மாத்திரையை விழுங்கி விட்டு அமர்ந்திருந்த நாதனின் பார்வை ஆச்சர்யத்துடன் எழிலை தொடர்ந்தாலும் அவர் செவிகளில் “பிரகாசத்தை நெருங்கும் முன் எத்தனை யோசித்திருக்க வேண்டும்” என்று எழில் கூறிய வாக்கியமே மீண்டும் ரீங்காரமிட…, எப்போதுமே தான் பிரகாசத்தை நெருங்க எண்ணியதில்லையே அவன் தானே தன்னை நெருங்கினான் என்று எண்ணம் வலுக்கவுமே மனம் பிரகாசம் தன்னை நெருங்கிய அந்நாளை அசைபோட தொடங்கியது…,
சில மாதங்களுக்கு முன்…
அன்று அதிகாலை வாசலில் கோலமிட்டு கொண்டிருந்தவளர்மதி அருகே அரவம் உணர்ந்து நிமிரவுமே அங்கு கண்ணீரோடு அழுது வீங்கிய முகத்துடன் தீபிகாவும் அவர் அருகே நிறமிழந்த முகத்துடன் பிரகாசமும் நிற்பதை கண்டவர் எவ்வித கேள்வியும் கேட்கவிடாது உடனே வரவேற்று உள்ளே அழைத்து சென்றார்.
உள்ளே நுழைந்த தீபிகா மறுநொடியே ‘மாமாஆஅ..‘ என்ற கதறலுடன் ஹாலில் கணக்குகளை பார்த்துகொண்டிருந்த நாதனின் கால்களை கெட்டியாக பிடித்துகொள்ள பிரகாசத்திடமும் இதுநேரம் வரை கட்டுபடுத்தியிருந்த கண்ணீர் மெல்ல வெளிவர தொடங்க நாதன் அருகிலேயே மண்டி இட்டு அமர்ந்து முகம் பொத்தி கதறிஅழ ஆரம்பித்தார்.
பதறி போன நாதன் சட்டென இருக்கையில் இருந்து எழுந்தவர் “என்ன தீபா இது… என்ன காரியம் பண்றமுதல்ல எந்திரி” என்றவர் தீபிகா அவர் சொல்லுக்கு செவிமடுக்காது கண்ணீர் கொண்டு அவர் கால்களை நனைக்க.., நாதனோ பெரும் சங்கடத்துடன் “வளர் என்ன நடக்குது அமைதியா பார்த்துட்டு இருக்க முதல்ல வந்து இவளை எழுப்பு” என்றிட உடனே வளரும் தீபிகாவை தூக்கி பிடித்து நிறுத்தியிருந்தார்.
“என்னாம்மா ஆச்சு..?? ஏன் இப்படி அழற” என்றவர் பிரகாசத்திடம் திரும்பி, “ஏய் என்னடா இது முதல்ல எந்திரி ரெண்டு பேரும் உட்காருங்க” என்று அவர்களை நாற்காலியில் அமர்த்தியவர் வளரிடம் இவங்களுக்கு குடிக்க எதாவது கொண்டு வா.. என்றார்.
“நீங்க தான் மா..மா.. இவரையும் என் பொண்ணையும் எனக்கு காப்பாத்தி கொடுக்கணும், வேற வழியே இல்லாம கடைசியா உங்களை மட்டுமே நம்பி வந்திருக்கோம் எங்களை கை விட்டுடாதிங்க மாமா” என்று அழுகையினூடே கூற நாதனுக்கோ ஒன்றும் புரியவில்லை.
‘என்னம்மா சொல்ற…? ஏன் இவனுக்கு என்ன நல்லாத்தானே இருக்கான்‘ என்று பிரகாசத்தை அளவிட்டவாறே கேட்க..,
“அது வந்து மாமா.., நேத்து நேத்து..” என்றவருக்கு மீண்டும் அழுகை பொங்கி கொண்டு வர.., கட்டுபடுத்த முடியாத பெரும் கேவல்களுக்கு இடையே “இவர் நடுராத்திரி தூக்கு மாட்டிக்க இருந்தாரு” எனவுமே நாதனின் உடலில் சட்டென மெல்லிய நடுக்கம் பரவிட இறுகிய முகத்தோடு தீபிகாவை பார்த்தார்.
