வெகு நாட்களுக்கு பிறகு மகேஸ்வரனுக்கு காலை பொழுது இனிமையாக இருந்தது.நேற்று வீட்டிற்கு தந்தையுடன் சேர்ந்து சென்றவுடன் தாய் வைரத்திற்கு அத்தனை மகிழ்ச்சி.மகனும் தாயை தாவி அணைத்துக் கொண்டவன் அவரிடம் மன்னிப்பை வேண்டிட,
“போடா படவா….உன் கூட கோவம் கோவம் தான்….”என்று செல்லமாக அவனின் தலையை தட்டிவிட்டு,
“முதல்ல இரண்டு பேரையும் சுத்தி போடனும்….என் கண்ணே பட்டு போச்சு உங்க இரண்டு பேரையும் சேர்த்து பார்த்து…..எத்தனை வருஷம் ஆச்சு அப்பாவும்,பிள்ளையும் இப்படி சேர்ந்து பேசி சிரிச்சு பார்த்து கண்ணெல்லாம் நிறைஞ்சு போச்சு…..”என்றவர் வேகமாக உள்ளே சென்று உப்பு மிளகாய் எடுத்துவந்து சுற்றி போட,
“ம்ம்மா….நீ இனி தினமும் சுத்தி தான் போடனும் ரெடியா இருந்துக்க….”என்றவன் மாணிக்கத்திடம் திரும்பி,
“ப்பபா…நாளையிலேந்து நானும் கேரேஜ்க்கு வரேன்…..எனக்கு அங்க வேலை இருக்கு…..”என்றுவிட்டு தனது அறைக்கு செல்ல,வைரத்திற்கு மகனின் இந்த திடீர் மாற்றம் கண்டு ஆச்சிரியமாக கணவனை பார்க்க,அவரோ கண்கள் கலங்கி நின்றார்.
“என்னங்க நீங்க இப்படி கலங்கி நிக்குறீங்க….”என்று வைரம் பயந்து கணவரின் தோள்களை தொட,
“அடி போடீ….இது ஆனந்த கண்ணீர்டீ….என் புள்ளை எனக்கு கிடைச்சிட்டான்…எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா….”என்று கூறியவர்,
“புள்ளைக்கு புடிச்ச சாப்பாடா செய்…..நான் போய் நாளைக்கு மதியம் வீட்டுக்கு கறி அனுப்ப சொல்லிட்டு வரேன்….”என்றுவிட்டு சின்ன பிள்ளை போல குதித்து செல்ல,
“அட கிழவருக்கு என்ன சின்ன பிள்ளைனு நினைப்பா….பொறுமையா போங்க….”என்று வைரம் கிண்டல் செய்ய,
“அடி போடி கிழவி….யாரை பார்த்து கிழவன்னு சொல்லுர என் புள்ளை என்கூட இருக்கான் எனக்கு பத்து வயசு குறைஞ்சு போச்சு…”என்று குதுகலித்துவிட்டு மாணிக்கம் செல்ல வைரமோ தலையில் தட்டிக் கொண்டு உள்ளே சென்றார்.இதை மாடியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த மகேஸ்வரன் எப்படி உணர்ந்தான் என்று வார்த்தைகளால் வரையறுக்க முடியவில்லை.எனது சிறிய மாற்றம் என் குடும்பத்தில் இத்தனை சந்தோஷத்தை தருமா தருகிறதே கண் கூடாக பார்த்துவிட்டானே இனி என்ன வேண்டும் அவனிற்கு அனைத்தையும் நல்லவிதமாக நான் தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானம் எடுத்துக் கொண்டான் இதையெல்லாம் நினைத்தபடி கேரேஜிற்கு வண்டியில் கொண்டிருந்தவனை களைத்தது ஒரு பெண்ணின் குரல்.
“அடேய்….அடேய்…பார்த்துவாடா…..ஆஆஆஆஆஆ….”என்ற சத்ததில் நிகழ்வுக்கு வந்தவன் தன் வண்டியின் எதிரே ஒரு பெண் கையில் இரு பைகளுடன் வர வண்டியை ஒடித்து திருப்பும் முன் வண்டி அவளை சைடில் உரசியிருந்தது.அதில் அவள் நிலைதடுமாறி கீழே விழுந்துவிட மகேஸ்வரனோ பயந்து வண்டியை ஓரம் கட்டிவிட்டு அவளிடம் வர அவளோ அவனை வண்ண வண்ண வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருந்தாள்.
