“அலரின் நியாமான கேள்விக்கு எழில் என்ன பதிலை சொல்ல முடியும்.. காரணம் எதுவாக இருந்தாலும்இதோ இப்போது அவள் கேட்பது போல் தன் தமக்கையின் குடும்பத்தை சார்ந்தவர்களை பற்றிய உண்மையை அலர் மறைத்திருந்தால் நிச்சயம் அவனால் ஏற்கமுடியாது.
அவள் அரவத்தில் தன்னிலை மீண்டவன் “ஏய்.. என்னது.. என்ன சொன்ன, நான் தான்.. தப்பு.. ப்ச் நான் மறைச்சதால தான் இவ்ளோ பிரச்சனையுமா..?? ஏன்டி தப்பு பண்ணின உன் சொத்தப்பனை விட்டுட்டு என்னை குற்றவாளியாக்குற” என்று மிரட்சியுடன் அவளை பார்க்க,
“யார் சொன்னது நீங்க குற்றவாளி இல்லைன்னு..“
‘ஏய் என்னடி சொல்ற‘
‘நான் தான் ஏற்கனவே சொன்னேனே தப்பு பண்றவங்களை விட அதை மறைக்கிறவங்க தான் முதல் குற்றவாளின்னு’ என்றவளுக்கு தன்னை புரிய வைத்திடும் வேகத்துடன், “அமுலு ஒரு நிமிஷம் பொறுமையா நான் சொல்றதை கேளு” என்றிட அவன் முன்னே கரங்களை கோர்த்து கொண்டு அழுத்தமாக நின்றிருந்தவள்,
“கண்டிப்பா மாமா நீ சொல்றதை கேட்காம வேற யார் சொல்றதை கேக்க போறேன்என்று பல்லை கடித்தவள் என்ன சொல்லணுமோ பத்து நிமிஷத்துல சொல்லி முடி.., அவ்ளோ தான் என் பொறுமைக்கான அவகாசம்! ஆனா அதுக்கு முன்ன என் கேள்விக்கு பதில் சொல்லு‘ என்றாள்.
அவள் கேட்கும் தொனியே எழிலின் மனதில் குளிர் பரவ செய்ய.. “என்.. என்ன கேட்கணும்” என்றான்.
“கட்டின பொண்டாட்டிகிட்ட உண்மையை மறைக்கிறது சரியா..?? தப்பா..??” என்ற கேள்வியில் எழிலுக்கு தூக்கிவாரி போட்டது.
பின்னே இவ்வளவு நேரம் எதற்கு உண்மையை மறைத்தாய் என்ற கேள்வியை அவள் தொடுத்திருக்கஅதற்கான பதில் அவனிடம் உண்டு, என்ற நம்பிக்கையுடன் இருந்தவனை இப்போது மறைத்ததே குற்றம் எனும் வகையில் நிறுத்த அவன் என்ன பதில் தான் அளிக்க முடியும்…
அலரின் முன்அவன் நம்பிக்கை சிறிது சிறிதாக சிதறி போக குரலை செருமிக்கொண்டு, “டைம் ஆச்சு குழந்தை தனியா இருப்பான்.. உனக்கும் குளிர் ஒத்துக்காது வீட்டுக்கு போய் பேசிக்கலாம் வா”
“கேட்ட கேள்விக்கு பதில்”
எழிலுக்கு அந்த குளிரிலும் வியர்க்க தொடங்கியது..அதை துடைத்தவாறே,“இதோ பாரு நீ சொல்ற மாதிரி நான் நெனச்சி பார்க்கலை.. எங்க நான் அதை உன்கிட்ட சொல்லபோய் நீ உங்க அப்பா அம்மாக்கு சொல்லி பெரிய பிரச்சனை ஆகிடுமோ அதுமட்டுமில்லைஉன் பாட்டிக்கு தெரிஞ்சா அவங்க தாங்க மாட்டாங்கன்னு தான் சொல்லலை.. அதேமாதிரி உன் சொத்தப்பன் பண்ணின அக்கிரமத்தை உங்கப்பா நம்புறது சந்தேகம்ஏன்னா எதையும் நிரூபிக்கிற ஆதாரம் சரண்கிட்ட இல்லை”
“நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லையே..!!” என்று அலர் முறைக்க..,
“இங்க பாருஉங்கப்பா கிட்ட போய் உங்க தம்பி பெண்ணை நான் லவ் பண்றேன் மாமா சேர்த்து வைங்கன்னு சொன்னதும் வா மச்சான்னு கூட்டிட்டு போய் சேர்த்து வச்சிடுவாரு பாரு..” என்று சம்பந்தமே இல்லாமல் பேச….
