அடுத்த பிரேக் பெல் அடித்த மறு நிமிடம் அவள் முன் ஆஜரான மலர், “சரி வா போலாம்…” என்றழைக்க, இவ என்ன இவ்வளவு சீரியசா இருக்கா.. என மனதில் நினைத்த இசையோ “எங்க..?” என தெரியாததை போல் கேட்டாள்.
“ஹே ஹே நடிக்காத டி.. நீ இன்னிக்கு எப்படி தமிழ் கிட்ட சொல்லாம வரனு நான் பார்க்கிறேன்..” என்ற மலர் இசையையும் இழுத்துக் கொண்டு சென்றாள்.
கடவுளே இவ விடமாட்டா போலயே.. என மனதில் புலம்பியபடியே வந்த இசையின் கண்ணில் பட்டது கேண்டீன். சட்டென யோசனை கொண்டவளோ
“ஹே.. அங்க பாரு.. அங்க பாரு..” என கத்த “எங்க..?எங்க..?” அவர்வமாக பார்த்தாள் மலர். “அங்க பாரு டி கேண்டீன்ல மில்க் ஷேக் விற்கிறாங்க” என்ற இசையின் தலையில் தட்டிய மலர், “அடியே இப்போ எதுக்கு போய்டு இருக்கோம்? இது இப்போ ரொம்ப முக்கியமா..?” என கடுப்பாக கேட்டாள்.
“பாரு டி கூட்டமா இருக்கு.. சீக்கிரம் வா தீர போகுது” என இசை அதிலேயே குறியாக இருக்க யோசித்த மலர், “என் கிட்ட காசு இல்லையே” என்றாள். “அதுக்கென்ன என் கிட்ட இருக்கே..” என இசை கூற “ஐ.. சூப்பர் அப்போ வா போலாம்..” என்றவள் அவளுக்கு முன் கேண்டீனுக்கு ஓட, ஹப்பா தப்பிச்சோம்.. என பெருமூச்சுவிட்டபடி மலரின் பின்னே சென்றாள் இசை.
கேண்டீன் வந்தவர்கள் மில்க் ஷேகை வாங்கிக் கொண்டு ஓரமாக இருந்த இருக்கையில் வந்து அமர்ந்தனர்.
மலர் வேகமாக குடிக்க இசை நேரத்தை ஓட்ட மெதுவாக குடித்துக் கொண்டிருந்தாள்.
“ஹே எவ்வளவு நேரம் டி குடிப்ப..” மலர் கடுப்பாக கேட்க “இதெல்லாம் நல்லா டேஸ்ட் பண்ணி குடிக்கனும்..” என்றவள் நேரத்தை ஓட்ட மில்க் ஷேக்கை ரசித்து ருசித்து குடித்துக் கொண்டிருந்தாள்.
“ஹப்பா.. இப்படியே மெதுவாக குடிச்சு பிரேக்க ஓட்டிரலாம்..” என இசை மனக் கணக்கு போட்டிருக்க “நீ பொருமையாவே குடி ஒரு பிரச்சினையும் இல்ல..” என்றாள் மலர். இவ இப்படியெல்லாம் பேச மாட்டாளே என வியப்பாக பார்த்த இசை, “என்ன திடீர்னு?” என்றாள் கேள்வியாக .
“அவ்வளவு தூரமெல்லாம் போக வேண்டாம்…” என சம்மந்தமே இல்லாமல் பேசிய மலரை புரியாமல் பார்த்தவள், “என்னடி லூசு மாதிரி உளருர?”.
“அங்க பாரு..” என்றவள் அவர்களுக்கு எதிரே இருந்த இருக்கையின் புறம் இசையின் முகத்தை திருப்ப, அங்கு தமிழும் எழிலும் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர்.
இசை இந்த திருப்பத்தை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. “ச்சே.. என் பிளான் எல்லாம் வேஸ்டா போச்சு.. இவளுக்கு ஐம்பது ரூபா தண்ட செலவு பண்ணுணது தான் மிச்சம்” என அவளையே நொந்துக் கொண்டாள் இன்னிசை.
