கோவை மாவட்டம் கலை வேந்தர் பள்ளி வளாகம் மாலை மணி ஐந்து, பள்ளி முடிந்து எல்லா வகுப்பு மாணவர்களும் வீட்டுக்குச் செல்ல கிளம்பிவிட்டனர். ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் மட்டும் வெளியே வரவில்லை. வகுப்பில் இருக்கும் அனைத்து மாணவர்களும், அவங்க ரித்து மிஸ் சொல்ற கதைய ஆர்வமா கேட்கிறாங்க.
நிலா, ரித்துவோட ஃப்ரெண்ட் மேக்ஸ் டீச்சரா இருக்காங்க, ரெண்டு பேரும் சின்ன வயதிலிருந்து இணைபிரியா தோழிகள். ரித்து டைம் முடிஞ்சது எல்லாரும் கிளம்பிட்டாங்க, சீக்கிரம் ஸ்கூல் பஸ் எடுத்துடுவாங்க. அச்சோ சாரி நிலா டைம் ஆனத கவனிக்கல.
சாரி பசங்களா நாளைக்கு மீதி கதை பார்க்கலாம். எல்லாரும் பத்திரமா போங்க. மிஸ்மிஸ்….கதைய முடிச்சிட்டு போகலாம் மிஸ். இல்லடா குட்டீஸ் டைம் ஆச்சு, பஸ் கிளம்பிடும் நாளைக்கு பார்க்கலாம். கதை சொல்ல ஆரம்பிச்சுட்டா உனக்கு நேரம் போறதே தெரிவதில்லை. சின்ன வயசுல இருந்தே கதை கேட்கிறது ரொம்ப பிடிக்கும்.வளரவளர அந்தப் பழக்கமே கதை சொல்ற பழக்கமா மாறிடுச்சு. ஏன் ரித்து அப்படி என்ன கதை சொல்லிட்டு இருந்த எல்லாரும் அவ்வளவு ஆர்வமா கேட்டுட்டு இருந்தாங்க எனக்கு சொன்னா நானும் கேட்பேன்ல.
உனக்கு தெரியாத கதை எல்லாம் ஒன்னும் இல்ல நாம சின்ன வயசுல என்னென்ன பண்ணணுமோ அதைதான் கதையா சொன்னேன். சரி அது என்ன கதைன்னு நாளைக்கு என்கிட்ட சொல்லு எனக்கு எல்லாம் மறந்துடுச்சு. உனக்கு எது தான் ஞாபகம் இருக்கு உன்னை எப்படி டீச்சரா போட்டாங்கன்னு தெரியல. அதுவும் மேக்ஸ் டீச்சர், நீயே இப்படின்னா உன்கிட்ட படிக்கிற ஸ்டூடண்ட்ஸ் நிலைமையை யோசிச்சு பார்த்தியா.
அம்மா தாயே உன் கிட்ட தெரியாம ஒரு கதை சொல்லுன்னு கேட்டேன். அதுக்கு இவ்வளவு பேசுவேன்னு தெரிஞ்சு இருந்தா உன்கிட்ட நான் கேட்டு இருக்கவே மாட்டேன். ஓகே கோச்சுக்காத நிலா நாளைக்கு சொல்றேன், நீ என்கூட வரேன்னு சொன்னா உன்ன ட்ராப் பண்ணிட்டு நான் என் வீட்டுக்கு போவேன். ஓகே நீ என்ன ட்ராப் பண்ணிடு. ரித்து அம்மா உன்ன கேட்டுட்டே இருக்காங்க எப்ப வீட்டுக்கு வரேன்னு நிலா கேட்கிறா. இப்ப கொஞ்சம் பிஸியா இருக்கேன் உனக்கே தெரியுமில்ல, சச்சு அம்மாகிட்ட போன்ல பேசறன்னு சொல்லு. நிலாவ ட்ராப் பண்ணிட்டு, ரித்து அவ வீட்டுக்கு போறா.
மறுநாள் காலை கோவைஅசிஸ்டன்ட் போலீஸ் கமிஷனர் ஆபீஸ், கான்ஸ்டபிள்ல இருந்து ஹையர் ஆபீஷியல்ஸ் வரைக்கும் எல்லாரும் பரபரப்பா வேலை செய்றாங்க. அங்க ஓரமா போட்டு இருந்த பெஞ்சில் உட்கார்ந்திருந்த கைதி பக்கத்தில் நிற்கிற கான்ஸ்டபிள் கிட்ட என்ன சார் எல்லாரும் வேலை பாக்குறீங்க.