“இன்னும் பதில் வரலை” என்றாள் அழுத்தமாக,
“அமுலு ஒரு நிமிஷம் உன் தம்பி அவன் லவ் பண்ற விஷயத்தையே என்கிட்டயே சொல்லாதப்போ சரண் எப்படி உங்க அப்பா கிட்ட சொல்ல முடியும், புரியுதா உனக்கு” என்று என்ன பேசுகிறோம் என்றே புரியாமல் அவன் உளறி வைக்க..,
‘வாட்..??’ என்று விழிகள் தெறிக்க பார்த்தவள் “என்ன சொன்னீங்க திரும்ப சொல்லுங்க” என்றாள்.
பதட்டத்தில் இருந்தவன் என்ன பேசுகிறோம் என்றே புரியாமல் அவளை சமாதானபடுத்தும் நோக்கத்துடன் கோர்வையின்றி எதையோ பேசபோய் வேறு எதையோ பேசி அவளிடம் வசமாக சிக்கியிருந்தான்.
அதான்டி கதிர் அவன் லவ்வை… என்று ஆரம்பித்தவன் அவள் பார்வையில் பேச்சை நிறுத்த இன்னும் என்னவெல்லாம் மறைத்திருக்கிறானோ என்று வெறுத்து போனது அலருக்கு…
அவள் சட்டையை பிடிக்கவுமே தெரிந்து விட்டது இப்போது தன் முன் நிற்பது கம்பீரமும் நிமிர்வும் கொண்ட வழக்கறிஞர் அன்றி தன் மனைவி அலர்விழி என்பது!
இனி இவளை சமாளிப்பது கடினம் என்று அறிந்தவன், “இது என்னடி கேள்வி நீ யாருன்னு உனக்கே தெரியாதா..??” என்றவாறு சட்டையை மீட்க முயல..,
“டேய் ஒழுங்கா பதில் சொல்லு… உனக்கு நான் யாரு..?” என்று சட்டையை இன்னும் இறுக்கமாக பற்றி அவளருகே இழுத்து நிறுத்தினாள்.
‘ஏன்டி எனக்கு நீ யாருன்னு உனக்கு தெரியாதா..?? புதுசா கேட்கிற..??’ என்றவன் தன் சோதனைகாலம் தொடங்கிவிட்டதை எண்ணி தலையில் கைவைத்து கொண்டு அமர்ந்துவிட்டான்.
‘டேய் எந்திரி சொல்லு உனக்கு நான் யாரு..???
‘என் வைஃப் இல்லல்ல லைஃப்டி..!!‘
“ஒஹ்ஹ் உன் லைஃப்.. ஏன்டா என் மாமாவ பத்தியும் என்கிட்ட சொல்லல என் தம்பி லவ் பண்றதையும் என்கிட்ட இருந்து மறைச்சிருக்க… ஃபிராடு உனக்கெல்லாம் என்னடா லைஃப் வைஃப்ன்னு ரைமிங்..!!” என்று அவன் தலை முடியை பிடித்திருந்தாள்.
