அம்மையப்பன் 15
இன்னும் உன் திமிரு அடங்கனும் போல இருக்கு.. நீ என்கிட்ட பகைச்சுகிற ஒவ்வொரு நொடிக்கும் நான் உன்னை ஓடவச்சுக்கிட்டே இருப்பேன்.. என அதி அழுத்தமாக சொல்ல.. கண்ணாடி சுவர்கள் மீண்டும் பழையபடி மாறியது.. மற்றவர்கள் யாரும் தெரியவில்லை..
மாப்புள வாய்யா.. வா.. என அரவிந்தன் அவனை இழுத்து கொண்டு சென்றான்..
நீ பொண்ணா இல்ல பேயா ஏன் இப்படி டார்ச்சர் பண்ற.. என அமுதன் ஆத்திரத்துடன் கத்தினான்..
அவளோ அவனை அலட்சியம் செய்து.. யாழினியை பார்த்தாள்.. அவள் உடல் நடுங்கி, அழுது கொண்டே குழலியிடம் ஒட்டிக்கொண்டு அமர்ந்திருந்தாள்..
கேடுகெட்டவ.. இதோட மட்டும் நிறுத்த மாட்டா.. இதுக்கும் மேல போவா.. பொண்ணுங்க நீங்க ஏழு பேரு இருக்கீங்க.. இங்க என்னோட ஆளுங்களும் ஏழு பேர் இருப்பாங்க.. கேடு கெட்டவ அவங்கள வெறும் காவலுக்கு மட்டும் வைக்க மாட்டா.. என அழுத்தமாக சொல்ல.. யாழினி விதிர்விதித்து போனாள்..
இன்னொரு முறை இப்படி பேசுறதை பார்த்தேன்.. வாய கிழிச்சு தைச்சுடுவேன்.. என குரலை உயர்த்தாமல் சொல்ல.. யாழினி பயத்தில் மயக்கத்திற்கே சென்று விட்டாள்.. அங்கிருந்தவர்களுக்கு யாழினியின் பேச்சுக்கான தண்டனை என புரிந்தது..
இப்பொழுது அமுதனை விட சொல்லி சைகை செய்தவள்.. என்ன உன் பிரச்சனை.. சும்மா துள்ளிக்கிட்டே வர.. என்ன சண்ட போடணுமா.. என நக்கலாக கேட்க.. அமுதன் அவளை வெறித்து பார்த்தான்..
மாமா.. ப்ளீஸ் இங்க வாங்க என சோர்ந்து போய் கூறினாள் குழலி.. அதில் அமுதனின் ஆவேசம் சற்று தனிந்தது..
******************************
மச்சான் எனக்கு என்னமோ இது ரொம்ப பெரிய பிரச்சனையா இருக்கும்ன்னு தோணுது.. பேசாம போலீஸ் கம்ப்லைண்ட் கொடுத்துடுவோம்டா என சரவணன் சொல்ல.. அதி அதனை பார்த்து நக்கலாக புன்னகைத்தாள்..
அகத்தியன் தலையசைத்து மறுத்தான்.. போலீஸ் எல்லாம் சரிவராது.. என சொல்லிகொண்டிருக்கும் போதே.. போன் வர.. காரின் ப்ளூடூத்தில் இணைத்தான்..
சொல்லுங்க.. நான் சொன்ன விஷயம் என்னாச்சு..
சார் ப்ளூ ரோஸ் ஹோட்டல் ஓனர் ரெண்டு பேர் சார்.. அதுல ஒருத்தர் உலகத்துல விரல் விட்டு எண்ணக்கூடிய பணக்கார லிஸ்ட்ல இருக்க, அபயஸிம்ஹா சக்சேனா.. இன்னொருத்தர் Ak.. அவங்க ஒரு பொண்ணு.. அவங்களோட முழுபெயர் கூட யாருக்குமே தெரியலை.. அவங்க சக்சேனா குழுமத்தின் நிறைய பிஸ்னஸ்ல பார்ட்னரா இருக்காங்க.. அவங்க ரெண்டு பேரும் ரொம்ப க்ளோஸ்.. சில பேரு அவங்க லிவ்விங் ரிலேஷன்ஷிப்ல இருக்கிறதா சொல்லுறாங்க.. சில பேரு அவங்க குட் ப்ரெண்ட்ஸ்ன்னு சொல்றாங்க சார்.. Ak பேமிலி மும்பையில இருக்கிறதா சொல்றாங்க.. சாரி டு சே சார்.. அவங்கள பத்தி இவ்வளவு தான் என்னால தெரிஞ்சுக்க முடிஞ்சது.. எனவும், அகத்தியன் போனை வைத்தான்..