யோவ் என்ன லந்தா, நாங்க வேலை பார்க்காம தான் நீ இங்க உட்கார்ந்து கிட்டு இருக்கியா. சார் இன்னும் எத்தனை பேர் வான்டட் லிஸ்ட்ல இருக்காங்க என்ன ஒருத்தன் மட்டும் கைது பண்ணிட்டு நீங்க வேலை பாக்குறன்னு சொல்றீங்க. ஓவரா பேசாத கான்ஸ்டபிள் கிட்ட பேசிட்டு இருக்குறத ஞாபகம் வைத்து பேசு எதுக்கு என்ன கூப்பிட்ட.
நான் ஞாபகம் வைக்கிறது இருக்கட்டும் மொதல்ல நீங்க ஞாபகம் வச்சிருக்கீங்களா, பேண்ட் போட்டா பத்தாது சார் அது மேல பெல்ட் போடணும். அவசரத்துல மறந்துட்டேன் நல்லவேளை ஞாபகப்படுத்திட்ட, இல்லைனா என்ன ஆகிறது. ஒன்னும் ஆகாது சார் மானம் மட்டும் தான் போகும். கான்ஸ்டபிள் முறைக்கிறார். ஆமா சார் எல்லாரும் ஏன் இன்னைக்கு ரொம்ப பரபரப்பா இருக்கிறீங்க. அதுவா இன்னிக்கு புது ஏசிபி வந்து பதவியேற்கிறார், அவருக்கு எல்லாமே கரெக்டா இருக்கனும். கான்ஸ்டபிளை கூப்பிடுற சத்தம் கேட்டு திரும்பி பார்க்கிறார்.
[the_ad id=”6605″]அங்க அஞ்சரை அடி உயரத்துல கூலிங்கிளாஸ் போட்டு ஒருத்தர் நிக்கிறாரு. கான்ஸ்டபிள் அவர்கிட்ட போயி என்ன வேணும் கேட்கிறார், அவர் பதில் சொல்றதுக்கு முன்னாடி இவரே கம்ப்ளைன்ட் தானே கொடுக்கணும் கம்ப்ளைன்ட் கொடுக்கறதுக்கு கண்ணாடி எதுக்கு கண்ணாடியை கழட்டு. கான்ஸ்டபிளை பார்த்தால் யாருக்கும் ஒரு மட்டு மரியாதை கிடையாதுன்னு புலம்புறார்.
ஹலோ கான்ஸ்டபிள் சார் உங்க பெயர் என்ன. ஏன் என் பெயரை தெரிஞ்சுகிட்டு ப்ரமோஷன் வாங்கி தருவியா. ப்ரமோஷன் எல்லாம் பேருக்கு தருவதில்லை அவங்களோட திறமைக்கு தருவது. ஏன் எங்களை எல்லாம் பார்த்தா திறமையான ஆள் மாறி இல்லையா. ஓ உங்க திறமை தானே அது நல்லா தெரியுது பெல்ட் போடாம பேண்ட் போட்டு இருக்குறதிலேயே உங்க திறமை தெரியுது. ஆமா இவ்வளவு பேசுறீங்களே நீங்க யாரு. என் பெயர் ரிஷி நந்தன். நான் உங்க பேரு கேட்கல நீங்க எதுக்கு இங்க வந்தீங்க கேட்டேன். நான் புதுசா பதவி ஏற்பதற்காக வந்திருக்கிற ஏசிபி அப்படின்னு கோபமா ரிஷி சொல்றான்.
சாரி சார் நீங்க யூனிபார்மில் வந்து இருந்தா எனக்கு தெரிஞ்சிருக்கும், கான்ஸ்டபிள் மருதமுத்து பயந்துட்டே சொல்றார். தேவையில்லாம பேசாதீங்க எனக்கு பிடிக்காது போய் பெல்ட போடுங்க முதல்ல. அச்சோ அந்த கைதி அப்பவே சொன்னான், நாம பேச்சு சுவாரசியத்துல அதை மறந்துவிட்டோம். இப்ப இவர் கிட்ட வந்த உடனேயே திட்டு வாங்குகிறோம். அங்க என்ன சத்தம். ஒன்னும் இல்ல சார்பெல்ட் போட்டுட்டுஇருக்கேன்.
