மிருதுளா அவன் கூறிவிட்டு சென்ற பதிலில் அந்த கதவிலேயே சாய்ந்து சிலை போல நின்றுவிட்டாள்.மனதின் படபடப்பு உடம்பிலும் எடுக்க தன் போல் கையும்,காலும் வலுவிழந்ததை போல் நிலத்தில் அமர்ந்தாள்.
“என்ன என்ன சொன்னான்….”என்று மீண்டும் மீண்டும் நினைத்தவளுக்கு நெஞ்சின் வலி அதிகரித்தது.அவள் அவனை பற்றி அறிந்து கொள்ள கேட்க அவன் தந்த பதிலில் அவளின் அஸ்திவாரமே ஆட்டம் கண்டது.
“நான் ஒரு திருடன்…..”
“……”
“நான் உன் ஊருக்கு வந்ததே திருட தான்….திருட போற சமயத்துல நீ உள்ள வந்த உன் முகத்துல கை வச்சதுக்கே நீ பயந்து மயங்கிட்ட….சரி உன்னை அப்படியே விட்டுட்டு போகலாம்னு தான் பார்த்தா வெளில ஊர் ஆளுங்க வந்து தண்ணிய அடிக்க உட்கார்ந்துட்டானுங்க….என்னால தப்பிக்க முடியல….பஞ்சாயத்துல உன் சித்தி ஒரு கதை சொன்னாங்க நான் இது தான் தப்பிக்க வழினு அதை பிடிச்சிக்கிட்டு உன்னை இழுத்துட்டு வந்துட்டேன்….ஆனா அது தான் நான் செஞ்ச பெரிய தப்பு….இப்படி என் பின்னாடி அட்டை மாதிரி ஒட்டிக்கிட்டு உயிரை எடுக்குற….”என்றவன் அவளின் அதிர்ந்த தோற்றத்தை எல்லாம் கருத்தில் கொள்ளாமல்,
“இப்ப உனக்கு பதில் தெரிஞ்சிடுச்சு இல்ல…..எவ்வளவு சீக்கிரம் இங்க இருந்து கிளம்ப முடியுமோ கிளம்பிடு….அது தான் உனக்கு நல்லது…..”என்றுவிட்டு திரும்பியும் பாராமல் சென்றுவிட்டான்.புலியிடம் இருந்து தப்பிக்க சிங்கத்திடம் மாட்டிய கதையானது மிருதுளாவின் நிலை.எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தாள் என்று தெரியாது பரிமளத்தின் குரலில் தான் சுயத்துக்கு வந்தாள்.
“மிருது கண்ணு…..மிருதுதுது…..”என்று அவர் மிருதுளாவின் தோள்களை உலுக்க அதில் சுயம் பெற்றவள்,
“ஆங்….”
“என்ன கண்ணு இங்க உட்கார்ந்து இருக்க….அந்த பய நைட் முழுக்க வரலையா…..”என்றவரின் பார்வை வீட்டின் உள் சென்றது.அங்கு யாரும் இல்லாதைக் கண்டு,
“பாவி பய இவனை என்ன செய்யுறது….தங்கம் மாட்டுக்கும் பொண்டாட்டி கிடைச்சிருக்கு அவளை பார்த்துக்கிட்டு நல்ல வேலை பார்ப்பான் பார்த்தா….இப்படி திருடிக்கிட்டு திரியுறானா…..”என்று ஒரு வேகத்தில் அவர் பேச மிருதுளா வேகமாக எழுந்துவிட்டாள்.
“என்ன என்ன சொன்னீங்க….நீங்க….அவன் ஒரு திருடன்னு உங்களுக்கு தெரியுமா….ஆங்….சொல்லுங்க….”என்று பரிமளத்தை தோள்களை பற்றி கேட்க,
“அச்சோ உலறிட்டேனா….அவனுக்கு தெரிஞ்சா கொன்னுடுவானே….”என்று பரிமளம் புலம்ப,அவரை தன்னை நோக்கி திருப்பியவள்,
“சொல்லுங்க….சொல்லுங்கமா…..உங்களுக்கு முன்னாடியே தெரியும் அதை ஏன் என்கிட்ட சொல்லல….”என்று ஆதங்கமாக கேட்க,பரிமளம் மிருதுளாவின் வாயை மூடி வீட்டின் உள் இழுத்து வந்தார்.
