அம்மாகிட்ட குழந்தை தத்தெடுத்து கொடுக்குறேன்னு சொல்லிட்டு வந்துட்டேன் என்று அலர் கூறவும், “ஏய் அறிவுகெட்டவளே எதுக்கு அப்படி சொன்ன..?? அன்னைக்கு இதையே அண்ணன் சொன்னதுக்கு அவரை என்ன பேச்சு பேசின இப்போ எதுக்குடிஇப்படி சொல்லிட்டு வந்திருக்கபைத்தியமா பிடிச்சிருக்கு உனக்கு..?”
சிலநொடிகள் மௌனம் காத்த அலர், ‘ஆமாடி பைத்தியம் தான் பிடிச்சிருக்கு இப்போ அதுக்கென்ன..?‘
தோழியை விசித்திரமாக பார்த்த தாமரை அவள் பதிலின் பொருள் உணர்ந்த மறுநொடி, “இதோ பாரு அப்படியே ஓங்கி ஒன்னு விட்டேன்னாஉன்னை பிடிச்சிருக்க எழில் பைத்தியம் தெளிஞ்சிரும்” என்று அவளை நோக்கி கை ஓங்கியவள் தோழியின் வேதனை சுமந்த விழிகளின் மருண்ட பார்வையில் ஒரு நொடி நிதானிக்க மறுகணமே மெல்லிய விசும்பலுடன் அலர் அவளைஅணைத்து கொண்டாள்.
தாமரைக்குமே அவளின் அல்லாட்டத்தை கண்டு மனம் வெதும்பிட அங்கே அலரின் விழிநீர் ஆடையை தாண்டி தாமரையை சுட்டது.
அவள் கண்ணீர் தன்னைசுட அங்கு தாமரையின் முகத்திலும் வலியின் சாயல் மிகுந்து அவள் விழிகளிலும் நீர் தேங்கி நின்றது.
மெல்ல தன்னிடம் இருந்து அலரை பிரித்து நிறுத்தியவள், “போதும்டிநீ இதுவரை பட்டது, இன்னும் எவ்ளோ நாளைக்கு இப்படி கஷ்டபடுவ?அதுதான் இத்தனை வருஷம் ஓடிடுச்சே எந்த பிரச்சனையா இருந்தாலும் எல்லாத்துக்கும் உடனே தீர்வு காணாம ஓயமாட்ட ஆனா இதுல ஏன் இப்படி டிலே பண்றே, நீ தாமதிக்கிற ஒவ்வொரு நிமிஷமும் உனக்கு தான் கஷ்டம் அலர் புரிஞ்சிக்கோ”
“எவ்ளோ கஷ்டம் வந்தாலும் பரவால்ல ஆனா என்னால முடியாது” எனவும் தாமரையின் ஆற்றாமை கோபமாக உருமாற்றம் அடைந்தது.
“இதுக்கு தான் நான் தலைபாடா அடிச்சிகிட்டேன் எங்க என் பேச்சை கேட்ட..?? என்னை விடு மத்தவங்க எல்லாம் சொன்னாங்களே அவங்களுக்காவது மதிப்பு கொடுத்தியா” என்று குரல் உயர்த்தியவள் “அப்படி என்னடி பயம்” என்று முறைக்க..,
“நீ என்ன சொன்னாலும் சரி எனக்கு மாமா ரொம்ப முக்கியம்..!!” என்ற அலரின் குரலில் அத்தனை உறுதி தென்பட்டது.
“ஆமா ஆமா உன் நோமா ரொம்பவேதான்முக்கியம்… ஏன்டி லூசுநீ தத்தெடுப்பென்னு ஈசியா சொல்லிட்டு வந்துட்டியே இதை மட்டும்உங்கம்மா உங்கப்பாகிட்ட சொன்னா என்ன ஆகும்னு யோசிச்சியா..??”
தாமரை கூறியதை கேட்டதும் திக்கென்றானது அலர்விழிக்கு..!!