“என்னடா சாரி……கண்ணை என்ன பிடரியில வச்சிக்கிட்டா வண்டி ஓட்டிட்டு வருவ….உன்னால சாமான் எல்லாம் போச்சு….”என்று திட்டியபடி வீதியில் சிதறிக் கிடந்த பொருட்களை அவள் எடுக்க,
“ஹலோ….என்ன மரியாதை இல்லாம பேசிறீங்க….அதான் சாரி சொல்லுறேன்ல….”
“எதே….வண்டி ஓட்டிக்கிட்டு கனவு கண்டபடி வந்து இடிச்சிட்டு உனக்கு மரியாதை ஒண்ணுதான் இப்ப குறைச்சல்….”என்று கத்திய படி அவனிடம் நெங்க,மகேஸ்வரன் அவளின் வேகத்தில் இரண்டடி பின்னுக்கு சென்றுவிட்டான்.
“ஓய்….என்ன…குள்ள கத்திரிக்கா…நீ மட்டும் என்ன நடு ரோட்டுல டான்ஸ் ஆடிக்கிட்டு வந்தா வண்டி இடிக்காம என்ன செய்யும்….”என்று கேட்க,
“ஏய்…….என்ன பேசிக்கிட்டு இருக்கும் போதே கல்லை எடுக்குற…”என்றவன் பின்னே செல்ல,
“ஓடிடு……இல்லை மண்டைய பிளந்துடுவேன்….ஆளப்பாரு வளந்து கெட்டவன்….வந்துட்டான் காலையிலே என் உயிரை எடுக்க….”என்று கூறிக் கொண்டிருக்கும் போதே மகேஸ்வரன் தனது வண்டியை மறந்தவனாக ஓடியேவிட்டான்.எங்கே அவள் அடித்துவிட்டாள் மண்டை இரண்டாவது உண்மை.கேரேஜிற்கு வேகமாக ஓடி வந்தவன் தந்தையின் அறைக்கு சென்று அங்கு கேனில் இருந்த தண்ணீரை ஒன்றுக்கு இரண்டு டம்பளர் குடித்ததும் தான் தெளிந்தான்.
“குள்ள கத்திரிக்கா…இப்படி திடீர்னு கல்லை எடுத்துட்டாளே….ராட்சசி…இருடீ என்னைக்காவது என் கையில திரும்பியும் மாட்டுவள்ள அப்ப இருக்கு….”என்று பல்லை கடித்தவனுக்கு அப்போது தான் வண்டியின் நியாபகம் வர,
“ச்சை….இந்த பிசாசால….என் வண்டியை மறந்துட்டு வந்துட்டேன்….”என்று தலையில் தட்டிக் கொண்டு மீண்டும் வண்டியை எடுக்க சென்றான்.கேரேஜின் அருகில் தான் இந்த தள்ளு முள்ளு நடந்திருக்க வேகமாக வண்டி இருக்கும் இடம் நோக்கி சென்றவன் தனது வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பும் வேலையில் தான் அதே சாலையில் பரிதியுடன் நின்றிருந்தாள் அந்த பெண்.
இங்கு திவ்யாவோ பரிதியை வழியில் மறித்து சண்டை பிடித்துக் கொண்டிருந்தாள்.
“ஏன் ராசா என் உயிரை எடுக்கிறீங்க….ஒரு நாள் தான லீவ் போட சொல்லுறோம் போட்டா தான் என்ன….”என்று அவள் கூற,
“மரியாதையா நகரு….ஓங்கி ஒரு அறைவிட்டேன்…..”
