அலர் கதிரின் காதல் பற்றி கேட்கவும் “ஏன்டி இப்போதான் நீ கன்வின்ஸ் ஆகிட்டன்னு நிம்மதியானேன் அது பொறுக்கலையா..?? கொஞ்சம் டைம் குடுடி”
“எதுக்கு என்னைசமாளிக்க என்ன பொய் சொல்லலாம்னு யோசிக்கவா?”
“அடிப்பாவி நான் எதுக்குடி பொய் சொல்லணும் நிஜமாவே கதிர் விஷயத்தை சொல்ல மறந்துட்டேன்டி.., மறைக்கனும்னு எல்லாம் இல்லை.. அன்னைக்கு ஹோட்டல் போனப்போ தான் அவனை ஒரு பொண்ணுகூட பார்த்தேன், உன்கிட்ட சொல்ல வரதுக்குள்ள நீ வேதாக்கு வாங்க வேண்டிய லிஸ்ட் எடுத்துட்ட அடுத்து அந்த பரதேசி வந்துட்டான் என்றதும் அலர் அவனை முறைக்க சரி உன் நொண்ணன் வந்துட்டான் அப்புறம் உங்கப்பா கூட கடையில பிரச்சனை இதுல தான் மறந்துட்டேன் நிஜமாவே.. மாமாவை நம்புடி” என்று பாவமாக பார்க்க..,
அவளுக்குமே அன்றைய நாள் நன்கு நினைவில் உண்டு இருந்தாலும், “எப்படிடா நம்ப சொல்ற.., உன் மேல இருக்க தப்பை ஏதேதோ கதை கட்டி எங்க அப்பா மேல திருப்பி என்னையே சரி சொல்ல வச்சிட்ட.. உன்னை எப்படி நம்ப..!!”
“ஏய் லூசு, கதை இல்லைடி உண்மையாவே உங்கப்பா மறைச்சதுதான் பெரிய தப்பு..!!”
“அப்போ ஏன்டா அதை ஆஃபிஸ்லயே சொல்லலை…, கார்ல வரும் போது யோசிச்சு இங்க வந்து சொல்லணும்”
“என் அறிவுக்களஞ்சியமே.., இதை தான்டி அங்க சொல்ல வந்தேன் ஆனா உன்னை பார்த்து பயத்துல வார்த்தை வரலை..,”
“என்னது என்னை பார்த்து பயந்துட்டியா..?” என்று அவன் கன்னத்தை பிடித்தவள்
அலர் நம்பாமல் போனாலும் நிஜம் அதுதான் அவன் மறைத்தது தான் சரணை அவள் பேச காரணமாகி போனது என்று எண்ணியவனுக்கு உள்ளுக்குள் குற்றஉணர்வு அதிகரித்தது.. அதில் பேச்சு வராமல் அவன் ஸ்தம்பித்து போனதில் தன் நிலையை அலுவலகத்தில் விளக்க முடியவில்லை.
“இங்கபாரு எங்கப்பா ஒரு விஷயத்தை மறைச்சா அதுக்கு வேலிட் ரீசன் இருக்கும்”
“ஏன்டி உங்கப்பா மறைச்சா ரீசன் இருக்கும் அதே நான் மறைச்சா ரீசன் இருக்காதா..??” என்று ஆதங்கத்துடன் கேட்க..,
“ஆமா எங்கப்பா எது பண்ணினாலும் அடுத்தவங்க நல்லதுக்கு தான் பண்ணுவாரு, ஒஹ் உங்களுக்கும் ரீசன் இருக்குமா..? அப்படி என்னங்க சார் ரீசன் சொல்லுங்க கேட்போம்”
“உங்கப்பாவும் பாட்டியும் தான்டி..!!”
அவன் பதிலில் அலரின் விழிகள் பெரிதாக விரிய.., “எங்க பாட்டி ஓகே.., அது என்ன எங்கப்பா புரியலை..??”