இசையின் முகத்தை வைத்தே அவள் இதை எதிர்பார்க்கவில்லை என புரிந்த மலர், “நீ ஒரு கணக்கு போட்டா.. கடவுள் ஒரு கணக்கு போடுரார் பாத்தியா..” என கிண்டலான பேச அவள் பேச்சில் எரிச்சலானவளோ அவளை முறைத்து விட்டு மில்க் ஷேகில் கவனமானாள்.
மீண்டும் இசை மெதுவாகவே குடித்துக் கொண்டிருக்க பொறுமை இழந்த மலரோ, “நீ குடிச்சதெல்லாம் போது வா..” என அவளின் கை பிடித்து இழுக்க, “ஹே இன்னும் பாதி இருக்கு டி.. வேஸ்டா போயிரும்” என்றாள் இசை. “அதெல்லாம் ஒன்னும் வேஸ்டா போகாது..” என்றவளை “எப்படி?” என கேள்வியாக பார்க்க “ம்ம் இப்படி தான்..” என்றவள் அவள் கையிலிருந்த மில்க் ஷேகை வாங்கி ஒரே மடக்கில் குடித்துவிட்டாள்.
மலரின் செயலில் கடுப்பான இசை, “என்னோட மில்க் ஷேகை ஏன் டி குடிச்ச?” என எரிச்சலாக கேட்க “பின்ன நீ வேணும்னே நேரத்தை ஓட்டீட்டு இருக்க.. அதான் அப்படி பண்ணேன்” என்றாள் கோவமாக.
“அது.. நான்.. நான்..” என தடுமாறியவள் “நான் எதுக்கு நேரத்தை ஓட்டனும்..?” என கேட்க “அசிங்கமாக நடிக்காத டி எனக்கு டென்ஷன் ஆகுது” என மலர் கத்த.. இருவருக்கும் சண்டை வந்து விட்டது.
தோழிகள் இருவரும் தீரவமாக சண்டை போட.. தமிழ் எழில் உட்பட அங்கிருந்த சிலரின் பார்வை இவர்களிடம் தான்.
இன்னிசையை கண்ட தமிழினியனோ,
“டேய் நமக்கு ஆடிஷன்ல ஹெல்ப் பண்ணுச்சுல அந்த பொண்ணு தானே” என எழிலிடம் கேட்க “ஆமா டா..” என்றான்.
“என்ன டா இப்படி சண்ட போடுறாங்க?”
“அந்த பொண்ணு நல்ல பொண்ணு தான்.. அவ கூட ஒன்னு இருக்கே எல்லாம் அது பண்ண வேலையா இருக்கும்” என்றான் எழில் மலரை அலட்சியமாக பார்த்தபடி. அவனுக்கு அன்று மலர் பேசிய விதம் பிடிக்கவில்லை.
“என்னன்னு கேட்போமா?” என தமிழ் கேட்க “அடுத்தவங்க பிரச்சினை எதுக்கு நமக்கு” என விட்டேத்தியாக பதிலளித்தான் எழில்.
இருந்தும் தமிழால் அப்படியே விட முடியவில்லை. இன்னிசையை கண்டதும் தான், அவனுக்கு உதவி செய்தவளுக்கு அன்று அவன் இருந்த மனநிலையில் ஒரு நன்றி கூட சொல்லவில்லை என உள்ளத்தில் உரைத்தது.
“டேய்..” என எழிலின் கைகளை சொரிந்த தமிழ், “எனக்கு அந்த பொண்ணு கிட்ட தேங்க்ஸ் சொல்லணும்” என சொல்ல “அன்னிக்கு என்னமோ அப்படி முறுக்கிக்கிட்ட? இப்போ என்ன திடீர்னு?” என புருவம் உயர்த்தினான் எழில்.
“ம்ச்.. அன்னிக்கு ஏதோ நல்ல மைன்ட் செட்ல இல்ல, இப்போ சொல்லனும்னு தோனுது. முடியுமா? முடியாதா?” என தமிழ் எரிச்சல் படவும் அவனை முறைத்த எழில் “சரிஇஇ.. சொல்லலாம்” என்றான்.
எல்லோரும் அவர்களே பார்ப்பதை உணர்ந்து இசைதான் முதலில் அமைதியானாள். “கேட்டுட்டே இருக்கேன்.. பேசுடி” என மலர் கத்த “வாய மூடு.. எல்லாரும் நம்மள தான் பாக்குறாங்க” என பல்லை கடித்தாள் இன்னிசை. அதன் பின் தான் சுற்றியும் முற்றியும் பார்த்த மலர் அமைதியானாள்.
