அப்போதான் நான் நைன்த் முடிச்சிட்டுடென்த் சேர்ந்திருந்த புதுசு அன்னைக்குஸ்கூல் முடிச்சிட்டு நானும் சௌமியும் வீட்டுக்கு வந்துட்டு இருந்தோம் அப்போ வழியில சில பொறுக்கி பசங்க போக வர பொண்ணுங்களை கிண்டல் பண்ணிட்டு இருந்தாங்க, அன்னைக்குன்னு கிடையாது இது வழக்கமாவே ஸ்கூல் போகும் போதும் வரும் போதும் எங்களுக்கு அவங்களோட தொல்லை இருந்துட்டே தான் இருக்கும். நானும் முடிஞ்சவரை சில பொண்ணுங்க மாதிரி நாய்ன்னா குறைக்க தான் செய்யும்னு அதையெல்லாம்பெருசா கண்டுக்காம போய்டுவேன் ஆனா ஒரு சில கேர்ள்ஸ் அமைதியா அழுத்துட்டே போயிடுவாங்க எனக்கு அழுதுட்டு போறவங்களை பார்த்தா கடுப்பாகும் அழறதுக்கு பதிலா அவனுங்களை அறைஞ்சிருக்கலாமேன்னு..!!
நாம கண்டுக்காம அமைதியா போறதுதான் அவங்களுக்கு ஒரு விஷயத்தை தொடர்ந்து செய்யகூடிய தைரியத்தை கொடுக்குதோன்னு எனக்கு எப்பவும் தோணும் அதனால இனியும் ஒதுங்கி போய் அவங்களை நாமலே வளரவிட கூடாது இதுக்கு ஒரு முடிவு கட்டனும்னு என் கையை பிடிச்சிருந்த சௌமி கையை உதறிட்டு அவனுங்ககிட்ட போய் பேசினேன்.
ஆனா பேச்சு வளர்ந்து எங்கயோ தொட்டு எங்கயோ நீண்டு கடைசியில என் பிறப்பை கேள்விகுறி ஆக்கிடுச்சி. அதாவது என் அம்மா ஒரு வேசி அவங்களுக்கே என்னோட அப்பா யாருன்னு தெரியாதுன்னு சொல்லிஇன்னும் காதால கேட்க முடியாத வார்த்தைகளை பேசி கடைசியில கொஞ்சம் தள்ளி நின்னிருந்த சௌமியை சுட்டி காமிச்சி அந்த மாதிரி நல்ல பொண்ணு எவளும் இப்படி பத்து ஆம்பளைங்க முன்னாடி வந்து நிற்க மாட்டா ஆனா நீ வந்து நிற்கிற அப்போ நீயும் உங்க அம்மா மாதிரி தானே இருப்பன்னு என் மேல கை வச்சவன்,
“சொல்றி உன்னோட ரேட் என்னன்னு கேட்டுஎன் கையை பிடிச்சி இழுக்கவும்” தான் அதுவரை அப்பா என்கிற மனிதரை மையமா வச்சு இதுநாள் வரைஎன்னை சுற்றி பின்னப்பட்ட கேள்வி வலைகளின் வீரியம் புரிஞ்சது. இந்த உலகம் என்னை எப்படி பார்க்குது சமூதயத்துல என் அம்மாவோட இடம் என்ன…, அவங்களோட பெண்ணான என்னோட நிலை என்ன.., இந்த சமூகம் அவங்களுக்கு வச்சிருக்க பேரும் அதனுடைய அர்த்தமும் தெரிஞ்சது.