“நல்லவேளை நான் தண்ணி குடிக்க எழவும் பார்த்து தடுத்துட்டேன, அப்பவும், நான் எல்லாம் வாழவே தகுதி இல்லாதவன் என் பெண்ணை இனியும் இப்படி என்னால பார்க்க முடியாது.., அதுக்கு நான் ஒரேயடியா போய் சேர்ந்துடுறேன்னு புலம்பினவரு என்னை பிடிச்சு தள்ளிட்டு மறுபடியும் முயற்சி பண்ணவும்.., நான் தான் அவரை சமாதானபடுத்தி உங்ககிட்ட பேசினா தீர்வு கிடைக்கும்னு கூட்டிட்டு வந்தேன்”
“என்னம்மா சொல்ற அப்படி என்ன கஷ்டம் உங்களுக்கு.., எதுக்கு தற்கொலைக்கு முயற்சி பண்ணனும்” என்றவரிடம் அத்தனை பதற்றம் அதை கண்ட பிரகாசத்தின் சிரம் தானாக தழைந்துபூமியை பார்த்தது.
‘அது வந்து மாமா..’ என்று கண்ணீரை துடைத்தவர் குரலை செருமி..,
“எந்த அப்பாவும் செய்யாத, செய்ய முடியாத, செய்யவே கூடாத காரியத்தை செஞ்சிட்டு வந்து இந்த ரெண்டு வாரமா அவர் பட்ட வேதனையோட உச்சம் இப்போ இந்த நிலையில அவரை கொண்டு வந்து நிறுத்தியிருக்கு”
‘அப்படி என்ன பண்ணான்‘ என்றதும் தீபிகாவிடம் கனத்த மௌனம்! பிரகாசமோநாதனின் முகத்தை பார்க்கவும் கூசியவறாக ஒடுங்கி நாற்காலியின் விளிம்பில் அமர்ந்தார் அதை கண்ட நாதன் ‘சொல்லுங்க‘ என்று சீறிட…
“மாமா அது வந்து கீர்த்தி… கீர்த்தியை அவளோட காதலன் வீட்டுல விட்டுட்டு வந்துட்டார்” என்று அவசரமாக கூறி முடிக்கநாதனுக்கு அவர் வாக்கியத்தின் சாராம்சம் சரியாக பிடிபடாது போக, “எது.., அப்படின்னா… புரியலை, விளக்கமா சொல்லு”
மாமா ரெண்டு வாரத்துக்கு முந்தி நான் பண்ணின பாவத்துக்கு நானே பிராயச்சித்தம் தேடப்போறேன்னு என்னையும் கீர்த்தியையும் கூட்டிட்டு சென்னை போனார் அங்க.., அங்க.. என்றவர் அவர்களுக்கான காபியோடு வந்த வளர்மதியை தயக்கத்தோடு பார்த்தவாறே, “அங்க சரணோட வீட்டுல கீர்த்தியை விட்டுட்டு வந்துட்டார்..” என்று கூறவுமே நாதனின் முகம் அருவெறுப்பில் சுருங்கி விரிந்திட சிவந்த விழிகளால் பிரகாசத்தை எரித்தார்.
அதை கண்ட தீபிகா மேலும் பேச முடியாது நாதனையும் பிரகாசத்தையும் மாறி மாறி பார்த்திருந்தவர் ‘அப்புறமென்ன சொல்லு‘ என்று இடிமுழக்கமென கேட்ட நாதனின் குரலில் திடுக்கிட்டு எச்சிலை கூட்டி விழுங்கியவாறு .., “நான் எவ்ளோ சொல்லியும் அவர் கேட்கலைஎதுக்கு என் பெண்ணை இப்படி கொண்டு வந்து விடுறீங்க இது தப்பு.., முறையா கல்யாணம் பண்ணி அனுப்பாம.., ஏன் என் பெண்ணை அசிங்க படுத்துறீங்கன்னு நான் எவ்வளவோ கெஞ்சி வற்புறுத்தி கேட்டும் சொல்ல மறுத்துட்டாறு அப்புறம் நான் கால்ல விழுந்து கெஞ்சி கேட்ட அப்புறம் சொன்னார் மாமா..,
‘என்ன சொன்னான் ??’
