பில்டிங் இருந்தது.. அதோடு யூஜி மாணவர்களுக்கு தனியாக பிஜி மாணவர்களுக்கு தனியாக கட்டிடம் இருந்தது.. படிக்கும் வருடம் அடிப்படையில் தான் அவர்கள் தங்கும் தளங்களும் பிரிக்க பட்டன.. இவர்களை போல் அங்கு நிறைய பேர் இருந்தார்கள்.. ஆனாலும் அங்குள்ளவர்களின் கண்கள் நொடிக்கு ஒரு முறை இவர்களை அதிசயம் போல் பார்த்து கொண்டிருந்தனர்.. பின்னே இருவரை விட ஒரு ஊரே வந்தா.. அவர்கள் வித்தியாசமாக பார்க்க மாட்டார்களா.. அரவிந்தன் குடும்பமும் அவர்களுடன் இருந்தது..
ஷாலினியும் குழலியும் பதட்டமும் பயமுமாக இருக்க.. அமுதன் அங்கு வந்தான்.. என்ன ரெண்டு பேரும் ஜாலியா இருக்கீங்க போல.. என அமுதன் நக்கலாக கேட்க.. இருவரும் அவனை கொலைவெறியுடன் முறைத்தனர்.. அவர்கள் இங்கு வருவதற்கு காரணமே இவன்தானே..
என்னடி மொறைப்பு என குழலி தலையில் மெல்லிதாக கொட்ட.. இரு கண்கள் அவனை பஸ்பமாக்கும் முயற்சியில் முறைத்து கொண்டிருந்தது.. அது வேறு யாருமல்ல ஜெயந்தியும் ஆகாஷும் தான்..
என்னப்பா இது.. ஏன் என்ற மருமவ தலையில கொட்டுற.. அவளே ரொம்ப பயந்து போயி இருக்கா.. என ஜெயந்தி அவனை சத்தமிட.. அப்பொழுதான் அவர்கள் இருப்பதையே அமுதன் கவனித்தான்.. உடனே அவன் முகம் இறுக்கம் கொண்டது..
இதுக்குத்தான் சொன்னேன்.. என்ற மருமவ எங்க வூட்டுல இருந்து படிக்க போகட்டும்ன்னு யாரு கேட்டா.. இதுவே என் நாத்தனார் அன்பழகி இருந்திருந்தா இப்படி ஆகியிருக்குமா.. அவங்க பொறந்த வூட்டை விட்டுகொடுத்திருப்பாங்களா.. என ஜெயந்தி தன் பல்லவியை தொடங்கினார்..
அதில் அமுதனின் முகத்தோடு அகத்தியனின் முகமும் இறுகி போனது.. ஜெயந்தி போதும்.. எங்க வந்து என்ன பேசிகிட்டு இருக்க.. என மெலிதாக சத்தமிட்டு.. தற்காலிகமாக தன் மனைவியின் வாயை மூடினார்.. அரவிந்தன்.
அமுதா யாழினி எங்க.. என அகத்தியன் கேட்டான்..
போன் பண்ணிட்டேன் மாமா.. இப்போ வந்துடுவா.. என அவன் சொல்லும் பொழுதே.. யாழினி வந்தாள்..
வாடி.. இப்போதான் உனக்கு விடிஞ்சுச்சா.. என கேட்டார்.. பவளம்..
ம்மா கொஞ்சம் எழுத வேண்டியது இருந்துச்சுங்கம்மா..
ஹ்ம்ம் நல்லா கதை சொல்லு.. மூனு மாசமா ஏன் வீட்டுக்கே வரல.. என அடுத்த கேள்வியை கேட்க.. யாழினி தன் அன்னையை எரிச்சலுடன் பார்த்தாள்..
யாழினி அப்படியே அவள் அத்தை கலையரசியின் மறுபதிப்பு.. கொஞ்சம் சுயநலவாதி.. அவளை யாரும் கேள்வி கேட்பதையும் அவளின் முடிவுகளில் தலையிடுவதையும் விரும்ப மாட்டாள்.. ஒருத்தர் மேல் அவள் வெறுப்பு கொண்டாள் இறுதிவரை அதை மாற்றி கொள்ள மாட்டாள்.. கொஞ்சம் பிடிவாத குணம் அதிகம்..
அம்மா நான்தான் சொன்னேன்ல எக்ஸாம் போயிட்டு இருக்குன்னு.. என எரிச்சலை மறக்காது காண்பிக்க..