சண்டையை நிறுத்திய பிறகும் இருவரும் சளைக்காமல் மாறி மாறி முறைத்துக் கொண்டனர். இசை தற்செயலாக இவர்களின் புறம் திரும்ப அவளை பார்த்து புன்னகைத்தான் எழில். அவனின் சிரிப்பில் எம்பேர்ஸாக (embarrass) உணர்ந்தவள்.. பதிலுக்கு அவனை பார்த்து சங்கடமாக புன்னகைத்தாள்.
அதே புன்னகையுடன் அவர்களிடம் வந்த எழில் “ஏங்க.. இப்படி சண்டை போட்டுக்கிறீங்க?” கேட்க “இவ தான் அண்ணா இரிட்டேட் பண்றா..” என்றாள் இசை. “யாரு நான் இரிட்டேட் பண்றனா..?” என மலர் சண்டைக்கு வர, “ஹே அமைதி அமைதி.. ப்பா ஏன் இரண்டு பேருக்கும் ஏன் இவ்வளவு கோவம் வருது?” என்றபடி எழிலின் அருகே வந்து நின்றான் தமிழ்.
“இவ தான் சீனியர் இரிட்டேட் பண்றா..” என அதே டைலாக்கை தமிழிடம் விட்டாள் மலர். “சரி சரி.. கோவப்படாதீங்க..” என எழில் சமாதானம் செய்ய இருவரும் அமைதியாகினர்.
“இஃப் யு டோன்ட் மைன்ட்.. ஏன் சண்ட போட்டீங்கனு தெரிஞ்சிக்கலாமா?” என எழில் ஒரு ஆர்வத்தில் கேட்க அதற்கு பதிலளிக்காது மலரோ, “சீனியர் இவ உங்க கிட்ட ஏதோ சொல்லனுமாம்மா.. நீங்க ஏதாவது நினைச்சுக்குவீங்க பயப்படுறா..” என தமிழிடம் விஷயத்தை உடைக்க இசையோ திடுக்கிட்டு அவளை பார்த்தாள்.
“என் கிட்டயா..?” என்ற தமிழ் கேள்வியாக இசையின் முகம் பார்க்க
“என் கிட்ட ஏதாவது சொல்லனுமா..?” என்ற தமிழின் கேள்வியில் இல்லை என முதலில் தலையாட்டிய இசை பின் ஆமாம் என வேகமாக தலையாட்ட, அவள் செயலில் வந்த சிரிப்பை அடக்கியவன், “என்ன விஷயம்?.. நான் எதுவும் நினைச்சுக்க மாட்டேன் சொல்லு” என சொல்ல சரியென தலையாட்டியவள்,
“அது.. அது நீங்க அன்னிக்கு நீங்க ரொம்ப சூப்பரா பாடுனீங்க அண்ணா. உங்க வாஸ்.. ப்பா சான்சே இல்ல. செம வாய்ஸ். நான் உங்க பெரிய ஃபேன் ஆகிட்டேன்..” என மனதில் இருப்பதை பட பட வென பேசியவள், பின் மெல்லிய குரலில் “ஆக்சுவலா அன்னைக்கு நீங்கதான் நிறைய மார்க் வாங்கியிருந்தீங்க.. நான் நீங்க தான் செலைக்ட் ஆவீங்க னு நெனச்சேன்.. ஆனா அவங்க அப்படி பண்ணுவாங்கனு நான் நினைக்கவே இல்ல. அன்னிக்கு நீங்க ஃபீல் பண்ணீட்டு போனது எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு” என வருத்தமாக பேசியவளின் முகம் அப்பட்டமாக சோகதத்தை பிரதிபலிக்க தமிழுக்கே அவனின் அக உணர்வுகள் புலப்படவில்லை, தன் பாடலை நினைத்து தனக்காக ஒருத்தி வருந்துகிறாளே என மனதில் ஒரு இனம்புரியாத இனிமையான உணர்வு
அவளை பார்த்து சினேகமாக புன்னகைத்தவன், “நான் அப்பவே அத மறந்துட்டேன்.. இது வழக்கமா நடக்கிறது தான், எனக்கு பழகிப்போச்சு.. நீ இத நெனச்சுலாம் ஃபீல் பண்ணதா” என்றான்.