“அவரோட ஹெல்த் கண்டிஷனுக்கு அதிகமான ஸ்ட்ரெஸ் கூடாது அதனால தான் சொல்லலை.. உன்கிட்ட சொன்னா அது கண்டிப்பா அவர்கிட்ட போகும் தொட்டதுக்கு எல்லாம் கோவபடரவரு இதுல உன் சொத்தப்பன் பண்ணினது தெரிஞ்சா அவ்ளோ தான்… உங்கப்பாவோட நல்ல மனசுக்கு கொஞ்சம்கூட ஒத்துபோகாத குணம் அவனுக்கு.. அப்படி இருக்கும்போது உங்கப்பா உன் சொத்தப்பனை விட்டுட்டு சரண் மேல கோவபடுறாருன்னா என்னோட கெஸ்படி அவருக்கு இன்னும் நடந்தது எதுவும் முழுசா தெரியல..!! தெரிஞ்சது உன் சொத்தப்பன் செத்தப்பன் தான்டி”
அலர்விழியோ திறந்த இமை மூடாது அவனையே அதிசயித்து பார்த்திருந்தாள்.., தந்தையை பற்றி பேசியவனின்வார்த்தையில் பொய்யில்லை நிஜமான அன்பு அவன் விழிகளில் தென்பட அதில் அவள் இதழ்களும் சிறிது பிளந்திட அதை ஒன்று சேர்த்தவன்,
“என்னடி லுக்கு..!! எனக்கு அவர்தாய்மாமா அந்த அக்கறை எப்பவும் இருக்கு.., நீ சொல்லிதான் செய்யனும்னு ஒன்னுமில்லை.. என்ன ஒன்னு நமக்கு நடுவுல அதிகமா மூக்கை நுழைக்கிறது தான் எரிச்சலா இருக்கு.., அப்படி என்ன என் மேல நம்பிக்கை இல்லை அப்போ எனக்கும் கோவம் வரத்தான் செய்யும்”
அவன் பேச்சு மனதிற்கு இதம் அளித்தாலும்,”ஒஹ் அதான் சார் வார்த்தைக்கு வார்த்தை மாமா, மாமான்னு எங்கப்பாவை வாயார கூப்பிடுறிங்களே அதுலே தெரியுது உங்க அக்கறை” என்று சீண்டலாக இதழ்களை சுழித்திருந்தாள்.
சுழித்த இதழை சுண்டி இழுத்து அதில் இதழ் பொறுத்த முயல ‘விடுடா‘ என்று அவள் தலையை திருப்பவும், ‘நான் கோவமா இருக்கேன்டி ‘ என்றவன் இதழ்களை இன்னும் அழுத்தமாக பிடிக்க..,
‘அதுக்கு..??’
உனக்கு கோபம் வந்தா நீ மடியில உட்காருறது உன் உரிமைன்னா எனக்கு கோவம் வரும்போது இதுவும் என் உரிமை என்று கண்ணடித்து அழுத்தமாக அவளிதழ்களை சேர அலர் தான் சில நொடிகள் திண்டாடி போனாள்.
மெல்ல விலகியவன் “இப்போவரை அவரு உனக்கு அப்பாவா மட்டும் தான் நடந்துட்டு இருக்காருஎப்போ எனக்கு தாய்மாமாவா நடந்துக்கறாரோ அப்போ மாமான்னு கூப்பிடுவேன்”
இதற்கு அவள் என்ன பதில் கூற..!!
“சரி நீ எப்போ வேணும்னாலும் கூப்பிடு அது உன் விருப்பம் ஆனா எதுக்குஎன்னை லூசு சொன்ன..? உனக்கு என்னை பார்த்தா அப்படி தெரியுதா..??”
“அட ராமா.., திரும்ப ஆரம்பிக்கறாளே இதுக்கு ஒரு எண்டே இல்லையா” என்று நொந்து போனவன்,
“எனக்கு இல்லடி உனக்கு தான் அப்படி தெரியுது…ரெண்டு முறைநீ யாருன்னு நீயேகன்ஃபெஸ் (confess) பண்ணியிருக்க…” என்று சிரிப்புடன் அவளை எழுப்பி நிறுத்தியவன் ஓட முயல.., மறுநொடியே அலர் அவனை பிடித்து இழுக்க கால் இடறி எழில் கீழே விழுந்திருந்தான்.
