தான் கேட்ட செய்தியை கிரகிக்க முடியவில்லை என்பதை விட அஸ்வினால் நம்ப முடியவில்லை. ரிப்போர்ட்டை மீண்டும் சரி பார்க்க வலியுறுத்தினான். அவனை இன்னாரென அவன் பூர்த்தி செய்திருந்த படிவத்தில் அறிந்துகொண்டவர் அஸ்வின் மனநிலையை அறியாமல் இல்லை.
“உண்மைய கிரகிக்க முயற்சி பண்ணுங்க அஸ்வின். இங்க பேசிக் டெஸ்ட் தான் எடுத்துருக்கோம், நீங்கனு தான் எல்லா டெஸ்டும் இவ்ளோ வேகத்துல எடுத்தது. டிரீட்மென்ட்க்கு வேற ஹாஸ்பிடல் போகிறது தான் நல்லது. யோசிங்க”
அந்த மனிதர் பேசி சென்றது எதுவும் அவன் செய்வகளை அடையவில்லை. உலகமே இரண்டு மொத்த அண்டத்தின் பாரமும் தன்னுடைய மார்பினில் ஏறியது போல் அத்தனை கணம். கால்கள் வலுவிழந்து சுவற்றில் சாய்ந்தவன் செய்வதறியாது நெற்கதியில் நின்றான்.
விலையில்லா ஆசையில் ஆவலாய் அவளோடு ஒரு வாழ்க்கையை துவங்க கங்கணம் கட்டியவனுக்கு இறைவன் கொடுத்த இந்த சாபம் எந்த வகையில் ஏற்புடையதாக இருக்குமென அவன் நினைத்தானோ, கையில் கொடுத்த அழகிய பூ மாலையை மலர்கள் உதிர பறித்துவிட்டான்.
நினைத்து பார்க்கையிலே விதியின் மீது அதீத கோவம். தனிமை தலைத்தட்டும் நேரமெல்லாம் தலை வருடி நானிருக்கிறேனென வருடி செல்லும் காற்று கூட இன்று வெப்பத்தை உமிழ்ந்து அவனோடு பகைமை பாராட்டுகிறது.
மனைவி இருந்த அறையில் பல நடமாட்டங்கள் நடந்தது. மொத்தமாய் கருப்பாகி ஏதோ ஒரு புள்ளியாய் சிரித்த முகத்தோடு மனைவி தூரத்தில் நிற்பது போல் தவிப்பு அஸ்வினுள். அடுத்து என்ன செய்வதென கூட புரியாமல் தடுமாறிய நேரம் அஸ்வின் அன்னை அஸ்வினுக்கு அழைப்பு விடுத்தார்.
இயந்திர கதியில் கைபேசியை எடுத்து காதில் வைத்தவனுக்கு புத்துணர்ச்சியாக அன்னை குரல் ஒலித்தது.
“என்ன அஸ்வின் பார்ட்டி எல்லாம் எப்படி போச்சு, என் மருமகளை எல்லாருக்கும் புடிச்சிருக்குமே. அவ பேசலாம் தேவையில்லைடா அஸ்வின். கொஞ்சமா சிரிச்சாளே போதும்”
“ம்மா” மகன் குரலின் வெறுமை மருமகளின் பெருமை பேசிய அன்னைக்கு கேட்கவில்லை.
“அவளை பாக்குற எல்லாரும் இதே தான் சொல்றாங்க. எங்க என் மருமக?”
“ம்மா” இந்த முறை அவன் குரலின் பேதம் புரிந்தவர் மனம் படபடத்தது. கணத்த தொண்டையை வைத்து வார்த்தைகள் உருவாக்குவது அத்தனை சிரமமாய் இருந்தது அவனுக்கு.
“சித்தார்த் எங்க ம்மா?”
மகனின் குரல் மாறுபாடு அன்னையாய் அவருக்கு கண்ணீரை வரவழைத்தது, “அஸ்வின் என்னாச்சு ப்பா?” படபடப்பில் கைகள் நடுங்கினாலும் அலுவலகம் சென்ற இளைய மகனை இணைப்பில் இழுக்க தட்டியது விரல்கள்.
பேசவேயில்லை பெரியவன், சித்தார்த் இணைப்பில் வந்ததும் “நீயும் லைன்ல தான் இருக்கியா? வாழ்த்துக்கள் உடன்பிறப்பே வைஸ் கேப்டன் டு கேப்டன் ஆனதுக்கு”
காலையிலிருந்து அஸ்வினுக்கு வாழ்த்து செய்திகள் வந்த வண்ணமிருக்க அதனை மனைவியோடு பகிர சென்றவனுக்கு தான் அவள் பதில் அதிர்ச்சி கொடுத்தாயிற்றே.