பின்னே அந்நேரத்திற்கு அன்னையை சமாளிக்க வேண்டி அவ்வாறு கூறியவளுக்கு இது நாதனின் செவிகளை எட்டினால் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக புரிபட, இதை எப்படி யோசிக்காமல் விட்டோம் என்று எண்ணியவள் அதையே தாமரையிடமும் கூற,
“வேற என்ன..!!! சந்தேகமே வேண்டாம் ருத்ரதாண்டவம் தான் ஆடப்போறார்”
‘என்னடி சொல்ற..??’ என்ற அலருக்கு பதற்றம் அதிகரிக்க அக்குளிரிலும் வியர்க்க தொடங்கியது
“ஏன்டி எது ஒன்னும் பேசுறதுக்கு முன்னாடி யோசிக்கவே மாட்டியா..???” என்று அவளை கடிய,
“இல்லைடி அம்மா இப்படி திடீர்னு பேச்சு எடுப்பாங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை.., அப்போ இருந்த மனநிலையில என்னால எதையும் யோசிக்கவும்முடியலை.., ப்ளீஸ் இப்படி என்னை பயமுறுத்தாம இப்போ என்ன பண்றதுன்னுஎதாவது ஐடியா சொல்லு..”
‘ஏதே நான் ஐடியா கொடுக்கனுமா..??’ என்று வியந்தவள்,
“ஹ்ம்ம் பார்ரா ஊருக்கே அட்வைஸ் பண்ற லாயரம்மாக்கு என்ன பண்றதுன்னு புரியலையாம்நம்ப முடியலையே..!!” என்று புருவம் உயர்த்த..,
“ஹேய் நிஜமாவே எனக்கு இப்போ என்ன பண்றதுன்னு சத்தியமா புரியலைடி.., அது மட்டுமில்லை அம்மா டாக்டர்கிட்ட போகலாம்னு சொல்றாங்க, இதோட நிறுத்துவாங்கன்னு எனக்கு தோணலை அதான் உன்னை கேட்கிறேன்” என்று அவள் முகம் பார்க்க..,
‘ஹாஸ்பிட்டலுக்கு தானே..!! கூப்ட்டாங்கன்னா போ‘ என்று அவள் விட்டேர்த்தியாக கூற..,
‘ஏய் அவங்க எங்க ரெண்டு பேரையும் கூப்பிடுறாங்கடி‘ என்ற அலரின் கருமணிகள் அலைபாய்ந்தது.
அதை கேட்டவளின் ஆதாரங்கள் புன்னகையில் விரிய, ‘அதுதானே முறை!அத்தை சரியாதான் சொல்லி இருக்காங்க நீ என்ன நினைச்சஹாஸ்பிட்டல் போகாம கோவிலுக்கு போய் மரத்தை சுத்தினா குழந்தை பிறந்திடும்ன்னா…? என்று எள்ளலாக வினவியவளுக்கு நன்கு தெரியும் அவர்கள் மரத்தையும் சுற்ற தேவை இல்லை மருத்துவரையும் நாட வேண்டியது இல்லை என்று..!!
“இதோ பாரு அலர் பெரியவங்க சொன்னா இனிமேலாவது உடனே மதிக்க கத்துக்கோ.., லேட் பண்ணாம போயிட்டு வாங்கமை பெஸ்ட் விஷஸ்” என்று அலரை அணைத்து கொள்ள.,
‘விடுடி‘ என்று அவளிடமிருந்து விடுபட்டு கொண்டே, ‘ஹேய் தாமரை விளையாடாத, கோவிலுக்கும் ஹாஸ்பிட்டலுக்கும்போய்நாங்கஎன்ன பண்றதாம்‘ என்ற அலரின் குரலில் அத்தனை சலிப்பு.