“நான் செத்துபோயிடுவேன்….நீ எல்லாம் அடிச்சா நான் தாங்குவேனா….”என்று அவள் அப்போதும் விடாமல் பேச,பரிதியின் பொறுமை கரைந்து கொண்டிருந்தது.இதை தூரத்திலிருந்து கவனித்த மிருது வேகமாக வர,
“ஏய் நீ எதுக்கு இப்ப வேகமா வர….ஆங்….”என்று அதற்கும் பரிதி அவளை காய அவனை முறைத்து பார்த்தவள் திவியிடம்,
“திவி வா…நாம போகலாம்….அவருக்கு வேலை இருக்கு போல….வா…”என்று அவளின் கையை பிடித்து இழுக்க,
“அட நீ ஒருத்தி எப்ப பாரு உன் ராசாவை விட்டுக் கொடுத்துடாத….”என்று அவளின் இழுப்புக் செல்ல,பரிதி சத்தமாகவே,
“திமிறுபிடிச்சவ….”என்று கூற,
“நீங்களும் திமிறு பிடிச்சவரு தான்…”என்று மிருதுளா திரும்பி கத்திவிட்டு சென்றாள்.மிருதுளாவிற்கு ஐந்தாம் மாதம் மருந்து ஊத்த வேண்டும் என்று காலையில் நாயகி கூற,திவ்யா பிடித்துக் கொண்டாள்.எப்போது செய்யலாம் என்னென்ன செய்ய வேண்டும் என்று அனைத்தும் கேட்டவள்.அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பரிதியிடம் கூற அவனோ எனக்கு வேலையிருக்கிறது என்று கூறி கிளம்பிவிட்டான்.அதனால் தான் வழியை மறித்து சண்டையிட்டுக் கொண்டிருந்தாள்.
“எனக்கு இன்னைக்கு நேரமே சரியில்லைடீ மிருது….எல்லாத்துக்கும் காரணம் காலையில நான் முழிச்ச அந்த விளங்காம போறவன் தான் ….அவன் மண்டையை உடைக்கமா விட்டுட்டேன்….”என்று பல்லை கடித்தபடி வர,
“ஏன்டீ நீ கவனமில்லாம வந்துட்டு அடுத்தவன் மண்டையை உடைக்கனும்னு சொல்லிக்கிட்டு இருக்க….உன்ன தான்டீ உதைச்சு உப்பு கண்டம் போடனும்….காலையிலேந்து ஒருத்தவங்க விடாம ஒரண்டை இழுத்துக் கிட்டு இருக்க…..என்னைக்கு அந்த தம்பி உன்னை கையை ஓங்க போதோ….”என்று பரிதியை நினைத்து கவலைபட்டபடி நாயகி கூற,
“ம்ம்மா….அதெல்லாம் செய்யமாட்டாரு….நீங்க ஏன் பயப்படுறீங்க….”என்று மிருதுளா அவரை தேற்ற,
“என்ன இருந்தாலும் இவ ரொம்ப பேசுறாமா….அது தப்பு….”என்று நாயகி கூற,
“என் அண்ணன் என்னை தப்பா நினைக்காது….எனக்கு தெரியும்….”என்றாள் திவ்யா.அவளின் பதிலில் மிருதுளா அகமகிழ்ந்து அவளை அணைத்துக் கொண்டாள் என்றாள் நாயகியோ மகளின் முகத்தையே பார்த்தார்.அவளின் தந்தையின் இறப்புக்கு பிறகு யாரையுமே தனது உறவுமுறையில் அழைத்ததும் இல்லை நெருங்கவிட்டதுமில்லை.இன்று பரிதியை அவள் என் அண்ணன் என்று அழுத்தம் கொடுத்து கூறியது நாயகிக்கு எதையோ உணர்த்த,
