அரசு மருத்துவமனை..
இவ்வளவு நேரம் ரிஷி பேசுறத மரத்துக்கு பின்னாடி நின்னு கேட்டுட்டு இருந்தவன், நர்ஸ் வந்து அந்தப் பையனுக்கு நினைவு வந்துடுச்சுன்னு சொன்னவுடனே. அவசரமா செல் எடுத்து கந்தனுக்கு கால் பண்றான். அண்ணா அந்த ஆக்சிடெண்ட் பண்ணின ஒருத்தனுக்கு நினைவு வந்துடுச்சு, இப்ப என்ன பண்றது.
ஏன்டா அறிவு கெட்டவனே இது கூட உனக்கு தெரியாதா, போன் பண்ணி பேசிட்டு இருக்கிற நேரத்தில அவன் ஏதாவது சொல்லிட்டா என்ன பண்றது. அவன் என்ன சொல்றான்னு தெரிஞ்சாதான் அடுத்து நாம் என்ன பண்ணலாம்னு யோசிக்க முடியும். அவன் சொல்றத ஒட்டு கேளு அப்படி முடியலைன்னா, போலீஸ் போனதுக்கப்புறம் யாருக்கும் சந்தேகம் வராத மாதிரி அவன் கிட்ட பேச்சு கொடுத்து என்ன சொன்னான்னு தெரிஞ்சுக்கோ.
சரி நான் போய் பார்த்துட்டு அப்புறமா கூப்பிடுறேன் சொல்லிட்டு அவசர அவசரமா அந்த பையன அட்மிட் பண்ணி இருக்குற இடத்துக்கு போறான். அந்த ரூம்ல கதவு திறந்து இருந்ததுனால வெளிய நின்னு கேக்க முடியாது, அதனால ரூமுக்கு பின்பக்கம் போய் பார்க்கலாம்னு போறான் அங்கு ஒரு ஜன்னல் இருக்கு, அங்க இருந்து கேட்டா உள்ள இருக்கிறவங்களுக்கு இவன் நிற்பது தெரியாது.
உள்ள வந்த ரிஷிக்கு அந்தப் பையன் மேல கோவம் வந்தாலும், அதை வெளிக்காட்டாம அங்கிருந்த நாற்காலியை இழுத்துப் போட்டு அதில் உட்கார்ந்து அந்த பையன கூர்மையா பார்த்துட்டே பேச ஆரம்பிக்கிறான்.
இங்க பாரு அபிநவ் நான் நேரா விஷயத்துக்கு வரேன், நான் என்ன கேட்கப் போறேன் அப்படிங்கறது உனக்கும் தெரியும் நான் கேக்குறதுக்கு உண்மையான பதில் சொன்னா உனக்கு மட்டும் இல்லாம எல்லாருக்குமே அது நல்லது. உனக்கே தெரிஞ்சிருக்கும் நீங்க பண்ணின ஆக்சிடெண்ட்ல இரண்டு உயிர் போயிடுச்சு. அந்த பொண்ணுக்கும் இப்பதான் தலையில ஆபரேஷன் பண்ணி முடித்து இருக்காங்க இன்னும் நினைவு திரும்பல, இதுல அவங்க அப்பா அம்மாவையும் இழந்து அனாதையா நிற்கிறா. அவளுக்கு நாங்க என்ன பதில் சொல்றது, வெளியில அவங்களோட உறவினர்கள் எல்லாம் உங்களை கைது செய்ய சொல்லி போராட்டம் பண்றாங்க.
[the_ad id=”6605″]ரிஷி சொல்றத கேட்டு அவனோட முகத்தில தன்ன நினைத்தே கோபம், வருத்தம், இயலாமை போன்ற உணர்ச்சிகள் மாறிமாறி வந்து போகுது. ஆனா வாயை திறந்து எந்த பதிலும் சொல்லாம அமைதியா இருக்கான்.