ஹோ.. மிஸ்டர் அகத்தியன் என்னை பத்தி விசாரிக்க சொன்னாரா..
ஆமா மேம்.. VV டீடெக்டிவ்கிட்ட விசாரிக்க சொல்லிருக்கார்.. என விஷ்ணு விறைப்பாக கூறினான்..
இத பாத்தா உனக்கு என்ன தோணுது..
டைம் வேஸ்ட்.. மணி வேஸ்ட்ன்னு தோணுது மேம்..
ஹ்ம்ம்ம் உனக்கு தெரியுது.. என கேலியாக மற்றவர்களை பார்க்க அவர்களோ அவளையே திகைத்து பார்த்து கொண்டிருந்தனர்..
அப்பொழுது அகத்தியனிற்கு இன்னொரு போன் வந்தது.. சொல்லு மாரி..
அண்ணே இது கொஞ்சம் பெரிய விவகாரமா இருக்கு.. எந்த பக்கமும் விசாரிக்க முடியலை.. நம்மகிட்ட மோதியிருக்கிறது பெரிய கையின்னு தோணுது.. இத்தனைக்கும் நான் மினிஸ்டர் வரை பேசி பாத்துட்டேன்.. அந்த ஏகேவை ஒன்னுமே பண்ண முடியாதுன்னு சொல்றாங்க.. அபயஸிம்ஹா சக்சேனா தாண்டி தான் அவங்கள நெருங்க முடியும்.. ஆனா அவரு மனுஷ ரூபத்துல இருக்க அரக்கன்னே.. நாம இதுல தனிஞ்சு தான் போகணும் என அவன் தயக்கமாக சொல்ல.. எதுவும் பேசாமல்.. அகத்தியன் போனை வைத்தான்..
மேம் இது கோவை தாதா மேம்.. நம்ம ஹோட்டலுக்கு ரைட் வர சொல்லி மினிஸ்டர் வரை ட்ரை பண்ணிருக்காங்க..
பாருடா.. பால் வடியும் முகத்தை வச்சுக்கிட்டு, தாதா கூட எல்லாம் ப்ரெண்ட்ஷிப்.. இட்ஸ் டூ பேட்.. இல்ல குழலி என அவளை பார்க்க.. அவளோ காரில் சாய்ந்து ஓய்ந்து போய் அமர்ந்திருந்த அகத்தியனையே பார்த்தாள்..
தன் மக்களை எப்படி மீட்கபோகிறோம் என.. அவன் தவித்து கொண்டிருப்பது அவளுக்கு புரிந்தது.. எல்லா பக்கமும் அடைப்பட்டான நிலையில் மூச்சு முட்டி அமர்ந்திருந்தான்..
மெல்ல குழலி எழுந்து அதி அருகே வந்தாள்.. எங்க குடும்பத்துல உள்ளவங்க, என்ன பண்ணாங்க ஏது பண்ணாங்கன்னு எல்லாம் எனக்கு தெரியாது.. ஆனா ஒன்னு, கண்டிப்பா என்ற ஐயன் யாருக்கும் எந்த தீங்கும் செஞ்சிருக்க மாட்டாரு.. உங்களுக்கு பகை எங்க குடும்பம் தானே.. என்னை கொன்னுடுங்க.. என்னை கொன்னு உங்க பழிய தீத்துகோங்க.. என்னோட குடும்பத்தை விட்டுடுங்க என கரம் கூப்பி கெஞ்ச.. அங்குள்ள எல்லோர் மனமும் வேதனையில் துடித்தது.. ஷாலினி அமுதன் மதுமித்ரா மூவரும் அகத்தியனையும் குழலியையும் எண்ணி கலங்கினர்..