“திவி நீ எதையாவது என்கிட்ட மறைக்கிறியா….”என்று நேரிடையாக மகளிடம் கேட்டுவிட்டார்.மிருதுளாவோ,
“அவளுக்கு யாரையும் உறவு வச்சி கூப்பிடறதே பிடிக்காது….அந்தளவுக்கு உறவுனா ஓடுவா….அவ மேலையும் தப்பில்ல எங்களோட உறவுகள் கொடுத்த காயம் அப்படி…அதனால நானுமே அவளை மாதிரி தான் இருப்பேன்…..உன் புருஷன் கிட்ட இவ எடுத்துக்குற அதிக படியான பேச்சிலேயே எனக்கு சந்தேகம் தான் ஆனா உன் மேல உள்ள பிரியத்தால தான் பேசுறானு நினைச்சேன்…ஆனா இன்னைக்கு அவ வாயிலேந்து வந்துடுச்சி….அவளையே கேளு…..”என்று கூற
மிருதுளா திவ்யாவின் பக்கம் திரும்ப தாய் தன்னை கண்டு கொண்டதில் திவியின் உடலில் ஒரு நடுக்கம் ஏற்பட அதை முயன்று மறைத்தவள்,
“அதெல்லாம் ஒண்ணுமில்ல….நீங்க இப்ப மிருதுளாக்கு ஐஞ்சாமாசம் என்ன செய்யலாம்னு சொல்லுங்க….”என்று கூற,நாயகியின் நினைப்பு உறுதி பெற்றது என்றால் மிருதுளாவோ,
“ஏய் அவங்க கேட்டதுக்கு நீ முதல்ல பதில் சொல்லு….”என்று கடுமையாக கூற,திவ்யாவின் கண்களில் நீர் படலம்,அதைக் கண்ட மிருதுளா பயந்துவிட்டாள் என்றால் நாயகிக்கோ நெஞ்சம் நடுங்கியது நிச்சயம் விஷயம் பெரியது தான் என்று புரிந்து கொண்டார்.வேகமாக திவ்யாவின் கையை பற்றி தங்களின் வீட்டிற்கு அழைத்து சென்றவர்,
“திவிமா சொல்லிடுடீ….எனக்கு….எனக்கு….”என்று அவர் நெஞ்சை நீவ,
“ம்மா…உட்காருங்க….”என்ற மிருதுளா அவருக்கு தண்ணீர் எடுத்து கொடுக்க,
“ம்மா…நீ பயப்படுற மாதிரி எதுவும் இல்லை….ஒரு தடவை நான் தனியா கடையிலேந்து வந்துட்டு இருந்த போது காலி பசங்க…..”என்று அவள் மேலும் கூறும் முன்,
“அச்சோ….என்னடீ…என்ன நடந்துச்சு….”என்று மிருதுளா பதறி கேட்க,நாயகியோ வார்த்தைகள் அற்று பார்த்தார்.திவ்யா நாயகியின் அருகில் வந்து அவரின் கையை இறுக பற்றிக் கொண்டு,
“ம்மா….எனக்கு ஒண்ணும் நடக்கல…அவனுங்க சில்மிஷம் பண்ணிட்டு வந்தானுங்க….நான் அவனுங்களை கல்லால அடிச்சிட்டு ஓடி வரும் போது தான் பரிதி அண்ணன் வந்திட்டு இருந்தாரு….அவரு நான் ஓடி வரதை பார்த்தவுடன் என்கிட்ட வந்தாரு….அவரை பார்த்த அந்த பசங்க பின்வாங்கினாங்க….அண்ணன் புரிஞ்சிக்கிட்டு அடிச்சி விரட்டிறாரு…..நான் அன்னைக்கு ரொம்ப பயந்து தான் போயிட்டேன் ஆனா….அண்ணன் தான் என்னை தைரியபடுத்தி கூட்டிட்டு வந்தாரு…..”என்று கூற,மிருதுளாவிற்கு அன்று ஒரு நாள் பரிதி திவ்யாவுடன் வந்ததை நினைவு கூர்ந்தாள்.அப்போது இருவருக்கும் சண்டை என்பதால் அவனிடம் பேசவில்லை.