“அது ஒன்னுமில்லைடி கோவிலையும் ஹாஸ்பிட்டலயும்கூட்டி பெருக்க ஆள் கிடைக்கலன்னு சொன்னாங்க அதான் புருஷனும் பொண்டாட்டியும் போயி குப்பை அள்ளி கொட்டிட்டு வாங்க ” என்று ஆற்றாமையில் வெடித்துதாமரை முகம் திருப்ப.
இதை கண்ட அலர்விழிக்கு தோழியின் கோபத்தில் இருக்கும் நியாயம் புரிந்தாலும் இன்னும் எத்தனை காலத்துக்கு தான் அதை அலரும் தாங்க?
கலங்கிய கண்களுடன், “என்னடி இப்படி பேசுற..?? நான் பண்ணினது தப்பு தான்இல்லைன்னு சொல்லலை ஆனா இப்படி ஆகும்னு நான் யோசிக்கலையே..!!
“யோசிக்க அங்க மூளைன்னு ஒன்னு இருந்தாதானே எரும நீ யோசிச்சிருப்ப? அதான் நீலா பெரிம்மா, பாட்டி, அத்தை எல்லாரும் சொன்னாங்களே ஒருத்தர் சொன்னதையாவது காதுல வாங்குனியா..?? அன்னைக்கு அவங்க சொன்னதை மதிச்சிருந்தா போதுமே இப்போ இந்த நிலை இல்லை” என்றிட தன் முட்டாள் தனமே தன்னை இந்நிலையில் நிறுத்தியிருக்கிறது என்பதை உணர்ந்தவளும்,
“போதும் தாமரைஇன்னும் எவ்ளோ நாளைக்கு தான் இதையே சொல்லி என்னை குத்தி காட்டுவ…? இப்ப இருக்க ப்ரோப்ளம் சால்வ் பண்ண எதாவது சொல்லுவன்னு பார்த்ததா நீ திரும்ப திரும்ப என்னை குத்தி கிழிக்க தான் பார்க்கிற” என்று விழிகளில் வலியுடன் அவளை பார்க்க..,
அலரின் நிலை கண்டு இளகிட துடித்த மனதை கட்டுபடுத்தியவாறே, ” இதோ பாரு பண்றதை எல்லாம் பண்ணிட்டு இப்போ என்ன பண்ணடும்னு வந்து கேட்டா நான் என்ன பண்ண முடியும்?அப்போ யார் பேச்சையும் மதிக்காம உன் இஷ்டத்துக்கு செய்ததுக்கான பலனை இப்ப அனுபவிக்கிற, இதுல நான் என்ன சொல்லம்னு நீஎதிர்பார்க்கிற…??” என்றாள் தீர்க்கமாக தாமரை.
“ப்ச் இப்படி பேசினா எப்படிடி.., ப்ளீஸ் எனக்கு இது அப்பா வரைக்கும் போககூடாது அதுக்கு என்ன பண்ணலாம் சொல்லுகண்டிப்பா செய்றேன்”
‘அப்படியா..!!’ என்று ஆச்சர்யமாக புருவம் உயர்த்தியவள்
“நான் எது சொன்னாலும் செய்வியா..??” என்று கண்கள் சுருக்கி அழுத்தமாக வினவ.,
“ஹ்ம்ம் செய்றேன்”
‘ஓகே நீ கேட்கிறதால சொல்றேன், இதுக்கு ஒரே வழி தான்‘ என்று இடைவெளி விட்டவள் அவளை ஆழ்ந்து பார்த்தவாறு,
“அடுத்த மாசமே நீ வாமிட் எடு அதுக்கு அடுத்த ஒன்பது மாசத்துல ஒரு பெண்ணை பெத்து உங்கப்பா கையில கொடுத்துடு பிரச்சனை சால்வ் ஆகிடும்” என்று தாமரை கூறி முடிக்கும் முன்னமே,
“முடியாது” என்று பலமாய் தலை அசைத்த அலர்விழி ‘இதை தவிர வேற ஏதாவது சொல்லு‘ என்று வெறுமையான குரலில் கேட்டிருந்தாள்.