ரிஷி விறுவிறுன்னு நிக்காம நேரா அவன் ரூமுக்கு போறான். ரிஷி நந்தன் இந்த கதையோட நாயகன். சின்ன வயசுல இருந்தே ஐபிஎஸ் ஆகணும் அப்படிங்கறது அவன் கனவு. B.Eசிவில் இன்ஜினியரிங் படித்துக்கொண்டிருக்கும் போதே யுபிஎஸ்சி கோச்சிங் போக ஆரம்பிச்சிட்டான். டிகிரி முடித்து முதல் முயற்சியிலே யுபிஎஸ்சி பாஸ் பண்ணிவிட்டான். முதல் 100நபர்களுக்குள் வந்ததால, தமிழ்நாடு செலக்ட் பண்ண முடிஞ்சது. ட்ரெய்னிங் முடிச்சவுடன் பொள்ளாச்சியில் போஸ்டிங் போட்டுட்டாங்க.
அஞ்சு வருஷமா அவனோட போஸ்டிங் பொள்ளாச்சியில் தானிருந்தது இப்பதான் கோவைக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணிருக்காங்க, அவனுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இன்னும் அவன் கோவைக்கு வந்தது வீட்ல யாருகிட்டயும் சொல்லல சொன்னா எல்லாரும் ரொம்ப சந்தோஷ படுவாங்க. அப்பா கிரிமினல் லாயர் பேரு நந்தகோபால், அம்மா லட்சுமி வீடே உலகம்.
கூடப் பிறந்தது ஒரே அண்ணன் பேரு ஸ்ரீ நந்தன், அவங்களும் லாயர் தான் கல்யாணம் முடிஞ்சு ஐந்து வருஷம் ஆச்சு அண்ணி ஸ்வேதா தடவியல நிபுணரா வேலை செய்றாங்க. ஒரு கேஸ் விசாரணையில் மீட் பண்ணிட்டாங்க அப்ப இருந்து அவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல நல்ல ஃப்ரெண்ட்ஷிப் இருந்தது போகப்போக அது காதலா மாறிடுச்சு. ரெண்டு பேர் வீட்லயும் ஓகே சொல்லி கல்யாணத்தை நல்லா கிராண்டா பண்ணுனாங்க. இப்ப அவங்களுக்கு ரெண்டு வயசுல ஒரு ராக் ஸ்டார் இருக்கான் அவன் பேரு நித்திஷ். ரிஷி ஓட செல்லம்.
கான்ஸ்டபிள் புதிய ஏசிபி வந்ததைப் பற்றி சொன்னவுடனே எல்லாரும் அவருக்கு வாழ்த்து சொல்வதற்காக ரிஷியோட ரூமுக்கு வராங்க. குட் மார்னிங் சார் எல்லாரும் விஷ் பண்றாங்க. ரிஷியும் அவங்களுக்கு திருப்பி விஷ் பண்ணிட்டு, முக்கியமான கேஸ் பைல்ஸ் கொண்டு வரசொல்றான். கார்த்திக் இன்னும் வரலையான்னு கேட்கிறான். இல்ல சார் அவர் வந்துட்டு கேஸ் விஷயமா வெளியே போயிருக்கார். ஓகே அவர் வந்த உடனே எனக்கு போன் பண்ணச் சொல்லுங்க.
ரிஷி வீட்டுக்கு கிளம்பிட்டான். போற வழியில அம்மாக்கு போன் பண்றான்.
ஹலோ ரிஷி கண்ணா என்ன பண்ற சாப்டியா, லட்சுமி மா கேக்குறாங்க.
இன்னும் இல்ல லக்ஸ் பேபி.
[the_ad id=”6605″]டேய் உன்கிட்ட எத்தன தடவ சொல்லியிருக்கேன் லக்ஸ் பேபின்னு கூப்பிடாத. எங்க அப்பா எவ்வளவு அழகா சாமி பேரு வச்சிருக்காரு அதை ஏண்டா இப்படி கூப்பிடுற.
அப்படி கூப்பிட்டா தானே ஜாலியா இருக்கும்.