இதுநாள் வரை என் வாழ்கையில அப்பான்னா யாரு..? எப்படி இருப்பாங்கன்னு பார்த்தே அறியாத ஒருத்தன் மேல எனக்கு இருந்த கோபம், வருத்தம் எல்லாம் வன்மமா உருமாறினதுஅன்னைக்கு தான்…! அதுநாள் வரை அவன் இருக்கானா செத்துட்டானா..?? அப்படி இருந்தா, ஏன் எங்க அம்மாவையும் என்னையும் இப்படி ஒரு நிலையில நிறுத்தனும்… பெற்ற குழந்தையான என்மேல துளி பாசம் கூடவா அவனுக்குஇல்லாம போகும் இத்தனை வருஷத்துல ஒருமுறை கூடவா என்னை பார்க்கனும்னு அவனுக்கு தோணாம போயிருக்கும்… ஏன் என்னை தேடி வரலை நான் இருக்கேனா இல்லையா..?? பாதுகாப்பா வளரறேனான்னு கூட தெரிஞ்சிக்காம எப்படி அவனாலஇருக்கமுடியுதுன்னு நினைப்பேன் எப்போ அவனை நேருக்கு நேர் பார்க்கிறேனோ அப்போ இதை எல்லாம் கேட்கணும்னு தோணும்.
என்னோட பிரெண்ட்ஸ் எல்லாருமே ‘டேடிஸ் லிட்டில் பிரின்சஸ்‘ எது பண்ணினாலும் அப்பா அவங்களுக்கு பக்கபலமா இருப்பாங்களாம் அம்மா கண்டிச்சாலும் இவங்க கொஞ்சி சமாதானபடுத்துவாங்கலாம் என்றபோதே அவளையும் மீறி அவளது நெடு நாளைய ஏக்கம் கண்ணீராய் உருவெடுக்ககுரல் உடைந்து பேச முடியாமல் சில நொடிகளுக்கு தத்தளித்து போனாள் ப்ரீத்தி.
பின் குரலை செருமியவள், “என்னை எங்க அம்மா கண்டிச்சதும் இல்லை சமாதானபடுத்த அப்பாவும் இல்லை.., எனக்கு மட்டும் ஏன் இந்த சபிக்க பட்ட வாழ்க்கை..!! நானே பார்த்திருக்கேன் அலர் எத்தனையோ குழந்தைகளுக்கு அவங்க அப்பாஒவ்வொரு இடத்துலையும் மாரல் சப்போர்ட்டா இருந்து இருக்காங்க குழந்தையோட கைபிடிச்சு நடை பழகுறதுல இருந்துசைக்கிள் ஓட்ட கத்துகொடுத்திருக்கிறது வரை ஆனா எனக்கு அப்படி இல்லை விழுந்து எழுந்து சில நேரங்களில் எங்க அம்மாவை பிடிச்சிகிட்டு நடக்க தொடங்கியநான் சௌமியோட சைக்கிளை கடன் வாங்கி மத்தவங்கள பார்த்து சுயமா பெடல் பண்ணி ஒட்டிவிழுந்து எழுந்து கத்துகிட்டேன்.
ஒவ்வொரு பண்டிகையையும்எல்லாரும் அவங்க அப்பா அம்மாவோட கொண்டாடும் போது நான் மட்டும் அனாதையா வீதியில உட்காந்து பார்த்த நாட்கள் அதிகம்… அப்போ அப்பான்னா எப்படி இருப்பாங்கன்னு ஒரு சிலரோட அப்பாக்களை பார்த்து கற்பனை பண்ணி வச்சிருந்தேன்… அதுலயும் மகளோட ஒவ்வொரு பருவத்தலயும் அவளை கொண்டாடுற, மகளுக்காகஓடி ஓடி தேடி தேடி வாங்கி குவிக்கிற அப்பாக்களை நானே பார்த்திருக்கேன்..,
“சௌமி யாரு..??”