இதில் தாமரையின் பொறுமை முற்றிலும் கரைந்து போக.., “ஏய் பைத்தியக்காரி என்ன முடியாது?ஏன் முடியாது.., எல்லாமே முடியும்..!! நான் அப்போ சொன்னது தான் எனக்கு அவனைவிட உன் மேல தான் கோவம் அதிகமாகுது.., இதோ பாரு கடைசியா கேட்கிறேன் நீ பேசுறியா இல்லை நான் பேசட்டா ” என்று கேட்டவாறே தன் கைபேசியை எடுக்க..,
அதை பிடுங்கிய அலர், “என்னால பேச முடியாது..! நீ மட்டுமில்லை வேற யாரும் மாமாகிட்ட பேச கூடாது” என்று கட்டளை இட…,
“ஏய் யாருமே பேசாம ஒரு பிரச்சனை எப்படிடி தீரும்” என்று சீறியவள்
‘ஒழுங்கா போனை கொடு இல்லை கன்னம் பழுத்திடும்’ என்றவாறே கை ஓங்கியிருந்தாள்.
அப்போதுதான் வீட்டினுள் நுழைந்து கொண்டிருந்த வெற்றி தாமரை அலரை கை ஓங்குவதை கண்டு ஓடி வந்தவன், “ஏய் என்னடி பண்ற?” என்று அவள் கரத்தை தடுத்து பிடித்துக்கொண்டே கேட்க..,
“விடுடா கையை” என்றவள் அலரின் தலையில் ஓங்கி கொட்டு வைத்து, “ஹ்ம்ம் உன் தங்கச்சிக்கு பைத்தியம் பிடிச்சிருக்கு அதை தெளிய வைக்கிறேன்” என்றவளின் பார்வை வெறுப்புடன் தோழியின் மீது ஒரு நொடி படிந்து மீண்டது,
‘என்னடி சொல்ற..??’
“என்னன்னுடா வளர்த்து வச்சிருக்கிங்க இவளை? சொந்த புத்தியும் கிடையாது சொல் புத்தியும் கிடையாது” என்று அவனிடம் எரிந்து விழுந்திருந்தாள்.
வெற்றியோ அவளின் கோபம் எதனால் என்று புரியாமல் “தாமரை என்ன ஆச்சு எதுக்குடிஇப்படி பேசுற, அமுலு என்ன பண்ணா சொல்லு”
“ப்ச் இப்போ நீ எதுக்குடி டென்ஷன் ஆகுற..? நிதானமா பேசுமுதல்ல உட்கார்” என்று மனைவியை நாற்காலியில் அமர வைத்தான்.
“ஹ்ம்ம் உன் தொங்கச்சி குழந்தையை தத்தெடுக்க போறாளாம், போ போய் பேர் வச்சிட்டு சீர் செஞ்சிட்டு வா” என்று இருவரையும் ஒருசேர முறைத்திருந்தாள்.
“என்னடி சொல்ற” என்ற வெற்றியின் குரலில் அப்பட்டமான அதிர்ச்சி!
தாமரை கூறியதை நம்ப இயலாதவன் அதை உறுதி படுத்த வேண்டி தங்கையை பார்க்க அங்கு அவளின் கசங்கிய முகமும் கலங்கிய விழிகளும் தாமரை கூறியதை உறுதி செய்ய, திகைத்து தான் போனான்.
“ஏன்டா அமுலு இத்தனை வருஷம் காத்திருந்துட்டு இப்போ எதுக்கு இப்படி ஒரு முடிவு ?அப்புறம் இத்தனை நாள் நீ காத்துட்டு இருந்ததுக்கான அர்த்தமே இல்லாம போயிடுமே..!!” என்று வேதனையோடு நின்றிருந்த தங்கையை கேட்க, அவளோ பார்வையை இலக்கற்று செலுத்தி கரங்களை ஒன்று சேர்த்து இதழ் மடித்து உணர்வுகளை கட்டுபடுத்த முயன்றாள்.