நேரா நேரத்துக்கு சாப்பிடணும் ரிஷி உடம்பு என்ன ஆகிறது.
இன்னிக்கு எனக்கு ரொம்ப பிடிச்சவங்க கையால் சாப்பிட போறேன் லட்சு பேபி. ரிஷி வீட்டுக்கு வந்துட்டான், ஆனா போன கட் பண்ணாம தொடர்ந்து பேசிட்டு இருக்கான்.
டேய் மகனே, எனக்கு தெரியாம கல்யாணம் பண்ணிட்டியா.
அச்சோ அதெல்லாம் இல்ல மா. அப்படியே கொஞ்சம் திரும்பி பாருங்க.
கண்ணா வரேன்னு சொல்லவே இல்ல, சொல்லி இருந்தா உனக்கு பிடிச்சது செஞ்சு வச்சு இருப்பேன்.
அதெல்லாம் ஒரு பிரச்சனை இல்ல மா இனிமேல் இங்கே தான் இருக்கப் போறேன்.
ரிஷி விளையாடாத உண்மையை சொல்லு.
அம்மா உண்மை தான் இனிமே இங்கதான் தான். எனக்கு கோவைக்கு டிரான்ஸ்ஃபர் கிடைச்சுருச்சுஅப்படின்னு சொல்லிட்டு அம்மாவை ஹக் பண்ணிக்கிறான்.
இப்பதான் கண்ணா ரொம்ப சந்தோஷம்.
என்னமா நீங்க மட்டும் இருக்கீங்க மத்தவங்க எல்லாம் எங்க.
அப்பாவும் அண்ணாவும் கோர்ட்டுக்கு போய்ட்டாங்க, ஸ்வேதா அவளோட ஆபீஸ் போயிட்டா நித்திஷ் குட்டி இன்னும் தூங்கிட்டு இருக்கான்.
மேல ரூமிலிருந்து சத்தம் கேட்குது, நித்தீஷ் எழுந்திட்டான் போல நீ போய் பாரு உன்ன பாத்தா ரொம்ப குஷி ஆயிடுவான்.
ரிஷி தடதடன்னு படியேறி மேல ரூமுக்கு போறான், அங்க நித்திஷ் கண்ண கசக்கிட்டு அழுக ஸ்டார்ட் பண்றான்.
ஹேய் ராக்ஸ்டார்…
ஹய் சூப்பர் ஹீரோ அப்படின்னு சொல்லி ஓடிவந்து ஹக் பண்ணி கிஸ் கொடுக்கிறான். அவனோட கண்ணத்தை காண்பிக்கிறான். ரிஷியும் சிரிச்சிட்டே கிஸ் பண்றான்.
எனக்கு சின்-சான் டாய் வாங்கிட்டு வந்தீங்களா, நான் உங்கள ரொம்ப மிஸ் பண்ணுறேன்.
நானும் உன்ன ரொம்ப மிஸ் பண்ணேன், சின்-சான் உனக்காக கீழ வெயிட் பண்றாங்க. இனி உன் கூட தான் இருக்கப் போறேன்.
ஐ ஜாலி ஜாலி…நாம ரெண்டு பெரும் ஒன்ன சேர்ந்து விளையாடலாம்.
ஓகே ராக்ஸ்டார், பாட்டி கீழ நமக்காக வெயிட் பண்றாங்க சீக்கிரம் பிரஸ் ஆகிட்டு கீழ போலாமா.
ஓ போலாமே….
ரெண்டு ரெண்டு பேரும் அரை மணி நேரம் கழிச்சு குளிச்சு முடிச்சுட்டு பிரஷா கீழவராங்க.
அதுக்குள்ள லட்சுமி ரிஷிக்கு பிடிச்ச பூரி உருளைக்கிழங்கு மசால் செஞ்சு சுடசுட எடுத்துவச்சு இருக்காங்க.
பாட்டிய பார்த்தவுடனே நித்திஷ் லக்ஸ் பேபின்னு கூப்பிடறான்.
அதைக் கேட்டு லட்சுமி டென்ஷனாகி ரிஷிய முறைக்கிறாங்க. டேய் வந்ததும் உன் வேலையை காமிச்சுட்ட…
ஹி ஹி ஹி ஹி… சும்மா லட்சு ஒரு ஜாலிக்கு.
சரி இரண்டு பேரும் உக்காருங்க சாப்பிடலாம்.