“இந்தாடீ…சத்தம் போடாத….இங்க உள்ளவங்களுக்கு அவனை பத்தி தெரியாது….எனக்கு தெரியும்னு அவனுக்கு தெரியாது….”என்று கூற,
“ஏன் தெரியட்டும் இங்க உள்ளவங்க எல்லாருக்குமே தெரியட்டுமே அவன் ஒரு திருடன்னு….”என்று மிருதுளா கோபத்தில் கத்த,
“சத்தம் போடதா தாயீ….நான் சொல்லுறத கேளு…..”என்று பரிமளத்தின் வார்த்தைகளை அவள் கேட்கும் நிலையில் இல்லை.
“ஏன் நான் ஏன் வாயை மூடனும் ஆங்…..”என்று மிருதுளா தன் குரலை உயர்த்தினாள்.அவளும் வாழ்வில் எத்தனை அடிகளை தான் தாங்குவாள்.மனதின் அழுத்தம் வார்த்தைகளாக வெளிபட்டது.பரிமளம் எவ்வளவு கூறியும் மிருதுளா அடக்க முடியாமல் போக,
“ஏய்….அறைஞ்சேனா பாரு…..”என்று பரிமளம் அகங்கார காளியாக கையை ஓங்கியபடி நிற்க,மிருதுளா மிரண்டு போய் பார்த்தாள் அவரை.இதுவரை அவளை அதிர்ந்து பேசியிராதவர் இன்று கையை ஓங்கிவிடவும் மிருதுவின் கண்களில் பயம் எட்டிபார்த்தது.அவளின் பயந்த விழிகளை பார்த்தவர் கைகளை இறக்கியவர் சோர்ந்து போய் அமர்ந்துவிட்டார்.அங்கே மிருதுளாவின் விசும்பல் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது.
“இந்தா புள்ள….அழாத….”என்று குரல் கரகரக்க கூறியவரின் குரலை கேட்டு அவளின் விசும்பல் அதிகரிக்க,
“இந்தா புள்ள அழாதனு சொல்லுறோம்ல….பொண்ணுங்க கண்ணீரு ரொம்ப விலை மதிப்பில்லாதாம் எங்க ஆத்தா சொல்லும்….எதுக்கும் கலங்காத இரு இருனு என்னைய சொல்லியே வளர்த்துச்சி…அழதா கண்ணு மனசு வலிக்கு….நான் தெரியாம பேசிப்புட்டேன்….”என்றவரின் கண்களிலும் நீர் படலம் அவரை வேகமாக கட்டிக் கொண்ட மிருதுளா,
“இல்ல…நான் அழல….நீங்க இப்படி உடைஞ்சு போகாதீங்க…”என்றாள் இது நாள் வரை பரிமளத்தை அவள் கலங்கி பார்த்ததில்லை ஆனால் இன்று தன்னால் கலங்கவும் பிடிக்கவில்லை அவளுக்கு.பொதுவாகவே இளகிய மனம் கொண்டவள் தான் ஆனால் தான் ஏமாற்ற பட்டியிருக்கிறோம் என்றதும் அடிப்பட்ட மனம் மீண்டும் அடிவாங்க வலித்தது அவளுக்கு அதனால் பொங்கிவிட்டாள்.ஆனால் தன்னை தாய் போல் தாங்கியவர் கலங்கவும் அனைத்தும் மறந்து அவரைக் கட்டிக் கொண்டு அவரை சமாதானப்படுத்த,
“இங்க பாரு கண்ணு நான் சொல்லுறத ஒரு நிமிஷம் நிதானமா கேளு….அதுக்கு அப்புறம் நீ என்ன முடிவெடுத்தாலும் நான் குறுக்க நிக்கமாட்டேன்….”என்றவர் மிருதுளாவின் அமைதியையே சம்மதமாக ஏற்று இளம்பரிதியை கூறினார்.
இளம்பரிதி தாயின் பெயர் அகிலா.அகிலா கல்லூரி காலத்திலேயே காதலில் விழுந்தார்.அவரை திருமணம் செய்து கொள்வேன் என்று அவரை கொள்ளையிட்டவனோ அவரை பாதியிலேயே விட்டுவிட்டு போய்விட அதன் விளைவு தாலி இல்லாமல் ஒரு குழந்தைக்கு தாயானாள்.அகிலாவின் நிலைக் கண்டு அவளை அவள் வீட்டார் ஒதுக்கிவிட,கையில் குழந்தையுடன் முடிக்காத படிப்புடன் கிடைத்த வேலையே செய்து தன்னையும் குழந்தையும் பார்த்துக் கொண்டார்.இளம்பரிதிக்கு ஆறு வயது இருக்கும் போது அகிலாவிற்கு உடல் நலக் குறைவு ஏற்பட அவர் படுத்த படுக்கையாகிவிட்டார்.
