அம்மையப்பன் 5
அம்முச்செல்லம் உன்னை விட்டு என்னால இங்கன இருக்கவே முடியலடி.. அப்படியே உள்ள போட்டு என்னமோ பண்ணுது.. எப்போ நீயும் நானும் சேருவோம்ன்னு இருக்கு.. சீக்கிரமா வந்துருடி.. என பெருமூச்சுடன் தன்னவளைப் பார்த்து கூறிகொண்டிருந்தான் அமுதன்..
பட்டுப்பாவாடை சட்டையில்.. இரு தோள்களில் புரளும் அளவிற்கு மல்லிகை பூ வைத்து.. நெற்றியில் சிறிதான வட்ட பொட்டும் அதன் மேல் உள்ள திருநீர் கீற்றுடன் பார்ப்பதற்கு பாந்தமாய் இருந்த தன்னவளையே விழி அகலாது பார்த்து கொண்டிருந்தான்..
என்னடி அப்படி பாக்குற.. மாமன்மேல கோபமா.. சும்மா விளையாண்டேன்டி.. நீ சொல்லாமலேயே உனக்கு வேண்டியதை நான் வாங்கிட்டு வரமாட்டேனா என.. தன் போனில் உள்ள கார்குழலியின் படத்தை பார்த்து கொஞ்சிக் கொண்டிருந்தான்..
ஹுக்கும் ஆரம்பிச்சுட்டான்டா.. Mr அமுதன்.. எனக்கு கொஞ்சம் ஷாப்பிங் போக வேண்டியது இருக்கு.. நீங்க உங்க அம்முச்செல்லத்துகிட்ட பேசிட்டிங்கன்னா.. என்ன உங்க ஜவுளிக்கடைக்கு கூட்டி போறீங்களா.. என நக்கலும் பவ்வியமுமாக வினவினாள் மதுமித்ரா.. அவனின் வகுப்புத்தோழி..
ப்ச்.. கொஞ்ச நேரம் என் ஆளுக்கூட பேச விடமாட்டியாடி.. என அமுதன் சலிக்க.. மது முறைத்தாள்..
படுபாவி படுபாவி.. அரைமணிநேரமா நீ அதாண்டா பண்ணிக்கிட்டு இருந்த.. என நோட்டால் அவன் முதுகை பதம் பார்த்தவள்.. என்னமோ நேருல பேசுற மாதிரி ஓவரா பண்றடா.. அவ போட்டோ கூட தானே கடலை போடுற..
அச்சோ விடுடி ராட்சசி.. என அவளை தள்ளிவிட்டான்..
நான் ராட்சசியா.. மவனே இப்படியே சொல்லிக்கிட்டு கிட.. ஒருநாள் ஒரிஜினல் ராட்சசிக்கிட்ட மாட்டி சின்னா பின்னாமா ஆகபோற.. என கேலி செய்தாள்..
சொன்ன அவளுக்கும் தெரியவில்லை.. விளையாட்டாக கேட்டுகொண்டிருந்த அமுதனுக்கும் தெரியவில்லை.. உண்மையில் இன்னும் சில மாதங்களில் தாங்கள் அனைவரும் ஒரு ராட்சசியின் பிடியில் தான் இருக்கபோகிறோம் என..
********************************
Ak டெக்ஸ்டைஸ் முன்னே அமுதனின் பைக் வந்து நிற்க.. அவன் பின்னிருந்த மதுமித்ரா இறங்கினாள்.. இருவரும் கடையினுள் நுழைய.. முன்னிருந்த மேற்பார்வையாளர் வேகமாக அவனிடம் வந்தார்..
வாங்க தம்பி..
ஹ்ம்ம்.. என சிரித்தமுகமாய் அவரிடம் தலையசைத்தவன்.. நீ உனக்கு தேவையானத வாங்கிட்டு இரு.. நான் ஆபீஸ் ரூம்ல இருக்கேன்.. என சொல்லிவிட்டு செல்ல.. மதுமித்ராவும் தனக்கு வேண்டியதை பார்க்க சென்றாள்..