பாட்டி நானே சாப்பிடறேன்.
சரிடா பெரிய மனுஷா நீயே சாப்பிடு.
ரிஷி இன்னைக்கு வேலைக்கு போகணுமா…
ஆமாம்மா கோர்ட்டுக்குப் போயிட்டு அப்பாவையும் அண்ணாவையும் பார்த்துட்டு அப்புறம் ஆபீஸ்க்கு போறேன்.
நானும் வரேன் சூப்பர் ஹீரோ.
நிதி குட்டி நீங்க பாட்டியோட செல்லம் தானே பாட்டிய தனியா விட்டுட்டு போறீங்க.
பாட்டி என் பேரு நித்தீஷ், நிதின்னு கூப்பிடாதீங்க அது கேர்ள் பேபிய கூப்பிடற மாதிரி இருக்கு.
சரி சரி கூப்பிடல.
சரிமா நான் அவனைக் கொண்டு போய் கோர்ட்ல அண்ணாகிட்ட விட்டுட்டு அப்புறம் ஆபீஸ் போறேன்.
சரிப்பா பார்த்துப் போ.
ரெண்டு பேரும் ரிஷியோட ஃபேவரைட் ராயல் என்ஃபீல்டுல கிளம்பறாங்க.
கோவை டிஸ்ட்ரிக்ட் கோர்ட், ஸ்ரீ நந்தன் தன்னுடைய கேச வாதாடி முடிச்சுட்டு வக்கீல்களுக்கு என ஒதுக்கப்பட்டிருக்கும் அறைக்குப் போறாங்க. அங்க இவரை பார்ப்பதற்காக கான்ஸ்டபிள் மருதமுத்து வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.
வாங்க மருதமுத்து என்ன இவ்வளவு காலையிலேயே வந்திருக்கீங்க, என்ன விஷயம். கிரிமினல் கேஸ் ஒன்னு இருக்கு சார் அதுக்கு உங்களால ஆஜராக முடியுமான கேக்குறதுக்கு வந்தேன் சார். ஹியரிங் எப்ப வருது.
[the_ad id=”6605″]அதுக்கு இன்னும் ஒரு மாசத்துக்கு மேல டைம் இருக்கு சார். அப்புறம் ஏன் இவ்வளவு அவசரம். புதுசா ஒரு ஏசிபி வராரு சார் அவருக்கு எல்லாமே கரெக்டா இருக்கனும், அதனாலதான் இவ்வளவு அவசரம்.
ஓகே மருதமுத்து கேஸ் பத்தின டீடெயில்ஸ் குடுத்துட்டு போங்க, படிச்சிட்டு உங்களுக்கு சொல்றேன். புதுசா வந்திருக்கிற ஏசிபி யாரு?
அவரு பதில் சொல்ல ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே, அப்பான்னு சத்தம் கேட்குது திரும்பிப் பார்த்தா நித்திஷ் நின்னுட்டு இருக்கான்.
நித்தீஷ் யார் கூட வந்தீங்க செல்லம், பாட்டி கூட்டிட்டு வந்தாங்களா.
“ ரத்தத்தின் ரத்தமே என் இனிய உடன் பிறப்பே
சொந்தத்தின் சொந்தமே நான் இயங்கும் உயிர் துடிப்பே”
பாட்டு பாடிட்டு ரிஷி உள்ளவரான். டேய் ரிஷி என்ன பாட்டு எல்லாம் பலமா இருக்கு எப்ப வந்த, வீட்டுக்கு போயிட்டு வரியா, இன்னைக்கு டியூட்டி இல்லையா, அப்பாவை பாத்திட்டியா.
ஹலோ மை டியர் பிரதர் ஒவ்வொரு கேள்வியா கேளுங்க அப்பத்தானே பதில் சொல்ல முடியும். இப்ப தான் வந்தேன் வீட்டுக்கு போய் அம்மாவ பார்த்தாச்சு. அப்பாவை இன்னும் பார்க்கல.
அடுத்த கேள்விக்கு பதில் சொல்றதுக்கு முன்னாடி மருத முத்துவே சொல்றாரு சார் இவர் தான் புதுசா வந்திருக்கிற ஏசிபி.