அப்போதும் அவனை விடாமல் அவன் மீது ஏறி அமர்ந்து அவன் எழாதவாறு பார்த்துக்கொண்டவள்அவன் தாடையை பற்றி, “ஆமாடா உன்பின்னாடியே பைத்தியமா சுத்துறேன் பார்த்தியா உனக்கு என்னை பார்த்தா அப்படி தான் தெரியும்…”
‘அப்படியெல்லாம் இல்லடி செல்லம்’ என்று எழில் அவளிடையை வளைக்க,
‘டேய் என்னை டைவர்ட் பண்ணாம ஒழுங்கா பதில் சொல்லு’ என்று அவன் கையை தட்டிவிட,
‘ப்ச் என்னடி..??’
“கட்டின பொண்டாட்டிகிட்ட உண்மையை மறைச்சது சரியா..? தப்பா..?” என்று கேட்டு கை ஓங்கவும்..,
‘ஹ்ம்ம்‘ என்று மெல்ல தலை அசைத்தவன் ஒருவித மிரட்சியுடன் தாயை பார்த்திருந்தான்.
“ஏன் அப்பு என்ன ஆச்சு..??”
“ம்மா நீங்க கோவமா இருக்கீங்களா..??”
‘இல்லையேப்பா.. ஏன் கேட்கறீங்க..?’
“இல்லை பாய்ஸ் கேர்ள்ஸ்ஸ அடிக்ககூடாதுன்னு நீங்க தானே சொன்னிங்க..??” என்று சிறு நடுக்கத்துடன் கேட்க..,
“ஆமா”
“அப்போ நீங்க அப்பாவை அடிக்குறிங்க, அது தப்பு இல்லையா..??”
அவன் கேட்டதுமே அலர் எழிலை தான் பார்த்தாள்.., கீழே படுத்திருந்தவன் ‘இப்போ பதில் சொல்லுடி பார்ப்போம்‘ என்று புன்னகையுடன் வாயசைக்க..,
அதை கண்டு விழி சுருக்கியவள் “அப்பு பாய்ஸ்தான் கேர்ள்ஸை அடிக்ககூடாது ஆனா கேர்ள்ஸ் பாய்ஸை அடிக்கலாம் அதுலயும் தப்பு பண்ற பேட் பாய்ஸை சும்மா விடவேக்கூடாது” என்று எழிலை முறைத்துக்கொண்டு கூற..,
“அப்போ அப்பா பேட் பாய்யா ம்மா..? அவரு என்ன தப்பு பண்ணாரு..??”
“வகையா சிக்கினியா..??” என்பதாக பார்த்த எழிலின் புன்னகை மேலும் விரிய ‘பதில் சொல்லு‘ என்றான் சத்தமாக..
அதுநேரம் வரை அனைத்தையும் பார்த்துகொண்டிருந்த வெற்றி “இந்தாடா அமுலு அம்மா கஷாயம் கொடுத்தாங்க உனக்கு தான் குளிர் தாங்காதே எதுக்கு இவ்ளோ நேரம் அங்க இருந்த..?? என்றிடதாய் மகன் இடையிலான பேச்சு தற்காலிகமாக தடைபட்டு போனது..
“அது வந்துண்ணாஆஅ..”
‘உன்னை சொல்லி குத்தமில்லை பொண்டாட்டி எட்டு மணிவரை வீடு வந்து சேராம இருக்காளேன்னு கொஞ்சம்கூட பதட்டம் இல்லாம இருந்தவனைசொல்லணும்‘ என்றவன் எழில் புறம் திரும்பி,
“டேய் எங்க நைனா என் தங்கச்சியை எப்படி வளர்த்தாருன்னு தெரியுமாடா உனக்கு..?” என்றான் ஆவேசமாக …
‘உன்கூட சேர்ந்து நானும் தானேடா பார்த்தேன்‘ என்றவன் இப்போ எதுக்கு பக்கிஇந்த பிட்டு போடுது என்பதாக எழிலின் கண்கள் இடுங்க.., ‘பேசி முடி அப்புறம் இருக்கு‘ என்று அழுத்தமாக பாசமலர்களை பார்த்திருந்தான்.