தாயின் நிலை கருதி பரிதி பக்கத்தில் இருக்கும் சைக்கிள் கடையில் வேலைக்கு செல்ல தொடங்கினான் ஆனால் அவன் சிறுவன் என்று அவனுக்கு சம்பளம் தராமல் இழுத்தடிக்க கோபம் கொண்ட பரிதி தன் முதலாளியை அடித்துவிட அது போலீஸ் வரை சென்றுவிட்டது.ஒருநாள் முழுவதும் காவலில் வைத்திருந்து அவனை விடுவித்தனர்.காலை தன் தாயை பார்க்க வந்தவனுக்கு காத்திருந்தது அதிர்ச்சி.
இளம்பரிதி தன் வீட்டின் முன் நின்ற கூட்டத்தை பார்த்து பயந்து தன் வீட்டிற்குள் புக அங்கே அவனது தாய் உயிரற்ற உடலாக இருந்தார்.அம்மா என்று அலறித் துடித்தவனை ஆற்றவோ தேற்றவோ ஆட்கள் இல்லை.அதுவரை அவனின் அம்மாவிற்கவேனும் துடித்துக் கொண்டிருந்த இதயம் முற்றிலுமாக இரும்பாக மாறிவிட்டது.அவனை தேற்றி நல் வழிப்படுத்துவோர் இல்லாமல் தனது மனம் போன போகில் வாழ தொடங்கினான்.
“கண்ணு….இதை அவனா என்கிட்ட சொன்னது கிடையாது….ஒருமுறை உடம்பு முடியாம படுத்து கிடந்தான் அப்ப நான் தான் அவனுக்கு கஞ்சி கொடுப்பேன் அப்படி கொடுக்கும் போது தான் அவனை பத்தி தூக்கத்தில உலறுனான் அப்ப தான் தெரிஞ்சிக் கிட்டேன்….அவன் அன்னைக்கு சுயநினைவு இல்லாதப்ப சொன்னத கேட்டு எனக்கு மனசே கலங்கி போச்சி….அந்த சின்ன வயசுல எப்படியெல்லாம் இந்த பிள்ளை கஷ்டப்பட்டுச்சோனு…அதான் அவன் ஏதாவது கத்துனா கூட போடானு போயிடுவேன்……”என்றவர் மிருதுளாவின் கைகளை பிடித்து,
“மிருது…..இங்க நாம அவனை மட்டும் குத்தம் சொல்லமுடியாது….அவனோட சூழ்நிலை அவனை அப்படி சிந்திக்க வச்சிடுச்சு….இதுவரை யாரும் இல்லாம தான்தோன்றி தனமா வாழ்ந்துட்டு இருந்தான் இப்ப திடீர்னு நீ வரவும் அவனால உன்னை முழுசா ஏத்துக்கவும் முடியல விலக்கவும் முடியல…..பய திண்டாடிக்கிட்டு இருக்கான்…..இல்ல உன்னை இப்படி விட்டு வைப்பானா….நீ தான் அவனை திருத்தனும்னு நான் சொல்லமாட்டேன் ஆனா அவனோட இடத்துல இருந்து யோசி….அவன் பக்கம் நியாயம் புரியும்…..இதுக்கு அப்புறம் நீ தான் முடிவு எடுக்கனும் கண்ணு….”என்றவர் மேலும்,
“ஆனா கண்ணு….ஒண்ணை நியாபகத்துல வச்சுக்க….நீ இங்கிருந்து போனா உனக்கு பாதுகாப்பு இருக்கானு பாரு….நீ சொல்லுறதெல்லாம் பார்த்தா இனி உன் ஊருக்கும் போக முடியாது….இந்த ஊர்லே பிறந்து வளந்தவனே இங்க திண்டாடுறான் நீ புதுசு…..அதுவும் பொண்ணு….”அந்த பொண்ணு என்ற வார்த்தையில் சற்று அழுத்தம் கொடுத்தார் பரிமளம்.அவரின் கூற்றில் அவரை விழிகள் கலங்க ஏறிட்டவளை மென்மையாக தலை கோதியவர்,
“கண்ணு…..இங்க எல்லாரும் கெட்டவங்க இல்ல….இப்ப என்னையவே எடுத்துக்க…என் புருஷனை எல்லாரும் குடிகாரன்னு சொல்லுவாங்க….ஆனா எனக்கு தான் தெரியும் அவர் எப்படி குடிகாரர் ஆனார்னு….தன் கிட்ட இருக்குறது எல்லாத்தையும் வச்சு தம்பியை படிக்க வச்சாரு….அவன் இவரை ஏமாத்தி சொத்தை பிடிங்கிட்டு வெளில அனுப்பிட்டான்…..அதுல மனசு ஒடிஞ்சி போனவர் தான் இன்னைய வரைக்கும் எழல…..எனக்கும் அந்த ஆளை எப்படியாவது இந்த குடியிலேந்து வெளியில கொண்டு வந்துடும்னு ஆசை தான் ஆனா என்னால முடியல….அதுக்காக அந்தாளு கெட்டவர்னு சொல்லமாட்டேன் என்ன குடிச்சாலும் என்னே தேடி தான் வருவான் மனுஷன்….”என்றவர் தன் கலங்கிய கண்களை துடைக்க மிருதுளாவோ குழம்பிய நிலையில் இருந்தாள்.அவளின் நிலை உணர்ந்தவர்,