ஓவரா படம் பாப்பியா.. டையலாக் எல்லாம் நல்லா பேசுற.. போயி உன் இடத்துல உட்காரு.. இந்த அதி என்ன பண்ணனும் பண்ணக்கூடாதுன்னு சொல்ல யாருக்கும் அனுமதி கிடையாது.. என அதி அலட்சியமும் அதிகாரமுமாக சொன்னாள்..
குழலி வா என அமுதன் அவள் கைபிடித்து அழைத்து சென்றான்.. குழலி அவள் தோளில் சாய்ந்து அழுது கொண்டிருக்க.. அவன் சமாதானம் செய்து கொண்டிருந்தான்..
*****************************
அகத்தியன் அவன் உடைத்த டேபிளை மாற்றிவிட்டான்..
ஹ்ம்ம் குட் மிஸ்டர் அகத்தியன்.. எல்லாம் ஓகே.. இப்போ கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. நான் உங்களுக்கு அடுத்து என்ன சொல்லலாம்னு யோசிக்கிறேன் என அதியின் குரல் மட்டும் கேட்க.. அகத்தியன் வெறுமையாக இறுகி போய் நின்றான்..
அங்கு நடக்கும் ஒவ்வொரு விஷயங்களையும் கிரகித்து கொண்டிருந்த அமுதனுக்கு இது வெறும் தொழிலுக்கான பழிவாங்குதலாக தோன்ற வில்லை.. வேறு பெரிய விஷயம் உள்ளே புதைந்திருப்பதாய் தோன்றியது..
அகத்தியனும் அதைத்தான் யோசித்து கொண்டிருந்தான்.. அவனுக்கும் அவனுடைய குடும்பத்தார்க்கும் மும்பையின் தொழிலதிபர் மகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.. பிறகு எதற்கு இப்படி கடத்தி வைத்து அலையவைக்க வேண்டும் என புரியாது நின்று கொண்டிருந்தான்..
அப்பொழுது அவுனுக்கு எதிரே இருந்த கண்ணாடியில் அவள் தோன்றினாள்.. ஓகே மிஸ்டர் அகத்தியன்.. காலையில இருந்து நீங்க நாயா அலைஞ்சுட்டிங்க.. உங்க பசங்கள விடுறததான் இருந்தேன்.. ஆனா இப்போ அதுல ஒரு சின்ன டாஸ்க்.. என புருவம் உயர்த்தி சொல்ல அகத்தியன் வெறிகொண்டு அவளை பார்த்தான்..
என்னடா வெறியாகுற.. இவ்வளவு பட்டும் நீ திருந்தல.. அதி சாதாரணமாக கேட்க.. அகத்தியன் மேலும் அவளை முறைத்தான்..
அதி எதுவும் பேசாமல் தன் பின்பக்கத்திலிருந்து ஒரு துப்பாகியை எடுக்க.. சரவணனும் அரவிந்தனும் அதிர்ச்சியானார்கள்..
அதி அகத்தியனை பார்த்தவாரு பின்னால் உள்ளவர்கள் மேல் குறிவைக்க… கை முஷ்டியை இருக்கி.. விழிகளை மூடி தன் ஆவேசத்தை அடக்கிக் கொண்டான் அவன்.. பின் மெல்ல விழி திறந்து.. அடுத்து என்ன பண்ணனும் என இறுகிய குரலில் கேட்டான்..
மண்டியிடணும் என ஒற்றை வார்த்தையில் அத்தனை பேரையும் நொறுக்கினாள்.. அதி..
என்ன…?
என் முன்னாடி மண்டியிடு..
மாமா.. யார் முன்னாடியும் நீங்க மண்டியிட கூடாது.. இவங்க என்னதான் பண்றாங்கனு பார்க்கலாம் என அமுதன் ஆக்ரோஷமாக கூற.. அகத்தியன் மெல்லிய பெருமூச்சுடன் அவள் முன் மண்டியிட்டான்..