சரி விடு அம்மணி.. அக்கா உன்ன பார்க்க முடியாத ஏக்கத்துல கேட்குறாங்.. என அகத்தியன் அழுத்தமாக கூற.. யாழினியின் வாய் மூடிகொண்டது..
ஐயா.. என அழைத்தவாரு குழலி வந்தாள்..
என்னாச்சுங் அம்மணி.. எந்த அறைனு சொல்லிட்டாங்களா..
ம்ம் சொல்லிட்டாங் மாமா.. எங்க ரெண்டு பேருக்கும் வேற வேற ரூமு.. என சோகமாய் சொன்னாள் ஷாலினி..
ஆமா ஐயா.. ஒரு ரூமுக்கு நாலு பேராம்.. என்னோட பார்ம் மொத ரூமுக்கு போயிடுச்சு.. இவ எனக்கு பக்கத்து ரூமு.. என்றாள் குழலி..
இதுல என்ன கண்ணு இருக்கு.. பக்கத்து பக்கத்து அறைதானே விடுங்க என அகத்தியன் ஷாலினியை சமாதானம் செய்ய.. யாழினி இதனை கோபமாய் பார்த்தாள்.. யாழினிக்கும் ஷாலினிக்கும் ஏழாம் பொருத்தம்.. இருவருக்கும் ஒற்றுப்போகவே செய்யாது.. யாரவது ஷாலினியிடம் செல்லம் கொடுத்து பேசினாலே இவளுக்கு புகைந்து விடும்..
ஒருவழியாக அவர்கள் அறையில் இருவரையும் விட்டு.. எல்லோரும் கிளம்புவதற்கு ஆயத்தமாக.. ஷாலினியும் குழலியும் அழுக ஆரம்பித்தனர்.. அவர்களை கண்டு எல்லாருக்கும் அழுகை வந்தது.. அகத்தியன் கலங்கிய விழியை மகளுக்கு காட்டாது மறைக்க.. குழலி தந்தையை பாய்ந்து வந்து அணைத்து கொண்டாள்..
ஷாலினியும் தன் அன்னை தந்தையிடம் சரணடைந்தாள்.. இதுவரை இரு சிட்டுகளும் தந்தையின் இறகுகளில் தான் இருந்தார்கள்.. பெற்றோரை விட்டு ஒரு பொழுது கூட வெளியே சென்று தங்கியதில்லை.. யாழினி விடுமுறை தினம் வந்தாலே தன் அத்தையிடம் ஓடிவிடுவாள்.. அதனால் அவள் விடுதிக்கு செல்லும் பொழுது பெரிதாக தெரியவில்லை.. ஆனால் கைக்குள் வளர்த்த பிள்ளைகளை பிரிவதையெண்ணி பெரிதும் கலங்கினர்..
ப்ச் இப்போ எதுக்கு எல்லாரும் சேர்ந்து ஒப்பாரி வச்சுக்கிட்டு இருக்கிங்க.. வாரம் வாரம் வூட்டுக்கு வரப்போறாங்க தானே.. அப்பொறம் என்ன.. என அமுதன் அனைவரையும் சமாதானம் செய்து அழைத்து வந்தான்..
ஷாலினி குழலி இருவரையும் தன்னிரு கரங்களாலும் அணைத்துக்கொண்டான் அகத்தியன்..
இங்க பாருங்க கண்ணுங்களா.. உங்களுக்கு தைரியமும் தன்னம்பிக்கையும் வளரனும்கிறதுக்காக தான் உங்களை இங்க விட்ருக்கேன்.. உங்களை நம்பித்தான் விட்டுப்போறோம்.. அதுக்கு பாதகம் வராம பாத்துக்கோங்க.. என்னன்னாலும் எங்களுக்கு போன் பண்ணுங்க.. என அகத்தியன் கரகரப்பான குரலுடன் சொல்லியவன்.. இருவர் தலையிலும் முத்தமிட்டு வெளியே செல்ல… ஆயிரம் அறிவுரைகள் சொல்லி மற்றவர்களும் சென்றனர்.. வாயில் வரை வந்து எல்லாரையும் வழியனுப்பிவிட்டே.. மூவரும் உள்ளே வந்தனர்..
ஷாலினி இன்னும் அழுதுக்கொண்டே இருக்க.. யாழினி தன் மனதின் கொதிப்பை கொட்டினாள்..