இப்ப நீ தான் சொல்லணும், எத்தனை நாளா இந்த பழக்கம் உங்களுக்கு இருக்கு, ஆக்சிடெண்ட் எப்படி நடந்தது, போதை மருந்து எங்கிருந்து கிடைத்தது. அந்த இடம் ஆள்நடமாட்டம் அதிகம் இல்லாத ஏரியா, அதோட சிசிடிவி கேமராவும் இல்ல அதனால என்ன நடந்ததுன்னு எங்களுக்கு தெளிவா தெரியல, இப்பவாவது வாய்திறந்து சொல்லு.
சார் நாங்க எங்களோட சந்தோஷத்தை மட்டும் தான் பார்த்தோமே தவிர, அதோட பின்விளைவுகளை பத்தி யோசிக்கவே இல்ல. எங்களால இரண்டு உயிர் போயிடுச்சு அப்படின்னு நினைக்கிற அப்பவே எங்க மேலேயே எனக்கு கோபம் தான் வருது. ஆனா இப்ப திருந்தி ஒன்றும் ஆகப் போவதில்லை என்று தெரியும்னு சொல்லிட்டே தன்னோட கண்ணுல இருந்து வர்ற கண்ணீரை துடைக்கிறான். ரிஷி அவன ஆறுதலா தட்டிக்கொடுத்து மேல சொல்லு அப்படிங்கற மாதிரி பார்க்கிறான்.
எப்பவுமே போதை மருந்தை எடுத்ததுக்கப்புறம் நாங்க வெளிய போக மாட்டோம், ஆனால் நேத்து காலையில போதை மருந்து எடுத்ததுக்கப்புறம் அவங்க ரெண்டு பேரும் கண்டிப்பா வெளிய போகணும்னு சொல்லிட்டாங்க டிரைவர் இல்லை அதனால நான் தான் டிரைவ் பண்ணினேன் பாதிதூரம் வந்ததுக்கப்புறம் என்னால கண்ட்ரோல் பண்ண முடியலை எதிர்ல வந்த வண்டியில் மோதிட்டேன் அதுக்கப்புறம் என்ன நடந்ததுன்னு தெரியல.
அபிநவ் சொன்னதை எல்லாம் பொறுமையாக கேட்டுட்டு இருந்த ரிஷி, எப்ப இருந்து உங்களுக்கு இந்த பழக்கம் இருக்குன்னு அடுத்த கேள்வி எழுப்பினான்.
நாங்க மூணு பேருமே காலேஜ் பிரண்ட்ஸ், செகண்ட் இயர் படிக்கிறப்ப செமஸ்டர்ல அரியர் வைத்ததற்காக ப்ரொபசர் எல்லார் முன்னாடியும் எங்களை திட்டிட்டாங்க அது எங்களுக்கு ரொம்ப அவமானமா இருந்தது. நாங்க மூணு பேரும் கோபமா இருந்ததைப் பார்த்துட்டு எங்க கூட படிக்கிற ராஜா தான் இதை பத்தி எங்களுக்கு சொன்னான்.
டேய் மச்சான் இதுக்கு எல்லாம் வருத்தப்படாதீங்க முதல்ல வாங்க நாம வெளியே போலாம் சொல்லி கூப்பிட்டு வந்துட்டான்.
அது எப்படிடா வருத்தப்படாமல் இருக்க முடியும், கிளாஸ்ல இருக்குற எல்லாருமே ஒரு மாதிரி பாக்குறாங்க அவமானமா இருக்கு டா, அபிநவ் பிரண்ட் சொல்றான்.
அதெல்லாம் மறப்பதற்கு என்கிட்ட ஒரு வழி இருக்குடான்னு…..சொல்லிட்டே அவன் பேக்ல இருந்து ஒரு பவுடர் எடுத்து நீட்றான்.
அதை பார்த்து நாங்க மூணு பேரும் என்னடா இது, இத வச்சு என்னடா பண்றதுன்னு கேட்டோம்.
டேய் இது கொக்கைன் இத கொஞ்சமா டெஸ்ட் பண்ணுங்க, அப்புறம் எல்லாம் மறந்திடும்.
