“மேலஇருக்கான்டி”என்றவன்வேகமாகபடியில்ஏறிஓடினான்திறந்திருந்தகதவின் உள்நுழையசோபாவில் அமர்ந்து மேலே விட்டதை வெறித்துக்கொண்டிருந்த நண்பனை பார்த்தான் சம்பத்.
ஆளே பாதியாக இளைத்து முகம் தாடிக்குள்ளே ஒளிந்துகிடக்க, சன்யாசம் போனவன் பாதியிலே திரும்பி வந்ததை போல இருந்தான்.
“என்னடா கோலம் இது” என்ற சம்பத்தை பார்த்தவன் மெலிதாக புன்னகைக்க “சிரிக்காத கொலைவெறில இருக்கேன் , எங்க போய் தொலைஞ்ச , இப்படி எல்லாரையும் கஷ்டப்படுத்தினது நிம்மதியா இருக்கா உனக்கு? உயிரோடுதான் இருந்தியா” என்று அவனை வறுத்தெடுத்தான்.
அதற்கும் புன்னகையே பதிலாக எரிச்சல் அடைந்தவன் நேரே சென்று எதிரே இருந்த சோபாவில் அமர்ந்தான்.
இருவருக்கும் இடையில் பேச்சுக்கள் இல்லை வெகு நேரம் சென்று “எப்படி இருக்கா” என்ற பாரியின் கேள்விக்கு அவனை பார்த்து முறைத்த சம்பத் “உயிரோட இருக்காபோதுமா” என்றான்.
சாரதாவின் பேச்சை தொடர்ந்து அனைவரும் வெளியேற, தங்கையை ஆறுதல் படுத்த மித்ரா அவளுடன் அவளின் அறைக்குள் சென்றாள்.
சாரதாவின் பேச்சு பிடிக்காத ராஜசேகர் எழுந்து கோவிலுக்கு சென்றுவிட யாரும் இல்லாத அந்த தனிமையை தனக்கு சாதகமாக பயன்படுத்த எண்ணிய சாரதா நந்தாவின் அலைப்பேசியை எடுத்துக்கொண்டு பின்பக்கம் இருந்த அந்த மைதானத்திற்கு சென்றார்.
அபார்ஷன் செய்ததாக செய்தி வந்த பிறகு நடந்த களோபரத்தில் நந்தாவின் அலைப்பேசியை தன்னிடமே வைத்துக்கொண்டார் சாரதா , இப்பொழுது அதில் இருந்து அவனின் எண்ணை தேட “வேந்தரே” என்ற பெயரில் அவர் பார்வை நிலைத்தது.
ஒரு யூகம் வைத்து அந்த எண்ணிற்கு அழைக்க முதல் ரிங்கிலே எடுத்தவனின் “அழகி…” என்ற ஆழ்ந்த அழைப்பில் ஒரு நொடி சாரதா பேசமறந்து நின்றார்.
இப்படி உருகுபவனிடம் பெண் மயங்காமல் எப்படி இருப்பாள் என்றுதான் தோன்றியது அவருக்கு.
“நான் சாரதா பேசுறேன்” என்றவரின் குரலில் “சொல்லுங்க” என்றான் உணர்ச்சிகள் அற்ற குரலில்.
“என் பொண்ணுக்கு உங்களைவிட பன்னண்டு வயசு கம்மி” என்றவரின் பேச்சில் உள்ளே அவனுக்கு எரிச்சல் மண்ட தொடங்கியது.
“என்னமோ உங்கள பிடிச்சுருக்கு , நீங்கதான் எல்லாமேன்னு ஏதோ தப்பா நெனச்சுட்டு பேசுறா நாளைக்கே வேலைக்கு போக ஆரம்பிச்சு புதுசா ஆளுங்கள பார்த்தா இது எல்லாம் மாறிடும்”.