“என் பிரெண்ட், பார்வதி அம்மாவோட தம்பி பொண்ணு, அவங்க வீட்டுக்கு வரபோக தான் எனக்கும் அவளுக்கும் நட்பாச்சு பின்னாடி அவ படிக்கிற ஸ்கூல்லையே என்னையும் சேர்த்ததால நான் ரெண்டு பேரும் க்ளோஸ் பிரெண்ட்ஸ் ஆகிட்டோம் என்றவள் தொடர்ந்து,
‘சௌமி அவங்க அப்பா அம்மாக்கு ஒரேபொண்ணு.., அவளை தரையில நடக்க விடாம அவளோட அப்பா அப்படி தாங்குவாரு, அவளுக்கு டிபன் பேக் பண்றதுல இருந்து, ஷூ துடைச்சி வைக்கிறதுல இருந்து அவளுக்காக அவர் செய்யாத வேலையே இல்லை…, ஒரு மகாராணி மாதிரி தான் அவளை பார்த்துப்பாரு.., தினமும் அவ ஸ்போர்ட்ஸ் முடிஞ்சு வந்தா அவங்க அப்பா அவளுக்கு கால் பிடிச்சி விடுவாரு, இப்படி நான் நேர்ல அவங்க அப்பாவை பார்த்து தெரிஞ்சிகிட்டது கொஞ்சம்னா கூட படிக்கிற மத்த பொண்ணுங்க எல்லாரும் எங்க அப்பா தான் எங்களோட முதல் ஹீரோன்னு இன்னும் கதை கதையா சொல்லுவாங்க, இதை எல்லாம் பார்த்து வளர்ற எனக்கும் அந்த மாதிரி சின்ன சின்ன ஆசைகள் இருக்கிறது தப்பா?’ என்று அவர்களிடமே கேட்க,
தன் தந்தையை எண்ணி அலருக்கு தொண்டை அடைத்து கொண்டு வந்தது.., அவரது அன்பில் இன்று வரையிலுமே திளைத்து கொண்டிருப்பவளுக்கு ப்ரீத்தியினதுஎத்தகையஈடுசெய்ய முடியாத இழப்புஎன்று புரிபட அதன் விளைவாக அவள் விழிகளிலும் நீர் திரண்டு விட்டது. அவள் உணர்வுகளை அவதானித்திருந்த எழில் ‘கண்ணை துடை பட்டு’ என்று அவளை அரவணைக்கஅலரும் அவன் தோள் சாய்ந்திருந்தாள்.
ஆனா எப்போ அவனைபத்தி கேட்டாலும் அழுதுகரைஞ்சு என்னையும் கரைச்சிடுவாங்க எங்க அம்மா.. !! சமுதாயத்துல அக்கம் பக்கம் இருக்கிறவங்களோட வித்யாசமான பார்வைக்கு என்னை ஆளாக்கினவன் மேல எனக்குள்ள கொஞ்சம் கொஞ்சமா புகைஞ்சிட்டு இருந்து வன்ம நெருப்பு அன்னைக்கு அதிகமாச்சு..,
அப்போ ஆண் துணை இல்லாம இருக்க பெண்கள் எல்லோரும் தப்பானவங்களா..? எந்த தப்பும் பண்ணாத என்னை ஏன் இந்த சமூகம் இப்படி பார்க்குது, எதுக்கு எனக்கு இந்த நிலை, ஒருவேளை எல்லோரும் சொல்ற மாதிரிதான் என் அம்மாவா..?? அது எனக்கே தெரியாம இருக்கான்னு எனக்குள்ள பல கேள்விகள் எழ வீட்டுக்கு திரும்பின நான் ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் அழுதேன் எத்தனை மணி நேரம்னு தெரியாது இத்தனை நாள் பட்டது, இழந்தது எல்லாத்துக்கும் சேர்த்துவச்சு அழுதேன்.
இத்தனை நாள் பார்வதி அம்மாவோட அரவனைப்புல பெருசா எந்த கவலையும் இல்லாம இருந்த எனக்கு அந்த நொடி வாழ்க்கை பத்தின பயம் வந்தது… ஏன்னா எங்க தெருவிலேயே ஒன்னு ரெண்டு பசங்களோட அப்பா தவறி இருக்காங்க அவரோட போட்டோ அவங்க வீட்ல இருக்கும்அப்பா இல்லாட்டியும் அந்த பசங்க இன்னார் தான் என் அப்பான்னு அடையாளம் காட்டமுடியும் ஆனா நான்..??? என்று சுட்டு விரலை தன் நெஞ்சை நோக்கி நீட்டியவள் கண்களில் வலியுடன் அவர்களை பார்க்க ப்ரீத்திவிழிகளில் இருந்து மீண்டும் நீர்பெருக்கு ஏற்ப்பட்டது.
