அம்மையப்பன் 16
மேட்டுப்பாளையத்தின் ஜமீன் குடும்பம் அவர்களின் வினையை அறுக்கும் நேரம் வந்துவிட்டது.. வந்துவிட்டது என்பதை விட வரவழைத்து விட்டாள் என்று சொல்வதே சரியாக இருக்கும்..
பெண்கள் அனைவரும் ஹோட்டலின் பிரம்மாண்டத்தை சற்று மிரட்சியாக பார்த்து கொண்டிருந்தனர்.. அப்பொழுது அங்கு வந்த ஊழியர்.. சார் நீங்க எல்லாரும் என்கூட வாங்க என சொல்லி முன்னேற..
ஒரு நிமிஷம்.. நாங்க எதுக்கு உங்ககூட வரணும்.. என கேட்டார் திருச்செல்வம்..
நீங்க எல்லாம் மிஸ்டர் அகத்தியன பாக்கதானே வந்திருக்கிங்க.. அப்போ என் பின்னாடி வாங்க என அவனே கேள்வி கேட்டு.. பதில் சொல்வதற்கு முன்பே நடக்க தொடங்கிவிட்டான்..
அவர்களும் யோசனையும் குழப்பமுமாக அவனை பின்தொடர்ந்தனர்.. கடைசி தளத்தில், அகத்தியன் இருக்கும் அறையை காண்பித்தான்..
இருங்க.. நாங்க மொதல்ல உள்ளே போறேம்.. என திருநாவுக்கரசு திருச்செல்வம் உள்ளே சென்றவர்கள்.. அப்படியே சிலையாய் நின்றுவிட்டார்கள்..
மாப்புள.. என்னடா இது.. ஏன் இப்படி மண்டியிட்டு இருக்க என அகத்தியனிடம் விரைந்தார்கள்.. அவரை தொடர்ந்து எல்லோரும் அதிர்ச்சியாய் அவனை பார்த்தனர்..
அய்யா ராசா.. என்னய்யா ஆச்சு ஏன் இப்படி இருக்க என வேதவல்லி கதற.. அவனோ பல்லைக் கடித்து கொண்டு எதிரே வெறித்து கொண்டிருந்தான்.. உள்ளே இருக்கும் ராட்சஷி, அவன் குடும்பத்தினரிடம் ஒரு வார்த்தை கூட பேசகூடாது என சொல்லிவிட்டாளே..
அய்யோ என்னாச்சு கண்ணு.. ஏன் இப்படி மண்டியிட்டுருக்க..
தம்பி.. என்னய்யா.. என மரகதம், வேதவல்லி, பவளம், அமிர்தம் என அனைவரும் மாற்றி மாற்றி கேட்க அவனோ கை முஷ்டியை இருக்கி, தன்னை அடக்கிக் கொண்டு இருந்தான்.. அதில் அவன் விழிகள் இரண்டும் சிவந்து விட்டது..
எல்லாரும் கொஞ்சம் அமைதியா இருங்க என சரவணன் கத்த.. அவரைப் பிடித்துக் கொண்டனர்..
என்னடா ஆச்சு என திருநாவுக்கரசு கேட்க.. ஓர் பெருமூச்சுடன்.. மதியத்திலிருந்து நடந்ததனைத்தையும் கூற.. எல்லாரும் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர்..
அய்யோ என்றா சொல்லுற.. என அமிர்தம் பதற.. பவளமோ கால்கள் நடுங்க சட்டென அமர்ந்துவிட்டார்..
யாருடா அது.. நம்ம வூட்டு பசங்கள கடத்தி வச்சு மிரட்டுறது.. அதுவும் ஒரு பொட்டச்சி.. அவளுக்கு பயந்துகிட்டு இப்படி திரிஞ்சிருக்க.. என நாகநாதன் கத்த.. சரவணனும் அரவிந்தனும் பீதியாக அக்கண்ணாடியை பார்த்தனர்..
அவர்கள் மட்டுமல்ல.. உள்ளே இருந்தவர்களும் அதியை நினைத்து பீதியடைந்தனர்.. இதுவரை அம்மையப்பன் குடும்பத்தினர்கள் வந்ததிலிருந்து அவர்களின் கதறல்களை ரோலிங் சேரில் அமர்ந்து ஆடியவாரு ரசித்துக் கொண்டிருந்தவள்.. நாகநாதனின் கத்தலில் சட்டென ஆடுவதை நிறுத்தி, அவரையே அழுத்தமாக பார்க்க.. அங்குள்ளோரின் பயம் அதிகரித்தது..