ஹோ மருதமுத்து நீங்களும் இங்கதான் இருக்கீங்களா, இப்ப நான் கண்ணாடி போட்டுக்கலாமா. சாரி சார் நீங்க ஏசிபின்னு தெரியாம சொல்லிட்டேன்.
சார் எனக்கு ஒரு டவுட், காலையில ஸ்டேஷன்ல அவ்ளோ கோவமா பேசினீங்க இப்ப என்ன இவ்வளவு ஜாலியா இருக்கீங்க. அது வேற ஒண்ணுமில்ல மருதமுத்து காலையில நான் பேசினது என்னோட பதவிக்கான கடமை, ஆனா இப்ப பாசத்துக்கான நேரம்.
ஹேய் ரிஷி, ட்ரான்ஸ்பர் வந்ததை சொல்லவே இல்ல. இனிமேல் எல்லாரும் சேர்ந்து இருக்கலாம், அம்மாதான் ரொம்ப பீல் பண்ணிட்டு இருந்தாங்க.
சும்மா ஒரு சர்ப்ரைஸ் அதுதான் சொல்லல. ரிஷி அது என்ன கண்ணாடி மேட்டர்..
ஸ்டேஷன்ல நடந்ததெல்லாம் ரிஷி சொல்றான் அதைக் கேட்டுட்டு ஸ்ரீயும் சிரிக்கிறாங்க. ஏன் மருதமுத்து நீங்கதான் பெல்ட் போடல அதுக்காக கம்ப்ளைன்ட் கொடுக்க வர்றவங்க கண்ணாடி கூட போடக்கூடாதா. அச்சோ சார் கிண்டல் பண்ணாதீங்கன்னு சொல்லிட்டு சிரிக்கிறார்.
அப்ப கேஸ் விஷயமா நந்தகோபால் சார் பாக்குறதுக்கு ஒருத்தர் வரார். ரிஷி கிட்ட அவர் வந்து நந்தகோபால் சார் எங்க இருப்பார் என கேட்க. என்ன விஷயமா சார், அவர பாக்கணும். கேஸ் விஷயமா தான் சார், ரொம்ப நல்லா வாதாடுவார் என்று எல்லாரும் சொன்னாங்க.
சார் யாரோ உங்கள ரொம்ப நல்லா ஏமாத்துறாங்க, அவரு ரொம்ப மோசம் சார் நான் வேணா உங்களுக்கு ஒரு நல்ல வக்கீலை சொல்றேன். இதோ இங்கே நிற்கிறாரே இவரு ஸ்ரீ நந்தன் கிரிமினல் கேஸ் எல்லாம் நல்லா வாதாடுவார்அப்படின்னு ரிஷி சொல்றான்.
“டேய் ரிஷி நீ அடங்கவே மாட்டியா, உனக்கு எல்லாமே விளையாட்டா போச்சு” ஸ்ரீரிஷிக்கு அட்வைஸ் பண்ண ஆரம்பிக்கிறான். அப்புறம் அவர்கிட்ட ரிஷி யாருன்னு சொல்றான். அதுக்கு அவரும் தம்பி நல்ல விளையாட்டு பிள்ளையா இருக்கார் என்று சொல்லிட்டு வெளிய போய் வெயிட் பண்றார்.
நந்தகோபால் அவருடைய கேஸ் எல்லாம் முடிச்சுட்டு வந்தாரு, அவரைப் பார்த்த உடனேயே நித்திஷ் தாத்தாகிட்ட போறான். நந்தகோபால் ரிஷிய பார்த்து“டேய் படவா உன்ன பத்தி எனக்கு நல்லா தெரியும் டா நான் கதவு கிட்ட நிக்கறதைப் பார்த்து விட்டு தானே இவ்வளவும் பேசின…”
அதுசரி டிரான்ஸ்பர் ஆடர் வர இன்னும் ஒரு வாரம் இருக்குது சொன்ன ஆனா இப்பவே வந்துட்ட. முக்கியமான கேஸ் ஒன்னு விசாரிப்பதற்காக சீக்கிரமா டிரான்ஸ்பர் பண்ணிட்டாங்க பா. எப்படி இருக்கீங்க அப்பா? நல்லா இருக்கேன் டா கண்ணா வீட்டுக்குப் போய் அம்மாவை பார்த்தியா.
பேசிக்கிட்டு இருக்கிற அப்பவே ரிஷிக்கு ஒரு கால் வருது……
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.