சில நிமிடங்களில் தன்னை திடபடுத்தி கொண்டவள் விழிகளை அழுந்த துடைத்து உறுதியுடன் அவர்களை ஏறிட்டு, “நான் பிறக்க காரணமானவன் பத்தின எந்த தகவலும் எனக்கு தெரியாது பி. ப்ரீத்தி ன்னு எனக்கு எங்க அம்மா கொடுத்த இனிஷியலே பொய்யோன்னு எனக்கு தோணின நொடி அது..! அந்த பசங்க சொன்ன மாதிரி எங்க அம்மா தப்பானவங்களா இருந்து அவங்களுக்கே நான் பிறக்க காரணமானவன் யாருன்னு தெரியாம ஏதோ ஒரு இனிஷியல் போட்டு என்னை காப்பாத்தணும்னு இதை பண்ணி இருக்காங்களான்னு எனக்கே சந்தேகம்.
இத்தனை வருஷமா அவனை பத்தின நினைப்பு பெருசா வராத அளவுக்கு பார்வதி அம்மா என்னை தயார் படுத்திட்டாங்கன்னு நான் நம்பிட்டு இருந்தேன் ஆனா அப்படி நெனச்சி என்னை நானே ஏமாத்திட்டு இருந்திருக்கேன்னு அன்னைக்கு தான் புரிஞ்சிகிட்டேன். நமக்கு விதிச்சது இந்த வாழ்க்கை தான்..!! இதுக்குள்ளே வாழ்ந்து இதுலையே முடிச்சிக்கலாம்னு எங்க அம்மாவை பார்த்தே வளர்ந்ததுல என்னை நானே சமாதானபடுத்திட்டு இருந்து இருக்கேன்னு புரிஞ்சது.
இத்தனை முட்டாளாவா நான் இருக்கேன்னு என்மேலயே எனக்கு கட்டுக்கடங்காத கோபம்…
ஒரு வாழ்க்கை தானே எனக்கு..!!!! அது ஏன் வாழும் போதே நரகமா இருக்கணும் சொர்க்கமா மாத்த முடியாதா..?? என்ற கேள்வி எனக்குள்ள.., அப்படி அது மாறனும்னா என்ன பண்ணனும்னு என்னை நானே கேட்டுக்க அதில் பிறந்த விடையில தான் என்னோட தேடல் தொடங்கியது.
என்ன தேடல்..?
என்னோட வாழ்க்கை இதுநாள் வரை யாரோ செய்த தவறினால மாறி போயிருந்தாலும் இனி அதை சொர்க்கமாய் மாற்றும் மார்க்கம் என் கையில தான் இருக்கு.., முயன்றால் முடியாதது எதுவும் இல்லையே மாமா ..!!
என்ன ஒன்னு நாம முயற்ச்சிக்கிறது இல்லை, கிடைச்சது வரை லாபம்னு ஏதோ ஒரு கம்ஃபோர்ட் ஸோன்ல இருந்துக்கிறோம். போதும் இதுநாள் வரை பார்வதி அம்மா தயவுல அந்த மாதிரி நான் இருந்தது போதும் இனியும் அப்படி இருக்க கூடாதுன்னு எனக்கு நானே சொல்லிகிட்டேன்.