அவன் குரல் கேட்கவும் தான் குரல் வந்தவன் போல, “சித்து மிஷன் ஹாஸ்பிடல் வாடா” தவிப்பாக அழைத்தவன் கைகளிலிருந்து மொத்த சக்த்தியையும் விட்டுக்கொடுத்தது போல் சரிந்து விழுந்தது அந்த கைபேசி.
அதற்கு மேல் குடும்பத்தினரால் அங்கு நிற்க இயலவில்லை, அன்னை தந்தை வரும் முன் அங்கு சகோதரனுக்கு தோள் கொடுக்க வந்து நின்றான். நாற்காலியில் தளர்ந்து முகம் எல்லாம் வியர்க்க, வியர்க்க துளிகளை துடைக்க கூட தோன்றாமல் மொத்தமும் விட்டுப்போன நிலையில் அமர்ந்திருந்த அஸ்வின் நிலை சகோதரனான சித்தரத்தை அடித்து சாய்த்தது.
மண்டியிட்டு அஸ்வின் முகத்தை குனிந்து பார்த்த சித்தார்த் தவிப்பு அண்ணனோடு இந்நேரம் இல்லாத அவன் அண்ணியின் மேல் கோவமாய் மாறியது.
இத்தனை இடிந்து இவனை எந்நாளும் பார்த்ததில்லையே. காலையிலிருந்து அழைத்த அழைப்பில் தூக்கத்தில் கூட பதில் கூறுபவன் இன்று ஏற்காமல் போனதன் காரணம் இப்பொழுது புரிகிறது.
“அஸ்வின்…” சித்தார்த் அழைப்பிற்கு பதில் வரவில்லை. எவன் வரவில் ஆறுதல் கிட்டுமென அஸ்வின் நினைத்தானோ அது நடக்கவில்லை, சூழல் மிகவும் இறுக்கமானது.
அடுத்தது அன்னை, தந்தையின் வரவு வர மனைவியின் அருகாமை தேவைப்பட்டது போல, விசாலமான அவ்விடத்திலே மூச்சுக்கு சிரமமானது.
“அஸ்வின், என்னடா ஆச்சு?” மாற்றி மாற்றி கேள்விகள் வந்த வண்ணம் இருந்தது.
“ரோஹிக்கு ஒன்னுமில்லல அஸ்வின்?” சிறு காய்ச்சலுக்கே அத்தனை கொதித்தவன் இன்று அதை விட பெரிய காய்ச்சல் தான் என குதிப்பானென வீட்டினர் நினைத்திருக்க மாறாக கொஞ்சம் கொஞ்சமாக வெடித்தது அஸ்வின் அழுகை.
இது சரியேயில்லையென உடனே உணர்ந்த ராகவ் உடனே மருத்துவரை தேடி சென்றார். தகவல் கேட்ட அவருக்கே உயிரே போனது போல் நெஞ்சினில் சுருக்கென வலி.
ஆரோஹியை அவரும் ஒரு பெண் குழந்தை போல் அல்லவா பாவித்தார். அதோடு பிள்ளைகள் இருவரின் பிரியமும் அறிந்தவர் எண்ணம் எல்லாம் முதலில் மகனை திடப்படுத்த வேண்டும், பிறகு மருமகளுக்கு தன்னுடைய சொத்துகள் அனைத்தையும் விற்று கூட மருமகளை மகன் கையில் ஒப்படைக்க வேண்டுமென்கிற முடிவோடு வந்து மகனை பார்க்கும் வரை தான் அவர் நம்பிக்கையும் இருந்தது போல்.
அத்தனை பலவீனம் அஸ்வினிடம், இன்னும் இளைய சகோதரனை இறுக்கமாக அணைத்து அழுதுகொண்டிருந்தான்.
என்ன நடக்கிறதென புரியாமல் சித்தார்த், மதிவர்தினி இருவரும் அவன் அழுகையை நிறுத்த பாடுபட்டுக்கொண்டிருந்தனர்.
“இது என்ன அஸ்வின், என்னனு தான் சொல்லேன்டா. பயமா இருக்கு எனக்கு” அன்னை தவிப்போடு சுற்றம் பார்க்க, மகன் விழிகளில் இருந்த அதே வேதனை கணவன் கண்ணிலும் பார்த்தவருக்கு இருந்த கொஞ்ச நம்பிக்கையும் காற்றிலோடியது.
“என்னனு தான் சொல்லுங்களேன்” ஆற்றாமையில் குரல் உயர்த்தி மதி கேட்க சித்தார்த் பார்வையும் அங்கு வந்தது.