‘ஏய் மறைக்கனும்னு எல்லாம் இல்லடி… எனக்கே நாம இங்க வந்தப்பதான் தெரியும்… வேதா நிகழ்ச்சி டென்ஷன்ல சொல்ல மறந்திருப்பேன்” என்று அவள் கைகளை பிரித்தெடுக்க முயற்சிக்க.,
“எப்படி எப்படி… இப்படி எல்லாம் நீ மறந்து எல்லாத்தையும் மறைச்சு எங்களை முட்டாளாக்குவ நாங்க எந்த கேள்வியும் கேட்க கூடாது அப்படிதானே…!! சரி நீ எந்த விளக்கமும் கொடுக்க வேண்டாம் அதை கேட்கிற நிலையிலும் இப்ப நான் இல்லை.., என் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு”
என்னதுடி ..??
‘பொண்டாட்டிகிட்ட உண்மையை மறைச்சது சரியா..? தப்பா..? பதில் கிடைக்காம இங்க இருந்து கிளம்பமாட்டேன்‘ என்று அவன் மடியிலேயே அமர்ந்துகொண்டாள்.
‘இவ ஒருத்தி கோவமா இருந்தாலும் சந்தோஷமா இருந்தாலும் மடியில வந்து உட்காந்துக்குறா..?’ என்று முனுமுனுத்தவன்,
‘ஏய் நீ கோபமா தானே இருக்க தள்ளிபோய் உட்காருடி‘
“எதுக்கு நீ தப்பிச்சு ஓடவா..?” என்று எள்ளலாக பார்த்தவள்…
“ஏன் கோவமா இருந்தா தள்ளிதான் உட்காரனும்னு ஒன்னும் இல்லையே எனக்கு இதுதான் வசதி” என்றவளிடம் என்ன பேச..!!
தான் எவ்வகையிலும் தப்ப முடியாத வகையில் வழிகளை அடைத்து நிற்பவளை மகனை கொண்டு அசைக்கஎண்ணி, “பட்டு மணி இப்பவே ஒன்பதரை ஆகிடுச்சிடி… குழந்தை வேற அங்க இருக்கான்எல்லா பதிலையும் வீட்ல போயி சொல்றேன் கிளம்பு”
‘ஷ்ஷ்ஷ்ஷ்… இதோ பாரு சும்மா இந்த ஆத்தா வைய்யும் காசு குடு நான் போகணும்னு..’ அதே பாட்டு பாடின என்று அவன் தாடையை பற்றியவள்,
கைப்பேசியில் வெற்றிக்கு அழைத்து, “அண்ணா நாங்க வர கொஞ்சம் லேட் ஆகும் உங்களுக்கு அதுல எதாவது பிரச்சனையா..?” என்று கேட்க
‘ச்சேச்சே அப்படியெல்லாம் இல்லடா அமுலு எவ்ளோ நேரம் ஆனாலும் நான் மாப்பிள்ளையை பார்த்துகிறேன்..நீங்க வந்தப்புறம் கூட்டிட்டு வரேன்’ என்று கூற, ‘சரிண்ணா‘ என்று அழைப்பை துண்டித்தவள்,
‘இப்போ சொல்லு சரியா..? தப்பா..? நீ பதில் சொல்லாம நாம இங்கிருந்து கிளம்ப போறது இல்லை’ என்று அழுத்தமாக அவனை பார்த்தாள்.
சரி என்றாலும் அடி விழும் தவறு என்றாலும் அடி விழும் அதனால் பாதுகாப்பாக அவன் பதிலை தவிர்த்து அவளை சமாதானபடுத்த முயல.., அவனது அனைத்து முயற்சியும் விழலுக்கு இறைத்த நீராகி போனது.
மேலும் பத்து நிமிடங்கள் கடந்தும் அவள் பிடியில் நின்றவளை கண்டவன் அடுத்த சில நொடிகளில் வேதாளத்தை சுமக்கும் விக்ரமாதித்யன் ஆகிபோனான்.