“ஏன்டா என் தங்கச்சி எங்க எப்படி இருக்கவேண்டியவ ஆனா உனக்கு கட்டி கொடுத்த பாவத்துக்கு இன்னும் என்ன எல்லாம் நாங்க அனுபவிக்கனும்னு எழுதி இருக்கோ தெரியலை” என்றவன் கண்களில் சட்டென நீர் திரண்டிருந்தது
இதை கண்ட எழிலின் கண்கள் பெரிதாக விரிந்திட நெஞ்சை பிடித்து கொண்டான். வெற்றியின் கண்ணீரில் எழிலின்நெஞ்சம் வெடித்து சிதறாமல் இருந்தது தான் அதிசயம்.
‘அண்ணாஆஅ ..‘
“நீ சும்மா இரு அமுலு தாமரை நடந்தது எல்லாம் சொன்னா.., இவனை கேட்க யாரும் இல்லைங்கிற தைரியம்தானே கை நீட்ட வச்சிருக்கு..”
“ண்ணா அவரு என்னை அடிக்கலை”
‘ப்ச் அது எனக்கு தெரியாதா..??’ என்பதாக அவளை பார்த்தவன் “நீ அமைதியா இரு நான் பேசிக்கிறேன்” என்றிட அவளும் அமைதியாக மகனோடு அமர்ந்தாள்.
எழிலை நெருங்கிய வெற்றியின் மனம் ஆனந்த தாண்டவமாடிட அவன் முகம் மகிழ்ச்சியில் விகிசித்திருந்தது.
அதையும் மீறிய கருணையையும் பரிதாபத்தையும் வலிய கண்களில் கொண்டு வந்தவன் உச்சு கொட்டியவாறே தன் கரத்தை எழிலிடம் நீட்டவும் அவன் கரத்தை ஓங்கி அறைந்து தட்டி விட்டு, வெற்றியை முறைத்து கொண்டே எழில் தானே எழுந்து நின்றான்.
“பாதி வழியில தான் மச்சான் ஆம்புலன்ஸ்க்கு சொல்லணும்னு நியாபகமே வந்தது ஆனாலும் உன்னால தாங்க முடியும் அந்தளவுக்கு போக மாட்டன்னு உள்ளுக்குள்ள ஒரு பட்சி சொல்லிட்டே இருந்துச்சி” என்றவன் நின்றிருந்த எழிலை மேலிருந்து கீழ் அளவெடுத்து கொண்டிருந்தான்..,
பின்னே எழில் பனியனில் இருந்ததால் அலரின் கைத்தடம் அவன் புஜங்களில் அழுத்தமாக பதிந்து சிவந்திருந்தது.., முகத்திலும் அங்கங்கு செவ்வரிகளாக அலரின் விரல் தடம் வியாபித்திருக்க.., எழிலன் தலை கலைந்து போயிருக்க அவன் கண்களில் பெரும் அயர்ச்சி தென்பட முகமும் சோர்ந்து போயிருந்தவனை காண கண்கோடி வேண்டுமே கோவிந்தா…!!! என்ற ஆர்பரிப்பு வெற்றிக்கு..
நண்பனின் கோலத்தை மனக்கண்ணில் படம் பிடித்து சேமித்தவன், “பரவால்ல என் நம்பிக்கையை காப்பாத்திட்ட ஸ்ட்ராங் பாடிதான்” என்று தோளில் தட்டிய அடுத்தநொடி சுருண்டு கீழே விழுந்திருந்தான்.