“பழகிப்போச்சுனா?.. அப்போ உங்களுக்கு முன்னாடியே தெரியுமா அந்த டீன் பையன தான் செலைக்ட் பண்ணுவாங்கனு..?” என இசையின் கேள்விக்கு விரக்தியாக புன்னகைத்தவன், “தெரியும்.. அதான் அன்னிக்கு நான் கலந்துக்க மாட்டேன்னு சொன்னேன்.. இத இவன் தான் கேட்கல” என்றான் எழிலை பார்த்த படி.
இசை அவனை பாவமாக பார்க்க அவளின் அந்த பார்வை பிடிக்காதவன், “ஹே இப்படி சிம்பத்தியாலாம் பாக்காத..” என்றான் சிரிப்புடன்.
“இல்ல எனக்கு கஷ்டமா இருக்கு.. ம்ம் அந்த டீன் மட்டும் என் கையில கிடைச்சா..” என இசை ஆவேசமாக பேச அவசரமாக சுற்றியும் முற்றியும் பார்த்தவன், “ஹே மெதுவா.. மெதுவா.. யாராச்சும் கேட்டுற போறாங்க” என அவளை அமைதி படுத்தினான்.
அப்போதும் அவள் கோவம் குறையாமல் இருக்க, “நான் அதை அப்பவே மறந்துட்டேன்.. நீ டென்ஷன் ஆகாத.. இந்த காம்பெட்டீஷன் போச்சுனா இன்னொன்னு.. நீ இத பத்தியே யோச்சி ஃபீல் பண்ண கூடாது புரியுதா..” என சமாதானப் படுத்த சம்மதமாக தலையாட்டினாள் இன்னிசை.
“ஹப்பா.. ரொம்ப தேங்க்ஸ் சீனியர்.. நேத்துல இருந்து இவ புலம்பல தாங்க முடியல.. என்ன இருந்தாலும் உங்கள செலைக்ட் பண்ணியிருக்கணும்னு புலம்பிட்டே இருந்தா..” என மலர் கூற
“இப்பவும் அதான் சொல்றேன்.. என்ன இருந்தாலும் உங்கள செலைக்ட் பண்ணியிருக்கணும்” என சட்டென சொன்ன இன்னிசையை பார்த்து புன்னகைத்தான் தமிழினியன்.
“நம்ம இன்னோ இன்ட்ரோ பண்ணிக்கவே இல்லைல..” என்ற தமிழ், “ஐம் தமிழ்..” என தன்னை அறிமுகப்படுத்தும் விதமாக கைகளை இசையிடம் நீட்ட நினைக்க அதற்கு முன் அவன் கைகளை பிடித்து குலுக்கிய மலர், “அதான் தெரியுமே சீனியர்.. நீங்க தமிழினியன். பி.எஸ்.சி.ஐடி, ஃபைனல் இயர். இதோ இவர் பேர் எழில்” என்றவள் மேலும், “நான் மலர்விழி. இவ பேரு இன்னிசை” என அவர்களையும் அறிமுகப்படுத்த கொள்ள “இ..ன்..னி..சை…” என மெல்ல அவள் பெயரை உச்சரித்த தமிழ் “ம்ம் நைஸ் நேம்” என புன்னகைக்க, “ஹான் அப்ப எங்க பேரெல்லாம் நைஸா இல்லையா?” என மலர் சண்டைக்கு வந்தாள்.
அவளை பார்த்து சிரித்தவன், “அம்மா தாயே.. தெரியாம சொல்லீட்டேன்.. உங்க பேரும் ரொம்ப நைஸ் தான்..” என்க “ம்ம் அந்த பயம் இருக்கனும் சீனியர்..” என்றாள் மலர் மிரட்டும் தொனியில்.
“சரி எந்த இயர்? எந்த டிபார்ட்மென்ட்?” என எழில் கேட்க “ஃபர்ஸ்ட் இயர், பயோகெமிஸ்டிரி டிபார்ட்மென்ட்..” என்றாள் இசை.