ஆம் மடியில் அழுத்தமாக அமர்ந்திருந்தவளை, “விடுடா.. நான் வரமாட்டேன்.. பதில் சொல்லு…” என்று திமிற திமிறதூக்கி தோளில் போட்டவன்அலுவலகத்தை பூட்டி அலரை காரில் தள்ளி வாகனத்தைஎடுத்திருந்தான்.
காரில் இருந்து இறங்கிய மறுநொடி வில்லில் இருந்து பாய்ந்த அம்பாய் கணப்பொழுதில் எழில் பாய்ந்து சென்று வீட்டை திறந்து உள்ளே ஓடி மறைய.., வழிநெடுக விடாமல் அவனை கேள்விகளால் துளைத்துகொண்டு வந்தவளை அடக்க வேண்டி எழில் அலரை கலைத்து விட்டிருந்தான்.
சில நிமிடங்கள் கழித்து கீழே இறங்கி, ‘ஏய் நில்லுடா..‘ என்று கால்களில் சிக்கிய புடவையை ஏற்றி சொருகிக்கொண்டு அவனால் கலைத்து விடப்பட்ட தலைமுடியை கொண்டை இட்டவாறு, ‘டேய் ஃபிராடு மாமா நில்லுடா‘ என்று அவளிடம் இருந்து தப்பிக்க ஓடியவனை பின்னே விரட்டி சென்றாள்.
“முடியாது நீ அடிக்கமாட்டேன்னு சொல்லு நான் நிற்கிறேன்” என்றவாறே அவளிடம் பேரம் பேசிக்கொண்டே கூடம், சமையலறை, பின்கட்டு, மாடிப்படி வளைவு என்று அவளை தன்னை பின்தொடர வைத்து அவளுக்கு போக்குகாட்டினான்.
“வேண்டான்டா ஓடாதே ஒழுங்கா நில்லு..”, என்றவள் மீண்டும் சிக்கிய புடவையை ஏற்றி பிடித்தவாறு, “ப்ச் புடவை கட்டிட்டு என்னால உன் வேகத்துக்கு ஓட முடியலை நில்லுடா” என்று மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க கூறியவள்,
ஒரு கட்டத்திற்கு மேல் அவனை பிடிக்க முடியாமல் இடையில் கரம் பதித்து நின்றவள், “டேய் உனக்கு லாஸ்ட் சான்ஸ் தரேன் ஒழுங்கா இப்ப வந்தேன்னா நாலு அடியோட போயிடும்.. என்னை இன்னும் ஓடவிட்ட அப்புறம்..” என்று ஆட்காட்டி விரலை கொண்டு எச்சரித்தவள் முன் வந்து அவளை இறுக அணைத்து இதழோடு இதழ் பொறுத்தியவன் சில நொடிகளில் அவள்மூச்சு காற்று சீராகியதில் விலக..
‘டேய்‘ என்று அவனை பிடிக்கும் முன் மீண்டும் ஓடத்தொடங்கியவன் ஒரு கட்டத்தில் படுக்கையறையினுள் நுழைந்திருந்தான்.. அவனை பின்தொடர்ந்தவள் சட்டென கதவை சாற்றி தாளிட்டு அதன் மீதே சாய்ந்து நின்று, தன்னை அலையவிட்டவனை கொலைவெறியோடு பார்த்திருந்தாள்.
அவள் வருவதற்குள் கட்டிலின் மறுபுறம் சென்று பாதுகாப்பாக நின்றிருந்த எழில், “குள்ளச்சி கொஞ்சம் பொறுமையா நான் சொல்றதை கேட்டுட்டு அப்புறம் அடி நான் வேண்டாம்னு சொல்லலை”
‘டேய்.. அதுதான் ஆஃபீஸ்ல இல்லாத பொறுமையை தேடி பிடிச்சு, இழுத்து நிறுத்தி, நீ சொன்னதை எல்லாம் கேட்டேனே அதுபோதாதா..! இன்னும் என்ன பொறுமை எருமை..!’
