“ஹலோ சீனியர்.. ” என இசை அவன் முன் சொடக்கிடவும் சுயம் பெற்றவன் அவளை பார்த்து அசடு வழிய சிரித்தான்.
“அப்போ நீ நிஜமாவே வந்திருக்கியா?” தமிழின் கேள்வியில் இசை அவனை நறுக்கென கிள்ள, “ஸ்ஸ்ஸ்.. ஏன் இசை கிள்ளுன?” என வலியில் முகத்தை சுருக்கினான்.
“பின்ன இது என்ன கேள்வி? நான் உங்க முன்னாடியே நிக்கிறேன். நிஜமாவே வந்திருக்கியானு கேட்கிறீங்க..?” கிண்டலாக அவள் கேட்க
“அது ஒன்னுமில்ல இசை.. இவனுக்கு சந்தோஷத்தில பைத்தியம் பிடிச்சிருச்சு அதான் இப்படி உளறீட்டு இருக்கான்” என்ற எழில் அவன் முதுகில் அடி வைத்தான்.
எழிலை முறைத்தவன், “அது ஒன்னும் இல்ல.. ஸ்டேஜ்ல பாடும் போது உன்ன பார்த்தேன் அப்பறம் உன்ன காணோம்.. சோ என் பிரம்மைனு நினைச்சேன்..” என இழுக்க கண்களை சுருக்கி கடுப்பாக தமிழை முறைத்தாள் இன்னிசை.
தமிழ் அவளை சமாதான செய்ய “சரி சரி சமாதானம் ஆகிடேன்..” என புன்னகைத்தவள், “கங்கிராட்ஸ் சீனியர்.. செமயா பாடுனீங்க.. சான்சே இல்ல…” என அவனுடன் சிரிப்புடன் கை குலுக்கினாள்.
அவளுடன் கை குலுக்கியவன், “ரொம்ப தேங்க்ஸ் இசை..” என்க மீண்டும் அதேபோல் கண்களை சுருக்கி பார்த்தவள், “ஒரு வாரத்துல்ல உங்களுக்கு நம்ம டீல் மறந்திருச்சா?” என கடுப்பாக கேட்டாள்.
புன்னகைத்தவன், “மறக்கல.. சின்ன சின்ன விஷயத்துக்கு ஓகே பட் இதுக்கு நான் சொல்லியே ஆகனும்.. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்” என்று மனதார சொல்ல “நான் ஒன்னும் பண்ணல சீனியர்.. இது முழுக்க முழுக்க உங்க டேலண்ட்க்கு கிடைச்சது..” என புன்னகைத்தாள்.
தமிழால் இன்னும் நம்பவே முடியவில்லை அவனுக்காக காலேஜெல்லாம் கட் அடித்துவிட்டு வந்திருக்கிறாள் இன்னிசை. நினைக்க நினைக்க உடலெங்கும் ஓர் இதமான பரவச உணர்வு.
“கங்கிராட்ஸ் சீனியர்.. சூப்பரா பாடுனீங்க” என அவனுடன் கை குலுக்கிய மலர், “அப்பறம் சீனியர் எப்போ டிரீட்டு..?” என கேட்க, “எப்போ பார்த்தாலும் சாப்பாடு சாப்பாடு.” எழில் முணுமுணுக்க கடுப்பாகிவிட்டாள் மலர்விழி. அவள் எழிலை முறைக்க அவளை அலட்சியமாக பார்த்தான் அவன். இன்னிசைக்குமே அவன் பேச்சு உவப்பானதாக இல்லை.
“ஹே அவன் கிடக்கிறான் விடு.. உனக்கு என்ன வேணும் சொல்லு மலர்.. நம்ம வாங்கலாம்.” என தமிழ் சமாதானம் செய்ய, “இல்ல சீனியர் எனக்கு ஒன்னும் வேணாம்..” என்றாள் மலர் முறுக்கிக் கொண்டு.