இல்லடா இதெல்லாம் வேண்டாம் இதெல்லாம் ரொம்ப தப்பு, வீட்ல தெரிஞ்சா அவ்வளவுதான்.
வீட்ல தெரிஞ்சா தானடாஅப்படின்னு சொல்லிட்டு வற்புறுத்தி எங்களை எல்லாம் சாப்பிட வைத்தான்..
அதை சாப்பிட்ட உடனே எங்க மூணு பேருக்கும் பறக்கிறமாதிரி, ரொம்ப சந்தோஷமா இருந்தது. அன்னைக்கு இருந்து டல்லா ஃபீல் பண்றப்ப எல்லாம் அதை எடுத்துப்போம். போகப்போக அதுக்கு நாங்க அடிமை ஆயிட்டோம். அது கிடைக்கலைன்னா எங்களுக்கு பைத்தியம் புடிச்ச மாதிரி இருக்கும்.
அவன் சொன்னத கேட்டு ரிஷி, இதெல்லாம் ஒரு காரணம்னு சொல்றியே உனக்கு வெக்கமா இல்ல, உன்ன சொல்லி குத்தமில்ல உன்ன பெத்தவங்களச் சொல்லனும் செல்லம் கொடுக்கிறோம் என்ற பெயரில் உங்கள இப்படி கெடுத்து வச்சிருக்காங்க.
சரி சொல்லு ராஜா கிட்ட இருந்த மட்டும் தான் வாங்குவீங்களா இல்ல வேற எங்கே இருந்து கிடைக்கும். எங்க காலேஜ்க்கு எதிர்ல இருக்குற கடையில கிடைக்கும் சார்.
அவன் சொன்னதை கேட்ட உடனே ரிஷி அதிர்ச்சியா கார்த்திக்க திரும்பி பார்க்குறான் அவனுக்கும் இந்த விஷயம் அதிர்ச்சியாகத் தான் இருந்தது.
இதெல்லாம் ஜன்னல் கிட்ட நின்னு கேட்டுகிட்டு இருந்த மாரி, ஐயோ இவன் போட்டு கொடுத்துட்டான், இத முதல்ல போய் அண்ணன்கிட்ட சொல்லனும்னு முடிவு பண்ணிட்டு அங்கிருந்து கிளம்பிட்டான்.
ரிஷி கார்த்தி கிட்ட நாம நினைத்ததை விட விஷயம் ரொம்ப பெருசா இருக்கு, காலேஜ் வாசலில் வச்சு விக்கிற அளவுக்கு வளர்ந்துடுச்சு, இதை உடனடியா நாம தடுத்தே ஆகணும்.
ரிஷி அபிநவ் கிட்ட காலேஜ் பெயரும், ராஜாவோட நம்பர் வாங்கிட்டு கார்த்திக் கிட்ட மீதி விசாரணை எல்லாம் நீங்க கண்டினியு பண்ணுங்க மறக்காம அத ரெக்கார்ட் பண்ணிடுங்க, எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு நான் ஒரு ஒன் ஹவர்ல காலேஜ் கிட்டு இருக்க மாதிரி பார்க்கிறேன்னு சொல்லிட்டு கிளம்பிட்டான்.
கார்த்திக் அபினவ் கிட்ட மத்த டீடெயில்ஸ் எல்லாம் கலெக்ட் பண்ணிட்டு டாக்டர் கிட்ட போயி மீதி இரண்டு பேர் கண்விழிக்க இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் என்று விசாரிச்சுட்டு, அவங்களை எப்ப டிஸ்சார்ஜ் பண்ணலாம்னு கேட்கிறான்.
நாளைக்கு காலைல கண்முழிச்சுடு வாங்க, அதுக்கப்புறம் தான் டிஸ்சார்ஜ் பத்தி எதுவுமே சொல்ல முடியும். டாக்டர் சொன்ன உடனே கார்த்திக் எதோ யோசிச்சிட்டு, ஓகே டாக்டர் நான் நாளைக்கு காலைல வரேன் எதுக்கும் அவங்களோட பாதுகாப்புக்காக ஒரு கான்ஸ்டபிள்ல விட்டுட்டு போறேன்.