“ஏய் அது இல்லைடி எட்டு மாசத்துக்கு முன்னாடி நடந்ததை யோசிச்சியே அதுக்கு அப்புறம் நடந்ததை யோசிச்சியா..? இப்போ சொல்றேன் கேட்டுக்கோ என் மேல எந்த தப்பும் இல்லை எல்லா தப்புமேஉன் அப்பா, சித்தப்பா மேல தான்டி” என்றான் கட்டிலை சுற்றி ஓடிக்கொண்டே…
“எதூஊஊஎங்கப்பா மேல தப்பா, டேய் 420 நீ தப்பிக்க எங்கப்பா மேலே பழி சொல்றியா..??” என்றவள் அவனை அடிக்க பொருள் தேடி விழிகளை சுழலவிட்டவாறு கட்டிலின் மீது ஏறி மறுபுறம் குதிக்க.., அதற்குள் கட்டிலை சுற்றி இந்த புறம் வந்திருந்த எழிலன் கதவை திறக்க முற்பட..,
அதை கண்டவள் முகம் செந்தணலாகி போக, ‘மாமாஆஆஆ..‘ என்று நொடியில் கட்டிலை கடந்து அவனை நெருங்கி கதவை திறந்து கொண்டிருந்தவன் சட்டையை பின்புறமாக பிடித்துகொள்ள, கதவை திறந்து விட்டிருந்தவன் வெளியில் தப்பிக்க முடியாத நிலை..,
“ஏய் மொதல்ல சட்டையை விடுடி” என்று திமிற..,
“டேய் ஃபிராடு சொல்லுடா நான் இதுவரை உன்கிட்ட ஏதாவது மறைச்சிருப்பேனா..? நீ ஏன்டா மறைச்ச..?”
“ஏன்டி உனக்கு இப்போ பதில் வேணுமா இல்லை சட்டை வேணுமா..??விடுடி சொல்றேன்”
“ஏய் கழுத்தை நெறிக்குதுடி.., விடு சொல்றேன்” என்று திரும்ப..,
“விட்டா நீ ஓடிடுவடா.., எனக்கு தெரியாதா”
“நீ விடாட்டியும் ஓடுவேன்டி” என்றவன் நொடிப்பொழுதில் சட்டை பொத்தான்களை அவிழ்த்து ‘இந்தா நீயே வச்சிக்கோ..‘ என்றவன்சிட்டாக பறந்துவிட இப்போது அவன் சட்டை மட்டுமே அலரின் கையில்..
அவன் செயலில் ஆத்திரம் தாளாமல் இருகரங்களாலும் தலையை பிடித்துகொண்டு கட்டிலில் அமர்ந்தவள்உடனே எழுந்து மடமடவென்று சேலையில் இருந்து இரவு உடைக்கு மாறி வெளியில் வந்தாள். இப்போது இரண்டே நொடிகளில் எழிலை அடைந்தவள் கையில் மறுநொடி சிக்கி இருந்தான் எழிலன்.
அவன் முதுகில் ஒன்று வைத்து இழுத்து வந்து சோபாவில் அமர்த்தியவள் அவன் மடியில் சம்மணம் இட்டு அமர்ந்து தப்பித்து ஓட முடியாததை உறுதி செய்திருந்தாள்.
“ஏய் கீழ இறங்குடி..எதுவா இருந்தாலும் பக்கத்துல உட்காந்து கேளு எப்போபாரு குரங்கு குட்டி மாதிரி தாவி மடியில் ஏறிக்கிற..” என்று கடுப்புடன் கீழிறக்க முயல..,
‘எது குரங்கா..??’ என்றவள் அவன் வாயிலே ஒன்று வைத்து மீண்டும் அழுத்தமாக அவன் மடியில் அமர்ந்து ஒரு கரத்தால் அவன் கழுத்தை வளைத்து மறுகரம் கொண்டு அவன் தாடையை பற்றியவள், “டேய் சீட்டர் எவ்ளோ ஆட்டம் காட்டுற நீ..! இங்க உட்காந்தா தான்டா நீயும் தப்பிச்சு ஓட முடியாது எனக்கும் அடிக்க வசதியா இருக்கும், இறக்கிவிட்டு தப்பிக்க பார்க்கிறியா அது என்கிட்டே நடக்காது..”