“யோசி….நல்லா யோசி….நீ என்ன முடிவெடுத்தாலும் நான் உனக்கு உதவுறேன்…..”என்றுவிட்டு அவர் சென்றுவிட மிருதுளா என்ன செய்வது என்று புரியாமல் அமர்ந்திருந்தாள்.இங்கு இளம்பரிதியும் தன் பழைய நினைவுகளின் தாக்கத்தில் தான் இருந்தான்.தன் தாயை பறிக் கொடுத்த போது அவன் அனுபவித்த வேதனை,வலி எல்லாம் இன்றும் மனதில் ஆறாத வடு போல அல்லவா பதிந்துவிட்டன.அதுவரை மனிதர்களிடம் பதில் சொல்லிக் கொண்டிருந்தவன் முற்றிலுமாக பேச்சையே நிறுத்திவிட்டான்.
அவனது தாய் இறந்த பிறகு பேசியது என்றால் அது மிருதுளாவுடன் தான் அதுவும் தன்னை பற்றிய உண்மையை கூறிவிட்டால் அவள் தன்னை விட்டு சென்றுவிடுவாள் என்று தான் கூறினான்.அவனை பொறுத்தவரை அன்பு,பாசம்,உறவு அனைத்தும் பொய்.எதிலும் பற்றில்லை அவனுக்கு தான் தன் வாழ்வு என்று போய் கொண்டிருந்தவன் வாழ்வில் திடீர் என்று மிருதுளா நுழைந்தது பிடிக்கவில்லை.ஏனோ அவள் தன் தனிமை இனிமையை கெடுக்க வந்திருக்கிறாள் என்று தான் தோன்றியது.
அன்று பரிதி விடியும் வேளை தான் குடுசைக்கு வந்தான் குடுசை திறந்து கிடந்தது.அதைக் கண்டவன் முகத்தில் ஒரு எள்ளல் புன்னகை அதே புன்னகையுடன் குடுசையின் உள்ளே நுழைந்தவன் கதவை அடைத்துவிட்டு படுக்க போக,
“என்ன நான் போயிட்டேன்னு ரொம்ப சந்தோஷமா வரீங்க போல….”என்றபடி பின் பக்க கதவை திறந்து கொண்டு வந்தாள் மிருதுளா.திடீர் என்று அவளின் குரல் கேட்கவும் அதிர்ந்து எழுந்தவன் திரும்பி பார்க்க,அங்கே அவனின் மனைவி குளித்து தலையை தோட்டியபடி வந்தாள்.இத்தனை நாள் முகத்தில் இருந்த கவலை ரேகை இன்று இல்லை அதனாலே அவளின் முகம் மின்னியது போல் தெரிந்தது அவனிற்கு.இரண்டு நிமிடம் அவனிற்கு அவளை தவிர வேறு எதுவும் தெரியவில்லை இமைக்க மறந்து அவன் பார்த்துக் கொண்டிருக்க,மிருதுளாவிற்கு தான் அவனின் பார்வையின் தாக்கத்தை தாங்க முடியாமல்,
“ஏய் நீ…..நீ….நீ போகல…..”என்றான் திக்கி திணறி,அவனின் திணறலை கண்டவளுக்கு மனதிற்குள் சிரிப்பாக இருந்தாலும் அதை அழகாக மறைத்துக் கொண்டாள் பின்னே சிரித்தாள் கடித்து குதறினாலும் குதறிவிடுவான் என்று தன்னை மிக சிரம்மபட்டு அடக்கினாள்.மிருதுளா என்ன அடக்கினாலும் அவளின் முக மாறுதலைக் கண்டு கொண்டவன்,
“ஓய்….என்….என்ன….என்ன சிரிப்பு ஆங்…..”என்றவன் அவளின் அருகே நெருங்க மிருதுளா தன் கால்களை நகரத்தாமல் தன்னை நிலைப்படுத்தி நின்று கொண்டாள்.இவனை விட்டாள் பிடிக்க முடியாது என்பதை கொஞ்சம் புரிந்து கொண்டாள் போலும்.பரிமளம் வேறு உனக்கு இதைவிட்டால் வேறு பாதுக்காப்பான இடம் இல்லை என்று கூறியது நன்கு வேலை செய்தது.ஆம் யாரிடமும் கிடைக்காத பாதுகாப்பை அவனிடம் உணர்ந்து இருந்தாள் மிருதுளா.