என்னாச்சு சார் யாரால அவங்களுக்கு ஆபத்து இருக்கும்ன்னு நினைக்கிறீங்க, அது இன்னும் எனக்கு தெளிவா தெரியல என் உள்மனசு ஏதோ பிரச்சனை வரும்னு சொல்லுது….
[the_ad id=”6605″]தினசெய்தி பத்திரிக்கை அலுவலகம்…..
கீர்த்தி சந்தோஷமா இருக்குறதை பார்த்து சரண், என்னடா கீர்த்தி ரொம்ப சந்தோஷமா இருக்கிற மாதிரி தெரியுது அப்படி என்ன இருக்கு அதில் என அவ கிட்ட கேட்டுட்டே பைலை வாங்குறான்.
அதைப் பார்த்த உடனே அவனுக்கு எதுவுமே புரியல, கீர்த்தியை பார்க்கிறான். கடைசி லைனை படிக்க சொல்றா….
போதை மருந்து தடுப்பதற்காக அமைக்கப்பட்ட குழு ஓட ஹெட் ரிஷி நந்தன் அப்படின்னு போட்டிருந்தது.
கீர்த்தி முகத்தில் வெட்கம், சந்தோஷம் ரெண்டும் உணர்வுகளும் மாறி மாறி வந்து போகுது. மேடம் ஓட சந்தோஷத்துக்கு இதுதான் காரணமா…
வெட்கப் பட்டதெல்லாம் போதும், அப்படியே உன்னோட காதல் காவியத்தை கொஞ்சம் எடுத்து விடு கேட்கலாம்…..
பாட்டி வீடு பொள்ளாச்சியில் தான் இருக்கு அங்க இருந்து தான் பிஜி பண்ணினேன். என்னோட பிரண்டு ஸ்ருதியும் அதே காலேஜ்ல தான் பிஜி படிச்சா.
மூன்று வருடம் முன்னாடி…..
காலேஜ் முடிஞ்சு கீர்த்தியும் ஸ்ருதியும் பேசிட்டே பார்க்கிங் கிட்ட வந்துட்டாங்க, அங்க ஒரே கூட்டமாக இருந்தது என்னன்னு பார்த்தா சீனியர் ஒருத்தன் ஜூனியர் பொண்ணு கிட்ட லவ் சொல்ல, அந்த பொண்ணு அவளுக்கு அதில் இஷ்டம் இல்லனு சொன்ன கோபத்தில் சீனியர் அந்த பொண்ண ஓங்கி ஒரு அரை விட்டுட்டான்.
அதனால அங்க கூட்டம் கூடிருச்சு. இந்தக் கலவரம் எல்லாம் பார்கிங்ல நடந்ததனால் விஷயம் எதுவும் மேனேஜ்மென்ட் காதுக்கு போகல.
இதெல்லாம் கேட்டவுடனே ஸ்ருதிக்கு பக்குன்னு இருந்துச்சு, அது அந்தப் பையன் அடித்ததற்காக இல்ல பக்கத்துல நிக்கிற கீர்த்தியை நினைத்து.
ஸ்ருதியோட மைண்ட் வாய்ஸ், ஆஹா சும்மாவே இவ நீதி நேர்மை நியாயம்ன்னு நீதி தேவதைக்குத் தங்கச்சி மாதிரி பேசுவா இப்ப என்ன பேச போறாளோ….. மாட்டினான்டா மாப்புன்னு நினைச்சிட்டே அந்த சீனியர பாவமா பார்க்கிறா..
ஆனா அந்தப் பையனுக்கு இவளோட பார்வைக்கான அர்த்தம் தெரியல….
