“ப்ளீஸ் மாமா இந்த ஒரு தடவ மட்டும் ஹெல்ப் பண்ணு மாமா, ப்ளீஸ்”.
“நீ தேவ இல்லாம அவ விஷயத்துல தலை விடுற நித்யா , ரொம்ப பெரிய பிரச்சனையா ஆயிடும் ,அவுளுக்குத்தான் புத்தி இல்லனா உனக்கு எங்க போச்சு” என்றான்.
அவனிடம் பலவாறு பேசி கண்டபடி திட்டு வாங்கினாள், ஒரு கட்டத்தில் “ப்ளீஸ் ஒரு தடவ நான் சொல்றத கேளுங்க” என்ற விராலியின் குரலில் திரும்பியவன் நித்யாவை முறைக்க.
“அவளுக்கு தெரியாது நீங்க என்ன பாக்க ஒத்துக்கலைன்னு அவ சொன்னா , எப்படியும் இந்த பக்கம்தான் போவீங்க அதான் இங்கேயே காத்திருந்தேன்” என்றவள் அவனிடம் பொறுமையாக தன் நிலையை விலக்கினாள்.
“வேற வழி இல்லையே எனக்கு , சிலர் பிடிச்ச வாழ்க்கை கிடைக்க போராடுவாங்க சிலர் கிடச்சத ஏத்துக்கிட்டு வாழ பழகுவாங்க , எனக்கு விரும்பினது கிடைக்கல வீட்ல சொல்றத ஏத்துக்கிட்டு வாழ பிடிக்கல , எனக்கான வழிய நானே தேடிக்குறேன்” என்றாள் உறுதியாக.
ஆழமூச்செடுத்து தலையை ஆட்டியவன் “இதுதான் கடைசி பிரெண்ட்னு சொல்லிக்கிட்டு எவளையாவது இனிமே கூட்டிட்டு வந்த கொன்றுவேன் பாத்துக்க” என்றான் நித்யாவிடம்.
“சாத்தியமா இல்ல மாமா இவளும் ஹிமானியும் மட்டும் தான் பிரென்ட்” என்றாள் நித்யா வேகமாக.
“அந்த புள்ளைய பத்தி நீயெல்லாம் பேசாத , அது நல்ல புள்ள நீயெல்லாம் பெரிய தொல்ல” என்றவன் கோபத்தில் வண்டியை எடுத்தான்.
“மாமா இரு நானும் வரேன்” என்று அவன் பின்னேயே ஓடி வந்தாள் நித்யா.
“நடந்து வா கொழுப்பு குறையட்டும்” என்றவன் சென்றுவிட்டான்.
“நம்மள தொல்லை சொல்லிடுச்சே” என்று யோசித்தவள் “மச் சரியாதான சொல்லி இருக்கு , அந்த ஹிமானி புள்ள இருக்குற இடம் தெரியாம இருக்கு , இவளை பிரெண்டா வெச்சுகிட்டு இன்னும் யார் யார் கிட்டலாம் மிதி வாங்க போறேனோ” என்று புலம்பியவள் விராலியுடன் நடக்க தொடங்கினாள்.
நித்யாவுடன் நன்றாக ஒட்டிக்கொண்டாள் மல்லி , பயந்து வீட்டை விட்டு வெளியில் போகாமல் இருந்தவர்கள் மெல்ல மெல்ல கடைக்கு காட்டுக்கு கோவிலுக்கு என்று செல்ல தொடங்கினர்.
அதிலும் நித்யாவுடன் கோவிலுக்கு , மற்றும் மாலை வேலை மலையில் சென்று அமர்வது மல்லிக்கு மிகவும் பிடித்தது , அண்ணனை பற்றி தெரிந்து கொள்கிறேன் குடும்பத்தை பற்றி தெரிந்து கொள்கிறேன் என்று அதிகம் இமயனை பற்றிய செய்திகளை அறிந்துகொள்ள தொடங்கினாள்.
அன்றும் மாலை நெடுஞ்சாலையை ஒட்டி மலைக்கு நடுவே பாறையை குடைந்து கட்டப்பட்ட கல் மண்டபத்தில் அமர்ந்திருந்தனர் , நாற்பது படிகளை கொண்டது அது , கற்படிகள் ஏறி மேலே சென்றால் வெறும் மண்டபமாக இருக்கும்.