“இதை விட எனக்கு வேற வழி இல்லை என் பொண்ணு ஆசையை இப்பவாவது நிறைவேத்துறேன்.., எனக்கு அவ எங்க இருந்தாலும் நல்லா இருக்கனும்னு அதையே திரும்ப திரும்ப சொல்லி அழறாரே தவிரஏன்.., எதுக்காக.., என்ன கட்டாயத்தில் விட்டாருன்னு எதுவும் சொல்ல மாட்டேன்னுட்டார்..”
“இன்னுமா நீ உயிரோட இருக்க..?” என்ற நாதனின் அனல் பார்வையை எதிர்கொள்ள முடியாத பிரகாசம் சட்டென கீழே அமர முற்படவும் அவர் சட்டையை பிடித்து தன்முன் நிறுத்திய நாதன் அவர் கன்னத்தில் பொளீரென அறைந்தவர் அதே ஆக்ரோஷத்தோடு தீபிகாவிடம், “இவனை எதுக்கு காப்பாத்தின பெத்த பொண்ணோட வாழ்கையை சந்தி சிரிக்க வச்சவன் அப்படியே போகட்டும்னு விட வேண்டியதுதானே..!!” என்றவரின் முகத்தில் அத்தனை ரௌத்திரம்!விட்டால் பிரகாசத்தை அங்கேயே கொன்று கூறு போட்டுவிடும் வேகம்.
“அது தான் இல்லை மாமா.., அவர் ஒன்னும் சந்தோஷமா முழுமனசோட விட்டுட்டு வரலைகீர்த்தியை அங்கவிட்டுட்டு வந்ததுல இருந்தே அவர் ஒரு நிலையில இல்லை பித்து பிடிச்ச மாதிரி ராத்திரி பகலா ஏதேதோ புலம்பிட்டே இருந்தார்..பூஜை ரூம்ல போய் அடைஞ்சிக்கிட்டுசாப்பிடாம தூங்காம எந்நேரமும் அழுது புலம்பிட்டே இருந்தவர் ஒரு கட்டத்துல மயங்கி விழவும்அவரை ஹாஸ்பத்திரில சேர்த்திருந்தேன்..,
குணமாகி வீட்டுக்கு வந்தும் ஒரே அனத்தல் “இப்போ என் பெண்ணை காப்பாத்த வழியே இல்லாம.., என் பெண்ணை இப்படி ஒரு நிலையில நிறுத்திகையாலாகாதவனா இருக்கிறதை விட நான் போய் சேர்ந்ததுடுறேன்னு… நே..த்து… நேத்து” என்று தேம்பிக்கொண்டே முடிக்கும் முன்னமே மீண்டும் நாதனின் கரம் பிரகாசத்தின் கன்னத்தை பதம் பார்த்திருந்தது.
“ச்சே என்ன ஜென்மம்டா நீயெல்லாம்..!! அசிங்கமா இல்லை இப்படி பெத்த பொண்ணையே ***** கொடுக்க.., அதுவும் பொண்ணு ஆசையாம் விட்டுட்டு வந்தானாம்” என்றவரின் முகமே அவர் எத்தனை அசூசையாக உணர்கிறார் என்பதை பறைசாற்ற அவர் முகம் பார்க்க முடியாமல் பிரகாசம் சிரம் தாழ்த்தினார்.