தமிழ் இப்போது எழிலை முறைக்க, “டேய்.. அதான் அவளே வேண்டாம்னு சொல்றால விடு. இவள ட்ரீட்க்கு கூட்டீட்டு போனா பர்ஸ்ஸ ஃபுல்லா காலி பண்ணீருவா.” என்றான் எழில் அவன் காதோரமாய்.
“டேய் கொஞ்சம் சும்மா இருடா.. அதெல்லாம் ஒன்னும் காலி பண்ண மாட்டா.. என்கிட்ட காசு இருக்கு நான் பாத்துக்கிறேன். நம்ம கிட்ட தான உரிமையா கேட்கிறா.. நீ சும்மா அவள இரிட்டேட் பண்ணி அவகிட்ட வம்பிழுக்காத..” என்றவன் மலரை கேண்டீனுக்கு அழைக்க, “நான் வரல சீனியர்..” என முகத்தை திருப்பிக் கொண்டாள்.
“இங்க பாரு மலர்.. நீ என் கிட்ட தானே கேட்ட? நான் தானே ட்ரீட் குடுக்கனும், நான் கூப்பிடுறேன் நீ வர மாட்டியா?.” என தமிழ் கேட்க மலர் பதில் பேசாமல் அமைதியாக இருந்தாள். இசைக்கு எழிலின் பேச்சு பிடிக்கவில்லை என்ற போதும் அவள் அதில் தலையிட்டு அதை பிரச்சினையாக்க விரும்பவில்லை, அவர்களே பேசிக் கொள்ளட்டும் என அமைதியாக இருந்தாள்.
எழிலிடம் வந்த தமிழ், “இங்க பாரு நான் இசைய கூட்டீட்டு கேண்டீன் போறேன். நீ ஒழுங்கா மலர சமாதானப்படுத்தி கேண்டீன் கூட்டீட்டு வந்துரு” என கூற, “என்ன நானா?” என அதிர்ச்சியாக கேட்டான் எழில்.
“என்ன நானா?.. நீ தான். அவள பேசி இரிட்டேட் பண்ணி கடுப்பேத்துனல.. போய் சாரி கேட்டு சமாதானப்படுத்தி கூட்டீட்டு வா”
“டேய் நானா போய் சாரி கேட்டா அவ ஓவரா சீன் போடுவா டா..”
“ஆமா போட தான் செய்வா.. உன் திருவாய வெச்சுட்டு சும்மா இருந்திருக்கும். ஓவரா பேசுனல அப்போ அனுபவி”.
இசையிடம் திரும்பிய தமிழ், “வா இசை கேண்டீன் போலாம்..” என அழைக்க, மலரை பார்த்தபடி தயக்கத்துடன் நின்றாள் இசை.
“வா இசை..”
“சீனியர் மலர்…” அவள் இழுக்க
“ஏன் மலர் இல்லாம என் கூட வரமாட்டியா?..”
“இல்ல அப்படியெல்லாம் இல்ல..” என்றவள் அவனுடன் சேர்ந்து கேண்டீனை நோக்கி நடந்தாள்.
“ஏன் அவங்க ரெண்டு பேரையும் தனியா விட்டுட்டு வந்தீங்க?.. சும்மாவே அவங்களுக்கு செட் ஆகாது..” இசை கவலையாக பேச
“வருவாங்க இசை.. நீ ஏன் டென்ஷன் ஆகுற? எழில் தானே தேவையில்லாம பேசி மலர இரிட்டேட் பண்ணான்.. சோ அவனையே சாரி கேட்டு மலர சமாதனப்படுத்தி கூட்டீட்டு வர சொல்லீட்டேன். அவங்க பிரச்சினைய அவங்களே பாத்துக்கட்டும்”
“மலர சமாதானப்படுத்துறதா?.. அது அவ்ளோ ஈஸி இல்ல.. எனக்கு என்னமோ ரெண்டு பேரும் புதுசா ஏதாவது சண்ட போட்டுட்டு வருவாங்கனு தோனுது”
“அப்படிங்கிற.. சரி விடு பாத்துக்கலாம்..” என அவளிடம் தைரியமாக பேசியவனுக்கோ புதியதாக என்ன பிரச்சினையை இழுத்துக் கொண்டு வருவார்களோ என்ற பயம் இல்லாமல் இல்லை.