“என்னடி சொல்ற..?” என்று விழித்தவன்..,
‘அடிப்பாவி அப்போ இவ்ளோநாளா நீ என் மடியில ஆசையா உட்காரலையா அடிக்க வசதியா இருக்கும்னு தான் உட்காருரியா..?? நான்கூட யோசிப்பேன் கோவமா இருக்கும்போது எல்லாரும் தள்ளி போவாங்கஇவ என்ன வித்யாசமா நடந்துக்குறான்னு, இப்போதானே புரியுது” என்றான் இறங்கிய குரலில்.
“ஆமா பின்னே எனக்கே இவ்ளோ ஆட்டம் காட்டுற உன்னை மடியில உட்காந்து கொஞ்சனும்னு வேற நெனப்பிருக்கா…?? என்றவள் இப்போது கழுத்தில் இருந்து அவள் கரங்களை அகற்றி அவன் முகம், மார்பு, தோள் வளைவு என்று அடிக்க தொடங்கினாள்.
அவளின் பூக்கரங்களில் இருந்து விழுந்த ஒவ்வொரு அடியும் அவனுக்கு ஏதோ மசாஜ் செய்வது போல இருக்க ‘ஏய் முகத்தை விட்டுடுடி‘ என்றவன் இந்த பக்கம் அந்த பக்கம் என்று உடலை திருப்பி காட்டி அவளிடம் புன்னகை முகமாய் பெற்றிருந்தான்.
சில நொடிகள் கழித்து, ‘போதும்டி குள்ளச்சி விடு‘ என்று அவள் கரங்களை சிறைபிடித்தவன், “இப்போ கோவம் போயிடுச்சா என் குள்ளச்சிக்கு..!! நான் சொல்றதை கொஞ்சம் கேட்கிறியா..??” என்றான் அவள் நெற்றியில் முட்டிவாறு..
******************************************
அவன் குரலின் தீவிரத்திற்கு கட்டுப்பட்டவளின் கண்கள் வெகுவாக கலங்கி போயிருந்தது..,
‘ப்ச் எதுக்குடி‘ என்று அவள் விழிநீரை துடைத்தவனை இறுக அணைத்துக்கொண்டு, “ஏன்டா முன்னமே சொல்லல.. உன்னால நான் மாமாவை எப்படி எல்லாம் பேசிட்டேன்… போடா இப்போ புதுசா என்ன சொல்லபோற..? இப்ப சொல்றதால அவர் கஷ்டப்பட்டது எல்லாம் இல்லைன்னு ஆகிடுமா மாமா..?” என்று தேம்பிட…
“அதுக்கு தான்டி நான் உன்னை பொறுமையா இருக்க சொன்னேன் எல்லாமே அலசின நீ ஒரு முக்கியமான விஷயத்தை விட்டுட்ட சொல்லப்போனா நான் மறைச்சதுக்கும் இப்போ நடக்குறதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. அது என்னனு சொல்றேன் அதுக்கப்புறம் முடிவு பண்ணு”
‘சரி சொல்லு‘
கோபப்படாம கேளுடி என்று மனைவியை தன் கைவளைவில் கொண்டு வந்தவன், “உங்கப்பா அன்னைக்கு சரணும் கீர்த்தியும் ரெண்டு வாரம் ஒண்ணா இருந்தாங்கன்னு சொன்னாரே..?? அதை கேட்டு உனக்கு எவ்ளோ அதிர்ச்சியா இருந்ததோ அதே அளவு தான் எனக்கும்.., ஏன்னா இந்த விஷயத்தை பத்தி சரண் என்கிட்டே இதுவரைக்குமே சொல்லை..”