மாமா.. ஐயா.. என உள்ளிருந்து ஷாலினி குழலி இருவரும் கத்த.. அமுதன் அவரையே வெறித்து பார்த்து கொண்டிருந்தான்.. முறுக்கிய மீசையுடன் கம்பீரமாக சுற்றி கொண்டிருந்த மாமன்.. இன்று தங்களுக்காக ஒரு பெண்ணிடம் மண்டியிட்டு இருப்பதைக் கண்டு அவன் இதயத்தில் ரத்தம் கசிந்தது..
அம்மா தாயே, நீ யாரு என்னனு தெரியாது.. ஆனா ஏன் எங்கள இப்படி பண்ற.. அதான் இவன் மண்டியிட்டுட்டான்ல.. எங்க பிள்ளைகள அனுப்பி விடுமா.. என சரவணன் நண்பனின் நிலை பொருக்காது அவளிடம் மன்றாடினான்..
மறுப்பாய் தலையசைத்தாள்.. அம்மையைப்பன் குடும்பம் இங்க வரணும்.. அவங்க வீட்டு வாரிசுங்க நிலைய கண்ணால பாக்கணும்.. என அழுத்தமாக கூறினாள்..
வரலைன்னா.. என அகத்தியனும் அழுத்தமாக கேட்டான்..
உன் மில்லுல தீப்பிடிக்கும்.. பேக்ட்ரில ஷார்ட் சர்க்யூட்டாகும்.. உன் வீட்டுல உள்ள ஆடு, மாடு ஏன் மனுசங்க கூட சாவாங்க என அவனுக்கும் மேல் அழுத்தமாக கூறினாள்..
சரவணன் உடனே திருச்செல்வத்துக்கு போன் செய்து விட்டார்..
டேய் எங்கடா இருக்கீங்க.. எவ்வளவு போன் பண்றது.. பசங்க எல்லார் போனும் கூட எடுக்க மாட்டேன்குது.. யாரும் ஏன் இன்னும் இங்க வரல.. அகத்தியன் எங்க மொதல்ல.. என அவர் சரவணனை பேச விடாமல் அடுத்தடுத்து கேட்டார்..
அண்ணே கொஞ்சம் பொறுமையா இருங்க.. மொதல்ல எல்லாரையும் அழைச்சுக்கிட்டு நான் சொல்ற இடத்துக்கு வாங்க.. என கூறினான்..
டேய் நான் கேட்டதுக்கு முதல்ல பதில் சொல்லுடா..
அண்ணே அதுக்கு எல்லாம் நேரம் இல்ல.. முதல்ல எல்லாரையும் கூட்டிட்டு இங்க வா என போனை வைத்துவிட்டார்..
என்னடா ஆச்சு அவேன் என்ன சொன்னான் என கேட்டார் நாகநாதன்..
ப்ளூ ரோஸ் ஹோட்டலுக்கு எல்லாரையும் கூட்டிட்டு வர சொன்னாங் ஐயா..
அங்க எதுக்குயா எனக் கேட்டார் சிவனேசன்..
தெரியலீங் மாமா.. ஆனா ரொம்ப அவசரம் போல.. எல்லாரும் விரசா கிளம்புங்க என்றார் திருச்செல்வம்..
அதி கூண்டு புலி போல் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தாள்.. அவள் எதிர்பார்த்த நேரம் வந்துவிட்டது..
அப்பொழுது அதிக்கு அபய் போன் செய்ய.. டீவியில் கனெக்ட் செய்ய சொன்னாள்..
அபயஸிம்ஹா சக்சேனா அதி இருவரும் பள்ளியிலிருந்தே நண்பர்கள்.. அதி ராட்சஷி என்றால் அபய் ராட்சஷன்.. அவ்வளவு தான் இருவருக்கும் வித்தியாசம்.. சின்ன ஷார்ட்ஸ் மட்டும் அணிந்தவாரு அபய் அவளிடம் வீடியோ காலில் பேசிகொண்டிருந்தான்..
ஹாய் அபி..
ஹாய் அதி..
ஆமா என்ன அதிசயமா இந்த டைம் கால் பண்ணியிருக்க.. சார் இப்போ உங்க சிற்பிகுட்டி கூட தானே இருப்பிங்க.. எங்க அவ.. என கேலியாக கேட்டாள்..
