“அப்போ இன்னும் டின்னர் ஆகலை. போய் சாப்பிடுங்க. டைமாச்சு. சித்தப்பா என் கூட பேசறதால தான் சாப்பிடாம இருக்கீங்கன்னு திட்ட போறாங்க…”
அவன் சிரிப்புடன் சொன்னலும் வம்சியின் பேச்சின் பின்னால் இருந்த வருத்தம் சாந்தினி அறியாததல்ல.
“இங்கா ஏதேய்னா உந்தா பின்னி?…” ’வேறோன்னுமில்லையே சித்தி’ என கேட்டான்.
“ஹ்ம்ம், இல்லப்பா, உடம்பை பார்த்துக்கோ…” என்று சொல்லி அழைப்பை துண்டித்துவிட்டார்.
போனை வைத்துவிட்டு வந்து தண்ணீரை எடுத்து குடித்தவன் உடை மாற்றி வந்து படுத்துவிட்டான்.
அருகே இரண்டு மொபைல்கள் எடுத்து வைத்துக்கொண்டான். எந்த நேரமும் அழைப்பு வரலாம். இது அன்றாட நடவடிக்கை என்பதால் தயாராகவே இருப்பான் வம்சி சைத்ரயேஷ்.
தந்தையும் ராணுவத்தில் கர்னலாக பதவியில் பணிபுரிந்த நேரம் உயிரிழந்திருக்க அதற்கு முன்பே சிறு வயதிலேயே தாயையும் இழந்திருந்தான் வம்சி சைத்ரயேஷ்.
அங்கேயே வளர்ந்து வந்ததால் மனம் முழுவதும் ராணுவத்தில் பணி புரியவேண்டும் என்பதே லட்சியமாக இருக்க அவனின் தந்தை பெரிதும் உறுதுணையாக இருந்தார்.
வம்சி சைத்ரயேஷ் பணியில் சேர்ந்த நாளும், தந்தையின் இறப்பும் ஒன்றாக இருக்க இன்றளவும் மறக்கமுடியாத நாள் அது.
தாயில்லா பிள்ளை என்று சாந்தினி பாசத்துடன் பார்த்துக்கொண்டாலும் சித்தப்பா ஸ்ரீஹரி எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை.
சில நேரங்களின் அனுதாபத்துடன் பார்ப்பார். சில நேரங்களில் இதென்ன தேவையில்லாத தொல்லை என்பதை போல பார்ப்பார்.
வெளியில் பிரச்சனை என்றாலும் வீட்டில் காண்பித்து வாக்குவாதம் கூடும் சமயங்களில் உன் அக்கா மகனை பார்ப்பதனால் எங்களை கவனிக்கவில்லை என்னும் குற்றசாட்டுகள் சரளமாக வரும்.
ஆரம்பத்தில் இருந்தே அவரின் குணங்கள் அத்துப்படி என்பதால் முடிந்தளவு ஒதுங்கியே இருந்துகொள்வான் வம்சி.
அவனின் இயல்பான குணமும் அப்படியே வாய்த்துவிட அவனின் சித்தியும், அவர் பிள்ளைகளான ப்ரணவ், ஷைலஜா அப்படியே சாந்தினியை போல.
விலகி சென்றாலும் அவனை இழுத்து பிடிக்கும் காந்தங்கள் இருவரும். கோபமோ, சந்தோஷமோ அண்ணன் முதலில் இருக்கவேண்டும்.
இதை எதையும் நினைத்து வருத்தம் கொள்ள கூட விரும்பாதவன் அவன் என்பதால் இலகுவாக தேறிவிடுவான்.
காலை எழுந்து குளித்து பணிக்கு கிளம்ப ஆனந்த் வந்துவிட்டான் அவனை தேடி.
“என்ன வம்சி, இன்னும் டைம் இருக்கே மேன்?…” என கை கடிகாரத்தை பார்த்து சொல்ல,
“சோ வாட்? கிளம்பிட்டேன்…” என சிரித்தவன் கையில் இருந்த தொப்பியை தலைக்கு மாட்டினான்.
“ஹ்ம்ம், நைட் பசங்க பேசினதுல கொஞ்சம் டென்ஷன் போல?…” என்றதும் தான் விஷயம் ஞாபகம் வந்தது அவனுக்கு.
“ஓஹ், அதுவா, நான் மறந்துட்டேன். ஆனா டென்ஷன் எல்லாம் இல்லை…”
“கமான் வம்சி, டென்ஷன் ஆனாலும் தப்பில்லையே? அப்பத்தான் யோசிப்ப. யோசிக்கும் போது தான் இன்னும் அந்த நினைப்பு ஆழமாகும்…” என்றான்.
“குட் பிலாசபி. ஆனா நான் அதுக்கு ஆளில்லை…” என்று சிரிப்புடன் நடந்தான் அந்த காரிடாரில்.
“அது தெரிய போக தான் நாங்களே உன்னை உசுப்பிவிடறோம். இல்லைன்னா வம்சி சாமிக்கு லவ் ட்ராக் எப்ப ஓட்டறது?…”
“வேற டாப்பிக்கே இல்லையா?…” என்று சொல்லும் பொழுதே அவனின் மொபைலில் குறுஞ்செய்தி வந்த தகவல்.