இதனையெல்லாம் அங்குள்ள கேமராவின் வழியே இரு ஜோடி கண்கள் கவனித்துக் கொண்டிருந்தது.. அமுதன் பண்டல்களை சரிபார்த்தவன்.. மேற்கொண்டு செய்ய வேண்டியதை சொல்லிவிட்டு ஆபீஸ் அறைக்குள் வர.. அங்கு திருச்செல்வமும் நாகநாதனும் அமர்ந்திருந்தார்கள்.. நாகநாதன் மரகதத்தின் கணவர்..
ஐயா.. அப்புச்சி.. நீங்களும் இங்கதான் இருக்கீங்களா.. என அமுதன் வியப்பாய் கேட்டான்..
ஹ்ம்ம் ஆமாங்கண்ணு.. இங்கன நம்ம நகைகடைக்கு வந்தோம்.. அகத்தியன் நீ இங்க வரதா சொன்னா.. அதான் ஓர் எட்டு பாத்துட்டு போலாம் வந்தாச்சு.. ஏங்கண்ணு விடுதில சாப்பாடு சரியில்லயா.. போன தடவை விட ரொம்ப மெலிஞ்சுகிடக்க..
அதெல்லாம் ஒண்ணுமில்லங்.. அப்புச்சி.. ரொம்ப நாள் கழிச்சு பாக்குறதால அப்படி இருக்குங்.. என சிறு சிரிப்புடன் கூறியவன்.. அகத்தியன் இருக்கையில் அமர்ந்து.. கணிணியில் சில வேலைகள் பார்க்க.. நாகநாதன் தன் பேரனை பெருமை பொங்க பார்த்தார்.. மற்றவர்கள் எல்லாம் பெண் வாரிசாய் இருக்க அவரின் வம்சதுக்கு ஒற்றை பேரன் அவன்.. அதனால் கூடுதல் பாசம்..
உன்ற கூட வந்த பொண்ணு யாரு கண்ணு.. என இத்தனை நேரம் அமைதியாக இருந்த திருச்செல்வம் கேட்டார்..
என்ற கூட படிக்கிற பொண்ணுதாங் ஐயா.. என்னோட பெஸ்ட் ப்ரெண்ட்டு.. இங்கன துணி எடுக்குறதுக்காக வந்துருக்குங்.. என அவரின் கண்களை பார்த்து கூறினான்..
ஓஹ்.. வெறும் ப்ரண்டு தானுங்களா.. இல்ல அதுக்கும் மேலயா.. என்றார் கேள்வியாக..
திரு என்றா பேசுற.. என அதட்டினார் நாகநாதன்..
நம்ம வூட்டு பழக்கமெல்லாம் பையனுக்கு மறந்துடுச்சு போலங் ஐயா.. அதான் அதன நெனைவு படுத்துறேன் என அமைதியாக கூறினார்..
அப்புச்சி ஒரு நிமிசங்.. ஐயா என்கிட்ட தான் கேட்குறாங்.. நானே பதில் சொல்லிக்குறேன்.. ஐயா அந்தப்புள்ள எனக்கு வெறும் தோழி தானுங்க.. இன்னும் சொல்லப்போனா யாழினி ஷாலினி மாதிரி அவளும் எனக்கொரு தங்கச்சி தானுங்..
அது எனக்கு தெரியும் கண்ணு.. ஆனா பாக்குறவங்களுக்கு அப்படி தெரியாதுல.. என்னதான் தோழியா இருந்தாலும் ஒரு பொம்பள புள்ளய பைக்குல கூட்டி போறதெல்லாம் வேண்டாம் கண்ணு.. என தன்மையாகவே திருச்செல்வம் கூறினார்..
அமுதனுக்கு கோபம் பன்மடங்காக வந்தாலும்.. தான் பேசினால் அடுத்தடுத்து இப்பேச்சு வார்த்தை நீண்டுகொண்டுதான் இருக்கும் என அவனுக்கும் தெரியும்.. அதோடு அமுதனுக்கும் சரி மற்ற பிள்ளைகளுக்கும் சரி பெரும்பாலும் பெரியவர்களை எதிர்த்து பேசி பழக்கமில்லை என்பதால் அமைதியாக நின்றான்..
