” பகல் நேரத்தில பெரும்பாலும் பவி அம்மா ரூம்ல தான் இருப்பா.. இரவு மட்டும் தான் என்னோட இருப்பா… எனக்கு பவி என் பக்கம் படுத்தா தான் தூக்கம் வரும்.. அதனால் தொட்டில் அம்மா ரூம்ல தான் எப்போதும் இருக்கும்”
” ஓஓ சரி” என்ற நிறைமதி அவனிடம் ஏதோ கேட்க தயங்குவது போல் தெரிந்தது.
” என்ன நிறைமதி எதுவும் கேட்கனுமா? ஏதோ ரொம்ப யோசனைல இருக்கியே?”
“அது வந்து….. உங்களோட….”
“அண்ணா உள்ள வரலாமா??” சிவரஞ்சனி யின் குரல் அவளை இடையிட்டது.
” கதவு திறந்து தான் இருக்கு ரஞ்சனி… உள்ள வா”
இருவருக்கும் தட்டில் உணவு எடுத்து வந்தாள் சிவரஞ்சனி.
” அண்ணா இதோ சாப்பாடு எடுத்து வந்துருக்கேன். நீயும் அண்ணியும் சாப்பிடுங்க. பவிய நான் தூக்கி போறேன். பால் குடிச்சு தூங்க வைக்கிறேன்” என்று பவமொழி யை தூக்கி சென்றாள்
பின்பு இருவரும் அமர்ந்து சாப்பிட்டனர். உண்ணும் போது நிறைமதி யோசனையுடன் அறையை சுற்றி பார்ப்பதும் பின் இளம்பரிதியை அவன் அரியாதவாறு பார்ப்பதுமாக இருந்தாள். உணவு உண்டு முடித்து அனைத்தையும் எடுத்து வைத்து பின் அங்குள்ள இருக்கையில் அமர்ந்த இளம்பரிதி,
“சொல்லு நிறைமதி என்ன இவ்வளவு யோசனை?? சாப்பிடும் போது கூட ரொம்ப சுத்தி பார்த்து யோசிச்சிட்டே இருந்தியே என்ன??”
“இல்ல அது வந்து… “
” தயக்கம் வேண்டாம் நிறைமதி… நீ எதுவும் என்னை கேக்கலாம்… சொல்லு..”
“அது…. உங்க…. உங்க கல்யாண ஃபோட்டோ எதுவும் ரூம்ல இல்லையேனு …”
“ஓ……. அது நான் தான் எல்லாம் எடுத்து பத்திரப்படுத்தி பெட்டியுள்ள வச்சிட்டேன்..”
விழிகளில் ஏன் என்ற கேள்வியடன் அவனைப் பார்த்தாள் நிறைமதி.அவளின் விழிகளின் கேள்வியை சரியாய் புரிந்து கொண்ட இளம்பரிதி
” சரியான காரணம் இருக்கு நிறைமதி…. பவி இப்போ மூன்று மாத குழந்தை. அவ வளர்ந்து வரப்போ உன்னை தான் அம்மாவா பார்த்து கூப்பிட்டுவா… நீயும் அவளுக்கு அம்மாவா இருக்க தான் நான் விரும்புகிறேன். எனக்கும் மகிழினிக்கும் நடந்த திருமண ஃபோட்டோ பார்த்தா பவிக்கு வளர்ரப்ப குழப்பம் தான் வரும்… ஒரு கட்டத்தில பவிக்கு எல்லா விஷயமும் தெரிய வரும் நாமே அத சொல்லனும்… அப்போ அவ மேல நாம் வைக்கிற அன்பு மத்த விஷயத்த பின்னுக்கு தள்ளிடும். மகிழினி எப்படி அவளோட அம்மாவோ அதே போல் நிறைமதியும் அவ அம்மா தானு அவ புரிஞ்சுக்கனும்.. அதுக்காக தான் இத பண்ணுனேன்…”
தனக்காகவும் பவமொழிக்காகவும் அவன் இவ்வளவு யோசனை செய்திருப்பதை நினைத்து அவள் விழிகளில் நீர் துளிர்த்தது.
” அம்மா… நான் நிறைமதிட்ட என்னோட சிட்சுவேஷன் சொல்லிட்டேன்…. வேணுனா நான் மாமா கிட்ட கால் பண்ணி பேசறேன்.. இப்போ என்ன லீவ் நாட்களில் நாங்க அங்க போய் வந்தா சரியா இருக்காதா??”