“பயோகெமிஸ்ட்ரியா.. அது ரொம்ப டஃபான மேஜர்னு சொல்லுவாங்க..” என்று எழில் சந்தேகமாக கேட்க,”ஆமா அண்ணா.. டஃப் தான், மேத்ஸ்க்கு பயந்து கெமிஸ்ட்ரி கிட்ட மாட்டிக்கிட்டோம்” என்றாள் சோகமாக.
இவர்கள் பேசிக் கொண்டிருக்க தமிழும் எழிலும் ஆர்டர் செய்திருந்த ஜூஸ்சும் சமோசாவும் வந்தது.
தமிழ் ஜூஸை இவர்களிடம் தள்ள, “ஐயோ.. பரவாயில்ல டைம் ஆச்சு பெல் அடிச்சிரும் நாங்க கிளாசுக்கு போறோம்” என எழுந்த இசையை தமிழ் கிண்டலாக பார்த்தான். அவனின் பார்வை உணர்ந்தவள், ஏன் இவங்க இப்படி பாக்குறாங்க? மனதில் நினைத்தபடி கேள்வியாக அவனை பார்க்க அவனோ மலரை பார்த்தான்.
மலர் அதற்குள் அந்த ஜூஸில் பாதி காலி செய்திருந்தாள். “இவள வெச்சுட்டு.. சரியான தீனி பண்டாரம்” என மனதில் கடிந்தபடி இசை அவளை முறைக்க, எழிலும் அவனின் ஜூஸை குடித்த கடுப்பில் மலரை முறைத்துக் கொண்டிருந்தான்.
எழிலின் பார்வையை கவனித்த தமிழோ.. “ஐயோ இவன மறந்துட்டேனே” என மனதில் புலம்பினான். எழில் இப்போது தமிழை முறைக்க, அவனை பார்த்து சிரித்தவன், “சாரி மச்சான்” என வாயை மட்டும் அசைக்க, “நீ கிளாசுக்கு வா..” என வாயசைத்தான் எழில்.
“இந்தா இசை..” என அவனின் ஜூஸை இசையிடம் தள்ளினான் தமிழ். “இல்ல.. இப்போ தான மில்க் ஷேக் குடிச்சேன்..” என்றவள், “இந்தாங்க அண்ணா நீங்க குடிங்க..” என எழிலிடம் தள்ளினாள். முதலே எடுத்துக் கொண்டால் தவறாக நினைப்பாளோ என எழில் நாசுக்காக மறுக்க அவள் மீண்டும், “பரவால்ல குடிங்க அண்ணா..” என அவனிடம் தள்ள இந்த முறை பிகு பண்ணாமல் எடுத்துக் கொண்டான்.
கொஞ்ச நேரத்தில் பெல் அடித்தும், “இந்த பீரியட் ஆர்கானிக் கெமிஸ்ட்ரி.. பேசாம கட் அடிச்சிர்வோமா?” என்ற மலரின் தலையில் தட்டிய இசை, “ஒழுங்கா கிளாசுக்கு வந்துரு..” என எழுந்தவள் எழிலிடமும் தமிழிடமும் சொல்லிக் கொண்டு கிளம்ப, “சரி சீனியர்ஸ் பாய்.. அப்பறம் பார்க்கலாம்” என சொல்லிவிட்டு, “ஹே நில்லு டி நானும் வரேன்..” இசையின் பின்னே ஓடினாள் மலர்.
அவர்கள் போனதும் தமிழின் அருகே வந்து அமர்ந்த எழில், “என்ன நான் ஆர்டர் பண்ண ஜூஸை நீ பாட்டுக்கு அந்த புள்ளைங்க கிட்ட தள்ளுற?” என முறைப்புடன் கேட்டான்.
“அது.. பாவம் நமக்காக ஃபீல் பண்ணுச்சேனு ..” என தமிழ் இழுக்க, “நமக்கு இல்ல உனக்கு..” என்றவன், “ஏதோ அந்த இசை பொண்ணு ஜூஸ் குடித்ததால உன்ன சும்மா விடுறேன்” என்றான் எழில்.
“சரி டா.. உனக்கு வேணா இன்னொன்னு சொல்லட்டா?” என தமிழ் கேட்க, “ஒன்னும் வேண்டா.. அதான் அந்த பொண்ணு குடுத்துச்சே போதும் வா.. கிளாசிக்கு போவோம்” என எழில் அழைக்க இருவரும் கிளாசிக்கு சென்றனர்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.