மேடம் அசதியா தூங்குறாங்க.. என சிறு சிரிப்புடன் கண்ணடித்து சொன்னான்..
ஓஹோ.. ஆல்ரெடி நிறைய ரவுண்ட் போயிட்டு தான் வரீங்களா.. சரி எங்க என்னோட டார்லிங்.. என கேட்டாள்..
உன்னோட டார்லிங் இங்க தான் இருக்கான்.. என்னை எதிர்த்து முறைக்கிற ஒரே பெரிய மனுஷன்.. மை வில்லன்.. என ஆறு மாத குழந்தையை காண்பிக்க.. அதுவும் அவன் தகப்பனை முறைத்தது..
அஸி குட்டி.. டார்லிங்.. என அதி அழைக்கவும்.. தன் மொச்சை கொட்டை கண்களை விரித்த அஸி.. அவளை பார்த்ததும் துள்ள.. அதி அவனை கொஞ்சினாள்..
ஓஹ் மை பேபி டார்லிங்.. யூ மிஸ் மீ..
அதெல்லாம் கிடையாது அதி.. இவன் பொல்லா கேடி.. அவங்க அம்மாவ பார்த்ததும் நம்மள எல்லாம் மறந்திடுவான்..
இப்ப கூட ஏன் என்ன முறைச்சானு நினைக்கிற, சார் தூங்கி எழுந்துருச்சுல இருந்து அவங்க அம்மா கிட்ட விடவே இல்ல.. அதனால தான் என அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே சிற்பிக்கு அங்கு வந்து விட்டாள்
சிம்மு மாமு என அவள் மெல்ல அழைக்கவுமே.. குட்டி அபய் துள்ளி குதித்து தாயிடம் தாவதொடங்கினான்..
எப்படி இருக்க சிற்பி
நல்லா இருக்கேன் அக்கா நீங்க எப்படி இருக்கீங்க.. என அவள் பேசும் பொழுதே மகன் பசியில் அழுக தொடங்கினான்.. அவள் அதியிடம் சொல்லி கொண்டு உள்ளே சென்றுவிட்டாள்..
ம்ம்ம்ம் மேடம் எப்படி இருக்கீங்க.. என புருவம் உயர்த்தினான்..
பழி வாங்கும் நிமிஷங்கள அனுபவிச்சுக்கிட்டு இருக்கேன்.. என அதி புன்னகைத்தாள்..
ஹ்ம்ம் இட்ஸ் கிரேட் பீலிங்.. அதுல கிடைக்கிற சந்தோஷம் இருக்கே என அபய் விழி மூடி சொல்ல.. அதியும் தலையசைத்து ஆமோதித்தாள்..
அடுத்து.. என ஒற்றை வார்த்தையில் கேட்டான்..
மொத்த அம்மையப்பன் குடும்பத்தையும் நம்ம இடத்துக்கு வரவழைச்சுருக்கேன்.. அப்போ அவங்க வீட்டு பசங்க நிலைய பாத்து அவங்க துடிக்கிறத பாக்கணும்.. என அதி விழிகள் மின்ன சொன்னாள்..
ஓகே.. உனக்கு எங்க எப்படி அடிக்கணும்ன்னு தெரியும்.. நான் சொல்ல வேண்டியது இல்ல.. சீக்கிரம் எல்லாம் முடிச்சுடு…
உடம்புல அடிக்கிற வலிய விட மனசுல அடிக்கிற வலிக்கு வீரியம் அதிகம்.. என அபய் அதி இருவருமே ஒன்றாய் கூற.. சுற்றியுள்ள அனைவரும் திகைத்து போயினர்..
விஷ்ணு..
சார் என விறைப்பாக சொன்னான்..
டேக் கேர் ஆப் ஹெர் என அழுத்தமாக அவன் சொல்ல..
எஸ் சார்.. என்றான்..
ஓஹ் மை காட் அபி.. என அதி சிரிக்க.. அவனும் ஓர் மெல்லிய சிரிப்புடன் இணைப்பை துண்டித்தான்..
