15 நிமிடங்கள் அந்த மருத்துவரின் பேச்சு, பல உணர்சிகளை என்னுள் எழுப்பின. பிரம்மிப்பின் உச்சம் கொண்டு சேர்த்தன.
“நீங்க bold ஆன ஆளுன்னு இங்க நீங்க வந்த அன்னிக்கே தெரிஞ்சுகிட்டேன் வித்யா. அந்த நிலையிலையும் ரொம்ப தெளிவா பேசினிங்க.”
“இங்க வந்தப்போ பேசினேனா?!”
“ரொம்ப நல்லா பேசிட்டு தான் இருந்திங்க. But உங்களுக்கு அது மறந்துருக்கலாம்”
“ஞாபகம் இல்ல doctor”
“No issues. உங்களுக்கு ஞாபகம் இல்லாதது ரொம்ப நல்ல விஷயம்”
“என்னாச்சு doctor எனக்கு?”
“Accident”
“விபத்தா??!!!!!”
“மதியம் சாப்பட தினமும் வீட்டுக்கு வருவிங்களா?”
“ஆமாம். அர்ஜுனுக்கு பால் கொடுத்துட்டு அப்படியே சாப்பிட்டுபோக தினமும் மதியம் வீட்டுக்கு வருவேன். எங்க வீட்டுக்கும் schoolலுக்கும் வண்டியில 10 நிமிஷம் தான்.”
“அந்த 10 நிமிஷத்துக்குள்ள தான் உங்களுக்கு accident ஆயிடுச்சு. கார் நேருக்கு நேரா மோதிருச்சுன்னு சொன்னாங்க”
“ரொம்ப அடியா?”
“அடிபடாத இடமே இல்ல”
“ஓ…”
“வலது கண்ணுக்கு மேல உள்ள எலும்பு முறிஞ்சிருக்கு.
வலது பக்க இடுப்பு எலும்பு உடைஞ்சிருக்கு. வலது கால் தொடை எலும்பு முறிஞ்சு மேல ஏறிடுச்சு. வலது காலுக்கு போகற நரம்பு பாதிச்சுருக்கு. அதனால வலது பாதத்தை உங்களால இயக்க முடியாது. இதை foot drop னு சொல்லுவோம்.
Actually இடுப்பெலும்பு surgery காக தான் உங்க கணவர் இங்க கொண்டு வந்து சேர்த்தாரு. But அன்னைக்கி ராத்திரி உங்களுக்கு multi organ failure. அதனால surgery பண்ண முடியல. அடிவயித்துல பயங்கரமா அடி பட்டுருந்துது. ஆனா CT scan ல ஒன்னும் கண்டுபிடிக்க முடியல. So Emergency Exploratory Laparotomy (வயிற்றைக் கிழித்து குடல் முழுவதையும் வெளியிலெடுத்து கையில் வைத்துக்கொண்டு நுண்ணோக்கி வழி உற்றுநோக்கி பிரச்சினையைக் கண்டறிவது)பண்ணி பாத்தோம். அடிபட்டதுல குடலுக்குப் போற blood vessel கிழிஞ்சு ஒரு அடி நீளத்துக்கு குடல் அழுகி இருந்துது. அதை வெட்டி எடுத்துருக்கோம். சுமார் 1 லிட்டருக்கு internal bleeding ஆகியிருந்துச்சு. அதை drain பண்ணினோம். குடலோட முனையை வெளியில வச்சுருக்கோம்.
மூச்சு விட சிரமப்பட்டிங்க. Low BP. So வென்டிலேட்டர் ல வச்சோம். அதிக நாள் வெண்டி ல வைக்கனும்கறதுனால tracheostomy பண்ணினோம். (குரல்வளையில் துளையிட்டு பெரிய இரும்பு குழாய் பொருத்தி அதில் வெண்டிலேட்டரை இணைக்கும் செயல்முறை)
But நாளுக்கு நாள் நிலைமை மோசமாச்சு. பொதுவா நம்ம மூச்சு விட 20% ஆக்ஸிஜன் போதும். உங்களுக்கு 100% ஆக்ஸிஜன் கொடுத்தும் உங்களால மூச்சுவிட முடியல. X ray எடுத்து பாத்ததுல lungs fullஆ infection ஆகி நீர் சுரந்துருந்தது.
Aspiration pneumonia. ECMOல வைக்கிறத தவிர வழி இல்ல. 5% பிழைக்க வாய்ப்பிருக்கு. லட்ச கணக்குல செலவாகும் என்ன பண்ணலாம் னு உங்க husbandகிட்ட parents கிட்ட கேட்டோம். வச்சுருங்க னு சொன்னாங்க.