“திவி….அன்…அன்னைக்கு உடம்பு முடியாம….இருந்தியே அதுக்கு முதல் நாளா….”என்று நாயகி கேட்க,திவ்யாவின் தலை ஆமாம் என்று ஆடியது,
“ஏன்டீ இத்தனை நாள் இதை சொல்லல….”என்று மிருதுளா கேட்க,
“அண்ணன் தான் சொல்ல வேண்டாம்னு சொன்னாரு….அதோட எனக்கு அத்தனை தைரியம் சொன்னாரு….எப்போதும் என்கிட்ட நீ தைரியமான பொண்ணு இப்படி சின்ன விஷயத்துக்கு எல்லாம் பயந்தா உன் அம்மாவும் பயப்படுவாங்கனு சொன்னாரு….அதோட நான் மிருது எல்லாம் இருக்கோம் அப்புறம் எதுக்கு உனக்கு பயம்னு சொன்னாரும்மா….அவரு நல்லவருமா நான் கூட அவரை தப்பா தான் நினைச்சேன் ஆனா என்ன அவருக்கு அன்பை காட்ட தெரியலை அவ்வளவு தான்….நம்மளா தான் அந்த உரிமை எடுத்துக்கனும்…..”என்றவள் கலங்கியிருந்த தாயின் முகத்தை துடைத்துவிட்டு அவரின் மடியில் படுத்துக் கொண்டு,
“ம்மா…இதெல்லாம் நமக்கு புதுசு இல்லை…என்ன முன்ன நாம தனியா கடப்போம் இப்ப….நம்ம கூட அண்ணனும் மிருதுவும் கூட இருப்பாங்க….”என்றவள் மிருதுவிடம் திரும்பி,
“என்னடீ இருப்பீங்க தான….”என்று கேட்க,
“அறைஞ்சிடுவேன் இப்படியெல்லாம் பேசினா….”என்று கூற,நாயகியோ கலக்கத்துடன் தான் இருந்தார் என்ன இருந்தாலும் தாய் அல்லவா பயம் இருக்கதானே செய்யும்.
“ம்மா….நம்புங்க…நான் அதை மறந்து கூட போயிட்டேன்….உனக்கு ஒண்ணு தெரியுமா….எப்ப பார்த்தாலும் அண்ணன் நம்ம வீட்டு கதவை உடைச்சி என்கிட்ட சண்டை போடுவாரே அது கூட இந்த விஷயத்துலேந்து என்னை வெளில கொண்டுவர தான்….”என்று கூற,மிருதுளாவும்,நாயகியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.சற்று நேரம் அங்கு அமைதி மட்டுமே நிலவியது.யாரும் எதுவும் பேசவில்லை திவ்யா தான்,
“ப்ச்…இப்படி இருக்குறது எனக்கு பிடிக்கலை….ம்மா….நான் நல்லா இருக்கேன்…என்னை நம்புங்க…நீங்க இப்படி வருத்தப்படுவீங்கனு தான் சொல்லலை….”
“இனி சொல்லனும்….எது நடந்தாலும் சொல்லனும்….யார் என்ன சொன்னாலும் என்கிட்ட மறைக்க கூடாது….”என்று நாயகி அவளின் கையை அவரின் தலையில் வைத்து கேட்க,
“சரிம்மா…கண்டிப்பா சொல்லுறேன்….போதுமா…இப்பவாது கொஞ்சம் சிரியேன்….அடியே நீ ஏன் கண்ணை கசக்குற…..உன் ராசா இதை பார்த்து அதுக்கும் என்கிட்ட சண்டை போடவா….”என்று கிண்டல் பண்ண மிருதுளா சிரித்துவிட்டாள்.சிறிது நேரத்தில் பழைய நிலை திரும்பி மிருதுளாவின் ஐந்தாம் மாதம் விஷேஷம் பற்றி பேச்சு சென்றது.ஆனாலும் நாயகிக்கு மனதில் சிறு பயம் இருந்தது தான் அதையும் பரிதி போக்குவான் கூடிய விரைவில்.
திவ்யா தனது மனபாரத்தை இறக்கி வைத்துவிட்டு தனது தாய் தோழியுடன் நிம்மதியாக இருக்க,இங்கு ஒருத்தனுக்கோ மனது எரிதனலாக கொதித்து கொண்டிருந்தது.மகேஸ்வரனோ கேரேஜிற்கு வண்டியை எடுத்து வந்தவன் திவ்யாவை தான் திட்டியபடி இருந்தான்.
“எவ்வளவு திமிரு அந்த குள்ள கத்திரிக்காக்கு…கல்லை எடுக்குது….நல்ல வேலை யாரும் நம்மளை பார்க்கல…இல்ல….”என்று தனக்குள் பேசிக் கொண்டே நிமிர பரிதி அவனை ஏற இறங்க பார்த்துக் கொண்டிருந்தான்.
“என்ன….”என்று கேட்க,
“ஆங்….உனக்கு காது கேட்கும் தான….”