ஓடி வந்த அலர் வெற்றியை பிடித்துகொண்டு ‘என்னண்ணா என்னாச்சு..? எப்படி விழுந்திங்க‘ என்று கேட்க,
எழிலோ அலட்சியமாக வெற்றியை நெருங்கி, ‘ஃபோர்ஸ் போதுமா மச்சான்.., ஆனா நீ தான் வீக்கா இருக்க போல‘ என்று நக்கலாக கேட்க..,
“எதுக்கு இப்போ அண்ணனை அடிச்சிங்க” என்று சிலிர்த்து வந்தாள் அலர்..,
“ஏய் என்னடி அண்ணன்!பெரிய நொண்ணன் அவன் உனக்கு அண்ணன் ஆகுறதுக்கு முன்னாடியே என் பிரெண்ட்.., அடி வாங்கினவனே எதுவும் கேட்கலை இப்போ நீ எதுக்கு இந்த குதி குதிக்கிற.., போய் அமைதியா உட்காரு, எங்களுக்குள்ள ஆயிரம் குடுக்கல் வாங்கல் இருக்கும் நீ நடுவுல வராத” என்றவன் வெற்றிக்கு கை கொடுக்க..,
வேறு வழியின்றி எழிலின் கரத்தை பற்றி எழ முயற்சிக்க…, அவன் தன் கரத்தை பிடித்த மறுநொடி எழில் வேகமாக இழுத்து நிறுத்த பளீரென்ற வலி அவன் இடையில் பரவவும் ‘ஆஆஆஅ‘ என்று அலறிவிட்டான்.
‘என்னண்ணா ஆச்சு‘ என்று அருகே வந்த அலர் எழிலை முறைத்தவாறு வெற்றியை சோபாவில்அமரவைக்க..,
வெற்றியின் முகம் வேதனையில் கசங்கிட பார்வையோ எழில் மீது வன்மையாய் படிந்தது.
“என்னடா லுக்கு மூஞ்சியை பேத்துடுவேன்” என்றவாறே அவனருகே அமர்ந்தவன், “ராத்திரி நேரத்துல கூலர்ஸ் கேக்குதா உனக்கு” என்று அதை கழட்டி எழில் மாட்டி கொள்ள..,
“நான் யாரு..? என் பவர் என்னன்னு தெரியாம கை வச்சிட்ட இல்லை.. டேய் உன்ன கதறவிடலை என் பேரு வெற்றிசெல்வன் இல்லடா” என்று சபதம் ஏற்க..,
“ஆஹான்.., அப்புறம்” என்று கண்ணாடியை கீழே இறக்கி எள்ளலாக புருவம் உயர்த்தினான் அகன்.
‘இருடி நான் யாருன்னு காட்றேன்‘ என்றவன், “அமுலு டிரஸ் மாத்திட்டு வாடா” என்று கூற..,
“எதுக்குண்ணா” என்று கேட்க வந்தவள் அவன் முகத்தில் இருந்த தீவிரம் கண்டு அமைதியாக உள்ளே சென்று சேலை மாற்றி வந்தாள்.
யார் எது கூறினாலும் மறுகேள்வி கேட்காமல் அதை செய்யாதவள் இப்போது அமைதியாக உடை மாற்றி வருவதை கண்ட அகன் புருவங்கள் முடிச்சிட்டது…
வெளியில் வந்தவள் கரத்தை பிடித்த வெற்றி வெளியேற முனைய.., அணிந்திருந்த கண்ணாடியை தூக்கி போட்டவண்ணம் பதறிக்கொண்டு ஓடிய எழில், “டேய் என்னடா பண்ற, விடு அவளை” என்றான் அவசரமாக..
“டேய் என் தங்கச்சியை அடிக்க நீ கை ஓங்குவ அதை தட்டி கேட்க வந்த என்னையே அடிப்பியா.. இது நியாயமான்னு உன் மாமனார்கிட்ட கேட்க போறேன், நீ அடிச்சதுக்கு சாட்சி சொல்லத்தான் என் தங்கச்சியை கூட்டிட்டு போறேன்”
எழிலுக்கு புரிந்து போனது.., ஏண்டா தேன்கூட்டுல கல் எறிந்தோம்னு கன்னத்தில் கைவைத்து அமர்ந்துவிட்டான்..