“என்னால என் பொண்ணை மாத்த முடியும் ,உங்களுக்கு அவளை கல்யாணம் செஞ்சு குடுக்க எனக்கு விருப்பம் இல்லை நீங்க அவ கண்ணுல படாம இருந்தா உங்களை பத்தி எந்த விஷயமும் அவளுக்கு தெரியாம இருந்தா அவ சீக்கிரமா உங்கள மறந்துடுவா”.
“இது வெறும் வயசு கோளாறு அவளுக்குத்தான் புரியல உங்களுக்குமா புரியல , நீங்க கொஞ்ச நாள் விலகி இருந்து பாருங்க… அவ வாழ்க்கையே வேறமாதிரி நல்லவிதமா மாறிடும்” என்று இன்னும் என்ன என்னமோ பேசினார் அவர்.
அதன் பிறகு பேசிய எதுவும் அவன் சிந்தையில் பதியவில்லை அலைபேசியை அப்படியே வைத்துவிட்டு எழுந்துகொண்டான்.
அவள்வாழ்வில்இருந்துகொஞ்சம்நாட்கள்நான்விலகிஇருப்பதுஅவளில்மாற்றம்கொண்டுவருமா , அப்படிதன்னைஅவள்மறந்துவேறுஒருவாழ்வைஏற்றுக்கொண்டால்…. ஏற்றுக்கொள்வாளா?? தன் அழகியல் அது முடியுமா….. முடியாது நிச்சயமாக முடியாது என்று பல சிந்தனைகள் மண்டைக்குள் மத்தளம் கொட்டியது.
அவளுடையரசனைகள்படிஒருஅழகானவீடு , திருமணஇரவைஅவளுடன்அங்குதான்கழிக்கவேண்டும்என்றதீராமோகம்அவனுள் இருந்தது.
சம்பத்திற்குக்கூட அவன் அங்கு வீடு வாங்கியது தெரியாது, யாரிடமும் அந்த ரகசியத்தை அவன் பகிர விரும்பவில்லை , அதை முதலில் பார்ப்பவள் அவளாக இருக்க வேண்டும் என்று ஆசை கொண்டிருந்தான்.
இப்பொழுதேஅவள்வேண்டும்என்றஉணர்வுஅவனுள்தகித்தது, நீச்சல் குளத்தில் தன்னை மறந்து மூழ்கி கிடந்தான் , இரு தினங்கள் அங்கேயே இருந்தவன் மூன்றாம் நாள் ஒரு முடிவோடு தன் வீட்டிற்கு சென்று அங்கிருந்து யு.எஸ் சென்றுவிட்டான்.
முழுதாக மூன்று வருடம் தன்னை தனிமை படுத்திக்கொண்டான், அவனுக்கு தெரிந்துகொள்ள வேண்டியதிருந்தது தன்னை அவள் தேடுவாளா என்பதை , தன்னை அவள் தேட வேண்டும் என்று ஆசை கொண்டான் , அவள் விழிகளில் தனக்கான காதலை காண விரும்பினான்.
அமைதியாக அமர்ந்திருந்த நண்பனை பார்த்த சம்பத்துக்கு அவன் மனதில் என்ன ஓடுகிறது என்றே தெரியவில்லை , ஆனால் பாரி தெரிந்துகொள்ள வேண்டிய அவன் விரும்பும் ஒரு தகவலை தெரிவித்தான்.
“நந்தா இன்னைக்கு வருவா சாயந்திரம்” என்றபோது அவன் இதழில் கீற்றாக மென்னகை.
“உன்னைப்பத்தி வாய் ஓயாம பேசினது ஆண்ட்டி தான், கோவில்ல சந்திச்சிப்பாங்க ரெண்டுபேரும் , மகன் பக்கத்துல இல்லாத ஏக்கத்தை மருமகளை பார்த்து தீர்த்துக்கிட்டாங்க போல”.