அவள் படும்பாட்டை கண்ட வெற்றியின் முகமும் வேதனையில் உழல மென்மையாக அவள் தலையை வருடி கொடுத்தவனுக்குமே மனதில் பாரமேற தொடங்கியது.
சில நிமிடங்களுக்கு அங்கு மௌனம் மட்டுமே பாஷையாகி போக அலர் வாயை திறக்க போவதில்லை என்பதை உணர்ந்த தாமரை கணவனுக்கு இன்று நாதன் வீட்டில் நிகழ்ந்ததை விவரிக்க தொடங்கினாள்.
அனைத்தையும் கேட்டவன் மெல்ல அவளிடம்.., “சரி நீ பேச வேண்டாம் நான் வேணும்னா அவன்கிட்ட பேசட்டா… நீங்..”என்றவனை அவசரமாக இடைமறித்த அலர்விழி..,
“இல்லை இல்லைண்ணா..!!ப்ளீஸ் வேண்டாம் எதுவும் பேசாதீங்க.., இதுவரை என்னால மாமா பட்டதெல்லாம் போதும் இனிமேலும் அவரை கஷ்டபடுத்த வேண்டாம் அவரே இப்பதான் ஓரளவுக்கு மாறி இருக்காரு, நாம பேசி திரும்ப எதையும் நியாபக படுத்த வேண்டாம் அப்படி மட்டும் நாம பேசி ஏதாவதுநடந்தா அதுக்கப்புறம்…” என்றவளின் குரல் கமரிட கண்களை இறுக மூடித் திறந்தவள்
“ப்ளீஸ் வேண்டாம்ண்ணா விட்டுடுங்க …” என்றாள்.
“வேண்டாம்னா எப்படிடா..?? சித்தி சொன்னதும் சரிதானே ஊருக்காகஇல்லாட்டியும் அவிரனுக்காக கொஞ்சம் யோசிஎவ்ளோ நாள் தள்ளிபோடறது”
“அதேதான் நானும் சொல்றேன்..!! நாமஎதாவது கேட்டா கண்ணாடி பாத்திரம் களிமண்ணு பாத்திரம்னு தத்துவம் பேசுறா மண்ணாங்கட்டி என்று நொடித்தவள் தொடர்ந்து.., அவிரன் மேல கொஞ்சமாவது அக்கறை இருக்கா இவங்களுக்கு..???” என்று அவள் தோழியை சாட..,
இதுநேரம் வரை தோழியின் வசைகளை எல்லாம் அமைதியாக கேட்டு கொண்டிருந்த அலருக்கு குழந்தை மீது அக்கறை இல்லை என்று கூறவும் அவள் பொறுமை காற்றில் பறந்தது.
“அது மட்டுமில்லை அங்க இருக்கும் போதுகூடஒருநாளும் நாங்க அவனை தனியா பீல் பண்ண விட்டது இல்லை.., தினமும் மாமா அப்புவை பார்க், ப்ளே ஏரியான்னு கூட்டிட்டு போயிடுவாரு அது தெரியுமா உனக்கு ? அங்க இருக்கும்போதுபெரும்பாலும் அவனுக்கு பெருசா தனியா இருக்கிறது அபெக்ட் ஆனது இல்லை… பட்சுபிகிட்ட பேசும் போதுதான் அவனை கண்ட்ரோல் பண்றது கஷ்டமா இருக்கும்.. இங்க வந்துட்டா அந்த பிரச்சனையே இருக்காதுன்னு தான் இங்க வந்துட்டோம்” என்று கூற..,
இதை கேட்ட தாமரையோ “ஏய் என் பொறுமையை சோதிக்காதடி நான் என்ன பேசுறேன், நீ என்ன பேசுற..?” என்றவளுக்கு இவர்களிடம் இதுகாறும் போராடியதில் களைப்பு மிக ஆழ்ந்த மூச்சை வெளியிட்டவாறே அமைதியாக நாற்காலியில் அமர்ந்துவிட்டாள்.