“மருமகளுக்கு… ஆரோஹிக்கு கேன்சர் மதி” சித்தார்த்தை அணைத்திருந்த அஸ்வின் அவன் கரத்திலிருந்து உதறி எழுந்து தூரம் சென்றுவிட்டான்.
ஒருமுறை கேட்டது தவறாக இருக்காதா என்கிற தவிப்பில் இருந்தவனுக்கு மீண்டும் அதே செய்தி வேப்பங்காயாக கசந்தது. அதோடு ராகவ் கூறியதை கேட்டு மதி கணவன் மார்பினில் சாய்ந்து கதறி அழுக மேலும் மேலும் அஸ்வின் உள்ளம் நொறுங்கியது.
சித்தார்த் நிலை என்னென்றே கூற முடியாத நிலை. சில மாதங்களே அவளோடு பழகியிருந்தாலும் ஒரு இளைய சகோதரியாய், தோழியாய் அவன் வாழ்க்கையில் அவள் தனித்த இடத்தினை பிடித்துவிட்டாள்.
இன்று திடீரென அவள் ஆயுள் மிகவும் குறைவென கூறுவதை கேட்க முடியவில்லை. பித்து பிடித்தார் போல் ஆளுக்கு ஒரு இடத்தினில் உயிர் தளர்த்தி அமர்ந்திருக்க மூச்சு வாங்கி முகம் எல்லாம் சிவந்து அழுது வந்து சேர்ந்தாள் திவ்யா.
வந்தவள் தோற்றமே அங்கிருந்தவர்களை அரட்டியது. மூச்சு வாங்க சிரமப்பட்டு ஆரோஹி இருந்த அறையினை நெருங்கியவளை மாறனால் கூட பிடித்து நிறுத்த முடியவில்லை.
ஆரோஹியை பார்க்க பிடிவாதம் பிடித்தவளை அங்கிருந்த செவிலிய பெண்களின் கோவம் தான் தூரம் நிறுத்தியது.
அழுது கரைந்துகொண்டிருந்த குடும்பத்தினரிடம் கூட சொல்லாமல் வேகமாக வீட்டை நோக்கி ஓடினான். வீட்டிற்கு வந்தவன் நேராக ஆரோஹி அறைக்கு சென்று அவளது உடமைகளில் இன்னதென்று கூறமுடியாத பொருட்களை தேடினான்.
பொருட்களை தேடி சென்றவனுக்கு அவள் கைப்பட எழுதிய துண்டு கவிதைகள் அலமாரியின் கதவுகளில் அவனுக்காக காத்திருந்தன.
‘பல வருடங்களுக்கு பிறகு மனதினில் தோன்றிய வரிகளை எழுத்துக்களின் வடிவில் உருமாறினாலும் உன்னை சேரும் நாள் தான் என் ஆயுளுக்கு இல்லை போல…’
‘ஆசையின்றி அலைபாய்ந்தவள் வாழ்க்கையில் அழகாய் ஒரு உறவை கொடுத்து அதற்கு பிடித்தம் உருவாக்கி அதனோடு பயணிக்காமல் தடுக்கிறதே இந்த இருண்ட வானம்’
‘வலிகள் மறக்க சிரித்தது போய் வலிகள் மறைக்க சிரிக்கிறேன்’ அஸ்வினுக்கு அவளது ஒவ்வொரு வரியும் ஊசியாய் இதயத்தை குத்தியது.
‘பேராசை தான். உன்னோடு ஒரு வாழ்க்கையை முழுதாய் வாழ்ந்துவிட பேராசை தான்’
‘இரவில் வேதனையும் பகலில் பொலிசிரிப்பும் என் வாழ்க்கை புத்தகத்தில் இன்றியமையா கதாபாத்திரங்கள்!’
கன்னத்தை கண்ணீர் நிறைக்க வேதனை தாளாமல் கதவை அடைக்க போனவன் கண்ணில் நாராயணா என்னும் வார்த்தை தென்பட அப்படியே நின்றான்.
‘நாராயணா எப்படி சொல்றதுன்னு தெரியல… சேர்ந்தா தான் காதலா. இன்ப முடிவே இல்லாத காவியம் அத விட அழகானது’
அந்த துண்டி செய்தியை படித்தவன் அதிலே நெற்றி முட்டி அழுதான், “முடிவே பண்ணிட்டியாடி? எப்படி ஆரூ உன்னால என்ன விட்டு போக முடியும்?”
அவள் இல்லா அவள் அறையில் அவள் வாசனை கூட அவனுக்கு நரக வேதனையை கொடுத்தது. அந்த காகிதத்தை கண்ணில் வைத்தே அழுது கரைந்தான்.