(எக்மோ பற்றி விளக்கமாக எக்மோ-தெரிந்துகொள்ளுங்கள் பதிவில் காண்க)
14 days ECMO ல வச்சும் 13 வாட்டி bronchoscopy (fiber optic camera பொறுத்தப்பட்ட tube ஒன்றை tracheostomy வழியாக உள்ளே விட்டு நுரையீரல் அடிவரை சென்று நுரையீரலில் சுரந்துள்ள நீரையும் இரத்தத்தையும் வெளியேற்றி, அதிலுள்ள கிருமி என்னவென்று கண்டறியும் செயல்முறை) பண்ணியும் எந்த முன்னேற்றமும் இல்ல. மறுபடியும் multi organ failure. ECMO லேந்து எடுத்துடலாம் னு முடிவு பண்ணினோம். ஆனா உங்க கணவர் Mr.குரு.. அப்பா.. what a person he is.. அப்படி அழுதாரு.. அவளோ கெஞ்சினாரு. இப்ப நினைச்சாலும் அந்த scene அழவைக்கிது. அவ எனக்கு வேணும், ஏதாவது பண்ணுங்க, விட்ராதிங்கன்னு ரொம்ப அழுதாரு. அவருக்காக நாங்க பெரிய risk எடுத்தோம். வேற ECMO circuit மாத்தினோம்.
அவருக்கு உங்க மேல இருக்குற பாசம் தான் ஜெய்ச்சிது. Really it was a miracle. மறு நாளே ஒரு பெரிய முன்னேற்றம் தெரிஞ்சிது. Vital organs திரும்ப வேலை செய்ய ஆரம்பிச்சுது. நுரையீரல்ல சுரந்திருந்த நீரும் பாதி அளவு குறைஞ்சிது. 20ஆவது நாள் ECMO லேருந்து வெளிய எடுத்தோம். திரும்ப வென்டிலேட்டர் சப்போர்ட்டுக்கு வந்திங்க. இன்னிக்கி 44 நாள் ஆகுது நீங்க சாப்பிட்டு; உங்களுக்காக நீங்க மூச்சுவிட்டு. இந்த மெஷின் தான் விட்டுட்டிருக்கு. இப்படி நீங்க எங்களோட பேசுவிங்கன்னு சத்தியமா நாங்க யாருமே நினைக்கல்ல. குரு தான் விடா பிடியா இருந்து உங்களை மீட்டிருக்காரு .” என்று கூறி முடித்தார்.
பல்வேறு உணர்ச்சிகளின் வசப்பட்டேன்…
“அதிர்ச்சியா இருக்கா Mrs.வித்யா?”
“எனக்கு இது எதுவுமே தெரியலயே doctor!!”
“Full sedation. மயக்கத்துல வச்சுருந்தோம்”
“என்னென்ன மாத்தியிருக்கிங்க?”
“ஒன்னும் மாத்தல்லை. எல்லாம் உங்களோடது தான்.”
“என்னென்ன எடுத்துருக்கிங்க?”
“குடல் மட்டும் ஓரளவு எடுத்திருக்கோம். வேற ஒன்னும் எடுக்கல்ல. கர்ப்பப்பை, சிறுநீர்ப்பை, வலது கண் ஜஸ்ட் மிஸ்”
“இப்ப என்ன treatment plan?”
புருவங்கள் உயர்த்திப் புன்னகைத்தார்.”Very sportive. நெஜமாவே bold தான் நீங்க. சாப்பிட வைக்கனும். ஆக்ஸிஜன் சப்போர்ட் கொஞ்ச கொஞ்சமா குறைச்சு room air கு கொண்டு வரனும். அடிவயிற்றுல ஒரு open wound இருக்கு. அதை soucher பண்ணனும். Chair ல உக்கார வைக்கனும். நடக்க வைக்கனும். தீவிர physiotherapy கொடுக்கனும். இப்போதைக்கு இதுதான்.” என்று சொன்னார்.
பரஸ்பர புன்னகை ஒன்றைப் பரிமாரிக்கொண்டோம். வெளியேறினார்.
அவர் எனக்காக அழுதார் என்று மருத்துவர் சொன்னதை நினைத்து நினைத்துப் பூரித்தேன். அவரை உடனே பார்க்க வேண்டும்போல் இருந்தது. அடுத்த நிமிடமே வந்தார்…
கண்களில் புன்னகையோடு..
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.