‘பலமணி நேரம் அழுது முடிச்சவ இனி மொத்த வாழ்க்கைக்கும் அதுவே கடைசி அழுகையா இருக்கணும் என்ற முடிவோட என் ரூமை விட்டு வந்தேன்… எங்க அம்மா நான் எதுக்காக இவ்ளோ நேரம் உள்ள இருந்தேன்னு தெரியாம வெளியே தவிச்சி போயிருந்தாங்க அதை கண்டுக்காத நான் நேரா சமயலறைக்கு போய் அங்க இருந்த கத்தியை எடுத்துட்டு வந்து என் கழுத்துல வச்சு இப்போ இந்த நிமிஷம் எனக்கு உண்மை தெரிஞ்சாகனும் இல்லை என்ன பண்ணுவேன்னு நான் உனக்கு சொல்ல தேவை இல்லைன்னு எங்க அம்மாவை மிரட்ட தொடங்கினேன்’ என்று கூறவும் எழிலின் பார்வை திகைப்புடன் அவள் மீது படிவதை கண்டவள்,
பயப்படாதீங்க மாமா.., நான் அப்படி செய்யவும் எங்க அம்மா தான் காரணம், ஏன்னா பார்வதி அம்மா கேட்டே அவனை காட்டி கொடுக்காதவங்க நான் அழுது ஆர்பாட்டம் பண்ணினா கண்டிப்பா சொல்ல போறது இல்லை அதான் அந்த அதிரடி என்று புன்னகைத்தாள்.
ஆனா அப்பவும் எங்க அம்மா மசியலை திரும்ப அதே பல்லவியை பாட தொடங்கினதுமே என்னோட இத்தனை நேர அழுகை கோபமா உருமாற, இனியும் இப்படி என்னை ஏமாத்த முடியாது…, உனக்கு என்னைவிட அவன் முக்கியமா இருந்தா என்னை இழக்கறதை தவிர உனக்கு வேற தண்டனைஇல்ல… ரெண்டு நிமிஷம் உனக்குடைம் தரேன் அதுக்கு அப்புறம் என் பொணத்தை தூக்க ஆளுங்களை ரெடி பண்ணிக்கோன்னு சொல்லிஎன் கழுத்துல வச்சி லேசா அழுத்தவுமே பாஞ்சு வந்து கத்தியை தட்டிவிட்டவங்க அடுத்த ரெண்டு மணி நேரத்தை செலவழித்து சொன்ன விஷயங்கள் தான் இதுவரை நீங்க கேட்டது என்றாள்.
எனக்கு எங்க அம்மா இத்தனை விஷயங்களை கடந்து வந்திருக்கிறதே அன்னைக்கு தான் தெரியும்.., அவனை நம்பி அறிவிழந்து நடந்துகிட்ட எங்க அம்மா மேல கட்டுகடங்காத ஆத்திரம் எனக்கு.., அதுலயும் நாங்க வயித்துல இருந்தப்பவே அவங்களோட சேர்ந்து எங்களையும் கொல்ல முயற்சி பண்ணவன் கிட்ட இன்னொரு குழந்தையை தூக்கி கொடுத்த முட்டாள் தனத்துக்கு எங்க அம்மாவை என்னால மன்னிக்கவே முடியலை.
அதுவரை அப்பா என்ற உறவை உலகத்துக்கு அடையாளம் காட்டணும் அவனை கேள்வி கேட்கணும்னு எனக்கு இருந்த எண்ணம் அடியோட மாறி, அவனோட சுயநலத்துக்காக, சுயலாபத்துக்காக இத்தனை வருஷம் நான் இழந்து தவிச்சது அதுலயும் அன்னைக்கு நான், எங்க அம்மா அந்த பசங்ககிட்ட பட்ட அசிங்கத்துக்கு எல்லாம் சேர்த்து அவன் உயிரைபிச்சி பிச்சி போடணும்னு எனக்குள்ளே வெறியே எழுந்தது. அடுத்த நாள் ஸ்கூலுக்கு கிளம்பினவ யாருக்கும் சொல்லாமநான் பிறக்க காரணமானவனை தேடி ஆரணியை நோக்கி பயணிக்கஆரம்பிச்சேன் என்றவள் அந்நாளை விவரிக்க தொடங்கினாள்.
‘எப்படி சின்ன பெண்ணான உன்னை தனியா போகவிட்டாங்க?’