எதுக்குடி இப்ப அழுதுக்கிட்டே இருக்க.. ஏற்கனவே எல்லாரும் சேர்ந்து ஒரு ட்ராம போட்டுட்டீங்க.. அதுக்கே என் ப்ரெண்ட்ஸ் என்ன சொல்லுவாங்களோன்னு இருக்கேன்.. இதுல நீ வேற இருட்டேட் பண்ற..
இந்த காலேஜ்ல தான் நீ வந்து படிக்கணுமா.. என்ன குரூப் எடுத்திருக்க நீ.. உன்ன என் தங்கச்சின்னு சொல்றதுக்கே ஒரு மாதிரி அவமானமா இருக்கு.. என யாழினி பேசிக்கொண்டே செல்ல.. ஷாலினி மனதில் அடி வாங்கினாள்.. ஏற்கனவே குடும்பத்தினரை பிரிந்த வேதனையில இருந்தவளுக்கு தமக்கையின் பேச்சு மேலும் வேதனையளித்தது..
அத்தாச்சி போதும்.. ஏன் இப்படி பேசுறீங்.. என குழலி கோபம் கொள்ள.. அப்பொழுது தான் குழலியும் அங்கிருப்பதை உணர்ந்து வாயை மூடினாள்.. அவளின் தேள் கொடுக்கான பேச்சுக்கள் எல்லாம் ஷாலினியின் தனிமையில் மட்டும்தான்.. இன்று ஒரு வேகத்தில் குழலி இருப்பதையும் மறந்து வாயை விட்டுவிட்டாள்..
ப்ச் சும்மா ஏதோ டென்ஷன் குட்டி.. அதான் இப்படி பேசிட்டேன் என தணிந்த குரலில் சொன்னாள் யாழினி..
ஆமா நீயும் ஏன் குட்டி இந்த கோர்ஸ் எடுத்த.. மெடிசின் இல்ல இன்ஜினியரிங் எடுத்துருக்கலாம்ல.. என கேட்டாள்..
இல்ல அத்தாச்சி எனக்கு இதுதான் பிடிச்சுருக்கு..
சரி உன் விருப்பம்.. நீங்க ரெண்டு பேரும் உங்க ரூமுக்கு போங்க.. நான் அப்பொறம் வரேன்.. என தன் பில்டிங்கிற்கு செல்ல.. ஷாலினி போகும் அவளையே வெறித்து பார்த்தாள்.. என்றைக்கும் தோன்றும் கேள்வி தான்.. குழலியிடம் பேசும்பொழுது இருக்கும் கனிவு பாசம் எல்லாம் ஒருபொழுதும் இவளிடம் பேசும்பொழுது இருந்ததில்லை..
குழலி தோழியின் மனநிலை உணர்ந்து அவள் தோளில் கரம் பதிக்க.. ஷாலினி அவளை பார்த்தாள்.. விடுடி அவங்கள பத்தி தான் தெரியுமே.. வா நாம போயி நம்ம திங்ஸ அடுக்குவோம்.. என அவளை கூட்டி கொண்டு சென்றாள்..
ஷாலினியும் குழலியும் முதலில் குழலி அறைக்கு வந்தனர்.. அங்கு ஏற்கனவே மூன்று பேர் வந்து.. பேசிக்கொண்டிருக்க.. இவர்கள் முழித்தனர்..
ஹலோ.. நான் ரஞ்சனி.. மேத்ஸ் டிபார்ட்மென்ட்..
நான் சுபர்ணா.. பிஸிக்ஸ்
நான் கீர்த்திகா.. இங்கிலிஷ் டிபார்ட்மென்ட்.. என மூவரும் அறிமுகமானர்..
இதுல யாரு இங்க தங்க போறீங்க.. என கேட்டாள் ரஞ்சனி..
நான்தான் என் பேரு கார்குழலி.. பாட்டணி டிபார்ட்மென்ட்.. இது என்னோட அத்தை பொண்ணு ஷாலினி.. இவளும் பர்ஸ்ட் இயர் தான்.. பைன் ஆர்ட்ஸ்.. பக்கத்து ரூம்..
ஓஹ்.. கார்குழலி அழகான தமிழ் பேரு.. நாங்க இந்த மூனு கட்டில் எடுத்துக்குறோம்.. உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே..
இல்ல.. நான் அந்த கட்டில் எடுத்துக்குறேன்.. என செல்ப், லாக்கர் என பேச்சுக்கள் சகஜமாக நீண்டு கொண்டிருக்க.. எல்லோரும் அவர்களின் பொருட்களை அடுக்கிக் கொண்டிருந்தனர்..