“சரிப்பா நீ உன் மாமனார்க்கு ஃபோன் செஞ்சு ஒரு வார்த்தை சொல்லிடு… நான் உங்க அப்பாவயும் பேச சொல்றேன்… இப்போ வா வந்து சாப்பிடு கிளம்பு… மதி நீயும் வா மா… வந்து சாப்பிடு…”
“அவங்க சாப்பிடு கிளம்பட்டும் அத்தை… இப்போ தான் பால் குடிச்சேன்… கொஞ்சம் நேரம் ஆகட்டும்…”
“சரி மதி… நேரத்துக்கு சாப்பிட்டுக்கோ…”
*********************************************
இப்படியே ஒரு மாதம் சென்றது. இப்போது பவமொழி நிறைமதியிடம் நன்றாக ஒட்டி கொண்டாள். தாயின் தாலாட்டு கேட்டே இரவு மட்டும் இல்லாமல் பகலிலும் தூங்கினாள். நிறைமதியும அந்த வீட்டில் நன்றாக பொருந்தினாள். கோமளவள்ளி மணிமாறன் அன்பில் தன் தாய் தந்தை அன்பை கண்டாள். சிவரஞ்சனி வாரம் ஒரு முறை தவறாது வந்து தன் அண்ணியுடன் நட்பை வளர்த்துக் கொண்டாள். இளம்பரிதியுடன் மட்டும் பவமொழி யை கொண்டே பேசுவாள். இளம்பரிதி சகஜமாக அவளிடம் பேசினாலும் நிறைமதியால் இன்னும் அவனிடம் அவ்வாறு பேச முடியவில்லை. தன்னுடைய வாழ்க்கையில் முன்பு நடந்த அனைத்தையும் அவனிடம் சொல்லாமல் இருப்பது மனதில் ஒரு குற்றவுணர்வை ஏற்படுத்தியது அதே நேரம் அவனிடம் சொல்வதற்கும் தைரியம் இல்லை. இளம்பரிதி இதனை உணர்ந்தே இருந்தான். அவளாக தெளிந்து தன் மீது நம்பிக்கை வைத்து பிறகு பேசட்டும் என்று நினைத்தான்.
************************************
“நிறைமதி! நாளைக்கு உனக்கு செக்கப் இருக்குல?? நம்ம ஹாஸ்பிடல் போய்ட்டு அப்படியே உங்க வீட்டுக்கு போகலாம்… “
“இல்ல அம்மா என்கூட ஹாஸ்பிடல் வரேனு சொன்னாங்க… நான் அம்மா கூட போய்ட்டு வந்துடுறேன். நான் வந்த பின்ன நாம அம்மா வீட்டுக்கு போகலாம்…”
” ஏன் அத்தைய அலையவிடனும் நிறைமதி?? நாளைக்கு உனக்கு செக்கப் இருக்கு… பவிக்கும் ரொட்டின் செக்கப் போகனும்… நம்ம போயிட்டு வரலாம்.. நீ அத்தைக்கு ஃபோன் செஞ்சு சொல்லிடு.. ஏன் என்னோட வரதுல என்ன தயக்கம்??”
“அச்சோ!! அப்படிலாம் இல்லங்க… லீவ் இப்போ தான் கிடைச்சது உங்களுக்கு… இந்த நேரம் ஏன் உங்கள தொந்தரவு செய்யனும் அதான்….”
” என் குடும்பத்தை பாக்கிறது எனக்கு தொந்தரவு இல்லை நிறைமதி… அது என் கடமை… நான் உன்னை என் குடும்பமாய் தான் நினைக்கிறேன்.. நீ என்னை அப்படி இன்னும் நினைக்கல போல”
“அப்படிலாம் இல்லங்க… நான் அந்த அர்த்தத்தில் சொல்ல வரல… “
“இட்ஸ் ஓகே நிறைமதி… ஒன்னும் பிரச்சினை இல்லை… நாளைக்கு நாம் போறோம்… நீ ஃபோன் செஞ்சு அத்தைட்ட சொல்லிடு.. நான் அம்மாட்ட சொல்லிட்டு வரேன் ”
என்று அறையை விட்டு வெளியேறினான்.
‘அச்சோ கோச்சுட்டாங்களா?? நான் லீவ்ல இருக்கப்போ ரெஸ்ட் எடுப்பாங்கனு சொன்னேன்… அது தப்பா புரிய வச்சிட்டேன் போல… மதி!!!! உனக்கு உருப்படியா பேச வருதா?? தேவயில்லாம வார்த்தைய விட்டு இப்போ அவங்க கோவமாயிட்டாங்க… எப்படியாவது மன்னிப்பு கேட்டு சமாதான படுத்திடு டி’
என்று அவளை அவளே திட்டிக் கொண்டு இளம்பரிதி வருவதற்கு காத்திருந்தாள்.