“ஓய் என்ன…”
“என்ன ஓய்….வந்திலேந்து உன்னை தான் கூப்பிடுறேன்….நீ என்னடானா ஏதோ காத்துல படம் வரைஞ்சிக்கிட்டு இருக்க….”என்று பக்கத்தில் இருந்த வண்டியை ஆராய்ந்த படியே கேட்க,
“என்ன காத்துல படம் வரையுறேனா….என்னங்கடா நீங்க என்னை இன்னைக்கு ஆளாளுக்கு டேமேஜ் பண்ணுறாங்க….எல்லாம் அந்த குள்ள கத்திரிக்காவாள வந்தது….அவளைஐஐஐஐ….”என்று பல்லை கடிக்க,
“சரி தான் உனக்கு ஏதோ காத்து கருப்பு அடிச்சிட்டு போல போய் போய் மருத்துவம் பாரு….”என்று பரிதி மேலும் அவனை வார,
“அடேய்…..ஏன்டா ஏன்….”என்றவன் சுத்தி முத்தியும் பார்த்தான்.அவர்களின் பக்கத்தில் யாரும் இல்லை ஆனால் தூரத்தில் இருந்து குமரன் இவர்களை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
“ப்ச் இந்தாளு வேற…சிசிடிவி கேமரா மாதிரி பார்த்துக்கிட்டே இருக்காரு….”என்று மகேஸ்வரன் சத்தமாகவே கூற,பரிதியும் அவனை பார்த்தான்.
“நீ எதுக்கு அவரை பார்க்குற….”என்று கேட்க,
“சும்மா தான்….”என்றவன் முகத்தில் யோசனை அப்பா ஏன் சும்மா இருக்கிறார் என்று அதுவும் தான் கூறிய பிறகும் ஏன் என்று யோசித்தவன் ஒருவேளை தான் சொல்ல வந்ததை சரியாக புரிந்து கொள்ளவில்லையா இன்று பேசிவிட வேண்டும்.குமரனின் பார்வையில் வெறும் பொறாமை மட்டுமில்லை அதோடு வேறு ஒன்றும் இருக்கிறது அது நல்லதிற்கில்லை அதுமட்டும் உறுதி.மகேஸ்வரனின் யோசனையை பரிதியின் குரல் பாதியில் தடுத்தது,
“ப்ச்…அதை விடு நேத்து வாங்கிட்டு வந்தியே டூல்ஸ் அதெல்லாம் எங்க கிடைக்கும்….அது மாதிரி நாமளும் வாங்கி வச்சிக்கிட்டா…..நல்லது….எனக்கு தெரியலை எங்க கிடைக்கும்னு….உனக்கு தெரியுமா….”என்று கேட்க,
“அது கம்பெனி டூல்ஸ் அதெல்லாம் நாம அந்த கம்பெனிக்கு எழுதி அனுமதி வாங்கி தான் யூஸ் பண்ண முடியும்….அதுக்கு செலவும் இழுக்கும்….”என்று கூற,பரிதியின் முகம் யோசனைக்குள்ளானது.
“ம்ம்ம்….நான் பேசி பார்க்குறேன்….”என்றான் மகேஸ்வரன்.அதோடு அந்த பேச்சு முடிந்து அவரவர் வேலையில் ஈடுபட்டனர்.பரிதிக்கு புதிய ரக வாகனங்களை பற்றிய சந்தேகங்களை மகேஸ்வரனிடம் கேட்க,அவனும் ஆர்வத்துடன் பதில் தந்தான்.ஆக கற்றுக் கொண்டே வேலையில் கவனம் செலுத்தினர்.பரிதிக்கும்,மகேஸ்வரனுக்கும் இடையே நல்லதொரு நட்பு உருவாக தொடங்கியிருந்தது.
தனது வேலைகளை முடித்துக் கொண்டு பரிதி வீடு திரும்ப நாயகி அவனுக்காகவே வீட்டின் வாசலில் அமர்ந்திருந்தார்.அவன் வந்தவுடன் அவர் எழ அவனோ அவரை பார்த்துவிட்டு கடந்து செல்ல,
“தம்பி….”என்று அழைக்க தனது வீட்டின் உள்ளே செல்ல எத்தனித்தவன் நின்றுவிட,திரும்பி நாயகியை பார்க்க,அவர் அவனிடம் நெருங்கி இரு கைகளையும் கூப்பிவிட,அவரை கண்களை குறுக்கி பார்த்தவன் அவரின் பின் நின்ற திவ்யாவை அழுத்தமாக பார்த்துவிட்டு தனது வீட்டை பார்த்து திரும்ப அவனின் மனைவி கதவில் சாய்ந்து அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ஏய் குட்டி பிசாசு….என்ன வேலை பண்ணி வச்சிருக்க…ஆங்….”என்று எகுற,திவ்யாவின் கண்களில் வைரம் போல கண்ணீர் துளிகள் மின்னியது.
