“நிறைமதி என்னாச்சு?? இன்னும் தூங்கலையா??” என்றவாறு உள்ளே வந்து பவமொழியை நிறைமதியிடம் கொடுத்தான்.
மகளை வாங்கி மடியில் படுக்க வைத்தபடி இளம்பரிதியின் முகத்தை பார்த்தாள். அதனைக் கவனித்தாலும் ஏதும் கேட்காமல் படுப்பதற்கு ஆயத்தமானான் இளம்பரிதி.
‘நிஜமா கோவமாயிட்டாங்க போல… இப்போ என்ன பண்றது… நாம் ஸாரி கேப்போமா?? ஒழுங்கா கேட்டுடி மதி… ஏதும் சொதப்பிடாதடி ‘
என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு குரலை செறுமினாள்.அவன் கண்டுகொள்ளாமல் படுத்திருக்க வேறு வழியில்லை தான் பேசியேயாக வேண்டும் என்று முடிவெடுத்தாள்.
“என்னங்க தூங்கிட்டிங்களா??”
“ஹ்ம்ம் இன்னும் இல்லை… ஏன் ஏதும் வேணுமா??”
“இல்லங்க…. அது வந்து…. ஸாரிங்க… நான் உங்கள ஹேர்ட் பண்ணனும்னு பேசல… யதார்த்தமா தான் சொன்னேன்… ஐ அம் ரியலி ஸாரிங்க.. “
“ஹ்ம்ம்…. எனக்கு கோவம் இல்லை நிறைமதி…. வருத்தம் தான்… இனி எதிர்காலத்தில் நம்ம வாழ்க்கையில நாம சேர்ந்து தான் பயணிக்க போறோம்… ஆனா உனக்கு என்னோட பேசவே இன்னும் இவ்வளவு தயக்கம் இருக்கு… புரியுது எதுவும் உடனே மாறாது… பட் நமக்கு கல்யாணம் ஆகி ஒரு மாசம் ஆச்சு…. பவிய பத்தி மட்டும் தான் என்னோட நீ பேசற… வீட்ல மத்தவங்கட்ட சகஜமாக பேசற… என்கிட்ட அப்படி பேசற அளவு நான் உன்கிட்ட நடந்துகளயோனு தோணுது… நான் உனக்கு ஒரு நல்ல நண்பனாக கூட மனசுல இன்னும் பதியல போல… அந்த வருத்தம் தான்.”
“அச்சோ அப்படிலாம் இல்லங்க… நான் அப்படிலாம் நினைக்கல… உண்மைய சொல்லனும்னா உங்க கூட இருக்குறப்போ நான் ரொம்ப பாதுகாப்பா இருக்க மாதிரி இருக்கு… எந்த வகையிலும் நீங்க என்னை தவறா பேசினது இல்லங்க… என்னைப்பற்றி நல்லா தெரிஞ்ச பலர் கூட நான் பிரக்னன்ட்டா இருக்கேனு தெரிஞ்சு என் கேரக்டர் பத்தி தப்பா பேசுனாங்க.. ஏன் என் அண்ணன் கூட என்னை நம்பல… இன்னக்கு வரை அவன் என்கிட்ட பேசுறது இல்லை… என் அப்பா அம்மாவுக்கு அப்பறம் என்னை எதுவும் கேட்காம நம்பிக்கை வைத்து பேசுறது நீங்க மட்டும் தான்…. உங்கள எப்படி நான் என் குடும்பமாய் நினைக்காம இருப்பேன்? ஏதோ எனக்குள்ள ஒரு குற்றவுணர்வு…அதனால் வந்த தயக்கம்… எனக்கு சகஜமாக பேச வரல… இனி முயற்சி பன்றேன்… ஸாரி உங்கள் ஹேர்ட் பன்னுத்துக்கு…”
என்று கண்ணீருடன் தன் மனதில் உள்ளதை கூறினாள் நிறைமதி.
“நிறைமதி!!! பிளீஸ்.. அழாதே…” என்று அவள் கையை பிடித்து தட்டி கொடுத்து அவள் கண்ணீரை துடைத்து விட்டான்.
“உன் மேல் எந்த தப்பும் இல்லனு உனக்கு தெரியுமில்ல… அது போதும் நிறைமதி… எல்லோருக்கும் நாம நிருபிக்க அவசியம் இல்லை… நாலு பேர் தேவை இல்லாமல் பேச தான் செய்வாங்க…நாம அதை கடந்து போய்டனும்…. அங்கேயே வருத்தப்பட்டு நின்றோம் அப்படினா வாழ்கைய எதிர்கொள்ள முடியாது… நீ கடந்து வந்துடு நிறைமதி…”
“எல்லாம் புரியுது… ஆனா அவுங்க பேசறது ரொம்ப கஷ்டமா இருக்கு… ஏத்துக்கவே முடியல… எப்படி கடந்து வர முடியும்??”
“கஷ்டம் தான்… ஆனா நம்ம நலம் விரும்பும் நம்ம பெத்தவங்களுக்காக மாறலாம் இல்ல…உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? இந்த ஒரு மாசமா எத்தனை பேர் என்ன பத்தி தப்பா பேசுறாங்கனு?? “
“உங்களையா?? யாரு?? எதுக்காக??”
” ஹ்ம்ம்…. என்னோட வேலை செய்ற கொலீக்ஸ்.. நம்ம அக்கம் பக்கம் உள்ள சிலர்தான்… ஏன் தெரியுமா?? பொண்டாட்டி இறந்த இரண்டே மாதத்தில புது மாப்பிள்ளை ஆயிட்டேனாம்.. ஒரு வேளை நானே மகிழினிய ஏதோ பண்ணிட்டு இப்போ உன்னை கல்யாணம் பண்ணிடேனாம்.. ஹ்ம்ம் ” என்று விரக்தியுடன் கூறினான்.