அங்கிருந்து பார்த்தால் ஊரே தெரியும் அவ்வளவு அழகாக இருக்கும் நல்ல காற்றும் நிழலும் அங்கே மாலை வேளையில் நித்யாவுடன் மல்லியும் செல்ல தொடங்கினாள்.
இடையில் சில முறை ஹிமானியும் அவர்களுடன் சென்றாள், இமயனை பற்றி அறிந்துகொள்ள மல்லி காண்பிக்கும் ஆர்வம் மனதை நெருடியது.
அவளுக்கு அவனை பிடித்திருந்தது அவனை பற்றி அதிகம் தெரிந்துகொள்ளவும் அவனை நெருங்கும் வழிகளையும் யோசித்தாள் மல்லி.
இன்றும் அவன் விரும்பி உண்ணும் உணவை பற்றிய பேச்சு சென்றது “மாமாக்கும் அண்ணாக்கும் தேங்காய்ப்பால் திரட்டினா ரொம்ப பிடிக்கும் , அம்மா அடிக்கடி செஞ்சு குடுக்கும் இப்போ ரெண்டு பேருக்கும் நேரமே இருக்கறதில்லை” என்றாள் நித்யா.
“அது எப்படி செய்யணும்” என்றாள் மல்லி ஆர்வமாக.
“ஆமா நீயும் செஞ்சு சாப்பிட்டு பாரு நல்லா இருக்கும்” என்றவள் செய்முறையை விளக்க மிக கவனமாக கேட்டுக்கொண்டாள் மல்லி.
அன்று கோவில் நன்கொடை வாங்க வந்தபோது பார்த்தது, இரண்டு வாரம் முடிந்து விட்டது , மனம் மிகவும் ஏங்கியது அவனை காண , அதும் இப்பொழுதே காண வேண்டும் என்ற ஆசை ஆழிப்பேரலையாக அவளை விழுங்கியது.
“நித்யா உன் போன் குடுக்குறியா ஒரு கால் பண்ணிக்குறேன்” என்றாள் ஹிமா.
“ஏய்!! என்னடி எடுத்துட்டு போ” என்று ஹிமாவின் கையில் தன் அலைப்பேசியை வைத்தாள் நித்யா , அதை வாங்கியவள் அவனின் எண்ணை தேட இமையா அண்ணன் என்ற பெயரில் விரல்கள் தேங்கியது.
அழைத்துவிட்டாள் மனம் படபடத்தது , ஒரு வேகத்தில் அழைத்துவிட்டாள் என்ன பேச ஒன்றும் தெரியவில்லை.
அந்த பக்கம் ஒரு நொடி அமைதி , ஹிமானி அழைப்பாள் என்று அவன் கனவில் கூட எண்ணவில்லை.
“எனக்கு… எனக்கு… உங்களை பாக்கணும்” என்றவள் குரலே அவனுக்கு சரியாகப்படவில்லை.
“எங்க இருக்க” என்றான் உடனே , அவள் சொன்ன அடுத்த நொடியே அங்கிருந்து புறப்பட்டுவிட்டான் , நித்யாவிடம் அப்படியே அலைப்பேசியை கொடுத்துவிட்டாள் , சிந்தையில் வேறு ஒன்றும் ஓடவில்லை.
அவனை பார்க்க வேண்டும் அதுமட்டுமே , யாரோ தன்னிடம் இருந்து அவனை பறித்து செல்வதைப்போல மனம் அல்லாடியது.
“ஹிமா போலாமா நேரம் ஆச்சு” என்ற நித்யாவை பார்த்து விழித்தாள் “என்னடி ஏன் இப்படி முழிக்குற நேரம் ஆகுது போகவேண்டாமா வா” என்க.
“ஹ்ம்ம்” என்றவள் அவர்களுடன் மெதுவாக படி இறங்கினாள் பாதி படியை கடக்கும்போதே செந்தில் படி ஏறி வருவது தெரிந்தது.
“சரி” என்று தந்தையுடன் படி இறங்க , இமயன் மேலே வந்துகொண்டிருந்தான் , மல்லியின் நடை நின்றது அவனை ஆர்வமாக அவள் பார்த்திருக்க , இமயனின் விழிகள் அவனின் தேவதையின் மீதே.