பெரியப்பா கொஞ்சம் அமைதியா இருங்க..
என்னடா.. ஓவரா பயம் காட்டுற.. இடம் தெரியாம மோதிட்டாங்க.. இப்போ நான் என்ன பண்றேன் பாரு.. என அவர் போனை எடுக்கவுமே.. கண்ணாடியில் அனைவரும் தெரிந்தனர்..
அய்யோ என்ற பசங்க என பவளமும் அமிர்தமும் முன்னே செல்ல கண்ணாடி தடுத்தது.. அமுதா.. குழலி.. யாழினி ஷாலினி என மற்றவர்களும் கத்தியவாரு கண்ணாடியை தட்டினர்.. அவர்களோ தங்கள் குடும்பத்தை கண்டு மகிழ்ச்சியடையவில்லை.. அதற்கு மாறாக விழிகள் மின்ன தங்களையே பார்த்து கொண்டிருந்த அதியை கண்டு பயம் அடைந்தனர்.. அவள் சற்று ஓரமாய் அமர்ந்திருந்ததால் குடும்பத்தினர் இவளை பார்க்கவில்லை..
பிள்ளைகள் பயத்துடன் ஓரிடத்தை பார்ப்பதை முதலில் கண்ட திருநாவுக்கரசு.. அவரும் அங்கு பார்க்க.. சேர் மட்டும் தான் தெரிந்தது.. அனைவரும் பிள்ளைகளையே பார்க்க.. மெல்ல துப்பாக்கியை எடுத்த அதி.. அடுத்தடுத்து அவர்களை நோக்கி சுட.. அவர்கள் அனைவரும் அலறிதுடித்தனர்..
வெளியே நின்றவர்களோ பயத்தில் உறைந்து போயினர்..
அகத்தியன் சட்டென எழுந்து நின்றான்.. அயோ என் பசங்க என அதிர்ச்சியில் அமிர்தம் பேச்சியம்மை வேதவள்ளி என மூவரும் மயங்கிவிட.. பவளம் தன் பிள்ளைகளையே வெறித்து கொண்டிருந்தார்..
துப்பாக்கி சுடும் சத்தம் நின்ற பிறகு அங்கு கண் மூடி நடுங்கி கொண்டிருந்த அனைவரும் மெல்ல விழி திறந்தனர்.. யாருக்கும் எதுவும் ஆகவில்லை..
என்னோட இடத்துல இருந்துகிட்டு, எவனும் குரல உயர்த்தகூடாது.. அதுவும் எனக்கு எதிரா, கூடவே கூடாது.. என அழுத்தமாக அதி குரல் ஒலிக்க.. நாகநாதன் வியர்க்க நின்றார்..
மிஸ்டர் அகத்தியன் நான் உங்களை எழுந்திருக்க சொல்லலையே என அவள் சொன்னதும்.. பெருமூச்சுடன் மீண்டும் மண்டியிட்டான்..
அம்மையப்பன் குடும்பத்தினர்கள் நடந்த சம்பவத்தில் பேச்சு மறந்து நின்றனர்.. நல்லது எல்லாரும் இப்படித்தான் அமைதியா இருக்கனும்.. எல்லாரும் அப்படியே உட்காருங்க என்றாள்..
நீங்களும் தான் மிஸ்டர் அகத்தியன்.. எனவும் அவன் அப்படியே அமர்ந்துவிட்டான்.. அவன் பக்கத்திலேயே அம்மையப்பன் அமர்ந்துவிட்டார்.. அவருக்கு இது யாரென்று தெரிந்துவிட்டது.. இனிமேல் நடப்பதை தடுக்கும் சக்தி யாருக்கும் இல்லை என புரிந்தவர்.. நடப்பதை வேடிக்கை பார்க்க தொடங்கினார்.. இனி அவரால் முடிந்தது அது மட்டும் தான்..
திருநாவுக்கரசு மெல்ல தன் மொபைலில் யாருக்கோ அழைக்க முயற்சிக்க..