ஆனந்துடன் பேசிக்கொண்டே அதனையும் ஒரு பார்வை பார்த்துக்கொண்டு நடந்தான்.
ப்ரணவ் தான் அனுப்பியிருந்தான் சில போட்டோக்களும், வீடியோக்களும். அத்தனையும் அவனின் பெண் பார்த்து நிச்சயித்த படலத்தின் தொகுப்புகள்.
“நைஸ்…” மெல்லிய புன்னகை மென்மையாக படர்ந்தது வம்சி முகத்தில்.
“என்ன நைஸ்? அந்த பொண்ணு தான் மெசேஜா?…” என கேட்க ‘திருந்தவே மாட்டியா?’ என்பதை போல தலையசைப்பு தான் ஆனந்திற்கு கிடைத்தது.
“இது ப்ரணவ்க்கு நடந்த எங்கேஜ்மென்ட் போட்டோஸ், வீடியோஸ். உனக்கு ரொம்ப ஆசை தான்…” என்று ஆனந்தின் தலையில் தட்டினான்.
“ஆசைப்பட்டு என்ன செய்ய? உன் சித்தி ஒன்னும் சொல்லலையா?…” என்றதும் தலையாட்டினான்.
“அவங்களுக்கு வருத்தம் தான். ஆனா என்ன பண்ண? அவங்க ரெடியா இருக்காங்க. நான் இந்த வருஷம் போகட்டும்ன்னு சொல்லிட்டேன்…”
“இருக்கும் வம்சி, அவங்க பையனுக்கு உன்னை விட ஒரு வயசு கம்மி. ஆனாலும் இதோ மேரேஜ் பண்ணிக்க போறான்…”
“ஆனந்த், உனக்கு தெரியாதா? மேரேஜ் இப்போ இல்லை…” என்றவன் ஆனந்தின் முன்னால் திரும்பி நின்றவன்,
“நான் ஏன் மேன் லைஃப் வேஸ்ட் பண்ண போறேன்? வேணும்னா அப்ப ஒரு கல்யாணம் பண்ணிப்பேன் என் வொய்பை…” என்று கண்ணடித்து சொல்ல,
“உன்னை நம்பவே முடியலை. கல்யாணமானதும் என்ன பண்ணுவியோ?…” ஆனந்த் சொல்ல,
“எல்லாரும் என்ன பண்ணாங்களோ?…”
“சிவசிவா…” ஆனந்த் நான்கு எட்டுக்கள் முன்னே வைத்து நடந்து செல்ல வம்சி அவனின் ஓட்டத்தில் சிரிப்புடன் நடந்தான்.
ஆளுநர் மாளிகைக்குள் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே நுழைந்துவிட்டவன் பணியில் இணைந்துகொள்ள முகத்தில் இறுக்கமும், ஆராயும் பார்வையும் ஒட்டிக்கொண்டது.
விளையாட்டுத்தனங்கள் எப்போதாவது அவனிடம் வெளிப்படும் இப்படி. அன்றைய பொழுது மனது அத்தனை லேசாக இருக்கும்.
அன்று காலை ஆனந்துடன் பேசிக்கொண்டு வந்தவனுக்குள்ளும் இதமான மனநிலை.
மூன்று மாதங்கள் கடந்துவிட்டது. வம்சியின் மனதில் நிலா என்று பதிந்திருந்த ஷ்ராவணியின் நினைவுகள் கூட கலைந்திருந்தது.
அந்த சந்திப்பையும், அவளையும், அவள் தருவேன் என்று சொல்லிய பணத்தையுமே அவன் மறந்துவிட்டிருந்தான்.
முதல் மாதம் நிறைவுறும் தருவாயில் ஆனந்த் ஞாபகப்படுத்தி அந்த பெண்ணின் ஞாபகம் வந்தது.
“என்னடா, பணத்தை தருவேன்னு ஒத்த கால்ல நின்ன பொண்ணை இன்னும் காணும்?…? மாசம் தேதி பத்தாகிடுச்சு…” என கிண்டலாக கேட்க,
“அதுவே சின்ன பொண்ணு. ஒரு வேகத்துல பேசினா? அவங்க குடும்ப சூழ்நிலை வேற ஆனந்த். (https://prodavinci.com) கமிட்மெண்ட்ஸ் இருக்கும். இதுக்காக கேட்க சொல்றியா நீ?…” என்றவன்,
“என்ன ஞாபகப்படுத்தி பார்க்கலாம்ன்னு நினைக்கிறியா? வேஸ்ட் ஆஃப் டைம் தான் உனக்கு…” என்று தோளை குலுக்கி சென்றான்.
அதன் பின் பேச்சுக்கள் எதுவும் அதை பற்றி இருந்ததில்லை. ஷ்ராவணியின் எண்ணும் சேமிக்காமல் இருக்க அவனாக எதையும் தேடும் சுபாவமில்லை என்பதால் மறந்தேவிட்டிருந்தான்.
ஆனந்த் பேசிய பொழுது அந்த பெண்ணை மீண்டும் பார்த்தால் கூட அடையாளம் கண்டுபிடிக்க போவதில்லை என்பது போல நினைத்திருக்க அவனின் எண்ணம் பொய்யானது.