நல்ல பெரிய அறைதான்.. படிப்பதற்கான மேஜை நான்கு லாக்கர் செல்ப் மற்றும் அட்டாச் பாத்ரூமும் இருந்தது..
பேச்சுக்களில் இருந்து ரஞ்சனி மதுரை என்றும்.. சுபர்ணா திருச்சி என்றும் கீர்த்திகா கடலூர் என தெரிந்தது..
சரி நாங்க.. இவ ரூம்க்கு போயி எல்லாம் அடுக்கிட்டு வரோம்.. என குழலி சொல்ல.. நானும் வரேன்.. சீக்கிரம் வேலை முடியும் என கீர்த்திகா வந்தாள்..
ஷாலினி அறையிலும் ஒரு அறிமுக படலம் முடிந்தது.. அதில் இருவர் ஸ்கூல் ப்ரெண்ட்ஸ்.. மற்றொரு பெண்ணோ எந்நேரமும் போனிலேயே இருந்தாள்.. பேர் சொன்னதோட சரி.. அடுத்து எதுவும் பேசவில்லை.. பொருட்களை எல்லாம் அடுக்கி வைத்துவிட்டு குழலியின் அறைக்கே வந்துவிட்டனர்..
நான் இங்கயே இருந்துக்கிறேண்டி.. அந்த ரூமுக்கு வேணாம்.. யாரும் நல்லா பேச மாட்டேங்குறாங்க.. என ஷாலினி சோர்ந்து கூறினாள்..
நானும் அதான் சொல்லலாம்ன்னு இருந்தேன்.. உன்னோட திங்ஸ் மட்டும் அங்க இருக்கட்டும்.. மத்தபடி இங்கேயே இரு.. என கீர்த்திகாவும் கூற இருவரும் நிம்மதியடைந்தனர்..
நீதான் இவ்வளவு மார்க்கு எடுத்துருக்கேல குழலி.. அப்பொறம் ஏன் மெடிசின் எடுக்கல.. என கேட்டாள் சுபர்ணா..
எனக்கு செடி தோட்டம் எல்லாம் ரொம்ப புடிக்கும்.. சுபா.. அதான் இதையே எடுத்துட்டேன்..
உங்க வீட்டுல எதுவும் சொல்லலையா.. என கேட்டாள் கீர்த்திகா..
அதெல்லாம் எதுவும் சொல்ல மாட்டாங்க..
ஹ்ம்ம் நீ ரொம்ப லக்கி.. விரும்புறத படிக்கிற.. என்றாள் ரஞ்சனி..
ஏன் உனக்கு மேத்ஸ் பிடிக்காதா..
சுத்தமா பிடிக்காது.. எங்கப்பா ஒரு மேத்ஸ் ப்ரொபஸ்சர்.. அதுனால என்னையும் அதே எடுக்க வச்சுட்டார் என சலிப்பாக கூறினாள்..
இப்படியே பேச்சுக்கள் நீள ஐவரும் நெருங்கிய தோழிகளாகி விட்டனர்..
சற்று நேரத்திலேயே ஷாலினி கரத்தில் இருந்த புது போன் ஒலித்தது..
ஐயனாதான் இருக்கும் என சட்டென போனை வாங்கி.. ஐயா என பேச ஆரம்பித்தாள்.. குழலி..
யாரு..?
எங்க மாமா..
ஓஹ் இவ ரொம்ப செல்லமோ..
ஹ்ம்ம்.. மாமா தான் இவளுக்கு எல்லாம்..
ஹ்ம்ம்.. அப்போ அம்மா..?
ஒரு நிமிட அமைதிக்கு பின்.. இல்ல.. நாங்க சின்ன குழந்தையா இருக்கும் போதே அத்தை தவறிட்டாங்க.. அப்போதுல இருந்து மாமா தான் இவளை பார்த்துப்பாங்க.. என மெல்லிய குரலில் சொல்ல.. மூவரும் குழலியே பார்த்தனர்.. அதில் அவளுக்கான வருத்தம் இருந்தது..
இதோ கொடுக்குறேனுங் ஐயா.. என ஷாலினியிடம் போனை கொடுக்க அவளும் சிறிது நேரம் பேசிவிட்டு வந்தாள்.. இரவு உணவிற்கு யாழினி போனில் அழைக்க.. புது தோழிகளுடன் சாப்பிட்டு கொள்வதாய் சொல்லிவிட்டனர்.. ஷாலினி குழலி அறையிலேயே படுத்து விட்டாள்..
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.