‘இப்போ தலை குனிஞ்சி என்ன பிரோஜனம்’ என்றவர் ப்ரகாசத்தின் சட்டையை பிடித்து.., “டேய் நீ பண்ணியிருக்க காரியத்தை வெளியில சொன்னாகாறித்துப்ப மாட்டாங்க, கேட்கிறவன் எவனுமே சிரிப்பான்டா ” என்றவரின் குரலில் ஆற்றாமையுடன் கூடிய சீற்றம்..,
பின்னே எந்த தகப்பனுமே செய்ய துணியாத காரியம் அல்லவா..!! இங்கே தன் தம்பியே அத்தகைய காரியத்தை செய்திருக்க இப்போது அவர் மனம் முழுதும் கீர்த்தியை எப்பாடுபட்டாவது மீட்டுவிட வேண்டியே தவித்தது.
“யாரும்மா அவன்..?? ரெண்டு வாரமா நம்ம வீட்டு பெண்ணை வச்சிருக்கவன், எவனா இருந்தாலும் கண்ட துண்டமா வெட்டி போட்டுட்டு என் பெண்ணை நான் கூட்டிட்டு வரேன்.., யாருன்னு சொல்லு”
உடனே கீழே அமர்ந்திருந்த பிரகாசம் , “அப்படி எதுவும் பண்ணிடாதிங்கண்ணா.., அப்படி கூட்டிட்டு வந்தா என் பொண்ணு.. என் பொண்ணு…” என்றவர் மேலும் தொடர முடியாமல், “மாப்பிள்ளையை என் பொண்ணு கழுத்துல தாலிகட்ட சொல்லுங்க போதும்அவங்களை பிரிக்க வேண்டாம்” என்றுமீண்டும் கதற….,
பிரகாசம் பின்னர் கூறிய வாக்கியத்தை அலட்சியபடுத்தியவர் ஏளன குரலில் “என்ன செத்துடுவேன்னு சொன்னாளா…??” என்றிட,
அதற்கு மறுமொழியாக பிரகாசத்தின் தலை ‘இல்லை‘ என்று அசைந்ததை கூட கண்டுகொள்ள முடியாத அளவு சீற்றம் அவரை ஆட்கொண்டிருக்க தொடர்ந்து “பெத்தவங்க மானத்தை வாங்கிட்டு எவன் கூடவோ போய் இருக்கிறவ எல்லாம் இருந்தா என்னசெத்தா என்ன..? ரெண்டும் ஒன்னு தான்.., நான் வரேன் உன் பொண்ணு எப்படி திரும்ப வரமாட்டேன்னு சொல்றான்னு நானும் பார்க்கிறேன்..” என்று கிட்டத்தட்ட சபதம் ஏற்றவர் தீபிகாவிடம்..,
“யாருமா அந்த பொறுக்கி நம்ம வீட்டு பெண்ணை மயக்கி அவன் கிட்ட வரவச்சிருக்கவன், யாருன்னு சொல்லு” என்றிட..,
வளர்மதியும் அனைத்தையும் கேட்டபின் இப்படியும் நடக்குமாஎன்று முதலில் திகைத்தாலும்பெண்ணை பெற்றவராகதீபிகாவின் நிலையை மனதார உணர்ந்து மனம் வருந்தியவர், “தயங்காம சொல்லும்மா, கீர்த்தியை உங்களுக்கு திருப்பி கொடுக்குறது எங்க பொறுப்பு”
“அதான் சொன்னேனே மாமாசரண்” என்று வளரை பார்த்தவாறே மீண்டும் கூற..,
“என்னம்மா இது மொட்டையா சரண்னு சொன்னா எப்படி தெரியும்அவன் யாரு..?? என்ன பண்றான்..?? எந்த ஊரு..?? சொல்லு” என்று கேட்ட நாதனுக்கு கடுகளவு கூட தன் மனைவியின் தம்பியின் பெயரும் சரண் தான் என்பது நினைவில் இல்லை..,
எப்படி இருக்கும்..!! அவர் பார்த்து அவரருகாமையில் வளர்ந்தவன் இது போன்ற இழிசெயலை செய்ததும் அல்லாமல் அதை தன்னிடம் இருந்து மறைக்கும் வகையில் அவன் நடந்து கொள்வான் என்று அவர் கனவிலும் நினைத்ததில்லையே…!! அதனால் சரண் என்று இருமுறை கூறியும் நாதனுக்கு அவன் நினைவு எழவில்லை.