“அதேதான்டி.. அன்னைக்கு தான் அவன் என்கிட்ட நாலு வருஷத்துக்கு முன்ன நடந்ததை சொன்னான்… இப்போ பிரச்சனை என்ன..?? கீர்த்திகர்ப்பமா இருக்கிறது அதனால தானே நீ கோபப்பட்ட..!! என்று கேட்கபதிலேதுமின்றி அவனை பார்த்தாள்..
“உங்கப்பா என்ன சொன்னாரு ரெண்டு வாரம் அவங்க ஒண்ணா இருந்தாங்கன்னு.., அப்போ நாம சரண்கிட்ட பேசிட்டு வந்த அப்புறம்தானே அவங்க ரெண்டு பேரும் ஒன்னா இருந்திருக்கணும் சரியா..??” என்று கேட்க..,
‘ஆம்‘ என்று தலை அசைத்தாள்.
“ஸோ அந்த ரெண்டு வாரம் என்ன நடந்தது..? அவளை ஏன் போகவிட்டாங்க..? இது உங்க அப்பாக்கு எப்படி தெரியும்…?? அப்புறம் கீர்த்தி ரெண்டு மாசம் உங்கப்பாவோட கண்காணிப்புல தான் இருந்திருக்கா அப்பவே அவளுக்கு பிரேக்னேன்ட் ஆனது தெரிஞ்சிருக்கணும் ஆனா ஏன் உங்கப்பாகிட்ட சொல்லாம அவரையும் ஏமாத்தணும்..? அந்த ரெண்டு வாரம் பத்தின உண்மையை நம்மகிட்ட இருந்து மறைச்சது உங்கப்பான்னா.., கீர்த்தியோட நிலையை இத்தனை மாசமா உங்கப்பாவுக்கே தெரியாம மறைச்சது உன் சொத்தப்பா… இவங்க ரெண்டு பேராலதான் இவ்ளோ பிரச்சனையும் புரியுதா..?” என்று கேட்க அவளும் அவன் கூற்றை ஆராய தொடங்கினாள்.
“இன்னும் சொல்லப்போனா சரணும் கீர்த்தியுமே நம்மகிட்ட இதை பத்தி வாய் திறக்கலை… அதுலயும் கீர்த்தி ரொம்ப வித்யாசமா நடந்துக்குறா, மாப்பிள்ளை வீட்டு ஆளுங்க முன்ன உங்கப்பாவை தேவையில்லாம அவமானபடுத்தினா.., எப்படி இருந்த உன் சித்தப்பாவை இப்போ அவ இஷ்டத்துக்கு ஆட்டி வைக்கிறா.., சரணை நீ அவ்ளோ பேசும் போதும் தடுக்காம அமைதியா இருக்கா..? அவ மனசுல என்ன நினைக்கிறான்னே புரியலைடி..”
கீர்த்தியுடன் பெரிதான நெருக்கம் இல்லை என்றாலும் இப்போது யோசிக்கையில் அன்றைய அவளின் செயல்கள் சற்று அசாதாரணமாகத்தான் தோன்றியது அலர்விழிக்குமே..!!
“ஆனா ஒன்னு நம்ம ஹனிமூன் அப்போ என்கிட்ட பேசின கீர்த்திக்கும் இப்போ பேசாம அழுத்தமா இருக்க கீர்த்திக்கும் நிறைய வித்தியாசம்… இதுக்கு கண்டிப்பா உன் சொத்தப்பன் தான் காரணமா இருக்கனும், குழந்தை மாதிரிடி அவ..!! அவங்கப்பன் பண்ணின வேலையால தான் கீர்த்தி இவ்ளோ அழுத்தமா இறுகி போயிருக்கனும்.., எல்லாத்துக்கும் மேல குழந்தை… என்றவன் முகமே உணர்வுகள் தொலைத்து இருந்தது…”
“மொத்தத்துல இவங்கநாலு பேரும் சேர்ந்து என்ன பண்றாங்கன்னே புரியல… சம்திங் ஃபிஷ்ஷி” என்றவன் அவள் பதிலுக்காக காத்திருந்தான்.