“விடு திரு.. நம்ம அமுதன் சொன்னா புரிஞ்சுக்குற புள்ளதானே.. சரி சாமி நாங்க கிளம்புறோம்.. நீ பாத்து போய்யா.. என அவன் தோளை தட்டியவாரு நாகநாதன் வெளியே சென்றார்..
திருவும் அமுதனும் அவர் பின்னே சென்றார்கள்.. திரு அமுதனை நோக்கி மெல்லிய தலையசைப்புடன் காரில் ஏறினார்.. இருவரும் செல்ல அமுதன் கடையினுள் நுழைந்தான்..
ஏன் சாமி அப்படி பேசுன..
இப்போவே எல்லாத்தையும் தெளிவா சொல்லிடுவோம் ஐயா.. இல்லன்னா இன்னொரு பொண்ணோட சாபமும் நம்ம குடும்பத்துக்கு வந்துரப்போகுது என நிதானமாக கூறினார் திருச்செல்வம்..
நாதன் தன் மகனை ஓர் பார்வை பார்த்தவர்.. அடுத்து எதுவும் பேசாது எதிரில் உள்ள சாலையை வெறிக்க ஆரம்பித்தார்..
***********************************
ஹேய் அங்க பாருங்கடி.. ஒரு சாக்லேட் பாய் வரான்..
ஹ்ம்ம் ஆமாடி..
அதுவும் அவன் தாடைகுழிய பாருங்கடி.. ஆழமா.. எவ்வளவு அழகா இருக்கு என ஒருத்தி சொல்ல.. மற்றவர்கள் ஜொல்லினர்..
அவனுக்கு ஆள் இருக்குமா..
தெரியலையே..
சும்மா ஒரு அப்ளிகேஷன் போடலாம்டி.. என கல்லூரி பெண்கள் சிலர் எதிரே நடந்து வரும் அமுதனைக் கண்டு ஜொல்லிக் கொண்டிருக்க.. அவர்கள் அருகே நின்றிருந்த மதுமித்ரா இவர்களின் வர்ணனையில்.. யாருடா அந்த அப்பாடக்கர் என யோசித்தாவாரு நிமிர்ந்தவள்.. அமுதனைக் கண்டதும் புரிந்துகொண்டாள்..
ஹ்ம்ம்.. இங்கயும் ஆரம்பிச்சுட்டாங்கப்பா.. என சலித்துக் கொண்டாள் மதுமித்ரா.. பின்னே அவன் இருக்கும் இடத்திலெல்லாம் இப்படியே நடந்தால் அவளுக்கு சலிக்காதா..
அமுதன் இன்ஜினியரிங் முடித்துவிட்டு.. MBA இரண்டாம் ஆண்டு படிக்கிறான்.. 22 வயது ஆணழகன்.. பெண்கள் மத்தியில் சாக்லேட் பாய் என புகழப்படுபவன்.. அதுவும் அவனின் தாடைக் குழிக்கு ஒரு ரசிகையர் மன்றமே இருக்கிறது..
அவன் அப்பெண்கள் குழாமை தாண்டி.. மதுமித்ராவின் அருகே வந்து நிற்க.. அவர்களின் முகம் காற்று போன பலூனாய் மாறிவிட்டது..
ப்ச் அவனோட ஆள் போலடி.
ஹ்ம்ம் ஆமாடி.. என மற்றவள் சோர்ந்து கூறினாள்..
ஏன் தங்கச்சியா இருக்க கூடாதா..
ஹுக்கும்.. அவங்கள பாத்தா அண்ணன் தங்கச்சி மாதிரியா தெரியுது..
ப்ச் வாங்கடி இவன பாத்து புகையுறதவிட.. வேற யாரையும் பாக்கலாம்.. அந்த பொண்ணு வேற நம்மள குறுகுறுன்னு பாக்குது என ஒருத்தி மொனங்க.. அனைவரும் நழுவினர்..
டேய் அமுது.. இன்னும் எத்தன பொண்ணுங்க மனச உடைக்கப்போற.. இந்த பாவமெல்லாம் உன்ன சும்மா விடாதுடா.. என மது மெல்லிய சிரிப்புடன் கூற.. அமுதன் முழித்தான்..
என்னடி லூசு மாதிரி உலறிக்கிட்டு கிடக்க..