உங்களோட புத்திசாலித்தனத்தை காமிக்க நினைக்காதீங்க திருநாவுக்கரசு.. உங்க மாப்புள, போலீஸ் அரசியல்வாதி ரவுடின்னு எல்லாம் முயற்சி செஞ்சதுக்கப்புறம் தான்.. என் முன்னாடி மண்டியிட்டார் என அதி திமிராக சொல்ல.. திருநாவுக்கரசு அதிர்ந்து அமர்ந்தார்.. ஒருபக்கம் இளையவாரிசுகள் இருக்க, இன்னொரு பக்கம் மூத்தவர்கள் என அம்மையப்பன் குடும்பத்தின் மூன்று தலைமுறைகளை தனக்கு கீழே அமரவைத்திருந்தாள் அதி..
அப்பொழுது பெரியவர்கள் இருந்த அறைக்கு மருத்துவர் ஒருவர் வந்து பெண்கள் மூவறையும் பரிசோதனை செய்தார்..
ஒன்னுமில்லிங்க மேடம்.. சாதாரண மயக்கம் தான்.. இன்னும் கொஞ்ச நேரத்துல எழுந்திடுவாங்க.. என சொல்லி சென்றார்..
மெல்ல ரோலிங் சேரிலிருந்து எழுந்தாள் அதி.. அவள் பின் பக்கம் தான் அவர்களுக்கு தெரிந்தது.. அதோடு அவளின் இடை தெரியும் ஆடையை கண்டு ஆண்கள் அனைவரும் சற்று சங்கடமாக முகத்தை திருப்பினர்..
அப்பொழுது மயக்கம் தெளிந்த மற்ற பெண்கள்.. பிள்ளைகள் உயிருடன் இருப்பதைக் கண்டு நிம்மதியடைந்தார்கள்.. அப்பொழுது அமிர்தம் அங்கு நின்றிருந்தவளை கண்டு கோபம் பொங்க எழுந்தார்..
அடியே யாருடி நீ.. எதுக்காக என்ற பசங்கள கடத்துன.. என கத்த அனைவரும், மீண்டுமா என பயத்துடன் பார்த்தார்கள்..
அதி சலிப்புடன்.. விஷ்ணுவை பார்க்க.. அவன் அமுதனை இழுத்துவந்து முகத்தில் குத்தினான்..
ஏய் என்ன பண்ற.. என் பையன விடு என அமிர்தம் அலற அலற.. இங்கு அமுதனுக்கு அடி விழுந்தது.. அமுதனும் தன் பங்கிற்கு விஷ்ணுவை தாக்க ஆரம்பித்தான்..
அகத்தியன் சட்டென தன் அக்காவின் கரம் பிடித்து உட்கார வைக்க.. பவளம் அவர் வாயை மூடினார்..
அமிர்தம் சத்தம் நின்றவுடன்.. விஷ்ணு அடிப்பதை நிறுத்தி, பழையபடி அதி அருகே நின்றான்.. ஆனால் அமுதன் அவனை தாக்க வர.. அதி அவன் காலை தட்டிவிட்டாள்.. அமுதன் கீழே விழுந்துவிட்டான்..
அமுதன் அவளை முறைக்க.. அதி புருவம் உயர்த்தவும்.. கடுப்புடன் பழைய இடத்திற்கு சென்று அமர்ந்தான்.. அவனுக்கு இவ்வாறு
அடைப்பட்டு இருப்பது, அடிவாங்குவதையெல்லாம் நினைத்து அவமானமாக இருந்தது.. இதுவரை ஜமீன் குடும்பம், பெரிய குடும்பம் என ஊரே மதிப்பும் மரியாதையுமாக இருந்த தங்களை.. ஒரு பெண் அரைநாளிலேயே ஒன்றுமில்லாதவர்களாக உணரவைத்ததை அவனால் ஜீரணிக்க முடியவில்லை..
யாரும்மா நீ.. ஏன் இப்படி பண்ற.. நாங்க உனக்கு என்ன பண்ணோம் என.. இதுவரை அமைதியாக இருந்த மரகதம் ஆதங்கமும் கோபமுமாக கேட்டார்..
ம்ம்ம்ம்.. நீங்க எனக்கு ஒன்னுமே பண்ணலதான் என அதி ஒரு மாதிரியாக கூறினாள்.. அதன் உண்மையான அர்த்தம் அம்மையப்பனுக்கு மட்டும்தான் புரிந்தது..
அப்பொறம் ஏன் இப்படி பண்ற.. என புரியாது கேட்டார்.. பவளம்..