“நந்தாவை பாக்கவே அங்க இருந்து மாசத்துல மூணு தடவ வருவாங்க , ஒரு நாள் நந்தா அம்மாக்கு சந்தேகம் வந்து கவனிச்சருக்காங்க , அன்னைக்கு கோவில்னு கூட பாக்காம அவ்ளோ பேசிட்டாங்க , ஆண்ட்டி முகத்தை பாக்கவே முடியல எல்லார் முன்னடியும் ஒரு மாதிரி அவமானப்பட்டு நின்ன மாதிரி இருந்தது”.
“அந்த புள்ள அம்மாவை பார்த்து கை எடுத்து கும்பிட்டு அப்படியே கீழ ஒக்காந்துடுச்சு , இனிமே அவரைப்பத்தி யார்கிட்டயும் பேசமாட்டேன் யார்கிட்டயும் கேட்கமாட்டேன் இவங்கள பாக்கமாட்டேன் அவங்கள ஒன்னும் சொல்லாதீங்கன்னு”.
“அன்னையோட நிறுத்திடுச்சு உன்னைப்பத்தி யார்கிட்டயும் கேக்கறதில்லை” என்று முடித்தவன் “இன்னைக்காவது அவளை பார்ப்பியா” என்க.
அதற்கும் பதில் இல்லை , இதோ இப்பொழுது அவள் முன் வந்து நிற்கிறான் , அவனை நோக்கி வேகமாக முன்னேறியவளின் கையை பிடித்து தடுத்தார் சாரதா.
“நெனச்சேன் நீ பர்த்டே பார்ட்டிக்குனு சொல்லி போகும்போதே, இவர் வந்தது உனக்கு எப்படி தெரியும் யார் சொன்னா” என்று அலறிக்கொண்டிருந்தவரை கூர்மையாக பார்த்து நின்றிருந்தான் பாரி.
இவரின் சத்தத்தில் ஓடி வந்த சம்பத் “என்ன பண்றீங்க நீங்க , சொன்ன மூணு வர்ஷம் அவங்க ஒதுங்கித்தானே இருந்தாங்க இன்னும் என்ன வேணும் உங்களுக்கு” என்றான் ஆத்திரத்தோடு.
அனைவரையும் வெறுப்போடு பார்த்தவர் நந்தாவின் கை பற்றி இழுத்து சென்றார் , நிறைந்து தளும்பும் விழிகளால் அவனை பார்த்துக்கொண்டே சென்றவளில் இருந்து விழிகள் மாறவில்லை அவனுக்கு.
வீட்டில் ஒரே சத்தம் , ராஜசேகர் ஒரு பக்கம் மித்ரா ஒரு பக்கம் என்று சாரதாவை நிற்க வைத்து கேள்வி கேட்டனர் , இருவரில் யாரவது ஒருவர் மனம் மாறிவிடுவார் என்று நினைத்திருக்க இப்படி அவன் வந்து நின்றது உள்ளுக்குள் ஒரு வித பயத்தை கொடுத்தது.
அவர்களுடன் உறவாக நிற்க வேண்டுமா என்று உள்ளுக்குள் புகைந்தது , ஒட்டுமொத்தமாக கோபத்தில் இருந்தவர் உணவு மேசையில் இருந்த கத்தியில் கையை கிழித்துக்கொண்டார்.
மருத்துவமனை காரிடாரில் அமர்ந்திருந்த நந்தாவின் அருகில் வந்து அமர்ந்தார் சுமதி , அனைவரும் அங்குதான் இருந்தனர்.
“நந்தா” என்றவரின் கையை பிடித்தவள்.
“எனக்கு அவர் வேணும் அத்த… நீங்களாவது அவரை எனக்கு குடுத்துருங்க அத்த , நான்… நான்…. அவரோட ரொம்ப கனவெல்லாம்…” என்றவளை “நந்தாமா….” என்று அவர் தன்னோடு சேர்த்தனைக்க.
அவளை அப்படியே வாரி இழுத்து தன்னோடு சேர்த்து இறுக்கிக்கொண்டான் பாரிவேந்தன்.