யாரு நானா.. என கேட்டவள் சற்று முன் நடந்தது எல்லாம் கூற.. ஓஹோ என அதனை அசட்டையாக கேட்டவன் தன் கரத்தில் உள்ள பையை சரிபார்த்தான்..
டேய் பொண்ணுங்க உன்ன சைட் அடிச்சாங்கனு சொல்றேன்.. நீ அவங்க யாருன்னு கூட பார்க்க மாட்டிங்குற..
ப்ச் போடி.. என்னோட அமுச்செல்லத்த தவிர வேற யாரையும் பார்க்க மாட்டேன்.. என அவன் அழுத்தமாய் கூற.. மது தன் நண்பனை.. வியப்பும் பெருமையுமாய் பார்த்தாள்..
அதோட நான் எல்லாம் ஒன்னுமேயில்லை.. என்ற மாமன பாக்கோணும் நீ.. என் வயசுல அவர எல்லாம் அப்படி இருப்பாராம்.. இப்போ மட்டும் என்ன நாப்பது வயசுல ஆளு சும்மா கின்னுனு இருக்காரு.. அவரும் நானும் ஒன்னா நின்னா எம்பட பக்கம் ஒரு கண்ணு கூட திரும்பாது.. அம்புட்டும் என் மாமனைத்தான் மொய்க்கும்.. என தன் மாமனை பற்றி பெருமையாக கூறினான்..
ஹ்ம்ம் ஆமாடா.. நம்ம கிளாஸ் பொண்ணுங்க கூட உங்க மாமா பாத்து ஜொள்ளு விட்டாங்களே.. நீ மட்டும் சும்மாவா இருந்த.. அவங்க எல்லாரையும் விட நீதாண்டி அதிகமா வழிஞ்ச என அவளின் மனசாட்சி காரித்துப்பியது… நல்லவேலை அது அமுதனுக்கு கேட்காது என நிம்மதி கொண்டாள் மதுமித்ரா..
டேய் என்னடா பையி அது.. ஏதோ துணியாட்டம் இருக்கு.. என அவன் கரத்தில் உள்ளதை பார்த்து கேட்டாள்..
அதெல்லாம் ஒண்ணுமில்லயே என கூறியவனின் முகத்தில்.. மென்மையும் ரசனையுமாய்.. ஓர் மென்னகை குடிகொண்டிருந்தது.. ஓஹோ.. உங்காளுக்கு ட்ரெஸ் எடுத்தீங்களாக்கும்.. எங்க காமி.. அப்படியென்ன ஸ்பெஷலா எடுத்துருக்கேனு பார்ப்போம்.. என அவன் கரத்தில் உள்ளதை பரித்தாள்..
கண்கள் விரிய பையினுள் இருந்த ஆடைகளை பார்த்த மதுமித்ரா உடனே தான் வாங்கியதையும் அந்த இடத்திலுள்ள மற்ற துணிகளையும் அலசியவள்.. தன் நண்பனை கொலவெறியுடன் பார்த்தாள்..
அதில் கொஞ்சம் ஜெர்க்காணாலும்.. என்னடி ஏன் இப்படி பாசமா பார்க்குற.. என கேட்டான்..
டேய் உன் ஆளுக்கு மட்டும்.. உள்ள இருந்து புதுசு புதுசா எடுத்துட்டு வர்ற.. உன்கூட ப்ரெண்டுன்னு ஒரு பாவமான ஜீவனும் டிரஸ் எடுக்க வந்துச்சே.. அதுக்கும் கொஞ்சம் எடுத்து கொடுக்கலாம்னு தோணுச்சாடா உனக்கு.. என பல்லைக் கடித்தவாரு கேட்க.. அமுதன் திருதிருவென முழித்தான்..
ஈஈஈ சாரிடி.. அம்முசெல்லத்துக்கு எடுக்குற ஆர்வத்துல உன்ன சுத்தமா மறந்துட்டேன்.. என இளித்தவன்.. அவள் முறைப்பு அதிகமாகவும்.. தான் பேசியது உணர்ந்து பாவமாக அவளைப் பார்த்தான்..
அவனின் பாவனையில் மித்ராவின் இதழ்கள் அவளையும் மீறி மென்னகை சிந்தியது..
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.