இனி வெற்றியிடம் பணிந்து போனால் மட்டுமே அவனை குளிர்விக்க முடியும் என்பதால்.., “ஹீஹீ என்ன மச்சான் இது, சாதாரண புருஷன் பொண்டாட்டி சண்டைக்கு எல்லாம் பஞ்சாயத்து வச்சிக்கிட்டு அதுலயும் உன்ன மாதிரி பெரிய மனுஷனுக்கு இது அழகா சொல்லு” என்று கேட்க..,
“எது பெரிய மனுஷனா..?? அது யாருடா எனக்கு தெரியாம..??”
“அதுல என்னடாசந்தேகம் நீ தான் நீயே தான்..!! அதுலயும் நீ கவுன்சிலர் வேற.., அந்த வெள்ளை வேஷ்டி சட்டையில அப்படியே சிங்கம் மாதிரியேஇருப்ப மச்சான்.., ஒரு வார்டையே கட்டி காக்கிறதுன்னா சும்மாவா? இன்னைக்கு வார்ட்னா நாளைக்கு தமிழ்நாடு அடுத்து இந்தியா அப்புறம் உலகநாடுகள்னு உன்னை நம்பி எவ்ளோ பேர் இருக்கோம் தலைவன்டா நீ!!நாளைய விடிவெள்ளி” என்று புகழ் பாட..,
“இது எல்லாம் என் இடுப்பை உடைக்கும் போது தெரியலையா..?? நான் வேட்டி சட்டையில இருக்கிறது தானே உனக்கு பிரச்சனைன்னு சொன்ன”
“இது எப்போண்ணா ஆச்சு..??” என்று பதட்டத்துடன் அலர்…
“ஒஹ் இதையும் உன்கிட்ட இருந்து மறைச்சிட்டானா..?? உனக்கு தெரியாதா..??” என்று வெற்றி ஏற்றிவிட..
“இன்னும் எவ்ளோடா என்கிட்டே இருந்து மறைச்சிருக்க..??” என்று கண்களாலேயே கணவனை எரித்தாள் அலர்விழி..,
“பரதேசி நானே இப்பதான்டா அவளை சரிகட்டி வச்சேன்.., அதுக்குள்ளே இப்படி கோர்த்து விடுறியே” என்றவனுக்கு இனியும் வெற்றி இங்கே இருந்தால் தன் கதையை முடித்து விடுவான் என்பதால்முடிந்தவரை விரைவாக அனுப்பிட முடிவு செய்தான்.
பின்னே இருவரும் மாமன் மகன் அத்தை மகன் என்பதை கடந்து சிறு வயது முதற்கொண்டே நண்பர்கள் என்பதால் இருவருக்கு மட்டுமேயான ரகசியங்கள் ஏராளம்.., சரியான நேரத்தில் தன்னை பொறியில் சிக்கிய எலியாக்கி இருப்பவனை மனதினுள் கொலை வெறியுடன் பார்த்தவன் அதை மறைத்து இதழ்களில் புன்னகையை தவழ விட்டு..,
“அது ஒரு சின்ன ஆக்ஸிடென்ட்.., எதிர்பாராம நடந்துடுச்சுடிஅப்படிதானே மச்சான்” என்று இறைஞ்சுதலாக வெற்றியை பார்க்க..,
“இப்போ புரியுதாடி என் பவர்..” என்று கெத்தாக வெற்றியும் பார்க்க..,
“தெரியுதுடா பன்னி..மொதல்ல இடத்தை காலி பண்ணு” என்று இவனும் கண்களால் வேண்டுகோள் விடுக்க..,
‘எப்படி சும்மா போறது‘ என்று எண்ணியவன் அலரை அருகே அழைத்து அவள் கரங்களை விரித்து பார்த்தவன் அவள் மலர்க்கரங்கள் சிவந்து கன்றி போயிருப்பதை கண்டு ஆடி போய்விட்டான்.
“அடப்பாவி என்னடா இது என் தங்கச்சி கை இப்படி செவந்து போயிருக்கு..!! உன்னோட கொடுமைக்கு அளவில்லையா..?”
“வேணா மச்சான் என்னை வெறி ஏத்தாத.. அப்புறம் அனுபவிப்ப”
“ஐயோ இது மட்டும் என் நைனா பார்த்தாருன்னா துடிதுடிச்சி போயிடுவாறேடா.. ஒரு பொண்ணுடா.., ஒரே பொண்ணு அவருக்கு தெரியுமா..?” என்று சீற..,
‘ண்ணா‘ என்று அலர் அவனை திகைப்புடன்பார்த்தாள்.