பேசிக் கொண்டே கேண்டீன் வந்தவர்கள் எழிலிற்கும் மலருக்கும் காத்துக் கொண்டிருக்க அங்கு அவர்களோ இசை சொன்னதைபோல் இன்னும் இருவரின் சண்டையை பெரியதாக்கிக் கொண்டிருந்தனர்.
“ஏய் அதான் அவன் அவ்வளவு பொருமையா கூப்பிடுறான்ல.. சும்மா எதுக்கு ஓவரா பிகு பண்ணி சீன் கிரியேட் பண்ற?” என எழில் கடுப்பாக கேட்க மலருக்கு கோவம் வந்துவிட்டது.
“ஹலோ மிஸ்டர்.. மைன்ட் யுவர் வேர்ட்ஸ்.. யாரு சீன் கிரியேட் பண்ணா?” என கோவமாக கேட்டாள்.
“நீ தான்.. நீ தான் சீன் கிரியேட் பண்ற. ஒன்னுமே இல்லாத விஷயம், அத எதுக்கு இப்போ நீ இவ்வளவு பெருசா பலூன் மாறி ஊதி ஊதி பெருசாக்கிற?”
“இங்க பாருங்க எனக்கென வேற வேலைவெட்டி இல்லனு நெனச்சீங்களா?.. பலூன் மாறி ஊதி ஊதி பெருசாக்கிறாங்களாம்.. நீங்க பேசுனது எனக்கு இரிட்டேட் ஆச்சு, எனக்கு கோவம் வந்துச்சு. ஆமா நான் சீனியர் கிட்ட தானே ட்ரீட் கேட்டேன் நீங்க எதுக்கு நடுவுல வரீங்க?” என அவனை முறைத்தாள்.
“அதேதான் நானும் கேட்கிறேன்.. அவன் கிட்ட தானே ட்ரீட் கேட்ட அதான் அவன் ட்ரீட் குடுக்கிறேன்னு சொல்லீட்டான்ல.. அவன் கூப்பிட்ட அப்போவே போக வேண்டியது தான எதுக்கு இவ்வளவு பெரிய சீன் கிரியேட் பண்ற?”
“மறுபடியும் மறுபடியும் சீன் கிரியேட் பண்றேன்னு சொல்லாதீங்க.. தப்பு பண்ணது நீங்க.. கொஞ்சம் கூட அந்த கில்ட்டே இல்லாம எவ்வளவு திமிரா பேசுறீங்க”
“முடிஞ்சா தட்டி தான் பாருங்களேன்..” என அவளும் சரிக்கு சமமாக சண்டைக்கு நிற்க
“மலர் உனக்கு அவ்ளோ தான் லிமிட்.. நீ ஓவரா பேசீட்டு இருக்க. நான் உன்ன கலாய்ச்சா பதிலுக்கு நீயும் என்ன கலாச்சிட்டு போய்டே இரு.. அதவிட்டுட்டு ஓவரா பேசி ஒன்னும் இல்லாத விஷயத்த பெருசாக்காத..”
என்றான் எரிச்சலாக.
“ஓஓ.. அப்போ நான் தான் வேணும்னே பிரச்சினை பண்ணி சண்ட போடுறேன்னு சொல்றீங்க?”