நிமிடங்கள் பல கடந்தும் நிதானம் இல்லாமல் கிடந்தவன் ஆரோஹியின் ரத்தம் படிந்த படுக்கையை பார்த்த பிறகு தீ பட்டது போல் நினைவிருக்கு வந்து மீண்டும் அவள் அலமாரியை துளாவினான்.
நீண்ட நேரம் தேடிய பிறகு அலமாரியின் மேல் அடுக்கில் படுக்கை விருப்புகளுக்கு பின்னே இருந்த அந்த மாத்திரைகளும் மருத்துவ அறிக்கையும் அவன் தேடியது இதுவென அடித்து கூறியது.
அதனை பார்த்தவனுக்கு அதிலிருந்தது ஒன்றும் புரியாவிடினும் அந்த மருத்துவமனையை தேடி சென்றான்.
அந்த மருத்துவரோ அஸ்வினை பார்த்ததும் அதிர்ந்தாலும் ஆரோஹியின் அறிக்கையை எடுத்து வைக்க, “நீங்க?” என இழுத்தார் அந்த மருத்துவர்.
“ஆரோஹி ஹஸ்பண்ட்” தயங்காமல் உரைத்தவன் மனைவி பற்றிய விசாரிப்பில் இறங்கினான்.
“ஆரோஹி உங்ககிட்ட எப்போ வந்தா?”
“சரியா நியாபகம் இல்ல நாலு மாசத்துக்கு முன்னாடி நினைக்கிறன். பீரியட்ஸ் சரியா வரலன்னு வந்தா. அப்டியே வந்தாலும் அப்னார்மலா அந்த நேரத்துல ரொம்ப வலி இருந்துச்சுனு சொன்னாங்க. நார்மலா இருக்குற ப்ராப்லம் மாதிரி தெரியல.
எனக்கு ஒடனே வந்த டவுட் செர்விக்கல் கேன்சர் தான். அதாவது கருப்பை வாய் புற்றுநோய். ஆரோஹி சின்ன வயசு பொண்ணு அவங்களுக்கு இதுக்கு வாய்பில்லனு தான் டெஸ்ட் எடுத்து அனுப்புனேன். பட் ஷாக்கிங்கா ஷி இஸ் எ கேன்சர் பேஷண்ட்.
நாற்பத்தி அஞ்சு வயசு மேல இருக்கவங்களுக்கு தான் இந்த கேன்சர் வர அதிக வாய்பிருக்கு, வெள் அன்பார்ச்சூனேட்லீ ஆரோஹி இஸ் அன் எக்ஸப்ஷன்”
“எப்டி அவளுக்கு? சான்ஸ் ரொம்ப கம்மியே, எங்களுக்கு கல்யாணம் கூட இப்ப தான் ஆகியிருக்கு. ஷி இஸ் ப்யூர் டாக்டர்”
எப்படி நிலையை விளக்குவதென புரியவில்லை அவனுக்கு, வேதனையை வெளியில் காட்டவும் முடியாமல் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தவும் முடியாமல் புரண்டான்.
“அதானே சொல்றேனே சார் 90 சதவீதம் வாய்ப்பு ரொம்ப கம்மி, அந்த பத்து சதவீதத்துல தான் ஆரோஹி மாட்டிகிட்டது. புவர் இம்யூன் சிஸ்டம் ஒரு மேஜர் ரீசன்”
எதனால் வந்தது, எப்படி என பல தகவல்களை அவர் வைத்தும் அவன் சிந்தனை எதையும் கவனிக்க விரும்பவில்லை.
“இதை குணப்படுத்த முடியுமா முடியாதா?”
“தெரியாது சார், அவங்க கேன்சர் எந்த அளவு இப்ப இருக்குனு பாத்தா தான் சொல்ல முடியும்”
“ஆமா கொஞ்சமா தான் ஒடம்புல பரவி இருந்துச்சு. ஆரோஹி கூட பணத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டு வரேன்னு சொல்லிட்டு போனாங்களே…”
சற்று தயங்கியவர், “உங்களுக்கு அந்த நேரம் கல்யாணம் ஆகிருந்ததா?” அவனால் பதில் கூற முடியவில்லை.
அவனது அமைதி அவருக்கு எந்த எண்ணத்தை வைக்கவென தெரியவில்லை, “அவளை கொஞ்சம் வாட்ச் பன்னிருந்தா அவ பிரச்சனை என்னனு கண்டு புடிச்சிருக்கலாமே சார்” அவர் அக்கேள்வி கேட்கவும் உடைந்து போனான் உள்ளுக்குள்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.