‘எங்க அம்மா, சௌமி, பார்வதி அம்மான்னு யார்கிட்டையுமே எதையும் சொல்லலை ஏன்னா நான் செய்யபோறது வதம் ராக்ஷச வதம்! இது தெரிஞ்சா இவங்க யாருமே என்னை விட மாட்டாங்க… அதனால வழக்கமா கிளம்பற மாதிரி கிளம்பினவ நேரே ஆரணி பஸ்ல ஏறி உட்கார்ந்தேன்… மனசு முழுக்க அவனைஎங்க எப்படி பார்க்க போறோம் நம்மளை பார்த்ததும் வித்யாசம் கண்டு பிடிச்சிடுவானா ஸ்கூல் பேக்ல கையோட கொண்டு போன கத்தியை வச்சு அவனை எப்படி கொல்லனும், கொன்னுட்டு எப்படி தப்பிக்கணும் யாராவது கூட இருப்பாங்களா..? இருந்தா என்னை வேற பொண்ணுன்னு நினைப்பாங்களா இல்லை அவன்கிட்ட வளர்ற அவனோட சொந்த பொண்ணுன்னு நினைப்பாங்களா, ஓருவேளை அவன் என்கிட்ட பேசினா அவன்கிட எப்படி பேசணும்னு பலவிதமா யோசிச்சிட்டு போயிட்டு இருந்தேன்.
“பதினாலு வயசுல இவ்ளோ யோசிச்சியா..??” என்று திகைப்புடன் அலர் கேட்க,
“நான் ஏத்துகிட்டாலும் ஏதுக்காம போனாலும் அந்த கேடு கெட்டவனோட ரத்தம் என் உடம்புலயும் ஓடுதே அலர் அதுதான் அப்பவே அந்த கிரிமினலை கொல்ல கிரிமினலா யோசிச்சி இருக்கேன் போல” என்றவள் விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தாள்.
ஆரணியை நெருங்கறதுக்கு சில ஸ்டாப்பிங் முன்னாடி நான் போன பஸ் ப்ரேக்டவுன் ஆகி நின்னுடுச்சி, அரை மணி நேரமாகியும் அந்த பக்கம் எந்த பஸ்சும் வராம போகவும் அவனை கொன்னு திங்கிற வெறியில இருந்த எனக்கு பொறுமை போயிடுச்சு, பக்கத்துல இருந்தவங்க கிட்ட ஆரணிக்கு ஷார்ட் கட் ஏதாவது இருக்கான்னு கேட்கவும் அவங்க இன்னொரு ஊர் வழியா போனா கொஞ்சம் கிட்டன்னு சொல்லவும் வழியை கேட்டு தெரிஞ்சிகிட்டு நடக்க தொடங்கினேன்… மனசு முழுக்க பழிவெறி வேற எந்த சிந்தனையும் இல்லை அவனை கொன்னா தான் ஆத்திரம் தீரும்ன்னு நடந்துட்டு இருந்தென்திடீர்ன்னு எங்கிருந்தோ ஒரு பந்து வந்து என் அடி வயித்துலேயே விழவும் அப்படியே சுருண்டு கீழ விழுந்துட்டேன்…, அப்ப இவர் தான் வந்து என்னை… என்று கூற தொடங்க,
இத்தனை நாட்கள் தன் மனதை அழுத்தி கொண்டிருக்கும் நினைவுகளை இறக்கி வைத்து கொண்டிருப்பவளையே இமை சிமிட்டாது பார்த்து கொண்டிருந்த சரணின் நினைவடுக்கிலும் அதுநாள் வரை பெரிதாக எண்ணியிராத அந்நாள் மங்கலாக தென்பட்டது.