“ஓஓ அதுவே உனக்கு இப்போ தான் புரியுதா.. நீ தான் வேணும்னே பிரச்சினை பண்ணீட்டு இருக்க”
“ஃபைன்.. நான் தான் பிரச்சினை பண்றேன் இல்ல.. அப்போ நீங்க பண்ண தப்புக்கு சாரி கேளுங்க. நான் பிரச்சினை பண்றத நிறுத்தருறேன்”.
“ஏய் லூசா நீ.. நான் எதுக்கு சாரி கேட்கனும்? நான் தான் சொன்னேன்னே நான் கலாய்ச்சா பதிலுக்கு நீயும் கலாய்ச்சுக்க.. அதுக்காக எல்லாம் என்னால சாரி கேட்க முடியாது”
“சரி நான் தான் லூசு.. நீங்க ரொம்ப டைட் தான. ஒரே ஒரு சாரி கேட்டா குறைஞ்சா போயிருவீங்க?.. அதுக்கு கூட உங்க ஈகோ இடம் குடுக்க மாட்டிங்குது..” என மலர் பேச எழிலிற்கு கோவத்தில் மண்டை காய்ந்தது.
“ஏய் யாருக்கு ஈகோ?.. மலர் நீ ரொம்ப அதிகமா பேசீட்டு இருக்க. உனக்கு அவ்ளோ தான் லிமிட்.. விட்டா நீ பாட்டுக்கு பேசீட்டே இருக்க.. இப்ப என்ன நீ கேண்டீன் வர மாட்ட, இதுனால எனக்கு தமிழுக்கும் சண்ட வரனும், அதுல என்ன பழிவாங்குன ஒரு அல்ப சந்தோஷம் உனக்கு ” என எழில் பேச மலருக்கு அப்படி கோவம்.
“நீங்களும் வார்த்தைய கொஞ்சம் அளந்து பேசுங்க, ஏதோ என்ன பெரிய வில்லி ரேஞ்சுக்கு ப்ரொஜெக்ட் பண்றீங்க?.. யாருக்கும் சண்டை மூட்டிவிட்டு, யாரோட ஃப்ரண்ட்ஷிப்பையும் பிரிச்சுவிட்டு அதுல அல்பத்தனமா சந்தோஷப்படனும் எனக்கு எந்த அவசியமும் இல்லை. அந்த அளவுக்கு எனக்கு கீழ்த்தனமான புத்தியும் இல்ல” என கோவமாக பேசியவள் அவனை கண்டு கொள்ளாமல் கேண்டீன் சென்றாள்.
“ஹப்பா வாயா அது.. என்னா பேச்சு பேசுறா?.. ஒன்னுமில்லாத விஷத்தை ஊதி ஊதி பெரிசாக்கீட்டு, அதுல தப்பொல்லாமே நானே பண்ண மாதிரி பேசுறா. இவள கட்டிக்கப் போறவன்ல என்ன பண்ண போறானோ.. இந்த உலகத்துலேயே பாவப்பட்ட ஜீவன்” என புலம்பிய படியே அவள் பின்னே கேண்டீன் சென்றான் எழிலமுதன்.
மலர் கேண்டீன் வரவும், “ஏன் டி இவ்வளவு நேரம்? எழில் அண்ணா எங்க? என்ற இசையின் கேள்வியில் அவளை முறைத்தவள், “சீனியர் நான் உங்களுக்காக மட்டும் தான் வந்தேன் வேற யாருக்காவும் யாரு சொல்லியும் வரல..” என்றாள் தமிழிடம்.
அவள் பேச்சில் தமிழும் இசையும் மாறி மாறி பார்த்துக் கொள்ள, மலர் பேசியதை கேட்டுக் கொண்டே அவள் பின் வந்த எழில், “இங்க யாரும் அவங்கள வரலனு அழுகல..” என்றபடி தமிழின் அருகே அமர்ந்தான்.
அவன் பேச்சில் மீண்டும் எரிச்சலான மலர் இருக்கையில் இருந்து எழ தமிழ் தான் அவளை வற்புறுத்தி சமாதானம் செய்து அமர வைத்தான்.