ம்ம்ம்ம் அதுவா.. மேட்டுப்பாளையம் ஜமீன் குடும்பம்.. ரொம்ப நல்ல குடும்பம்.. அங்குள்ள மனுஷங்க எல்லாம் ரொம்ப நல்லவங்க, வல்லவங்க, யாருக்கும் எந்த ஒரு குற்றமும் செய்யாதவங்க, தலைமுறை தலைமுறையா கூட்டு கும்பமா.. நீங்க எல்லாரும் ரொம்ப சந்தோஷமா வாழ்ந்துகிட்டு இருக்கீங்கன்னு எல்லாரும் சொன்னாங்க.. அது எனக்கு பிடிக்கல.. அதுனால உங்க சந்தோஷத்தை அழிக்கிறதுக்காக இவங்கள அடைச்சு வச்சுருக்கேன் என கேலியும் நக்கலுமாக சொல்ல… அனைவரும் திகைத்து.. பைத்தியமா இவள் என புரியாது பார்த்தனர்..
என்ன விஷ்ணு.. அதானே நீ கேள்விபட்ட..
ஆமா மேம் அப்படித்தான் சொன்னாங்க.. எனவும் பாத்திங்களா.. என தோளை குலுக்கினாள்..
அப்படி எங்க குடும்பத்தை பத்தி சொன்னா.. உனக்கு என்னம்மா.. என நாகநாதன் கோபத்துடன் கேட்டார்..
ஹ்ம்ம் நான் ஒருத்தி இங்க இருக்கும் போது.. உங்களை பத்தி எப்படி எல்லாரும் அப்படி சொல்லலாம் என கேட்டாள்.. இப்பொழுதும் அவள் முகம் திரும்பி தான் இருந்தது.. அவளின் விழியை கூட மூத்தவர்கள் யாரும் பார்க்கவில்லை..
என்னமா சொல்ற.. கொஞ்சம் புரியுற மாதிரி சொல்லு என பயத்துடன் கேட்டார் பேச்சியம்மை.. அவர் விழிகளில் ஏதோ அலைபுறுதல்.. தன் கணவனை அவர் பார்க்க.. அவரோ எதிரில் திரும்பி நின்றவளைத்தான் பார்த்து கொண்டிருந்தார்.. அதில் பேச்சியம்மையின் பதட்டம் அதிகமாகியது..
ஓஹ் காட்.. ஓகே லெட்ஸ் வெல்கம்.. நான் என்னோட விரோதியா இருந்தாலும் பர்ஸ்ட் அவங்களை வெல்கம் பண்ணுவேன்.. என்றவள்
ஆல் ஆர் வெல்கம் டு அதி.. என ஆரம்பித்தவள்.. நோ நோ.. என ஒரு விரலை உயர்த்தி மறுப்பாய் ஆட்டி மறுத்தாள்..
இப்படி சொன்னா ஒரு கிக் இல்ல.. என்னோட முழுபெயரை சொன்னாதான் ஒரு ஃபயர் இருக்கும்.. என்றவள்.. மெல்ல தன் முகத்தில் இருந்த ஸ்கார்வை விலக்கினாள்..
மெல்ல முகத்தை இரு கரத்தாலும் சற்று துடைத்து.. முடியை உலுக்கிவிட்டு.. எதிரே உள்ளவர்களை பார்த்து கண்ணடிக்க.. சற்று நேரம் ஒன்றும் புரியாது முழித்த அம்மையப்பன் வீட்டின் வாரிசுகள்.. பல ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் பாய்ந்தது போல் அதிர்ந்து போனார்கள்..
அதி அவர்களின் அதிர்ச்சியை கண்டு நக்கலாக புன்னகைத்தாள்.. ஓகே.. லெட்ஸ் வெல்கம் அகைன்..
ஆல் ஆர் வெல்கம் டு.. என ஒரு நொடி நிறுத்தி.. அதிமதுராந்தகியம்மை’ஸ் எம்பயர்.. என சொல்லி.. அவர்களை நோக்கி திரும்ப.. இப்பொழுது பலலட்சம் வாட்ஸ் மின்சாரம் பெரியவர்களை தாக்கியது..
ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் அதிர்ந்து அதியை பார்த்தனர்.. அவர்கள் அனைவரும் எழுந்துநிற்க.. கைகளை கட்டிக்கொண்டு அவர்களின் அதிர்ச்சியையும், முகத்தில் வந்து போய் கொண்டிருந்த உணர்வுகளையும் அவதாணித்து கொண்டிருந்தாள்.. அதி..