“மாமா மாமா ப்ளீஸ் இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கோமே நீங்க அப்பாகிட்ட சொல்லுங்க என்று எட்டாம் வகுப்பை முடித்திருந்தஅலரும் ஆறாம் வகுப்பை முடித்திருந்த கதிரும் அடம்பிடிக்க..,
நாதனிடம் “ஒரு நிமிஷம் மாமா” என்றவன் அவர்களிடம் திரும்பி “ஷ்ஷ் அமுலு அப்பா கூப்பிட்டா உடனே கிளம்பனும் அதைவிட்டுட்டு இதென்ன புதுசா அடம்…!!! அவன் தான் புரியாம பேசுறான் நீயும் அவன்கூட சேர்ந்து அடம் பிடிச்சா எப்படி?” என்று கண்டிப்பான குரலில் கேட்க,
“போங்க மாமா இப்பதான் நாம பேட்டிங் பண்ண ஆரம்பிச்சோம் மேட்ச் முடியலை அதுக்குள்ளே அப்பா வந்துட்டார், முடியாது முடியவே முடியாது காலையில இருந்து கேட்டு இப்பதான் நீங்களே விளையாட கூட்டிட்டு வந்தீங்க நாங்கபேட்டிங் பண்ணாம போக மாட்டோம், அப்படி தானேக்கா” என்று அலரையும் துணைக்கு அழைக்க,
“ஆமா மாமா நீங்களே நாளைக்கு கூட்டி கொண்டு விடுறேன்னு அப்பாக்கிட்ட பர்மிஷன் கேட்டுதானேகூட்டிட்டு வந்தீங்க, அப்புறம் எதுக்கு இப்போவே கூட்டிட்டு போகணும் ..??? நீங்க அப்பாகிட்ட பேசுங்க நாங்க விளையாட போறோம் வாடா” என்று கதிரோடு செல்ல முற்ப்பட,
இருவரையும் பிடித்து நிறுத்தியவன், “இதோ பாருங்க மாமா ஏதோ அவசரமான விஷயம் என்பதால தான் கூட்டிட்டு போக வந்திருக்காரு.., நீங்க இப்போ அவர்கூட கிளம்புங்க நான் அடுத்த வாரம்வந்து உங்களை கூப்ட்டுக்கிறேன்” என்று சமாதான படுத்த,
“இல்ல நீங்க பொய் சொல்றீங்க இன்னக்கு கிளம்பினா நீங்க வர ரொம்ப நாள் ஆகும்எங்களுக்கு தெரியும், முடியாது மாமா உங்ககூட தான் இருப்போம் அப்பாகிட்ட எப்படியாச்சும் பர்மிஷன் வாங்குங்க” என்று தங்கள் அடத்தில் நிற்க,
“அமுலு நீ குட் கேர்ள் தானே…!! நீயுமா சொல் பேச்சு கேட்க மாட்ட.., இப்போ கிளம்புங்க நான் அடுத்தமுறை வரும்போது என்கூடவே இருப்பீங்க ஓகேவா” என்று கேட்க,
‘போங்க மாமா அப்பாவே எப்பவாவது தான் சித்தி வீட்டுக்கு அனுப்புவாங்க நாங்களும் எல்லார் கூடவும் விளையாட முடியும்’ என்றிட அதற்குள் மைதானத்தில் அங்கங்கு நின்று கொண்டிருந்த சரணின் மற்ற அக்கா பிள்ளைகளும் அங்கு வந்து அவர்களை அனுப்ப வேண்டாம் என்று ஒத்த குரலில் கூற,
“கண்டிப்பா வருவீங்க தானே மாமா” என்று விட்டால் அழுது விடும் குரலில்கதிர் கேட்க,
“வரேன்டாகிளம்புங்க” என்று அவர்களை அழைத்து கொண்டு வந்துநாதனின் புல்லட்டில் ஏற்றி விட்டவன் “பத்திரமா பிடிச்சிட்டு உட்காரு அமுலு” என்று பின்னால் அமர்ந்திருந்த அலர்விழியிடம் கூற,
அவளோ அவனுக்கு பின்புறம் நின்றிருந்த தன் சித்தி பிள்ளைகளிடம் விழிகளாலே மன்னிப்பு கோரியவளாக கை அசைத்து கொண்டிருந்தாள்.