“அழுத….கொன்னுடுவேன்…..ஏய் என்னனு பாருடீ….”என்றுவிட்டு சென்றுவிட்டான்.அவனால் அந்த சூழ்நிலையை எப்படி கையால என்று தெரியவில்லை.இத்தகைய கடின சூழ்நிலைகள் வராமல் இல்லை அவனது வாழ்வில் சொல்ல போனால் இதைவிட மோசமான சூழ்நிலைகள் எல்லாம் கடந்து வந்திருக்கிறான் தான் ஆனால் இது புதிது.ஏனோ சிலரின் கலக்கம் மனதை அதிகமாக பாதிக்கும் அது போல தான் நாயகியின் கலங்கிய முகம் அவனிற்கு தடுமாற்றத்தை கொடுத்தது.
மிருதுளா நாயகியை சமாதனப்படுத்திவிட்டு தனது வீட்டிற்குள் நுழைய பரிதி சுவற்றில் சாய்ந்து விட்டத்தை வெறித்தபடி இருந்தான்.அவனின் அருகில் மிருதுளா நெருங்க அவளின் கைகளை வேகமாக பற்றியவன்,
“ஏய் உன் மடில படுக்கனும்….”என்றுவிட்டு அவளின் கால்களை நன்கு நீட்டி அமர செய்தவன் மடியில் தலை சாய்த்தான்.அவனது முகம் கலக்கமாக இருக்க,
“என்னங்க ஏன் என்னவோ போல இருக்கீங்க….திவ்யா இன்னைக்கு தான் சொன்னா…அதனால தான் அம்மா கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டாங்க….”என்று கூறிக் கொண்டே அவனின் தலையை கோத,
“ம்ம்ம்….எனக்கு அவங்க கலக்கத்தை பார்த்ததும் பரிமளம் நியாபகம் தான் வந்துச்சு….நான் அதுக்கு எதுமே செய்யலையேடீ…..எனக்கு இப்ப தெரிஞ்ச அளவுக்கு அப்ப தெரியாம போயிட்டுடீ….நான் தப்பு பண்ணிட்டேன்…..”என்று கண் கலங்க கூற,
“ப்ச்….என்….என்னங்க….”என்றவளின் கண்களும் கலங்கி இருந்தது.மறக்கமுடியாம அவரை எனக்கு வாழ வழி செய்த தெய்வத்தை எப்படி மறக்க இயலும் மனது மீண்டும் பழைய நினைவுகளில் மூழ்க பார்க்க முயன்று மீட்டவள்,
“என்னங்க….பரிமா உங்களை என்னைக்கும் வெறுக்க மாட்டங்க….அவங்களுக்கு என்னைக்கும் நீங்க பையன் தான்….ஏதோ நம்ம சூழ்நிலை உங்களை அப்படி நடந்துக்க வச்சிடுச்சு….இனி இது மாதிரி பேசாதீங்க….”என்று அழுது கொண்டே கூற,
“ப்ச்…இல்லை நீ அழாத….அவ…அவங்களை கொஞ்சம் கவனிச்சுக்க….ஒருத்தவங்களை தான் நாம இழந்துட்டு நிக்குறோம்…..”என்றவன் வாயை கரம் கொண்டு மூடியவள்,
“மூச்….பேசினீங்க….உதை தான்…அது மாதிரி எதுவும் நடக்காது….நாயகிம்மா ரொம்ப தைரியமானவங்க….”என்று கூற அவளின் உள்ளங்கையில் அழுத்தமாக முத்தமிட்டவன் அவளின் மெடிட்ட வயிற்றிலும் முத்தமிட மிருதுளாவிற்கு உடல் சிலிர்த்து அடங்கியது.நல்லதொரு தொடக்கத்தை நோக்கி அவர்களின் வாழ்வு நகர தொடங்கியிருந்தது.