ஆம் எழிலிடம் அவள் காட்டும் இந்த அவதாரம் மட்டும் நாதனுக்கு தெரிந்தால் அலரின் கதி அதோகதிதான்…
“இது என்ன பழக்கம் இப்படியா உன்னை வளர்த்தேன்.., மரியாதையாக நடக்க தெரியாதா..? இதுஅது…” என்று அவளை ஒருவழியாக்கி விடுவார்.
வெற்றி நாதனிடம் தெரிவிப்பேன் என்றதில் நிஜமாகவே அலர் அதிர்ந்துதான் போனாள்.
வெற்றி அவளிடம் கண்சிமிட்டி தலை அசைக்கவும் புரிந்துகொண்டவளின் முகத்திலும் இதுகாறும் இருந்த அலைப்புறுதல் நீங்கி குறும்பு தலைதூக்கியது..,
“இதோபாருநீ பண்ணின வேலைக்கு அவரு அமுலுவை திரும்ப உன்கிட்ட அனுப்பினதே பெருசு அப்படி இருக்கும்போதுவந்தவளை வச்சு ஒழுங்கா வாழுவியா… அதை விட்டுட்டு இப்படி கொடுமைபடுத்தற, கேட்க யாரும் இல்லன்னு நெனச்சியா?”
“என் சித்தப்பு இங்க இல்லைங்கிற தைரியமாடா உனக்கு” என்றவாறே தன் கைபேசியை எடுத்து ‘இங்க காட்டுடா அமுலு‘ எனவும்,
‘இதோண்ணா..‘ என்று அலரும் தன் கரங்களை அவன் முன்நீட்ட வெற்றி புகைப்படம் எடுக்க தொடங்கினான்…
“டேய்வெளக்கெண்ணை என்ன பண்ற..??” என்று அவன் பேசியை கைப்பற்ற முயற்சிக்க அதை உயர்த்தி பிடித்தவாறு,
“ஹான் உன் மாமனாருக்கு அனுப்ப போறேன் நீ எப்படி எல்லாம் அவர் மகளை கொடுமைபடுத்துறன்னு அவருக்கு தெரிய வேணாம்”
“அடேய் லூசுபயலே அவ கை ஏன் செவந்திருக்குன்னு உனக்கு தெரியாதா..?” என்றான் சலிப்புடன்…
“எனக்கு தெரியும்டி ஆனா அங்க இருக்கிறவருக்கு கை சிவந்திருக்கிறது மட்டும் தான் தெரியுமே தவிர.., ஏன் எப்படின்னு தெரியாதே இது போதுமே உன்னை அலறவிட..!!”
அதுக்குதான் சொல்றேன் வேண்டாம்..!! ஆத்திரத்துல எதையும் ஆராயமாட்டாருஅவர்கிட்ட எதாவது உளறி வச்சன்னா ராத்திரி நேரம்னுகூட பார்க்காம வந்து கையோட கூட்டிட்டு போயிடுவாருடா.. அமைதியா இரு” என்றவன்..,
‘இவ ஒருத்தி கையை காட்டி போஸ் கொடுத்துட்டு கீழ இறக்குடி‘ என்று அலரின் கரங்களை தட்டி விடவும்,
“படுபாவிஎன் எதிர்லயே என் தங்கச்சியை அடிக்கிறியா? இல்லை இதுக்கு மேல ஒரு நிமிஷம் கூட அவளை உன்கூடவிட்டு வைக்குறது தப்பு, கிளம்பு அமுலு”
‘சரிண்ணா‘ என்றவள் அறையை நோக்கி திரும்ப,
‘எது சரியா..? ஏய் நில்லுடி என்ன சரி, எங்க போற..?’ என்று பதட்டத்துடன் திரும்பியவளின் கரத்தை பிடித்திழுத்து நிறுத்தினான்.