அதுவரை சற்று இலகுவாக இருந்த அவள் முகம் மீண்டும் அழுத்தமாக மாற.. அகத்தியன் முதல் அங்குள்ளோர் அனைவரும்.. இவளை சற்று மிரட்சியாக அதிர்ச்சியாக ஆச்சரியமாக என பல விதங்களில் பார்த்து கொண்டிருந்தனர்.. அதி அதனை உணர்ந்தாலும் கண்டுக்கொள்ளவில்லை..
அகத்தியன் அவளையே பார்த்து கொண்டிருந்தான்.. இதுவரை அவன் வாழ்க்கையில் இப்படியொரு பெண்ணை அவன் பார்த்ததில்லை.. என்ன ஒரு ஆளுமை, அதிகாரம்.. அவளின் சிறு செயல் கூட ஒரு மகாராணியின் தோரணையில் இருந்தது.. அவள் அபயிடம் பேசும்பொழுது அதில் நட்பு உரிமை, அன்பும் தெரிந்தது.. அவன் மனைவியுடனும் குந்தையுடனும் இவள் பேசும் பொழுது அவள் குரல் சற்று குழைந்து இருந்தது.. ஆனாலும் அதிலும் ஒரு ஆளுமையும் உரிமையும் அவனுக்கு தெரிந்தது..
இறுதியில் அபய் அதி இருவரும் சேர்ந்து பேசிய வசனங்களை கேட்டு உண்மையில் அகத்தியன் அதிர்ந்து தான் போனான்.. எங்கள் குடும்பம் அவளுக்கு என்ன செய்தது.. ஏன் இப்படி செய்கிறாள் என யோசிக்க..
விஷ்ணு.. அம்மையப்பன் பேமிலி என அதி பேசவும் அவளிடம் கவனம் வைத்தான்..
அவங்க எல்லாம் வந்துகிட்டு இருக்காங்க.. மேம்..
லைவ் போடு.. என அவள் சொல்லவும்.. அம்மையப்பன் பேச்சியம்மை மரகதம் வேதவல்லி திருச்செல்வம் ஒரு காரிலும்.. நாகநாதன், சிவநேசன், திருநாவுக்கரசு, பவளம் அமிர்தம் ஒரு காரிலும் வந்தனர்..
அகத்தியன் அவள் தங்களை கண்கானிக்கிறாள் என யூகித்திருந்ததால் இது கண்டு அவன் பெரிதாக அதிர்ச்சி அடையவில்லை..
எனக்கு ரொம்ப படபடப்பா இருக்குங் மாமா.. ஏதோ கெட்டது நடக்க போற மாதிரி தோணுதுங்.. மதியத்துல இருந்து பசங்க வேற பேசல.. அவங்க போனும் போகல.. யாருக்கும் எதுவும் நடந்திருக்காதுல மாமா.. என பேச்சியம்மை அழுகையும் கலக்கமுமாக கேட்டார்..
அம்மையைப்பன் எதுவும் பேசவில்லை.. ப்ளூ ரோஸ் ஹோட்டல் என்ற வார்த்தையிலேயே சர்வமும் ஒடுங்கி அமர்ந்துவிட்டார்.. அவர் எதை நினைத்து பயந்தாரோ அது நடந்து விட்டது என அவர் உள் மனம் சொல்ல.. சிலையாய் சமைந்துவிட்டார்..
ஐயா என்னாச்சுங்.. என மரகதம் தந்தையின் கரத்தை தட்டினார்.. அதில் சுயநினைவு வந்தவர்.. தன் மனதின் எண்ணத்தை அவர்களிடம் சொல்லலாமா என ஓர் நொடி யோசித்து பின் விட்டுவிட்டார்.. நினைத்தது இல்லையென்றால் இவர்களின் நிம்மதியும் பரிபோகும்.. அங்கு சென்று பார்த்தால் தெரிந்து விட போகிறது.. என அமைதியானார்..
ஐயா.. என மீண்டும் மரகதம் அழைக்க.. அதில் அவரைப் பார்த்தவர் ஒன்னுமில்லம்மா.. சும்மா ஒரு யோசனை அவ்வளவுதான்.. என்று மீண்டும் வெளியே வெறிக்க ஆரம்பித்தார்..
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.