“ஐயோ முருகா!!! இப்படி கூடவா பேசுவாங்க?? நாக்குல நரம்பே இல்லாம… “
“ஹ்ம்ம் பேச தான் செய்றாங்க…. பட் நான் அதை கண்டுக்காம கடந்து வந்துடுறேன்… அதையே நினைத்து கஷ்டபட்டா என் குடும்பத்து சந்தோஷம் தான் கெட்டு போகும்… ஸோ கண்டுக்க கூடாது…. நீயும் நடந்ததையே நினைத்து வருத்தப்படாம அதை கடந்து வர முயற்சி செய்… சரியா?”
“ஹ்ம்ம்…. முயற்சி செய்ரங்க…”
“ஓகே.. இப்போ தூங்கலாமா?? பவியும் தூங்கிட்டா..”
“ம்ம் குட் நைட் “
“குட் நைட் “
*************************************
“குட் மார்னிங் சார்… பேஷன்ட் நேம் அண்ட் எந்த டாக்டர் பாக்கனும் சொல்லுங்க..”
” ஓ… ஸாரி சார்… டாக்டர் ரம்யா அவுங்க பெர்சனல் வேலைக்காக ஆஸ்திரேலியா போய்றுக்காங்க… அவங்க ரிட்டர்ன் ஆக ஒரு வருடம் ஆகும்… இப்போ ரம்யா டாக்டர் பேஷன்ட்ஸ டாக்டர் ஹரிணி அட்டன் செய்றாங்க… உங்களுக்கு ஓகேவா இருந்தா நீங்க டாக்டர் ஹரிணிட்ட பாக்கலாம்…. ஓகே வா சார் “
“நிறைமதி இதுவரை டாக்டர் ரம்யா பார்த்த ரிப்போர்ட்ஸ் எல்லாம் எடுத்து வந்துருக்கல… “
“கொண்டு வந்துருக்கேங்க… “
“இங்க உட்காரு நிறைமதி… ஏதும் வேணுமா?? டயர்டா இருக்கா??”
“இல்லங்க… ஐ அம் ஒகே “
************************************
“வாங்க மிஸஸ் நிறைமதி… இங்க உக்காருங்க… “
“குட் மார்னிங் டாக்டர் “
“உங்க ரிப்போர்ட்ஸ் குடுங்க… உங்களுக்கு ஏதும் காம்பிளிகேஷன்ஸ் இருக்கா?? மாத்திரை ரெகுலராக போடுரீங்களா??”
“ஏதும் பிரச்சினை இல்லை டாக்டர்… மாத்திரை எல்லாம் எடுத்துக்கிறேன்.. “
“ஏதும் பிரச்சினை இல்லை டாக்டர்…பட் அடிக்கடி ரொம்ப டயர்டா இருக்குனு சொல்றாங்க…. “
“அது ஏதும் பிரச்சினை இல்லை மிஸ்டர்.. இந்த நேரத்தில இருக்கிறது தான்…நல்லா ஹெல்தியா சாப்பிட சொல்லுங்க உங்க மிஸஸ்ச.. … ஹேய் யாரோட பாப்பா இவ… க்யூட்டா இருக்காளே…”
” எங்க பொண்ணு தான் டாக்டர்…”
“வாட்!!!! ஓஓ… எத்தனை மாசம் ஆகுது பாப்பாக்கு??”
முதலில் அதிர்ச்சி ஆன டாக்டர் ஹரிணி பின் சுதாரித்து கொண்டாள்.
” ஐந்து மாதம் ஆகுது டாக்டர்”
நிறைமதி யின் கோப்புகளை மறுபடி பார்த்த டாக்டர் பின் அவர்களையும் ஒருமுறை பார்த்துக்கொண்டாள்.
ஸ்கேன் செய்து முடித்ததும் வெளியில் வந்த மருத்துவர் இளம்பரிதியிடம்
“மிஸ்டர் ஒரு பிரச்சனையும் இல்லை… உங்க மிஸஸ்க்கு எல்லாம் பெர்ஃபக்ட்… நல்லா ஹெல்தியா சாப்பிட்டு அக்டீவா இருந்தா போதும்… டாப்பிலட்ஸ் வாங்கிக்கோங்க… இனி அடுத்த மாசம் வந்தா போதும் “
” ஓகே டாக்டர்… ரொம்ப நன்றி “
*****************************************
“என்ன நிறைமதி டாக்டர் உன்கிட்ட ரொம்ப நேரம் பேசினாங்களே… ஏதும் முக்கியமான விஷயமா?”
“அது ஒண்ணும் இல்லங்க…. அது எனக்கு இது முதல் பேபியா என்று கேட்டாங்க… அதான் நானும் சொன்னேன்… அப்போதான் அவங்க டிரீட்மண்ட் பாக்க சரியா இருக்கும் இல்ல அதான்….”
“ஹ்ம்ம் சரிதான்… ஆனா அவுங்க நம்மகிட்ட நேரடியாக கேட்டு இருக்கலாம்… பவிய பற்றி கேட்டப்ப அவங்க ரியாக்ஷன் அப்படி இருந்தது போ…” என்று கூறி சிரித்தான்.
நிறைமதியும் அவனுடன் இணைந்து புன்னகைத்தாள்.
“அடிப்பாவி…. என் புள்ளய ஏமாத்தினதுமில்லாம அவன் செத்து அந்த ஈரம் காயும் முன்னே அடுத்தவன புடுச்சதுமில்லாம இப்படி வெக்கமில்லாம சிரிச்சு கூத்தடிக்கிறியே நீயெல்லாம் நல்ல மானமுள்ள பொம்பளயா டீ…. ச்சீ