“அது மாமா.., அக்கா.. என்று வளரை ஒருமுறை பார்த்தவர் நாதனிடம், உங்க மச்சான் சரண் தான்” என்று கூற..,
பேரிடியே தலையில் விழுந்த நிலையில் நாதன் என்றால் வளர்மதியின் நிலையை சொல்லவும் வேண்டுமா..??
‘சரண்‘ என்ற ஒற்றை சொல் நாதனை பெருவெள்ளமாய் ஆட்கொண்டுதிணறடிக்க அதிலேயே தத்தளித்து போனவருக்கு அதன்பின் எதையும் கேட்டறிந்து தெளிவு பெறவேண்டிய நிலையை கடந்துவிட்டிருந்தார்.
இப்போதுநாதனின் மொத்த சீற்றமும் பிரகாசத்திடம் இருந்து சரண் மீது நிலைகொள்ள நொடியும் வீணாக்காதவர் அடுத்த நான்காவது மணி நேரத்தில் வளர்மதி, தீபிகா, பிரகாசம் மற்றும் கலைவாணியுடன் சென்னையில் சரண் வீட்டில் இருந்தார்.
அனைத்தையும் அசைபோட்ட நாதனுக்கு பெண்ணை பெற்ற யாராக இருந்தாலும் அன்று தன்னை தேடி வந்த நிலையில்நல்லவனா கெட்டவனா என்ற பாகுபாடு பார்த்து அவரால் செயல்பட்டிருக்க முடியாது, பெண்ணின் வாழ்கையை மட்டும் கருத்தில் கொள்ள முடியும்..!! அவ்வாறே தானும் செயல்பட்டிருக்க அங்கே எந்த இடத்திலும் தான் தவறியதாக அவருக்கு தோன்றவில்லை.
ஆனால் தன்னை குற்றம் சாட்டும் விதமாக அமைந்த எழிலின் வார்த்தைகள் அவரை கூர்வாளாய் அறுக்க இப்போதே தன் மீது எந்ததவறும் இல்லை என்பதை எழிலிடம் நிருபிக்கும் வேகத்தோடுஅவனை தேடி சென்றார்.
வழி நெடுக பொருட்கள் ஆங்காங்கு சிதறி கிடக்க அதனிடையே வெகு ஜாக்கிரதையாக கால்களை வைத்து ஒவ்வொரு அறையாக தேடியவர் இறுதியாக எழில் சமையலறையில் இருக்கும் மேடையை குடைந்து கொண்டிருப்பதை கண்டவர் எவ்வாறு அவனை அழைத்து தன்நிலை விளக்க என்று புரியாமல் நின்றிருந்தார்.
எழிலோ தீவிரமான தேடுதல் வேட்டையில் இருந்தவன் அங்கு சந்தேகிக்கும் வகையில் இருந்த ஒரு அலமாரியை உடைக்க சொல்லி ஆணை பிறப்பிக்கவும்பணியாளர் சுத்தியல் கொண்டு அதை தகர்க்க தொடங்கினார்…,
ஆனால் எழில் மீதே பார்வை செலுத்தி கொண்டிருந்த நாதனின் கருத்தில் இவை எதுவும் பதியவில்லை..,
சுவரை உடைத்து கொண்டிருப்பதால் அனைவரும் சற்று தள்ளி நிற்கஎழிலும் மற்றொருவர் கொண்டு வந்திருந்த கோப்பை சரிபார்த்து அடுத்த ஆணையை பிறப்பிக்க மேலும் மூன்று பேர் அவனை சுற்றிகொண்டனர்.., அவனும் சளைக்காமல் அவர்கள் அளித்த பொருட்களை எவ்வாறு பிரிக்க வேண்டும் என்று கூறியவன், அடுத்தவரிடம் திரும்ப.., அங்கிருந்தநாதனின் கண்கள் எழிலை விட்டு அகல மறுத்தது.