நாதனின் வண்டி கிளம்பவும், குழந்தைகள் புறம் திரும்பிய சரணிடம், “ஏன்மாமா அக்காவையும் கதிரையும் அனுப்புனீங்க மேட்ச் முடிச்சிட்டு கூட்டிட்டு வரேன்னுபெரியப்பா கிட்ட சொல்லி இருக்கலாம் இல்லை” என்று சரண்யா ஒரு புறம் கோபிக்க அவளை தொடர்ந்து சந்தோஷ், பவித்ரா, சதீஷ் என்று மற்றவர்களும் ஆளுக்கு ஒரு புறம் கோபித்து கொண்டு நிற்க அனைவரையும் சமாதானபடுத்தி திரும்ப விளையாட்டிற்குள் கொண்டு வருவதற்குள் சரணுக்கு போதும் போதுமென்றாகி விட்டது.
தான் பந்தை எறிந்து ஒவ்வொரு அக்கா பிள்ளைகளையும் பேட்டிங் செய்ய வைத்தவன்மேலும் ஒரு மணி நேரம் கழிந்த நிலையில் தான் பேட்டிங் செய்ய தொடங்கி இருந்தான். குழந்தைகள் போடும் பந்தை லாவகமாக எதிர்கொண்டவன் ஒவ்வொன்றையும் போர் சிக்ஸ் என்று பறக்க விட்டு கொண்டிருந்தான்.
இப்போது சதீஷ் பந்தை எறிய சரண் தூக்கி அடித்ததில் அது மைதானத்தை தாண்டி சாலையை நோக்கி செல்வதை கண்டு பிள்ளைகள் குதூகலிக்க அவர்களின் உற்சாகத்திற்கு இடையில் ‘அம்மாஆஆஆஆ‘ என்ற அலறல் கேட்கவும் அனைவரும் குரல் வந்த திசையை நோக்கி திரும்பினர்.
அங்கு சரண் அடித்த பந்து சாலையில் சென்று கொண்டிருந்த ப்ரீத்திமீது பட்டுவிட அவள் வயிற்றை பிடித்துகொண்டு சாலையிலேயே மடங்கி அமர்ந்து வலியில் முனங்க துவங்கி விட்டாள்.
முதலில் குழந்தைகளின் கூச்சலில் அவனால் அதை சரியாக கேட்க முடியாவிட்டாலும் பந்தை நோக்கி பார்வை பதித்தவன் சாலையில் யாரோ ஒரு பெண் கீழே அமர்ந்திருப்பதை பார்த்து அவளை நோக்கி ஓடினான்.
சாலைக்கு சென்ற சரண் பள்ளி சீருடையில் இருகரங்களாலும் வயிறைஇறுக பற்றிக்கொண்டு குனிந்து அமர்ந்திருந்தவளை கண்டு அதிர்ந்து போனான்.
தான் அடித்த பந்து அவள் மீது விழுந்ததால் இந்நிலையோ என்று எண்ணியவன் அதையே அவளிடம் கேட்க வலியில் பேச முடியாவிட்டாலும் தலையை மேலும் கீழும் ஏற்றி இறக்கி ப்ரீத்தி அவன் கேள்விக்கு பதிலளிக்கவும்…,
“ஸாரி ஸாரிமா, எக்ஸ்ட்ரீம்லி ஸாரி ரொம்ப வலிக்குதா..?? ஆர் யு ஓகே..??” கேட்க,
விழிகளை மட்டும் விடுத்து வெள்ளை ஷால் கொண்டு முகத்தை கட்டி இருந்த ப்ரீத்தி தலையை உயர்த்தி இல்லை என்பதாக அசைத்திருந்தாள். ஆம் ஊரில் பிரபலமான பிரகாசத்தை கொல்ல வந்திருப்பவள் அதிலும் அவர் வளர்க்கும் மகளின் முக வடிவை ஒத்திருப்பவளை மற்றவர்கள் பார்க்க நேரிட்டால் என்னாகும் என்ற எண்ணம் தோன்ற தன் முகத்தை மறைத்து கொண்டு வந்திருந்தாள்.. சென்னை வெயிலுக்கு இது போல கட்டி திரிவது சகஜம் என்பதாலும் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டாள்.