ஹலோ சீனியர், உங்க மனசுல என்ன பேட்டை ரவுடின்னு நினைப்பா புடிக்கலைன்னு சொன்னா அடிப்பீங்களா.
உங்களுக்கு யாருங்க ஒரு பொண்ண அடிக்கிற உரிமையை கொடுத்தா…
அந்தப் பையன் நடுவுல ஏதோ சொல்ல வர, இவ அவன பேசவே விடாம தொடர்ந்து பேசிட்டே இருக்கா. லவ் பண்றதுன்னா என்னன்னு தெரியுமா, உங்க லவ்வ பொறுமையா எடுத்து சொல்லி புரிய வைக்கணும் அப்படியும் புரியலைன்னா இன்னொரு தடவை சொல்லி பார்த்துட்டு அப்பவும் அந்த பொண்ணுக்கு புடிக்கலைன்னு தெரிஞ்ச உடனே விலகிடனும்.
அதை விட்டுட்டு உங்களை யார் கைநீட்ட சொன்னா முதல்ல அந்த பொண்ணு கிட்ட மன்னிப்பு கேளுங்க…
ஒரு நிமிஷம் கொஞ்சம் அமைதியா இருங்க, மொதல்ல இங்க என்ன நடந்ததுன்னு நீங்க தெரிஞ்சுக்கோங்க, நான் அந்த பொண்ணு அடிச்சது உண்மைதான் ஆனால் அது என்னஅவங்க வேண்டான்னு சொன்னதுனால இல்ல. அவங்க டீசண்டா வேணாம்னு சொல்லி இருந்தா நானும் விலகி இருப்பேன் ஆனா அவங்க என் அம்மாவை பத்தி தப்பா பேசினாங்க அதனால தான் அடித்தேன் என்னால மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது.
சாரி சீனியர், இந்த சாரி நான் உங்களை திட்டுனதுக்கு என்ன இருந்தாலும் கை நீட்டி அடித்தது தப்புதான் அதேசமயம் அந்த பொண்ணு உங்க அம்மாவை பத்தி பேசினதும் தப்புதான். சோ இதோட இந்த பிரச்சனையை முடிச்சிடுங்கன்னு சொல்லிட்டு, அங்க நடந்ததை எல்லாம் வேடிக்க பார்த்துட்டு இருந்த ஸ்ருதியை இழுத்துட்டு போறா.
ஹலோ ஹலோ ஒரு நிமிஷம் உங்க பேர் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா.. எதுக்குங்கிற மாதிரி பாக்குறா. இத்தனை பேர் இருந்தோம் சீனியர் அப்படிங்கற பயமில்லாம தைரியமா கேள்வி கேட்டீங்களா அதனாலதான். சிரிச்சிட்டே கீர்த்தின்னு சொல்லிட்டு கிளம்பிட்டா.
இவ்வளவு நேரம் கீர்த்தி சொன்னத கண்ணத்தில் கைவைத்து கேட்டுட்டு இருந்த சரண் ஸ்டாப் ஸ்டாப் நான் கண்டுபிடிச்சிட்டேன் அந்த சீனியர் தான் ரிஷி. ஐயாவோட அறிவப் பார்த்தியான்னு கேட்டுட்டே தன்னோட காலரை தூக்கிவிட்டான். ஐயோ அண்ணா உங்களுக்கு அவ்வளவு சீன் எல்லாம் இல்ல, ஆக்சுவலா அது ரிஷி இல்ல.
அடப் போமா, கதை கேட்டு நான் ரொம்ப டயர்டாயிட்டேன் நான் போய் டீ குடிச்சிட்டு உனக்கும் வாங்கிட்டு வரன்னு சொல்லிட்டு எழுந்து போயிட்டான்.
சரண் போனதுக்கப்புறம் கீர்த்தி ரிஷிய முதல்முதலா பார்த்த அன்னைக்கு நடந்ததை நினைத்து பார்க்கிறா. இவதான் அவனைப் பார்த்து இருக்கிறா அவன் இவளை பார்த்ததே கிடையாது….
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.