பின்னே இதுநாள் வரை அவர் கண்டிராத அவனின் அவதாரம் அல்லவா இது…!
அதிலும் இத்தனை நாட்கள் அவன் மீது நாதன் கொண்டிருந்த பிம்பங்களுக்கு அப்பாற்பட்டு நிற்கும் இன்றைய அகனெழிலன் புதிதாக மிகவும் புதிதாக அவருக்கு தெரிந்தான்.
அகனெழிலன் தான் மேற்கொள்ளும் பணியில் எத்தனை நேர்மையுடன், நேர்த்தியாக, ஆளுமை, கூர்மை, என அனைத்தும் ஒருங்கே அமைந்திருப்பத்தை கண்டவருக்கு பம்பரமாய் சுழன்று அனைவரையும் கண்காணித்து வேலை வாங்கும் முறை என்று காண்கையில் தன் இளம் வயதுநினைவில் எழ எழிலின் செயலால்பேறுவகையும் பெருமிதமும் அவரிடம் சம விகிதத்தில் போட்டிபோட்டு அவர் மனதை நிறைத்தது.
அதே நிறைவுடன் மெல்லிய புன்னகை நாதனின் இதழ்களில் மலர்ந்த மறுநொடி எழிலின் அணைப்பில் இருந்தார்.
ஆம் சுவரை உடைக்கையில் செங்கல் ஒன்று நான்காக உடைபட்டு அதில் ஒன்று தெறித்து நாதனின் நெற்றியை பதம் பார்ப்பதற்காக அவரை நோக்கி பறந்து வர.., பல நிமிடமாக தன் முதுகை ஏதோ துளைப்பதை உணர்ந்த எழில் திரும்பி பார்க்க அங்கு நாதனின் பார்வை தன் மீது புன்னகையுடன் படிந்திருப்பதை கண்டவன் நம்ப முடியாமல் கண்ணை கசக்கி மீண்டும் பார்க்க அப்போது செங்கலை கவனித்தவன் உடனே அவர் அருகே சென்று அவரை இழுக்க.., அவன் இழுத்த வேகத்தில் தடுமாறிய நாதன் எழில் மீது விழ அவனும் அவரை அணைத்தவாறு சமையலறையை கடந்து வெளியில் வந்தான்.
அதிர்ச்சியில் இருந்து மீளாத நாதனிடம், “எதுக்கு இங்க வந்திங்க..?? போய் ஹால்ல உட்காருங்க எல்லாத்தையும் எடுத்துட்டு நாங்க அங்க தான் வருவோம்…, என்னென்ன பொருட்களை மதிப்பிடுறோம் ஆவணங்களோட விவரம் எல்லாம் அப்போ உங்களுக்கே தெரியவரும் .., இடையில வந்து எங்களை டிஸ்டர்ப் பண்ணாதிங்க” என்று கடிய..,
நாதனுக்கு அவன் கூறிய எதுவும் மூளையை சென்று சேரவில்லை.., அது வந்து.. என்று ஆரம்பிக்கவுமே..,
மற்றொரு பணியாளர் “சார் ஒருநிமிஷம்..” என்று எழிலை அழைக்க எழிலும் உடனே அவருடன் சென்றான்.
தன்னை புறக்கணித்து செல்லும் எழிலை கண்டு திகைத்த நாதன் உடனே அவன் பின்னே சென்றார்.. ஆனால் எழிலோ ஒரு இடத்தில் தேங்கி நிற்காமல் நிமிடத்திற்கு ஒரு இடம் என்று மாறி மாறி புயல் வேகத்தில் செயல்பட.., அவனை பிடிக்க முடியாமல் நாதன் தான் திணறி போனார்…, இருப்பினும் முடிந்தவரைநிழலாக அவனை பின் தொடர்ந்தவர் தன் முயற்ச்சியை கைவிடாததன் பலனாக பூஜை அறையில் அவனை பிடித்திருந்தார்.