மரகதம் அதியையே வெறித்து கொண்டிருந்தார்.. அகத்தியனால் தன் கண்களையே நம்பமுடியவில்லை.. இது எப்படி சாத்தியம்.. என அதியையே பார்த்து கொண்டிருந்தான்..
என்ன பெருசு உன் முகத்துல மட்டும் அவ்வளவா ஷாக் இல்லையே.. முன்னாடியே என்ன பாத்திருக்கியா.. என அம்மையப்பனிடம் கேட்டாள்..
அம்மையப்பன் பதில் பேசாது தலையை மட்டும் அசைத்தார்..
அகத்தியன் மற்றும் இளையவாரிசுகளின் அதிர்ச்சிக்கு காரணம் இருக்கிறது.. ஏனென்றால் அதி அப்படியே சிறுவயது மரகதத்தின் மறுபதிப்பாக இருந்தாள்.. அவர்கள் வீட்டின் சுவற்றில், மரகதத்தின் பழைய புகைப்படம் உள்ளது.. அது அப்படியே இப்பொழுது இருக்கும் அதியை போல்தான் இருக்கும்.. இருவரும் அச்சடித்தது போல் இருந்தனர்.. என்ன அதியின் உடை, சிகை போன்ற அலங்காரம் மட்டும் தான் வேறுபட்டு இருக்கும்..
ஆனால் பெரியவர்களுக்கு இது மட்டும் அதிர்ச்சி இல்லை… இதைவிட பெரிய அதிர்ச்சியாக அவளை பல வருடங்களுக்கு பிறகு பார்க்கிறார்கள்.. அதுவும் இப்படியான நிலையில்.. அவளுக்கு எப்படி தங்களை தெரியும்.. எல்லாம் அறிந்துதான் இங்கு வந்திருக்கிறாளா என அவர்களுக்குள் பல யோசனை.. ஆனால் சில இதயங்கள் விழிகள் பணிக்க.. அவளை ரசித்து கொண்டிருந்தது..
அதுவும் ஓர் இதயம் மிகவும் அதிகமாக துடித்தது.. பின்னே அவள் அவரின் கண்மணியல்லவா.. அவளை நான்கு வயது வரை மார்பிலும் தோளிலும் தூக்கி வளர்த்தவர்.. முக்கியமாக அவளுக்கு உயிர் கொடுத்தவர்.. அவரின் மூத்த மகவு.. அவளை மீண்டும் கண்ணார காண்போமா என்ற பரிதவிப்பிலேயே இத்தனை வருடங்களை கடந்தவருக்கு.. அவளின் வருகை மிகப்பெரிய வரப்பிரசாதம் தான்..
மேட்டுப்பாளையம் ஜமீன் குடும்பத்துக்கு இந்த அதிமதுராந்தகியம்மைய நினைவு இருக்கா.. இல்லை மறந்துட்டீங்களா என நக்கலாக கேட்டாள்..
யாருக்கும் பதில் சொல்லும் திராணி இல்லை.. அனைவரும் தங்களுக்குள் மூழ்கியிருக்க.. அகத்தியனும் மற்ற பிள்ளைகளும் ஏன் மதுமித்ராவுமே அவள் பேச்சைகேட்டு அதிர்ந்து போனார்கள்..
ஹ்ம்ம் மறந்தாலும் ஆச்சரியம் படுறதுக்கில்ல.. என கேலியாக சொல்ல.. சில இதயங்களில் ரத்தம் கசிந்தது..
இத்தனை வருஷம் கழிச்சு ஏன் இவ வந்திருக்கான்னு நீங்க யோசிக்கிறது தெரியுது..
என்ன பண்றது உங்க விதி.. உங்க வீட்டு பசங்களாலயே இங்க வந்து மாட்டிக்கிட்டிங்க.. என உதடு பிதுக்க.. பெரியோர்கள் மூச்சடைத்து போனார்கள்..
ஓகே.. இனிமே ஒவ்வொரு நிமிஷமும், ப்ச் இல்ல ஒவ்வொரு நொடியும், நீங்க யாரும் என்ன மறக்க மாட்டிங்க.. அந்தளவுக்கு என்னை நினைக்கிற அளவுக்கு பண்ண போறேன்.. துடிக்க வைக்க போறேன்.. இத்தனை வருஷமா சந்தோஷமா இருந்தாச்சுல.. இனிமே வாழ்க்கை முழுமைக்கும் கஷ்டபடுங்க.. என அழுத்தமாக அவள் சொல்ல.. அனைவரும் நடுங்கி விட்டனர்..