“பண்றதெல்லாம் பண்ணீட்டு என்னமா சீன் போடுறா..”, என மனதில் அவளை திட்டினான் எழில்.
“ஏன் டா உன் வாய வச்சுட்டு சும்மா இருக்க மாட்டியா..? அவள சமாதானம் படுத்த சொன்னா இன்னும் சண்ட போட்டுட்டு வந்திருக்க.” என தமிழ் எழிலிடம் காய
“டேய் நானே அவ மேல செம கடுப்புல இருக்கேன் என்ன இன்னும் டென்ஷன் ஏத்தாத.. ச்ச வாயா அது?.. என்ன பேச்சு பேசுறா.. ஒன்னும் இல்லாத விஷயத்த பெரிசாக்கீட்டு அதுல எல்லா தப்பும் நானே பண்ண மாதிரி பேசுறா. ஏதோ இசை மூஞ்சிக்காக அவ ஃப்ரண்டா போயிட்டாளேனு அமைதியாக வந்தேன்..” என்றான் எழில் கடுப்பாக.
“ஏன் மச்சி உன்னையே ஒருத்தி இப்படி கதற விடுறாளா?.. பார்க்கவே குளு குளு னு இருக்கு” என தமிழ் அவனை கலாய்க்க, “ம்ம் இருக்கும் டா.. நாளைக்கு இவள மாதிரி உனக்கு ஒரு ரகர்ட்டு ராட்சசி பொண்டாட்டியா வருவா அப்போ நானும் பாக்கிறேன்” என்றபடி அவனை உதைத்தான் எழில்.
ஏற்கனவே இசையிடம் கேட்டு மலருக்கு பிடித்ததை ஆர்டர் செய்திருந்தான் தமிழ். இவர்கள் ஆர்டர் செய்திருந்த உணவு வரவும் நால்வரும் சேர்ந்து சாப்பிட்டனர். சாப்பிட்டு முடித்து பில் வர மலர் அவள் பர்சில் இருந்து காசை எடுக்க தமிழுக்கு சரியான கோவம்.
“மலர் என்ன பண்ற? நீ எதுக்கு பே பண்ற இது என்னோட ட்ரீட் தான..” என தமிழ் கோவமாக கேட்க “இல்ல சீனியர் நான் சாப்பிட்டதுக்கு நான் தான பே பண்ணனும்” என்றாள் மலர்.
“ஓஓ.. அப்போ சரி நீ பே பண்ணு, அனா இதுக்கு அப்பறம் நீ எனக்கிட்ட பேசிராத. இன்னிக்கு தான் நீ என்கிட்ட பேசுறது கடைசி” என தமிழ் கராரான சொல்ல அவனின் பேச்சில் அதிர்ச்சியான மலர், “ஏன் சீனியர் இப்படி பேசுறீங்க?” என முகத்தை சுருக்கினாள்.
தமிழ் பதில் பேசாமல் அமைதியாக இருக்க, “சரி சீனியர் நீங்களே பே பண்ணுங்க” என பணத்தை உள்ளே வைத்தாள். அவளை பார்த்து, “ம்ம் குட் கேர்ள்” என புன்னகைத்தவன் சாப்பாட்டிற்கு பணம் செலுத்தினான்.
நால்வரும் கேண்டீனில் இருந்து வெளியே வர சட்டென ஒரு ஆடவன் வந்து பின்னிருந்து இசையின் கண்களை மூடினான்.
“ஹே.. யாரு? யாரு?” என இசை அவன் கைகளை விலக்க பார்க்க இன்னும் அழுத்தமாக அவள் கண்களை மூடியவன் “கெஸ் பண்ணு…” என அவன் ராகமாக இழுக்க அவன் குரலை வைத்து அவனை கண்டு கொண்டவள், “ஹே அரவிந்த்.. ” என்றாள் உற்சாகமாய்.