எழிலோ அவர் வரவை அறியாதவனாக தன் வேலையில் அமிழ்ந்திருந்தவன் அபி என்று பின்னே திரும்ப அப்போது அவன் விழிவட்டத்தில் விழிகள் அலைபாய கரங்களை இறுக மூடி திறந்த வண்ணம் படபடக்கும் இதயத்தோடு தன்னையே பார்த்துகொண்டிருந்த நாதன் பட…, நெற்றியை நீவியவன்என்ன என்பதாக அவரை பார்க்க..,
தன் வாழ்நாளில் இதுவரை யாருக்குமே தன்னிலை விளக்கம் அளித்திடாத மனிதருக்கு இப்போது தான் தவறில்லை என்பதை எழிலிடம் நிருபித்துவிடும்வேகம் பிறந்து விட்டாலும் அவனை எவ்வாறு அணுகுவது என்ற தயக்கத்தோடு மெளனமாகஎழிலை பார்த்தவாறே நின்றிருந்தார்.
பின்னே எப்போதும் தனக்கும் மகளுக்குமான இடைசொருகலாகவே அவனை பார்ப்பவர்.., என்றுமே மகளுக்கு தான் மட்டுமே முதன்மையாக இருக்க வேண்டும் என்ற கண்மூடித்தனமான எண்ணம் கொண்டிருப்பவருக்கு, தன்னைவிட மகளின் மனதை அதிகம் ஆக்கிரமித்திருப்பவனை கண்டாலே எப்போதும் கோபமும் எரிச்சலும் தான்.
மகளுக்கும் தனக்கும் இடையில் வந்தவன் என்பதை தவிர நாதனுக்கு எழில் மீது பெரிதாக எந்த வெறுப்பும் மனவருத்தமும் கிடையாது.., இது கூட அலர்விழி நாதனிடம் சில மாதங்கள் பேசாமல் போனதால் ஏற்பட்டதுஆனால்நாட்கள் கடக்க அதுவே நிரந்தரமாகி போனது.
எழில் அவரை பார்க்கவும், “நான்.. என்று குரலை செருமியவர் அதுவந்து.. நா.. நான் யாரையும் நெருங்கலை அவனாத்தான் என்னை தேடிவந்தான்”
நாதனை அழுத்தமாக பார்த்திருந்தவன் கையில் இருந்த பொருளை பணியாளரிடம் கொடுத்து இருகரங்களையும் தட்டியவாறே, “ஒஹ் அப்போ மத்தவங்க தேடி வந்தா நீங்க பண்ணினது தப்பு இல்லைன்னு ஆகிடுமா..?? இப்போ இந்த விளக்கம் கொடுக்குறதால நடந்துட்டு இருக்க சர்ச்நின்னுடபோகுதா ! இல்லை ஒருத்தனை வார்த்தையால கொதறி எடுத்தீங்களே அந்த காயம் தான் ஆறிட போகுதா..?” என்று நிறுத்தி நிதானமாக ஒவ்வொரு வார்த்தையையும் ஈட்டியின் கூர்மையுடன் செலுத்தியிருக்க, அது அவர் மனதை சரியாக சென்று தைக்கவும் நாதன் அரண்டு போனார்.
பின்னே அன்று சரண் வீட்டில் இருந்து வந்தபோது கீர்த்தியும் பிரகாசமும் தன்னை ஏமாற்றியதை எண்ணி சினம் கொண்டிருந்தவர் ஒரு நொடிகூட அதன் விளைவாக அவர் வளர்மதியிடமும் சரணிடமும் எத்தனை கடுமையாக நடந்து கொண்டார் என்பதை எண்ணி பார்க்க மறந்துதான் போனார்.
இப்போது எழில் அதை நினைவூட்டவும் தன் தவறு புரிபட ஒருவித வெறுமையுடன் பார்க்க,
“உங்களோட வயசுக்கும் அனுபவத்துக்கும் இதையெல்லாம் நான் ஞாபகப்படுத்த வேண்டி இருக்கு…, அப்படி என்ன கண்மூடித்தனமான பாசமோ” என்று அடக்கப்பட்டசீற்றத்துடன் கேட்டவனை பதிலின்றி பார்த்தார் நாதன்.