அதை கேட்ட அலர்விழிக்கும் அவன் கூற்று சரி என்று தான் பட்டது…
“ஆம் பிரச்சனையின் மையபுள்ளியே கீர்த்தியிடம் தான் தொடங்குகிறது.. பிரகாசம் மூலமாகவே சரணிடம் செல்ல வேண்டிய அவசியமென்ன..? கர்ப்பத்திற்கு காரணம் யார்..?? அனைத்திற்கும் மேலாக கர்ப்பத்தை மற்றவரிடம் மறைக்க வேண்டிய அவசியம் என்ன..! அதுவும் அவளுக்காக சரணை தள்ளிநிறுத்தி இருக்கும் தன் தந்தை நாதனிடமே.. ஒருவேளை சரண் தவறு செய்திருந்தால் கர்ப்பம் உறுதி ஆனதுமே… இப்போது தேடி வந்தவள் அப்போதே வந்து திருமணத்தை நடத்தி இருக்கலாமே..!! இத்தனை மாதங்கள் மறைக்க வேண்டிய அவசியம் என்ன..?? சம்பந்தமே இல்லாமல் எதற்கு சரணை குற்றவாளியாக்க வேண்டும்..!!
“அது மட்டுமின்றி அன்று மருத்துவமனையில் சரண் கீர்த்தியின் காதலை அலர் அறிந்தபோது கீர்த்தியின் முகத்தில் இருந்த மகிழ்வும் பூரிப்பும் மிளிரவும் இன்று அணுவளவும் இல்லை. எத்தகைய இக்கட்டான நிலையையும் காதலனிடம் பகிர்ந்து இந்நிலையை கீர்த்தி தவிர்த்திருக்க வேண்டும் அல்லவா”
அதிலும் வீட்டில் இருந்து கொண்டே பெங்களூரில் இருப்பதாக பொய் வேறு.., பிரகாசமும் கீர்த்தியும் நாதன் மற்றும் சரணை பெரும் இக்கட்டில் நிறுத்தி இருப்பது அவளுக்கும் புரியத்தான் செய்தது.., அதுவும் வெளிப்படைதன்மையே இல்லாமல் இருக்கும் கீர்த்தி மற்றும் பிரகாசத்தின் ஒத்துழைப்பின்றி நான்கு வருட முந்தைய கதையை எழில் அவளிடம் கூறி இருந்தாலும் பெரிதாக ஒன்றும் செய்வதற்கில்லை..,
நாதனையே ஏமாற்றி வாயடைக்க செய்து மற்றவர் முன்னிலையில் தலைகுனிய செய்தவர்கள், அவளையும் சமாளித்திருப்பார்கள் என்பது புரிபட..,
“ஐ ஆம் கன்வின்ஸ்ட்”என்றாள்…
‘நிஜமாவாடி’ என்று விழிகளில் மகிழ்வுடன் கேட்டவன் மனதில் ஒருவித நிம்மதி பரவ இருக்கரங்களையும் தலைக்கு பின்கோர்த்து சோபாவில் தலை சாய்த்தவன் ‘ஷ்ஷப்பாஆஆஅ..‘ என்ற பெருமூச்சை இழுத்து விடுமுன் மீண்டும் அவன் மடியில் அமர்ந்திருந்த அலர்விழி….
“இப்ப சொல்லு எதுக்கு கதிர் லவ் பத்தி என்கிட்டே இருந்து மறைச்ச..??”
‘ஏதே திரும்பவுமா..?’ என்று தூக்கிவாரி போட்டது அகனெழிலனுக்கு!