இதைகண்ட வெற்றி “எதுக்குடி இப்படி டென்ஷன் ஆகுறபொறுமையா இரு.., நீ கத்தினா எல்லாம் மாறிடுமா.. ?? பெத்தவங்களுக்கு குழந்தை மேல இல்லாத அக்கறை உனக்கு இருந்திட போகுதா?இதுவும் கடந்து போகும்எல்லாமே நிச்சயம் மாறும் ஆனா அவங்களுக்கு டைம் கொடு”
அதற்குள் அவளுக்கான தண்ணீருடன் அலர்விழி வர அவளிடம் இருந்து பெற்றுக்கொண்ட வெற்றி தாமரைக்கு புகட்டியவாறே.., “இதோ பாரு தாமரை எல்லாரும் உன்னை மாதிரியே தைரியசாலியா இருக்க மாட்டாங்க அதுலயும் என் தங்கச்சி ரொம்ப பயந்த சுபாவம் சொல்லப்போனா இன்னமுமே அவ குழந்தை மாதிரிடி” என்று கூறவும் தாமரைக்கு குடித்து கொண்டிருந்த நீர் புரைக்கேறியது.
“பார்த்துடி” என்று அலர் அவள் தலையை தட்டி நெஞ்சை நீவி விடவும் அவள் கரத்தை தட்டி விட்டவள் “நீ குழந்தையா?? ஏன்டி இப்படி தான் ஊருக்குள்ள எல்லாரையும் ஏமாத்திட்டு இருக்கியா..??” என்று முறைத்தவள் வெற்றியின் புறம் திரும்பி புருவம் உயர்த்தியவள்,
“ஒஹ் அப்படிங்களா சார்..!! உங்க தங்கச்சி ஒரு குழந்தையா..?? இது எனக்கு தெரியாதே..! நீங்க ஏன் உங்க குழந்தை தங்கச்சியை தொட்டில்ல போட்டு ஆட்ட கூடாது?எப்படியும் இந்த ஜென்மத்துல அவ பொண்ணு பெத்து கொடுக்க போறது இல்லை” என்றவளை இடைமறித்த அலர்,
“ஏய் எருமை நான் எப்போடி அப்படி சொன்னேன்ஒன்னு இல்லை உன் பசங்களுக்கு ரெண்டு பொண்ணுங்களைகூட பெத்து கொடுக்க நான் ரெடி தான்” என்று கூறவும்..,
‘அப்படியா..??’ என்று புருவம் உயர்த்தி அவளை கூர்மையாக பார்த்தவள், “இதை நான் எப்படி நம்புறது..!! உன் வார்த்தையை எல்லாம் தண்ணி மேல தான்டிஎழுதணும்” என்றாள்.
‘ஹே, நான் நிஜமா தான்டி சொல்றேன் வேணும்னா சத்தியம் பண்ணி கொடுக்கட்டா..??’ என்று தாமரையின் கரத்தை கையில் ஏந்த,
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம், இப்போ நான் போன் பண்ணி அண்ணனை இங்க வர சொல்றேன் இதையே நீ எங்க எதிரல்ல அவன்கிட்ட சொல்லு அப்போ நாங்க நம்புறோம்” என்ற கூறிய தாமரையின் பேச்சு, ‘நீதானே ஆரம்பிச்சு வச்ச அப்போ நீ தான் முடிச்சு வைக்கணும்‘ என்பதாக அமைந்திட..,
இதை எதிர்பாராத அலரின் முகத்தில் உணர்வுகள் முற்றிலுமாக துடைக்கபட்டிருக்க கசந்த குரலில் “முடியாது” என்று அழுத்தமாக கூறினாள்.