“மச்சான் உனக்கு என்னடாபாவம்பண்ணேன்எதுக்கு என் குடும்பத்துல கும்மி அடிக்க பார்க்கிற.. விட்டுடுடா ஏற்கனவேவாங்கின அடிக்கே ஒத்தடம் கொடுக்கணும்.. அதுக்காகவாவது இவள இங்க இருக்க விடுடா” என்று இறங்கிய குரலில் கூற,
‘ஒண்ணா ரெண்டாடா நீ பண்ணினது லிஸ்ட் போட முடியாத அளவுக்கு இருக்கு‘ என்று பல்லை கடித்தவன் பின் மீண்டும் நினைவு வந்தவனாக,
“எது உனக்கு ஒத்தடம் கொடுக்கனுமா..?? ஓஒஓ… கொழுப்பெடுத்து போய் நீ அடி வாங்கிட்டு வருவ அதுக்கு என் தங்கச்சி ஒத்தடம் வேறகொடுக்கணுமா..?’
“மச்சி ப்ளீஸ்டா, உன் கைய காலா நெனச்சி கேட்கிறேன் விட்டுடுடா போதும்.. ரொம்ப டையர்ட் ஆகிட்டேன் … நான் உன் நண்பன் தானடா இரக்கமே இல்லாமஇப்படி பழி வாங்கலாமா..? இதெல்லாம் தப்பு மச்சான்” என்று பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்கவும்,
“ஒஓஒ கொஞ்ச நேரம் முன்ன என்னை அடிக்கும் போது உனக்கு தப்புன்னு தெரியலையா?எதுக்குடாகையை காலா நினைக்கணும், என் காலு எங்கயும் ஜாக்கிங் போகல இங்க தான் இருக்கு” என்று தன் வலது காலை எழிலின் முன் நீட்டி ஆட்டியவாறு விழு என்பதாய் பார்க்கவும்,
கொலை வெறியுடன் அகன்!
சரிவிடு பரவால்ல ..உன்னை பார்த்தாலும் பாவமாத்தான் தெரியுது போதும்னு நினைக்கிறேன்‘ என்றவன் அலரை அழைக்க உடனே அவனிடம் ஓடி சென்றவளை முறைக்க மட்டுமே முடிந்தது எழிலால்..!!
‘கை ரொம்ப வலிக்குதாடா‘ என்று வாஞ்சையாய் கேட்கவும்,
அலரும் லேசாக உதட்டை பிதுக்கியவாறு, ‘ஆமாண்ணாரொம்ப எரியுது” என்று தழுதழுக்க,
“டேய் உங்க நடிப்புக்கு ஒரு அளவில்லையாடா” என்று எழில் வாயில் கைவைத்து பார்த்திருந்தான்.
“இந்தா டா” என்று ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த உலக்கையை எடுத்து அவளிடம் கொடுத்தவன், “இந்த எருமையைவெறும் கையாள அடிச்சா உன் கை என்னவாகிறது.., இதுல போடு உன் கையும் வலிக்காது அந்த எருமைக்கும் உரைக்கும்”
“டேய் துரோகிஎன்னடா இது”
“தெரியலையா மச்சான்..? என்று கேட்க புரியாது விழித்தான் அகன்…
மச்சி நிஜமாவே தெரியலை என்று மீண்டும் உறுதிபடுத்தியவன் அட்டகாசமான சிரிப்போடு, “ஆப்பு மச்சி ஆப்பு அவ்ளோ சீக்கிரம் கண்ணுக்கு தெரியாது… அனுபவி ராஜா அனுபவி” என்று சீட்டி அடித்துக்கொண்டே“வா மாப்பிளை நாம போகலாம்” என்று அவிரனை தூக்கி கொள்ளவும்,
“அவனை எங்கடா கூட்டிட்டு போற விடு இவனை விட்டா வேற யாரும் காப்பாத்த முடியாது.. என்னை காக்க வந்த காப்பான், விடுடா” என்று ஓடிசென்று அவிரனை இழுக்க..
“அதுதாண்டி என்கிட்டே நடக்காது” என்று பழிப்பு காட்டியவன்