“ஏய்ய்…..நான் இங்க பேசிக்கிட்டு இருக்கேன் நீ என்ன கனவு கண்டுகிட்டு இருக்க….ஆங்…..”
“ம்ம்ம்ம்….ஆமா கனவு தான் உன் கூட என் வாழ்க்கை எப்படி இருக்கும்னு கனவு…..”என்றவளின் கண்களில் உண்மையில் கனவுகள் தான் மின்னின,அவளின் கண்களை கண்டவன் தடுமாறி தான் போனான்.எங்கே தன் தனிமையை இவள் பரித்துவிடுவாளோ என்று பயந்தவன்,
“முதல்ல நீ இங்கிருந்து கிளம்பு உன் பேச்சு பார்வை எல்லாம் சரியில்லை கிளம்பு….”என்று அவன் கத்த,காதை அடைத்துக் கொண்ட மிருதுளா,
“கத்து….கத்து….”என்பது போல நின்று கொண்டாள்.அவள் தைரியமாக நிற்பதைக் கண்டவன்,
“உன்னைஐஐஐஐ……”என்று அங்கும் மிங்கும் அலைய,மிருதுளாவிற்கு இத்தனை நாள் இருந்த பயம் இன்று இல்லை ஏதோ சிறு குழந்தை தாயிடம் சண்டையிடுவதை போல் தான் இருந்தது அவனின் செயல்கள்.அவள் சுவாரசியமாக அவனை பார்த்துக் கொண்டிருக்க பரிதிக்கு கோபம் எல்லை கடந்தது மூர்க்கமாக மாறியது.
“ஓஓஓ….அப்ப நீ போகமாட்ட…..அப்படி தான….”என்றவன் பார்வை அவளை அளவிட,மிருதுளாவிற்கு அதுவரை இருந்த தைரியம் வடிந்தது.அவனின் கால்கள் முன்னேற அவளின் கால்கள் தன் போல் பின்னோக்கி சென்றன.அதனை பார்த்தவன் முகத்தில் ஏளனம் கூடியது,
“என்ன….நான் இப்படியில்லனு தான தைரியமா இருந்த….ஆங்…..”என்றவாரே அவளிடம் நெருங்க,மிருதுளாவிற்கு நெஞ்சில் நெரிஞ்சி முள் ஏறிய உணர்வு அவளின் உடல் சுவற்றில் மோதி நிற்க அருகே வந்தவன் அவளின் மீதே தன் உடலை மோதி இரு பக்கமும் கைகளை ஊன்றி நின்றான்.
பரிதியின் மூச்சு காத்து அவளின் நாசியில் ஏற மிருதுளா பயத்துடன் தன் கண்களை மூடிக் கொண்டாள்.அவளின் உதடுகள் பேச மறந்துவிட,தன் ஒற்றை விரலால் அவளின் உடலில் கோலம் போட ஆரம்பித்தவனை தடுத்தது அவளின் மெல்லிய குரல்,
“இது….அது…..ப்பு….”
“ஆங்….என்ன சொன்ன….”என்றவன் அவளின் இடையில் கைவிட,துள்ளி விட்டாள் மிருதுளா,
“இது.,….இதெல்லாம் தப்பு…..”என்று நடுங்கியவாரே அவள் கூற,அவளை மேலும் கீழும் பார்த்தவன்,
“நான் புருஷன்மா….மறந்துட்டியா…..”என்றவன் அவளின் கைகளை பிடித்து தன்னை நோக்கி இழுக்க,அவனின் மேலே பூமாலை போல விழுந்தவளின் இடையை இறுக்கி பற்றி,ஒற்றை கையால் அவளின் முகத்தை நிமிர்த்தி தன்னை பார்க்க செய்தவன்,