விழிகள் நிறைந்து இதழ்கள் துடிக்க அவள் நின்ற கோலம் மனதை பிசைந்தது.
அவனைபார்த்து நின்ற செந்தில் எத்தனை நேரம் நின்றாலும் அவன் தங்களோடு பேசப்போவதில்லை என்று அறிந்து மகளை அழைத்துக்கொண்டு சென்றார்.
“என்னண்ணா இங்க வந்திருக்கீங்க” என்ற நித்யாவை பார்த்தவன் “பிரென்ட் வரேன்னு சொல்லி இருக்கான் , நீ கெளம்பு” என்றான்.
“சரிண்ணா” என்றவள் “வா ஹிமா…” என்று அவனை கடந்து செல்ல , அடுத்த அடி வைக்க முடியாமல் தடுமாறினாள் ஹிமானி , அவளை நெருங்க முடியா வேதனையில் இறுகி நின்றான் இமயன்.
அதே நேரம் அங்குவந்து சேர்ந்தான் மதி , பண்ணையில் இருந்து இறங்கும்போதே மதிக்கு அழைத்து விவரம் சொல்லியவன் “நித்யாவை அங்கேயிருந்து எப்படியாவது கூட்டிட்டு போ” என்று சொல்லியிருந்தான்.
“உன் போன் குடு” என்றான் மதி.
“என்னாச்சு மாமா?” என்றவள் போனை நீட்ட.
“என் போன் ஒர்க் ஆகல” என்றவன் ,அவளுடையதில் கால் ஹிஸ்டரி எடுத்து இமயனின் எண்ணை அழித்தான் , பிறகு அவனுடைய எண்ணிற்கு அழைக்க அவனின் அலைப்பேசி ஒளி எழுப்பியது.
விராலியை பற்றி பேசவேண்டும் என்றதை மிக மெதுவாக கூறியதால் ஹிமானிக்கு கேட்கவில்லை “நித்யா நீ போ நானே போய்க்கிறேன் , எனக்கு கொஞ்சம் தனியா நடக்கணும்” என்றாள்.
“இல்ல ஹிமா…” என்ற நித்யாவை பார்த்து “நித்யா… எனக்கு கொஞ்சம் தனிமை தேவ ப்ளீஸ்” என்றவள் கண்ணீரை பார்த்த நித்யாவிற்கு அவளை விட்டு செல்ல மனமில்லை.
ஆனால் மற்றவரின் கண்காணிப்பிலே எப்பொழுதும் இருப்பது எத்தனை கொடுமை என்பதை நித்யா உணர்ந்திருந்தாள்.
இப்பொழுது தான் கட்டாயப்படுத்தி அவளுடன் இருந்தால் அது இன்னும் அவளை காயப்படுத்தும் என்பதை உணர்ந்து “பத்திரமா வீட்டுக்கு போ , போனதும் எனக்கு போன் பண்ணு” என்க சம்மதமாக தலை அசைத்தாள் ஹிமானி.
அவளை பார்த்துக்கொண்டே மதியுடன் சென்றாள் நித்யா.
இவ்வளவு நேரம் இருந்த இறுக்கம் விலகியதுபோல உடல் சட்டென்று தளர்ந்தது , திரும்பி மேலே பார்க்க அவளை நோக்கி வந்துகொண்டிருந்தான் இமயன்.
நொடியும் தாமதிக்காமல் அவனை நோக்கி சென்றவள் இறுக்கமாக கட்டிக்கொண்டாள் , அவன் அதிர்ந்து நின்றான் நிச்சயம் இதை எதிர்ப்பார்க்கவில்லை.
“ஹிமா….. பண்ணைல இருந்து அப்படியே வந்திருக்கேன் உனக்கு அந்த ஸ்மெல் பிடிக்காம இருக்கலாம்” என்றான் மெதுவாக , அவனை நிமிர்ந்து பார்க்காமல் இன்னும் அவனை இறுக்கமாக அணைத்தாள்.
உள்ளுக்குள் எதையோ நினைத்து மருகுகிறாள் என்று புரிந்தது “ஒன்னும் இல்லடா ஒன்னும் இல்ல” என்றவன் தன்னுள் அவளை பொதிந்துகொள்ள.