அகத்தியன் என்னோட பர்ஸ்ட் டார்க்கெட் நீதான்.. பாத்து பத்திரமா இரு.. எந்த பக்கம் எங்கயிருந்து அடிப்பேன்னு எனக்கே தெரியாது.. உங்க எல்லாரோட ஒவ்வொரு நொடியும் இனி நரகம் தான் என அகத்தியனை பார்த்து துப்பாக்கியை நீட்டி சொல்ல.. வேதவல்லியின் உயிர் துடித்தது..
இன்னும் ரெண்டு நாள்ல உங்களுக்கான அடுத்த அதிர்ச்சி இருக்கு.. உங்க எல்லார் மனசையும் திடப்படுத்திக்கோங்க.. ஏன்னா நீங்க பொட்டுன்னு போயிட்டா.. என்னோட என்டர்டைன்மெண்ட் என்னாகுறது என தோளை குலுக்க.. அடுத்து என்னவோ என அனைவரும் அதிர்ந்து போனார்கள்..
பல தொழில்களை வெற்றிகரமாக நடத்தி, கோவையே மரியாதையாக பார்க்கும் தன் மகனை, அரைநாளிலேயே மண்டியிட வைத்தவளை கண்டு.. வேதவல்லியும் மற்றவர்களும் அதிர்ச்சியும் வேதனையுமாக இருக்க.. அவளோ இன்னும் இருக்கிறது.. என அகத்தியனை எச்சரிக்கவும், அனைவரும் ஸ்தம்பித்து போனார்கள்..
அதி ஓர் நக்கலான பார்வையுடன் அங்கிருந்து செல்ல.. அவளை தன் விழிகளில் நிறைத்து கொண்டனர் சிலர்.. அக்கண்ணாடி இருபக்கமும் திறக்கப்பட.. அதை கூட உணராது அனைவரும் நின்றிருக்க.. அரவிந்தனும் சரவணனும் தான் அவர்களை நிகழ்வுக்கு கொண்டு வந்தனர்..
ஐயா.. என வேகமாக காலின் காயத்தையும் பொருட்படுத்தாது தன் தந்தையை நோக்கி ஓடினாள் குழலி..
அகத்தியன் மகளை அணைத்தான்.. அப்பொழுது அவளின் உடற்காயங்கள் கண்டு அவன் பதற.. மாமனின் மனதை படித்த அமுதன்.. மாமா அவ நல்லாத்தான் இருக்கா.. இப்போதைக்கு எதையும் கேட்காதீங்க.. மொதல்ல வீட்டுக்கு போகலாம் என இறுகிய குரலில் சொன்னான்..
அப்பா.. என அன்பரசி அரவிந்தனை அணைத்து கொண்டு அழுதாள்.. யாழினி வேகமாக தன் அன்னையிடம் செல்ல ஷாலினி தந்தையின் மார்பில் தஞ்சம் புகுந்தாள்.. மற்றவர்களின் விழிகளிலும் கண்ணீர்..
யாராலும் எதுவும் பேசவும் முடியவில்லை கேட்கவும் முடியவில்லை.. எல்லோரும் உணர்வுக்குவியல்களில் மூழ்கி இருந்தனர்..
அரவிந்தன் மயக்கத்தில் இருந்த ஆகாஷை அழைத்துக்கொண்டு தங்கள் வீட்டிற்கு செல்வதாக கூற.. அகத்தியன் சரவணனை அவருக்கு துணையாக செல்லுமாறு சொன்னான்..
மற்றவர்கள் அனைவரும் அம்மையப்பன் மாளிகைக்கு வந்துவிட்டார்கள்.. குழலின் தோழிகள் ரஞ்சனி சத்தியாவும் அங்கு அழைத்து வரப்பட்டனர்..
மதுமித்ராவை ஒருவன் அவள் தங்கியிருக்கும் இடத்திற்கு அழைத்துசெல்லுமாறு அதி கூறியதாக சொல்ல.. மது அவனோடு சென்றுவிட்டாள்..
அம்மையப்பன் குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் யாரின் முகத்தையும் பார்க்கவில்லை.. ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில் அமர்ந்து அவரவர் நினைவுகளிலும் கவலைகளிலும் மூழ்கியிருந்தனர்..
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.